கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கில்லாடி நாடு கெட்டுப் போனாலும் நமக்கென்ன என்றே தன் வீடு மட்டும் வாழ விதிவகுத்த கில்லாடி தொண்ணூறைத் தாண்டி தொண்டு கிழமானாலும் மண்ணாசை மாறாதெம் வாழ்வழிக்கும் கில்லாடி ஈழத்தமிழர்களை இனக்கொலைக்கு ஆளாக்கி வாழத்தன் சொந்தம், வழிவகுத்த கில்லாடி. மந்திரிகளாக்க மகள் மகன்மார் பேரர்களை செந்தமிழ் ஈழத்தைச் சிதைத்திட்ட கில்லாடி ஐயா வருவார் அரவணைப்பார் என்றிருக்க பொய்யாயுண்ணாவிரதப் புரளி செய்த கில்லாடி
-
- 4 replies
- 2.3k views
-
-
தன் தந்தையை நேசிக்கும் எல்லோருக்கும்...!!! இந்த கவிதை...!!! சமர்ப்பணம்..!!! அப்பா...! " நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..." என் முதல் கதாநாயகன்.. நீங்கள் தான் அப்பா..! தலைகனத்தில் நான் ஆடும் போது குட்டு வைத்தது நீங்கள், தடுமாறி நான் விழுந்த போது தூக்கி நிறுத்தியதும் நீங்கள் அப்பா..! உங்கள் உயிரே என் மீது வைத்து இருந்தும், ஒரு சிறு இடைவெளியில்தான் நம் பந்தத்தை நீங்கள் வைத்து இருந்தீர்கள், அந்த இடைவெளிதான் உங்கள் பாசத்தை உணர வைத்தது எனக்கு, கம்பீர பார்வை, நேர் படும் பேச்சு, அஞ்சா நெஞ்சம், சில சமயம் ரௌத்திர குணம் இருந்தாலும் உங்கள் மனம் என்றும…
-
- 4 replies
- 875 views
-
-
தாயகவிடுதலைக்கனவோடு சிட்டென்று பெயர் கொண்டு… சிட்டாய்ப் பறந்தன்று திரிந்தவன்! சட்டென்று போனானே… சிறகு முளைக்கும் முன்னால்! பாடல்கள் பல தந்து நின்றவன் – மண்ணின் தேவைகள் சில முந்த… தன் காதலையும் தேடலையும், தனியாக ராகம் பாட விட்டவன், தான் காதலித்த மண்ணுக்காய்… சிட்டாய்ப் பறந்து போனானே பாடலோடு! வந்த பகை நின்று முறிக்க, இடையிடை புகுந்தவன்… தன் வாழ்வினை விடை கொடுத்து… வந்தானே பாடையோடு! நீ தந்த ராகங்களும் பாடல்களும்… சிறுநாக்காய்…. எம் தொண்டைக் குழியில் இன்னும், அவ்வப்போது அலறி இசைக்கும்! – ஆனால் உன்னினிமை ராகம் கேட்க... நீ வரணும் மீண்டும் சிட்டாய்! உறுதியாய் ஒன்றுமட்டும்…. எம் தாகம் தீரும்வரை… உன் ராகம் ஓயாது! உன் ராகமும் தாளமும் இன்ற…
-
- 4 replies
- 811 views
-
-
உலகம் ஏன் இன்னும் காணவில்லை...????????????? போர்க்கோலம் புண்டிருக்கும் ஈழம் பாரடா.... அந்த போருக்குள்ளே வாழும் தமிழர் பாவம் தானடா..... சிறகுடைந்த பறைiவாயகி இன்று ஏனடா....?? அந்த சிறைதனிலே வாழும் நிலை சோகம் தானடா..... பசியோடு பட்டினியில் பாவம் அவரடா.... அந்த பாலகரின் நிலையதுவோ சோகம் காணடா.... அந்த பால் பட்ட பகையால் எங்கும் ஓலம் தானடா.... கண்ணீரோடு எம் மக்கள் அங்கு பாரடா... இதை காணவில்லை உலகமின்னும் ஏனோ கேளடா....??? -வன்னி மைந்தன்- :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?: :?:
-
- 4 replies
- 1k views
-
-
என் தொண்டைக்குழியில் இறங்க மறுக்கும் சோறு - எனக்கு தூக்குக் கயிற்றை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றது! நீதி தேவதையின் கண்களை... இப்பொழுதாவது, திறந்து விடுங்களேன்!!!! இல்லையெனில், மூவரோடு நால்வராய்... அவளையும் சேர்த்துத் தூக்கில் போடுங்கள்! அன்று, கண்ணகியின் கோபம் மதுரையை எரித்ததாம்!? இன்னும் நம்புகின்றோம்...!!! அது உண்மையோ... இல்லையோ....!!!??? நிச்சயமாக மீண்டும் எரிக்கும்!!! நீதியின் கூக்குரலும்... அழுகுரலும்!!!
