Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by karu,

    தீரா விடம் – சித்தி கருணானந்தராஜா தெள்ளுதமிழினுக்கு திராவிடமென்றொரு தீக் கொள்ளியை வைத்தாரடி கிளியே கொடுமை புரிந்தாரடி உள்ளத்தில் நாம் தமிழர் உண்மை அதை உணர்ந்தும் பள்ளத்தில் வீழ்ந்தோமடி கிளியே பற்றை இழந்தோமடி ஆரியச் சங்கரரும் ஆங்கிலக் கால்டுவெல்லும் பேரிதை வைத்ததனால் கிளியே பெருமையிழந்தோமடி ஆரிவர் எங்குளரென் றனைவரும் விழித்திடத் தா கூரும் அழைத்தாரடி கிளியே கூற்றிடம் வீழ்ந்தோமடி நாம்தமி ழர்கள் என்று நம்மினத் தார்க்கும் சொல்ல நாத்தடுமாறுதடி கிளியே நகைப்புக்குள்ளானோமடி ஏன் தமிழர்க்கு இந்த இழிநிலை என்றுலுகம் எம்மை இகழுதடி கிளியே இதுவென்ன மாயமடி சாதிகள் தன்னைக்கொண்டு சமத்துவம் என்னும்…

    • 4 replies
    • 1.3k views
  2. எழுதவேண்டும் என்பதற்காக எழுதி 2 ஆயிரம் கருத்துக்களை எட்டிவிட்டேன். அதன் சந்தோசத்தில் ஒரு காதல் விதையோடு. . . . மௌனம் கலைந்து விழியுடன் மோதி விடைகள் தேடும் இமைகள் பைங்கிளி பறந்து பருகிடுமோவென பயந்து ஒன்றுடன் ஓன்று உரசி மறையும் கனியிதழ்கள் சலனமற்ற நீர்தடாகததில் வீழ்ந்த துளியாய் அலைவீசிச்செல்லும் கன்னக்குழி வதனம் கூந்தல் மருவி காயமாகிவிடுமோவென கலைத்திட விரையும் கரங்கள் அடடா அழகிய சொர்ப்பனம் அர்ப்புத தரிசனம் விடியலின் எழுச்சியில் வீணாக கலைந்தது

    • 8 replies
    • 1.3k views
  3. கவிதை வேண்டும்! (கருவுற்றிருக்கும் தமிழ்ப்பெண்ணின் தாகங்கள்,) கவிதை ஒன்று வேண்டும் - தமிழ்க் .......... கவிதை ஒன்று வேண்டும் - நான் செவிமடுத்து மனம் சிலிர்க்கும் வண்ணமொரு .......... சின்ன கவிதை வேண்டும்! சோலை ஒன்று வேண்டும் - அங்கு .......... தூய தென்றல் வேண்டும் - இளங் காலை தோறும் தமிழ்ப் பண் வழங்கி எனைக் .......... கருணை செய்ய வேண்டும்! இசை ஒலிக்க வேண்டும் - தமிழ் .......... எனை மயக்க வேண்டும் - புது விசைபடர்ந்ததென அழகு தமிழ் வரிகள் .......... வெறி கொடுக்க வேண்டும்! பாட்டுச் சொல்ல வேண்டும் - இசை .......... பாய்ந்து செல்ல வேண்டும் - அதைக் கேட்ட படியெனது கருவில் வளர்மழலை .......... கிறக்கம் கொள்ள வேண்டும்! வாத்தியங…

    • 2 replies
    • 1.3k views
  4. அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் அதை அங்கொரு காட்டிடை பொந்தினில் வைத்தேன் வெந்து தணிந்தது காடு தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ? தத்தரிகிட தத்தரிகிட தத்தோம். கவிதை: மகாகவி: படம்:முகநூல்: எல்லாத்தையும் கலந்தது தந்தது: நெடுக்ஸ்

