Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. சிங்கள அரசின் பொருளாதாரத்தை சிதைப்போம்_அவன்... சிரசுக்கு வைப்போம் ஆப்பு சிலேடையாய் இணையத்தில் மட்டும்... சிங்கம் போல சிலிர்ப்போம் சிந்திய ரத்தம் காயும்முன்னே... சிங்களவனுக்கு சீர் பல கொடுப்போம் நலன்புரிமுகாம் எனும் நரகத்தில்..... நம் உறவுகள் படும் துன்பத்திலும் நம்மில் சிலர் செய்யும் செயலை.. நான் எப்படிச் சொல்ல.........? நாற்பதாயிரம் ரூபா கொடுத்தால்... நாளைக்கே ஆளைக்காட்டுவனாம். இருபதாயிரம் கொடுத்தால்... இருசில நிமிடம் போனில் கதைக்கலாமாம் ஜந்து லட்சம் கொடுத்தால் வெளியே விடுவானாம்... காலைப் பிடிச்சுக் கெஞ்சிக்கதறினால் சாப்பாடு கொடுக்கலாமாம்.... விடுவோமா நாம்...? ஆடடிச்சு குழம்பு வச்சு... பூநகரி மொட்டைக்க…

    • 11 replies
    • 1.6k views
  2. ஆனந்த புரத்தில் எழுதப்பட்டது.. ************************************* புற நானூற்றின் புதிய பக்கம்.! ********************************** மு.வே.யோகேஸ்வரன் ************************** சுடச் சுட எழுந்தனர் புலிகள் .. சுற்றிவர நின்று .. 'படப் பட'வென்று பொழிந்தது ராணுவம்.. விழ விழ எழுந்தனர் வீரர்..! ஆனந்த புரமா அது ?..இல்லை... இலங்கை அரசின் தானென்ற அகங்காரத்தை தகர்த்த மண்! வானிறங்கி வந்து மேகங்கள் மழை பொழிவதுபோல்.. குண்டுமழை நடுவே.. புறநானூற்றின் புதிய பக்கமொன்றை பொறித்த மண்.! முன்னூறு மூர்க்கப் புலிகள் தளபதிகள்..சுற்றிவரப் 'பெட்டிகட்டி'.. விண்ணோரும் போற்றும் வீரத் தலைவனை காக்கப் போர்புரிந்து.. கருந்தீயைக் கக்கும் 'பொஸ்ப…

  3. அவர்களை விடுவிப்போமா.... முட்கம்பியின் பின்னால் நீர் நிறைந்த விழிகளுடன் பல திசையும் நோக்கி பல ஆயிரம் கண்கள்..... இரவு பகல் பாராது எட்டுத்திசையும் நோக்கி எவராவது வருவாரா எம் ஏக்கம் தீர்க்க.... இது தான் இன்றைய கேள்வி அங்கே... பதில் தெரியாமல் துடித்து பிணமாகும் உயிர்கள் அங்கே.... படுக்கை மலசல கூடத்தில் மலசல கூடமோ படுக்கையில்.... பகைவென்று நிலமாண்ட பிரபாகரன் தேசம் பகைவனின் கூடாரத்தில் பல நூறு சித்திரவதையில்.... ஏங்கும் விழிகளுக்கு தூக்கம் கொடுப்பதற்கும் பட்டினி வயிற்றை பசியாற விடுவதற்கும் நாம் என்ன செய்தோம்...? இனியாவது என்ன செய்வோம்...? முடியாத காரியமும் முடித்துக் காட்டிய தலைவனின் பாசறையில் தவண்ட …

  4. Started by Rasikai,

    எது சுகம்? ---------------------- பட்டப்படிப்பு சுகமா? அதனால் வந்த பதவி வாழ்வு சுகமா? கட்டிக்காத்த சொத்து சுகமா? இல்லை கட்டிலறை என்னும் மனித இச்சை தான் சுகமா? அள்ளி அள்ளி சேர்க்கும் பணம் சுகமா? அதனால் வரும் பகட்டு சுகமா? உண்மை சொல்லுங்க அம்மா இல்ல ராசா இல்ல சாப்பிடுடா செல்லம் என்று சொல்ல அன்னை கையால் சோறு உண்டு வாழ்ந்தோமே அதை விடவா இத்தனையும் சுகம்????

