சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
October 19, 2018 #MeToo ஹேஷ்டேக் அடையாளத்தோடு இன்று ஒரு புயல் வேக இயக்கம் சமூக வலைதளத்திலும் ஊடகத்திலும் தமிழகத்தில் மையம்கொண்டிருக்கிறது. இது தேநீர்க் கோப்பைப் புயல் அல்ல. சமூகப் பண்பாட்டுத் தளத்தில் அதிகாரம் மிக்க நபர்களால் பெண்களும் குழந்தைகளும் (ஏன் சில ஆண்களும்கூட) முன்னர் பாதிக்கப்பட்டது உண்டா, அதைப் பொதுவெளியில் பகிர்ந்தது உண்டா என்றால் நிச்சயம் உண்டு. உடனடியாக நினைவுக்கு வருவது எழுத்தாளர் அனுராதா ரமணன் காஞ்சிபுர சங்கர மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி அவரிடம் முறைகேடாக நடந்துகொண்டது பற்றி ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தது. 2004இல் ஜெயேந்திர சரஸ…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிள்ளை, விரும்பியதை படிக்க விடும் எண்ணம் என்னிடம் இல்லை. இதை பலர் எதிர்க்கலாம். பிள்ளை தான் விரும்பியதை படிச்சு போட்டு, திரும்பவும் என்னிடம் தான் வந்து கையை நீட்டிக்கொண்டு நிக்கும். பிள்ளை விரும்பியதை அறிந்து அது சார்ந்ததாக, அதாவது பிள்ளை எஞ்சினீர் என்றால், எந்த எஞ்சினீர்க்கு இலகுவாக நல்ல சம்பளத்துடன் வேலை எடுக்கலாம் என்று ஆராய்ந்து அதை படிக்க சொல்வது (வழிநடத்துவது) தான் பெற்றோர் கடமை. உதாரணமாக இலங்கயில் பலர் சிவில் எஞ்சினீர் படிச்சுபோட்டு, UK ல் கடைதான் போட்டு இருக்கினம். கம்ப்யூட்டர் ப்ரோக்ராம்மர் படிச்சா பலர் நல்ல சம்பளத்தோட வேலை பாக்கினம்.
-
- 23 replies
- 2.9k views
-
-
அண்மையில் இந்தியாவின் தமிழ் மக்களுக்கான செய்தி தமிழர்கழுக்கு சந்தோசத்தைத் தரவில்லை. முருகன் பேரறிவாளன் சாந்தன் ஆகியோருக்கான தூக்குத்தண்டனையைப் , பத்து வருடங்களின் பின்பு உறுதி செய்து , தாம் தமிழர்களுக்கு என்றுமே ஜென்மவிரோதி என்ற செய்தியைப் பலமாக எமது மனங்களில் ஆழமாக முத்திரை குத்தியுள்ளது . நாம் முள்ளிவாய்கால் அவலங்களின் போது ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நிகரான நிலையை இப்போது அடைந்துள்ளோம் . நாம் வெறும் உணர்சி நிலையில் இருந்து முடிவுகளை எடுப்பதை விட , உணர்வு பூர்வமாகவும் விவேகமாகவும் எம்மை உளப்பூர்வமாக மாற்றுவதன் மூலம் ஒரு அதிர்வலைகளை இந்தியாவிற்கு வருங்காலத்தில் கொடுக்கமுடியும் . அதாவது............. இந்தியாவிற்கான பொருளாதரத் தடை கட்டமைப்புகளைப் புலம்பெய…
-
- 5 replies
- 1.4k views
-
-
போர் முழக்கம் - சுப.சோமசுந்தரம் நியூசிலாந்து பாராளுமன்ற வரலாற்றில் மிகவும் வயது குறைந்த (21) உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 'ஹனா ரஹிதி மெய்பி கிளார்க்' என்ற பெண் அந்நாட்டின் தொல்பழங்குடி இனமான 'மவுரி' இனத்தைச் சார்ந்தவர். பழங்குடியினருக்கான சமூகச் செயற்பாட்டாளர். தம் இனத்தின் போர் முழக்கப் பாடலைப் பாடி பாராளுமன்றத்தில் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அவருடன் இணைந்து வேறு சிலரும் முழக்கத்தில் பங்கெடுத்தது சிறப்பு. தலைவிரி கோலத்தில், "இளங்கோவடிகளின் சிலம்பு எடுத்தியம்பும் கொற்றவையோ, தோழர் சு.வெங்கடேசனின் வேள்பாரிக் கொற்றவையோ, உலகில் தீமையை அழிக்கும் கூற்றமோ !" என்று வியக்க வைக்கிறார் மெய்பி கிளார்க். "இன்னுயிர் ஈந்தும் உங்களது உரிமை…
