சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2252 topics in this forum
-
பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க முதலே வேலை வேலை என அலையும் பெற்றோர்களே கவனிக்கவும்! உங்கள் பிள்ளைகளின் காப்பகத்தில் உங்களுக்கு 100% நம்பிக்கையிருந்தாலும் ஏதோ ஒரு விடயத்தில் அல்லது நன்னடத்தை எனும் பெயரில் துன்புறுத்தப்படுகின்றார்கள். இது நானறிந்த உண்மை. இங்கே பாருங்கள் கொடுமையை..... இதே மாதிரி உங்கள் பால்குடிகளுக்கு நடந்தால் உங்கள் மனம் எப்படி கொதிக்கும்?
-
- 13 replies
- 1.4k views
-
-
“அருவருப்பான தோற்றம் கொண்ட ஆணோ பெண்ணோ காதலிக்கப்பட்டதாக வரலாறு உண்டா?”... கொஞ்சம் யோசித்த பின்னர் பதிவைப் படியுங்கள். அன்பு, பாசம், நேசம், கோபம், தாபம், காதல், காமம் போன்றவை அன்றாடம் நம்மை ஆளுகிற உணர்ச்சிகளைக் குறிக்கும் சொற்கள். இந்தப் பதிவுக்குத் தொடர்புடைய அன்பு, கருணை, காமம், காதல் ஆகிய பதங்களுக்கான பொருள் வேறுபாட்டையும், அந்த உணர்ச்சிகள் நம்முள் ஏற்படுத்தும் விளைவுகளையும் முதலில் தெரிந்து கொள்வோம். அன்பு: ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் பற்றுதல். இந்த உணர்ச்சிக்கு ஆட்படுவதால் ஏற்படும் விளைவு, ஒருவர் நலனில் இன்னொருவர் அக்கறை கொள்ளுதல்; உதவுதல். கருணை: சொந்தமோ பந்தமோ இல்லாதவர் மீதும் செலுத்துகிற அன்பு. இதன் விளைவு, பிரதி பலன் கருதாமல் உதவுதல். காமம்: கவர்ச்ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
மனதைத் தொட்ட ஒரு காணொளி ------------------------------------------------ #பொதுக் குழாய்கள் அடைக்கப் பெறாமல் நீர் வீணாவதை அனுதினமும் பார்த்து வருகிறோம். அதற்கு விழிப்புணர்வு தரும் 47 வினாடிகள் கொண்ட இந்த படம் நமக்கு ஒரு பாடம். ஒரு 5 அறிவுள்ள விலங்கிற்கு உள்ள பொறுப்பு கூட நமக்கில்லை.. மிக வேதனையான விஷயம். https://www.facebook.com/photo.php?v=798025203560593
-
- 6 replies
- 994 views
-
-
எமது வாழ்கையில் தொடர்பாடலில் எமது பெரிசுகள் தாங்கள் சொல்லவந்த செய்தியை நேரடியாகச் சொல்லாது மறைமுகமுகமாக உறைக்கத்தக்க விதத்திலும் , புத்திமதி சொல்வது போலவும் உரையாடுவார்கள் . இதைச் சொல்லடை அல்லது சொலவடை என்று சொல்லுவோம் . ஆனால் , துர்ரதிஸ்டவசமாக இந்த சொல்லடைகள் எம்மிடமிருந்து நாகரீகம் என்ற போர்வையில் மறைந்து கொண்டு போகின்றன . இவை மீண்டும் புதியவேகம் பெற்று எம்மைப் போன்ற இளயவர்களால் முன்னெடுக்கப்படவேண்டும் என்ற ஆதங்கத்திலேயே இந்தப் பதிவைத் தொடங்குகின்றேன் . இந்தப் பதிவானது உங்கள் ஒத்துளைப்பும் , ஆதரவும் இல்லாமல் வாசகர்களைச் சென்றடையாது என்பது நிதர்சனமான உண்மை . முதலில் ஆரம்பித்துவைக்க எனக்குத் தெரிந்த சொல்லடைகளைத் தருகின்றேன் , எங்கே உங்கள் கைவண்ணத்தைக் காட்டுங்கள்!!!!!!!!…
-
- 231 replies
- 43.2k views
-
-
ஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி Winston Churchill கூறுகிறார். (Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― Winston Churchill) சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் விமர்சனமின்மையே என்கிறார்.1986 இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற நைஜீரிய நாட்டு எழுத்தாளும் நாடகசாரியருமான Wole Soyinka. (The greatest threat to freedom is the absence of criticism. ― Wole Soyinka) எமது சமுதாயம…
-
- 9 replies
- 1.5k views
-
-
பொறியியல் படிக்கிறாள். பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிகிறாள். உலகப்பொருளாதாரத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் நேரடியாகப் பாதிக்கும் அளவிற்கு இந்திய நகர்ப்புறத்துப் பெண்ணான அவளது வாழ்க்கைத் தரம் உயர்ந்திருக்கிறது. ஆனாலும், விளம்பரங்களில் எளிதில் கரைபோக்கும் சோப்பை தேடும் பெண்ணாகவே இன்றும் அவள் தெரிகிறாள். மசாலா முதல், எண்ணெய் வரையிலான சமையலறைத் தேவைகளைத் தேர்வு செய்யும் பொறுப்புள்ள குடும்பத் தலைவி அவள் என்பதை நிலைநிறுத்த விளம்பரங்கள் தவறுவதே இல்லை. பெண் எவ்வளவு பெரியவளாக இருந்தாலும், சமைப்பது, துணி துவைப்பது, பாத்திரம் துலக்குவது போன்ற வீட்டு வேலைகள் அவளுக்கு மட்டுமே உரித்தானவை என்பதை, வெகுஜனப்புத்தியில் அவ்வப்போது பதியவைக்கவும் அவை தவறுவதில்லை. ஒரு சில…
-
- 1 reply
- 919 views
-
-
உங்களுடைய துணையிடம் சொல்லக்கூடாத 9 விஷயங்கள்!!! நெடுநாட்கள் மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகள் சில நேரங்களில் அவர்கள் என்ன சொல்கிறார்கள் மற்றும் எப்படி சொல்கிறார்கள் என்பதை கவனித்துப் பார்க்க வேண்டும். அதே நேரம், தங்களுடைய உயிருக்குயிரானவர் சொல்லும் விஷயங்களுக்கு அவர்கள் எப்படி பதில் சொல்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். நீங்கள் ஒருவருடன் மிகவும் அன்யோன்யமாக இருப்பதால், அவரிடம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைக்கக் கூடாது. எனவே, உங்கள் துணையிடம் நீங்கள் சொல்லக்கூடாத விஷயங்களை இங்கு கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அவற்றை மறந்தும் சொல்லாதீர்கள். 1. 'நீங்கள் தான் எப்பொழுதும்...' அல்லது 'எப்பொழுதும் நீங்கள் கிடையாது' இதை யோசித்துப்…
-
- 7 replies
- 1.1k views
-
-
அவர் போனபின்.............? இந்தப்பகுதிக்கு நான் குடிவந்து 15 வருடமாகிறது. அயல் அட்டைகளுடன் பெரிதாக பழக்கமில்லை. அதிகம் பேசாதவன் என்கின்ற பெயருண்டு. ஆனால் சின்ன வயசிலிருந்தே அயலுக்குள் எதுவும் செய்வதில்லை என்ற கொள்கையில் வளர்ந்ததால் இன்றுவரை பெயர் சேதமில்லாமல் ஓடுகிறது............. ஆனால் ஒரு வெள்ளைக்கிழவி மட்டும் நான் வேறு பாதையால் சென்றாலும் ஓடி வந்து வணக்கம் சொல்வார் என் பிள்ளைகள் பற்றி கேட்பார். அவர்களது படிப்பு மற்றும் பழக்கவழக்கங்கள் பற்றி உயர்வாகப்பேசுவார்..... அதற்கு எனதும் மனைவியினதும் வளர்ப்பே காரணம் என்பார்.... இதனால் அந்த ஏரியாவை கணக்கு போட்டு வைத்திருக்கும் எனது துணைவியாரிடம் அவரைப்பற்றிக்கேட்டேன். அவர் சொன்னது மிக ஆச்சரியமாக…