    • 34 replies
    • 4.1k views
  5. அதிர்ஸ்டம் என்பது ஒரு ஆண் தனது மனைவியின் முதல் காதலனாக இருப்பது.. அதிர்ஸ்டம் என்பது ஒரு பெண் தனது கணவனின் கடைசி காதலியாக இருப்பது... இந்த இரண்டு வசனங்களிளும் ஏகப்பட்ட கருத்துகள் இருக்கின்றன....உங்கள் கருத்துகளை சொல்லுங்கள்... வாழ்க்கையில் அனுபவமுள்ளவர்களின் கருத்துக்கள் இளையோருக்கு நல்ல அறிவுரையாக அமையும் என நம்புகின்றேன்.

    • 11 replies
    • 2.2k views
  6. சின்ன பிள்ளைகளை சிறிலங்கா படை பிடிக்கலாமோ....??? ஏழிரண்டு வயசினிலே ஏ.கே.யை தூக்குகிறாய் யார் பெற்ற பிள்ளையோ காப்பரணில் நிக்கிறய்.... ஏறெடுத்து பார்கலயே ஏனோ உலகம் உனை காணலயோ...??? பிள்ளை பிடிகாறனிடம் பிள்ளை நீ சிக்கினாயோ...??? பாசமான உறவிழந்து பாதகர் படையினிலே பாவி நீ நிக்கிராயோ...??? சின்ன வயசுனக்கு என்ன ஏதறிவாய்...??? ஏனோ எல்லையிலே காவலுக்கு உனைவிட்டார்...?? காவு உனை கொடுக்க காவலுக்கு விட்டனரோ....??? மா பாவிகளை எண்ணையிலே மனசு கொதிக்குதய்யா... எம் வேங்கை எதிர்பதற்கு ஏய் பிள்ளாய் உனை எதற்கு....?? காவலுக்காய் உனை வந்து கட்டி வைத்தனரோ...??? அவர் தம்பி நீயென்று அறியாமால் விட்டனரோ....??? அறிந்தால் உனைய…

  7. 01. உடலின் முன் மண்டியிட்டொரு மன்னிப்பு மஞ்சள்நிறக் கரைசல்கள் வழியும் சுவர்கள் மாத்திரைகளின் உபயம். காய்ச்சலின் தகிப்பைத் தம் குரலிலேற்றிப் பாடுகின்றன பறவைகள் உடலை இருபாதியாய் வகிர்ந்து பரவுகிறது வெப்ப மின்னல் பாதங்கள்தாம் எத்தனை கனம் உலகமோ எனக்கு எட்டாத தொலைவில் 'இதுதான் கடைசி; இனிமேலில்லை' உடலின் முன் மானசீகமாக மண்டியிடுகிறேன் பொதியுடன் மலையேறும் கழுதைபோல என்னைக் கொண்டிழுக்க எவ்வளவு சிரமப்பட்டாய் நீ. இந்த உலகின் நிறம் குருதி சுவையோ வட்ட நீள வில்லைகளின் கசப்பு மணம் சிறுநீர் ங்.....ஙென்றொரு சுநாதம் அ…

