Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by வர்ணன்,

    தலையணையினடி- சர்ப்பம்! எலிகள்......... கீரிகளை பற்றி ....... கிண்டலாம்..! தமாசு! இனத்தோடு இனம் சேருமாம்(? ) எழுதி சென்றவனை ... இழுத்து வந்து குரல்வளை... நெரித்து கொன்றால்தானென்ன? காக்கைகூட தன்னினம் அழிந்தால் அழுமே....! ஈசல் கூட தன் இனத்தோடுதான் சேர்ந்து பறக்குமே! நடந்ததா....? இனமாம்- சேருமாம்............ வாய் கிழிய சொன்ன ஞானியே... வந்துபார்..ஈழ தமிழரிடை... நீ செத்தே போனாய்!! நடக்கிறது..... உன் வரிகளுக்கு வாய்க்கரிசி! சந்தோசமாய் மெல்லு!! உளறி தள்ளினாய்....... தருகிறார் பரிசு...... தாங்கி கொள்!!

  2. தான்தோன்றிக் கவிராயரின் கவிதைகள்! சமீபத்தில் கொழும்பில் நடைபெற்ற ஒரு நாடகத்தொடக்க விழாவில் பேசிய ஒரு பட்டதாரி சிறு கதாசிரியர், சில்லையூர் செல்வராசனின் கவிதைகளைப் பற்றிப் பேசும்போது அவை வெறும் Blank Verse என்று குறிப்பிட்டாராம். இத்தகைய தீர்ப்பை அளிக்க, ஒருவருக்கு யாப்பிலக்கணம், தமிழில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும் நன்கு தெரிந்திருக்க வேண்டும். அவ்வாறு தெரியாமல் வாயைப் பிளந்தால் அவரது அறியாமையின் நாற்றந்தான் ஊரெல்லாம் பரிமளிக்கும். பட்டதாரிச் சிறு கதாசிரியரின் பேச்சு இதற்கு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. நமது நாட்டிலுள்ள 'மரபு'களில் ஒன்று, நாலு நூல்களை நெட்டுருப் போட்டு, நான்கு முறை நூன சித்தியும் ஐந்தாம் முறை மூன்றாம் வகுப்பில் முழுச் சித்தியும் பெற்றுப் பண்டிதரோ…

    • 0 replies
    • 814 views
  3. வயதான பின்பும் தாம்பத்தியம் இனிக்கின்றது வாய்க்கு பிடித்ததை ருசியாக சமைத்து அன்று உடம்பிற்கு பிடித்ததை மருந்தாக சமைப்பது இன்று அனத்துகின்ற போது அணைத்து கொள்வதும் சிடுசிடுத்தால் சீண்டிவிடாமல் சிரித்து கொள்வதும் தடக்கின்றபோது தள்ளாடாமல் தாங்கி கொள்வதும் அந்தநாள் நினைவுகளை அசை போட்டு பார்ப்பதும் நீ தான் உலகம் என்று பேசிக்கொள்ளும் பெரிசுகள் இரண்டும் பிள்ளைகளாகி சேர்ந்து போவதே தாம்பத்திய இறுதி ரகசியம் இதுவே வாழ்வின் ரகசியமும் கூட. -அம்மாவின் கவிதைகளில் பிடித்தது .

    • 3 replies
    • 1.4k views
  4. தாயக கனவுடன் சாவினை தழுவிய ..... .. கார்த்திகை இருபத்தியேழு மாவீரர் தினம். மெளனமாய் அஞ்சலிப்போம்..... முப்பது வருடங்களுக்கு மேலாக எம்மை நாமே ஆளவேண்டும் சகல உரிமையுடன் வாழ் வேண்டும் என்னும் உன்னத நோக்கதுகாய் "தமிழர் தாயகம் தமிழ் ஈழம்" என்னும் தாரக மந்திரத தோடு சாவினை தழுவிய மா வீரர்களே இறுதி போரிலே , கந்தக குண்டுகளின் குண்டு மழையிலே சிதறுண்ட மக்களே குற்றுயிரும் ..குறை உயிருமாய் புதைக்க பட்டவ ர்களே ...நீங்கள் மண்ணுக்காய் விதைக்க பட்டவார்கள் விழி நீர் மழை சொரிய ,நினைக்கின்றேன் எத்தனை கனவுகள் ஆசைகள் விருப்பங்கள் என்பவற்றை மண்ணுக்காய் துறந்த மாவீரர்களே. தாயாய் தந்தையாய் சகோதரியாய் மனைவியாய் மகளாய் மகனாய் விதைப…