-
- 4 replies
- 1.2k views
-
-
கவிப்பயணம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 4 replies
- 2k views
-
-
ஆதிக்குடி எங்கள் அழகான தமிழரென அகிலத்தில் வாழ்ந்திருந்தோம் - இன்று நீதிக்குப் போராடும் நிலை ஒன்று வந்ததால் நிம்மதி தனை இழந்தோம் சாதித்த புகழதும் சரித்திர வாழ்வதும் சந்ததி தான் கண்டது - நாங்கள் போதித்த பொறுமையால் புகலிடம் பறிபோக புவிதனில் அகதியானோம் வந்தேறு குடியான சிங்களர் வாழவே வகையாக வாழ்வளித்தோம் - அவர் சொந்தமாய் எம்மண்ணைச் சுரண்டியது தெரியாது சுயமாக நாம் இருந்தோம் ஆதிக்க வெறிகொண்ட அந்த ஒரு நிலையதில் அடங்கியே தான் போவதோ சாதி;க்கப் பிறந்திட்ட சந்ததி என்பதை சரித்திரம் மறந்து போமோ எரிமலையாகவே மறவர்கள் கூட்டமது எதிரியைக் களமாடுவார் - அவர் எரிநெருப்பாகவே பொங்கிடும் தீயினில் எதிர்காலம் தனை வெல்லுவார் தென்னை பனையோடு தேமாங்கனி என்று தேனாறு பாய்ந்த எங்க…
-
- 4 replies
- 972 views
-
-
தென்னாபிரிக்காவின் சேரிக் குடிசைகளின், கறள் படிந்த கூரைத் தகரங்களின் கீழும், சூரிய ஒளி நுழைய இயலாத, செம்மண் குடிசைகளின் இருட்டுக்களிலும், பெரு வீதிகள் குவிகின்ற, கூடார வளைவுகளின் கீழ்த்தளங்களிலும், தினமும் பசித்திருக்கின்ற, மனிதர்களின் வெற்று வயிறுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! ரொபின் தீவின் கரை தொடுகின்ற, கடலலைகள் எழுப்பும் அழுகுரலிலும், சுண்ணாம்புக் கற்களில் சம்மட்டிகள், செதுக்கிய துவாரங்களில் புகுந்து, வெளியில் வருகின்ற அனல்காற்று, எழுப்புகின்ற அவலம் கலந்த ஓசையிலும், ஆருமற்று அனாதைகளாய் இறந்து. புதைந்து போன சிறைக் கைதிகளின், உக்கிப்போன எலும்புக்கூடுகளிலும், உனது நினைவுகள் வாழ்ந்திருக்கும்! காவலர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி, கடல் வெளிக…
-
- 4 replies
- 669 views
-
-
நாளை நான் உயிரோடு இருப்பேனா ஈழத்தில் நண்பனின் இறந்தவிட்டில் இன்று நான் * அம்மா அங்கே அம்மாக்காக அகதியாய் இங்கே நான் * காணாமல் போனால் கண்டுபிடித்து தருவார்கள் பிணமாக * தினமும் இறப்பவர்களின் பட்டியலில் சேரதவர்கள் சுனாமியால் இறந்த ஈழத்தமிழர்கள் * வகுப்பறையில் மகள் படிக்காட்டியும் உயிரோடு திரும்ப வேண்டும் சாமியறையில் தாய் * நான் இறந்தால் கொள்ளிவைக்க வந்துவிடாதே நான் பெற்றதில் உன்னை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது * அம்மாவோடு ஆசையாய் பேச தொலைபேசி எடுத்தால் அம்மா கவலையாய் பேசுவதை கேக்கவே நேரம் முடிந்துடும் * என் தாயை நான் பார்த்தே இருபது வருசமாச்சு எப்படி சொல்ல…
-
- 4 replies
- 1.3k views
-
-