    • 1 reply
    • 1.1k views
  8. காலத்தை வென்ற கவிஞன் விடுதலை நெருப்பில் குரல் எழுப்பிய புலவன் மலர்ந்தநாள். சுதந்திர சிறகடிற்பிற்காய் இயந்திரமாய் எழுதிய கவிஞன் மண்ணைப்பாட பிறந்தநாள். இவன் விற்பனை கவிஞனும் அல்ல கற்பனை கவிஞனும் அல்ல காலநதியில் கரைந்து போன கவிஞனும் அல்ல கூவி வந்த கந்தக துகள்களுக்குள்ளும் சாவு விழுந்த வலிகளுக்குள்ளும் மூசி மூசி வீசிய புயல்காற்று. இவன் காலத்தை வென்ற கவிஞன் ஈழயாகத்தை தமிழால் வளர்த்த அறிஞன் யாருக்கும் கொள்கையை விற்கா வியாசகன் யாதுக்கள் நிகழ்த்திய யாதனைகளை பாடிய பாவலன் தேசியத்தலைவனின் அண்ணனாய் மணணை நேசித்த சந்திரிகை. எப்படி ஜயா உமை மறப்போம் நீ பாடித்திரிந்த திசையை தேடிப்பார்க்கிறோம். விடியவில்லை விடுதலைராகம் கேட்கவில்லை மாறக நாற்…

  9. Started by Jenany,

    நான் கவிதை எழுதியது நிஜம் அவன் உள்ளம் கவர்ந்ததும் நிஜம் அவன் சிந்தனைகளுக்கு சவால் விட்டதும் நிஜம் நான் காதல் கொண்டது நிஜம் அவனால் நேசிக்கப்பட்டதும் நிஜம் காதல் அன்பு பார்த்து வந்ததும் நிஜம் என் காதல் கல்லறைக்குப் பூத்ததும் நிஜம் நான் கண்ணீர்க்கு வாக்கப்பட்டதும் நிஜம் என் காதலன் நேசமானவன் என்பதும் நிஜம் ஆனால் நேசத்தை நிரூபிக்க காதல் நிஜமில்லாமல் போனதும்... நிஜம்..!! நன்றி: நித்தியா www.suduvanam.blogspot.com

    • 7 replies
    • 1.8k views
  10. இக்கவிதை கண்ணதாசன் தான் உயிரோடிருக்கும்போதே தன்னுடைய இறுதி ஊர்வலத்தின்போது சீர்காழி கோவிந்தராஜன் அவர்களது கணீரென்ற குரலினால் பாடப்பட வேண்டும் என்று இயற்றிக்கொண்டாராம் தேனார் செந்தமிழமுதைத் திகட்டாமல் செய்தவன் மெய் தீயில் வேக போனாற் போகட்டுமெனப் பொழிந்த திரு வாய் தீயிற் புகைந்து போக மானார் தம் முத்தமொடும் மதுக் கோப்பை மாந்தியவன் மறைந்து போக தானே எந் தமிழினிமேல் தடம் பார்த்துப் போகுமிடம் தனிமைதானே! கூற்றுவன் தன் அழைப்பிதழைக் கொடுத்தவுடன் படுத்தவனைக் குவித்துப்போட்டு நீ எரிவதிலும் அவன் பாட்டை எழுந்து பாடு! -'கவியரசு'கண்ணதாசன் உங்கள் இரங்கற்பாவை யாழில் இயற்றிவையுங்கள், பிறகு பாடுகிறோம்.............

  11. Started by pakee,

    உனக்கு ஒரு மடல் - என்னை மறந்து விட்டாய் என்பதற்கு அல்ல உன்னை உள் அன்போடு நேசித்தேன் என்பதற்காக! என் காதலுக்கு கருவாகி கவிதைக்கு பொருளாகி எனை காதலித்து கவி தந்த காதலி - நீ ஆதலால் என் காதலை இப்போது ஏற்க மறுத்தாலும் - என் இதய வானிலே எப்போதும் - நீ இளைய நிலா என்பதால்! நாலாறு மாதங்கள் உன் மீது நான் கொண்ட காதல் ஏழு ஜென்மத்திலும் மறவா உன் நினைவுகள் என்பதால்! காதல் என்பது மாயை - என்ற புரியாத புதிரை - எனக்கு புரிய வைத்தாய் என்பதற்கு அல்ல! பாசங்கள் எல்லாம் வேசங்கள் என்ற நிஜத்தை எனக்கு சொல்லாமல் சொன்னவள் - நீ என்பதால் இறுதியாக உனக்கு ஒரு மடல்..!