  5. Started by kavi_ruban,

    இரவாய் இருந்த எம் வாழ்க்கை பகலாய் விடிய வந்துதித்த தலைவா வாழீ நீ! முதலாய் வந்த குடியின் முதுகெலும்பு ஒடிக்கப்பட்ட போது உனக்கு மீசை கூட முளைக்கவில்லை! ஆசை அரும்புகின்ற அந்த வயதில் ஆயுத பாஷையன்றி வேறெதுவும் இவர்க்குப் புரியாதென உணர்ந்தவன் நீ! துவக்கை கைகளில் எடுத்தவன் நீ! தமிழின விடுதலைக்குப் புது துவக்கம் கொடுத்தவன் நீ! உலகில் தமிழின இருப்பை எதிரொலிக்கச் செய்தவன் நீ காந்திய வழியில் நடந்து சோர்ந்தவர்களுக்கு நீ பிறந்தது பெரும் தெம்பு! ஏந்திய துவக்கின் வாய் திறந்து பேசிய வார்த்தையால் தான் பேச்சு வார்த்தை கூட நடந்தது! உன் வேர்கள் ஆழமானது நீ பரப்பி…

    • 3 replies
    • 1.3k views
  6. நிகழ் ஒவ்வொரு நாளும் இரவு கவிகையில் ‘அவர்கள்’ வருவர். ஒழுங்கை முகப்பில் நாய்கள்குரைக்கையில் ‘அவர்கள்’ வரவைத் தெரிந்து கொள்வோம் விளக்கை அணைத்து வாசலைப் பார்த்து மௌனமாயிருப்போம் வேலியோரத்தில் நிற்பதும் நடப்பதுமாய் அவர்களின் பவனி தொடரும் புரியாத மொழியில் பேசிய போதும் அவர்கள் கேட்பது நமக்குப் புரியும்: பெண் நகை புலி. ஒலியடங்கிய சற்று நேரத்தில் எங்காவது வீரிட்ட அழுகையோ வேட்டொலியோ கேட்டபடி தூங்கிப் போவோம் விடியும் வரையும் நிம்மதி மறந்து உறங்குவதே போல் வாழவும் தெரிந்துவைத்திருக்கிறோம். - எஸ்.கே. விக்னேஸ்வரன் 1987 - ‘அமைதி’ பின்னரும் நான் வந்தேன் நீ வந்திருக்கவில்லை காத்திருந்தேன் அன்றைக்…

    • 1 reply
    • 1.3k views
  7. குட்டி ஹரியின் கதம்பம்.

  8. காலத்தின் தேவை கருதி கணப்பொழுதில் வரைந்த கிறுக்கல் . . ஈழப்புதையல் தேடி உழுது தேய்ந்த சந்தணக்கலப்பைகளை மனதில் இருத்தி கிறுக்கியுள்ளேன் . . . காலம் கண்மூடி திறப்பதற்குள் கரைந்து போய்விடுகின்றது. எம் உறவுகளே கரங்கள் எம்முடன்தானே பலமாக இருக்கின்றுது. உழைக்கின்றோம் ஒரு சிறு தொகை மனமுவந்து உதவுவோம். ஈழப்போர் இறுதிக்கு வந்து நிற்கின்றது. எதிரியின் எறிகணை எல்லைக்குள் எம்மக்கள் தவிக்கின்றார்கள். இந்தக்கணத்தில் நாம் செய்யவேண்டியது அவர்கள் கேட்டுக்கொள்வதும் ஓன்றே ஒன்றுதான். அன்பின் புலம்பெயர் உறவுகளே உதவிக்கொள்ளுங்கள். இது ஒரு கடன் நாம் கட்டாயம் திருப்பித்தருன்றார்கள் ஒருவர் கேட்கும்போது கைவிரிக்கும் பழக்கமற்றவர்கள் நாம். கொடுத்துச்சிவந்த கரங்கள் எமது கரங்கள் இன்னும் கொடுப்போம் கொட…

    • 5 replies
    • 1.3k views
  9. மேவும் துயர்கழுவியொரு மழை பொழியட்டும் தீச்சொரிந்து வானம் திசையழித்து எழட்டும் அந்த ஒளி விழுந்தெங்கும் பரவட்டும் அந்தோ... இருள் மூடி எந்தைநிலம். நிலப் பிளவுகளிலிருந்து எழுகின்ற ஓலம் கேட்கிறதா, சிதைந்த கற்கோளங்களில் எழுகின்ற பாடல் புரிகிறதா காற்றோடு கலந்துபோன பிள்ளைகளின் நேசம் தெரிகிறதா பெருங்கனவுடன் துடித்துக் கிடக்கிறதே மண் மேடுகள் அதாவது புரிகிறதா நிலமே எனைசுமந்த நிலமே ஊரோடுகூடி காந்தள் சூடி ஒளியேற்றி உணர்வெழுந்து மணியொலித்து முகம் பார்க்கும் உறவுகள் எங்கே... விழிநீர் மறைத்து மேனி தழுவிக் கரம் பிடித்து களமாடிய கதைபேசும் தோழர்கள் எங்…

