சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
கோபம் இல்லாத, மனைவி தேவையா? - இதோ... சில தகவல்கள்! குடும்பத்தில் கணவன், மனைவி இடையே சண்டை, தகராறு ஏற்பட்டு பல குடும்பங்கள் பிரிந்து விடுகின்றன. முடிவில் மனைவி தான் கோபம் கொண்டவளாக இருந்தாள் என்று பெரும்பாலான கணவன்கள் தெரிவிக்கின்றனர். குடும்பத்தில் மனைவிகள் கோபம் அடைய, கணவன்களும் சில நேரங்களில் காரணமாகி விடுகின்றனர். மனைவிக்கு கோபம் ஏற்படாமல், அவரிடம் இருந்து அன்பை மட்டும் பெற இதோ சில டிப்ஸ்: 1.மனைவி செய்யும் சிறு சிறு தவறுகளை சுட்டிக்காட்டி வாய்க்கு வந்தபடி திட்டாதீர்கள். தவறை நிதானமாக எடுத்து கூறுங்கள். 2.மனைவியை பார்க்கும் போது புன்னகை செய்ய மறக்காதீர்கள். இதனால் கோபமாக இருக்கும் மனைவி கூட சில நேரங்களில் அதனை மறந்துவிட வாய்ப்புள்ளது. …
-
- 17 replies
- 6.5k views
-
-
உறவுகள் பொருளாதாரம் சார்ந்தவை. தனி நபர்களைக் கருத்தில் கொண்டால் இதை ஏற்பது கடினம். ஆனால் தொகுக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது இப்படிப்பட்ட ஒரு முடிவுக்கு வருவதைத் தவிர்க்க முடியாது. அமெரிக்காவின் பொருளாதாரத் தேக்கம் கடந்த சில ஆண்டுகளில் நிலை த்து நீடிக்கிறது. இதன் தாக்கங்களை ஆய்வு செய்யும்போது மேற்கண்டது போன்ற முடிவுகள் உறுதிப்படுகின்றன. அங்கு ஆண்டுக்கு ஆண்டு விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அமெரிக்க மாகாணங்களில் எங்கெங்கு வேலை வாய்ப்பின்மை அதிகரிக்கிறதோ அங்கெல்லாம் விவாக முறிவுகளின் எண்ணிக்கை குறைகிறது என்பதற்கான புள்ளியியல் ஆதாரங்கள் கிட்டியிருக்கின்றன. ஆனால் பொருளாதாரத் தேக்கம், வேலையின்மை ஆகியனவற்றால் விவாக முறிவுகள் குறைகின்றன என்பதை ஒரு…
-
- 14 replies
- 2k views
-
-
இக்கேள்வியின் அரசியல், தமிழ் அடையாளம் சாதிய அடையாளத்தை தாண்டியதல்ல அல்லது தமிழ் அடையாளமே சாதிய அடையாளம்தான் என்பது. தமிழ் என்ற இனம்சார் அடையாளத்தை சாதியம் என்ற குழுசார் அடையாளமாக மாற்றமுனையும் அரசியல் குறுக்கநிலை அல்லது அத்தகைய வேலைத்திட்டத்தின் பகுதியாக எழுந்துள்ள சிந்தனை. சாதியம் என்ற இனக்குழுசார் அடையாளத்தை, தமிழ் என்ற இனம்சார் அடையாளத்துடன் இணைத்து பார்ப்பது. சாதியம் இனக்குழுச் சமூகத்தின் குழுஅமைப்புகளை குறிக்க பிறந்த சொல்லாடல். தமிழ் “இனம்“ என்பதை குறிக்கும் நவீன முதலாளித்துவ வளர்ச்சியுடன் உருவான சொல்லாடல். சாதிய அடையாளம் இனக்குழு வரலாற்றின் உடலரசியல்நிலை, தமிழ் அடையாளம் முதலாளித்துவ சமூகத்தின் கற்பிதக் கருத்தாக்கமான இனவரலாற்றின் உணர்வரசியல்நிலை. இனஅடையாளம் என்பது அத…