-
- 9 replies
- 1.2k views
-
-
ஊரே அம்மணமாக சுற்றும் போது வா. மணிகண்டன் http://www.nisaptham.com/2014/03/blog-post_11.html அலுவலகத்தில் மதிய உணவை யாரோடும் சேர்ந்து சாப்பிடுவதில்லை என்ற அவப்பெயர் எனக்கு உண்டு. வீட்டிலும் அப்படித்தான். தனியாக அமர்ந்து கொட்டிக் கொள்வேன். உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் அதை மட்டுமே செய்ய வேண்டும் என நினைப்பேன். பள்ளிப்பருவத்திலிருந்தே பழகிய பழக்கம் இது. இப்பொழுது வினையாக போய்விட்டது. அதை வைத்தே திட்டுகிறார்கள். அலுவலகத்தில் கழண்டு கொள்வதற்கு இன்னொரு அனுபவமும் காரணமாக இருக்கிறது. முள்ளிவாய்க்கால் சம்பவம் உச்சகட்டத்தில் இருந்த போது யுத்த நிலவரங்களை அலுவலக கேண்டீனில் இருக்கும் டிவியில்தான் பார்த்துக் கொண்டிருந்தோம். கூடவே இன்னொரு தமிழ் பையனும், பீஹாரி ஒருவனும் சாப்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
நான்... நான் ஒரு பெண்; நான் ஒரு மகள்; நான் ஒரு தாய்; நான் ஒரு தங்கை; நான் ஒரு மனைவி; நண்பர்களுக்கு நான் ஒரு தோழி; வேலை செய்யும் இடத்தில் நான் மேலதிகாரி. 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று என் வாழ்க்கை இல்லை. பொருளாதாரத்தில் நான் தனித்து நிற்கிறேன். விரும்பிய உடைகளை அணிகிறேன். ஆனால், எங்கேனும் ஒப்பனைகள் இன்றி நான், நானாக இருக்க முடிகிறதா? நண்பர்களே... சில நிமிடங்கள் நான் பேசுவதைக் கேட்கிறீர்களா? சில நிமிடங்கள் போதும்... கொஞ்ச நேரத்துக்கு உங்கள் காதுகளையும் மனதையும் திறந்து அமைதியாகக் கேளுங்கள் போதும்! 'என்னது பொம்பளைப் பிள்ளையா?’ என்ற அலறல்கள் வீடுகளில் இன்று கேட்பது இல்லை. 'ஒரே ஒரு குழந்தை, அதுவும் பெண் குழந்தைதான் வேணும்’ என்று ஆசைப்பட்டு பலர் பெற்றுக் கொள்கிறார்க…
-
- 3 replies
- 3.2k views
-
-
சாதாரணமாக மது குடிக்கத் தொடங்கி, தினமும் அதை குடிக்க வேண்டும் என்ற எண்ணம் தலை தூக்கும் நேரங்களில் பலரும் நினைக்கும் விஷயம் தான் மேற்கண்ட தலைப்பு! அந்த நாட்கள் மிகவும் சோர்வான நாட்கள் தான் என்பதில் சந்தேகமில்லை. இப்பொழுதெல்லாம் இது போன்ற மனச் சோர்வுமிக்க சூழல்களை பணியாளர்கள் தங்களுடைய தினசரி வாழ்க்கையில் எப்படி கையாளுகிறார்கள் என்ற விஷயம் மிகவும் அதிகமாக கவனிக்கப்பட்டு வருகிறது. சில அலுவலக பணியாளர்கள் குடித்து கும்மாளமிடும் பஃப்களுக்கு சென்று தங்களுடைய மன அழுத்தத்தை குறைக்க முயல்கிறார்கள். இதன் மூலம் வெள்ளிக்கிழமை இரவுகள் எல்லாம் குடிமயமான இரவுகளாக மெதுவாக மாறத் தொடங்குகின்றன. இதுவே வார நாட்களில் பீர் பாட்டில்களை கையில் ஏந்த ஒரு தொடக்கமாகவும் உள்ளது. …
-
- 1 reply
- 717 views
-
-
