Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. பயங்கரவாதியின் மகள் இறந்தேனும் தன் துணைவனைக் கண்டுகொண்டாள் அவள் இப்படி ஒரு நீள் பிரிவு எந்தப் பெண்ணுக்கும் கிடைத்துவிடக்கூடாது என எண்ணியபடி ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி எந்தக் குழந்தையும் இப்படி ஒரு சிறை வண்டியில் ஏறிவிடக்கூடதென எண்ணியபடி தாயின் சடலத்தின் பின் கொள்ளிக்குடத்துடன் சென்றான் சிறுவன் எந்தக் குழந்தையும் இப்படி ஒரு வயதில் தன் தாயிற்கு கொள்ளி சுமக்கக்கூடாதென எண்ணியபடி காத்திருந்து காத்திருந்து இறந்துபோன துனைவிக்கு விலங்கிடப்பட்ட கைகளால் அரப்பும் சந்தனமும் அப்பினான் அவன் எந்த ஒரு துணைவனுக்கும் இப்படி ஒரு இறுதிச் சந்திப்பு நிகழ்ந்துவ…

  2. வெளிநாட்டில எங்கட பெடிபெட்டயள்

  3. எனக்குள் ஒரு பட்டாம் பூச்சி இருந்தது குளக்கரைகளில் மிதக்கும் தாழம் பூவிலும் குதித்து விளையாடும் குளப்படி வாண்டுகளிலும் லயித்து மகிழும் பட்டாம் பூச்சி அது கடந்து போகும் ஒரு துளி இசையை நூல் பிடிச்சு அதில் தொங்கி கூத்தாடும் பின் தூரத்தே கேட்கும் பறையொலியிலும் தன் சிறகுகளை விரித்து நடனமாடும் செங்கறுப்பு பெண்களின் கருத்த முலைக் காம்புகளின் மீது தீராக் காதல் கொண்டு கவி பாடும் சிலவேளைகளில் சரசமாடும் பெரும் வனம் புகும் இருள் விரும்பும் சிறுகாடு ஒன்றில் தனித்து இருக்கும் மழை நாளில் மழை நீரில் தன் குஞ்சுகளுடன் நடனமாடும் இலக்கியம் அருந்தும் மதுக் கோப்பைகளின் மிதக்கும் நுரையில் தாளம் போடும் யாருமற்ற கடற்கரை ஒன்றில் துணைவியுடன் க…

  4. எங்கள் கனவு சுதந்திர வாழ்வு உங்கள் ஆசை அகண்ட வேலி வேலியை அகட்டும் வேலைக்கான கூலியாய் எம்மை நினைத்தன் பொருட்டு கனவின் கைகளில் ஆயுதம் கொடுத்தீர் ஒன்றை ஒன்பதாய் பிரித்தீர் இருந்தும் கனவின் தினவை கண்களில் ஏந்தியோர் சொந்தக் கால்களில் நடக்கத் தொடங்கினர், புராணகாலப் பொழுதில் இருந்தே உமக்கு நாம் தான் போரும் புகைச்சலும் கடல் தாண்டி நீவிர் கதியால் போட வந்தவேளை மீண்டுமொருமுறை எங்கள் பூஞ்சோலை உங்கள் வானரங்களால் பிய்த்தெறியப்பட்டது அந்தப் பூக்களை தொடுத்தே நாங்கள் ஏவியோன் கழுத்தில் மாலையை ஏற்றினோம் சிதைதலின் வலி எத்தகையதென்பதின் நினைவூட்டல் அது, அதன் பின் காலம் சுழன்று நிழலின் பின்னே நிசமாய் அரசு நிகழ்ந்தது எத்தனை உயிர்களின் …

    • 1 reply
    • 859 views
  5. குரங்கணி வனதேவதைகளுக்கு அஞ்சலி - வ.ஐ.ச.ஜெயபாலன் . மாடு தழுவி மாளாது தினவு என யானை தழுவ மழைக்காடு சென்றவரே மழைக்காடுட்டில் இளைய தமிழகத்தை வரவேற்க ஆர்வக்கோளாற்றால் இறங்கிவந்த சூரியனே நீர் சிந்த வானூர்தி வாராத தேசத்தில் கண்ணீரால் தீயணைக்கும் கடல் சூழ்ந்த தமிழ் நாடே பெருந்தீயில் பட்ட எங்கள் குலதெய்வ நடுகல்லாய் குரங்கணியை காக்கச் சூழுரைக்கும் இளையவரே மேலை மலர்தொடர் வாழ்ந்தால் என்களது கண்மணிகள் காலமெல்லாம் வாழ்வர் மலராக வண்டாக பறவைகளாய் விலங்குகளாய் புல்லாய் வனங்களாய் பொய்கைகளில் மீனினமாய் வனதேவதைகளாய் பல்லாண்டு பல்லாண்டாய் வாழிய நம் கண்மணிகள்.