-
- 24 replies
- 2.1k views
-
-
குழந்தைகளுக்கு யாரும் பயிற்றுவிச்சதா தெரியல்ல. நீங்கள் கைகளை நீட்டினாலே போதும்.. ஓடி வந்து உங்களிடம் சரணடைந்து விடுவார்கள். அதேபோல்.. அவர்களுக்கும் ஏதாவது தேவைன்னா.. கையை நீட்டி.. உங்களின் மூளையை துண்டித் துலங்கச் செய்துவிடுகின்றனர். உங்கள் மனதை கொள்ளை அடித்து விடுகின்றனர். உங்களுக்கு குழந்தைகளின் எச்செயல்கள் அவர்கள் மீது.. எல்லா வேலையையும் விட்டிட்டு.. கவனம் செலுத்தனும்.. அல்லது அவர்களின் செயலுக்கு நிச்சயம் ஏதாவது அவங்க மகிழும் படி செய்யனும் என்று தோன்றச் செய்யுது...?! நான் நேற்றைய தினம்.. ஒரு உறவினரின் வீட்டுக்கு அவசர அலுவலா போயிருந்தன். அங்கு ஒரு 2/3 வயசு இருக்கும். சுட்டிப் பொண்ணு. அவங்க வீட்ட போனதில இருந்து அவா என்னைப் பார்த்துக் கொண்டே நிண்டா. ஆனால் …
-
- 2 replies
- 704 views
-
-
சென்ற வருடம் 2011 இல் கொழும்பில் தோழர் மனோரஞ்சனுடன் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருந்த ஒரு நாளில் பூபாலசிங்கம் புத்தகசாலையில் தோழர் டொமினிக் ஜீவா அவர்களை சந்திக்க வாய்த்தது. புத்தகத்தைக் கையில் தூக்கி வைத்திருக்கமுடியாத கை நடுங்கும் நிலையிலும் உயிரைக் கையில் பிடித்து வைத்திருப்பதுபோல் அப்புத்தகத்தை அவர் பிடித்து வைத்துக்கொண்டிருந்தார். கர்ப்பக்கிரகத்திலிருக்கும் மூலவரை வெளியே நின்று வணங்குவதுபோல மானசீகமாக வணங்கிவிட்டு அவ்விடம் விட்டகன்றேன். யாழ்ப்பணத்தவரின் பொற்கோவிலான பல்கலைக்கழக விருதை அவர் திருப்பி வழங்கியவர். முகத்திலே தூக்கி எறிந்ததிலிருந்து நமது சுயமரியாதையையும் கௌரவத்தையும் போர்க்குணாம்சத்தையும் தனி ஒரு மனிதனாக நின்று காப்பாற்றினார். நாமறிந்து உலகத்தில் எந்தப் …
-
- 3 replies
- 921 views
-
-
எனக்கு பெண்கள் என் மீது ஆதிக்கம் செய்வது பிடிப்பதில்லை. பெண்கள் மட்டுமல்ல.. எவராக இருந்தாலும்.. என் மீது எனது தனிப்பட்ட விடயங்களில் மூக்கை நுழைப்பது அதைச் செய்.. இதைச் செய் என்பது எனக்கு அவ்வளவா பிடிப்பதில்லை. புத்திமதி சொல்லக் கேட்பது வேறு.. ஒன்றை தயவோடு.. அன்போடு செய்யச் சொல்வது வேறு...! ஆனால் ஒன்றை அதிகார தொனியில் அல்லது மேலாதிக்க நோக்கில்.. அல்லது கட்டாயக் கடமை என்ற போர்வையில்.. செய் என்று பணிப்பது வேறு.. எனக்கு இந்த கடைசியில் சொன்ன செயல்கள் செய்பவர்களைப் பொதுவாகப் பிடிப்பதில்லை..! அப்படிச் சொல்லப்படும் விடயங்களை தெரிந்து கொண்டே செய்யாமல் புறக்கணித்தும் விடுவேன். அதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை..! இதில் உங்கள் நிலைப்பாடு என்ன..???! பெண்கள் சொல்வதை எல்லாம் க…