அனைவருக்கும் வணக்கம். வீடு என்பது நாம் குடியிருப்பதற்கு மட்டும் அல்ல பலருக்கு தமது வாழ்நாளில் மிகப்பெரும் முதலீடும் அதுவே ஆகும் .அதைவிட உலகமெங்கும் பலர் சொத்துக்கள் வாங்குவதன் மூலம் தான் தமது வருமானத்தை முதலீடு செய்கின்றார்கள் .(திரிஷா தொட்டு ஜோர்ஜ் புஷ் வரை ) வீடு விற்பது வாங்குவது பற்றி பலருக்கும் பொதுவான விடயங்கள் தெரிந்திருக்கும். சற்று விரிவாக குறிப்பிட்ட சில தலைப்புகளில் அவற்றை விரிவாக பார்ப்போம் . இவற்றை இரண்டு பிரிவாக பார்ப்போம் . 1. RESIDENTIAL - வீடு (HOUSE), கொண்டோ (CONDO) 2.COMMERCIAL- வியாபாரம் (BUSINESS ). இவற்றையும் நீங்கள் -வாங்கலாம் அல்லது விற்கலாம் .(SALE) அல்லது -வாடகைக்கு விடலாம் அல்லது எடுக்கலாம். (LEA…
-
- 14 replies
- 5.2k views
-
-
என்னென்ன காய்கறி எப்படி பார்த்து வாங்க வேண்டும்? 1. வாழை தண்டு: மேல் பகுதி நார் அதிகம் இல்லாமலும் உள்ளிருக் கும் தண்டு பகுதி சிறுத்தும் இருப்பதாக பார்த்து வாங்க வேண்டும். 2. வெள்ளை வெங்காயம்: நசுக்கினாலே சாறு வரும்படி இருக்க வேண்டும் 3. முருங்கைக்காய் : முருங்கைக் காயை கட்டை மற்றும் ஆட்காட்டி விரல்களை பயன்படுத்தி சிறிது முறுக்கினால், எளிதாக வளைந் தால் அது நல்ல முருங்கை காய் 4. சர்க்கரை வள்ளிகிழங்கு: உறுதியான கிழங்கு இனிக்கும், அடி பட்டு கருப்பாக இருந்தால் கசக்கும் 5. மக்கா சோளம்: இளசாகவும் இல்லாமல் ரொம்பவும் முற்றாமல் மணிகளை அழுத்தி பார்த்தால் உள்ளே இறங்காமல் இருந்தால் அதுநல்ல மக்காச்சோளம். 6.தக்காளி: தக்காளி நல்ல சிவப்பில் தக்காளி இருந்தால் அதை வாங்கலாம்…
-
- 9 replies
- 2.5k views
-
-
http://www.storypick.com/cute-10-minute-film-deaf-mute-girl-will-warm-heart/
-
- 3 replies
- 875 views
-
-
-
செவ்வாய் தோசம் உங்களுக்கு உண்டா? https://www.facebook.com/photo.php?v=775071935837629
-
- 0 replies
- 958 views
-
-
பெண்களுக்கு இரவு சொந்தமில்லையா...? தவிக்கும் இரவு இது. 23 வயதேயான ஓர் இளம்பெண், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு, கொன்று தூக்கியெறியப்பட்டிருக்கிறார். ஒன்பது நாட்கள் ஒரு மிகப் பெரிய தகவல் தொழில்நுட்பப் பூங்காவின் எல்லைக்குள் சென்னையின் தகவல் பெருஞ்சாலையான பழைய மகாபலிபுரம் சாலையிலிருந்து (OMR சாலை ) 200 அடிக்கு அருகில் ஒரு புதரில் பிணமாகக் கிடந்து, கடந்த ஞாயிறன்று செய்தியாகி, காவல் துறை துப்புத்துலக்கியதால் தமிழகத்தின் நிர்பயாவாக மாறிய இரவு இது. பெரும்பாலும், ஊருக்கு வெளியே பிரமாண்டமான கட்டிடங்களில் இயங்கும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களின் பாதுகாப்புகுறித்தும் அவற்றில் பணிபுரியும் பெண்களின் நிலைகுறித்தும் இரு தினங்களாக விவாதங்கள் நடைபெற்றுவருகின்றன.…
-
- 5 replies
- 1k views
-
-
பிள்ளைகளுக்கு சிறுவயதில் மொபைல்! - பெற்றோர்கள் படிக்க வேண்டிய ஒரு பதிவு ! [Monday, 2014-02-24 20:52:08] பிள்ளைகளுக்கு சிறுவயதில் மொபைல் வாங்கி கொடுக்கும் பெற்றோர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு பதிவு !13 வயது மகளின் ஆண் நண்பர்கள் அனுப்பிய ஆபாச குறுஞ்செய்தியால் தாய் அதிர்ச்சி சிறுவர் சிறுமிகள் கையில் செல்போனை கொடுத்தால் எந்த மாதிரியான விளைவுகளை பெற்றோர் சந்திக்க நேரிடும் என்பதற்கு இதுவே சரியான முன் உதாரணம். இங்கிலாந்து நாட்டினை சேர்ந்தவர் சோனா சிபாரி. இவரது கணவர் கெய்த். இந்த தம்பதியருக்கு 4 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ஆன்னி. பள்ளிக்கூடத்தில் பயின்று வரும் ஆன்னிக்கு வயது 13. தங்கள் ஆசை மகளுக்கு சமீபத்தில் ஆப்பிள் ரக மொபைல் போன் ஒன்றை தம்பதியர் வாங்க…
