Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. காதலியை பலாத்காரம் செய்து விட்டு, 111 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொன்ற காதலனுக்கு ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மன்னிப்பு வழங்கி போர் முனைக்கு அனுப்பி வைத்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவை சேர்ந்தவர் விளாடிஸ்லாவ் கன்யூஸ். இவர் தனது முன்னாள் காதலியான வேரா பெக்டெலேவாவை பலாத்காரம் மற்றும் சித்ரவதை செய்து 111 முறை கத்தியால் குத்தினார். மூன்றரை மணி நேரம் அவர் இந்த சித்ரவதையை தனது முன்னாள் காதலி வேராவுக்கு செய்துள்ளார். பின்னர் அவர் காதலி கழுத்தை ஒரு கேபிள் கம்பி மூலம் நெரித்துக்கொன்றார். அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டுக்காரர்கள் 7 முறை பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பு செய்தும் எந்த பதிலும் இல்லை. அதன்பின் வந்த பொலிஸார் விளாடிஸ்லாவ் க…

    • 15 replies
    • 1.4k views
  2. சுயமரியாதையை இழந்து சீட் பெறத் தேவையில்லை-தேர்தலைப் புறக்கணிக்கிறோம்: வைகோ சென்னை: சுயமரியாதையை இழந்து, அதிமுக தரும் தொகுதிகளைப் பெற்று தேர்தலில் போட்டியிட மதிமுக விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் நாங்கள் பங்கு பெறவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். வைகோவின் இந்த முடிவு அரசியல் அரங்கில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. வைகோவின் இந்த முடிவால், வைகோ மூலம் அதிமுகவுக்கு ஆதரவான நிலையை எடுத்த நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானும் தேர்தலைப் புறக்கணிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அரசியலில் மிகவும் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான வைகோவையும், அவரது மதிமுகவையும் ஜெயலலிதா …

  3. அத்வானி மீது செருப்பு வீச்சு : மத்திய பிரதேசத்தில் சம்பவம் வீரகேசரி இணையம் 4/16/2009 2:33:29 PM - பாஜக பிரதமர் வேட்பாளரான அத்வானி மீது மத்தியப் பிரதேசத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் செருப்பு வீசப்பட்டது. இதை வீசியவர் பவஸ் அகர்வால் என்ற பாஜக தொண்டர் ஆவார். கத்னி பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த அத்வானி மீது அகர்வால் செருப்பை வீசினார். ஆனால், அந்த செருப்பு அத்வானி மீது படவில்லை. இந்தச் சம்பவத்தையடுத்து அந்த நபர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர் பாஜக தொண்டர் என்று கூறப்படுகிறது. ஏன் அத்வானி மீது அவர் செருப்பை வீசினார் என்று தெரியவில்லை. பிடிக்காதவர்கள் மீது ஷூ, செருப்பு வீசுவது இப்போது பேஷனாகி வி…

  4. கொல்கத்தாவில் உள்ள ஒரு நிறுவனத்தில் மனிதவள ஆலோசகராக பணிபுரிந்து வருபவர் சச்சின். இவரது மனைவி சித்ரா ராகவ். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். சித்ராவுக்கு அடுத்த மாதம் (மே) 10-ந்தேதி குழந்தை பிறக்கும் என்று டாக்டர்கள் கூறி இருந்தனர். முதல் பிரசவம் என்பதால் சித்ராவை டெல்லியில் உள்ள அவரது தாய் வீட்டில் விட சச்சின் முடிவு செய்தார். நேற்று காலை 7.15 மணிக்கு அவர் சித்ராவை ஒரு விமானத்தில் டெல்லிக்கு அழைத்து சென்றார். விமானம் புறப்பட்ட 30 நிமிடத்தில் சித்ராவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. அருகில் இருந்த கணவர் சச்சினிடம் இதுபற்றி சித்ரா கூறினார். ஆனால் பிரசவத்துக்கு டாக்டர்கள் குறிப்பிட்ட தேதிக்கு இன்னும் ஒரு மாதம் இருப்பதால், இது சாதாரண வலியாகத்தான் இருக்கும். பயப்…