    • 0 replies
    • 759 views
  12. தீபத்திருநாள் எங்கள் வீட்டு புன்னகையை இறைவன் தின்ற வீரம் செறிந்த நாள் என் வீடு முழுக்க நிறைந்து கிடந்தது இரத்தச் சிதறலும் சிதைந்த உடலும் என் உடலம் தினமும் குளித்து துவண்டது பெருக்கெடுத்தோடிய உறவுகளின் செந்நீரில் என் பதுங்ககழியில் பாம்பு தூங்கியது சுகமாக தறப்பாள் கொட்டிலில் தம்பி தூங்கினான் பிணமாக தந்தை மூட்டிய தீயில் கொதித்த நீரின் சுவையறிய துடித்தது நா ஆனால் தர மறுக்கிறது காலம் தங்கையின் அழுகுரலிலும் தாயின் அசையாத உடல் இயக்கத்திலும் நான் தவித்துக் கிடந்தேன் சிங்களத்தின் தீபாவளி கொண்டாட்ட வானவேடிக்கைகள் எம்மை தின்று தீர்த்தன பிறந்தகம்…

  13. என் இதயத்துக்குள் இன்னொரு இதயம் சுகமாய் வீழ்ந்த அந்த நொடிப் பொழுது அவன் சுவாசம் எனைத் தீண்ட என் மனது காதலை பூத்த அந்த நாழிகை அவன் பார்வைகளால் என் இதயத்துக்குள் சித்திரம் வரைந்த அந்த மணித்துளிகள் அவன் நினைவுகள் என் மனதுக்குள் இறங்கிய தருணங்கள் இவை எல்லாவற்றையும் நினைத்திடும் பொழுது அவன் நினைவுகள் உயிர் பெற்று என் பொழுதுகளை அவிய வைத்து பசியாறிக் கொள்கின்றது... இரக்கமின்றி.. அவன் நினைவுகள் என் இதயத்தை தீண்டி விடாமல் வேலி போடுகின்றேன் - இருந்தும் அவை இதயத்தை தாண்டி -என்னை முழுவதும் ஆக்கிரமித்து படர்கின்றதே... ஒரு வேளை அவன் நினைவுகள் பாதீனியம் போலவோ? நான் அழிக்க அழிக்க மீண்டும் முளைக்கின்றதே.. என் …

  14. -------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........இயற்கையோடு ஓட்டபந்தையம் ....... ^^^^^^^^^^^^^^^^^ எனக்கும் இயற்கைக்கும் .... ஓட்டப்பந்தையம் ...... எல்லை கோட்டை தொடுவதில் .... கடும் போட்டி ......!!! போட்டியின் தொடக்கமே .... இயற்கை முன்னணி பெற்றது .... சற்று என்னை திரும்பி பார்த்து .... உன்னை படைத்த என்னோடு .... உனக்கு போட்டியா ...? தோல்வியை ஒப்புக்கொள் ... நான் விலகி விடுகிறேன் .....!!! நான் விடவில்லை .... என் முழு முயற்சியையும் ..... பயன்படுத்தி இயற்கையை .... சற்று முந்திக்கொண்டேன் ..... நானும் சளைத்தவனில்லை .... திரும்பி பார்த்து சொன்னேன் .... படைத்தது நீயாக இருக்கலாம் …

  15. இந்த வார ஆனந்தவிகடனில் (20.4.16) வெளியாகியுள்ள எனது கவிதை "மீள வரும் குளம் ... ", யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சி.. யாழ் களத் தோழர்கள் எனக்குத் தரும் உற்சாகத்துக்கு நன்றி! மீள வரும் குளம்..... நீர் உரசிப் பறக்கும் தட்டான்கள் தாழ்வான மரக்கிளையில் ஒரு மீன்கொத்தி மறைந்திருந்து கூவும் ஒரு போர்க்குயில் வளைந்த மொட்டைப் பனையில் ஒரு கிளி மரச்சரிவில் ஒரு மரங்கொத்தி.... பதிவுசெய்து வைத்திருந்த காட்சிகள் மீளவருகின்றன மனக்கண்ணில் வற்றிய இந்தக் குளக்கரையில். -சேயோன் யாழ்வேந்தன் (நன்றி: ஆனந்த விகடன் 20.4.16)

