Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வெறுமையாய் த‌னிமைக்குள் சுழ‌ல்கின்ற‌ ப‌ய‌ண‌ம் அமைதிக்குள் தொலைந்துவிட‌ நினைக்கின்ற‌ ம‌ன‌ம் இவைக‌ளை இய‌ல்பாய் இணைக்கின்ற‌ கோடாய் நின் புன்ன‌கையின் சாய‌ல் நினைவுக‌ளில்-அன்னையே வாழ்க்கைப் பாதையில் வலிமிகும் பொழுதுகளில் ஏக்கங்கள் எழுந்து எரிக்கின்ற வேளைகளில் உணர்வுகள் உடைந்து உயிர்சுடும் கணங்களில் தாங்க முடியாமல் தவிக்கும் தருணங்களில் உணர்வற்ற ஜடமாய் வார்த்தைகள் வடிந்து வலியோடு வருமொரு முனகல் ’அம்ம்ம்மா’ மெல்ல வலிகுறைந்து கண்ணில் நீர் நிறைந்து ஏக்கப் பெருமூச்சொன்று எழுந்து அடங்கிவிட மீண்டும் முன்புபோல் முட்டி மோ…

  2. கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும் ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும் உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான் நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில் கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக

  3. இல்லை நான் உன்னை நேசிக்கின்றேன் இல்லை நான் அவனை நேசிக்கின்றேன் இல்லை எனக்கு வேண்டும் நீ என் உயிர் இல்லை என் உயிர் என்னிடம் இல்லை நீ என்றால் நானும் இப்பூமியில் இல்லை எனக்காக உன் வாழ்வை ஏன் இல்லை இது நம் வாழ்க்கை இல்லை முடிவாக என்னை விட்டு விடு இல்லை உன்னை மட்டுமல்ல என் உயிரையும் இல்லை சற்றுப் பொறு நான் யோசிக்க இல்லை நான் அவனை நேசிக்க இல்லை என் மனதில் உன் முகம் மட்டுமே இல்லை நீ வாழ வேண்டும் உனக்காக இல்லை உன் காதலுக்காக என்னுடன் இல்லை என் உணர்வுகளுடன் இல்லை உனக்காக நான் காத்திருக்க இல்லை சில நாள்கள் சில மாதங்கள் இல்லை பல வருடங்கள் தேவை இல்லை என் வாழ்க்கை நிச்சயம் இல்லை நான் இன்று சொல்கிறேன் நீ இல்லை எ…

  4. தற்போது தொற்றியுள்ள ஒரு நோய் இப்படியே தொடர்ந்து நிமிர்ந்து நிற்கின்றோம் என்று சொல்லி மக்களை பலி கொடுக்கப்போறியளே என்ற கேள்வி ஒரு நோய்போல் தொற்றி நிற்கிறது எல்லாத்தையும்ஒருவன் பார்ப்பான் என்று தறுதலையாய் திரிந்த கூட்டத்திடம் வேறு எதை எதிர்பார்ப்பீர் நீவிர் தோல்வியுற்ற அந்த கணப்பொழுதிலிருந்து கை பட்டாலும் கால் பட்டாலும் குற்றப்பணம் ஒருவருக்கே தமிழனிடம் தெரிவு இரண்டானாலும் முடிவு ஒன்றுதான் எல்லாவற்றையும் விட்டு இன்றே உலக நடப்பை புரிந்து சிங்களவனோடு சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமாய்கூண்டோடு அழிந்து போவது... இல்லை தனியே நின்று மலையுடன் மோதி கூண்டோடு அழிந்து போவது தமிழனிடம் தெரிவு இரண்டானாலும் முடிவு ஒன்றுதான்

  5. Started by ரதி,

    நாடிருந்தும் நாடோடியாய் நாளேல்லாம் நாடெல்லாம் ஓடுகின்றேன் ஓடுவதற்கு உடல்வலு தேவையில்லை மனவலு இருந்தால் மட்டும் போதும் ஓடுவதற்கு கால் எனக்கு தேவையில்லை போதிய உள வரம் வேண்டும் ஓடுவதால் மீண்டும் மீண்டும் உர‌ம் பெறுகின்றேன் நாம் ஓடாமல் இருப்பதற்கு ஓர் சுதந்திர‌ நிலம் அமைக்க வேண்டும் என்று இதை நான் எழுதவில்லை...எழுதியவர் ஒரு முன்னால் காலம் சென்ற புலிகளின் தளபதி...யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்