  5. துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கும் அமெரிக்கா அமெரிக்காவில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் பகுதிகளில் வாழும் மக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது துணியால் ஆன முகக்கவசங்களை அணிய பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமில்லை. மக்கள் அணிய வேண்டும் என்றால் அணியலாம் என்று அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரத்தில் இதுவரை 1,562 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு வாழ்பவர்கள் வெளியில் செல்லும்போது முகக்கவசம் அணிய வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பல மாநிலங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு உத்தர…

  6. போலீசார் திட்டமிட்டு நடத்திய வன்முறை நாடகம்:மூத்த வழக்கறிஞர் பிரபாகரன் சுப்பிரமணிய சாமி முட்டை வீச்சு சம்பவத்தால் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் புகுந்து வழக்கறிஞர்களை கைது செய்ய முற்பட்டனர் காவல்துறையினர். அப்போது காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது. வரலாறு காணாத இந்த மோதல் சம்பவத்தால் போர்க்களமானது உயர்நீதிமன்ற வளாகம். இச்சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் பிரபாகரன், ‘’சுப்பிரமணிய சாமி மீது முட்டை வீசி தாக்கப்பட்ட வழக்கில் பல்வேறு வழக்கறிஞர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் ஒரு வழக்கறிஞர் நேற்று கைது செய்யப்பட்டார். குற்றம் சுமத்தப்பட்ட மற்ற வழக்கறிஞர்கள் தாங்களாகவே சரண் அடைவதாக அறிவி…

    • 6 replies
    • 1.4k views
  7. வடக்கு மாகாண சபையின் முன்னாள் ஆளுனரும், சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினரும், கல்விமானுமாகிய கலாநிதி சுரேன் ராகவன், சிறிலங்கா நாடாளுமன்றில் அண்மையில் ஆற்றியிருந்த உரை கனடா வாழ் தமிழ் மக்களின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளாகி வருகின்றது. கலாநிதி ராகவன் தனது நாடாளுமன்ற உரையின் மூலம் கனடா வாழ் தமிழ் மக்களின் முதுகில் குத்தியுள்ளதாகவும், கனடா தமிழ் மக்களை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் காட்டிக்கொடுத்துவிட்டதாகவும், கனடா மக்கள் ஊடகங்களிலும், சமூகவலைத்தளங்களிலும் பதிவு செய்து வருகின்றார்கள். இலங்கையில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டது இனப் படுகொலையே என்று வலியுத்தி கனடா ஒன்ராரியோ சட்டசபையில் தமிழின அழிப்பு அறிவூட்டல் வாரம்’ தொடர்பான 104 என்ற சட்டமூலம் முன்மொழியப்பட்டிருந்தத…

  8. 6 சீர்காழி மீனவர்கள் மாயம் மே 11, 2007 சீர்காழி: நாகை மாவட்டம் சீர்காழியைச் சேர்ந்த 6 மீனவர்கள் 4 நாட்களாகியும் கரை திரும்பாததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீர்காழி அருகே திருமுல்லைவாயில் என்ற ஊரைச் சேர்ந்த ஜெயபிரகாஷ்(30), ஜெய்கணேஷ் (25), இளவேந்தன் (18), முத்து (32), ராஜேந்திரன் (55) ஆகிய 6 மீன்வர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இதுவரை இவர்கள் கரைக்கு திரும்பவில்லை. இது குறித்து திருமுல்லைவாயில் கிராம தலைவர் பரந்தாமன், போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து போலீஸார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கடலோர காவல்படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது(thatstamil)