கவிதையின் அரசே! வாழீ! துள்ளிடும் வாலிபத்தால் துணையற்று வெண்நரையும், வில்லிடும் நாவளத்தால் வேதனை செய்விதியும், கள்ளிடும் கவின்பாவால் காணாமல் போகட்டுமென தள்ளி நிலம் வாழுகின்ற தமிழ்ச் சின்னவளின் வாழ்த்து இது. இருவயது மழலையாக இதயத்தில் உலவு கவியே! அறுபது அகவையய்யா அகத்திலே பதியவில்லை. ஆண்ட நின் புலமைகென்றால் ஆயிரம் அகவை தாண்டும். பூண்ட மண்கோலத்திற்குள் புதிர் கூடி நிற்குதய்யா! தீரப் பெருங்கவியே! தீராத மாவரம் தந்த துரோணக்குருவே! ஏறுபோல் நிமிர்ந்த எழுத்தின் வீரியமே! கண்ணூறு படுமய்யா! கரிநாச் சொல்லிது. காலடி மண்ணெடுத்துக் கற்பூரச் சுடரிலே போட்டிடுக! கூர்வடிவேலை ஆளும் சுந்தரப் பேச்சும், வேரடி வீரம் …
-
- 4 replies
- 1.4k views
-
-
கார்த்திகையின் தீபங்கள்...... மாவீரர்களின் நினைவுக்காய்..... தமிழினத்தின் கண்ணீரை உங்கள் உதிரத்தால் கழுவிவிட்டு எங்கள் கண்களெல்லாம் மழையாக்கி கவலையற்று உறங்குகிறீர்... கார்த்திகையில் ஓர் நாள் ஆம்..! இருபத்தியேழாம் நாள் தமிழினத்தின் கவலை நீக்க உயிரையே அர்ப்பணித்த எம் மண்ணின் காவியங்கள் உங்களை நாம் வணங்கிடும் நாள்..... எம் மண்ணில் ஒளிகொடுக்க தம் உயிரையே மெழுகாக்கி உருகிவிட்ட ஈழத்தின் வேங்கைகளை எழுச்சியுடன் நினைத்திடும் நாள்.... மாவீரர் நீங்களெல்லாம் நம் மனமெல்லாம் நிறைந்திடுவீர்..... ஈழத்தின் நிலங்களிலே கார்த்திகைப் பூக்களாய் மலர்ந்திடுவீர்..... எதிரியின் படையெடுப்பை இயற்கையாய் நின்று எதிர்த்திடுவீர்..... ம…
-
- 4 replies
- 1.4k views
-
-
ஊரை உறங்க செய்து நாய்களுக்கு தெரியாமல் நடந்து வெள்ளி பார்த்து திசை பிடித்து அவன் எல்லையை தொடும்போது ஆந்தைகள் முழித்து இருக்கும் அவன் மட்டும் விடிகாலை பொழுதில் குறக்கண்ணில் தூங்கி விழித்து இருக்க அவன் கால் அருகில் அரவம்போல் நகர்ந்து அவனை கடந்து போகும்போது உள்ளம் மகிழ்ந்து இருக்கும் உள்ளுக்குள் உள்ளே வந்துவிட்டோம் என இறுமாந்து நிமிர்ந்து நடந்து போகையில் எதிரே ஒரு கேள்வி வரும் யாரு நீ எங்க போறா .....பதில் யோசிக்க முன் சுடும் விசை கீழ் நோக்கி போகும் அதன் டிக் ஒலி அவன் காதிலும் விழும் இருவருக்குள்ளும் ஒரு நொடி மவுனம் பேசும் அத்துடன் கலைக்கப்படும் சொன்ன இடத்துக்கு வந்து சேர் என உரக்க கூறி விட்டு வலம் இடமா பாய்ந்து வேட்டுக்களை தீர்த்து எம்மை காப்பற்ற…
-
- 4 replies
- 696 views
-
-
