கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
கடல் நுழையும் மணற் பதுங்குகுழி ஒரு பக்கத்து வானத்தில் பெருந்துயர் மிகு சொற்கள் எல்லாருக்குமான பாவங்களைச் சுமக்கும் சனங்களின் குருதி மிதக்கும் துண்டுக் கடலில் கறுப்பு இரவு திரிகிறது. எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து கழித்து ஓ.. என்ற பெரும் மூச்சை மணல்வெளியில் புதைத்தாய் வானம் தாறுமாறாய் கிழிந்தது. சப்பாத்துகள் நெருக்கி கடலில் தள்ளிவிடத்துடிக்கும் ஒரு துண்டு நிலத்தில் எச்சரிக்கப்பட்டிருக்கும் வாழ்வு மணல் போல உருந்துபோகிறது. எல்லாவற்றையும் இழந்து ஒடிவரும் இரவு சிக்கியது மிருகத்தின் வாயில் எறிகனை கடித்த காயத்திலிருந்து கொட்டும…
-
- 1 reply
- 941 views
-
-
ஓ துகிலுரியப்பட்ட தங்கையே துட்சாதனன்களோடு நவகண்ணன்களும் கைகோர்த்துச் செய்த கொடுமை... பிணங்களின் நினங்களின்மேல் அபிவிருத்திப் பாடைகட்டும் அரக்க உலகே எப்போது உன் மனச்சாட்சி திறக்கும்... மனமிருக்கிறதா இருந்தால்.............. இன்றேனும் இல்லை நாளையேனும் உன் மனதைத் திறப்பாயா இல்லை சிங்களத் திமிரோடு சங்கமித்து சங்கமித்திரையையும் சாகடித்துப் புணர்வாயா? புணர்வதற்கு பெண்ணெண்ண பிணமென்ன.... தூ........... சிங்கம் புணர்ந்தெடுத்த சிங்களத்து வம்சமது செங்களத்தில் பட்டபாட்டை இப்படித்தான் தீர்த்ததுவோ! இதன்பின்னும் ஈனர்களாய் ஒரு கூட்டம் வீணர்களாய் ஒரு கூட்டம் வெட்டிகளாய் ஒரு கூட்டம் வேண்டாம் தாயே நீ எம்மை மன்னிப்பாய்! காத்திடவும் முடியாது நீதி காண்பதற்கும் முடி…
-
- 10 replies
- 867 views
-
-
மாவீரன் திலீபன் பாரதத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உண்ணவிரதமிருந்து தன் வாழ்வை உகுத்த 30 ஆவது ஆண்டு நினைவு அனுட்டிக்கப்படுகிறது. மாவீரன் திலிபன் உண்ணா நோன்பிருந்து தன வாழ்வை உகுத்து சில மாதங்களுள் அன்னை பூபதியும் காந்தீய அறவழியில் தன் சாத்வீகப் போரைத்தொடர்ந்து ஒரு பயனும் கிட்டாமல் இறந்தார்.அவர்களிருவருக்காகவும் எழுதப்பட்ட கவிதை கீழே. (குறிப்பு- இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் தமிழ்ப் பிரதேசங்களில் அரசின் உதவியோடு வேற்றினத்தவர்கள் குடியேற்றப்பட்டதைத் தடுக்குமாறு கூறியே உண்ணவிரதம் பிரதானமாகச் செய்யப்பட்டது). திலீபனின் உண்ணா விரதம் தீயிலுடலை எரிக்கவா - கொடுந் தேளெனைக் கொட்டச் சிரிக்கவா காயும் வயிற்றில் மரிக்கவா - என்றன் கண்களைக் குத்திக் …
-
- 0 replies
- 757 views
-
-
அமைதித் தளபதி- அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் தொங்கும் நகரில் சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில் சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள் நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து விரிந்த மலர்கொத்துக்களைபோல் புன்னகையை நீட்டியவனின் உதடுகளை மூடிக் கிடந்தது ஈரமண் முள்முருக்கில் அமர்ந்திருந்த வெண்புறா எழுந்து பறந்தது கொடும் சிங்கத்தின் முகத்துடன…