    • 5 replies
    • 1.4k views
  9. சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, இன்று காலை சுட்டு வீழ்த்தியது. எச்சரிக்கை விடுத்ததையும் மீறி, துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர்விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர். தங்கள் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகமும் உறுதி செய்தது. இந்நிலையில், ரஷ்ய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பற்றி கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் “முதுகில் குத்திவிட்டார்கள் என்று தான் கூறவேண்டும். இதை வேறு மாதிரி சொல்லமுடியாது. இன்று நடைபெற்ற சம்பவம் துருக்கி - ரஷ்ய இட…

    • 3 replies
    • 1.4k views
  10. டோக்கியோ: ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என்ற அளவில் இருந்ததால் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.கடந்த மாதம் சுனாமியால் பாதிப்பிலிருந்து மீண்ட நிலையில் தற்போது அங்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பதட்டம் நிலவுகிறது.

  11. கிம் ஜாங் உன் வதந்தி: வட கொரிய வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது என்ன? மைக்கேல் மேடன் வடகொரிய வல்லுநர் Reuters கடந்த வாரம் சர்வதேச ஊடகங்களின் தலைப்புச் செய்திகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்தான் இடம் பெற்றிருந்தார். கிம்மின் உடல்நிலை மோசமாக இருக்கிறது, கிம் இறந்துவிட்டார் என்ற பல வதந்திகள் பரவின. அதையெல்லாம் பொய்யாக்கி மிகுந்த உற்சாகத்தோடு உரத் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார் கிம் ஜாங் உன். மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி இருக்கின்றன. இப்படி இவர் திடீரென காணாமல் போய் திரும்பி வந்தது இது முதல் முறையல்ல. இப்படி பல முறை நடந்திருக்கிறது. கடந்த கால நிகழ்வுகளில் இருந்து நாம் என்ன…

    • 3 replies
    • 1.4k views
  12. "பன்ச் மேல் பன்ச்" வசனம் பேசி சிலிக்கான் வேலியை சிலிர்க்க வைத்த மோடி சான் ஜோஸ்: டிஜிட்டல் புரட்சி பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஒற்றை வரிகளில் பல பஞ்ச் வசனங்கள் பேசி சிலிக்கான் வேலியைச் சேர்ந்த ஐடி பெரும்தலைகளை கவர்ந்துள்ளார். அமெரிக்காவுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக சிலிக்கான் வேலி சென்றுள்ளார். அங்கு அவர் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் சிஇஓக்களை சந்தித்து பேசினார். மேலும் இன்று நடந்த டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். அவரது உரையின் சிறப்பு அம்சங்கள், நான் உங்களில் பலரை டெல்லி, நியூயார்க், ஃபேஸ்புக், ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் சந்தித்துள்ளேன். ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந…

  13. இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தி அதிமுக சார்பில் வருகிற 9-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இப்போராட்டத்தில் பங்கேற்போர் பட்டியலை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா- சென்னை.சென்னையில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில், அனைத் துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டி. ஜெயக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொள்வார்) அதிமுக.அவைத் தலைவர் மது சூதனன்- விழுப்புரம் தெற்கு, கழக அரசியல் ஆலோசகர் பொன்னையன்- தூத்துக்குடி. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம்- தேனி, தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன்- ஈரோடு வடக்கு, விசாலாட்சி நெடுஞ்செழியன்- திருவள்ளூர், முத்துசாமி- ஈரோடு தெற்கு, சுலோசனா சம்பத்- காஞ…