-
- 0 replies
- 944 views
-
-
மனித வாழ்வோ, மிருக வாழ்வோ, பறவை வாழ்வோ ஆரம்பிக்க முதலே, வாழ்க்கைப் போராட்டம் ஆரம்பமாகி விடுகின்றது! ஒரு படம், ஆயிரம் பந்திகளுக்கு நிகரானது என்று சொல்வார்கள்! இந்தத் தீக்கோழியின் வாழ்வு போலவே, எம்மில் பலரது வாழ்வும்! நாமும் இந்தத் தீக்கோழி போல வாழ்வது தான் 'இயற்கை' எமக்குச் சொல்லித்தந்த பாடம் போலும் !
-
- 17 replies
- 1.4k views
-
-
12 இராசிகளுக்கும் 01.01.2014 முதல் 31.12.2014 வரை பொதுவான பலன்களே இங்கு சொல்லப்பெற்றுள்ளன. அவரவர் ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் நிலை, பலம், பார்வை, திசா புத்தி போன்றவற்றை பொறுத்து ஒவ்வொருவருக்கும் இப் பலன்கள் மாறுபடலாம் என்பதை மனதிற் கொள்ளக. மேஷம்: அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை நட்சத்திரங்களில் பிதந்தவர்களுக்கு…….) மனிதர்களின் மனோ நிலையை நொடிப் பொழுதில் புரிந்து கொள்ளும் அசாத்திய ஆற்றல் பெற்றவர்களே! நீங்கள். துவண்டு வருவோருக்கு தோள் கொடுக்கும் சுமை தாங்கிகளே! இந்த புத்தாண்டு பிறப்பின் போது புதன் உங்களின் சாதகமான வீடுகளில் செல்வதால் நீங்கள் சொல்லும் வார்த்தையை எல்லோரும் தட்டாமல் ஏற்றுக் கொள்வார்கள். வெளிநாட்டு வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு …
-
- 0 replies
- 1.9k views
-
-
குடிகாரன் வா.மணிகண்டன் ஞாயிற்றுக்கிழமை சேலம் போக வேண்டியிருந்தது. கட்டாயம் இல்லை. ஆனால் நண்பர்கள் அழைத்திருந்தார்கள். பெருமாள் முருகனுக்கு விளக்கு விருது வழங்கும் விழா ஞாயிறுதான் நடைபெற்றது. அமெரிக்காவில் இருக்கும் சில இலக்கிய வாசகர்கள் பல வருடங்களாக இந்த விருந்தை வழங்கி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் மூன்று படைப்பாளிகள் நடுவர்களாக இருந்து இந்த விருதுக்குரியவரைத் தேர்ந்தெடுக்கிறார்கள். இந்த வருடம் பெருமாள் முருகனுக்கு. அநேகமாக விருதைப் பெற்றுக் கொள்பவர் விரும்பும் ஊரில்தான் விழா நடக்குமாம். இந்த முறை சேலத்தில். சேலத்தில் விழா நடைபெறுவதாக அறிவித்தவுடனே கலந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். அந்த ஊரின் மீதான பிரியம் அப்படி. சேலத்தில் இருந்த நான்கு வர…
-
- 0 replies
- 768 views
-
-
