உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26704 topics in this forum
-
குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் மிகப்பெரிய போராட்டம்! மத்திய லண்டன் சனிக்கிழமையன்று (14) அண்மைய பிரித்தானிய வரலாற்றில் மிகப்பெரிய வலதுசாரி ஆர்ப்பாட்டங்களில் ஒன்றைக் கண்டது. குடியேற்ற எதிர்ப்பு ஆர்வலர் டோமி ரொபின்சனின் பதாகையின் கீழ் 100,000க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் அணிவகுத்துச் சென்றனர். ஆர்ப்பாட்டங்களின் போது பல அதிகாரிகள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். “Unite the Kingdom” அணிவகுப்பு என்று அழைக்கப்படும் இந்த நிகழ்வில் சுமார் 110,000 பேர் கலந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், போராட்டத்தின் வான்வழி காட்சிகள் மத்திய லண்டன் வீதிகளின் சில கிலோ மீட்டர்கள் போராட்டக்காரர்களால் நிரம்பி வழிவதைக் காட்டியது. இது அதிகாரிகளால் எண்ணிக்கையை குறைத்த…
-
- 9 replies
- 704 views
- 1 follower
-
-
குடியேற்றத்தைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான விசா விதிகளை வெளியிட்டது பிரித்தானியா. வரலாறு காணாத அளவுக்கு இடம்பெயர்வு உயர்ந்ததை அடுத்து, இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் குடியேற்றத்தை கட்டுப்படுத்த ஐந்து அம்ச திட்டத்தை உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் அறிவித்துள்ளார். திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தேவையான குறைந்தபட்ச சம்பளத்தை 26,200 பவுண்டில் இருந்து 38,700 பவுண்டாக உயர்த்துவதும் இதில் அடங்கும். கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு வர தகுதி பெற்ற 300,000 பேர் எதிர்காலத்தில் வர முடியாது என உள்துறை அமைச்சின் செயலாளர் ஜேம்ஸ் குறிப்பிட்டுள்ளார். …
-
- 12 replies
- 1.1k views
- 1 follower
-
-
குடியேற்றம் : ஆஸ்திரேலிய மக்கள் தொகை 24 மில்லியனைத் தாண்டியது ஆஸ்திரேலியாவின் மக்கள் தொகை 24 மிலியனைத் தாண்டி விட்டது. அசாதாரண அளவு குடியேற்றமே இதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. குடியேற்றங்களால் ஜனத்தொகை பெருகும் ஆஸ்திரேலியா - தஞ்சம் கோரிகள் விஷயத்தில் கடுமை காட்டுகிறது. நாட்டின் மக்கள் தொகை 2013ம் ஆண்டிலிருந்து ஒரு மிலியன் என்ற அளவில் அதிகரித்து வந்துள்ளது. இது வளர்ந்த நாடுகளில் காணப்படும் மிக அதிக மக்கள் தொகை வளர்ச்சி விகிதங்களில் ஒன்றாகும். ஆஸ்திரேலியா திறன் படைத்த குடியேறிகளை வரவேற்கிறது ஆனால் தஞ்சம் கோருவது குறித்து மிகவும் சர்ச்சைக்கிடமான மற்றும் மிகக் கடுமையான கொள்கையை வைத்திருக்கிறது என்று பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார…
-
- 0 replies
- 454 views
-
-
குடியேற்றவாசிகளிடமிருந்து பெறுமதியானவற்றை பறிமுதல் செய்யும் சட்டம் முதல் தடவையாக அமுல் டென்மார்க் அரசாங்கமானது அந்நாட்டுக்கு வரும் குடியேற்றவாசிகளின் வரவைக் கட்டுப்படுத்தும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய சட்டமொன்றை முதல் தடவையாக அமுல்படுத்தியுள்ளது. மேற்படி சட்டமானது அந்நாட்டுப் பொலிஸார் குடியேற்றவாசிகளிடமிருந்து பெறுமதியானவற்றை பறிமுதல் செய்வதற்கு அனுமதிக்கிறது. இது தொடர்பில் அந்நாட்டு தேசிய பொலிஸ் சேவையின் பேச்சாளர் பெர் பிக் தெரிவிக்கையில், கொபென்ஹேகன் விமான நிலையத்தில் போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி பயணத்தை மேற்கொண்டு வந்திறங்கிய இரு ஆண்கள் மற்றும் …
-
- 1 reply
- 221 views
-
-