  10. ஈழம் எங்கள் தாயகம் என்றும் வாழும் ஆலயம் வாழும் காலம் யாவும் எங்கள் உயிரைத் தந்தும் காத்திடுவோம் வீரர்கள் என்றும் சாவதில்லை சாவுக்குப் பயந்தவர் வீரரில்லை தோல்வியைக் கண்டு துவள்வதுமில்லை தமிழ் இனம் வெற்றியின் படியில் ஏறுகின்றோம் எங்களின் தியாக வித்துக்கள் நிட்சயம் ஒரு நாள் பயிராகும் எங்களின் கனவுகள் நனவாகும் ஈழத்தில் எங்கள் கொடி பறக்கும் தடைகள் கோடி என்றாலும் சிங்கள படைகள் தேடி வந்தாலும் விடைகள் எங்கள் தோள்களிலுண்டு விடியும் ஒரு நாள் வாருங்கள் நாளை மலரும் ஈழத்திலே சுதந்திர மலர்கள் மொட்டவிழும் இன்றைய எங்கள் போராட்டம் முடிவாய் இதற்கொரு பதில் சொல்லும். ஈழ வீதியிலே புலிக்கொடி தினம் பறக்கும்..அதை நாம் தினம் பாப்போம்

  11. எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! சத்தியமே செத்துவிட்ட பார் இது பூவே...! நித்தமும் நீ தேடுவது என்ன இங்கு உத்தமர்கள் ஆயிரம் நாவளவில் பூவே..! உனக்கு இது புதியதன்றே வித்தகர்கள் பலர் வியந்திடும் பூவே...! குந்தகம் மனதிற்குள் குழிபறிக்க ஆசை எத்தனை மனிதர்கள் பூவே...! இன்றும் எம் அருகினிலே விந்தை அது விந்தை பூவே...! எந்தன் வாழ்க்கையது அவருடனே நன்றிகள் ஆயிரம் பூவே...! கபடம் மறந்த உன் வாசனை அழகிற்கே மனதில் ஒலிக்கும் கவியோசை பூவே...! உந்தன் வாசமுடன் கலந்து இங்கு எனக்கும் ஆசைகள் கோடி பூவே...! உனைப்போல் துன்பம் மறந்திருக்க எழுதுவது இதயநிலா.. "உள்ளங்களே உங்கள் கருத்துக்கள் அறிய ஆவல்…

    • 5 replies
    • 1.3k views
  12. ஊருக்கு தாண்டி நான் கில்லாடி என் மனச உடைச்சது நீதாண்டி பொய்யாச்சு எல்லாம் பொய்யாச்சு என்னை விட்டு எல்லாம் போயாச்சு கண்ணதாசனும் கம்பன் கவிஞனும் பொம்பள மனச எவனும் புரியல கவிஞர் வாலியும் வைரமுத்துவும் பொம்பள மனச எவனும் அறியல உன்னை நினைச்சதால நான் மறக்கல உன்னை மறக்க நினைச்சாலும் முடியல மனச மனசுக்குள் புதைச்சதல பிரிக்க முடியல மனசல உறக்கம் கொஞ்ச நேரம் கிடைச்சாலும் அது கிடைக்கவேணும் உன் மடியில என்னை பார்த்தும் பார்க்காம போகிற உன்னால முடியுது என்னால முடியல...