  16. அந்த அகதிமுகாம்கள் இல்லையில்லை மீட்பர்களற்ற வதைமுகாம்கள் மின்சார முட்கம்பிகள் சூழப்பட்ட அந்தகாரத்தில் மூழ்கிக் கிடக்கின்றன. பசி மயக்கத்தில் கேட்பாரற்று உறவுகளைத் தவறவிட்ட அவலத்தில் சருகாகின தனிமைக் கூடுகள். அட்டதிக்கிலும் முற்றுப்பெறாத ஒப்பாரிகள் உயிரைப் பிசைந்து உணர்வைக் கரைக்கிறது. கூடி அழ ஆளின்றி மானிட மரணங்கள் மலினப்படுகின்றன. தன் பிறப்பை மறந்த அன்னையைப் பார்த்து சிசு கதறிக் கதறி விதி வலிக்கக் கிடக்கிறது. ஒதுங்கவும் உள்ளுடுத்தவும் வழியின்றி பெண்மை கறையுற்று நனைகிறது. மறைப்புகள் அற்ற திறந்த வெளி இருட்டில் மட்டுமே மானத்தைக் காக்கிறது அகரத்தை எரிக்கும் அசிட் திரவத்தை அடிவயிற்றை கிழித்து மிருகங்கள் உமிழ்கின்றன. …

  17. அன்றைய இட(இதய)ப் பெயர்வும் அவளும்.... கவிதை - இளங்கவி முகத்தில் சிறுமுடிகள்... அதுதான் மீசையாம்..... சொல்லக்கேட்டதும் உடலில் ஓர் சிலு சிலுப்பு..... சிட்டுக்குருவி சிறைபிடிக்க இந்த சின்னப்பறவைக்கும் ஓர் ஆசை.... மலர் மஞ்சத்தில் படுப்பதற்கு மனதில் ஆசையெனும் பேரலை என் ஆசையெல்லாம் அடக்கிய அந்த ஓர் இடப்பெயர்வு...... ஆம்.. அன்று முகாமில்லில்லை உறவினரின் முற்றத்தில்...... அந்தக் கூட்டத்திலும் அழகான ஓர் பொற்சிலை.. என் ஆசைப் பேரலைக்கு அணைபோட்ட ஓர் தங்கச்சிலை...... என் அகதி நிலை புரியவில்லை அடிவயிற்றுப் பசிகூட தெரியவில்லை.... மூளைமுதல் முழங்கால் வரை முழுவதும் நிரப்பியது அழகான அவள் பிம்பம்...... பார்க்க மறுத்தாள் பி…

  18. Started by shanthy,

    என்றும் போல... - சாந்தி ரமேஷ் வவுனியன் - நிலவுக் கதிர்களை விழுங்கிச் செல்கிறது மழைக்கால வானம். மாவீரம் சொன்னபடி மழைத்துளிகள் நிலம் நனைக்க கருவறை வாசம் நினைவேற்று நித்திரை அறுகிறது..... ஒளிக்காட்சியொரு பொழுதில் உயிர் அதிர்த்த ஞாபகத்தில் விழிக்காட்டிக்குள்ளிருந்து துளித்துளியாய் சொட்டுக்கள்..... சென்று வருவதாய் சொல்லிப் போனவனின் கடைசிக் கடிதத்தின் சொற்கள் கசங்சி மங்கலாகி பல்லாயிரம் தரங்கள் படித்துப் படித்துப் பாடமான பின்னாலும்.... அவனைக் காணும் அவசரம் என்றும் போல..... இரவுக் கரி திரட்டி ஒளியின் விழி தன் உயிரில் திரிமூட்டி ஊரதிர உயிர்க்காற்று பேரதிர்வாய் நிறைகிறது. சொல்லாமல் கொள்ளாமல் சென்றவனின்…

  19. Started by yakavi,

    நட்பு. . இருளின் முன் ஒளியாய் உறவின் முன் பாலமாய் து ன்பத்தின் முன் துணையாய் நோயின் முன் மருந்தாய் சோகத்தின் முன் சுகமாய் தாகத்தின்முன் நீராய் மரணம் வரை துணையாய் மரணித்த பின்னும் நினைவாய் வாழ்வதே நட்பாகும். .......... .