குடியேற்றவாசிகளை அதிர்ச்சியடைய வைத்த கரடி பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் முகமாக லொறியொன்றின் பின் பக்கத்தில் அத்துமீறி ஏற முயன்ற குடியேற்றவாசிகள், அங்கு கூண்டில் அடைக்கப்பட்ட நிலையில் அபாயகர மான கரடியொன்று இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் பிரான்ஸின் காலெயிஸ் பிராந்தியத்தில் இடம்பெற்றுள் ளது. செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந்தச் சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் வியா ழக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. மேற்படி கரடியானது அந்த லொறியில் ரஷ்யாவிலிருந்து பிரித்தானிய யோர்க் ஷியரிலுள்ள மிருகக்காட்சிசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. காலெயிஸில் …
-
- 0 replies
- 437 views
-
-
குடியேற்றவாசிகளை தடுப்பு முகாம்களில் அடைக்கும் அவுஸ்திரேலிய அரசாங்கங்களின் திட்டங்களை முடிவிற்க்கு கொண்டுவரக் கூடிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அந்தநாட்டின் உயர்நீதிமன்றம் இன்று வழங்கியுள்ளது. இன்று வழங்கியுள்ள தீர்ப்பில் உயர்நீதிமன்றம் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் அவுஸ்திரேலிய நடைமுறையை செல்லுபடியற்றதாக்கி உள்ளது. புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு தற்காலிக விசாக்களை வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி அவுஸ்திரேலிய சமஷ்டி அரசாங்கம் நிரந்தர விசாக்களை வழங்க மறுத்துவந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் குடியேற்றவாசிகளை தடுத்துவைப்பதற்கான அரசமைப்பு எல்லைகளையும் நீதிமன்றம் விதித்துள்ளது. ஒருவருக்கு விசா வழங்குவதற்க்கும், அல்லது நிராகரிப்பதற…
-
- 1 reply
- 336 views
-
-
Published By: RAJEEBAN 08 JUN, 2025 | 11:17 AM அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை பெருமளவு குடியேற்றவாசிகள் கைதுசெய்ய்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தேசிய காவல்படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார். அமெரிக்காவின் சட்ட அமுலாக்கல் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை சனிக்கிழமை பாரமவுண்ட் நகரில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் வெடித்தது என லொஸ் ஏஞ்சல்ஸின் ஷெரீவ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பராமன்ட் பவுல்வார்டின் ஒரு பகுதியில் மதியம் 12.42 மணியளவில் பெருமளவானவர்கள் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்…
-
- 7 replies
- 512 views
- 2 followers
-
-
குடியேற்றவாசிகள் தொடர்பான உடன்படிக்கைக்கு 8 ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இணக்கம் தெரிவிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த 8 நாடுகள் மத்தியதரைக்கடலில் மீட்கப்படும் குடியேற்றவாசிகளின் மீள்குடியமர்த்தலை தம்மிடையே பகிர்ந்துகொள்ள இணங்கியுள்ளதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்தார். ஆனால் மேற்படி நாடுகளில் இத்தாலி உள்ளடங்கவில்லை என அவர் கூறினார். பிரான்ஸின் பாரிஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றிய உள்த்துறை மற்றும் வெளிநாட்டு அமைச்சர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியால் முன்வைக்கப்பட்ட கொள்கைக்கு ஏனைய 6 நாடுகள் ஒப்புதலை அளித்துள்ளதாக மக்ரோன் கூறினார். ஐரோப்பிய …
-
- 0 replies
- 423 views
-
-