    • 2 replies
    • 1k views
  6. தேர்த் திருவிழா ----------------- நினைத்து பார்க்கிறேன்.... கோயில் திருவிழாவை.... பத்து நாள் திருவிழாவில்.... படாத பாடு பட்டத்தை ...! முதல் நாள் திருவிழாவிற்கு.... குளித்து திருநீறணிந்து.... பக்திப்பழமாய் சென்றேன்... பார்ப்பவர்கள்..... கண் படுமளவிற்கு....! இரண்டாம் நாள் திருவிழாவில்... நண்பர்களுடன் கோயில் வீதி..... முழுவதும் ஓடித்திரிவதே வேலை..... பார்ப்பவர்கள் எல்லோரும்..... திட்டும் வரை ....! மூன்றாம் நாள் திருவிழாவில்.... நண்பர்கள்மத்தியில் .... மூண்டது சண்டை ..... கூட்டத்துக்குள்..... மறைந்து விளையாட்டு ....! நாளாம் நாள் திருவிழாவில்.... நாலாதிசையும் காரணமில்லாது.... அலைந்து திரிவேன் ...! ஐந்தாம் நாள் த…

  7. இரோம் சர்மிலா பிறந்தநாள் இன்று. அவர் குறித்து எழுதிய கவிதை ஒன்று கூப்ரூ மலையின் மகள் மரட்சியுடன் திரியும் மான்கள் நிறைந்திருக்க செம் மல்லிகை பூத்திருக்கும் கூப்ரூ மலையின் மகளே நெடிய விரத்தினை முடித்து உணவருந்து! துப்பாக்கிகளின் விற்பனைக்கான பூமியில் இனியும் பசியோடிராதே! உருகிய உன்னுடலருகே நின்றவுன் சனங்கள் ஒவ்வொரு உணவு வேளையிலும் கோப்பைகளைத் தூக்கும்போதடைந்த குற்ற மனம் இனியேனும் தணியட்டும் வற்புறுத்தப்பட்ட உணவுத் தண்டணையும் மூக்கில் சொருகப்பட்ட உணவுக் குழாய்ச் சிறையும் இத்தோடு முடிந்துபோக நெடுநாளாய் மறந்த உணவைக் கையிலெடு நிர்வாண…

    • 0 replies
    • 1.1k views
  8. Mohamed Nizousபற்ற வைக்கின்றபைத்தியகாரனுக்கும் தெரியாது.எரிகின்ற கடையுடன்எத்தனை மனிதர்களின்எதிர்காலமும் எதிர்பார்ப்பும்எரிகின்றது என்பது.கல்லை எறிகின்றகாவாலிக்குத் தெரியாது.கண்ணாடியுடன் சேர்த்துதன்னாட்டின் பெயரும்உடைந்து போய்உலகளவில் நொறுங்குவது.பள்ளியை உடைக்கும்மொள்ளமாரிக்குத் தெரியாது.அள்ளாஹ்வின் வீட்டில்அத்து மீறி நுழைந்துஅட்டகாசம் செய்தவன்பட்டழிந்து போன செய்தி.வீடுடைத்து எரிக்கும்காடையனுக்குத் தெரியாது.பிறந்து வளர்ந்துபறந்து வாழ்ந்த வீடுஉடைந்து போகும் போதுஉள்ளே எழும் வலிஉடைக்கின்ற காடையனைஒரு நாள் வதைக்கும்.ஐம்பதாயிரம் தருவதாகஅறிவித்தல் கொடுக்கும்அரசுக்குப் புரியாது.தருகின்ற பணம்கருகிய இடத்தின்கறுப்பைப் போக்கவும்காணாது என்று.பாட்டுக் கேட்க கோல் எடுக்கும்பாத்திமாக்களுக்…

