கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
-
- 1 reply
- 1.2k views
-
-
1. யாரையாவது பிடிக்க போகும் போது வீட்டின் கதவை உடைத்துக்கொன்டு போலீஸ் போகிறதே… அதற்குபின் கதவை சரி செய்து கொடுப்பாங்களா? 2. எல்லா டிவி சானல்லையும் ஏன் மிமிக்கிரி ஆர்டிஸ்ட் கோட் போட்ருக்காங்க? (பெரிய கொடுமை என்னனா… ஆபிசில எங்க மேனேஜர்ஐ பார்த்தா எனக்கு ரோபோ சங்கர் ஞாபகம் வந்து பலமா சிரிச்சிர்றேன்…) 3. டெலிபோண்ல நம்பர்கள் மேலருந்து கீழ இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழ்ழிருந்து மேல இருக்கு ??? 4. மூக்குலயும் வாயிலயும் ஒரே நேரத்தில் மூச்சு விட முடியுமா ?? 5. விமானத்திலேயோ இல்லை நம்ம ரேஜ்ஜுக்கு பஸ்லயோ போகும் போது பாதியில் விபத்துக்குள்ளாகி நாம் பிளைத்துக்கொண்டால், டிக்கெட் பணத்தை திருப்பி கொடுத்திருவாங்களா?? (நாம தான் ஊருக்கு போய்ச்சேரலையே ?? ) 6.…
-
- 1 reply
- 1.2k views
-
-
கடந்து செல்லும் 2009....... -------------------------------------------- கடந்து செல்லும் 2009 மறந்திட முடியாத துயர ஆண்டு தமிழினம் குருதியும் சதையுமாய் கொடுமையைச் சுமந்த துயர ஆண்டு துயரங்கள் வாழ்வின் பகுதியானது துவண்டு நாம் வாழ்ந்திடல் பயன் தராது ! இழப்பின் வலிகளை இதயத்தில் பதிவோம் இனியென்ன உள்ளது என்றே நிமிர்வோம் பணியெங்கள் பணியது தேசம் மீட்பதே என்பதை எங்கள் இதயத்தில் பதிவோம் கனியெங்கள் கைகளில் வருமோர்நாளென்று காரியம் ஆற்றிடும் வலிமையை பெறுவோம்! கையைக் குலுக்கியே முதுகிலே குத்தினார் அவரைக் கட்டித் தழுவியே முகத்திலே அறையும் நல் தந்திரங்களை நாமும் தேடுவோம் நாளைய ஆண்டினை எமதாய் மாற்றுவோம்! நம்பிக்கையோடு எம் மனங்களை இணைப்போம் நாளையென்பதை…
-
- 7 replies
- 1.2k views
-
-
சூரியனாய் இரு! சூரியனாய் இரு! சூரியனாய் இருப்பதில் பெரும் சுகம் பூமியும் கூடவே சுற்றிச்சுற்றிவரும்! கொடும் வெம்மை என்று வைதாலும் தன் பாதையை விட்டு விலகுவதில்லை "பரிதி" என்பதுதான் எத்தனை பொருத்தம் துவைத்து வைத்த ஆடைக்கும் - வற்றல் வடாம் மிளகாய் என நாக்குக்கு சுவைதேடும் பல இங்கு உலர்த்தவும் மழைக்கும் இவனே காரணமாகவும் மலர்கள் மலைகள் செழிப்பின் வண்ணமும்! உடலின் உறுதி சுறு சுறுப்புக்கும் இவனே காரணம் ஆம் இவனெம் தாமரையின் காதலன்! மேகம் மறைக்க கூடும் நாயும் குரைத்து ஓடும்! இவன் சிரிப்பின் ஒளிர்வே கதிராய்! என்றும் தன் கடமை விட்டு விலகா சூரியனாய் இருப்பதன்றோ பெரும் சுகம்!