-
- 41 replies
- 3.9k views
-
-
கல்யாணம் பண்ணுங்க ஹார்ட் அட்டாக் வராது!–ஆய்வில் தகவல் திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று அதனால் இதயநோய் வருவது கூட தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கையை கைவிட்டு விட்டு குடும்பத்தஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள். திருமணம் குறித்தும் குறிப்பாக திருமணத்தினால் ஆண்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும் புதிய ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்பொழுது தனியாக வாழும் ஆண்களை விட திருமணம் செய்து கொள்ளும் ஆண்களுக்கு இதயநோய் பாதிப்பு ஏற்படுவது குறைந்துள்ளது தெரியவந்தது. பேச்சிலர்ஸ், விவாகரத்து ஆனவர்கள், மனைவியை இழந்தவர்கள் ஆகியோர்களைவிட மனைவியோடு வாழ்பவர்களுக்கு இத…
-
- 11 replies
- 1.8k views
-
-
என் தாத்தாவிடம் ஒரு வில்லியர்ஸ் இறைப்பு மிசினும் ஒரு றலி சைக்கிளும் இருந்தன என்று சாதாரணமாகக் கூற முடியாது. என் இரண்டு தாத்தாமாரிடமும் ஒவ்வொன்று இருந்தன என்பது மட்டுமல்ல ஊரில் கிட்டத்தட்ட ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொன்று இருந்திருக்கும். எண்பதுகளின் ஆரம்பம்வரை இதுதான் ஊரில், எண்பதுகளின் நடுவில் றொபின் மிசினும் லுமாலா சைக்கிளும் வரத்தொடங்கியதும் வில்லியர்ஸ்/றலி கூட்டணி கொஞ்சம் ஆட்டம் காணத்தொடங்கியது உண்மைதான் என்றாலும் 80 களின் ஆரம்பத்தில் சிறுவனாக இருந்த என் ஞாபகத்தில் உறைப்பாக நிற்பது வில்லியர்ஸ்/றலி கூட்டணிதான். படத்தில் இருப்பதுதான் ஊரில் பாவனையிலிருந்த இறைப்பு மிசினின் அண்ணளவான படம். உள்ளூர்த் தொழில்நுட்பத்தில் இரண்டு சில்லுடன் கூடிய ஒரு சின்னத் தள்ளு வண்டியி…
-
- 30 replies
- 4.9k views
-
-
கொஞ்ச நாளாவே எனக்கும்,என் தம்பிக்கும் சண்டை...அவன் சொல்லுறான் பெண்கள் என்டால் என்னை மாதிரி இருக்கக் கூடாதாம்,அப்படி என்னை மாதிரி இருக்கிற பெட்டையளை தான் கல்யாணம் கட்ட மாட்டானாம் ...நீங்களே இந்தப் பிரச்சனையே கேளுங்கோ அதற்கு உண்மையான,நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள் என்ட நிலையில் இருந்து கொண்டு பதிலைத் தாருங்கள். பிரச்சனை இது தான் எனது குரல் கம்பீரமாக இருக்குதாம்,மற்றவர்களோடு கதைக்கும் போது குறிப்பாக பெடியங்களோடு கதைக்கும் போது நான் அதட்டி,உருட்டி,முகத்தில் அடிச்ச மாதிரி சுருக்கமாக சொல்லப் போனால் யாழில் எழுதிற மாதிரி கதைக்கிறனாம் [குரலில் கம்பீரம் இருக்க கூடாதாம்.]...இப்படியான பெட்டையளை ஒருத்தரும் கல்யாணம் கட்ட மாட்டாங்களாம்...என்ன தான் பெடியங்கள்…