    • 4 replies
    • 1.3k views
  13. மலைப் பனியோடு மனதின் பனியும் உருக வான் நோக்கிக் கை பரப்பி சூரியன் கை வீணையாய் இசைக்கின்றாள். இது புலம் பெயர்ந்த பின்னாடி அவள் கோடைதொறும் நிகழ்த்துகின்ற கூத்துத்தான். பொன்னி நதி பண்டைப் பழசானாலும் மாரிப் புதுவெள்ளத்தில் கன்னிதானே. வாழிய தோழி வளர்க உன் பாடல் என்றேன். வாடா என் சூரியத் தோழனே வந்தென்னை அள்ளி அணைத்திடடா. கந்தல் வெண்பனிப் போர்வை வீசி வானவிற் சேலைகட்டி என்போல் குதூகலமாய் சூழும் துருவத்து மலை சிகரங்களே. கண் இறங்கும் பாதை எல்லாம் வண்ணக் கம்பளமாய் விரிகின்ற பள்ளத்தாக்கே. சாரல் பாறைகளிடையே துளிர்க்கின்ற திராட்சைகளே. போதை தருகின்ற புது வசந்தத் தேன் காற்றே. என்தேச விடியலின் பல்லியத்தை என்னுடைய சன்னலைத் தேடி இசைக்…

    • 4 replies
    • 1.3k views
  14. கல்லறைக்குள்ளிருந்து ஒரு கடிதம். போராடித் தொலைத்தது போல் வருடங்கள் மௌனமாய் தொலைகிறதே., தேசம் கடந்து போன என் மக்கள் - ஊர்திரும்பா வேதனையில் ஈழக்கனவும் குறைகிறதே; மாவீரர் தினம் கூட - ஒரு பண்டிகையாய் வருகிறதே மலர்வளையம் வைத்து வணங்கி - மக்கள் விடுதலை மறந்துப் போகிறதே; வெடித்துச் சிதறி வீழ்ந்த தலைகளின் - சொட்டிய ரத்தம் எப்படி உள்ளே நினைவறுந்துப் போனதுவோ? விழுந்து துடித்த பிள்ளைகளின் அழுகுரல் எப்படி ஓரிரு வருடத்தில் அந்நியம் ஆனதுவோ? வலிக்கும் வலியின் ரணம்; சுதந்திரமெனில் துடிக்க மறந்ததேன் உறவுகளே ? இன்னும் மறந்து வானம் பார்த்து நிம்மதி பெருமூச்சு விடுமளவு நாம் சொந்த மண்ணில் வாழவில்லையே உறவுகளே.. சிரிக்கும் சிரிப்பில்…

    • 2 replies
    • 1.3k views
  15. Started by இலக்கியன்,

    மொழியில் தமிழ் அழகு தமிழுக்கு கவி அழகு குரலுக்கு குயில் அழகு குயிலுக்கு குஞ்சு அழகு நடைக்கு அன்னம் அழகு அன்னத்துக்கு வெண்மை அழகு நடனத்துக்கு மயில் அழகு மயிலுக்கு தோகை அழகு இசைக்கு யாழ் அழகு யாழ் மண்ணுக்கு பேச்சு அழகு கிளிக்கு சொண்டு அழகு சொண்டுக்கு கொவ்வை அழகு கொம்புக்கு மான் அழகு மானுக்கு புள்ளி அழகு கூந்தலுக்கு பெண் அழகு பெண்ணுக்கு தாய்மை அழகு உழைப்புக்கு ஆண் அழகு ஆணுக்கு தோள் அழகு எனக்கு நீ அழகு உனக்கு நான் அழகு

  16. போதிமரத் தேவதை..... இளங்கவி - கவிதை..... என் பக்கத்தில் என் கண்மனி நடந்துவர..... கவலையான முகத்திற்காய் காரணம் கேட்கிறேன்...... சொல்லாமல் தொடர்கிறாள்..... காற்றின் வேகத்தில் அவளின் கண்களுக்குள் ஏதோ சென்றுவிட...... முடியாமல் கண்ணை மூடுகிறாள்..... நான் பதை பதைத்து அவளின் பக்கத்திலே சென்று என்ன என்று கேட்டு அவள் கண்ணை ஊதுகிறேன்..... விடு என்னை என்று வெறுப்பாக விலகுகிறாள்..... கண்ணில் தூசி விழுந்ததற்கே இப்படித் துள்ளுகிறாய்....! தாய் மண்ணில்.... குழந்தைகளின் மண்டையில் கொத்துக் குண்டல்லா போட்டான்.... நீ என்ன செய்தாய்....? மூன்று லட்சம் மக்கள் முகாமில் ஒரு நேர உணவின்றி முடங்கிக் கிடைக்கையிலே நீ என்ன செய்கிறாய…