    • 0 replies
    • 1.1k views
  9. முஸ்லிம் நண்பா!உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்!ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை!உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்!உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்!முடியவில்லை என்னால்;காரணம் இதே ஒரு மாதத்தில்த்தான் உடும்பனில்அவற்றை நீ வெட்டிவிட்டாயே!நீ மறந்திருப்பாய்.என்னால் மறக்கமுடியவில்லை.காரணம் என்னால் நடக்கமுடியவில்லை!நினைவிருக்கிறதா உனக்கு..நீ மறந்திருப்பாய்.நீ கொலைவெறியோடு விரட்டும் போது;ஒரு கையில் குழந்தையும்இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம் வீரமுனை, திராய்க்கேணியில்.நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள்உனக்காய் அழமாட்டமா?ஆனால்;மன்னித்துவிடு சகோதரா...இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை!நீ சிங்கள இனதாண்டவத்தில் தான் தத்தழிக்கிறாய்நாங்கள் கண்ணீரில் தத்தளிக்கிறோம்!நாளை…

    • 0 replies
    • 1.1k views
  10. கலோ புத்தா.. கவ் ஆர் யூ கலோ அல்கா கவ் ஆர் யூ.. புட்டும் தேங்காய்வும் புழுத்து மணக்குது புத்தனும் அல்காவும் குத்துப்படுவமே... பார்வைக்குத் தான் இது வெளிக் குத்து உள்ள இருக்கு நல்ல உள் குத்து..!! முள்ளிவாய்க்கால் இரத்த சகதியில் பால்சோறு பொங்கினம்.. ஐநா சபையேறி புத்தனின் கோரப் பற்களை கழுவியும் விட்டம்.. பாகிஸ்தான் வரை பறந்து மல்டி பரலும் டபக்கென்று அனுப்பச் சொன்னம்.. நாடு முழுதும் காட்டிக் கொடுப்பில் காலமும் கழித்தம்.. கூட்டு அழிப்பில் கூலிப் படைகளை தந்தும் வந்தம்.. ஊர்காவல்..ஜிகாத் என்று கூடவும் அலைஞ்சம்.. …

  11. உருப்பெற்று உருப்பெற்று வார்த்தைகள் வரிசைகட்டி நிற்கின்றன பேறுகாலநிலை; பேரவஸ்தை! ஞாபகங்களின் தொடர்பறுந்து விடாமல், கண்ணாடிக் குவளையை கை பற்றுதல்போல் தாள்களில் பிரசவிக்கும் கணம்வரை கவனம் வேண்டியிருக்கிறது! கைதவறி வைத்துவிட்ட கைத்தொலைபேசி, மருமகள் மீதான அம்மாவின் வசைபாடல், மூன்றுநாள் காய்ச்சலோடு மூத்தவளின் முனகல், அடுக்களைக்கும் அறைகளுக்குமாய் அந்தரித்து திரியும் மனையாள்…. கவனத்தை சிதைத்த காலைநேர களேபரங்களோடு கருக்கொண்ட கவிவரிகளும் கட்டறுந்து விடுகின்றன. அடிக்கடி சிணுங்கும் அலுவலக தொலைபேசிகள், கணினிக்குள் தொலைந்துபோன கணக்கியல் பதிவுகள், முகாமையாளரின் மேலாண்மை சிடுசிடுப்புக்கள் கூட்டங்கள் கொதிநிலை …

  12. ஓர் வளவில் குடியிருந்தோம் எனினும் எப்போதும் எமக்கு தெரியாமலேயே பின் வேலியில் பொட்டொன்றை வைத்திருந்தீர்கள் உங்கள் ரகசிய நடமாட்டங்களின் காலடிச் சத்தங்கள் எங்கள் பிடரியில் கேட்கத் தொடங்க எதேச்சையாகத் தான் கவனித்தோம் விசாரிக்கத் தொடங்கிய வேளை அறுகம்புல்லாய் படர்ந்து கொண்டே போனது எமை நீர் அறுப்பதற்கு தயாரான ஆயிரம் தடையங்கள் கிழக்கிலும் நீரெம்மை கிழித்துத் தொங்கவிடும் மரணத்தின் சாக்குரல்கள் அடிவயிற்றில் புரளத் தொடங்க வேறுவழியெதுவும் இருக்கவில்லை கீறோ, கிழிதலோ இன்றி அப்போதைக்கான அவகாச ஏற்பாடாய் விலகிச் செல்ல வேண்டிக் கொண்டோம் அதன் பிறகு ஆயிரம் நடந்தது போனது குலை குலையாய் எமையழித்து அதைக் கொண்டாடும் அளவுக்கு நிகழ…