-
- 59 replies
- 7.8k views
-
-
காதலர்தினம் ரோஜாவை மட்டுமல்லாமல் மனங்களைப் பரிமாறி விழிகளால் கதைபேசி... நாமெல்லோரும் களித்திருக்கும் இந்நாள்... இது உண்மையிலேயே ஒரு துயரந் தோய்ந்த நாள். வலண்டைன் என்ற பாதிரியார் கல்லால் அடிக்கப் பட்டு சித்திரைவதை செய்யப்பட்டு தண்டிக்கப் பட்டு தலை துண்டிக்கப் பட்ட நாள் இது. அந்த நாள் கி.பி.270 வது வருடம் - பெப்ரவரி 14ந் திகதி(14.270). இந்தத் தினம்தான் காதலர்தினம். இது ஏன் வந்தது? எப்படித் தொடங்கியது? என்று தெரியுமா? கொடுரமாகவும் கோமாளித்தனமாகவும் ஆட்சி புரிந்த ரோமானியச் சக்கரவர்த்தி கிளாடி- 2 யின் முட்டாள் தனமான கட்டளைகளால் அவனை விட்டு விலகிப் போயினர் அவனது இராணுவ வீரர்கள். புதிய இராணுவ வீரர்களை அவனால் சேர்க்க முடியவில்லை. யாரும் முன் வந்து இராணுவ…
-
- 3 replies
- 779 views
-
-
சமூகவயமாதலின் தாக்கங்கள்... ஆக்கம்: எஸ். கண்ணன் தமிழ்ச் சமூகத்தில் அதிர்ச்சியூட்டும் செய்தியாக, அதிகரித்து வரும் விவாகரத்து இருக்கிறது. சில தினங்களுக்கு முன் 25 முதல் 30 வயதுக்கு உள்பட்டவர்கள் இடையிலான திருமண உறவில், விரிசல்கள் அதிகரித்து வருவதாக நாளிதழ்கள் கவலையை வெளிப்படுத்தி இருந்தன. கவலையும் அதிர்ச்சியும் மட்டும் மேற்படிப் பிரச்னையைத் தீர்த்து விடுவதில்லை. அதற்கான மூலகாரணத்தை அறிந்து கொள்ளாமல் தீர்வை எட்ட முயற்சிப்பது பலவீனமான சிந்தனையின் வெளிப்பாடு என்பதையும் கணக்கில்கொண்டு தீர்வு காண முயற்சிக்க வேண்டும். இந்தச் சமூகப் பிரச்னைக்கு இரண்டு முக்கிய வளர்ச்சிப் போக்கு காரணமாக இருப்பதைக் கணக்கில் எடுப்பதும் அவசியம். ஒன்று, குடும்ப அமைப்பு முறைக்கும், திருமண…
-
- 0 replies
- 554 views
-
-
( எங்கோ படித்தது ) * சாலையில் கை கோர்த்துக் கொண்டு நடந்து செல்பவர்கள் காதலர்கள். * நீ முன்னாடி போன நான் பின்னாடி போவேன் என்று ஆளுக்கொரு பக்கம் போவது தம்பதிகள். * பசி, உறக்கம் மறக்க வைப்பது காதல். * இதை மட்டுமே நினைக்க வைப்பது கல்யாணம் * உறக்கத்தில் காணும் இனிமையான கனவுதான் காதல். * அந்த இனிமையான கனவைக் கலைக்கும் கடிகார அலறல் சத்தம்தான் கல்யாணம் * காதலர்களுக்கு இடையே தொலைக்காட்சிக்கு இடமிருக்காது. * டிவி ரிமோட்டிற்காக சண்டை போடுபவர்கள் தம்பதிகள். * எல்லா குறைகளையும் ரசிப்பவர்கள் காதலர்கள். * நிறைகளே கண்ணிற்குத் தெரியாதவர்கள் தம்பதிகள். * உயர்ந்த விடுதியில் இரவு உணவு காதல். * ஆறிப்போன பார்சல் தான் கல்யாணம் * நவீன காரில் நெடுஞ்ச…
