Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. காசுதான் வாழ்வா ???? வெண்பனிப் புகார் அடர்த்தியாய் மண்டியிருக்க பைன் மரத்துக் காடுகளில் பையப் பைய நடக்கையிலே உன் நினைவும் என்னை ஊஞ்சலாய் ஆட்டுகின்றது...... காலப் பெருவெளியில் உன்னைக் காசுக்காய் தொலைத்தவனுக்கு காலம் தந்த தண்டனை காலத்தால் அழியாதது..... என்மீது நீ கொன்ட அன்பு சுத்தமானது , அதை நான் அசுத்தமாக்கியது என் பிழைதான் பெண்ணே ....... என்னிடம் வந்தவளோ என் காசைக் கணக்குப் பாக்க , பாலை மணல் வெளியில் வழியைத் தொலைத்த வழிப்போக்கனைப் போல நானோ அவளிடம் அன்பைத்தேடி அலைகின்றேன்........ அன்பை மட்டுமே அள்ளித் தரத் தெரிந்த உனக்கு என்னைப் போல் வண்டுக் குணம் இல்லைத்தான் வாழ்க்கையில் வெற்றி... வெற்றி ....... என்று மார்தட்டிய எனக்கு காலம் …

  2. கோப்பையில் குடியிருக்கும் என் வாழ்வு பற்றிய புரிதல் நிரப்பி முடிக்க இனி ஒன்றும் இல்லை எல்லா glass களிலும் நிரம்பித் தளும்புகின்றது மது முதலில் சின்ன எரிச்சலுடன் இறங்குகின்றாள் தேவதை ஆடை கழற்றி அணங்கு ஆடுவது போன்ற பிரமை உடலின் நரம்பெங்கும் உலவுகின்றது ஒவ்வொரு முடிச்சுகளிலும் சொர்க்கம் ஒவ்வொரு உறிஞ்சல்களிலும் அற்புதம் வெற்று glass களிலும் மிச்சமிருக்கின்றது ஒருவனின் வாழ்வு பற்றிய புரிதல் ************ கடந்த வருடம் என் glass களில் இன்னேரம் மரணம் நிரம்பியிருந்தது மரணச் செய்தியால் என் வாழ்வுக் கிண்ணம் நிறைந்திருந்த காலம் அது என் நண்பர்கள் என் மருமக்கள் என் உறவுகள் என்று கொத்தாய் அழிந்த காலம்…

  3. Started by ரஞ்சித்,

    தம்பி ! நீயும் நானும் திரிந்தலைந்த எல்லப் பற்றைகளும்- முள்ளேறிய வீதிகளும் இப்போதும் வந்துபோகும் ! கருக்கம் மட்டை பிய்த்து-திராட்சை பறித்த கணங்களும் காரிருளில் மின்னி மறையும் ! பூவரசங்கிளையில் வாள் பிடித்து-மெய்யாவுமே அடித்தழுத நினைவுகளும் என்னைச் சுற்றி வரும்- ஆனால் நீ மட்டும் வராமலயே இருந்துவிட்டாய் ! நீ- புரவியேறிப் போன செய்தி கேட்டு விழித்திருந்தோம் இரவாகி நீ விண்ணேறிய சேதி வந்தது- கதறக் கூட முடியவில்லை- ஊர்சுற்றிக் காவலிருந்தது ! உன் இழப்பிலும் ஒரு உற்சாகம்-நான் கொடுத்து வைக்கவில்லை ! வைத்திருந்தால் உன் முன் நான் சென்றிருப்பேன் !