குடியேற்றும் அகதிகளின் எண்ணிக்கையை... இரட்டிப்பாக்குவதற்கு, அமெரிக்கா தீர்மானம் அமெரிக்காவின் அடுத்த நிதியாண்டில் மீள் குடியேற்றும் அகதிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அந்த நாட்டின் முன்னாள் ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்பின் ஆட்சிக்காலத்தில் அகதிகளை அமெரிக்காவில் குடியேற்றுவதற்கான திட்டம் இடைநிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், உலகளவில் இடம்பெயர்வு, மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் குறித்த திட்டம் மீள செயற்படுத்தப்படவுள்ளதாக வெள்ளை மாளிகை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். இதற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி முதல் ஆரம்பமாகும் அடுத்த நிதியாண்டில் ஏதிலிகளின் எண்ணிக்கையை…
-
- 1 reply
- 495 views
-
-
குடிவரவு நடைமுறையை கடுமையாக்குகிறது பிரிட்டன் வேற்று நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு குடியேறுவது அடுத்த வருடம் முதல் கடினமாகவிருக்கும் எனத் தெரிவிக்கப் படுகின்றது. அவுஸ்திரேலியாவில் நடைமுறையில் உள்ளதைப் போன்று, புள்ளிகளின் அடிப்படையில், பிரித்தானிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கக் கூடியவர்களுக்கே விசாக்களை வழங்க பிரித்தானிய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பிரித்தானியாவில் குடியேற விரும்புவர்களின் தகுதி அடிப்படையில் விசாக்கள் வழங்கப்படும் என்றும், விண்ணப்பிப்பவர்களில் தொழில்சார் வல்லுநர்களுக்கும் தொழில் துறையினருக்குமே முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்சார் வல்லுநர்கள் தவிர்ந்த ஏனையவர்கள், மாணவர்கள் …
-
- 1 reply
- 829 views
-
-
குடும்ப அரசியலுக்கு விளக்கம் கூறும் மகிந்த நான் குடும்ப அரசியலை பின்பற்றுகிறேன் என்று எதிரணியினர் தெரிவிக்கின்றனர். நான் அரசியல் குடும்பம் ஒன்றில் இருந்து வந்தவன். நான் பின்பற்றும் குடும்ப அரசியல் என்பது முழு நாட்டையும் எனது குடும்பமாக கருதுவதே என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இலங்கை தேர்தல் விஞ்ஞாபன வரலாறு ஒரு சில மாதங்களுக்கு வரையறுக்கப்பட்டதேயாகும். ஒரு சில மாதங்களில் இந்த ஆவணம் கிடப்பில் போடப்பட்டு விடும் நடைமுறையே காணப்படுகின்றது. எனினும் இந்த வரலாற்றை நாம…
-
- 1 reply
- 444 views
-
-
குடும்ப ஆட்சியில் இருந்து நாட்டு மக்கள் விடுபடும் நேரம் வந்து விட்டதாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் மக்களவைத் தொகுதியான அமேதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசுகையில் இதனை அவர் தெரிவித்தார். மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்து வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் குமார் விஸ்வாஸ், அமேதி தொகுதிக்கு ஞாயிற்றுக்கிழமை சென்றார். அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டும் நேரம் வந்துவிட்டது. முட்டை, கற்களை வீசுவதால் நான் திரும்பிச் சென்று விடுவேன் என்று அவர்கள் நினைத்தால், அது தவறு. இது ஆம் ஆத்மிக்கும், ராஜகுமாரருக்கும் …
-
- 0 replies
- 431 views
-
-
குடும்ப சண்டைகப்பலிலிருந்து குதித்து தற்கொலை ஜனவரி 18, 2007 சென்னை: கப்பலில் பயணித்தபோது, மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த கணவர் நடுக் கடலில் கப்பலிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் பீமய்யா. அந்தமானில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். மனைவி, மகள், மகனுடன் கப்பல் மூலம் அந்தமானிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தார். கப்பல் நடுக் கடலில் வந்து கொண்டிருந்தபோது 7வது மாடியில் பயணித்துக் கொண்டிருந்த பீமய்யாவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த பீமய்யா திடீரென கப்பலிலிருந்து கடலில் குதித்தார். அப்போது கப்பல் நடுக் கடலில் சென்று கொண்டிருந்தது. பீமய்யா கட…