  5. தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே! – இங்கு கூவிடும் எங்களின் குரல்மொழி கேட்குதா? குழியினுள் வாழ்பவரே! உங்களைப் பெற்றவர் உங்களின் தோழிகள் உறவினர் வந்துள்ளோம் – அன்று செங்களம் மீதிலே உங்களோடாடிய தோழர்கள் வந்துள்ளோம். எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் திருமுகம் காட்டியே மறுபடி உறங்குங்கள். நள்ளிரா வேளையில் நெய்விளக்கேற்றியே நாமும் வணங்குகின்றோம் – உங்கள் கல்லறை மீதிலெம் கைகளை வைத்தொரு சத்தியம் செய்கின்றோம் சாவரும் போதிலும் தணலிடை வேகிலும் சந்ததி தூங்காது – எங்கள் தாயகம் வரும் வரை தாவிடும் புலிகளின் தாகங்கள் தீராது. எங்கே! எங்கே! ஒருதரம் விழிகளை இங்கே திறவுங்கள். ஒருதரம் உங்களின் …

  6. Started by Paranee,

    01.04.2002 அன்று கரவை பரணீ என்ற பெயரில் யாழ் இணையத்தின் முன்னைய களத்தில் எழுதிய கவிதை காலத்தின் தேவை கருதி இன்று இங்கு உறங்கிய தமிழினம் இன்று விழித்துக் கொண்டது. ஊடுருவிய சிங்களம் அங்கு ஆட்டம் காணுது விடுதலைவேண்டிய வீரர்கள் விரைந்து வருகின்றார்கள்.... இங்கு உறங்கிடும் தங்கள் உறவுகளை விழிக்கச் செய்கின்றார் கல்லறைக்குள் உறங்கிடும் சகோதரர்கள் கண்விழித்தெழுகின்றார் தலைவன் காட்டிய பாதையில் சென்ற நம் வீரர் வெற்றி பெறுகின்றார்.. அடிமை விலங்கு ஓடித்து தமிழன் அங்கு பறக்கத் தொடங்கி விட்டான் பட்டினிச் சாவு ஒழிந்து அவர்கள் பாடத் தொடங்கி விட்டார் காசிற்காய் Nபுhராடிய சிங்களம் இன்று சிலையாகி விட்டது... நாட்டிற்காய் போராடிய ப…

    • 3 replies
    • 1.1k views
  7. தாயகத்தில் ஓர் அன்புறவு என் தாயகத்தில் ஒர் அன்புறவு நான் இங்கு வந்தேன் அவளைத் துறந்து என் மனம் முழுதும் அவளின் இருப்பு நான் பாடுகிறேன் என்னை மறந்து. குங்குமப் பூப்போல் செவ்விதழும் - அதில் பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பும் பல கவிதைகள் பேசும் கயல் விழியும் - என்னை வாட்டுதம்மா அவை இன்றளவும். வானம்பாடிபோல் பாடுகிறாள் - அவள் தோகை மயில் போல் ஆடுகிறாள் - தென்றல் காற்று போல் என்னைத் தழுவுகிறாள் - நம் பிரிவினால் தினம் வாடுகிறாள். வானில் ஒளி விடும் விண்மீனாய் - என் மனதில் இனிக்கிறாள் செந்தேனாய் உடல் வாடிப் போனது ஒரு சருகாய் - நான் காலம் கழிக்கின்றேன் அவள் நினைவாய்.