    • 4 replies
    • 1.4k views
  14. இரண்டாண்டுகளுக்கு முன்பு இதே நாட்களில்தான் முள்ளிவாய்க்காலில் இலங்கை ராணுவம் தன்னுடைய வெறியை தீர்த்துக் கொண்டது. போரின் கடைசி மூன்று நாட் களில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். உலகமே வேடிக்கை பார்க்க நடந்து முடிந்த இந்த இனப்படுகொலை, இப்போது ஐ.நா. அறிக்கை மூலம் வெளியே வந்திருக்கிறது. இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது நிகழ்த்திய போர்க்குற்றம் தொடர்பாக ஐ.நா. பொதுச் செயலர் பான் கி மூனால் நியமிக்கப்பட்ட குழு விசாரித்து சமீபத்தில் அறிக்கை சமர்ப்பித்தது. அதில் ராஜபக்ஷே மீது கடுமையான குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளன. அவற்றின் மீது சரியான விசாரணை நடைபெற்றால் அவருக்கு மரண தண்டனை கூட விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ஐ.நா. குழு அறிக்கை …

    • 0 replies
    • 1.4k views
  15. ஊழலில் இந்தியாவை முந்தியது சீனா திகதி : Wednesday, 12 Mar 2008, [saranya] இந்தியாவை விட சீனாவில் ஊழல் அதிகரித்துவிட்டதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆசியப் பகுதி சிந்தனையாளர் அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. ஆசியாவில் உள்ள 13 பெரிய நாடுகளில் நிலவும் ஊழல் பற்றி 400 தொழிலதிபர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. 0 முதல் 10 வரை அவர்கள் மதிப்பெண் வழங்கினர். இதில் இந்தியாவுக்கு 7.25 மதிப்பெண்ணும், சீனாவுக்கு 7.98 மதிப்பெண்ணும் வழங்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் (1.13), ஹாங்காங் (1.80), ஜப்பான் (2.25) ஆகிய நாடுகளில் குறைந்த அளவே ஊழல் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இந்த வரிசையில் இந்தியாவுக்கு 8-வது இடமும் சீனாவுக்கு 10 வது இடமும் கிடைத்துள்ளது. அதிகமான ஊ…

    • 3 replies
    • 1.4k views
  16. மத்திய லண்டன் பகுதியில் ஹைமார்க்கெட் எனும் இடத்தில் வெடிக்க வைக்கத் தயார் செய்யப் பட்ட நிலையில் கார் ஒன்று இன்று அதிகாலை பொலீசாரினால் கண்டு பிடிக்கப் பட்டது. காரினுள் பெற்றோல் மற்றும் காஸ் சிலிண்டர்கள் போன்றவை நிரப்பப் பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://news.bbc.co.uk/player/nol/newsid_62...bw=bb&mp=wm

  17. சென்னையில் இருந்து திருப்பதிக்கு காரில் செல்கிறார் ராஜபக்சே இந்தியா இலங்கை இடையேயான உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டி நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியை பார்க்க இலங்கை அதிபர் ராஜபக்சே மும்பை வருகிறார். முன்னதாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும் ராஜபக்சே திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜபக்சே இன்று சிறப்பு விமானம் மூலம் சென்னை வருகிறார். பின்னர் சென்னையில் இருந்து கார் மூலம் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார். அங்கு சுமார் 1 மணி நேரம் ஏழுமலையானை தரிசனம் செய்து சிறப்பு பூஜையில் கலந்து கொள்கிறார். பின்னர் இரவில் திருப்பதி மலையில் ரிலையன்ஸ் நிறுவனம் கட்டிக் கொடுத்த ஸ்ரீகிருஷ்ணா பிரமாண்ட விருந்தினர் மாளிகையில் தங்குகிறார். பின்னர் காலை அங்கிருந…

  18. சிரியாவில் அரசுப்படைகள் இரசாயனக் குண்டுகளை வீசி ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்களைக் கொன்றுள்ள நிலையில், அமெரிக்காவின் ஏவுகணை தாங்கி போர்க்கப்பல் ஒன்று மத்தியத்தரைக்கடல் விரைகிறது. ஏற்கனவே அப்பிராந்தியத்தில் மூன்று அமெரிக்காவின் போர்க்கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கப்பல் மூலம் அதன் எண்ணிக்கை நான்காக உயர்கிறது. இருந்தும் சிரியாவிற்கு எதிராக எந்த தாக்குதலையும் தொடுக்க ஆயுத்தமாக இருக்கும்படி எங்களுக்கு உத்தரவும் வரவில்லை என்று அங்குள்ள அமெரிக்க கப்பற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிரியாவில் பொதுமக்களுக்கு எதிராக ரசாயண ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா சிரியாவிற்கு எதிராக தாக்குதல் நடத்த தீர்மானித்துக் …