-
- 0 replies
- 1.1k views
-
-
நன்பர்களே..................... காதல் இல்லாத உலகம் -அது உலகமே இல்லை... காதல் என்றும் தப்பல்ல -அது காதலாக இருக்கும் வரை நீங்கள் யாரையாவது காதலியுங்கள் ஆனால் உங்கள் காதலை காதலியிடம் சொல்லுங்கள்... காதலை அவள் மறுத்தால் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் அல்லது இரண்டு வாரங்களில் மறந்து விடுவீர்கள்.. ஆனால் அதை சொல்லாமல் உங்களுக்குள்ளயே வைத்து புதைத்து விடாதீர்கள்.. காதலை சொல்லி காதலியின் முடிவை தெரிந்து கொள்ளுங்கள்-அது இல்லாமல் உங்களுக்குள் உங்கள் காதலை வைத்து நீங்களே கொல்லாதீர்கள்...- அது கருவை வயிற்றிலேயே அளிப்பது போண்றது. அதனால் நன்பர்களே...... உங்கள் காதலை தைரியமாக சொல்லுங்கள் காதலை சொல்லாமல் முட்டாளாக இர…
-
- 13 replies
- 2.5k views
-
-
தத்துவங்கள் பல தந்தனர் தமிழ் தத்துவ ஞானிகள் தமிழர் நாம் மறந்தோம் தத்துவம் தனை மனதில் பதிக்க சித்திரமாக சுவர்களில் பதித்தோம் சிலையாக வடித்தோம் தெருக்களில் வைத்தோம் குருபூசை-மறந்தோம் வையத்துள் வாழ குரு கூறியவைகளை உலா வந்தோம் உலக மொழி தத்துவங்களில் உணர்தோம் தத்துவம் யாவும் ஒன்றன்று உபதேசங்களை கடை பிடிப்பது கடினமென்று உணர்ந்து மறைத்தோம்,தொலைத்தோம் எம்மை உபதேசித்தவர்களின் பெயர்களிலும் மன்றங்களிலும்
-
- 6 replies
- 1.5k views
-
-
இயல்பினை கடந்த திடத்துடன் இயற்கையை வென்றவர்கள் எப்பொழுதும் இறப்பதில்லை! அறத்தினை மீறிய உலகிற்கு மறமென்றால் இதுவெனக் காட்டியோர் தம் இனமென்றே தம்முயிர் வாட்டியோர்! நிலத்தினில் வீழ்ந்திட்ட விதைகள் புலத்தினில் புதிதாய் கதைகள் உம் கல்லறையேனும் சொல்லுமா விடைகள்? உங்கள் ஒவ்வொரு கதையும் போதும் எம் பரம்பரை உம்மைத் தொடரும் உம் இலட்சியம் அடையும் வரை! அதுவே உங்களுக்கான உண்மையான அஞ்சலிகள்!
-
- 3 replies
- 1.2k views
-
-
தந்தையை இழந்த சகோதரிக்கு ஒரு தம்பியின் (கவி)மடல்... சகோதரி, யாரிவன் என்ற விசாரணைக் கோதாவில் இறங்காமல் தந்துவிடு உந்தன் சோகத்தின் ஒரு சிறு துளி தன்னை! அருமை அப்பா - உன்னை அழவைத்துப் பார்த்தறியாதவர்! இன்று கொடும் சோகப் பிணியில் விழும் எந்தன் சேய் என்ற நினைவிழந்து நிர்க்கதியாய் விட்டுச்சென்ற சோகம் யாரறிவார் உன்னையன்றி! ஆனாலும் சகோதரி உந்தன் சோகம் நானறிவேன்... சோகத்தின் சுவடுகள் உன்னிடம் மட்டுமல்ல - உலகில் கோடி மக்கள் உள்ளார் சொந்தம் சொல்ல! ஒருயிர் போனதன்று தேம்பியழுவதா குழந்தை போல? பாசப் பசையில் மறந்துவிடுவதா உந்தன் வாழ்வை மெல்ல? வேண்டாம் சகோதரி செய்வோமே புது விதி! பரிதாப வோட்டுக்கள் உந்தன் மனவங…
-
- 7 replies
- 1.2k views
-
-