-
- 6 replies
- 1.2k views
-
-
" பசி " ... என் பசி யாரென்று தெரியுமா...? உங்களுக்கு...? பசி என், " அழையா விருந்தாளி "... சாதி,மதம்,இனம்,சமயம் பார்க்காத சமத்துவ விருந்தாளிதான், ஆனால், இவன் என் வீட்டில் மட்டுமே இலைப்பார ஆசைப்படுகிறான், இவனுக்கு நான் என்ன விருந்து படைக்க..? ஒட்டு துணியில் மானம் காக்கும் என்னைபோன்றோர்.. ஒட்டு மொத்தமாய் வயிறு நிறைந்ததே இல்லை...! எங்கள் வீட்டு கதவை மட்டும் தட்டும் இந்த விருந்தாளி, கல்லாய் கிடக்கும் கடவுள்களை சீண்டி கூட பார்க்காதோ..? சாமிக்கு படைத்துவிட்டு நீங்கள் வாங்கும் ஒரு உருண்டை பிரசாதத்தில் சிறு உருண்டை கொடுத்து இருந்தாலும் பசி போக்கி இருப்பேனோ..? அப்போது " பசியாற்றுதல் " என்ற…
-
- 6 replies
- 1.2k views
-
-
காதலில் தொலைந்தேன்...... கவிதை வலியாக- -இளங்கவி அந்திப் பொழுது அழகன பூஞ்சோலையில்... ரோஜா குளியலில் நான் திழைத்திருக்க மல்லிகைக் குவியலாய் என் மனங்கவர அவள் வந்தாள்.... என் முன்னால் முட்செடியில் ரோஜாக்கள்... முழு நிலவாய் அவள் முகம்... மூன்றாம் பிறை நிலவு... நான் முனிவனா என்ன முகங்குனிந்து செல்ல...! சனங்கள் நெரிசலிலும் அவள் நடையை அழகாய் ரசித்திருக்க...... யாரோ ஒருவன் அடித்துவிட்டான் என் மணிபேசை... அதைத் தேடவா..? அவளைத் தொடர்வதா...? மனதில் உடன் பதில் உடனே தொடர் என்று.... காரணம்..கணப்பொழுதில் உன் கண்களினால் உன் மனதைச் சென்றடைந்தவள்... அவளுக்காய் உனை மறந்து உன் உடமையைத் தொலைத்தவன்... எனவே அவள் …
-
- 11 replies
- 1.2k views
-
-
விழிகளின் பயணம் அவள் விழிகளில் விம்பம் ஒளிக்க விரைந்தது - அவன் விழிகள் கண்டதும் கண்களில்- சிறைசெய்து கொண்டால்- வென்றான் சுகந்திரம்- உயிர் குடுத்து வெல்லா போர். 2விழிகளின் பசி அவள் விழிகள் பட- இவன் விழிகள் விரைந்தோடும்-தெரு பரந்து கிடக்கும்-காடு ஒழிந்திருக்கும்-பொந்து சென்றெட்டா-கடல் கண்டதும் காதல்- பிறந்த்தது கவிதையும் மீண்டும் ஓர் கவிதை எழுத்துபிழைகளுடன். முயற்ச்சி செய்தேன் வந்த்தது தமிழில்.இப்படிக்கு ஜரோப்பிய தமிழ் மகண். திருத்தங்களும் திட்டுதல்களும் தேவைப்படுக்கிறாது. தயவுசெய்து கொடுத்துதவுங்கள்.எழுத்து பிழைகளைல் திருத்த. நன்றி
-
- 2 replies
- 1.2k views
-
-