  6. நீங்கள் சாகும்வரை நாங்கள் போராடுவோம்…! வேரோடு பிடுங்கி விசங்களால் நிறைக்கப்பட்ட நிலத்தில் அவலமுறும் உயிர்களுக்காய் போராட்டம் நிகழ்கிறது….! நீதி கேட்க ஐ.நா.ஐரோப்பிய ஒன்றிய வாசலெங்கும் நிலம்விட்டகன்று போனவர்கள் நீதி கேட்கின்றோம்….. ஆழுக்கொரு கொள்கை அத்தோடில்லாம் அடிதடி துரோகம் அநியாயம் வசைபாடல் நாடுகடந்த கடக்காத பேரவைகளின் கால்களில் போராடியோர் குரல்களும் உயிர்களும் நசுங்கிக் கொண்டிருக்க நீதிக்கான போராட்டம் நித்தமும் நடக்கிறது. செய்திகளும் அறிக்கைகளும் கர்த்தருக்காகவும் கருணையுளம் கொண்ட உயிர்களின் விலைகளுக்காகவும் சமர்ப்பணமாக…. எப்போதும் போல விசிலடித்து வீரம் விளைவிக்கும் புதிய கர்த்தர்களாலும் பழைய கடவுகள்களின் …

  7. அவன் அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான். அவனுக்கு அங்கு எல்லாமே புதுமையாக இருந்தது. அழகாகவும் இருந்தது. எதையுமே புதிதாக பார்க்கும்போது அப்படித்தான்.. அவன் தன்னுடைய சொந்தபந்தங்கள், நெருங்கிய நண்பர்கள் என எல்லோரையும் பிரிந்தே அந்த வேலைக்காக வந்திருந்தான். அந்தப் பிரிவு அவனுடைய மனதில் ஒரு நிரந்தரமான வெறுமையை உருவாக்கி இருந்தது. இருந்தபோதும் அவன் தானும் தன்னுடைய வேலையுமாக ஒரு குறுகிய வட்டத்தினுள் புதைந்து போனான். அவனுடைய வாழ்க்கையில் நிகழ்ந்து விட்டிருந்த இழப்புகள், சோகங்கள், வலிகள் மட்டுமே அவனுக்கு இப்போது துணையாக இருந்தன. சிலவேளைகளில் தான் தன்னுடைய சொந்த ஊரை, குடும்பத்தினரை, நண்பர்களை விட்டு வெகுதூரம் விலகி சென்று விட்டதாக அவன் கற்பனை செய்துகொண்டான்.…

  8. இமைக‌ள் இர‌ண்டின் இர‌க்க‌ம‌ற்ற‌ பிரித‌லில் முட்டாள் விழிக‌ள் முர‌ணாய் ர‌சித்த‌ன‌ க‌ண‌நேர‌ம் கூட‌ க‌த‌றி அழ‌வில்லை க‌ன‌த்துப் போன‌ க‌ண்ணிமை இர‌ண்டும் மெதுவாய் வீசிய‌ மெல்லிய‌ தென்ற‌லில் வ‌ளியில் மித‌ந்து விழியில் விழுந்த‌ன‌ தூசித் துக‌ள்க‌ள் விழுந்து உருண்ட‌ தூசித் துக‌ள்க‌ளில் க‌ல‌ங்கித் துடித்த‌ன‌‌ க‌ரிய‌ விழிக‌ள் க‌ல‌ங்கித் துடித்த‌ க‌ரிய‌ விழிக‌ளை இத‌மாய் வ‌ருடி இழுத்து அணைத்த‌ன‌ இமைக‌ளிர‌ண்டும் இமைக‌ள் இர‌ண்டின் இத‌மான த‌ழுவ‌லில் க‌டைவிழியோர‌ம் க‌ண்ணீர் துளிக‌ள் புரித‌ல‌ற்ற‌ நேச‌த்தின் எரிந்துப…

  9. நன்றி: facebook. நன்றி: facebook. (மிகுதி தொடரும்..! நீங்களும் இணைக்கலாம் நீங்க ரசித்தவை.. ஆக்கியவை என்று.)

