கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இனியவளே… என்னைக் கோவப்படுத்தி பார்ப்பதற்க்கானா உன் தேடல் தொடர்ந்து கொண்டேதானிருக்கிறது தோல்விக்கு மத்தியிலும் ம்ம்… உனக்கெப்படி தெரியும் உன்னை யாரும் கோவப்படுத்தினால்தான் எனக்கு கோவம் வருமென்று நமக்குள் பிரிவே வரக்கூடாது அப்படி வந்தால் உன்னால் வரக்கூடாது ஏனெனில் அந்த சோகத்தின் கதாநாயகியாக நீ இருந்துவிட கூடாதென்பதால் உன் கல்மனதுக்குள் நுழையும்வரைதான் யோசித்தேன் எப்படி நுழைவதென்று நுழைந்தபின் மறந்தே போனேன் எப்படி யோசித்து நுழைந்தேனென்று ***************************************************** கவிதைகள் எழுதத் தெரியுமா என்று கேட்டார்கள் நான் தெரியாது என்றேன். அப்ப என்ன தெரியுமென்று கேட்டார்கள…
-
- 5 replies
- 1.3k views
-
-
கல்மடுக்குளத்தில் காத்திருந்த கண்ணீர் கண்களிலே அடக்கி வைத்த தமிழனின் கண்ணீர் கல்மடுக் குளமாய் உடைந்து ஓடுகிறது. குண்டு மழை கிழித்த உயிர்களின் நெடுநாள் சாபமாய் இதய நெருப்பு அங்கே எரிமலையாய் எரிகிறது எம் தேசத்தைப் போல அதிர்ந்து போய் உலகத் தெருக்களில் நமது வாழ்க்கையும் நடக்கிறது அடி வயிறு வெடிக்க ஐயோ என்று கத்தும் தாய் ஐந்து வயதுப் பிள்ளையை துண்டு துண்டாய் தேடுகிறாள் விலங்குகளின் கைகளில் வில்லான ஏவுகணை எல்லா நாடுகளின் ஒப்பந்தமாய் பொழிகிறது முந்நூறு தமிழர் பலி பலநூறு பேர் படுகாயம் பாதுகாப்பு வலயத்தை பீரங்கி கேலி செய்கிறது. புதுக்குடியிருப்பின் புன்னகை சுதந்திரபுரச் சந்தியில் உடையார் கட்டாகி வல்லிபுன…
-
- 0 replies
- 1.3k views
-
-
அதிகம் யாரையும் வெறுக்காதீர்கள் அது எதிரிகளை அதிகம் உருவாக்கிவிடும் யாரையும் அதிகம் நேசிக்காதீர்கள் அது ஏமாற்றத்தை கொடுத்துவிடும்...
-
- 4 replies
- 1.3k views
-
-
கோகிலத்து பசுக்களெல்லாம் கோபாலன் குரலைக்கேட்டு ..... இந்த பாடல் தேவையாகவுள்ளது. கடைகளில் அலைந்தும் கிடைக்கமாட்டேன்கிறது... யாராவது உதவிசெய்ய முடியுமா????