  8. உயிரை வருத்தி நீங்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடக் கூடாதேயென நித்தம் நித்தம் ஏங்கியேங்கி நாங்கள் இப்போது மூச்சுத்திணறி நிற்கின்றோம்! தாயகம் சுமந்துவரும் உங்கள் நினைவுகள் எம் ஒவ்வொருவர் மூச்சுக்காற்றிலும் கலந்து மண்ணை மீட்பதில் நாம் கண்ணாயிருக்க ஆன்ம பலத்தை எங்களுக்கு தரட்டும்! http://karumpu.com/wp-content/uploads/2010/song.mp3 தகவல்: நிதர்சன் | வன்னித்தென்றல்

  9. மேஜர் விதுரா *** சகோதரி, முன்பின் அறியாத உனக்காகவும், உனைப்போல் தம்உயிர்களை ஆகுதியாக்கிய உத்தமர்களுக்காகவும் அழுகின்றோம்..! ஒவ்வொரு உறவுகளின் உயிர்களும் கொடியவனால் காவுகொள்ளப்படும்போது எங்களுக்கு அழுகை வருவது வழமைதான்! ஆனால்.. இப்போது எங்கள் இதயமே வெடித்துவிடப் பார்க்கின்றது! இது உங்கள் இழப்புக்கண்டு வந்த அதிர்ச்சியின் விளைவு அல்ல.. உயிரை வருத்தி நீங்கள் செய்த தியாகங்கள் வீணாகிவிடக் கூடாதேயென நித்தம் நித்தம் ஏங்கியேங்கி நாங்கள் இப்போது மூச்சுத்திணறி நிற்கின்றோம்..! *** மண்ணில் செய்த உங்கள் சேவைகள் விண்ணில் இருந்தும் தொடரட்டும்! தாயகம் சுமந்துவரும் உங்கள் நினைவுகள் எம் ஒவ்வொருவர்…

    • 6 replies
    • 1.4k views
  10. தாயாகி.... தந்தையாகி...! இந்த ரோஜாப்பூ மலர்ந்ததைக்கண்டு சிரித்த முதல் தோட்டக்காரன் நீ! பெண்ணாய் நானும் பிறந்திடவே முகம் சுழித்த பேதையர்க்கு மத்தியிலே பூரிப்புடன் எனைத் தூக்கி முதன்முதலில் கொஞ்சியதும் நீதான்! அம்மாவின் அங்கலாய்ப்பும் இதுவேதான்...! பல்லு முளைத்து சிரிக்கையிலே தலையில் பயறு கொட்டி வாழ்த்தியதும் நீயே தான்! தத்தித் தாவி உருண்டு விழுந்து நடக்க முயலுகையில்... முன்னாடி வந்து நின்று என் விரல் பிடித்து நடை பழக்கியதும்நீ தான்! உன் தோளே என் அரியணையாய்..... எனை அதில் சுமந்துகொண்டு உலகை சுற்றிக் காட்டியதும் நீ... பயத்தோடு என் விரல்கள் உன் தலை மு…

  11. வாழைத்தோட்டத்திற்குள் வந்து முளைத்த... காட்டுமரம் நான்.. எல்லா மரங்களும் எதாவது... ஒரு கனி கொடுக்க எதுக்கும் உதவாத... முள்மரம் நான்... தாயும் நல்லவள்... தகப்பனும் நல்லவன்... தறிகெட்டு போனதென்னவோ நான்... படிப்பு வரவில்லை... படித்தாலும் ஏறவில்லை... இங்கிலீஷ் டீச்சரின் இடுப்பை பார்க்க... இரண்டு மைல் நடந்து பள்ளிக்கு போவேன்... பிஞ்சிலே பழுத்ததென்று... பெற்றவரிடம் துப்பிப்போக ... எல்லாம் தலையெழுத்தென்று எட்டி மிதிப்பான்... பத்துவயதில் திருட்டு... பனிரெண்டில் பீடி... பதிமூன்றில் சாராயம்... பதினாலில் பலான படம்... பதினைந்தில் ஒண்டிவீட்டுக்காரி ... பதினெட்டில் அடிதடி... இருபதுக்குள் எத்தனையோ... பெண்களிடம் விளையாட…