-
- 7 replies
- 1.2k views
-
-
21ம் நூற்றாண்டின் ஆடை அலங்காரம்..! மனித வரலாற்றில்.. உடை அணியும் நாகரிகம் பகுத்தறிவுள்ள மனிதனை வந்து சேர்ந்தது ஆச்சரியமல்ல. ஆனால் அமெரிக்கா.. பிரிட்டன் போன்ற மேற்கு நாடுகளில் நாய், பூனை போன்ற செல்லப் பிராணிகளுக்கு உடை அணிவிக்கும் நாகரிகம் வெகு வேகமாக வளர்ந்து வருவதோடு அது பல மில்லியன் கணக்கான வருவாயையும் ஈட்டிக் கொடுக்கிறது. அதேவேளை இந்தியா.. வங்காளதேசம் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் ஆபிரிக்காவிலும் குழந்தைகளே உடை அணிய வசதி இன்றி வாழ்கின்றன. அதுமட்டுமன்றி நடிகைகள்.. மாடல்கள்.. உடை இன்றி தெருக்களில்.. திரைகளில் தோன்றுவதையே நாகரிகம் என்று நினைக்கின்றனர். இப்படி பன்முகப்பட்ட வடிவில் வந்து நிற்கிறது 21ம் நூற்றாண்டின் …
-
- 1 reply
- 1.1k views
-
-
மன்னிப்பு கேட்டா கௌரவம் குறைஞ்சிடுமா என்ன ?! தமிழ் ஓரளவு எழுத தெரிஞ்சா போதும்னு எழுதவந்த பலரில் நானும் ஒருத்தி. இலக்கியம்,இலக்கணம் தெரிஞ்சவங்க அநேகர் இருக்கும் இடத்தில என்னை போன்றோரும் இருக்கிறோம் என்றால் அதுக்கு ஒரு காரணம் கூகுள். எழுத இலவசமா பிளாக் கொடுத்து என்னத்தையும் எழுதி தொலைங்க, எனக்கு தமிழ் படிக்க தெரியாதது நல்லதா போச்சு என்று சகித்து கொண்டிருக்கும் கூகுளுக்கு நன்றியோ நன்றி ! ம்...நன்றினு சொல்லும் போது எவ்ளோ சந்தோசமா இருக்கு ஆனா நம்ம மக்கள் ஏன் இதை அவ்வளவா உபயோகிப்பது இல்லை என்பது எனக்கு புரியல. நன்றி என்பது ஒரு அழகான வார்த்தை தானே, தேவையில்லாம எதை எதையோ சொல்றோம், ஆனா நன்றினு சொல்ல ரொம்ப தயக்கம் காட்டுவது …
-
- 12 replies
- 2.7k views
-
-
எங்கள் எல்லோரினதும் அடிமனசில் பசுமையான நினைவுகளாக இன்னும் இருப்பது எங்களின் பால்ய கால நினைவுகளே எந்த வித கவலைகளும் அற்று பட்டம் பூச்சிகளாய் சிறகடிச்சு பறந்த தருணங்கள் அவை எம் வாழ்வில் இனி ஒரு போதுமே திரும்பி கிடைக்காத நாட்கள் எனினும் பசுமரத்தாணியாய் எம்மனசில் பதிந்து இருப்பவை ...அப்பிடியான ஒரு வாழ்க்கை தருணம் மீண்டும் வாழ்ந்து பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என எல்லோரையும் ஏங்க வைப்பன என்ன தான் தாயகத்தில் குண்டு வீச்சுகள் துப்பாக்கி சத்தம்களுக்கிடையில் கழிந்திருந்தாலும் அந்த துயரமான நினைவுகளையும் தாண்டி பால்யத்தில் சந்தோசமான நினைவுகளே அதிகம் இருக்கும் ......இப்போதுள்ள வசதி வாய்ப்புகள் எங்களிடம் இல்லாமல் இருந்து இருக்கலாம் ஆனால் அது போல ஒரு காலம் திரும்பி வருமா என…