-
- 0 replies
- 1.1k views
-
-
குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்க முயலும் கருணாநிதி! - ஜெ தமிழ் சினிமா ஹீரோக்களை ஜீரோக்களாக்கவும், தனது குடும்ப ஜீரோக்களை ஹீரோக்களாக்கவும் முயல்கிறார் கருணாநிதி என்றார் ஜெயலலிதா. மதுரையில் திங்கள்கிழமை நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் கருணாநிதி குடும்பத்தின் சினிமா ஆதிக்கம் குறித்து கடுமையாக விமர்சித்தார் அதிமுக பொதுச் செயலாளர். அவர் பேசுகையில், "தமிழ் சினிமாவையே தன் கைக்குள் போட்டுக் கொள்ளப் பார்க்கிறார் கருணாநிதி. இவருக்கு எதிராக எந்த ஹீரோவாவது பேசினால் உடனே அவர்களை வீட்டுக்கு அழைத்து தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். முன்னணி ஹீரோ ஒருவரை சமீபத்தில் அப்படித்தான் திட்டினார் கருணாநிதி. வீட்டுக்கு வரவைத்து அசிங்கமாகப் பேசி அனுப்பியுள்ளார். இன்னொர…
-
- 4 replies
- 796 views
-
-
Tuesday, June 14, 2011, 19:31இந்தியா தன் மீதான ஊழல் புகாரில் இருந்து தப்பிப்பதற்காகவே கருணாநிதி முதல்வராக இருந்த போது கச்சத் தீவை தாரை வார்த்துக் கொடுத்துவிட்டார்’’ என்று கச்சத் தீவு குறித்த தீர்மானத்தின் போது சட்டப்பேரவையில் விளாசித் தள்ளினார் எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த். ‘கச்சத் தீவு மட்டுமல்ல, கருணாநிதியின் ஆட்சியில் அவரது தன்னலப் போக்கினால் பறிபோன தமிழர் உரிமைகள் எவ்வளவோ இருக்கின்றன’ என்கிறார், முன்னாள் முத ல்வர் எம்.ஜி.ஆரின் 22 ஆண்டு கால நெருங்கிய நண்பரும், கவிஞருமான புலமைப் பித்தன். ‘‘1974-ல் தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்குத் தூக்கிக் கொடுக்க இந்தியா முன்வந்தது. இந்தியா – பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக களமிறங்கிய அமெர…
-
- 1 reply
- 731 views
-
-
தன் நண்பனை ஏமாற்றி அழைத்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்த கொடூர சம்பவம் மேற்கு டில்லியில் நடந்துள்ளது. சோனு என்ற இளைஞர் மங்கேல்புரியைச் சேர்ந்தவர். அம்பேத்கர் மருத்துவமனையில் சுத்தம் செய்யும் பணியை செய்து வருகிறார். திருமணமாகாதவர். அவருடைய நண்பர் பன்டி. இவர் ஒரு ரிக்ஷாக்காரர். ஜனவரி 12ம் தேதி சோனுவிற்கு பன்டி சாராயம் வாங்கி கொடுத்தார். அதனால் மயக்கமடைந்த சோனுவை, சஞ்சய் காந்தி நினைவு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு டாக்டர்களிடம், விருப்பப் பட்டே குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள விரும்புவதாகவும் பன்டி கூறியிருக்கிறார். டாக்டர்களும் அவ்வாறே செய்தனர்.குடும்பக் கட்டுப் பாட்டிற்காக ஊக்கத்தொகையாகக் கொடுத்த ரூபாய் 1,100ம், அழைத்துக் கொண்டு வந்ததற்கான தொகை ரூ.200ம் பெற்ற…
-
- 14 replies
- 3.5k views
-
-
சான்டா கிளாரா (கலிபோர்னியா): நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களைச் சேர்ந்த 6 பேர் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்டனர். குடும்பச் சண்டை காரணமாக இந்த பயங்கரம் நிகழ்ந்துள்ளது. துப்பாக்கியால் சுட்டவரும் தற்கொலை செய்து கொண்டு விட்டார். நீலகிரி மாவட்டம் அய்யன்கோலி என்ற பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜன். இவரது குடும்பத்தினர் கலிபோர்னியாவின் சான்டா கிளாரா நகரில் வசித்து வருகின்றனர். தேவராஜன் குடும்பத்தினருக்கும், அவரது உறவினரான அசோகன் என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே மோதல் இருந்துள்ளது. அசோகனும் குடும்பத்துடன் சான்டா கிளாராவில்தான் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு இரு குடும்பத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தேவராஜனின் வீட்டில் வைத்து …