  17. தூவனம் தூவத் தூவ மழைத்துளிகளில் உன்னை கண்டேன் என் மேலே ஈரம் ஆக உயிர் கரைவதை நானே கண்டேன் கடவுள் வரங்கள் தரும் பல கதை கேட்டேன் அவரே வரமாய் வருவதை இங்கு பார்த்தேன் வேறு என்ன வேண்டும் வாழ்வில் குயில் என மனம் கூவும் மயிலென தரை தாவும் என்னோடு நீ நிற்கும் வேளையில் புழுதியும் பளிங்காகும் புழுக்களும் புழுகாகும் கால் வைத்து நீ செல்லும் சாலையில் யார் தீங்கு செய்தாலும் மன்னிக்கத் தோன்றும் நீ தந்த என் மாற்றம் என் வெட்கம் தூண்டும் காதல் வந்தால் கோபம் எல்லாமே காற்றோடு காற்றாக போகின்றதே . இரவுகள் துணை நாடும் கனவுகள் கடை போடும் நீ இல்லை என்றால் நான் காகிதம் விரல்களில் விரல் கோர்க்க உதட்டினை முகம் பார்க்க நீ வந்தால் நான் வண்ண ஓவியம் நெஞ்சுக்குள் பொல்லாத ஆறேழு வீணை ரீங…

    • 1 reply
    • 1.3k views
  18. இந்திய தமிழச்சியின் கண்ணீர்வாக்குமூலம் அம்மா.. உன் கடைசிப்பயணத்தில் என் கண்ணீர் வாக்குமூலம். என்னை மன்னித்துவிடு. நான் விரும்பினாலும் நான் விரும்பாவிட்டாலும் என்மீது சுமத்தப்பட்டிருக்கும் இந்தியன் என்ற அடையாளத்தினை கிழித்து எறியும் எந்த ஆயுதங்களும் இல்லாமல் நிராயுதப்பாணியாக களத்தில் நிற்கும் என்னை.. அம்மா மன்னித்துவிடு. கசாப்புக்கு கூட உயர்நீதிமன்றம உச்ச நீதிமன்றம் கதவுகள் திறந்திருக்கின்றன பலகோடியில் பராமரிப்பு செலவு இத்தனையும் செய்து இந்திய முகத்தைக் காப்பாற்றத் தெரிந்த எங்கள் நீதிதேவதைக்கு அன்னையே.. சக்கரநாற்காலியில் நீ சாய்ந்தக்கோலத்தில் மருத்துவம் நாடி வந்தப்போது மட்டும் கறுப்புத்துணியால் கண்களை…

  19. காலைக் கடிக்கமுன் கையைபலமாகக்கடித்தது புதுச்செருப்பு @ நித்தம் போனபோதும் முகம் சுழிக்கவில்லை மணிமுள் @ ஹைக்கூ கவிதை கவிப்புயல் இனியவன்

  20. வன்னி வான்பரப்பு நீலமில்லை. கூரைகள் இல்லை படுத்துறங்கக் குடிசையுமில்லா மரத்தடி வாழ்வு மடுவிலிருந்து ஆரம்பம் கற்காலம் இதுவல்ல கடந்த காலத் தொடர். சமாதானம் சமாதானமென்று சொன்னோர் பிணதானம் வாங்கி உயிரெடுக்கும் பலிகால ஆரம்பம். போனது பாதி போகாதது மீதியென பதுங்குளி வாழ்வு மீளவும். பலாலியில் ஆரம்பித்து வலிகாமம் வடமராட்சி தென்மராட்சி வன்னியென போர்க்கதவுகள் திறபட தசாப்தங்களைத் தின்கிறது தமிழர் கதை. வன்னி வான்பரப்பு நீலமில்லை தமிழர் குருதியின் நிறமாக வானும் தரையும் ஒளிவர்ணக் கலவையின்றி உடைவுகளும் சிதைவுகளும் ஒவ்வொன்றாய் தொலைகிறது. கூரைகளற்று விமானக் குண்டுகள் தாங்கும் நிலமாக வன்னிமண். உதவிக்கும் ஆ…