-
- 1 reply
- 1.1k views
-
-
அலுவலகம் முடிந்து வீடு வந்த போது, அம்மா வாசலில். பார்சல் ஒன்று வந்திருக்கு என்று சிரித்தார்! புத்தகங்கள் தான். அதனால் தான் அந்த நமுட்டுச்சிரிப்பு. உடைத்தோம்! டிஸ்கவரி புக் ஷாப்பில் இருந்து, நம்ம சவால் சிறுகதை போட்டி பரிசு. என்னடா ஒரு மாசம் ஆயிட்டுதே, வந்து சேரலையே என்று கவலை. ஆதி, பரிசிலிடம் tracking number கேட்டு தொல்லைப்படுத்தவும் இஷடமில்லை. பார்த்து, ஏமாந்து, ஏதலித்து இறுதியில் here you go... ஆவலுடன் ஒவ்வொரு புத்தகமாய் வாசம் பார்த்தேன். கி.ராஜநாராயணனின் “கரிசல் காட்டு கடுதாசி” நிலாரசிகனின் “வெயில் தின்ற மழை” பாஸ்கர் சக்தியின் “கனக துர்கா” கலாப்ரியாவின் உருள் பெருந்தேர் பிரபஞ்சனின் “தாழப் பறக்காத பரத்தையர் கொடி” இவற்றோடு வாழ்த்துச்ச…
-
- 0 replies
- 2.5k views
-
-
பேசுடா..பேசு...உன்னை மாதிரி லட்ச்சம் இளைஞ்ஞர்கள் வரனும்...ஊத்தை அடைஞ்சு போய்க் கிடக்கும் இந்த சமூகத்தை,தமிழ் நாட்டுச் சமூகத்தை வெளுக்கணும்.... http://www.youtube.com/watch?v=qkHdmLRGQk8
-
- 0 replies
- 656 views
-
-
ஹாய் ...... காதலர் தினம் வருது.....அதனால இப்பிடி ஒரு தலைப்பு தட்ஸ் தமிழ் இனையத்தில வந்திச்சு........யாழ் கள உறவுகளும் இந்த முயற்சியில ஈடுபட்டு உங்கள் நினைவுகளை பகிர்ந்துக்கலாமே........ வாழ்க்கைப் புத்தகத்தில் காதல் என்ற அத்தியாயம் சுவாரஸ்யமானது. மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் காதலை உணர்ந்திருப்பார். அது எங்கு, எவ்விதம், எப்படி நம்மைத் தாக்கும் என்பதை யாராலும் அறிய முடியாது. காதல் சிலருக்கு சிறுகதையாக முடிந்திருக்கும், சிலரது வாழ்க்கையில் குறு நாவலாக இருந்திருக்கும். சிலருக்கு மட்டுமே காதலித்தவரையே கரம் பற்றி தொடர்கதையாக நீடிக்கும் வரம் கிடைத்திருக்கும். உங்கள் காதல் எப்படிப்பட்டது? உங்கள் வாழ்க்கையின் வசந்த காலப் பக்கங்…
-
- 47 replies
- 3.9k views
-
-
எனக்கு மிகவும் பிடித்த ஓவியாவின் கருத்துக்கள்.... http://www.youtube.com/watch?v=yPUGt9KPOjU&feature=related http://www.youtube.com/watch?v=nQ2m6vqUFEw&feature=related
-
- 1 reply
- 729 views
-
-