-
- 19 replies
- 5.4k views
-
-
ஒசாமா பின்லேடனை 3 முறை சுட்ட கொமாண்டோ வீரர் தனது குடும்ப உறுபினர்களின் பாதுகாப்பு குறித்து அச்சமடைவதாக தெரிவித்துள்ளார். 2011-ம் ஆண்டு மே மதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் என்ற நகரில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவரான ஒசாமா பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த ரகசிய தாக்குதலை அமெரிக்காவைச் சேர்ந்த நேவி சீல் என்கிற சிறப்புப்படை மேற்கொண்டது. நேற்று வெளிநாட்டு பத்திரிகை ஒன்றிற்கு அந்த தாக்குதலில் பங்குகொண்ட கொமாண்டோ வீரர் பேட்டி அளித்தார். அவர் தனது அடையாளங்களை வெளியிடக்கூடாது என்கிற வேண்டுகோளோடு இந்த பேட்டியை அளித்தார். தற்போது வேலை இல்லாமல் பணச்சிக்கலில் இருப்பதாகவும் தனது குடும்பத்தினரின் பாதுகாப்பு குறித்து அச்சம் அடைவதாகவும் அவர் தெரிவித்தார். …
-
- 3 replies
- 607 views
-
-
குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள மம்தாவிடம்அனுமதி கேட்கும் மேற்குவங்க நிஜ பரதேசிகள். பிரிவு: தலையங்கம் பாலா தன்னுடைய பரதேசி படத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வறுமை குறித்து தத்ரூபமாக படமாக்கியிருந்தார். அவருடைய படத்தில் வருவது போன்று நிஜமாகவே மேற்குவங்கத்தில் உள்ள தேயிலை தொழிலாளர் குடும்பங்கள் கும்பல் கும்பலாக வறுமையில் வாடி, தங்கள் வீட்டு இளம்பெண்களை விபச்சாரத்திற்கு அனுப்பி வறுமையில் வாடி வருகின்றனர். இவ்வாறு கஷ்டப்படும் அவர்கள் தங்கள் குடும்பத்தாருடன் தற்கொலை செய்து கொள்ள தங்களுக்கு அனுமதியளிக்க வேண்டும்' என மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு தோட்ட தொழிலாளர்கள் கடிதம் எழுதியுள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மன்னர் ஜல்பய்குரி மாவட்டத்தில் உள்ள தேயில…
-
- 0 replies
- 447 views
-
-
குடும்பத்தோடு தலைமறைவானார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. என்ன காரணம்? ஒட்டவா: கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் தற்போது 229,818 ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் உள்ளன. அங்கு 3,027,167 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 28,957 பேர் அங்கு இதுவரை கொரோனாவால் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் கனடாவில் வேக்சின் போடும் வேகம் அதிகரித்துள்ளது. பொது இடங்களுக்கு செல்ல மக்கள் கட்டாயமாக இரண்டு டோஸ் வேக்சின் போட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இரண்டு டோஸ் வேக்சின் அதேபோல் ஓமிக்ரான் பரவலால் சில லாக்டவுன் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது…
-
- 7 replies
- 675 views
-
-
குட்டி ஏலியன்ஸ் வந்தாச்சு...! தென்ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டனும் 'ஏலியன்ஸ்' என்று செல்லமாகவும் அழைக்கப்படும் டி வில்லியர்சுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்து குவிந்து வருகிறது. தென்ஆப்ரிக்க அணி தற்போது வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்சின் மனைவி டெனிலாநிறைமாத கர்ப்பிணியாக இருந்ததையடுத்து, அவருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் இதனால் தென்ஆப்ரிக்கா திரும்பி சென்ற டி வில்லியர்ஸ் மனைவி டெனிலாவை அருகில் இருந்து கவனித்து வந்தார். இந்நிலையில் ஜோகன்ஸ்பர்க்கில் உள்ள மருத்துவமனையில்,அவரது மனைவி டெனிலா நேற்று ஆண் குழந்தை பெற்றெடுத்தார். தாயும் சேயும் நலமாக உள்ள…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஈழப் பிரச்னையை நீர்த்துப் போகச் செய்தவர் கருணாநிதி என்கிற குற்றச்சாட்டை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள் தமிழீழ ஆதரவாளர்கள். பதிலுக்கு ‘‘சகோதர யுத்தம்தான் விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குக் காரணம்’’ என்கிறார் கருணாநிதி. இந்நிலையில், ‘‘ஈழப்போராளி குட்டிமணியை காட்டிக் கொடுத்தவர் கருணாநிதி’’ என்று பழ.