-
-
- 1 reply
- 841 views
- 2 followers
-
-
இன்று உலகத்தில் அதிகரித்து வரும் நோய்களில் ஒன்று மராத்தி நோய் : https://ta.wikipedia.org/wiki/மறதிநோய் https://ta.wikipedia.org/wiki/ஆல்சைமர்_நோய் பலவேறு வழிகளில் இவர்கள் மேல் அன்பு வைத்திருப்பவர்களுக்கு இவர்களை அன்புடன் பாதுகாப்பது ஒரு சவாலாக உள்ளது ஒருவர் தனது எண்பது வயதில் நாளும் வேலைக்கு செல்ல ஆயத்தமாவார். இவரை இவருடன் வாழ்ந்த மனைவி நீங்கள் இளைப்பாறி பத்துவருடங்கள் ஆகி விட்டன என்பார். அவருக்கு கோபம் வந்து விடும். சண்டை... பக்கத்து வீட்டாருக்கு ஆரம்பத்தில் இந்த சிக்கல் விளங்கவில்லை, காரணம் சமூக தாழ்வு மனப்பான்மை. காலப்போக்கில் மனைவி, கணவனின் உலகை புரிய ஆரம்பித்தாள். அவரின் உலகம் சுருங்கி இப்பொழுது அவர் தன்னை ஒரு நாற்பது வயதினராக பார்ப்பது…
-
- 2 replies
- 1.6k views
-
-
இலங்கையில் இடம் பெற்ற 30 வருட போர் நேரடியாக பல்வேறுபட்ட பொருளாதார, அரசியல் மாற்றங்கள் மற்றும் சமய சமூக பிரச்சினைகளை தோற்றுவித்தது. யுத்தத்தின் அதியுச்ச பாதிப்பை தன்னகத்தே கொண்ட வடக்கு கிழக்கு பகுதிகளில் யுத்தத்தின் பின்னர் பாரிய அளவு இல்லாவிட்டாலும் ஒரு அளவிற்கு யுத்தத்தின் வடுக்களை குறைப்பதற்கான அபிவிருத்தி செயற்பாடுகள் இடம் பெற்றாலும் வடக்கு கிழக்கு பகுதியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் உள ரீதியான பாதிப்பு இதுவரை சரி செய்யப்பட முடியாததாகவே காணப்படுகின்றது. மனிதர்களாகிய நாம் ஏதேனும் பிரச்சினைகளுக்கு அல்லது கசப்பான சம்பவங்களுக்கு முகங்கொடுக்கும் போது நாம் அனைவரும் உளவியல் ரீதியான …
-
- 1 reply
- 626 views
-
-
'வீட்டில் சும்மாத்தான் இருக்கிறேன்' இனிமேல் இப்படிச் சொல்லாதீர்கள் இல்லத்தரசிகளே! பெண்களை குடும்பப் பெண், வேலைக்குச் செல்லும் பெண் என்று இரண்டு வர்க்கங்களாகவே சமூகம் பிரித்துச் சொல்லி பழக்கப்பட்டுவிட்டது. குடும்பப் பெண் என்ற வார்த்தையின் மேல் உள்ள சர்ச்சை வேறு விஷயம். இல்லத்தரசிகள் இதுகுறித்த உரையாடலைத் தொடங்க வேண்டியது அவசியம். என் தோழி போனில் அழுதுகொண்டே, 'எப்போதும், வீட்டில் சும்மாதானே இருக்க? காசு சம்பாதிச்சு பாரு... அப்போதான் அதன் அருமை தெரியும்' என்று கணவர் குத்திக்காட்டுவதாகக் கூறினார். இன்னொரு தோழியின் கதை வேறு விதம். கணவன் வெளிநாட்டில் இருக்க, இவர் குழந்தைகளுடன் தனியாக வசிக்கிறார். எப்போது பேசினாலும் ஒரே புலம்பல். கணவரின் நிர்ப…
-
- 2 replies
- 1.1k views
-
-