  4. தென் செய்தியில் தமிழாலயன் அவர்களால் எழுதிய கவிதை வெல்கின்றான் எல்லாளன்! விடிகிறது தமிழீழம்! தூய தமிழ்ச் செம்மொழியைத் தோற்றுவித்த செவ்வியர்தாம் போயழவோர் நாடுமிலை தோழி! - அவர் போக்கிலியாய்த் தானலைவார் தோழி! நேயமிலா மாந்தர்களே நீளலைகள் சூழுலகே ஞாயமிலை நாணமிலை தோழி! - செந் நாய்களுமோ நரிகளுமோ தோழி வாயலற நெஞ்சுருக வாழ்நிலைகள் தேடிவரும் வாயிலிலே குண்டுமழை தோழி! - இவர் வருவதற்குள் சாவுவரும் தோழி தாயுமிலை தந்தையிலை தன்னுறவு யாருமிலை சேயழுகை கேட்கலையோ தோழி! - கொடும் செவிடர்களோ ஊருலகம் தோழி யார்குடியைக் கெடுத்தார்கள் யாருணவைப் பறித்தார்கள் யார்யார்க்கும் உறவலவோ தோழி! - இவர் யாதும் ஊர் என்றதற்கோ தோழி போர்மூட்டும் புத்த…

  5. பதின்மங்களின் படிமக்கனவுகள்; புதினங்களாய் பேசிக்கொள்ளும் இரகசிய வார்த்தைகள்; இளசுகளின் சுத்தல்களில் பெருசுகளுக்குப் புரியாத தலைமுறை வளர்ச்சியின் வழக்கமான அதே காதல்! எப்போதும் புத்தம் புதிதாய் மின்னும் எண்ணங்களுடன் தோன்றும் மின்னல்கள்! மின்சாரம் இல்லாத ஊரில் மனசுக்குள் விளக்கெரியும்! இரு ஜோடி இதழின் அழுத்தத்தில் பலகோடி 'வோல்ற் ' மின்னழுத்தம் பிறக்கும்! முதல் முத்தம் எப்பொழுதும் தலைக்கேற்றும் பித்தம்! முதன்முதற் காதல்.... காலத்தால் அழியாத இதயத்தின் மோதல்! சூரிய உதயங்கள் வரை வண்ணக் கனவுகள் ஆக்கிரமித்த வாலிப பருவத்தின் வலிந்த போர்க்காலங்கள் ! கருவேப்பிலை மரத்தைக்கூட பெருவிருப்போடு பார்த்து ரசிக்க வைத்து நெருப்பாக தேகம் கொதிக்க வைத்து பார்வையாலே …

  6. கண்ணீரை வரவழைக்கும் வீராவின் கவிதை

    • 0 replies
    • 1.1k views
  7. Started by piththan,

    உறங்குவதும் உண்பதும் மட்டும் உன்வேலை என்றால் ஆடைகள் உனக்கெதற்கு? தலைப்பு சரிசெய்யப்பட்டுள்ளது-யாழ்பாடி

    • 2 replies
    • 1.1k views
  8. கரும்புலி வேங்கைகளுக்கு என் கண்ணின் நீர்த்துளிகள்.... கவிதை - இளங்கவி தமிழன் சரித்திரம் தெரிவித்த நாம் உரிமைகோரும் வீரம்.... தம் உயிர் நீர்த்து நம் இனம்காத்து நம் முகவரியின் மானம்...... ''முடியாது'' எனும் சொல்லை அகராதியில் முடக்கி வைத்தவர்கள்...... ''முடியும்'' எனும் சொல்லை சரித்திரத்தில் முதன்மையாய் இட்டவர்கள்..... தலைவன் வேண்டியதை கொடுக்க தன்னுயிரை ஆகுதியாக்கிடுவர்...... எதிரி வேண்டாத இடங்களிலே அவனை நெருப்பாகி எரித்திடுவார்...... கப்டன் மில்லரில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீண்ட...... எங்கள் முடிவிலா சரித்திரம் அவர்கள் முடிவறியா என் சித்தம்...? முடிவில்லா எண்ணிக்கையில் முன்னேறி வந்த எதிரியின் மூளைக்குள் புகுந்த …

  9. Started by Manivasahan,

    நல்ல கற்பனை. பலர் வெளிச்சத்தில் நிற்பதற்காய் சிலர் இருட்டில் நிற்கவேண்டியது அவசியமாய் இருக்கிறதே. மணிவாசகன்