    • 47 replies
    • 13.4k views
  10. நீங்கள் இரசித்த பாடலை முழுமையாக எழுதி அந்த பாடலில் உங்களுக்கு பிடித்த வரிகளை அடையாளப்படுத்தி விடுங்கள் உங்களது இரசனைகள் எவ்வாறு இருக்கின்றன பார்க்கலாம் குறிப்பு :உங்கள் அபிப்பிராயங்களைத் தவிர்த்து பாடல் வரிகளை மட்டும் எழுதிவிடுங்கள் முடிந்தால் பாடல் விபரத்தையும் குறிப்பிடவும் இந்த முயற்சிக்கு தயவு செய்து இடையூறாக செயற்பட வேண்டாம் இது எல்லோருக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என நினைக்குறேன் . படம்:பூவே உனக்காக பாடியவர்:உன்னிகிருஷ்ணன் நடிகர்:விஜய் இசை: எஸ் எ ராஜ்குமார் வருடம் :1996 ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆனந்தம் ஆனத்தம் பாடும் -மனம் ஆசையில் ஊஞ்சலில் ஆடும் ஆயிரம் ஆயிரம் காலம் - இந்த ஜாபகப் பூ…

    • 63 replies
    • 112.6k views
  11. கண்ணீரில் கரையும் தலையணைகள் கண்ணீரில் கரையும் தலையணைகள் கணத்திற்குக்கணம் காந்தவலையுளே பதிந்து நீந்தும் கணக்கிலா இணையத் தகவல் மீன்களாய் எல்லைகாணா மனவெளி முழுதும் அழுந்தப் பதிந்த உன் குரலொலிகள் சொர்க்கமே! உனை பாலிக்க வேண்டிய பொழுதுகளில் ஏனெனக்கு இன்னுமோர் பணியும் அதற்கான பயில்வுகளும்? ஊட்டமுடியாத தொலைதூரமதில் ஒரு நெடுநாட்துயர்போலே இறுகிக்கிடக்குதென் கலங்களுள்ளே உனக்கேயான திருவமுது சொந்தங்களில்கூட எந்தப் பெண்மையுமே எனக்கீடாய் உனக்கில்லையென்றே உணர்ந்திருந்துங்கூட நாட்களாய்………! வாரங்களாய்………! மாதங்களாய்………! விலகியிருக்கின்றேனே இனிக்குமுந்தன் இதழ்முத்தமிழந்து. கற்பூரதீபமே! வேண்டுமானால் இக்கலாசாலை விடுதிக் கட்டில் தலையணை…

  12. Started by மொழி,

    கைபேசி

  13. சில கவிதைகள் திரைப்படத்துறையில் இருந்து

    • 1 reply
    • 716 views
  14. தொலைந்து போகும் அடையாளங்களை தூக்கிநிறுத்துவதற்கு புலிப்பிரமுகர்கட்கும் புலிஎதிர்ப்பு பிரமுகர்கட்கும் மகிந்த வள்ளலானார் இரும்பும் கரும்பாய் இனிக்குமடா இனி…. செயலிறங்கத் துடிக்கும் புலத்து இளையோரை பொறிக்குள் வீழ்த்திட தூதுவராலயத்து தூதுவர்கள் அபிவிருத்திக் குச்சிகளோடு ஊரோடு உறவாட வருகிறார்கள் ஊர்சார் அமைப்புக்களே உசாராகுங்கள் குண்டுமணியளவேனும் எங்கள் சொந்தப்பலத்தில் நிகழட்டும் எங்கள் சொந்தநிலத்திற்கு சேரட்டும் புதிதாய் முளைக்கும் ஊர்ப்பற்றாளரிடம் விழிப்பாயிருங்கள் இயற்கைவளமே எங்கள் பலமென்று வாழ்ந்தவர் நாம் கடலும் வயலும் பனையும் தென்னையும் கனிதருமரங்களும் எங்கள் சொந்தம் எங்கள் நிலத்தில் மூச்சுவிட்டு இருக்கவிடு இராணுவ அரண…

  15. Started by வீணா,

    எப்போதும் கண்கள் பார்த்துப் பேசும் பழக்கம் எனக்கு. முகம் பாராமல் நட்பொன்று வளரலாம் என்பதே தொலைபேசியில் நீ அறிமுகமானபோதுதான் தெரிய வந்தது. உன் குரல் வசீகரமும் சரளமான பேச்சும் உனக்கோர் முகத்தை என் மனதில் வரைந்தது. நீயும் எனக்கோர் முகம் வரைந்திருப்பாய். நம் நட்பு வளர்வதில் உடன்பாடுதான் என்றாலும், சந்திப்பு நிகழ்வதில் உடன்பாடில்லை. உனக்கான என் முகமும் எனக்கான உன் முகமும் அழிந்து போவதில் எனக்கு விருப்பமில்லை. நன்றி சௌம்யா.......