  12. பெத்த மனம் தூங்கலையே பிள்ளை மனம் ஏங்கலையே பார்த்துப் பல நாளாச்சு பங்குனியும் பிறந்தாச்சு வந்து கூப்பிடுவானு வாசல் வந்து நின்னாச்சு விக்கல் வந்தாலும் நீ தான் நினைக்கிறனு வெசனத்த மறந்து பித்துக் கொள்ளும் தாய்மையடா தாய்ப்பால அதிகம் சுரக்குமுனு பத்தியம் பல இருந்தேன் கசக்கும் வைத்தியத்தை கற்கண்டாய்ச் சுவைச்சேன் பேச்சு வரலையினு மண்சோறு சாப்பிட்டேன் டா காத்துக் கருப்பு தீண்டும்னு அப்பா கருப்பசாமிக்கு நேந்துகிட்டார் பள்ளிக்கூடம் போக காலு வலிக்கும்னு அப்பா பத்துக்காதம் தொலவுத் தூக்கி வருவார் மண்ணுக்குள்ள போகும் முன்னே என் மகராசா வந்துடுடா சீக்கிரம் வந்தாக்கா உன்னத் தொட்டு உச்சி முகந்துடுவேன் பார்த்துப் பல நாளாச்சு …

  13. தாயின் பாசம்-பா.உதயன் உரிமை மறுக்கப்பட்ட தேசம் ஒன்றில் ஓரமாக ஒரு மர நிழலில் உட்கார்ந்தபடி தனிமையாக பேசிக் கொண்டிருந்தாள் கரும்புலியின் தாய் ஒருத்தி அவர் அவர் பிள்ளைகளுடன் கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எங்கும் உலா வருகிறார்கள் எங்கள் பிள்ளைகளை இப்போ மறந்திருப்பவர்கழும் அவர்கள் தியாகத்தை பேசாமல் இருப்பவர்களும் நாளை உன்னை பேசாமல் இருந்திருப்பார்கள் என்று நினைத்து நீயும் போய் இருக்க மாட்டாய் போகட்டும் விடு மகனே யார் மறந்தால் என்ன மூக்கும் முழியுமாய் உயிர் தந்து உன்னை பெற்றெடுத்த தாய் மனம் உனக்காய் அழுகிறது மகனே காற்றோடு சொல்லி கண்ணீரில் எழுதி அனுப்புகிறேன் உன்னை நான் கண்ணுறங்க …

    • 0 replies
    • 417 views
  14. Started by yaal_ahaththiyan,

    நீ வரும்வரை என்னை எவரும் கவனிப்பதில்லை உன்னோடு இருக்கையில் கவனிக்காததென்று எதுவும் இல்லை அதற்காகவாவது உன்னோடு கூட வரலாம் நான் * உன்னோடு பார்க்கவேண்டிய உலக அதிசயங்கள் எல்லாமே எங்கே என் அதிசயம் என்று கேக்கிறது அதற்கு எப்படித் தெரியும் உன்னை நான் சுற்றிச் சுற்றி ரசிப்பது * தினம் நீ சாய்ந்து தூங்கும் என் தோல்களை தடவித் தடவித்தான் என்னையே நான் தூங்க வைக்கிறேன் * உன்னை நிற்க வைத்து யார் புகைப்படம் எடுத்தது அதை பார்க்கும் போதெல்லாம் எனக்கல்லவா கால் வலிக்கிறது * நீங்க தூங்கவே மாட்டிங்களா என்கிறாய் நான் தூங்கினால் என்னை உன் மடியில் இருந்து தூக்கிவிடுவாயே -யாழ்_அகத்தியன்