-
- 3 replies
- 1.3k views
-
-
மே 18க்கு……! அழைத்தாலா வருவாய்? யார் யாரை அழைப்பது? அழைத்தாலா வருவாய் யார் யாரை அழைப்பது அறியத் தருவாயா ஊரூராய் பிணக்காடாய் உன் உறவும் பிணமாக போனதந்த நாளினிலே எதுவும் கேட்காதே புறப்பட்டு வாவென்று சொல்ல வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! வெற்றியிலே பங்கேற்று வீரமுடன் வீறுகொண்டாய் வீழ்ச்சியிலே யாரென்று விலகி நிற்பதென்ன காலத்தின் நகர்வுகளோ காட்சிகளாய் விரிகிறது அன்னை மண்ணிருந்து அழகாய் வளர்ந்தவனே உன்னை உருவாக்கி உலகில் வாழவைத்த அன்னை மண்பட்ட அவலம் உரைப்பதற்கு அழைப்பு உனக்கெதற்கு அழைப்பு வேண்டுமெனில் வினாவொன்று இருக்கிறது நீ தமிழனா! நீ தமிழனா இல்லை மனிதனா மனிதம…
-
- 4 replies
- 1.3k views
-
-
2003 ம் ஆண்டு மாவீரர் நினைவாக வடித்த கண்ணீர் இன்றும் கார்த்திகை மாதத்து ஓளிக்கீற்றுக்கள் உலகெல்லாம் ஒரு தரம் எம் தேசம் நோக்கும் அற்புத நாள் தமிழீழ தீபம் அணையாமல் எரிந்திட தம்மை அழித்து அத்தீபத்தை ஏற்றிய உத்தம புருசர்களின் உன்னத நினைவுநாள் அடக்கி அடக்கியே சிங்களம் எம்மை அடிமைகளாக்கியபோது விலங்குடைத்து எம்மினத்தை விடுதலையாக்கிய வீரப்புருசர்களின் நினைவுநாள் சிங்களச் சீற்றர்களின் உறக்கம் கலைத்த உன்னத புருசர்களின் உத்தம நாள் புதியதோர் பரணி படைத்த புலித்தெய்வங்களின் நினைவு நாள் சுயத்தை தொலைத்து பொது நலத்தை நாடிய புண்ணிசீலர்கள் மக்களிற்காகவும் தாய் மண்ணிற்காகவும் விதையாகி எம்முள்ளே நினைவாகி நிலையான…
-
- 6 replies
- 1.3k views
-
-
சுழிகுளம் சுழிகுளம் என்ற சித்திரகவி செய்யுளின் எழுத்து எண்ணிச் செய்யப் பெறுவதாகும். இதில் இடம் பெறும் செய்யுள் நான்கு அடிகளைக் கொண்டிருக்க வேண்டும். ஒவ்வோர் அடியும் எட்டு எழுத்துகளையே பெற்றிருக்க வேண்டும். இவ்வெட்டு எழுத்துகளும் மேலும் கீழும், உள்ளும் புறமுமாக ஒத்தமைய வேண்டும். “கவிமுதி யார் பாவே விலையரு மாநற்பா முயல்வ துறுநர் திருவழிந்து மாயா” பொருள் : வயது முதிர்ந்த கவிஞர்களால் பாடப்படும் பாடல்கள் விலைமதிப்பிட முடியாத அளவிற்குப் பெருமையுடையனவாகும். அப்பாடலைப் பெற விடாது முயற்சி செய்ய வேண்டும். அப்படி முயற்சி செய்து ஒருவர் பெற்ற பாடல் அழியாத செல்வமாகும் . நன்றி : முகனூல்
-
- 7 replies
- 1.3k views
-
-