என் அக்காச்சி அன்பான பெற்றோருக்கு நிலவொத்த அழகாய் பிறந்தவள் என் அக்காச்சி . அவளின் வேண்டுதலால் ஈரைந்து வருடங்களின் பின் வந்திதுத்த் செல்லப் பயல் நான் ஈரைந்து மாதங்களில் இருந்தே என்னை சீராட்டி பால் புகட்டி தூக்கி திரிந்தவள். துள்ளித்திரியும் பருவத்தே துடுக்கடக்கி தலைசீவி பள்ளிக்கு அனுப்பி வைத்தவள். சக நட்புடன் சண்டை என்றால் கோவித்து நான் முடங்க நீதி கேட்கும் தேவதை அவள். சின்ன சின்ன தவறு செய்தால் திருத்தி விடும் தாயவள். அம்மாவும் அப்பாவும் காய் கறி தோட்டத்தில் பணி செய்ய வேளைக்கு சோறு தந்து வேண்டிய உதவி செய்து சமயத்தில் என் சல்வை தொழிலாளியும் கூட . உயர்கல்வி கற்க வேற்றிடம் செல்ல நேர்கையில் விழி நிறைந்த கண்களுடன் வழிய…
-
- 6 replies
- 1.2k views
-
-
உடல்கள் புதைந்தாலும் உணர்வு புதையவில்லை.... இளங்கவியின் - கவிதை..... முற்றத்தில் வேப்பம் பூ கோலமிட... வாசலுக்கு வெற்றிலைகள் மாலையிட... செம்பருத்தி பூ வருவொரை வரவேற்க ஆச்சியின் எடுப்பான வெளிப்பல்லு சொந்தங்களை அன்பாக வரவேற்ற.... எங்கள் அன்பான தமிழீழம் அழிந்து அடிமண்ணில் புதைந்ததுவே..... இடப்பெயர்வில் தொடங்கி பட்டினியில் தொடர்ந்து பயத்திலே வாழ்ந்து பாதியாய் செத்து; பின்னர் மீதியும் செத்த; மானமுள்ள தமிழினமாம்..! ;இன்று மண்ணோடு மண்ணாக மரணப் புதைகுழியில்.... கடைசிக் கதறலும் கயவனுக்கு கேட்கவில்லை கண்ணீரில் பல குழந்தை அவர்கட்கு காயமும் வலிக்கவில்லை ஆனாலும் தன் மரணம் ஏனென்றுதான் புரியவில்லை உயிருடன் உள் …
-
- 4 replies
- 1.2k views
-
-
தோழிகளின் கிண்டல் பேச்சில் "வெட்கித்து தலைகுனிந்திருந்த" தருணங்களவை.... எதிர்வரும் பேய்களின் கண்ணிற்க்கு "விருந்தாகி நாணிக்குறுகியிருந்த" தருணங்களவை.... தலைவனின் தழுவலில் "பெண்மையில் சிலாகித்திருந்த" தருணங்களவை.... குழந்தையின் அரவணைப்பில் "தாய்மையில் திளைத்திருந்த" தருணங்களவை.... கண்ணாடியின் பிம்பங்களில் வழிந்த "வனப்புகளில் பெருமித்திருந்த" தருணங்களவை.... . . . அவ்வாறு இருக்க கூடாதென "கடவுளை வேண்டியிருந்த" தருணங்களவை.... அப்படியேயென கும்பிட்ட "கடவுள் கைவிட்ட" தருணங்களவை... தனக்கு மட்டும் ஏன்? இப்படியென "ஆற்றாமையில் அழுதிருந்த" தருணங்களவை.... "கற்சிலைக்கேன் இத்துணை கலைநயமென" கண்கள் பூத்திருந்த தருணங்களவை ... "கடன்பட்டு புலம்பெயர்த்…
-
- 16 replies
- 1.2k views
-
-
-
உனது துணைவி உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் ஆனால் உன் அன்னையோ கடவுளால் உனக்களிக்கப்பட்ட அரிய தொரு பரிசாகும் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்காக பொக்கிஷமான தாயைத் தொலைத்து விடாதே...