    • 2 replies
    • 956 views
  15. Started by இலக்கியன்,

    முத்து முத்து மாரியம்மா எங்கள் முத்து மாரியம்மா வந்து வினை தீர்த்துடுவாய் செல்லமுத்து மாரி அம்மா வேப்பிலைக் காரி அம்மா வேதனைகள் தீர்த்துடுவாய் எழுதிவைத்த வேண்டுதலை தீர்த்துவைக்கும் வெக்காளி நீ அம்மா மதுரையிலே மீனாச்சிதான் அம்மா வேண்டும் வரம் தந்துடுவாய் நீ அம்மா காஞ்சியிலே காமாச்சிதான் அம்மா கலக்கம் எல்லாம் நீக்கிடுவாய் நீ அம்மா காசியிலே விசாலாச்சிதான் அம்மா எம்மை எல்லாம் ஆட்சி செய்யும் தாயும் நீ அம்மா

  16. தாயே உனக்காயும் விபூசிக்காகவும். அம்மா அம்மா என - நீ அழைத்துச் சொல்லும் துயரத்தின் ஈரம் நெஞ்சுக்குள் நெருப்பாய் மூண்ட நாட்கள் இன்று போல.....! உன்னைக் கைவிடோமென நம்பிய உனது பிள்ளைகளின் கனவுகள் மீது உனது நம்பிக்கைகள் து(த)ளிர்த்துக் கொண்டன. உனது கண்ணீரை உனது துயரங்களை நீ சொல்லியழுகிற போதெல்லாம் மறுமுனையில் உனக்காய் உனது குழந்தைகளுக்காய் அழுத நாட்கள் அதிகம் தாயே....! நிலம் மீட்கும் போரில் பிள்ளைகள் விதையாகிப்போன பின்னும் வீரத்தின் அடையாளமாய் அவர்கள் விட்டுச் சென்ற கனவுகள் வாழும் நிலத்தில் வாழும் கனவோடுதானே வன்னியைப் பிரியாமல் அங்கேயே வாழ விரும்பினாய்....! ஏன்றாவது திரும்புவான் கடைக்குட்டியென்ற கனவைத் தானே தாயே என்றென்றும் புலம்புவாய் அவனது வரவைத் தானே நீ தினமும் ஏ…

    • 6 replies
    • 898 views
  17. பத்து மாதம் சுமந்தவளே எனை பாலூட்டி வளர்த்தவளே கண்ணின் இமையாய் காத்தவளே கற்றவனாக்க பெரிதும் முயன்றவளே நோயின்றி வளர்ப்பதற்காய் நோயாளி ஆனவளே அம்மா ஆனாலும் உனை வெறுக்கின்றேன். பாசத்தையும் நேசத்தையும் ஊட்டியவளே தவறுசெய்துவிட்டாய் என்னம்மா வீரம்மில்லாத கோழையாய் நான் நண்பர்கள் மாவீரர்களாய் போராளிகளாய். நான் மட்டும் முகமிழந்து அந்நிய நாட்டில் ஆனாலும் சற்று ஆறுதல் அதற்காக போற்றுகின்றேன். தாய்பாலுடன் துரோகத்தையும் ஊட்டவில்லை. என் கருத்துக்களாவது விடுதலைக்காய் தாயே அதற்காக போற்றுகின்றேன் நன்றியம்மா