கிட்டடியில ரொரன்டோவில் 2 தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட செய்தியை அறிஞ்சிருப்பீர்கள் என்று நினைக்கிறன். 2 கொலைகளுக்கும் தொடர்பிருக்கா இல்லையா என்று தெரியாது ஆனால் அந்தக் கொலைகளைப் பற்றி றோட்டுக்கடையில நிண்டு கதைக்கினம் சிலர். வீட்டில சோபாவில இருந்து கதைக்கினம் சிலர். சிலர் வட்டமாநாடு போட்டு ஆராய்ச்சியாளர்களுடன் கதைக்கினம். ஏன் இந்த இளைஞர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள். இப்படி பேஸ்போல் மட்டையாலும் சுத்தியலாலும் மொட்டைக்கத்தியாலும் கொடூரமாகக் கொலை செய்ய இவர்களுக்கு யார் சொல்லிக்குடுத்தது? தமிழர்கள் என்றாலே வன்முறையைக் கையில் எடுப்பவர்களா என்று மற்றைய இன மக்களால் விமர்சிக்கப்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறார்களா இவர்கள்? மற்றைய மக்களிடையேயும் கொலைகள் நடக்கின…
-
- 35 replies
- 5k views
-
-
பிளஸ்டூ மாணவி சந்தித்த நூதன பிரச்சினை! ஆகஸ்ட் 11, 2006 சென்னை: சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர், தன்னை இ மெயில் மூலமாக காதலித்த கேரள என்ஜீனியர் தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தங்கமணி. இவர்களுடைய 17 வயது மகள் ஜெனிபர்குமாரி. பிளஸ்டூ படித்து வரும் ஜெனிபர் குமாரி, தனது தாயார் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்க்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோசப் என்ற பொறியாளரும், நானும், இன்டர்நெட் ம…
-
- 11 replies
- 2.6k views
-
-
கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கணிதம் அறிவியல் போல இனி மரணம் குறித்த பாடங்களும் பள்ளிகளில் கற்பிக்கப்படும் படத்தின் காப்புரிமைREUTERS எதிர்வரும் நாட்களில் ஆஸ்திரேலிய குழந்தைகள், பள்ளியில் கணிதம், அறிவியல் வரலாறு போன்ற பாடங்களோடு மரணம், இறப்பு போன்றவற்றையும் ஒரு பாடமாக படிப்பார்கள். …
-
- 0 replies
- 1.1k views
-
-
உங்களில் ஆணோ அல்லது பெண்ணோ,திருமணம் முடித்தவரோ/முடிக்காதவரோ அடுத்தவரின் அழகை ரசிக்கிறது என்டால் ஒரு தனி இன்பம் அதுவும் மனைவி பக்கத்தில் இருக்கும் போதே வேற பெண்களை களவாய் ரசிக்கிறது இதெல்லாம் தனிக்கதை...ஒவ்வொருவருக்கும் அழகை ரசிப்பதில் ஒரு வித்தியாசமான ரசனை காணப்படும்...இந்த பகுதியில் நான் பார்த்து என்னை கம்பீரத்திரதால்,அழகால்,கவர்ச்சியால் ஜொல்லு விட வைத்தவர்களைப் பற்றி எழுதப் போறேன் நீங்களும் உங்களை கவர்ந்தவர்களைப் பற்றி எழுதுங்கள். என்னை முதலில் தன் கம்பீரத்தால் கவர்ந்தவர் என்டால் அது பொட்டம்மான் தான்...என்ன ஒரு ஸ்மாட்...அவர் உரையாற்றும் அழகே ஒரு தனியழகு தான்..இவரது அழகு என்னைப் பொறுத்த வரை மரியாதைக்குரிய,கம்பீரமான அழகு. நான் பார்த்து ஜொல்லு விடுகிற அழகு என்…
-
- 35 replies
- 6.2k views
- 1 follower
-
-