-
- 8 replies
- 1.2k views
-
-
கூந்தல் நீளம் கொண்டமங்கை - என்னை கா(த்)தல் செய்ய வைத்தாள். காத்து காத்து நின்ற எந்தன் காலம் திருடிக் கொண்டாள் . தொலைவில் இல்லை வானம் என்றே தூரம் நடக்க வைத்தாள். தூரம் நடந்து முடித்த பின்னால் - துன்பப் பாரம் சுமக்க வைத்தாள் . வாழும் வாழ்வில் இனிமையேது வாதம் முடியவில்லை . வாதம் முடிவை அடையும்போது வாழ்வு இருப்பதில்லை. கனவில் தோன்றும் முகங்கள் பழைய நினைவை எனக்குள் தேடும். எனக்குள் தோன்றும் நினைவி லென்ன சுவைகள் இருக்கக் கூடும். பாலை நிலத்து நீரிலெங்கே பாசி முளைக்கக் கூடும். - நான் பார்த்த பெண்ணின் மனதிலென்று பாசம் தோன்றக் கூடும். பள்ளி வாழ்வில் நடந்ததெல்லாம் பழைய கதைகள் ஆச்சு. புதிய வாழ்வை தேட நானும் பாதை தேடல் ஆச…
-
- 2 replies
- 1.2k views
-
-
உனக்கு யாரோ ஒருவனின் கவிதை பிடித்ததில் இருந்து கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன் என்னில் ஏதாவது ஒன்று உனக்கு பிடித்ததில் கவிதையாவது இருக்கட்டுமே என்று -யாழ்_அகத்தியன்
-
- 4 replies
- 1.2k views
-
-
தன்வினை தன்னை சுடும்...(நொருங்கிய கிபிர்) முகில்கிழித்து வானதிர உள் நுழைந்தாயே.... எம் தமிழர் உயிர் குடித்து நீ மகிழ்ந்தாயே.... காலையிலே வந்து வேறு குண்டடித்தாயே... கணப் பொழுதில் உடல்கிழிந்து நீ அழிந்தாயே.... செருக்கோடு வந்துயன்று நீ திரிந்தாயே.... அந்த செஞ்சோலை உயிர்களையும் நீ குடித்தாயே.... வெறிபிடித்து உயிர்குடிக்க நீ அலைந்தாயே... இன்றோ பார் உடல் சிதறி நீ விழுந்தாயே....!!! - வன்னி மைந்தன் - :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :roll: :P :P :P :P
-
- 0 replies
- 1.2k views
-
-
வேணாம் மச்சான் வேண்டாம்.....!!! ----------------------------------------------- ஊரில் இருக்கும் மச்சான் சுகமாடா? நீயும் “வெளிநாட்டுக்கு “ வரப்போகிறாய் எண்டு கேள்விப்பட்டன்!!! உன் முடிவில் "நியாயம்" இருக்கிறது இருந்தாலும் "யாதார்த்தம்" வேறு மச்சான் கோதாரி விழுந்த காசுதான் எங்களின் சந்தோசங்களை முடிவுசெய்கிறது அதுதான் எங்களின் வாழ்வையும் தீர்மானிக்கிறது கிட்டடியில அவுஸ்திரேலியா வந்த பக்கத்து வீட்டு சேகர் அனுப்பும் காசில்.. "மாபிள்" பதிச்சு வீடு எழும்புது "ஏசியும் கலர் கலரா பெயின்றும்" வீடு பழபழக்குது..!! "ஐபோனும் கீறோ கொண்டாவும்" கனவில வந்து சாவடிக்குது என்ன இழவுக்கு இங்க கிடந்து சாவான் என உன் மனம் அலைக்கழியுது கொப்பர் அடிக்கடி புறு…
-
- 3 replies
- 1.2k views
-
-
சந்திர ஒளிதனில் சுந்தர விழிகளால் மந்திரம் இல்லாமலொரு தந்திரம் செய்ததென்ன.. அந்த இந்திரஜாலத்தில் என்னைத் தொலைத்து இன்னும் இதயம் வலிப்பதென்ன.. மாலை மயக்கத்தில் தேன்சுவை இதழ்களால் தீஞ்சுவை போலொரு வார்த்தை வடித்ததென்ன.. அந்தக் காவியவார்த்தை கண்களைக் கட்டி காலங்கள் தோறும் கண்ணீர் விடுவதென்ன.. காரிருள் வேளை மோகத்து முன்னிரவில் மேகம்போல் மென்மையாய் காதல் வரைந்ததென்ன.. அந்தக் காதல்கவிதை காணாமல் போய் வாழ்வில் வருந்தித் துடிப்பதென்ன..