    • 2 replies
    • 1.1k views
  10. பிணங்களைக் காக்கவோ வருவர் ? நினைவுகளோடு வாழும் நிலமற்ற அகதிகள் நாங்கள். 'நாளைய பொழுது நமக்கானது' கனவுகள் பொய்த்துக் காலிடை மிதியும் பிணங்களை விலக்கி உடலில் வழியும் குருதியைத் துடைத்து ஓடுதல் ஒதுங்குதல் உயிர் வாழுதல் பற்றிய ஏக்கமும் துயரும்.... கடற்கோள் கொள்ளையிட்ட துயரைவிடக் கொடுமையிது காப்பிடமற்ற விரிந்த வெளியில் கூப்பிடவும் யாரும் கேட்காத் தொலைவிருந்து காத்திடுவர் தூதர் கடலிடை வந்து மீட்டிடுவர் என்றான நம்பிக்கையும் களவு போய் பிணங்களின் நடுவேயான கூக்குரலும் குழந்தைகளின் கதறலும் ஏழ்கடல் நுனிவரையும் எங்களின் அழுகை.... எறிகணை துரத்தித் துரத்தி எறிந்திருப்பது கடைசி முனை.... எங்களைப் பற்றி உலகம் பேச…

    • 3 replies
    • 1.1k views
  11. இறந்தால் சொர்க்கம் எப்படி இருக்கும் என்பதை வாழும்போது தந்து கொண்டிருப்பவள் நீ * யார் சொன்னது கண்பட்டால் வாழமுடியாது என்று என்னவள் கண் பட்டதால்தானே வாழ்கிறது என் கவிதைகள் * உன் மூக்குத்தி மின்னுவதில் தெரிகிறது வானவில்லின் அழகு * உன் பாதச்சுவடெங்கும் தேங்கிய மழை நீரில் உன் முகம் காட்டுகிறது நிலா * வாடாத உன் புன்னகை கண்டு பொறாமைப்படுகிறது பூக்கள் எல்லாம் * உன் வருடலுக்காய் ஏங்குகிறது என் நரைமுடிகள் -யாழ்_அகத்தியன்

  12. நீ வரும் பாதையில் உனக்காக காத்து இருந்தேன் புள்ளிமான் போல துள்ளி வருவாய் என்று எழுதிய காகிதத்தை உனக்குத் தரகாத்து இருந்தேன் நீயும் மண மாலையுடன் வந்தாயே பக்கத்துவீட்டு பாலனுடன் எழுதிவைத்த காகிதமும் என்னை பார்த்து சிரிக்கிறது இதை எப்படித்தான் தாங்குவேனோ கண்ணே பெண்ணே

  13. Started by sudalai maadan,

    [size=5]மான் விழி காட்டி [/size] [size=5]மை விழி பேசி [/size] [size=5]மாறாத என்னை [/size] [size=5]மாற்றத்துக்குள் வைத்தவளே ![/size] [size=5]வசந்தம் இன்று [/size] [size=5]ரணக்களாய் வலிக்கிறது ,[/size] [size=5]துண்டிலிலே சிக்கிய மீனாக [/size] [size=5]எந்த நம்பிக்கையும் [/size] [size=5]இல்லாமல் இருக்கிறது [/size] [size=5]எதிர்காலம் ,[/size] [size=5]சிறகில் இருந்து கழண்ட[/size] [size=5]இறகு போல் [/size] [size=5]இப்போது விதியின் [/size] [size=5]கைகளில் நான் ,[/size] [size=5]ஒரு தனி பறவையின் [/size] [size=5]அலறல்போல் [/size] [size=5]ஊமையாய் விம்முகிறது [/size] [size=5]மனசு,[/size] [size=5]சில தருணங்கள் [/size] [size=5]இதயமும்…