இன்றைய விடியல் என் வாழ்வு என்று நான் அறியவில்லை! மனம் என்னை விட்டு போகுமென கணப்பொழுதும் நினைக்கவில்லை! கண்ணில் விழுந்த தூசு போல் என் கண்மணியினுள் விழுந்தாள்! விழுந்த நீ கண்ணிற்கு இதமானதால் எடுக்க நான் விரும்பவில்லை!! கண்மணிக்குள் விழுந்தவள் கண்மணி ஆவாளா என் கரும்விழிகளை நீ கேட்கையில் என் கண்மணிபட்ட பாட்டை கண்ணே உன் விழிகள் அறியுமா! இருவரின் கண்கள் பேசுகையில் உதடுகள் பேச மறுத்தன உதடுகள் பேச எத்தணித்த போது கண்களிள் ஒரு ஏக்கம்! கண்களின் ஏக்கம் காதலின் தாகம்! கண்மணியின் மெளனம் காதலின் நெருக்கம் விழிகளின் இருந்து வரும் கண்ணீர் - நம் கண்கள் மோதியதால் கிடைத்த காதல்சின்னம்! கண்கள் கூடியதால் இமை மூட மறுக்கின்றன இமைகள் மூ…
-
- 33 replies
- 5k views
-
-
எங்களுக்கும் புத்தாண்டு இப்படியாய் விடியாதா? (இக்கவிதை 01.01.2009 புத்தாண்டு அன்று எழுதியது. அப்போதிருந்த மனநிலை இதனை தரவேற்றவில்லை. 2ஆண்டு கழித்து 2012புத்தாண்டு பிறக்கவிருக்கிற இந்தச் சில நிமிடங்களின் முன் இதனை பதிவிடுகிறேன்.) பன்னிரண்டு மணி பட்டாடை கட்டி வானம் விழித்துக் கொள்கிறது. கருவானக் கதவுடைத்து கனவு கலைந்து வான வெளி கண்விழித்துக் கொள்கிறது. வண்ண வண்ண ஒளிக்கலவை... அழகின் இருப்பிடமெல்லாம் அகன்ற வானில் அள்ளிக் கொட்டியிருக்க வீதிகளில் புகைமூடி வர்ண ஒளிக்கீற்று வடிவுதான்.... பனித்துளி சொட்டப் பகலைத் தெளித்தது போல் பொழுது பட்டாசுகளால் பல்வர்ணம்.... புத்தாண்டுப் பிறப்பு பகற் சேமிப்பெல்லாவற்றையும் பட்டாசாய் வெ…
-
- 7 replies
- 1.4k views
-
-
அப்பாவுக்கு ஒரு கவிதை. எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொட…
-
- 0 replies
- 3.5k views
-
-
-
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ் மீது உறுதி. வழி காட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி. விழிமூடி இங்கே துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி. இழிவாக வாழோம் தமிழீழப் போரில் இனிமேலும் ஓயோம் உறுதி' கல்லறை முன்நின்று மனிதர்கள் கரையும் மாவீரர் தினம். சுயத்தின் அடியளித்த புனிதர்களைப் போற்றும் நினைவேந்தும் நாளிது. புதைக்கவில்லை விதைத்தோமென்கிற உட்பொருள் உணர்ந்து விளக்கேற்றும் நினைவெழுச்சி நாளிது. தமிழின வீரவரலாற்றின் சாட்சிப் பதிவுகள், கல்லறையாகிக் காட்சிதரும் துயிலுமில்லங்கள். தமிழீழ மண்ணின் விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈகம் செய்த 22 ஆயிரத்திற்கு மேற்பட…
-
- 0 replies
- 656 views
-
-
பாட நூலுக்காக செலவிட்ட... நேரத்தைவிட உனக்காக... முகநூலுக்காக செலவிட்ட .. நேரம் அதிகம் -இப்போ ..... கிழிந்த ஆடையின் நூல் .... விட்ட தவறை காட்டுகிறது ....!!! @ முக நூல்பற்றிய கவிதைகள் கவிப்புயல் இனியவன் (மாணவர்களுக்கு விழிப்புணர்வுக்காக )
-
- 3 replies
- 1.4k views
-
-