-
- 5 replies
- 1.2k views
-
-
]''இப்போ...விட்டிடு....'' புலம்பெயர் நாட்டினில் புலமையோடிருந்தவன் புரட்சியாய் எழுந்த புலி வீரன் கண்டான்... தலைவனை கண்டவன் தன்னிலை உரைத்தான் தன்னையும் விடுதலை வேட்கையோடிணைந்தான்... திறமைகள் கொண்டவன் திருப்பங்கள் கொடுத்தான் விடுதலை விருட்சமாக விருட்சங்கள் விதைத்தான்..... மறைவிடம் தன்னில் மறைவாய் இருந்தவன் மதியுரை உரைத்தவன் மக்களை ஈர்த்தான்... விடுதலைக்காய் வந்த விடயங்கள் சொன்னான் அரசியல் நுட்பங்கள் வித்தையாய் கற்றவன்.... ஆட்சி பீடங்களை ஆடவே வைத்தான் நூலகம் என்ன- இவனே நூலகம்.... வந்தே குந்தியார் வாய்விட்டு கதறுவார் வரலாற்றை புரட்டியே வகுப்புகள் கொடுப்பான்... பட்டறை போட்டு பயிற்சிகள் எடுத்தவர…
-
- 4 replies
- 1.2k views
-
-
ஒத்தையா பிறந்தவனே பாசமா வளந்தவனே கத்ததை கண்டறிஞ்சு பேர்வாங்கி நடப்பாயா சொத்தையா போனபிள்ளை ஊரிலே பல இருக்கு மந்தையா வளத்தாரே அவர் பெத்தவரா செத்தவரா பதினெட்டு ஆயாச்சு பயிற்சிக்கும் அழைச்சாச்சு மினக்கெட்டு போயிப்போ ஒருவருசம் கழிஞ்சாச்சு தாய்நாடு காப்பதற்கு உன்போல மைந்தர்கள்-அதைத் தொட்டவனின் தலையெடுப்பர் அவரெல்லோ வீரர்கள். அமைதிப் படையாக ஈராக்கு சென்றுவர ஆசையாய் கேட்டாய்நீ பயந்துநான் போனேனே அமெரிக்கன் தனக்காக பலத்தோட ஆக்கிவைச்ச அரசியல் பலிக்களந்தான் பிறர்ஆவி போக்கிவைக்க அவனுக்கு ஒயில் வேணும் கால்மிதிச்சா நிலம்வேணும் சிவனுக்கும் மேலாலை புஸ்சுக்கு பவர்வேணும் கணக்குக்கு சொல்லிவைக்க வானளவு பணம் இருக்கு பிணக்கொன்றை தீர்ப்பதற்கு பிணக்குவியல் த…
-
- 4 replies
- 1.2k views
-
-
உன் மெளனம் கூட ஆசைப்படுகிறது நீ பேசுவதைப் பார்த்து கவிதையாக வேண்டுமென்று * பூச் செடிக்கு பக்கத்தில் வைத்து உன்னை படம் எடுத்ததில் உன்னைப் பறித்த பூவின் புன்னகை தெரிகிறது * இரவு வந்தால் போதும் கவிதை நேரத்துக்காய் காத்துக் கிடக்கிறேன் வானொலிக்கு பக்கத்தில் அல்ல என் கைபேசிக்கு பக்கத்தில் * உனக்கு பிடித்த எல்லாம் எனக்குப் பிடிக்கும் உனக்கு பிடித்த கவிஞர்களைத் தவிர * வாசல் அழகுக்காய் கோலம் போடுகிறாய் நீ கோலம் போடும் வரைதான் அழகாக தெரிகிறது வாசல் -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.2k views
-
-
வருகிறதாம் - பொங்கல்! மனசும் எம்மிடமில்லை அதில் தூங்கும் மகிழ்வும்.. உன்னிடம் பகிர இல்லை! பானை வட்ட விளிம்பு நுரை மூட பட்டாசு கொளுத்தி.. மகிழ்ந்த காலமெலாம்......... பறந்தே போச்சு! வாழ்வை...... நடு வீட்டில் ......... உயிர்கொண்ட கற்றாளை போலவாக்கிச்சுதாம் -காலம்! எதிரிகளெல்லாம் இருந்த காலம் போய் - கூட இருப்பவரே குரல் வளை உடைக்கும் காலம் ஆனபின்னே... நீ காலமாகிடு பொங்கலே... நமக்காய் ஒரு காலம் வந்தபின் திரும்பிடு!