ஆபாச படங்களை பார்க்கும் மாணவர்களின் சராசரி வயது 9 - உலுக்கும் ஆய்வு முடிவுகள்! " பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் நீண்ட நேரம் கணிப்பொறி முன்போ, செல்போனிலோ மூழ்கினால் உஷாராக வேண்டும். நன்றாக கவனித்து பார்த்தால் ஒருவேளை அவர்கள் ஆபாச இணைய தளங்களுக்கு அடிமையாகி இருக்கக் கூடும்" என்ற அதிர்ச்சி தகவலை தனது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளது லண்டனைச் சேர்ந்த ரெஸ்க்யூ எனும் அரசு சார்பற்ற நிறுவனம். ஆபாச படம், இளம் வயதில் கருக்கலைப்பு, மனித கடத்தல், எய்ட்ஸ், முறையற்ற பாலியல் உறவு, பாலியல் வல்லுறவு உள்ளிட்டவைகளுக்கு எதிராக கல்லூரிகள் தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இந்த அமைப்பு, விழிப்புணர்வு நிகழ்ச்சிகளோடு கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாகி வருகிற…
-
- 0 replies
- 913 views
-
-
வழக்கமாகக் குற்றவாளிகள் யார், என்னென்ன குற்றம்செய்தார்கள் என்பது ஒரு வழக்கில் தெளிவாகத் தெரிந்துவிடும். தண்டனை என்ன என்பதற்குத்தான் காத்திருக்க வேண்டியிருக்கும். ஆனால், இந்த வழக்கில் குற்றவாளிகள் யார் யார், கூட்டாளிகள் யார் யார் என்பதே இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் 24-ம் தேதி, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி அளித்த அந்தப் புகார் தமிழகத்தையே அதிரவைக்கும் என்று யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். "பிப்ரவரி 12-ம் தேதி, ஃபேஸ்புக் மூலம் என் நண்பரான ரிஷ்வந்த் என்ற சபரிராஜன், `அவுட்டிங் போகலாம்’ என்று சொல்லி என்னைக் காரில் அழைத்துச் சென்றான். திருநாவுக்கரசு என்பவன் காரை ஓட்டினான். பின் சீட்டில் நானும், சபரிராஜனும் அமர்ந்த…
-
- 0 replies
- 417 views
-
-
இளம்பராயத்தினர் 30 சதவிகிதம் பேர் ஊட்டச்சத்துக் குறைவு அல்லது உடற்பருமனால் பாதிப்பு – UNICEF சர்வதேச ரீதியாக 5 வயதுக்குக் குறைவான சுமார் 700 மில்லியன் குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர், போதிய ஊட்டச்சத்து இன்றியோ அல்லது அதிக உடல் பருமனுடனேயோ இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இதன்காரணமாக குழந்தைகள் உடல்நலப் பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக UNICEF எனப்படும் ஐக்கிய நாடுகளின் துணை நிறுவனமான சிறுவர் நல அமைப்பு குறிப்பிட்டுள்ளது. ஊட்டச்சத்து இன்றி உணவு உற்கொள்ளும் பிள்ளைகளின் வாழ்க்கைத் தரம் மோசமாகவே இருப்பதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 1999 ஆம் ஆண்டுக்குப் பின்னர் யுனிசெப் அமைப்பு வெளியிட்ட முதல் குழந்தைகள் நல அறிக்கையில் இந்த தகவல் இடம்பெ…
-
- 0 replies
- 242 views
-
-