    • 14 replies
    • 1.1k views
  14. பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய் கிடப்பதா? சொல்லாண்டு தமிழினம் அடிபட்டு சாவதா? பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா? மெல்ல தமிழ் இனம் இனி சாகுமா? வெல்லா போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா? எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம் எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொருக்குவோம் கொல்லா குணம் இன்னும் தேவையோ? எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ? செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி ஷெல்லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்..! கல்லாய் நீயும் இருப்பதோ..! கடவுளையும் துணைக்கழைப்பதோ..! மெல்லத் திறந்திடு உந்தன் சிந்தனையை பொல்லாப்பகை விரட்ட -புலி படையுடன் இணைந்திடு நல்லார் உலகை படைக்க நாமும் இணைவோம் சொல்லார் எம் மீத…

    • 4 replies
    • 1.1k views
  15. மனதில் ஓர் காதல் பரிசு..... கவிதை - இளங்கவி சேர்ந்த உதடுகளுக்கிடையில் சீனப் பெருஞ் சுவராய் அவளின் தலைமுடிகள அவன் உதட்டை உறுத்தின........ அவள் மூச்சின் வெப்பம் மூச்சால் வெளிவர மறுத்து அவள் கண்களூடே வெளிவர அவன் கண்களோ- அவளின அனல் மூச்சின் வெப்பம் தாளாமல் அதைத் தணிப்பதற்கு வேறு இடம் தாவியது....... அங்கே குளிரும் அறையில் கொதி மலைகளின் தழுவல்..... இரத்த நாடிகளின் வேகம் அதன் உச்சத்தில் இருக்க... இரத்த நாளங்களோ அதற்குப் பக்கத் துணையிருக்க.... போதாது என்று- அவன் ஏக்கம் கூடவும்..... போதும் வரை போராடு என்று அவளின் உணர்வும் சேரவும்.... அந்த அறையில் சில நிமிடப் புயல்கள்.... சில கணங்கள் அமைதி.... பல நிமிட அணுயுத்தம் …

  16. அம்மா கவனம் அம்மா இந்த நாட்கள் எம்முடனேயே முடியட்டும். இனி எவரும் இப்படி வாழவேண்டாம் . இவ்வாறு சாகவேண்டாம். உன்வைற்றில் உள்ள என் இளையவனோ இளையவளோ நான் பட்ட துன்பம் நீபட்ட சிரமத்தை நினைக்கவே கூடாது! இத் துன்பங்களும் அவர்களை நெருங்கவும் கூடாது!! நாம் நெருங்க விடவும் கூடாது! அப்பா இல்லை.இருக்கிறாரோ தெரியவில்லை! இருந்தாலும் இனி மனிதனாக நடமாடக்கூடியதாக அவர்கள் விட்டு வைத்துள்ளார்களா தெரியாது...??? ஆமி பிடிச்ச எதிர் வீட்டு மாமா திரும்பி வந்தபோது அவர் வந்தது எவ்வாறு எனக்கு தெரியும்.! அம்மா நீ கவனம் அதைவிட உன்னுள் உறங்கும் என் இளையவர் மிகக்கவனம். இப்போ சிங்களவன் இலக்கு பிறக்காத குழந்தைகள் தான். அவர்களுக்கு விருப்பம் தமிழ் சிசுவின் கொல…

  17. Mohamed Nizousபற்ற வைக்கின்றபைத்தியகாரனுக்கும் தெரியாது.எரிகின்ற கடையுடன்எத்தனை மனிதர்களின்எதிர்காலமும் எதிர்பார்ப்பும்எரிகின்றது என்பது.கல்லை எறிகின்றகாவாலிக்குத் தெரியாது.கண்ணாடியுடன் சேர்த்துதன்னாட்டின் பெயரும்உடைந்து போய்உலகளவில் நொறுங்குவது.பள்ளியை உடைக்கும்மொள்ளமாரிக்குத் தெரியாது.அள்ளாஹ்வின் வீட்டில்அத்து மீறி நுழைந்துஅட்டகாசம் செய்தவன்பட்டழிந்து போன செய்தி.வீடுடைத்து எரிக்கும்காடையனுக்குத் தெரியாது.பிறந்து வளர்ந்துபறந்து வாழ்ந்த வீடுஉடைந்து போகும் போதுஉள்ளே எழும் வலிஉடைக்கின்ற காடையனைஒரு நாள் வதைக்கும்.ஐம்பதாயிரம் தருவதாகஅறிவித்தல் கொடுக்கும்அரசுக்குப் புரியாது.தருகின்ற பணம்கருகிய இடத்தின்கறுப்பைப் போக்கவும்காணாது என்று.பாட்டுக் கேட்க கோல் எடுக்கும்பாத்திமாக்களுக்…