  13. முதுமை..... இளமையின் நினைவை..... எரிந்த சாம்பலாய்..... சுமர்ந்து கொண்டிருக்கும்.... சுமைதாங்கி..........! மரணத்தின் வாசலை....... ஏக்கத்தோடும் பயத்தோடும்....... வரவேற்றுக்கொண்டிருக்கும்...... மர்ம அறை............! அனுபவங்களை....... முற்களாகவும்...... பூக்களாகவும்...... ரசித்துக்கொண்டிருக்கும்..... ரோஜாச்செடி.....! வார்த்தைகளின்..... வீரியமும்....... இன்பங்களின்....... வீரியமும்...... அடங்கியிருக்கும்....... பெட்டிப்பாம்பு..........! எழும்பு கூட்டை..... தோலால் மறைத்து வைத்து...... கிறுக்கள் சித்திரத்துக்கு...... உயிர் கொடுக்கும்..... உன்னதமான உயிர்.........! நூறு மீற்றர் ஓட்டத்தை...... நொடிக்குள் ஓடியவனும்..…

  14. ஒரு சோற்றுப் பருக்கைக்கான பிரேதப் பரிசோதனை தன் காடுகளைப் பறிகொடுத்த ஆதிவாசியொருவன் வீதியில் செல்கையில், சலவை தூளால் தோய்த்து உலர்த்தப்பட்ட உடைகளை அணியாத வாசனை கமழும் சவற்காரத்தால் உடலை கழுவி நறுமணத் திரவியம் தெளித்துக்கொள்ளாத அவனை, திருடன் என்றோம் மலைகளும் மரங்களும் புதையல்களுமாயிருந்த வனங்களை அவனிடமிருந்து திருடிவிட்டு. தானியங்களை பூமிக்குப் பரிசளித்தவனை இரண்டு கவளம் அரிசிக்காக குழந்தமை வழியும் முகத்தில் அடித்துக் கொலை செய்தோம். கனிகளை எமக்குப் பரிசளித்தவனை ஒரு சோற்றுப் பருக்கையைத் தேடி கனிகளை எமக்குப் பரிசளித்தவனின் உடலைக் கிழித்து பிரேதப் பரிசோதனை செய்து திருடிக்கொண்…

    • 0 replies
    • 895 views
  15. உன் சிரிப்பில் கருகாமல்..... நெருப்பில் கருகியிருக்கலாம்.... காயம் தான் இருந்திருக்கும்.... வலி காலத்தல் இறந்திருக்கும்.... @ கவிப்புயல் இனியவன் சின்னச் சின்ன அணுக்கவிதை

  16. மாயை… - வ.ஐ.ச.ஜெயபாலன் . இலையுதிர்கால சருகுகளாய் உலகமெங்கும் சிதறினமே அம்ம நீ போனது எங்கடி அனுதினம் உன்னையே தேடினேன். இனிவழி ஏதென நோகையில் இணையத்தில் வந்து கண் சிந்தினாய். நீயுமா தேடினாய் கண்ணம்மா?. எல்லை இலாத மின் அம்பலம் அங்கு ஏங்கும் மனசுகள் சங்கமம் உந்தன் இருப்பை உணர்வதில் உயிரே மயங்குது கண்ணம்மா . இணைவெளியிடைக் கண்ணம்மா உந்தன் எழிலில் மொழியில் கரைகிறேன் அகதி அழிந்திடும் அன்பிலே ஆதரவான மொழியிலே. ஆவியைத் தின்கிற கண்ணிலே போதை ஆசை சிவந்த இதழ்களிலே காட்ச்சியும் பேச்சுமே…