சகோதர உறவுமுறை ஏன் மிகவும் முக்கியமானது? சகோதரர்களை பெற்றிருப்பது உற்ற நண்பர்களைப் பெற்றிருப்பதைப் போன்றதே. இவர்கள் தான் குழந்தைப் பருவத்தின் முக்கியமான பகுதிகளாக இருப்பார்கள். இவர்கள் இருவரும் தங்களுடைய வாழ்க்கையில் முக்கியமான விளைவுகளை சகோதர உறவால் எதிர் கொண்டிருப்பார்கள். ஒரே குடும்பத்தில் பிறந்து, வளர்க்கப்பட்ட சகோதரர்களிடம் ஒரு கலவையான அன்பும், நட்புணர்வும் விளங்கி வரும். ஒரே ஒரு குழந்தையை மட்டும் கொண்ட குடும்பங்களில் சகோதர உறவுகள் இல்லையென்பதால், அவர்களுடைய வாழ்க்கையில் மிகவும் வித்தியாசமான மற்றும் அற்புதமான உறவையும், சகோதர அல்லது சகோதரி பாசத்தையும் இழந்து விடுகிறார்கள். சகோதரர்கள் இருவருமே பிறந்ததில் இருந்தே ஒருவரையொருவர் அறிவார்கள். சகோதர உறவு முறைகள்…
-
- 47 replies
- 9.1k views
-
-
யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ? மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்! உடைத்தெறியுங்கள் அமைதிக் கலாச்சாரத்தை என்று முழக்கமிடுகிறார் சமூகசேவகி சுனிதா கிருஷ்ணன். யார் இந்த சுனிதா கிருஷ்ணன் ? விஜயவாடா நகரத்தில் வறுமையில் வாடும் ஒரு குடும்பத்தில் மாலினி என்ற 15 வயது பெண். வேலை பார்த்து குடும்பத்தைக் காக்க வேண்டிய கட்டாயம். இந்த சமயத்தில் குடும்ப உறவினர் ஒருவர் அப் பெண் என்று சொல்வதை விட குழந்தை என்றே சொல்ல வேண்டும். அப்பெண் குழந்தையை கூட்டிச் சென்று, ரூ.1.5 லட்சத்திற்கு , ஒரு விபசார விடுதியில் விற்று விட்டார்கள். ஒரு வாடிக்கையாளருக்கு ரூ 6000 என்ற கணக்கில், நாளொன்றுக்கு ரூ.50000 சம்பாதித்துக் கொடுக்க வேண்டும் அந்த பிஞ்சு உடல்! கேட்கவே மனம் பதற…
-
- 3 replies
- 1.4k views
-
-
எனக்கு முப்பது வயது முடியப்போகிறது. இது ஒரு சிக்கலா? எனக்கு ஒரு சிக்கலும் இல்லை. அனால் என் தாயாருக்கு தான் கவலை. எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற கவலை. காதலித்து பார்த்து, அந்த பெண்ணையே மணந்து கொள்கிற அளவுக்கு எனக்கு திறமை பத்தாது. வசதி, வாய்ப்பும் அமையவில்லை. அம்மா காண்பிக்கின்ற பெண்ணையே மணந்து கொள்வது என்று நடுத்தர வர்க்கத்தின் பிரதிநிதியாக முடிவு எடுத்தேன். வந்தது வினை. இதுவரை முப்பது பெண்களின் படங்களை காட்டிவிட்டார்கள். ஒன்று எனக்கு பிடிக்கவில்லை, எனக்கு பிடித்தால் அந்த பெண்ணிற்கு என்னை பிடிக்கவில்லை. ஜாதகம் (தமிழ் வார்த்தை என்ன?) சரியில்லை, பொருத்தமில்லை என்று ஏதோ கரணம் சொல்லி எதுவும் சரியாக அமையவில்லை. தாயாருக்கு கவலை அதிகமாகிப்போனது. யாரோ திருவிடந்தை கோவில…
-
- 0 replies
- 575 views
-
-
உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். நிறம் என்பது ஒருவித மாஜை. நீங்கள் எந்த உடை அணிகிறீர்கள், அதன் விலை என்ன என்பதல்ல முக்கியம். அது பிறரைக் கவர்வதுமில்லை. அணிகிற உடையின் நிறம் தான் மற்றவர்களை ஈர்க்கிறது. ஆயிரக்கணக்கில் கொட்டிக் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கேற்ற நிறமாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள். யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இதோ சில குறிப்புகள்! நம் ஒவ்வொருவருக்கும் ஒரு நிற ஈர்ப்பு உண்டு என்பது தெரியுமா? உங்கள் பிறந்த தேதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 04.…
-
- 13 replies
- 2.9k views
-