கடலால் பிரிந்த தேசத்திலிருந்து - கண்ணீரின் பெயரால் சிதறினோம்........... கடலால் பிரிந்த கண்டத்துள்ளிருந்து........ ....... முடிந்ததெல்லாம் - முடித்துவிட்டு........... முடிந்தது கடமையென்றே ........... முற்றாய் விழி மூடினீரோ? காரிருள் .......... படகுப் பயணம்.............. கஸ்டப்பட்டு கரை நெருங்க துடுப்பு வலித்தோம்- கிட்ட வருகையில்......... துறைமுகமாய் - இருந்த நீர் ........ தொலைந்துபோனது - ஏன் தானோ? உம்மை அறிந்ததில்லை ......... உம் குரல் கேட்டதில்லை........ சுவாசமாய் - ஏதோ ஓரிடத்தில்............ எமக்காய் இருந்தீர்! அப்போ நன்றி சொன்னதில்லை ..... இப்போ சொல்கிறோம்.............! காற்றுக்கு உடனே நன்றி சொல்லி .…
-
- 5 replies
- 1.3k views
-
-
என் சோம்பேறி மனசு செய்த வீரமான செயல் உன்னைக் கண்டதும் ஓடிப்போய் உன்னைத் தொட்டுவிட்டு திரும்பி வராததுதான் * கையசைத்துவிட்டு கல்லூரிக்குள் நுழைந்து விடுகிறாய் நீ விடை பெற்றுப் போகும் கடைசி நாள் மாணவன் போல் வீடு செல்ல மனமில்லாமல் நான் * நம் காதலுக்கு முதல் எதிரி நேரம்தான் பார் நாம் சேர்ந்திருக்கும் போது மட்டும்தான் போட்டி போட்டு ஓடுகிறது * உன்னைக் காதலிக்க வேண்டாம் என்பவர்களை கூட்டி வா ஒரு நிமிடம் நீ இல்லாத என்னை கொடுத்துப் பார்ப்போம் சமாளிக்க முடிந்தால் சமாதானம் பேசுவோம் * என் கைகளுக்கு இதுவும் தேவை இன்னும் தேவை என்னை எதுவும் கேக்காமலே உன்னை அணைத்து பழகி…
-
- 4 replies
- 1.3k views
-
-
நான் கேட்டுத் தூங்கிய ஆராரிரோ பாட்டில், பாதிப் பாட்டை பாடி முடித்த... பாசத்தின் உருவம் அவர்! சரியெது பிழையெது எதுவும் தெரியாத பருவம், அம்மாவைத் தாண்டினாலும்..... என் அப்பாதான் எல்லை! கண்டிப்பும் தண்டிப்பும் இருந்தாலும், அன்பு அத்தனைக்கும் உறைவிடம் அங்கேதான்! அப்பாவின் கைபிடித்து நடைபயின்ற நேரங்களும், கல்லூரிவரை கவனித்த காலங்களும், இன்றுவரை கண்முன் காட்சிகளாய்... காலத்தால் அழியாத பாசங்களின் சாட்சிகள்! உயிரைக் கொடுத்து உருவாக்கி... தன் உயிரைக் கொடுத்தும் தன் உயிராய் எனை நினைத்து வளர்த்த... என் தெய்வத்துக்கு, என்ன கடன் பட்டேனோ? என்ன தவம் செய்வேனோ?? நாளைக்கு.... நானும் ஒரு அப்பா!!!
-
- 5 replies
- 1.3k views
-
-
மாவீரர் புகழ் பாட தீபம் ஏந்தி செல்வோம் , மலரோடு ,நம் கண்ணீர் மழையாக சொரியும் உடலோடு உயிரும் ,விதையாக் தந்தீர் உயிர் உள்ள வரையும் மறவோமே நாளும் மகன் இல்லா,அன்னை,மகள் இல்லா அன்னை உறவற்ற ஊரார் உயிரற்ற மனைவி ,தன்னை விழி திறந்து பாரீர் ,முடிவு தான் இல்லை வழி ஒன்று பிறக்கும் ,நம் தலைவன் நோக்கில் மாவீரம் ஒரு போதும் ,மறையாது மறையாது தாய் மண்ணின் புதல்வர் ,தம் கடன் முடித்து ஓய்வில்லா உறக்கம் ,கொள்ளுவீர் அங்கு தாய் மண் என்றும் மறவாது சத்தியம் ............... ,
-
- 3 replies
- 1.3k views
-
-
-