    • 5 replies
    • 1.8k views
  17. நீயேன் எரித்தாய் மீனாட்ச்சி, உன் நிழலில் வாழும் மதுரையடி, . ஆடுகளம் திரைப்படத்திற்காக வெற்றிமாறனின் கேட்டுக்கொண்டதால் ஜி.வி.பிரகாஸ் இசையில் சினிமா பாடலொன்று எழுதினேன். . 2010 ஆரம்பமென நினைவு ஒருநாள் வெற்றிமாறனோடு ஜி.வி.பிரகாசின் கலையகம் சென்றபோது ஒரு சிறுவன் ’கீபோட்டை’ அற்புதமாக இசைத்துக்கொண்டிருந்தான். நான் அவரை ஜி.வி.பிரகாசின் மகனாக்கும் என நினைத்தேன். இவர்தான் ஜிவி.பிரகாஸ் என வெற்றிமாறன் அறிமுகப் படுத்தியபோது வியப்பாக இருந்தது. அவர் இனிமையான மனிதர். “என் வெண் நிலவே எரிக்காதே” என்ற பாடலை அவரது இசைக்கு எழுதினேன். இசைந்த சொற்களை இசைக்காக மாற்ற நேர்ந்தபோதெல்லாம் மனசு வலித்தது. அதனால் பின்னர் பாடல் எழுதுவதை மறந்துவிட்டேன். இப்ப மீண்டும் எழுதும்படி சொல்கிறார…

  18. மூன்றாம் அறிவு -------------------------- "அ" எழுதியவுடன்...... ஆரம்பமாகிவிடும்..... ஏட்டறிவு........! ஏட்டறிவில்..... ஏற்றம் கண்டவரும்........ உள்ளனர்...... ஏட்டறிவு எட்டாதவரும்..... உள்ளனர்.........! ஒவ்வொரு வயதுக்கும்..... ஒவ்வொரு பட்டறிவு....... ஏட்டறிவில்லாமல்....... பட்டறிவால் வாழ்வியலில்..... பட்டதாரியானவர்களும்..... ஏராளம்.........! ஏட்டறிவும் பட்டறிவும்..... போராட்டத்தாலேயே....... பெறப்படுகிறது.......! ஏட்டறிவும் பட்டறிவும்..... ஏதோ ஒருவகையில்..... யாரோ ஒருவரின் சாயல்.... அல்லது நிழலாகவே..... இருக்கிறது...........! சாயல்களும் நிழல்களும்..... காலத்தால் மறைந்துவிடும்... இல்லையேல் அவரவர்...... காலத…

  19. 2018ன் முதலாவது கவிதையை எழுத ஆரம்பித்திருக்கிறேன். இது பிரபஞ்சத்துள் மாநுடமாக நம்மை உயர்த்தும் காதல் பற்றிய கவிதை. இன்னும் முடியாத கவிதையின் முதல் பத்தி இதோ. அர்த்தமுள்ள ஆரம்பமா? உங்கள் கருத்துகளை அறிய ஆவல். எழுதுங்கள். ஒரு கவிதை வளருவதை தருவது கவிதைப் பட்டறைபோல இளம் கவிஞர்களுக்கு உதவக்கூடுமானால் மகிழ்வேன். பல தடவைகள் நான் எடிற் பண்ணி மாற்றுவதையும் கவனியுங்கள்..முகநூலை அணைத்துவிட்டு சன்னலை திறக்கிறேன் முன்னே ஒளி அலைக்கும் பனி மலைகளில் உன் மலரும் மார்புகளூடு அசைகிற தங்கப் பதக்கம்போல காலைச் சூரியன் உயர்கிறது. . கண்ணம்மா உன் பந்தாடும் காதலால் …

    • 3 replies
    • 1.1k views
  20. ஓடிவா தயங்காமல்; நாடிவா களங்காமல்; கோடி துயர் தொடர்ந்தாலும் நட்பின் கூடல் மகிழ்வாகும்! தென்றல் வந்த பாதையில் சென்றனவே சோகங்கள்! வாழ்வில் சேர்ந்த வலிகள் எல்லாம் வானில் திரண்ட மேகங்கள்! மழை நீரின் விந்தை மண்ணில்; இன்ப ஊற்றின் ஆரம்பம்! மீதம் உள்ள உந்தன் வாழ்வில் என்றும் பொங்கும் பேரின்பம்! உறவுகள் பலம் கொண்டு உவகையில் உருவாகும் சிநேகிதம் கரும்பாகும்; பகைமைகள் துரும்பாகும்; தோழமை மருந்தானால் நோய் நொடி நெருங்காது; வேதனையும் திரும்பாது; துணையாகும் வருங்காலம்! ஓடிவா தயங்காமல்; நாடிவா களங்காமல்; கோடி துயர் தொடர்ந்தாலும் நட்பின் கூடல் மகிழ்…