நாங்க தமிழர்! நாங்க கனடா. ஆனால் மற்ற தமிழர்கள் கனடா வர வேண்டாம் என்று சொல்லுவம். நாங்க தமிழர்! கனடாவில் வேலை இல்லை என்று செல்லுவம். ஆனால் இரண்டு வேலையும் நல்ல சம்பளத்தோட நல்ல வேலை செய்வம். நாங்க தமிழர்! கனடாவில் கஸ்ரம் என்று சொல்லுவம். ஆனால் இரண்டு வீடு வைத்திருப்பம். இரண்டு மில்லியன் dollars மேல் சொத்து வைத்திருப்பம். நாங்க தமிழர்! குளிர் வராதேங்கோ எண்டுவம். நாடு போனா வெக்க தாங்க மாட்டம் என்று படம் காட்டுவம். நாங்க தமிழர்! என்னோட பிள்ளை கனடாவில் என்று பெருமை பீத்துவம். ஆனால் பக்கத்து வீட்டு காறன் போறான் என்றால் வயிறு கூட ஒரு நிலைக்கு வர முடியாம தவிப்பம். நாங்க தமிழர்! எங்கட…
-
- 4 replies
- 717 views
-
-
ஒரு நாளில் நாலில் ஒரு பங்கை நான் ஒவ்வொரு நாளும் கணணிக்கு படையல் செய்கிறேன் பதிலுக்கு கணணி பாடல்களையும் பல்சுவைத்தகவல்களையும் பரந்துபட்ட செய்திகளையும் பரிசளிக்கின்றது. என்னவென்று சொல்ல ஜங்கரனின் அருளை! பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் அளித்த ஒளவையாருக்கு ஆனை வடிவில்! எனக்கு எலி உருவில்.!!
-
- 4 replies
- 1.6k views
-
-
என் தோளில் சாய்ந்து சிரிப்பாள், என் நெஞ்சில் முகம் புதைத்து அழுவாள், பலமுறை அவளைச் சுமந்திருக்கிறேன்! அப்பொழுதெல்லாம் சுமையாகத் தெரியாதாவள்... இப்பொழுது தன் நினைவுகளாலேயே பாரமாக்குகிறாள்! கனத்துத் தொங்கும் என் இதயம்... அறுந்துவிழத் துடிக்கிறது...! என் இதயத் துடிப்புகளின் கடைசி ஏக்கங்கள்கூட... அவளுக்குத் தெரியாமலே அடங்கிப் போகலாம்! ஊசலாடிக்கொண்டிருக்கும் என்னுயிரின் வலிகள், ஊஞ்சலாடி மகிழும் அந்த தேவதைக்கு... தெரியாமலேயே போகட்டும்! ஆடி முடிந்து வரும்போது... எல்லாமே அடங்கிப் போயிருக்கும்! பல காதல்களின் சரித்திரங்களைப் போலவே... என் காதலின் ஆத்மாவும்... கல்லறைக்குள்ளேயே முடங்கட்டும்!
-
- 4 replies
- 659 views
-
-
போய் வருக கண்ணீரோடு பிரார்த்திக்கிறோம். நீயில்லாது போய் இன்று இரண்டு ஆண்டுகள் முடிந்து போகிறது. எல்லாமுமாய் நீ வாழ்ந்த எங்கள் தேசத்திலொரு நினைவுக்கல் நாட்டியுன்னை நினைவு கூரவோ நெஞ்சழுத்தும் துயர் கரைய ஊர்கூடி அழுது துயர் போக்கவோ யாதுமற்றுப் போன விதியை மட்டுமே நொந்து சாகும் விதி பெற்றோம். பிரகாசமாய் ஒரு பெயரும் எழிலாயொரு பெயரும் உனக்காய் அடையாளம் தரும் பெயர்கள் ஆயிரம் கதைகளும் அழியாத நினைவுகளும்....! அப்பா ஐரோப்பாவில் இருப்பதாய் நம்பும் உனது குழந்தைகள் அப்பாவைத் தங்களிடம் அனுப்புமாறு கேட்கிறார்கள். அயல் வீட்டுப் பிள்ளைகள் விளையாடும் செல்பேசியொன்றும் விளையாட்டுக்களும் அப்பாவை அனுப்பச் சொல்லுமாறு கட்டளையிடுகின்றனர்.…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஜ“ரணிக்க முடியவில்லை; திரும்பத் திரும்ப ரணங்களின் ஜ“ரணம். நாங்கள் சாதாரணங்கள். எங்களுக்கு ஏன் சதா ரணங்கள்?