நெடுமாறன் பேசியிருப்பது அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த 25-ம் தேதி ராணி சீதை மன்றத்தில் நடந்த கவிஞர் காசி ஆனந்தனின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ, அ.தி.மு.க இலக்கிய அணி மாநில துணைச் செயலாளர் பழ.கருப்பையா என பல முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.பேச்சில் ஹைலைட்டாக இருந்தது பழ.நெடுமாறனின் பேச்சுத்தான். கருணாநிதி …
-
- 1 reply
- 838 views
-
-
திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனை சுற்றி உள்ள பெரும்பாலான கிராமங்கள் வனப்பகுதியை ஒட்டியே அமைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் வனத்துறை எல்லையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த வனப்பகுதிகளில் யானைகள், மான்கள் உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றன. பழனியில் இருந்து திண்டுக்கல் செல்லும் மெயின் ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கணக்கன்பட்டி கிராமம் அமைந்துள்ளது. மேலும் கோம்பைக்காடு, தொண்டுபட்டி ஆகிய பகுதிகளும் உள்ளன. மலை அடிவார பகுதியான இங்கு சமீபகாலமாக ஏராளமான யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 10 மணி அளவில் சுக்கம்பட்டி ராமசாமி என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்துக்குள் 9 யானைகள்…
-
- 0 replies
- 729 views
-
-
தென்கொரியாவில் குணமடைந்த கொரோனா வைரஸ் நோயாளிகள் பலர் மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயிலிருந்து மீண்டுள்ளனர் என கருதப்படும் 91 நோயாளிகள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் என தென்கொரியாவின் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நிலையைம் தெரிவித்துள்ளது. குணமடைந்தவர்களிற்கு மீண்டும் நோய் எப்படி தொற்றியது என்பதை உறுதி செய்யமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீண்டும் தொற்றிற்குள்ளாகவில்லை மாறாக நோயாளிகளிடம் மீண்டும் மீள் உற்பத்தியாகியுள்ளது என செய்தியாளர் மாநாட்டில் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. தவறானசோதனைகளும் இதற்கு காரணமாகயிருக்கலாம் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. நோயினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் இந்த நோய்க்கான நோய் எதி…
-
- 0 replies
- 293 views
-
-
கோவை: தான் குண்டாக இருப்பதால் கோபமடைந்த கணவர், முதலிரவைக் கூட முடிக்காமல் லண்டனுக்கு ஓடிப் போய் விட்டார் என்று கோவை [^]யைச் சேர்ந்த பெண் ஒருவர் புகார் [^] கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை விளாங்குறிச்சியை சேர்ந்தவர் மோகன்குமார் (35). லண்டனில் டாக்டராகப் பணியாற்றி வருகிறார். இவருக்கும் சென்னையைச் சேர்நத் அனுசுதா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பின்னர் மோகன்குமார் லண்டன் போய் விட்டார். இந்த நிலையில், அனுசுதா, சென்னை வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார். அப்புகாரைப் பெற்றுக் கொண்ட போலீஸார், கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அந்தப் புகாரில், கோவை விளாங்குறிச்…
-
- 15 replies
- 2.3k views
-