    • 2 replies
    • 1.3k views
  21. என் கனவில் வந்த பூதம் ஒன்று விடிந்த பின் நான் பேருந்துக்காக காத்திருக்கையில் அருகில் வந்து bus stand இல் நின்றது நானும் பூதமும் பேசிக்கொள்ளவில்லை பூதம் தன்னைக் கண்டவுடன் நான் அதிர்வேன் என்று நினைத்து ஏமாந்து கொண்டது என்னை நேரில் கண்டவுடன் பூதம் தலை தெறிக்க ஓடும் என்று நானும் ஏமாந்து கொண்டேன் பேருந்தில் பக்கத்தில் அமர்ந்து கொண்டாலும் தன் கண்களை மூடியே பயணித்தது அது அலுவலகத்திலும் என் பக்கமே நின்று கொண்டிருந்தாலும் ஒன்றும் பேசவில்லை அது நானும் ஒன்றும் கேட்கவில்லை இடையிடையே நக்கல் சிரிப்பும் நளினமும் செய்து கொண்டுதான் இருந்தது பூதம் அதன் குளப்படி பழக்கங்களை மாற்ற முடியுமா என்னால்? **…

  22. Started by putthan,

    கம்பனிற்கு கவி படித்தார்கள் நம் கற்றோர்கள் ஆறுமுகதானுக்கும் கவி படித்தார்கள் நம் அறிஞர்கள் கற்பனா சக்திக்கு பாராட்டு தெரிவித்தார்கள் நம் கவிஞர்கள் அட நம் அன்டனின் அறிவை அண்டம் புகழ பாட அறிஞர்கள் இல்லையா ஆசியா புகழ்பாடும் அரிடி உண்ணும் அண்டத்தில்

  23. இலைகளைந்து மரங்களெல்லாம் நிர்வாணமாகும். வெட்கத்தில் பனித்துளிகள் ஆடைநெய்து போர்க்கும். வெண்பனிகள் ஊர்முகட்டில் சித்திரங்கள் கீறும். சிற்றோடை தானிறுகி சிற்பமெனவாகும். வெள்ளாடை புூண்டதனால் - ஊர் தேவதை போலாகும். அழகழகு இதுவென்றே மனம் சொல்லியாடும். வானுக்கும் மண்ணுக்கும் ஊடல் இது போலும். ஊடலினால் கதிரவனின் முகமழிந்த தாகும். கதிரவனின் முகம் நினைத்து முகிலினங்கள் உருகும். உருகிவிடும் கண்ணீரே பனித்துளியாய் வீழும். மண் வீழ்ந்த பனித்துளியில் மனமுருகிப் போகும். அழகருந்தி மனமுருக உடல் நடுங்கலாகும். உடல் நடுங்க, திடம் ஒடுங்க வாழ்வு வெறுப்பாகும். வாழ்வு வெறுப்பாக - மனம் முகவரியைத் தேடும். வாழ்வு வெறுப்பாக - மனம் …

    • 3 replies
    • 1.3k views
  24. Started by கவிதை,

    நான் உச்சரித்த முதன்முதற் கவிதை... ஒரேயொரு வார்த்தையில் " அம்மா " என்பதுதான்! இன்னும் எத்தனை கவிதை எழுதினாலும்... அத்தனை அழகு இதில் மட்டுந்தான்!

  25. தேநீர் கவிதை: வேனல் கோடையின் வாசனையை வேப்பம்பூ காட்டிவிடுகிறது. செய்கூலி இல்லாமல் வெயில் அதிகமாகவே ஜொலிக்கிறது. . பகல் பொழுது மிக நீண்டதாய் ... திண்ணைகளும் காலியாகின்றன செல்சியசும் புரியவில்லை பாரன்ஹீட்டும் விளங்கவில்லை எல் நினோ அத்துப்படியில்லை ஓசோனில் ஓட்டையும் அறியவில்லை போன வருஷத்தைக் காட்டிலும் வெயில் ஜாஸ்தி என்பதே பழகிப்போச்சு சூரியனுக்கும் பூமிக்கும் லட்சம் மைல்கள் தூரம் இல்லை கைக்கு எட்டும் தூரம் தான் சோஷலிசமாய் வெப்பம் …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.