  18. தாயே நீ உறங்கு...... பார்வதி அம்மாவின் அஞ்சலிக் கவிதை..... தாயே கண்ணுறங்கு..... தமிழர் மானம் காத்த சிசுவைத் தந்தவளே நீயுறங்கு....... உன் ஓரணுவில் தமிழை நிமிர வைத்தவளே நீயுறங்கு..... நீ இறந்தாலும் எம் மனதில் ஒலிக்குதம்மா தாலாட்டு....... நீ இறக்கவில்லை எம் மனதில் பிறக்கின்றாய் இப்போது....... பிற நானூற்றுக கதையெல்லாம் நம் பிடரியில் உறைக்கவில்லை...... நீ பெற்ற வரலாற்றுக் காவியம் தான் தமிழர் மனங்களையே வென்றது....... நீயோர் வீரத்தாய்..... வீரனைப் பெற்றெடுத்தாய்........ வாழ்வைத் துறந்தாலும் உன் வல்வை மண்ணில் விதையாய் விழுந்துவிட்டாய்....... நீ எரிந்து மறைந்தாலும் உன் நினைவு எம்மனதில் என்றும் கொழுந்த…

  19. உயிர் .... தந்து உயிர் காத்து ... எந்த உயிருக்கும் ... அவதாரம் கொடுக்கும் ... அவதார பிறப்பே தாய் ....! அவதரிக்க அவதாரம் ... எடுத்து உலாவிவரும் ... உயிராய் இருப்பாதால் ... தாயே உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! பெற்ற பிள்ளை படும்பாடு .... பார்க்கமுடியாமல் தன்னை ... வருத்தி பாலூட்டி உணவூட்டி .... இரக்கத்தோடு அரவணைத்து ... இரத்தத்தோடு இரக்கத்தையும் .... வளர்க்கும் ஆன்மீக உறவே ... "அம்மா" உம்மை "தாயாய் " வணங்குகிறேன் ....!!! தன் பிள்ளையை போல் ... பிறர் பிள்ளையையும்.... அரவணைக்கும் ஒரே ஒரு .... பிறப்பாய் சேவைசெய்யும் .... உனந்த உள்ளம் கொண்ட ... உலக சேவகியாய் உம்மை .... பார்கிறேன் தன் பிள்ளைக்கு .. மட்டுமல்ல பிற பிள்ள…

  20. தூங்கி கிடந்தீர்கள்.. புன்னகைத்தார்கள் அரசியல்வாதிகள்.. பின்னால் நின்று உங்கள் கன்னங்களை வருடிவிட்டார்கள்.. இன்னும் என்ன வேண்டும் என்று இனமானத்துக்கு விலை பேசினார்கள்.. முன்னால் உங்கள் கன்னங்களை தடவிவிட்டு பின்னால் உங்கள் கண்ணீரை காசாக்கினார்கள்.. செம்மரிகளாய் இருப்பார்கள் என்றெண்ணி தமிழரை செருப்பாய் தேய்த்தார்கள்.. இருப்பை உணர்த்த ஒரு தீ பிறாக்காதோ என்று தமிழ்க்கரு சுமந்த மனங்கள் தவித்தன.. உள்ளே குமைந்து கொண்ட உணர்ச்சித்தீயை மோதி அணைத்துக்கொண்டே இருந்தது சாப அரசியல்... பழுத்த கிழம்கள் எல்லாம் பாழும் அரசியலில் இருந்து உழுத்துப்போன வார்த்தைகளைப் பேசி உருவேற்றி வெளுத்ததெல்லாம் பாலென்று தொழுது நிற்கும் தொண்டர்களின் வேர்வைகளில் கொழுத்துப்போய் தம் குடும்பம் வளர்க்க..…

  21. Started by இலக்கியன்,

    பத்துமாதம் சுமந்து பத்திரமாக பெற்றதாய்க்கு பத்து ஜென்மம் எடுத்தாலும் அந்தக்கடன் தீர்ந்துடுமா எந்த ஜென்மம் என்றாலும் நீதான் எனக்கு தாயாக வேண்டும் அம்மா