    • 0 replies
    • 1.1k views
  18. இரத்தத்தில் தோய்ந்த நிலா....... கவிதை..... ஓர் அம்மாவின் அழுகுரல் அவளருகே தலையிழந்த அத்தாயின் மகனின் சிதறுண்ட ஓர் உடல்..... அந்த அம்மாவைத் தேற்ற நம் போராளிகள் சிலர் எதற்கும் தேறாத மரணத்தின் அழுகுரல்..... நான் கண்டது கனவல்ல காணொளியில் அது நிஜம்.... இது ஓர் நாளின் ஒரு நிமிடக் காட்சி.... வன்னியில் என் நாளும் எத்தனை நிமிடங்கள் அங்கே என் நாளும் கொலையின் பின் கொலையாக எத்தனை மரணங்கள்.... காட்சிகளை காண முடியாமல் மூச்சு முட்டிடவும் முன் எழுந்து சென்று ஜன்னலின் திரையை விலக்குகிறேன்..... நிலாக் கூட நிறம்மாறி சிவப்பாகத் தெரிகிறது... வன்னியில் இரத்தத்தில் குளித்துவிட்டு எங்கள் பார்வைக்கு …

  19. Started by அஞ்சரன்,

    அமர்த்து இருக்கிறார் நடுவில்.. ஆலாவட்டங்கள் ..சாமரங்கள் .. கன்னியர்கள் கூட்டமாக விசியபடி .. நீதியை காக்கும் சபையாம் அது .. அன்றில் இருந்து இன்றுவரை உலகில் .. ஓலம் இட்டார் எல்லாம் ஒடுவரும் இடம் .. ஒப்பனைகள் கலையாமல் பார்த்தபடி .. தளங்கள் பல போட்டு தலையாட்டி பொம்மைகள் ... இன்னும் ஒரே பாட்டுக்கு ஆடுகிறது .. இசையும் மாற்றம் இல்லை அவர்கள் .. இயல்பும் மாறவில்லை குணங்கள் எப்படியோ .. கூடியிருத்து பேசுகிற நேரம் மட்டும் .. அவர்களுக்கு உலகம் வெளிப்பா தெரியும் .. அப்பொழுது கூட ஒருபகுதி ஒளிப்பாக .. அங்குதான் கனியம் இருக்கும் வளம் இருக்கும் .. தங்களுக்குள் கைகுலுக்கி பங்கு பிரிப்பர் .. வெளியில் வந்து போட்டோக்கு போஸ் கொடுத்து .. பொங்கி எழுந்து உரையாற்றி கண்ணில் .. சினம் காட்டி மீறல் என…

  20. [size=4] [size=4]ஆஸ்திரேலியா, கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு அன்று “மறந்து போகுமோ?” என்ற கவியரங்கத்தில் “பள்ளிப்பருவம்” பற்றிய எனது படைப்பு. இதில் கவித்துவமோ, நான் பகிர்ந்த விதத்தில் ஒரு அரங்க பாணியோ கிடையாது. ஆனால் அனுபவங்களின் நினைவூட்டல் என்ற வகையில் ஓரளவுக்கு திருப்தியை தந்த படைப்பு. வாசித்து விட்டு சொல்லுங்கள்![/size][/size] [size=4] தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி! [/size][size=4] கூழுக்குள் நீந்தியது காணும்! கரையேருங்கள்! எனக்கு புரையேறுகிறது! கவிதைக்கு அவ்வப்போது கரவோசையும் வேணும்!. அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன் வணக்கம். [/size] …