    • 6 replies
    • 1.4k views
  16. நான் கேட்காமல் கிடைத்த ஆலயம் என் தாய் நான் கேட்டதும் கிடைத்த தெய்வம் என் தாரம் * இறைவனிடம் வரம் கேட்டேன் அவன் தன்னை கேட்டதாய் நினைத்து தானே என் மனைவியானான் * எல்லோரும் ஆறுதல் தேடி ஆலயம் போவார்கள் நான் உன்னைத் தேடி வருவேன் * என் கவிதைக்குள் யாரும் இல்லை கிறுக்கல் ஆனது என் காதலுக்குள் நீ இருக்கிறாய் கவிதையானது என் வாழ்க்கை -யாழ்_அகத்தியன்

  17. கும்பாபிசேக மேளச்சத்தத்திலும் அமைதியாய் இருக்கும் சாமி போல அடக்கம் உனக்கு எப்படி நாதஸ்வர இசைபோல வாசித்தாய் உன் காதலை * அழும் குழந்தையைக்கூட அழகாய் சிரிக்கவைத்து புகைப்படம் எடுக்க தெரிந்த கலைஞன் நான் எப்படி உன் அழகான புன்னகை மட்டும் புரியாமல் போனது எனக்கு * பொறுக்கவே முடியவில்லை என் மறதிகளை நீ கொட்டித்தீர்த்த ஞாபகங்கள் அவ்வளவும் அளவில்ல பொக்கிசங்கள் * பிழையின்றி தமிழ் எழுத தெரியாத என்னை கவிஞனாக்கவே வந்து தொலைத்திருக்கிறது காதல் * வெக்கப்படுவதற்காகவே சேலை கட்டும் பெண்கள் மத்தியில் வெக்கத்தையே ஆடையாய் கட்டியிப்பவள் நீ -யாழ்_அகத்தியன்

  18. Print this Page கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப்படம், திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (காலச்சுவடு 2008), ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ (உயிர்மை 2009), ‘பாழ் நகரத்தின் பொழுது’ (காலச்சுவடு 2010) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகிறார் (deebam.blogspot.com). தற்போது யாழ் பல்கலைக்கழக ஊடக நிலையத்தி…

    • 5 replies
    • 1.3k views
  19. அடிமைச் சங்கிலி அறுப்போம்...! -கவிஞர் தணிகைச்செல்வன் கோவையில் நடந்த உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில், காவியக் கவிஞர் வாலி தலைமையில் "தமிழுக்கும் அமுதென்று பேர்' என்கிற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. கவியரங்கத்தை கவிஞர் மு.மேத்தா தொடங்கி வைத்தார். தொடர்ந்து கவிஞர்கள் பழனிபாரதி, பா.விஜய், தணிகைச் செல்வன், இளம்பிறை, உமாமகேஸ்வரி, தமிழ்தாசன் உள்ளிட்டோர் தங்கள் கவிதைகளை வாசித்தனர். ஒவ்வொரு கவிஞரும் ஒவ்வொரு கோணத்தில் வாசித்த நிலையில், ஈழத்தைப் பற்றி அதிகம் பேசிய தணிகைச்செல்வனின் கவிதை வரிகள், திரண்டிருந்த மக்களிடம் உணர்வு தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது கவிதையிலிருந்து... முள்ளிப்போர் முனைமுகத்தில் முணைந்து சரணடைய வெள்ளைக் கொடிவீசி வந்தாரை; விதிம…

    • 1 reply
    • 1.5k views
  20. ஓல்(O/L) பரீட்சையில் ஓல்(all) எவ்(F) வந்ததும் தலை கிறுகிறுக்க அலைந்த போது.. இயக்கத்துக்கு ஓடிடுவானோ.. பயந்தாள் அம்மா. ஊருக்க வைச்சிருந்தா உவங்கள் வந்து இழுத்துக் கொண்டு போயிடுவாங்கள் உங்கால உள்ள காணியை வைச்சிட்டு அனுப்பிவிடு இவனை கொழும்புக்கு.. புத்தி சொன்னார் அப்பா. கொழும்பில போய் பொடி கெட்டிடும் உந்த ஊரெல்லாம் போகுது கனடா அனுப்பிவிடு அங்க.. பத்தாக்குறைக்கு பத்த வைத்தார் மாமா..! நானும் சோதனையில் பெயிலான (fail ஆன) சோகம் தீர புறப்பட்டேன் தாண்டிக்குளம் தாண்டி ரொராண்டோ. வருசம் ஒரு 5 போய் இருக்கும் நாலு காசு நாய்படா பாடுபட்டு வெள்ளைத் தோலிடம் ஏச்சும் இழிவும் வாங்கி உழைச்சது தான்..! அம்மா கேட்டாள் பொம்…