மென்மதி மலர்மீது பூம்பனித் துளிகள் தேனி சிறகசைக்கத் துளிகள் ஒன்றாயின மஞ்சள்த் தேனியின் காலின் கறுப்பிற்கு மகரந்தச் செம்மஞ்சள் முறுவலை என்முகம் முளுதாய்ப் பிரசவித்தது. மலையில் உருளும் பனியருவி போல நேரம் உருண்டு தொலைந்தது கூடவே மாயையும் கரைந்துபோனது நிறம் மணம் மறைந்து ஆவி ஒன்றென ஆகி நின்றோம் எரியும் கட்டையோடு பிறிதொரு கட்டைபோடின், ஒரே நெருப்பு இரண்டிலும் எரிவதுபோல் தேனியும் மென்மதியும் மகரந்தமும் என்னுசிரும் ஜோதியில் ஒன்றாய்ப் புரிந்து கிடந்தன எங்கும் பரந்த முடிவற்ற வெளி ஆதியும் அந்தமும், அடியும் முடியும், நேரமும் மரித்த வெளி அருவத்துள் உருவத்துள் அனைத்துள்ளும் பரந்த ஒரே வெளி கடலிற்குள் உப்பற்ற நீர்த்துளி இல்லை இவ்வெளிக்குள் துளிகள் இல்லை, ஒ…
-
- 6 replies
- 937 views
-
-
வருசாவருடம் பொங்கல் வருகிறது பொங்கலும் நடக்கிறது ஏதோ குறைவது போல்....... என்ன இல்லை புலத்தில் அரிசி சக்கரை கரும்பு அவல் பொங்கிட அவள்... எல்லாம் உண்டு... இருந்தாலும் இனிப்பில்லை .......... பொங்கலாம் புத்தாடை உடுத்தலாம் உற்றார் உறவினர் அயலவர் வீட்டுக்கும் போய்வரலாம் இருந்தாலும் ஒட்டுதில்லை............. என்ன குறை??? அந்த மண் இல்லை அது எங்களிடமில்லை அது வரும் நாளே மனம் பொங்கி பொங்கலிட்டு புதுப்பொலிவுடன் கம்பீரமாக தமிழன் தை நோக்கி நடக்கும் நாள்..............
-
- 6 replies
- 704 views
-
-
இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி இனிப்பும் கசப்புமாய் என் காதல் காதலுக்கு பல எதிரிகள் இங்குண்டு மற்றவர்களுக்கு? ஏனோ எனக்கு என் காதலே எதிரியாய் போனதேன்? அன்பாய் தான் இருக்கிறான் அழகாய் தான் எனை ரசிக்கிறான் நிறைவாய் தான் தருகிறான் நிறைமதியாய் எனை தாங்குறான் இருந்தும் எனக்கேனோ நிம்மதியாய் ஒருநாளும் உறங்கமுடியவில்லை.. என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவன் அடுத்த முகம்... நண்பர்கள் உனக்கெதுக்கு வேண்டாம் என விட்டுவிட்டேன் நானிருக்க சுற்றம் ஏன் அதை கூட விட்டு விட்டேன் படிப்பெதற்கு, வேலை எதற்கு நான் உன்னை பார்த்துக்கொள்வேன் அவன் மேல் உள்ள அன்பில் அத்தனையும் துறந்துவிட்டேன் கடைசியில் வ…
-
- 60 replies
- 7.6k views
-
-
"இசை" என்ற தமிழ் சொல் அற்புதமானது. இசயின் பொருள், இலக்கணம், நோக்கம், பயன் எல்லாமே அதில் சொல்லப்பட்டிருக்கிறது. இசைக்கு அடிப்படையான ஸ்வரங்கள் ஒவ்வொன்றும் வேறுபட்டவை. அவற்றின் ஒத்திசைவில் இசை பிறக்கிறது. இசைக்கு வேறுபட்டவை தேவை. எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தால் இசைவும் இல்லை. அதனால் பிறக்கும் இன்பமும் இல்லை. அதனால் தான் மனிதன் முதற்கொண்டு எல்லா படைப்புக்களும் வேறுபாடுகளோடு, விதம் விதமாக, வகை வகையாக படைக்கப்பட்டிருக்கின்றன. மனிதன் தான் சக படைப்புகளோடு ஒத்திசைகிற போது வாழ்க்கை இசையாகிவிடுகிறது. துன்பம் என்பது ஆபசுரம். ஒத்திசைவில் எங்கோ தவறு நடந்திருக்கிறது என்று பொருள். இசை ஸ்வரங்களுக்கு இடையே மட்டுமல்ல, முரண்பட்ட அனைத்துக்கும் இடைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