[size=5]போன்ஸாய் மரங்கள் - ‘சிறுமுது அறிவர்’[/size] [size=2] [size=4]இன்று உலகில் பல சிறுவர்கள் ‘சிறுமுது அறிவர்’ அதாவது Child Prodigy என்று போற்றப்படுகின்றனர். இரண்டு வார்த்தைகளுமே புரியாத புதிராகத் தோன்றும். புரியும்படிச் சொல்ல வேண்டுமென்றால், “குழந்தை மேதை” என்று சொல்லலாம். இவர்களை, “சிறிய வயதிலேயே பெரியவர்களுக்குண்டான அறிவும் திறமையும் கைவரப்பெற்றோர்” என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. ”அதிகப் பயிற்சி தேவைப்படும் துறையில் மிகத்தேர்ந்த பெரியவரின் திறமையைத் தன் செயலில் காட்டும் சிறுவர்களே சிறுமுது அறிவர்” என்பது இன்னொரு வரையறை. இதில் சிறுவர்கள் என்பதற்கான அதிகபட்ச வயது எல்லை எதுவென்பது இன்னும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கிறது.[/size] [/size] [size=2] [size=4]…
-
- 2 replies
- 973 views
-
-
எல்லோரும் Fast Food கடைக்கு செல்வதை ஒரு பொழுது போக்காகவும் ஒரு நாகரிகமாகவும்(?), அல்லது ரசனைக்காகவும் செல்வோம். எப்போதாவது செல்வதில் தப்பில்லை. ஆனால் அடிக்கடி போனால் சொந்த செலவில் சூனியம் வைக்கும் கதையாக தான் அமையும் Fast Food பற்றியும் அதன் விளைவுகள் பற்றியும் ஒரு குறிப்பு. 1 .வரலாறு 1921 - முதலாவது Fast Food Chain நிறுவனமாக White Castle உருவானது. 1948 -McDonald 's Fast Food மார்க்கெட் இல் தன்னை இணைத்தது. 1951 - "Fast Food " என்ற பதம் Merriam Webster அகராதியில் சேர்க்கப்பட்டது. 1951 - Jack In The Box "Drive Through" ஐ அறிமுகப்படுத்தியது 2 .சந்தை நிலவரம் McDonald 's இன் வருமானம் 31 000 locations களில்இருந்து $23 Billion YUM! B…
-
- 3 replies
- 2.5k views
-
-
நாம் பாதுகாப்பாக இருப்போம் என்று உறுதியாக நம்புங்கள்’ மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை 41 Views கொரோனா வைரஸ் குறித்த செய்திகள், பாதிப்புகள், இழப்புகள் மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இதுவும் ஒருவித பாதிப்பே என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அனைவரும் திடமான மனதுடன் வாழ பழகி கொள்ள வேண்டும் என மனோ தத்துவ நிபுணர்கள் அறிவுரை வழங்குகின்றனர். இது தொடர்பில் இலங்கை அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலில், கொரோனா அச்சத்தில் இருந்து வெளியேறி, கொரோனா பரவல் காலத்திலும் மனதை தேவையற்ற பயத்தில் இருந்து மீள உளவியலாளர்கள் சில பரிந்துரைகளை அளித்துள்ளனர். க…
-
- 0 replies
- 288 views
-
-
இது பெரிய தொல்லையா இருக்கு. நான் எனது இடது 4ம் விரலில் மோதிரம் அணிந்திருப்பதால்.. பல பிகருகள்.. சாரி மக்கள் கேட்கிறார்கள்.. திருமணம் செய்திட்டீங்களோ என்று. நான் பிறந்த காலத்தில் இருந்து அதில (இவன் வீணாப் போனவனால ரெம்ப தொல்லையா இருக்கு.. அதில என்றால் இடது 4ம் விரலில்..!) தான் மோதிரம் போட்டுக் கொண்டு வாறன். இந்தக் கேள்விகளால் பயந்து போய் போற வாற இடமெல்லாம்.. ஆக்களின்ர கையில எங்க மோதிரம் கிடக்கு என்று ஆராய்ச்சி செய்து வந்ததில்.. வெள்ளைகளில் குறிப்பாக திருமணமான ஆண்கள் சிலர் இடது 4ம் வரலில் மோதிரம் அணிந்திருப்பதோடு வேறு சிலர் மாறியும் அணிந்திருக்கின்றனர். அதேவேளை சில பெண்கள் வலது 4ம் விரலில் அணிகின்றனர். சிலர் இடது 4ம் விரலில் போட்டிருக்கின்றனர். …
-
- 33 replies
- 16.9k views