  21. எப்போதும் நான் ஜன்னல் ஒன்றை தூக்கிக்கொண்டு பயணிக்கின்றேன் அவ்வப்போது கம்பிகளினூடாக காலைக் கருக்கலையும் பொழுதுபடுதலையும் பார்ப்பேன் போறவாற ஆக்களையும் பார்ப்பேன் கம்பிகளினூடாக பர்க்கும் பேதே என்னால் எதையும் எவரையும் புரிந்துகொள்ள முடிகின்றது போற போற இடங்களில் தற்காலிக வீடுகளிலெல்லாம் இருக்கும் ஜன்னலோடு என்ர ஜன்னலையும் பிணைத்துவிடுவேன் வேற ஆட்கள் செய்த ஜன்னலால் பார்த்த மாதிரி இருக்காது ஊரில் தொலைத்த வீடுகள் வளவுகள் உறவுகள் தென்னைமரங்கள் அவை எல்லாம் இல்லாத குறையின்றி ஜன்னல் என்னை பாதுகாக்கின்றது. என் ஜன்னலால் பார்க்கும் போது coniferous மரங்களும் பனைக் கூடல்களாக தெரியும் நான் ஒரு நாடோடி ஆனால் …

    • 8 replies
    • 1.1k views
  22. Started by akootha,

    ஈழத் தமிழன் இன்று மறத்தமிழர் வீழ்ந்து போயினர் ஆயினும் தமிழரின் வீர சரித்திரமாயினர் வீரன் வீழ்ந்தாலும் வாழ்வான் பல தமிழர் அகதி ஆயினர் வரலாறில் யூதரும் அகதி தான் அகதி என்பது அகதியின் இழுக்கல்ல யார் அகதி ஆக்கினர் என உரத்து சொன்னால் பல தமிழர் மாண்டு போயினர் யாரேனும் காப்பார் என இறுதி வரை காத்திருந்து சிலர் எதிரியிடம் அகப்பட்டு மறைந்து போயினர் எல்லோருமே ஒருவகையில் சீரழிந்தனர் மேலும் பலர் வேறு வழியின்றி அடக்குமுறைக்குள் வாழப் பழகினர் மனித உரிமை பேசியோர் எல்லாம் தூர ஓடினர் சீனா காரன் பலம் கண்டு சிலர் எல்லாம் மறந்து சேர்ந்து வாழ்வோம் அடுத்த முறை அரசு அடிக்கும் வரை என்றனர் வெகு காலம அடிவாங்கி பழகிய இனம் சோழன்…

    • 0 replies
    • 621 views
  23. http://www.youtube.com/watch?v=29KnF92oRog&feature=player_embedded பார்த்ததில் விரும்பி ரசித்தது.உங்களுக்காக இங்கே இணைகிறேன். நன்றி : முகநூல்

  24. Started by nochchi,

    ஆடிப்பிறப்பு விடுதலையைத் தேடி... ... எத்தனையோ ஆடிகளை கடந்து போயிற்று என் வாழ்க்கை. இன்னமும் நானும் சேர்ந்துபாடிய பாட்டின் மகிழ்ச்சிக்குள் இருந்த விடுதலையை நான் அனுபவித்ததேயில்லை. நாளைகள் கடந்து நிரம்ப நாட்களாயிற்று. இப்போ என் தோழர்களுமில்லை. ஆனந்தமுமில்லை. கொழுக்கட்டையும்..கூழும்.. கனவாகிப் போன வாழ்க்கைகளில் கொதித்துக் கொண்டிருக்கிறது மனசு. இப்போதும்.. பற்கள் விழுந்து போன என் தாய்.. என்னையும் நினைத்தபடி தன் சுருக்கம் விழுந்த கைவிரல்களால் கொழுக்கட்டைக்கு பற்கள் பதித்துக் கொண்டிருப்பாள். எமது கனவுகளைப் போலவே குமிழிகளாய் வந்து வந்து வெடித்து வெடித்துப் போகிற கொதிக்கும் தண்ணீருக்குள் கூழுக்காக மா உருண்டைக…

    • 3 replies
    • 2.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.