    • 7 replies
    • 1.1k views
  21. அழியா வரம் பெற்ற ஆதவன்கள் எழுதியவர்: த.சரிஷ் விடுதலை நெருப்புக்கு நெய்சேர்த்து சென்றுவிட்டது ஒரு நெருப்புக்குழந்தை...! ஈழத்தின் ஒவ்வொரு ழூலை முடுக்கிலும் விடுதலை நெருப்பை விதைத்துவிட்டு மெல்ல அணைந்துவிட்டது அந்த நெருப்பு...! இந்த நெருப்புப்பந்தின் வெளிச்சம் மெல்ல அணைந்தாலும் வெப்பம் இன்னும் அடங்கவில்லை...! தமிழீழத்தில் புறப்பெடுக்கும் கடைசிக்குழந்தையின் காலம்வரை கட்டாயம் அடங்காமல் இருக்கும் இந்த வெப்பம்...! ஒரு வழிகாட்டி புறக்கப்போகும் பிஞ்சுக்கும் பாடமாகிவிடுகிறான்...! மானிடகுலத்தின் கடைசிக்காலம்வரை செல்லும் வாழ்க்கைப்பயணத்தில் எதிர்பாராமல் இடைக்கிடையே இனம்தெரியாத இடிமின்…

  22. 01. உடலின் முன் மண்டியிட்டொரு மன்னிப்பு மஞ்சள்நிறக் கரைசல்கள் வழியும் சுவர்கள் மாத்திரைகளின் உபயம். காய்ச்சலின் தகிப்பைத் தம் குரலிலேற்றிப் பாடுகின்றன பறவைகள் உடலை இருபாதியாய் வகிர்ந்து பரவுகிறது வெப்ப மின்னல் பாதங்கள்தாம் எத்தனை கனம் உலகமோ எனக்கு எட்டாத தொலைவில் 'இதுதான் கடைசி; இனிமேலில்லை' உடலின் முன் மானசீகமாக மண்டியிடுகிறேன் பொதியுடன் மலையேறும் கழுதைபோல என்னைக் கொண்டிழுக்க எவ்வளவு சிரமப்பட்டாய் நீ. இந்த உலகின் நிறம் குருதி சுவையோ வட்ட நீள வில்லைகளின் கசப்பு மணம் சிறுநீர் ங்.....ஙென்றொரு சுநாதம் அ…

    • 1 reply
    • 1.1k views
  23. Started by vanni mainthan,

    ''மா வீரர்கள்....'' கார்த்திகை மாதம் கண்ணீர் வடிக்கும் கல்லறை மீது தீபங்கள் ஏற்றும்.... பொன்னவர் உடல்கள் புக்களால் குளிக்கும் தேசமே திரண்டு அஞ்சலி செலுத்தும்... எங்களை காக்கவே தம்மையே அழித்தவர் மண்ணையே காக்கவே மரணத்தை ஏற்றவர்.... தீர செயல் கண்டு நெஞ்சமே விறைக்கும் உணர்வுகள் சிலிர்க்கும்... மெழுகாய் உருகி வழிகள் அழும் அவர் கல்லறையதையே கண்ணீர் கழுவும்... எழுந்தே வந்து என்னை உதைப்பான் அழுகிறாய் ஏனென்று என்னை கேட்பான்... அழுதே என்னை அசிங்கமாக்காய் எழுந்தே போய் களத்தில் நிற்ப்பாய்... அந்நியன் அவனை அடித்தே கலைப்பாய் அன்னை மண்ணை மீட்டே எடுப்பாய்... கல்லறை இருந்து கட்டளை இடுவான் இற…

  24. அமைதித் தளபதி- அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் தொங்கும் நகரில் சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில் சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள் நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து விரிந்த மலர்கொத்துக்களைபோல் புன்னகையை நீட்டியவனின் உதடுகளை மூடிக் கிடந்தது ஈரமண் முள்முருக்கில் அமர்ந்திருந்த வெண்புறா எழுந்து பறந்தது கொடும் சிங்கத்தின் முகத்துடன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.