    • 6 replies
    • 1.8k views
  20. Started by sathiri,

    Tuesday, September 20, 2005 அவள் அவள் வீட்டு கதவு தானே திறக்கும் உள்ளே அணைப்பதற் கென்றே ஏற்றப்பட்ட விளக்கெளியில் உரிவதற்காய் உடுத்திய சேலையில் கலைப்பதற்கென்றே செய்த ஒப்பனையில் கசக்குவதற்காக சில மலர்களை காதேரம் வைத்து அழிப்பதற்காக வைத்த அகன்ற அழகிய பொட்டுடன் காத்திருக்கிறாள். உடம்பில் எங்கும் உணர்சியில்லை வயிற்றைதவிர என்வாயிற்று இன்று ஆணினமே அழிந்துவிட்டதா சுனாமி வந்து சுத்திக்கொண்டுபோய்வட்டதா படுக்கைவிரிப்பு பத்திரமாய் இருக்கிறதே வைத்தபொட்டு வைத்தபடியே இருக்கிறதே அதுஅழியா விட்டால் அவளிற்கு அமங்கலமல்லவா செல்லாத இராத்திரி சிறுகச் சிறுக விடியும்பகல் ஜயோ..பட்டினிப்பகலா?? எங்கோ ஒருகட்சி தலைவன் …

    • 4 replies
    • 816 views
  21. Started by கோமகன்,

    வணக்கம் கள உறவுகளே , பிரபல்யமான கவிஞர்கள் பொதுவாகக் கருத்துக்களங்களை எட்டிப் பார்ப்பதில்லை என்ற மனக்குறை எனக்குப் பலகாலமாகவே உண்டு . விதிவிலக்காக ஈழத்தின் விலைமதிக்கமுடியாத கவிஞரான வா செ ஐ என்ற அழைக்கப்படும் பொயட் யாழ் இணையத்திற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றே சொல்வேன் . நான் வாசித்த பிரபல கவிஞர்களின் கவிதைகளில் என்னைப் பாதித்த ஒரு சில கவிதைகளை இந்த சுவைத்( தேன் ) பகுதியில் பதிவிடலாம் என நினைகின்றேன் . இதுபற்றிய உங்கள் கருத்துக்களையும் எதிர்பார்கின்றேன் . நேசமுடன் கோமகன் ************************************************************************** 01 புத்தி தனக்குப் புத்தி நூறு என்றது மீன் - பிடித்துக் கோர்த்தேன் ஈர்க்கில் . தனக்குப் புத்தி ஆயிரம் என்றது ஆ…

  22. முதற் பெண்மாவீரரான மாலதி அவர்களின் 26வது நினைவு சுமந்து வீரவணக்கங்கள்! தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்! ----------------------------------------------------------------------- வென்றிடச் சென்றவள் பெண்வேங்கையுள் முன்னவள் தாலியைத் தாங்கிடும் மரபிலே வந்தவள் தடை யுடைத்தவள் நஞ்சினைச் சூடினாள்! வேதனை கண்டவள் வெஞ்சினம் கொண்டவள் போரிலே புகுந்தவள் புதுயுகம் படைத்தவள் பாரிலே நிலைத்தவள் செங்கொடி ஏந்தினாள் போர்க்கலை காட்டினாள் தமிழ்ப்பெண்நிலை மாற்றினாள் அஞ்சுதல் போகினாள் ஆயுதம் சூடினாள் தூற்றுதல் துடைத்தவள் களப்பணி யாற்றினாள் வீறுடன் நடந்தவள் வித்தென வீழ்ந்தவள் அடையாளம் ஆகினாள் தமிழினப் பெண்களின் அடையாளம் ஆகினாள்!