-
- 4 replies
- 1.3k views
-
-
உனை சுமப்பதையிட்டு கொண்ட பெருமிதத்தால்... உன் குதிரை கூட எனை நோக்கி... கடைக்கண்ணால்.... ஒரு நக்கல் பார்வை வீசிவிட்டு செல்கிறது....
-
- 4 replies
- 1.1k views
-
-
நாட்கள் பத்தும் நம்மைத் தாண்டியது [size=4]நாடி நரம்புகளும் ஓயத் தொடங்கியது[/size] [size=4]நாதியின்றி இதயம் மட்டும் இயங்கியது[/size] [size=4]துளித்துளியாய் உன் இரத்தம் அடங்கியது[/size] [size=4]நல்லூர் கந்தன் பவனி வந்த வீதியிலே [/size] [size=4]அலையாய் வந்த மக்கள் வெள்ளத்திலே[/size] [size=4]சிலையாகி நின்றேன் _ நான்[/size] [size=4]உனைப் பார்க்கையிலே [/size] [size=4]சிந்தியது கண்ணீர் வெள்ளம் [/size] [size=4]உருகியது உன்னருகில் மக்கள் வெள்ளம்[/size] [size=4]ஒலித்தது ஈழப்பாடல் ஒன்று[/size] [size=4]மரணித்த வீரா உன் ஆயுதத்தை எனக்கு தா[/size] [size=4]உன் ஆடையையும் எனக்கு தாவென்று[/size] [size=4]இன்றும் ஒலிக்கின்றது [/size] [size=4]உடல்[/size]…
-
- 4 replies
- 588 views
-
-
அவ்வளவு ஆசையா உனக்கு என் மீது கோவத்தில் நீ சட்டி பானையோடு சண்டைபிடித்தும் இவ்வளவு ருசியா சமைத்திருக்கிறாய் * அமாவாசை விரதத்தில் நீ "கா கா கா" என கரைந்து கொண்டு வெளியே வருகிறாய் உன்னைக் கண்டதும் காகங்கள் குழம்பிவிட்டது பெளர்ணமி விரதமோ என்று * இந்த மழை உடனே நின்றுவிடும் பார் எப்படித் தெரியும் நீதான் குடை விரித்துவிட்டாயே * என் கவிதை படிப்பவர்கள் எல்லாரும் என் காதலி கொடுத்து வைத்தவள் என்கிறார்கள் அதற்காகவாவது உன்னைக் காதலிக்க வேண்டும் எங்கே நீ... * என் கண்களுக்கு இமைக்க மட்டும்தான் தெரியும் உன் கண்களில் ஒன்றைக்கொடு உன்னை மாதிரியே உன்னை நான் இமைக்காது பார்க்க வேண்டும் -யாழ்_அகத்…
-
- 4 replies
- 1.2k views
-
-
-
எழில்மிகு அமெரிக்கா! - அரிமா இளங்கண்ணன் காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும் கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொடுக்கும் மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே மனங்கவரக் கதிரவனும் உறங்கப் போவான் காடுமரம் செடிகொடிகள் நிறைந்திருக்கும் கண்கவரும் மலர்க்கூட்டம் சிரிப்புதிர்க்கும் ஓடுகின்ற 'மிசிசிப்பி' ஆற்று நீரும் உடன் துணையாய் 'மிசெளாரியதும் வளம்கொடுக்கும் நாடியதிண் மீன்பிடிக்கச் செல்லு வோர்கள் நல்லபலன் கிடைத்ததெனக் களித்தி ருப்பர் ஆடுகின்ற சிறுவரெல்லாம் மாலைப் போதில் அமெரிக்கக் களங்களிலே மகிழ்ந்தி ருப்பர்! காலையிலே ஐந்தேகால் பரிதி தோன்றும் கடும்குளிரை விரட்டி நல்ல இதம்கொ டுக்கும் மாலையிலே ஒன்பதிலும் வெளிச்சம் தந்தே மனங்கவரக் கதிரவனும் உறங்கப் …