தினமும் யாரோ ஒரு தோழனின் ஞாபகம் தோழியின் ஞாபகம் வந்தே போகும் அதுவே எங்கள் விடுதலையின் விலாசம். ஆயினும் கார்த்திகை மாதம் கண்ணீரால் கரைந்து கனக்கும் சோகம் சொல்லிப்புரிவிக்க இயலாத பாரம். எல்லா மாதம் போலல்லாத கார்த்திகையே எங்கள் காவியங்கள் கண்திறந்து கதை சொல்லும் காலம். எத்தனையோ ஞாபகங்கள் அத்தனையும் ஒருசேர உயிர் வேகும் மாதமிது. உயிர் போகும் வரையுமெங்கள் ஊர்காத்து உயிர் காத்த வீரர்களை உயிர் கரைய நினைவேந்தும் மாதம். சாந்தி நேசக்கரம் 11. 11. 17
-
- 0 replies
- 889 views
-
-
வாளெடுத்தவன் எலாம் வீரனென்றாவானா? தூரிகை தூக்கியவர் அனைவரும் -ஓவியர் ஆவாரா? பாரடா நண்பா - பகை -மெல்ல வெல்கிறது-! நீ இரு - நானும் இருக்கிறேன் என்பதா வேண்டுமிப்போ? நாம் இருக்கணும்- இதை நாவரழ சொல்லியும் - கேட்பார் யாருமிலை - நீயாவது - கேளடா! பச்சைக்கிளியின் சொண்டில் -பற்றி எரியும் அமிலம்-ஊற்றுவார்- பாவமிது என்று நீ சொன்னால் அந்த பகுதியையே இழுத்து மூடுவார்! ஏனடா இப்பிடி-? எலும்பும் தசையும் மட்டுமா- மனிதன் என்றாகும்-? உணர்வென்ற ஒன்று வேண்டும்-! நீ - உறைக்க சொல்லேண்டா - அவருக்கு! பார் பார்- கருத்து விடுதலை என்று பேசாதிருந்து கழுகுகள் - உன் தலையில் கூடு கட்டும் காலம் வந்தாச்சு - சீ போடா- அப்போ- எமக்காய் சிரித்துக்கொண்டே செத்தவர் கனவ…
-
- 13 replies
- 2.4k views
-
-
புலத்து இளைஞர்களே புலம்பெயர் மண் இளைஞர்களே ! சற்று செவிமடுப்பீர் சொந்த மண்ணை ஏன் பிரிந்தோம்? சொந்த மண்ணில் என்ன நடக்கிறது? உம் இதயத்தை நீங்கள் கேட்பதுண்டா? சொந்த மண்ணில் எம் உறவுகள் அழியும் செய்தி உம் காதில் விழுவதுண்டா? இங்கே குழு மோதலால் எம் இனத்தை நீங்கள் அழிப்பது உள்ளம் உறுத்தவில்லயா? ஒர் உயிரைப் பறிக்கும் உரிமையை உமக்கு கொடுத்தவர் யார்? ஒர் உயிரை ஒர் நொடியில் பறித்து விடுகிறீர் எம் தமிழ்த்தாயின் கதறல் உம் காதில் விழவில்லையா? சுற்றி இருக்கும் உறவுகளின் வேதனை உமக்கு வேடிக்கையா? பழிக்குப் பழி தீர்ப்பதில்த் தான் உம் வீரம் உணர்கிறீரா? இக்கோர உள்ளம் எப்படிப் பெற்றீர்? புலம் பெயர்ந்த மண்ணில் நடைபெறும் வன்முறைகளைக்…
-
- 14 replies
- 2.3k views
-
-
உனக்கு ஆட்சேபனையில்லையெனில் கவிதை மலர்களுக்குள் உன்னை தூவுகின்றேன் எங்கிருந்தோ வந்த உன் அழகு என் வாலிபத்தை துவசம் செய்தது. உன்னை நினைத்துப்பார்க்கின்றேன்.. நீ அழகான ஆனால் அரிதான படைப்பு. என்னை நினைத்துப்பார்க்கின்றேன் காலம் தந்த சிறகுகளைக்கொண்டு உனக்காக பறக்கின்றேன். வாழ்க்கையின் வெவ்வேறு பகுதிக்குள் - உன் வேர் ஊடுருவியிருப்பதாக உணர்கின்றேன்.. என்னிதயத்தில் எனக்கே தெரியாத ஓர் இடத்தில் நீ பதுங்கு குழி அமைத்திருக்கின்றாய். மனசின் இலைகளின் இடுக்கில் நீ பூத்திருக்கின்றாய். உனக்கு ஒன்று தெரியுமா?.... உன்னைக் காண்பதற்கு முன்னால் நானும் காதலை எதிர்த்தவன் தான்......