'' போரை தொடங்கும் புலிகள்..'' உள்நுழைந்து உளவெடுத்து ஊந்துகணை தாக்குது பகையரனின் காவலரன் பலிகளமாயாகுது..... முன்னேற வந்த பகை முதுகுடைந்து சாயுது கண்ணு முன்னே தளபதிகள் களப்பலிகள் ஆகுது... எங்கள் புலி வீரமின்று ஏறியங்கு ஆடுது உலகத் தமிலெல் லாமின்று கை கொட்டி பாடுது.... வானமேறி வந்த பகை வானமது காவுது பாதி வழி போகுமுன்னே படை உயிர்கள் போகுது... நான்கு முனை திறந்தடிக்க நம்ம படை கூடுது வேண்டி கட்டி வந்தபடை வெளியேற போகுது... பரிட்சாத்த தாக்குதல்கள் பரவலாக நடக்குது பறையடித்து புலிகளணி போரை தொடுக்க போகுது....! ' -வன்னி மைந்தன் -
-
- 2 replies
- 1.3k views
-
-
மாய உலகமிது எதுவும் உண்மையில்லை - நம்பாதே எதையும் நம்பாதே யாரையும் நம்பாதே எல்லாம் பொய் யாரையும் எதையும் உன்னால் மாற்ற இயலாது மாற்றவும் வேண்டாம் யாருக்காகவும் நீ மாறாதே ! நீ நீயாகவே வாழ் - முழுமையாக உண்மையாக ! உறுதியாக ! நீயாக மாறிவிடு..... உன்னைத்தேடு கண்டுப்பிடி நீ யார் என்றறி நீ உன்னை அறிந்தால் இவ்வுலகமே உன்னை அறியும்...
-
- 0 replies
- 1.3k views
-
-
புதுமைகள் ஏந்திய, புதிய ஆண்டொன்று பிறக்கட்டும்! பூக்கள் மலர்வது போல! புதுமையாக! பூக்கள் மரங்களில் இருக்கட்டும், பிடுங்கி எடுத்து மாலைகளாக்க வேண்டாம்! சர வெடிகள் இல்லாமல், சாதாரணமாக மலரட்டும்! வெடிச்சத்தம் கேட்டாலே, வேதனை கலந்த நினைவுகளே, வெடித்துக் கிளம்புகின்றன! புத்தம் புதுச் சேலைகளும், பட்டு வேட்டி சால்வைகளும், தொட்டுப் பார்க்க நேரமின்றித், தம் பாட்டில் தூங்குகின்றன! சீர் கொடுத்த நகைகள் கூடச், சேரிடம் தெரியாது, வருடக் கணக்காக, வங்கிப் பெட்டிகளில், வருகின்ற தலைமுறை பார்த்து, ஆறுதலாகத் தூங்குகையில், இன்னும் நகை எதற்கு? கஷ்டமென்று வரும்போது, கை கொடுக்க என்கிறோம்! இதுவரை, இல்லாத கஷ்டமா, இனிவரப் போகின்றது? …
-
- 9 replies
- 1.3k views
-
-
மலர்போல் வந்து ....முள்ளாய் போன காதலும் உண்டு....!!!முள்போல் வந்து ....மலராய் மலர்ந்த ...காதலும் உண்டு....!!!காதலை காதலால் ...காதல் செய்தால் ...முள்ளும் ஒருநாள் ...மலராகும் ....!!!^முள்ளும் ஒரு நாள் மலரும் காதல் கவிதை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 1.3k views
-
-
பூக்கள் எப்படி அது நடக்கப் போயிற்று ஒரு மாதத்திற்கு முன்வரை எங்களுக்குள்ளே உறவு முறை சுமுகமாய் இருந்தது ஒன்று சேர்ந்து அருகருகே உட்காரும் குருவிகளாய் ஒருவொருக்கொருவர் மிகவும் பணிந்து போய் ரொம்பவும் நேசத்துடனே இப்போது நினைக்கவே என்னவோபோல இருக்கிறது இருவருக்குமுள்ள தூரம் நீண்டு போய் பார்த்துக்கொள்ளவே மனசைக் கொண்டு வர முடிவதில்லை அப்படியே பார்த்துக் கொண்டாலும் பேசுவதற்கு ஒன்றுமேயில்லாமல் வேற்று மனிதர்களாய் முகங்கள் குரங்குகளாய் மாற அடையாளங்கள் மறந்துபோக கோபம் மட்டும் இந்த சமயத்தில் வரவே கூடாது கோபம் பழைய கணக்குகளைப் போடும் போன மாதம் நான் என்ன பேசினேன் அதற்கு முன்மாதம் அங்கே என்ன நடந்தது குழப்பம் அதிகமாகிக் கதவு தானே மூடிக்கொள்ளும் …