  19. லடாக்: லடாக் பகுதியில் ஊடுருவியுள்ள சீன படையினர், ’இது சீனாவிற்கு சொந்தமான இடம்’ என்ற அறிவிப்பு பலகையுடன் 5வது கூடாரத்தை அமைத்து இந்திய ராணுவத்திற்கு சவால் விடுத்துள்ளனர். ஜம்மு - காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில், கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதியன்று இந்திய எல்லைக்குள் ஊடுருவிய சீன படையினர், முதலில் 10 கி.மீ. தூரத்தில் முகாம் அமைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், பின்னர் 19 கி.மீ. தூரம் வரை ஊடுருவி இருப்பதாக இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், சீன படையினர் தற்போது லடாக் பகுதியில் 5வது கூடாரத்தை அமைத்துள்ளதாகவும், கூடாரம் அமைக்கப்பட்ட இடத்தில் சீனாவிற்கு சொந்தமான இடம் என்ற அறிவிப்பு பலகையையும் வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. …

  20. தமிழகத்தேர்தல் -யாரும் இங்கே சுத்தமில்லே மெரீனா கடற்கரை ஓரம். அண்ணா சமாதி அருகே அமர்ந்து கொண்டிருந்தது அலப்பறை டீம். உன்னைச் சொல்லி குத்தமில்லே. யாருமிங்கே சுத்தமில்லே என்று அலம்பல் செய்து கொண்டிருந்தார் சுவருமுட்டி சுந்தரம். "குடிமகனுக்கு அலம்பலைப் பாரு. இப்போ எதுக்குய்யா அந்தப் பாட்டைப் பாடற" என அதட்டினார் சித்தன். "வேற என்னய்யா பாட முடியும். அண்ணா உயிரோடு இருந்தபோது இலங்கைத் தமிழருக்காக குரல் கொடுத்தாரு. ஒரு விடிவு வரும்னு சொன்னாரு. எத்தனை வருஷமாச்சு. இன்னைக்கு அவரோட கைப்புள்ள கலைஞர் ஆட்சியிலேயும் அதான் நடக்குது. எந்த காங்கிரஸ் கட்சி இலங்கைத் தமிழர் இன அழிப்புக்காக, சிங்களவனுக்கு துணை போகுதோ, அந்தக் கட்சிகூட கூட்டணி வச்சு குலாவுறாரு. அத நினைச்சேன். பாடு…

  21. குவைத் செல்லும் பணிப்பெண்களிற்கு காத்திருக்கும் புதிய ஆபத்து- அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலம் விற்பனை பணிப்பெண்களை சமூக ஊடங்கள் மூலம் அடிமைகளாக விற்க முயன்ற நபர்களை விசாரணைகளிற்கு வருமாறு குவைத் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். பிபிசியின் அராபிய செய்தி பிரிவு பணிப்பெண்கள் அடிமைகளாக சமூக ஊடகங்கள் மூலமாக விற்கப்படுவதை அம்பலப்படுத்திய பின்னரேகுவைத் அதிகாரிகள் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். அடிமை சந்தை குறித்த அப்ஸ் காணப்படுவதாகவும் பிபிசி தெரிவித்துள்ளது. பணிப்பெண்கள் மாற்றம் ,பணிப்பெண்கள் விற்பனைக்கு போன்ற ஹாஸ்டாக்குகள் மூலமாக பணிப்பெண்களை அடிமைகளாக விற்கும் நடவடிக்கைகள் இடம்பெற்றுவருவதாக பிபிசிதெரிவித்துள்ளது. பிபிசி இதனை அம்பலப்படுத்த…