இப்பொழுதெல்லம் தமிழரின் கலாச்ச்cஆரத்தில் இல்லாத ஆபரணக்கள், ஆடைகளை அணிவதிலேயே எம்மவர் குறியாக உள்ளனர், நான் அவதானித்தவை சில 1. மணமகள் இப்போது எல்லம் வழக்கமாக அணியும் அட்டியல், பதக்கம் சங்கிலி போன்றவற்றை அணிவதில்லை ஆனால் அதில் இருக்கும் அழகே தனி, ஆனால் அதை விட்டுப் போட்டு ஏதோ வட இந்திய பாணியில் முழுவதும் தங்கத்தில் ஆன அழகில்லத நகைகளையே உபயோகிக்கின்றனர், அண்மையில் நான் எனக்குத் தெரிந்த ஒருவரிடம் விசாரித்துப் பாத்த போது அவர் கூறினார் பதக்கம் சங்கிலி, அட்டியலுக்கு மொத்தம் £ 2500ள் தான் செலவாகுமாம், ஆனால் இந்த வட இந்திய பாணியிலான நகைகள் 2 செய்வதுக்கு கிட்டத்தட்ட £ 8000ம் செலவாகுமாம், ஏன் இந்த வீண் செலவு அதுவு பார்க்க வடிவில்லாத நகைகளுக்கு 2.மணமகன்மார் வழக்கமாக வெள்ளை…
-
- 0 replies
- 1k views
-
-
இன்று ஆட்சியாளர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழும் நிகழ்வுகள் பல நாடுகளில் நடைபெறுகின்றது. அது நாளை எங்கே எப்படி வெடித்தெழும் என்பது யாருக்குமே தெரியாது. இந்த மக்கள் எழுச்சியினை ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பாளர்கள் தங்கள் நலனுக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பது ஒருபுறம்.., ஆனால் அதிகார வர்க்கம் என்றுமில்லாத அளவிற்கு மக்களை பார்த்து சற்று பயப்பட ஆரம்பித்துள்ளது. உலக முதலாளித்துவம் கோடிக் கணக்கில் பணத்தை தமக்குள் பதுக்கிக் கொள்ள, மக்கள் தங்கள் உரிமைகளையும், தாங்கள் அனுபவிக்க வேண்டிய பொருளாதாரத்தினை இந்த சுரண்டல்வாதிகளிடம் பறி கொடுத்து விட்டு நாளாந்த வாழ்க்கையினை ஓட்ட முடியாது, செக்கில் கட்டப்பட்ட மாடாட்டம் தினந்தினம் உழைத்துழைத்து தன்னை வருத்தி தேய்ந்து கொண்டிருக்…
-
- 1 reply
- 736 views
-
-
ஐரோப்பிய நாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்கள் அனைவரும் ,எதோ ஒரு வகையில் ஒடுக்கு முறைக்குட்பட்டதன் விளைவாகவே இடம் பெயர்ந்தனர். புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்களில் மிகப் பெரும்பாலானோர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான ,அல்லது போராடும் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற அடையாளத்தை வெளிக் காட்டாது, இன -மொழி ரீதியாக மாத்திரமே அடையாளப் படுத்துபவர்களாகவுள்ளனர். இக் குறுகலான வெளிக்காட்டலுக்கு முழுமையான காரணி, தமிழ்த் தேசிய இன விடுதலைக்காக தோற்றம் பெற்ற விடுதலை இயக்கங்கள் , தமிழ் மக்கள் ஒடுக்கு முறையில் இருந்து விடுதலை பெற வேண்டிய மார்க்கத்தை , வெறும் சிங்களப் பேரினவாதத்துக்கெதிரான போராட்டமாகவே மாத்திரம் குறுக்கிக் கொண்டது தான் என்றால் அது மிகையாகாது. மேலே குறிப்பிட்ட விடயத்தை முழ…
-
- 1 reply
- 804 views
-
-