-
- 4 replies
- 1.2k views
-
-
வற்றாப்பளை கண்ணகி வழக்குரை காதை -தீபச்செல்வன் 01 வண்டில் பூட்டி வந்து வயல் வெளியிலிருந்து கோவில் முற்றத்தில் பானை வைத்து பாற்பொங்கலிட்டு விடியும் பொழுதுவரை கடல் நீரில் எரியுமுன் விளக்கின் ஒளியில் முகம் பரப்பியிருக்க ஏழு கன்னியரிலொருத்திபோலான என் தோழி இம்முறையும் திரும்பவில்லை குருதியூறி ஓலங்களால் நிரம்பிய இதேபோலொரு வைகாசியில் அவள் காணாமற் போனதும் இவ்வெளியிற்தான் சுடுமணல்போல் இருதயம் தகித்துக் கிடக்க இருண்ட தாழைமரங்களுக்குள் கேட்கும் ஒற்றைக்குரல்கள் அவள் குறித்தொரு இரகசியமும் சொல்லவில்லை உடைந்த குரலில் ஆயிரம் கண்கள் கசிய தனித்தலைபவனின் காலடிகளைத் தொடரும் நாரைகளும் மௌனம் கலைத்தேதும் பேசவில்லை 02 …
-
- 1 reply
- 1.2k views
-
-
யுத்த மேகங்கள் கலைந்து-வானில் குண்டு மழைகள் ஓய்ந்து-அடங்கி மரணத்தின் ஓலங்கள் மறைந்து-ஓடி இரத்ததின் ஆறுகள் இமைகள்- மூடி நரபலி மனிதனின் பற்கள்-விழுந்து புரையோடிய மக்கள் கொள்கைகள்-மாறி இன்றுதான் பிறந்தோம் என்று-கூறி பறவைகள் வானில் இனியகானம்-பாடி பொன்மணி நெற்கள் கொழித்து-விளைந்து பிறந்த் பூமியில் உறவுகள்-கூடி இனிமையாகும் அந்நாள்-எந்நாள்
-
- 4 replies
- 1.2k views
-
-
ஒற்றை இரவு எத்தனை பிணங்களைச் சுமக்கிறது எத்தனை பேரை விதவையாக்கிறது எத்தனை பேரை அநாதையாக்கிறது இத்தனையும் சுமக்கிறது தமிழீழம் இது மட்டுமா................? பத்துமாதம் தவமிருந்து பெற்ற பிள்ளையை ஷெல்லுக்கு பறிகொடுத்துவிட்டு தேம்பி அழும் தாயின் மனநிலை கண்டு பாலுக்கு அழுத பிள்ளைக்கு தாய்(ப்) பால் கொடுக்கும் போதே பாவிமகன் வானிலிருந்து போட்ட குண்டால் வாழ்விழந்துபோன தாய்,சேய் நிலை கண்டு சோற்றுக் கோப்பைக்குள் கை வைக்கும் போதே சொல்லாமல்ப் போன உயிர்களைக் கண்டு விடியலே தெரியாது விழி கூட மூடாது வாழும் உறவுகளின் நிலை கண்டு மரம்,செடி,கொடிக்கு கூட வாயிருந்தால் அழுதுவிடும் ஓநாய்கள் கூட ஒப்பாரி இசைக்கிறது இரவு வானில் நிலவு கூட சிவக்கிறது ஈ…
-
- 0 replies
- 1.2k views
-
-
கண்டுணர்! அண்டமெங்கும் ஆண்டவெங்கள் தண்டமிழை நண்டெழுத்து ஆள உண்டுடுத்து வாழ்வதோ? கண்டமெங்கும் கண்டவெங்கள் வண்டமிழர் கூட்டம் கண்டவர்க்கும் காலமெலாம் தொண்டு செய்து சாவதோ? இதை கண்டுணர்ந்து தண்டெடுத்து குண்டெடுத்து ஈழமதை கொண்டு வந்தால் பண்டுலகர் போற்றுவர் - இல்லை விண்டவரும் தூற்றுவர்!
-
- 3 replies
- 1.2k views
-