  22. பொலிஸாரின் விசாரணையில் பிரான்ஸ் பங்குசந்தை வியாபாரி பிரான்சில் பங்கு சந்தை வியாபாரத்தில் மாபெரும் மோசடியில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெரோம் கெர்வீல் என்ற நபரை பொலிஸார் விசாரணைக்காக கொண்டு சென்றுள்ளனர். இவர் பிரான்சின் இரண்டாவது மிக பெரிய வங்கியான சோசியதே ஜெனரலுக்கு பங்கு வியாபாரத்தில் சுமார் ஏழுநூறு கோடி டாலர் நஷ்டத்தை ஏற்படுத்தியதோடு, அதனை மறைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனை காவல்துறையினர் விசாரிக்கின்றனர். பொலிஸார் வங்கியின் தலைமை அலுவலகம் மற்றும் ஜெரோம் கெர்வீலின் வீட்டில் சோதனை நடத்தியுள்ளனர், அதன் போது அவருடைய கணிணி கோப்புகள் சிலவற்றை பொலிஸார் எடுத்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக முழுத்தகவல்களும் வேண்டும் …

  23. வாஷிங்டன்: அமெரிக்காவுக்கு இன்னும் தீவிரவாதிகளிடமிருந்து மிரட்டல் இருக்கிறது. நமக்கு பதிலடி தர அவர்கள் மிகப் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள் என்று எச்சரித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ். அமெரிக்க அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெறும் ஜார்ஜ் புஷ் நேற்று இரவு நாட்டு மக்களுக்கு பிரியாவிடை உரை நிகழ்த்தினார். அப்போது அவர் பேசுகையில், நமது நாடு 7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது மிகுந்த பாதுகாப்புடன் உள்ளது. ஆனால் தீவிரவாதிகளின் அபாயகரமான மிரட்டல்கள் இன்னும் தொடர்ந்தபடிதான் உள்ளன. நம்மைத் திருப்பித் தாக்க மிகப் பொறுமையுடன் காத்திருக்கிறார்கள் நமது எதிரிகள் (தீவிரவாதிகள்). அதில் அவர்கள் உறுதியாகவும் உள்ளனர். 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ம் தேதி …

    • 1 reply
    • 1.4k views
  24. மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் 2016-09-04 20:39:41 மலேஷியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத் தாக்குதல் காரணமாக தலையில் பலத்த காயமடைந்த அவர் உடனடியாக கோலாலம்பூர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இத் தாக்குதலில் மலேஷியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் மற்றொரு சிரேஷ்ட அதிகாரியும் காயமடைந்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு இத்தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளதுடன் உடனடியாக விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவு…

    • 19 replies
    • 1.4k views
  25. வெறும் கையை வீசிக்கொண்டு வந்த சோனியா உலகின் 6வது பணக்காரர் ஆனது எப்படி? - மேனகா காந்தி கேள்வி. [saturday, 2014-03-22 17:45:53] பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான மேனகாகாந்தி கடந்த தடவை அனோலா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.இந்த தடவை அவருக்கு பா.ஜ.க. மேலிடம், பிலிபிட் தொகுதியை ஒதுக்கியுள்ளது. நேற்று அவர் பிலிபிட் சென்று தன் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிறகு அவர் புரன்பூர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் காங்கிரஸ் தலைவரும், தனது அக்காள் முறையானவருமான சோனியாவை கடுமையாக தாக்கினார். அவர் கூறியதாவது:– சோனியாகாந்தி இந்த நாட்டின் மருமகளாக இத்தாலியில் இருந்து இந்தியாவுக்கு வந்த போது எதையும் கொண்டு வரவில்லை. வெறும் கையை வீசிக் கொண்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.