  21. தினசரி தூறல்கள்... பட்டப்பகலில் ஒரு நிலா..பிரகாசமாக.. அது நீதான்... ஒரு குயில்க்கூட்டம்.. கவலையாக மௌனவிரதம் இருக்கிறது.. நீ பாடியதை அவை கேட்டனவாம்.. நிலைக்கண்ணாடியின் தலைக்கணம் தவறேயில்லை.. தினமும் உன்னைத் தரிசிக்கின்றதே.. உன்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம்..கவிஞரானார்கள்.. உன் பேரைச் சொல்லியே.. எனது வாழ்க்கை.. முழுமை பெறாத நூலாகியது.. உன் முதல் பாதியை நான் படிக்கவேயில்லை.. எங்கள் முதலிரவில் மட்டும் நான் தூக்கத்தில் விழிக்கவில்லை.. அன்றுதான் நாம் தூங்கவேயில்லையே.. ஒரு ஏழையாயிருந்தும். இருபது வயதின் பின்..நான் பசிக்கொடுமையை உணவில்லாத போதும் உணர்ந்ததில்லை.. அப்போதிலிருந்து நீ என்னைக் காதலிக்கிறாய்…

  22. Started by Elugnajiru,

    பொங்குவோம் பகிர்ந்துண்டு வாழ்வோம் விடுதலைக்காய்ப் பசித்திருப்போம் புறம் சொல்லோம் போகியில் மனத்தீமையெல்லாம் விட்டொழித்து புதிதாய்ப்பிறப்பெடுப்போம் எமக்கிது விதியே என ஏங்காது எதிரிக்காய் விழித்திருப்போம் இனி ஒரு விதிசெய்வோம் வரும் கணங்கள் எல்லாம் மீண்டும் வாராக்கணங்களே அதனால் ஆயிரம் கதைகள் பேசி அடுக்குத் தமிழ்பேசி பெருவாழ்வு வருகுதென பொய்சொல்லி ஏய்ப்போரைப் புறமொதுக்கி ஒட விரட்டி முட்டிமோத வரும்போது எதிர்நின்று மோதிடும் கட்டுக்காளையை அடக்கும் காளையாய் சேர் இடம்போகுமட்டும் பொருதுவாய் புலியாய் தமிழ…

  23. தை - திருமகளே வருக வருக .... தைரியம் சிறக்க வருக வருக .... தை பிறந்தால் வழி பிறக்க வருக வருக .... தைத்தியரை அழிக்க வருக வருக ....!!! முற்றத்தில் கோலமிட்டு ..... முக் - கல் அடுப்பு வைத்து .... முத்திரி விளக்கேற்றி ..... முக்குணத்தை அழிக்க ... முக்காலமும் சிறப்பாக அமைய .... கரம் கூப்பி அழைக்கிறேன் தை- திருமகளே வருக வருக ....!!! உன்னையே உயிராய் ..... உன்னையே தொழிலாய் .... உன்னையே மூச்சாய் வாழும் .... உன்னையே தெய்வமாய் ..... உழைத்து வாழும் உழவு விவசாயம்... செழித்து வாழ என் உயிர் தாயே .... தை- திருமகளே வருக வருக ....!!! ^ பொங்கல் கவிதை கவிப்புயல் இனியவன் 2018 . 01 .14

  24. பல வருடங்களுக்கு முன்னம் வாசுகி பாடுவதற்க்காக எழுதிய பொங்கல் வாழ்த்துப் பாடல் . பொங்கல் வாழ்த்துப் பாடல் -வ.ஐ.ச.ஜெயபாலன் * வெண்பனி மீது பொன்மலர் சூடும் செங்கதிரோனை வாழ்த்துகிறோம் கண்பனி சூடி எம் நினைவோடு ஏங்கும் எம் தேசத்தை வாழ்த்துகிறோம் * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பனை நிழல் வீழும் முற்றத்தில் நின்று பாசத்தில் வாடும் நெஞ்சங்களே பனியையும் மீறி பசுமையில் நிமிரும் பைன்மரம் போன்ற சிங்கங்களே * பொங்கல் வாழ்த்துக்கள் தோழர்களே பொங்கல் வாழ்த்துக்கள் தோழியரே * பூமியில் என்றும் அகதிகள் என்று புழுதி மண் போல சுழலுவதோ தாயகம் மீண்டு துயர்களை வென்று தலைநிமிர்ந்தே நாம் வாழுவதோ * பொங்கல் …

    • 3 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.