  22. Started by பாகன்,

    உதரத்தில் சுமந்தவள் உதிரப் பால் தந்தவள் உறங்காமல் விழித்தவள் உள்ளன்போடு வளர்த்தவள் சாதித்த போது மகிழ்ந்தவள் சோதித்த போது அழுதவள் பாதிப்பின் போது பயந்தவள் நீதி கேட்டு நிமிர்ந்தவள் கருக்கலில் ஒளியவள் சிருஷ்டியின் சிறப்பவள் உரு இழந்தும் வாழ்பவள் திரு உருவாய் நிலைப்பவள்

  23. தாய் நிலமும் தனையர்களும் இந்துக் கடலில், முஷ்டி உயர்த்திய கையினைப் போன்ற என் அழகிய தேசமே என்னுடன் பேசு. நாவில் நீர் ஊற குட்டிகள் பின்னே அலையும் நாய்களைக் காட்டுக்குதிரைகள் உதைத்து நொறுக்கும் 'நெடுந்தீவின்' புல்வெளிகளை நாங்கள் இழந்து படுவோமா ..... 'அறுகம் குடாவில்' தோணிகள் மீது அலைகள் எறியும் கடலை அதட்டி, வலைகளை விரித்து நூறு நூறாண்டாய் முஸ்லிம் மீனவர் பாடும் பாடலை நாங்கள் இழப்பமோ? வரலாறொன்றின் திருப்பு முனையில் மார்புற எம்மை அணைத்த படிக்கு போர்க்குணத்தோடு நிற்குமெம் தாயே சொல்க எனக்கு! எலிகள் நிமிரவும் வளைகள் உண்டே. உண்டே உண்டே விலங்குகள் பறவைகள் மரங்கள் நிமிர்ந்திட சரணாலயங்களும் தேசிய வனங்களும். மனுகும…

    • 0 replies
    • 799 views
  24. தாயின் மடி போல் தலையணை வேண்டும் தூங்கும் நிலையில் மனநிலை இல்லை வந்து போகுது வரவும் செலவும் நொந்து போகுது மானிட இதயம் உழைத்து உழைத்து உருக்குலைந்த பின் எஞ்சி இருப்பது நோயும் நொடியும் குருவித் தலையில் பனம் பழம் போலே ஏழை உழைப்பில் எத்தனை செலவு காற்றும் கூட காசாய் போனதால் வாழ்வில் எப்படி வசந்தம் வீசும் சுரண்டிய மீதியே ஊதியம் ஆகையில் உயர்வது எப்படி? வாழ்வு மலர்வதெப்போ? மனசு நிறைந்து கனவுத் தூக்கம் கண்டு மகிழ்வதெப்போ? தாயின் மடி போல் தலையணை வேண்டும் நோயில் படுக்கினும் தாயின் மடியே தலையணையாய் வேண்டும்.

    • 6 replies
    • 3k views
  25. ஆண்ட மண்ணில் நாம் அகதியாகிப் போனாலும் நீண்ட நெடுங்காலம் நிம்மதியை இழந்தாலும் கண்டபல காட்சிகளால் கண்கலங்கி நின்றாலும் மீண்டு வந்திடுவோம் இது உறுதி என்று விட்டீர் றோட்டுப் போட்டவரும் கோட்டுப் போட்டவரும் பாட்டுப் போட்டு அங்கே பப்ளிசிட்டி தேடிவிட்டு வோட்டுக் குவியும் என்று போட்டிட்ட கணக்கிற்கும் வேட்டு வைத்துவிட்டு விடியலுக்காய் ஏங்குகிறீர் கண்ணே மணியென்று உமைக் கவர முயன்றவரும் வண்ணப் படத்துடனே மதில்தன்னை நிறைத்தவரும் எண்ணிப் புழுங்குகின்றார் எரிச்சலிலே துடிக்கின்றார் விண்ணர்கள் உம் கடமை சிறப்புடனே செய்திட்டீர் திறந்திருக்கும் சிறையினிலே நிம்மதியை பறித்துவிட்டு சிறந்ததோர் வாழ்விற்காய் வாக்களியும் என்றவரும் பறந்தங்கே வந்துமக்கு பாசமுகம் போட்டவரும் ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.