-
- 4 replies
- 1.3k views
-
-
அவள் பெயர் அஞ்சு சின்னஞ்சிறு பிஞ்சு வசந்த்தின் இசையில் சுஜீத் மற்றும் ஸ்ரெபியா டன்ஜா ஆகியோரின் குரலில் வெளிவந்திருக்கும் இந்தப்பாடலை எழுதியவரும் சுஜீத் தான். சந்தூரின் உதவியுடன் லண்டினில் ஒலிப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது இந்தப்பாடல். சுஜீத்தின் சிங்கிள் என்ற அல்பத்தில் இடம்பெற்ற பாடல்களை நீங்கள் ஏற்கனவே சயந்தன் அண்ணாவின் சுஜீத்திடுனான நேர்காணலின் மூலம் அறிந்திருப்பீர்கள்.இன்று கூட வசந்தன் அண்ணா சுஜீத்தின் அடுத்த அல்பத்தில் இடம்பெறுகின்ற "விடுதலை" என்ற பாடலின் ஒளிப்பதிவை வசந்தம் வலைப்பதிவில் பதிவிட்டுள்ளார். ஒருதடவை பார்த்தபோதே "இது கதையல்ல நியம்" என்ற இந்தப்பாடல்என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.பாடலைப் பார்க்கும்போது மலேசியத்திரைப்படமான "ஆண்டாள்" கண்முன்னே …
-
- 7 replies
- 1.3k views
-
-
-
மனிதம் மறந்த தேசத்தில் மன வக்கிரம் கொண்டவனின் கண்களில் பட்ட குழந்தைகள் குதறி சாகடிக்க படுகின்றன மனிதம் மறந்த தேசத்தில் அவன் வீட்டு ஜன்னலுக்கு அழகான திரைச்சீலை அகதியின் குழந்தை அம்மணமாய் புழுதியில்
-
- 10 replies
- 1.3k views
-
-
வரமான பூச்சரங்கள் அள்ள அள்ளக் குறையாத அன்புமனம் உனக்கு மட்டும் யார் தந்தது? அதனால் அம்மா நீ மட்டும் அதிசயமானவள் அன்புச் சுரபியை அமுதசுரபியாக இறைவன் இலவசமாக உன் அகத்தில் அர்ப்பணித்து விட்டானா? ஆயிரம் தடவைகள் உன் பெயரை என்அதரங்கள் உச்சரித்தாலும் அலுக்காத ஒருவார்த்தை அகிலத்தில் உண்டென்றால் அது அம்மா என்னும் அமுத மொழிதான் வசை பாடும் இதயங்களையும் வாழ்த்தும்படி உனக்கு வரமளித்தவர் யாரம்மா? உன் கண்களுக்குள் கருணையையும் மனதுக்குள் மென்மையையும் தந்த இறைவன் கோபத்தை மட்டும் குத்தகை எடுத்துக் கொண்டானோ? உன் கண்டிப்பில் கலையாத நாம் உன் கண்ணீரில் கரைந்து போவது நிஜம் நீ ஒரு தேவதை உன் தேன்மோழியோ வான்மழை என் மழலைகளுக்கு நான் அம்மா இருந்தும…
-
- 3 replies
- 1.3k views
-
-