-
-
விமான நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் தொடங்குவதற்கு முன்னரே அந்த ஆண்டுக்கான வல்லினத்தின் செயல்திட்டங்களைக் குழுவாக அமர்ந்து விவாதிப்பது வழக்கம். பெரும்பாலும் திட்டமிடப்படும் 95 சதவிகிதம் நடவடிக்கைகள் செயலாக்கம் பெற்றுவிடுவதுண்டு. திட்டங்கள் வகுப்பதில் இரண்டு விதிமுறைகளைக் கடைப்பிடிக்கிறோம். முதலாவது, அது தனி ஒருவருக்கு மட்டும் பலனளிக்கும் விதமாக அமைந்துவிடக்கூடாது. அடுத்தது, அத்திட்டம் ஏதோ ஒருவகையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தை ஒருபடி முன்னகர்த்திச் செல்ல வேண்டும். இலங்கைப் பயணம் அப்படி மனதில் தோன்றியதுதான். ‘வல்லினம் 100’ களஞ்சியத்தை இலங்கையில் அறிமுகம் செய்வதன் வழி மலேசிய – சிங்கப்பூர் நவீன தமிழ் இலக்கியம் மட்டுமல்லாது சமகாலத்தில் இந்நாட்டின் அரசியல், சமூகச் சூழலையும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
மனமும் புத்தியும் கிழித்த நேர்க்கோட்டில் நின்று எப்போதும் நிஜம் பேசுபவர் எழுத்தாளர், ஒளி ஓவியர், இயக்குநர் தங்கர் பச்சான். இது, முந்திரிக்காட்டு மண்வாசம் அடிக்கும் அவருடைய எழுத்துப் பாசனம்… இதை எல்லாம் எதுக்கு எழுதணும்? எழுதலேன்னா என்னாகும்? ஏன் எழுதலேன்னு யாராவது கேட்கப் போறாங்களா? இருந்தாலும் எழுதப் போறேன். எழுதி வெளியில தூக்கிப் போட்டாத்தான் நிம்மதியா இருக்க முடியும்னு மனசு சொல்லுது. கண்டும் காணாமப் போவது, நல்லா நின்னு நிதானமாப் பார்ப்பது, பார்க்கவே வேணாம்னு முடிவு செய்து எதைப் பத்தியும் கண்டுக்காமப் போய்ட்டே இருப்பதுன்னு நானும் இருக்கப் பார்க்கிறேன், முடியல. இருக்கிற வேலையைப் பார்க்குறதுக்கே நேரம் பத்தல. திரைப்படக் கல்லூரி கடைசித் தேர்வு எழுதிய சமயம், கடைசி வ…
-
- 24 replies
- 8k views
-
-
முணுக்கென்றால் நிகழும் விவாகரத்துகள் - ஆர். அபிலாஷ் சமீபத்தில் ஒரு தோழி தனது மணமுறிவு பற்றி பேசிக் கொண்டிருந்தார். “என் திருமண வாழ்வு மகிழ்ச்சியற்றதாகி விட்டது. இனிமேலும் இதையே பொறுத்துக் கொள்ள முடியாது. யாருக்காகவும் நான் என் நிம்மதியை தியாகம் செய்ய இயலாது. நான் என் மன ஆரோக்கியத்தை காப்பாற்ற வேண்டுமல்லவா? ஆகையால் என் கணவரிடம் இதைப் பற்றி ஒருநாள் விவாதித்தேன்.” “அவர் என்ன சொன்னார்?” “அவர் என்ன சொல்வதற்கு? எல்லா கணவர்களையும் போல முரண்டு பிடித்தார். என்னை கெட்ட வார்த்தையால் திட்டினார். மிரட்டினார். அடிக்க வந்தார். அடுத்த நாள் முகத்தை திருப்பிக் கொண்டு பேசாமல் இருந்தார். மறுநாள் வந்து என்னிடம் அழுதார். ஆனால் அவரை விட்டு விலகுவது என நான் அப்போது உறுதிய…
-
- 3 replies
- 1.7k views
- 1 follower
-
-
https://www.youtube.com/watch?v=Ypes1C203Bc வாகனத்தை விட்டு, இறங்க முன்... ஒரு வினாடி சிந்தியுங்கள்!!! அத்துடன், குழந்தைகள் வாகனத்தில் பயணித்தால்..... அவர்களால் உள்ளிருந்து கதவை திறக்க முடியாதவாறு... செய்து விடுங்கள்.