24ந்திகதி நல்லிரவு 23 மணி 30 நிமிடங்கள் இருக்கலாம். நல்ல குளிர். ஒரு பிறந்தநாள் விழாவுக்கு போய்விட்டு வெளியில் வந்து எனது வாகனத்தடிக்கு போய் மனைவி பிள்ளைகளை காருக்குள் ஏறும்படி சொல்லிக்கொண்டிருந்த எனக்கு தமிழில் யாரோ கதைக்கும் சத்தம் கேட்க திரும்பிப்பார்க்கின்றேன். 2 ஆண்கள் 3 பிள்ளைகள் (5 வயது 3 வயது 2 வயது இருக்கலாம்.) பிள்ளைகள் கையில்லாத ரீ சேட் மட்டும் அணிந்துள்ளனர். வேறு எதுவித உடுப்பும் இல்லை. காலில் சொக்சோ சப்பாத்தோ இல்லை. ஊ.... ஊ என நடுங்கி அழுதபடியுள்ளனர். நான் : அண்ணன்மார் பிள்ளையள் நடுங்கினம் வீட்டுக்குள்ள கூட்டிக்கொண்டு போங்கோ அதில் ஒருவர் : அது என்ர பிள்ளை எனக்கு தெரியும் நீ உன்ரை வேலையைப்பார்த்துக்கொண்டு போ. நான் : அண்ணை பாவ…
-
- 37 replies
- 3.9k views
-
-
ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகும் போது அப்பெண் தனது கடந்த கால வாழ்கையில் நடந்த எல்லாவற்றையும் தன்னை கட்ட போகிறவனிடம் ஒளிவு மறைவு இன்றி சொல்லித்தான் ஆக வேண்டுமா.. இதன் விளைவுகள் எப்பிடி இருக்கும்.. எனது நண்பிக்கு திருமண பேச்சு வார்த்தைகள் நடந்து கொண்டிருக்கு அவள் தனது கடந்த காலத்தை பற்றி கட்டுபவரிடம் சொல்ல போகிறேன் எண்டு சொல்கிறாள் ஏனெனில் அவளுக்கு காதல் இருந்து அது தோல்வியில் முடிந்து விட்டது தான் அதை மறைத்து திருமணம் செய்தால் பிறகு ஒரு போது அது தெரிய வரும் போது குடும்பத்தில் சிக்கல்களை உருவாக்கும் என்று சொல்கிறாள் அத்துடன் தான் அதை மறைத்து அவருக்கு துரோகம் செய்ய விருப்பம் இல்லை என்கிறாள் தான் சொல்ல போகிறன் அது தெரிஞ்சு கொண்டும் அவர் தன்னை ஏற்று கொள்வாராக இருந்தால் ஏற்று …
-
- 36 replies
- 3.5k views
-
-
மூன்று முட்டாள்கள் (3 idiots) என்ற பெயரில் வெளி வந்த ஹிந்தி திரைப்படத்தை அப்படியே முழுங்கி சங்கர் எடுத்த வாந்தியே.. பொங்கலுக்கு சில நாட்கள் முன் வெளிவந்துள்ள.. நண்பன் படம் ஆகும். அதில் விஜய்.. ஜீவா.. சிறீகாந்த்.. சத்யன்.. சத்யராஜ்.. இலியானா என்று பல பேர் நடித்திருக்கிறார்கள். படத்தின் ஆரம்பத்தில் விஜயின் அறிமுகத்தில்.. ஒரு காட்சி.. ராக்கிங் (பகிடிவதை) என்று ரவுசரை கழற்றிப் போட்டு ஜட்டியில் நிற்பது..! ஆரம்பத்தில் புகுத்தப்பட்ட அந்த பழக்கம்... படம் முழுக்க வியாபித்து விடுகிறது. நண்பனுக்கு நன்றி சொல்லவும் ரவுசரை கழற்றிறாங்க.. அந்தளவுக்கு அது எல்லை மீறிப் போனதை காண முடிகிறது. ஆரம்பத்தில் அந்தக் காட்சி.. ராக்கிங்கின் கொடூரத்தை காட்ட செய்யப்படுகிறது என்று த…
-
- 22 replies
- 2.6k views
-