Print this Page கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப்படம், திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (காலச்சுவடு 2008), ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ (உயிர்மை 2009), ‘பாழ் நகரத்தின் பொழுது’ (காலச்சுவடு 2010) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகிறார் (deebam.blogspot.com). தற்போது யாழ் பல்கலைக்கழக ஊடக நிலையத்தி…
-
- 5 replies
- 1.3k views
-
-
உலகமே அஞ்சும்.... ஏடெடுத்து கவியெழுத எழுகவடி பெண்ணே- நீ அடிமையில்லை யென்றுரைக்க அகிலம் எழு பெண்ணே... தீயோடு சண்டையிட்டாய் திரூதடி பெண்ணே- நீ தீயாகி எழுந்து பாரில் தீயை வை பெண்ணே.. செக்கிழுத்த மாடாகி-சமையல் செக்கிழுத்தாய் போதுமடி புதிய உலக விதிமுறையில் புரட்சி பெண்ணாய் எழுகவடி ... பிரசவத்து இயந்திரமாய் பரிதவித்தாய் போதும்- இந்த பீத்தலிற்கு தையலிட்டு- கணை பிரிதிவியாய் பாயடி.. அடக்கு முறை உனக்கு இனி அகிலமதில் இல்லையடி- நீ அகல விழி திறந்தெழுந்தால் அவையே உனக்கு அஞ்சுமடி... விழுந்தழுதாய் போதுமடி வெகுண்டே இன்று எழுகவடி எழுந்து விட்டால் போதுமடி ஏழ் உலகும் அஞ்சுமடி..! வன்னி மைந்தன்.////…
-
- 2 replies
- 1.3k views
-
-
வன்னிக் குழந்தைகளின் கதறல்கள்..... பாகம் - 2 கவிதை..... எம் நினைவு தெரிந்த நாள் முதலாய் நாம் அறிந்ததெல்லாம் அப்பாவும் அம்மாவும்..... அதன் பின்னர் உடன் பிறந்தோர்.... அதன் பின்னர் அதிகமாய் அறிந்ததெல்லாம் பல்குழல் எறிகனையின் நெஞ்சை பிளந்துவிடும் அதன் சத்தங்கள்..... விமானச் சத்தம் கேட்டால் அம்மாவின் சொல்கேட்டு ஓடிடுவோம் குழிகளுக்குள்.... காலையில் பள்ளிபோய் மாலையில் வரும் வயதில் பள்ளத்திலே எம் வாழ்க்கை பல ஆண்டாய் செல்கிறது....... பசியென்று சொல்லிச் சொல்லி எங்கள் வயிறேதும் நிரம்பவில்லை..... பசியெனும் சொல்லுமட்டும் பாடப் புத்தகத்தை நிரப்பியது.... எங்களுக்கோ படுக்கையும் மறந்து போச்சு பாம்ப…
-
- 4 replies
- 1.3k views
-
-
கார்த்திகைத் தீபங்கள். (ஹைக்கூக்கள் 26) வீரத்தின் விழுதுகள் வித்தான முத்துக்கள் விழிக்கும் காந்தள் கார்த்திகையில் உறவாக அழுகையிலும் உணர்வாக எழுகின்றது உங்கள் ஈகம் வாழ்வை தந்தவர்கள் வரலாற்று நாயகர்கள் வருகின்றனர் வழியில் மலர்கின்றது காந்தள் இடிக்கப்பட்டு இயல்புநிலை மாற்றப்பட்டது இடியாமல் 'இன்னும்' பசுமையாய் இன்றும் மனங்களில் மாவீரர்கள் நஞ்சு மாலை சுமந்தவருக்கு மாலையிட்டு மலர்தூவுகின்றோம் - கார்த்திகையில் நெஞ்சில் அவரைச் சுமந்து. துயிலுமில்ல தூயவர்க்காய் துரிதமாக துளிர்க்கிறது தூயதாய்க் கார்த்திகை பூ கனக்கின்ற இதயங்கள் இதமாக பூக்கின்றது கார்த்திகையில் காந்தள் உறங்கும் உறுதிகள் உணர்சிகளின் உண்மை வடிவம் …
-
- 5 replies
- 1.3k views
-