-
- 4 replies
- 1.2k views
-
-
நீயேன் எரித்தாய் மீனாட்ச்சி, உன் நிழலில் வாழும் மதுரையடி, . ஆடுகளம் திரைப்படத்திற்காக வெற்றிமாறனின் கேட்டுக்கொண்டதால் ஜி.வி.பிரகாஸ் இசையில் சினிமா பாடலொன்று எழுதினேன். . 2010 ஆரம்பமென நினைவு ஒருநாள் வெற்றிமாறனோடு ஜி.வி.பிரகாசின் கலையகம் சென்றபோது ஒரு சிறுவன் ’கீபோட்டை’ அற்புதமாக இசைத்துக்கொண்டிருந்தான். நான் அவரை ஜி.வி.பிரகாசின் மகனாக்கும் என நினைத்தேன். இவர்தான் ஜிவி.பிரகாஸ் என வெற்றிமாறன் அறிமுகப் படுத்தியபோது வியப்பாக இருந்தது. அவர் இனிமையான மனிதர். “என் வெண் நிலவே எரிக்காதே” என்ற பாடலை அவரது இசைக்கு எழுதினேன். இசைந்த சொற்களை இசைக்காக மாற்ற நேர்ந்தபோதெல்லாம் மனசு வலித்தது. அதனால் பின்னர் பாடல் எழுதுவதை மறந்துவிட்டேன். இப்ப மீண்டும் எழுதும்படி சொல்கிறார…
-
- 4 replies
- 1.5k views
-
-
உன் புன்னகை ஒரு பரவச தேசத்தின் பளிங்கு மாளிகை போல் பரிசுத்தமானது உன் புன்னகை. அது இரவை உடைக்கும் ஓர் மின்னல் கோடு போல தூய்மையானது தேவதைக் கனவுகளுடன் தூக்கத்தில் சிரிக்கும் ஓர் மழலைப் புன்னகையுடனும் ஒப்பிடலாம் உன் புன்னகையை. எனக்குள் கவிழ்ந்து வீழும் ஓர் பூக்கூடை போல சிதறுகிறது உன் சிரிப்பு. ஒரு மின்மினியை ரசிக்கும் இரவு நேர யாத்திரீகனாய் உன் புன்னகையை நேசிக்கிறேன். ஆதாமுக்கு ஆண்டவன் கொடுத்த சுவாசம் போல எனக்குள் சில்லிடுகிறது உன் புன்னகை. எனினும் உன் புன்னகை அழகென்று உன்னிடம் சொல்ல மட்டும் ஆயுள் கால தயக்கம் எனக்கு. நீ புன்னகைப்பதை நிறுத்தி விடுவாயோ …
-
- 4 replies
- 17.6k views
-
-
பெயரிடப்படாதது இதோபார் நாம் இப்போ கீழொதிங்கி நிற்கும் இம்மரத்தின் பெயரை நானறியேன் இலைகளிலிருந்து வழிந்தோடும் மழைத்துளிகள் மட்டுமே எனக்குப் பரிச்சயமானவை மழைத்துளிகளுக்குப் பெயரிடாமலே மனம் அவற்றுடன் பரிச்சயமடையவில்லையா வசந்தகாலப் பசுமையைத் தாங்கும் மரங்களின் பெயர்களை அறிந்திருந்த ஒரு காலமமிருந்தது கலவிக்கழைக்கப் பாட்டிசைக்கும் பறவைகளின் நாமங்களும் பரிச்சயமாகவிருந்தன இலையசையும் திசைகொண்டு காற்றிற்கு நாமமிடும் திறனிருந்தது அப்போ பூமி உருண்டையானதென அறிந்திருந்தபோதும் தட்டையான ஒரு நிலத்துண்டம் மாத்திரமே உணர்திறனுக்குள் அகப்பட்:டுக்கிடந்தது தட்டையான உலகம் அர்த்தமுள்ளதாக இருந்தது இதோபார் பின்னர் வலங்கள் பலவற்றைக் கடந்த…
-
- 4 replies
- 1.4k views
-