-
- 4 replies
- 1k views
-
-
காதல் தோல்வியின் காயங்கள்: மீண்டெழுவது எப்படி? Spencer Platt உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரே மதம் 'காதல்'. காதல் பல போர்களை தோற்றுவித்துள்ளது. பல போர்களை முடித்தும் வைத்துள்ளது. வரலாறும், புராணங்களும், நம் சினிமாக்களும் காதலை கொண்டாடாத விதமில்லை. சொல்லப்போனால் திகட்ட திகட்ட இந்த உலகம் காதலை கொண்டாடியிருக்கிறது. இன்னும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் காதலை புனிதப்படுத்தி, மிகைப்படுத்திவிடவும் நாம் தவறவில்லை. யார் பிறந்த தினமும், இறந்த தினமும் மறந்தாலும், உலகில் யாருக்கும் காதலர் தினம் மறந்து போவதில்லை. அப்படி கொண்டாடப்படும் காதல், தோல்வி அடைந்தால், அந்த நபரின் நிலை என்னவாகும். நிச்சயம் உங்கள் நண்பரோ, தோழியோ காதல் தோல்வியால் புலம்பி அழு…
-
- 0 replies
- 1.2k views
-
-
சமூக வலைதளங்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா? #BeGoodDoGood நீங்கள் மாநகர பூங்காக்களை கவனித்தது உண்டா? ஒரு மரத்தின் கீழ் வயது முதிர்ந்த நண்பர்கள் சிலர் வாக்கிங் வந்ததாகச் சொல்லி கதை பேசிக்கொண்டிருப்பார்கள். இன்னொருபுறம், 40 வயதை கடந்த பெண்கள் சிலர் சிமென்ட் பென்ச்சில் லேடீஸ் கிளப் நடத்திக் கொண்டிருப்பார்கள். புதர்களுக்கு நடுவேயும், மெர்க்குரி விளக்கின் வெளிச்சம் அதிகம் பரவிடாத இடங்களிலும் காதல் ஜோடிகள் காதில் கிசுகிசுத்துக் கொண்டிருப்பார்கள். உடலில் பலம் இருப்பவர்கள், காதில் ஹெட்ஃபோனோடு ஓடிக்கொண்டிருப்பார்கள். சிலர் ஆங்காங்கே தனியே அமர்ந்து யோசித்துக் கொண்டிருப்பார்கள். நாய்கள் சில எதையோ தேடிக்கொண்டிருக்கும். சிறுவர்கள் கூட்டம் கிரிக்கெட…
-
- 0 replies
- 1.3k views
-
-
பெண்களின் மனதை கொள்ளை கொள்வது எப்படி? என்பது அநேக ஆண்களின்கவலை.என்னென்னவோ செய்தும் இந்த பெண்களை எளிதில் கவர முடியவில்லையே என்பது தான் இன்றைய தலைமுறை இளைஞர்களின் ஆதங்கம்.இதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்று பலருக்கு தெரிவதில்லை. பெண்களை மனதை கவருவது எப்படி என்பது குறித்து உங்களுக்காக சில யோசனைகள்: நாம் எதற்காகவாவது அதீத முயற்சி செய்தால் அது கிடைக்கும் வரை நமக்கு போராட்டம் தான். பெண்கள் விடயத்தில் இது ஒரு படி மேலாகவே இருக்கும். பெண்களை கவர நீங்கள் பெரும் முயற்சி செய்யா…
-
- 67 replies
- 41.5k views
-