    • 8 replies
    • 1.5k views
  23. தன்னைக் கொன்றவனின் வாக்குமூலம் ஆராய்தலின் பின் தற்கொலையென்று தள்ளி வைக்கப்படுகிறது. அங்கு, தன்னைக் கொன்றவனின் வார்த்தைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்காது. தன்னைக்கொல்ல துணிந்தவனின் வார்த்தைகள் வாழ்க்கைக்குள் தன்னை கொன்றவனுக்கு எப்படிப் புரிந்திருக்கும் ? தன்னைக் கொல்லுதல் மலர் உதிர்வதுபோலவும் இருக்கலாம். மை கரைவது போலவும் இருக்கலாம். ஒரு மரம் சரிவது போலவும் இருக்கலாம். தன்னைக்கொன்றவனின் கடைசி நிமிடங்கள் பற்றி எவரும் பேசுவதில்லை, அவன் சுமந்திருந்த தனிமையை எவரும் உணர முயல்வதுமில்லை. அவன் உருவாக்கிய வெற்றிடம் குறித்தும் எவரும் கவலைப்படுவதில்லை, ஆனாலும், தன்னைக்கொன்றவனைத் தாண்டிவிட முடிவதில்லை எவராலும் வழமைபோல, அவனுக்கு அந்த நேரத்தில் தேவையாக…

    • 8 replies
    • 718 views
  24. A POEM WRITTEN IN கடற்புறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . 1979ல் எனது யாழ்பாணம் பலகலைக்கழக நாட்களில் எழுதிய கவிதை. முதலில் பல்கலைகழக மாணவர் சங்க அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டது. பின்னர் பெருந்தோழர் டோமினிக் ஜீவா அவர்கள் தனது மல்லிகை சஞ்சிகையில் பிரசுரித்தார். அதன்பின் பலதடவை மீழ் பிரசுரம் செய்யப்பட்டது. மலையகத்தைச் சேர்ந்த தோழி ஞானாம்பிகை ( gnana chitraranjan ) இலங்கை உயர்கல்வித் துறையில் பணியாற்றியபோது பாடபுத்தகத்தில் இக்கவிதை சேர்க்கபட்டதால் இலங்கை தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களிடையே பிரபலமானது. . இக்கவிதையை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமனியன் ஆங்கிலத்தில் மொழி பெயர்திருக்கிறார் யாரிடமாவது பிரதி இருந்தால் அனுப்பி உதவுமாறு கேட்…

    • 1 reply
    • 769 views
  25. ஆணைப் படைத்தான்...! பெண்ணையும் படைத்தான்...!! இயற்கையை படைத்து... அவர்களை இயங்கவும் வைத்தான் !! அந்த வித்தைகாரன் பெயர்தான் - கடவுள் !!! ஆணுக்கு பெயர் வைத்தான், அது 'கணவன்' ! பெண்ணுக்கு பெயரிட்டான், அது 'மனைவி' ! இருவரையும்.... சேர்த்து வைக்க திட்டமிட்டான் அது 'திருமணம்' !! அத்தோடு விட்டானா....?!! 'காமம்' என்றும்... 'காதல்' என்றும்... எதிரும் புதிருமாய், எதையெதையோ வைத்தான் ... அதன் இடையில்!!! 'ஆசை அறுபதுநாள் மோகம் முப்பதுநாள்' அப்படியொரு பழமொழியை... எவன் வைத்தான்... தெரியவில்லை!? தொண்ணூறு நாளின் பின்தான், பெரும்பாலும்... தொல்லைகள் ஆரம்பிக்கும்..!!! எல்லையில்லா அன்பென்றார்...!? தொல்லையில்லாமல் பிரிவோம் என்பார்...!! பிரியமாக இருந்தோரெல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.