-
- 10 replies
- 1.9k views
-
-
எங்கள் அன்னை மண்ணை மீட்க ஆயுதம் ஏந்தி மரணித்த நீங்கள், கல்லறை தெய்வங்களாய் எம் தேசமெங்கும் காவல் காத்தீர்கள். மரணித்த உங்களைக்கூட மன்னிக்க தெரியாத மானங்கெட்ட சிங்கள காடையர்கள் எங்கள் காவல் தெய்வங்களின் கல்லறைகளை அழித்து உங்களையும் வென்றுவிட்டதாக எண்ணி மார்தட்டிக்கொள்கின்றார்கள். மானங்கெட்ட சிங்களவன், யார் இந்த சிங்களவன்? கல்லறைகளைக்கூட மன்னிக்க தெரியாத இவர்கள் புத்தர் வழி வந்த புண்ணியர்களா? யார் அந்த புத்தன்? இவனும் ஒரு அரக்கர்கூட்ட தலைவனா? அல்லது நல்வழி காட்டிய நல்லவனா? விடை தெரியாமல் பாவப்பட்ட தமிழர் நாம் இன்று இவர்கள் பிடியில். இவர்களுக்கு உங்கள் கல்லறைகளை மட்டும் தான் அழிக்க முடியும். எங்கள் இதய அறைகளில் இருந்து உங்கள் நினைவுகளை ஒரு துரும்ப…
-
- 0 replies
- 720 views
-
-
துப்பாக்கி எப்போது பூப்பூப்பது -- அன்பனே உன் தோழியைவிட துப்பாக்கியை நேசிக்கும் தோழனே என்னோடு மெழுகுவத்திகளும் அழுதுகொண்டிருக்கும் இந்த மெல்லிய இரவில் கடிதத்தில் விழும் என் கண்ணீர்ச் சொட்டு கடிதத்தில் அழிவது மெல்லினமும் வல்லினமும்தான் கண்ணீரில் அழிவது தமிழினமே அல்லவா? நாங்கள் நட்சத்திரங்களைப் பார்த்து நாளாயிற்று எங்கள் வானத்தைப் புகைமண்டலம் போர்த்திருக்கிறது மனிதன் மட்டும்தான் சிரிக்கும் ஜீவராசியாம் அப்படிப் பார்த்தால் இப்போது இங்கு யாரும் மனிதராசி இல்லை. காதலா நீயும் நானும் ரகசியமாய் நடந்து போகும் ராத்திரிச் சாலை இப்போது - வெடிகுண்டுகளின் விதைப் பண்ணையாகிவிட்டது …
-
- 5 replies
- 1.2k views
-
-
"""" தூக்கத்தை கலையுங்கள் புலிகளே..."""" உறங்கி கிடந்த புலிகளே நீங்கள் உறுமி இன்று எழுகவே.. கயவன் வந்து ஆடுறான்- எங்கள் தலையில் குண்டை போடுறான் களத்தில் உயிரை பறிக்கிறான் கதறி தமிழன் அழுகின்றான்... கண்ணீர் ஆறாய் ஓடுதே கடலெனவே பாயுதே குருதியிலே புலவுகளே குளியல் தினம் செய்யுதே... எங்கள் மனம் பதைக்கிறதே ஏக்கத்திலே தவிக்கிறதே சொந்த புமி அழிகையிலே எங்கள் வேங்கை தூங்குவதோ....??? காத்திருந்த போதும் இனி களத்தில் வித்தை காட்டுங்களேன் அன்னை மண்ணில் வாழும் - அந்த அந்நியரை கலையுங்களேன்..... தூங்கியது போதும் இனி - உங்கள் தூக்கங்களை கலையுங்களேன் துட்டமுனு படைவிரட்டி - எங்கள் ஈழமதை காணுங்களேன்....!!![/color] …
-
- 16 replies
- 2.7k views
-