கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
இன்று காதலர் தினம். காதலர் தினம் என்ன அவர்களுக்கு மட்டும்தானா நமக்கில்லையா? வாழ்வில் இணைந்து கொண்ட தம்பதிகளுக்கும் காதலுண்டல்லவா! ஆனால் அதன் இயல்புதான் சற்று வேறாயிருக்கும். அந்த வேறுபட்ட இயல்பைச் சில வருடங்களுக்கு முன் கவிதையாக்கினேன். அதனைக் கீழே தருகிறேன். தாய்க்குப்பின் வந்த தாரம் வாய்க்குச் சுவைதருவாள் என்றும் வாழ்விற் துணைவருவாள் - காம நோய்க்கு மருந்தாவாள் துயர் போக்கும் அருள் தருவாள் அள்ளி அணைக்கையிலே மனம் ஆறும் பரிசத்திலே உள்ள நிறைவினிலே துன்பம் ஓடிடும் தூரத்திலே அன்னையிருந்த இடம் இன்று அவள் அரியணையாம் என்னைக் கலந்துவிட்டாள் இன்று எனதென்றொன்றுமில்லை வட்ட நிலாவொளிரும் அவள் வதனப் புன் சிரிப்பில் கெட்டதெல்லாமழியும் அவள் கிட்டநிற்கும்…
-
- 0 replies
- 2.3k views
-
-
-
- 1 reply
- 1.5k views
-
-
1957ல் களபலியான திருமலை நடராசனில் இருந்து விடுதலைகாக உயிர்நீத்த அனைத்துப் போராளிகளுக்கும் என் அஞ்சலிகள் - வ.ஐ.ச.ஜெயபாலன் 1957ல் ஈழத் தமிழர் விடுதலைக்கான போராட்டத்தில் உயிர்நீத்த அனைத்துத் தியாகிகளுக்கும் அஞ்சலி மரியாதை செய்யவேண்டும் என்கிற கருத்தை கால்நூற்றாண்டுகளுக்கும் முன்னிருந்தே நான் கேட்டு வருகிறேன். வன்னியிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் நான் கலந்துகொண்ட நிகழ்வுகளில் ”திருமலை தியாகராசன் முதல் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டத்தில் கழபலியான அனைத்து அமைப்பு தியாகிகளுக்கும் அஞ்சலி” செலுத்தியே ஆரம்பித்திருக்கிறேன். எங்கும் எனக்கு எதிர்க்குரல் எழுந்ததில்லை. . இந்த கருத்தியலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் இருந்தே பலர் வாயிலாக நான் கேட்டிருக்கிறே…
-
- 0 replies
- 1.1k views
-
-
நிம்மதி தேடி வந்த அந்நிய தேசத்தில் என் பிழைப்பு; என் மதி நிறைந்ததோ சொந்த மண்ணின் நினைப்பு. மன அமைதி இழந்து நாளும் வாழ்கிறேன் வாழ்க்கை; தாய்மண்ணின் வாசத்தை நுகரத்துடிக்கும் நெஞ்சு. சோர்வுற்ற வேளை தந்தையின் ஆதரவும் நோயுற்றவேளை சாய்ந்திட அன்னை மடி பிரிந்து வாழ்வோம் என மறந்து சண்டையிட்ட சகோதரங்களின் இனிய பாசம் இவை இழந்தேன். ஓலைப்பாய் நித்திரை தந்த சுகம் நினைந்து - இங்கே பஞ்சு மெத்தையில் கூட நிம்மதியில்லா உறக்கம். ஓய்வுக்காய் மேலைநாட்டு மக்கள் செல்லும் தேசம் அது எம் தாயகம் போல் மன அமைதி தரும் இடமே. அந்நிய மண்ணில், அந்நியனாய் வாழும் நானும் -ஏங்குகிறேன் அவ் அந்நியன் போல்; என் தாய்மண்ணில் வாழ்ந்திடவே!
-
- 9 replies
- 1.8k views
-
-
-
- 15 replies
- 2.3k views
-
-
பிரபஞ்சத்தின் அந்தகார இருளில் மூழ்கிக் கிடந்த பூமிப் பந்தில் தோன்றிய சிறியதொரு ஒளிக்கீற்று! பிரம தேவனின் பிரதிநிதியாய் உயிர்ச்சங்கிலி ஓய்ந்து விடாது ஓட வைக்கும் அற்புதப் படைப்பு! கருவை வளர்த்தெடுத்து, அதன் கண்ணையும்,மூக்கையும் கற்பனையில் வடித்துக் குருதியில் குளித்துச் சிலையாய் வடித்தெடுக்கும் ஒரு சிற்பியின் திறமை! குழந்தையின் முகம் பார்த்துக் காலம் காலமாய்க் கட்டி வைத்த ஆசைகளின் கனவுக் கோட்டையைக் கணப்பொழுதில் உடைத்தெறியும் ஒரு முனிவனின் முதிர்ச்சி! நோய் கண்ட வேளையில், இரவும் பகலும், அரைக்கண் மூடி, நீ கொள்ளும் அனந்த சயனத்தில் பாற்கடலில் பள்ளிகொள்ளும் அந்தப் பரந்தாமனின் பக்குவம்! பூவைத் துளைத்து அதன் …
-
- 1 reply
- 1.2k views
- 1 follower
-
-
தாய்மை என்னும் உறவுக்குள் இதம் தரும் உணர்வுகளுடன் அனுதினம் கலண்டர் கிழிக்கையில் அச்செய்தி கிடைத்திடுமோ – என ஏங்கத்துடன் இருந்த அவள், ஆண்டு பல கடந்தும் – அவள் புரிந்திட்ட நன்மையின் விளைவால் ஆண்டவனின் அருளால் அவள்தன் தங்க வயிற்றில் குட்டி நிலா துயில் கொள்ள தனியான இடம் அமைத்து பெண்மைக்கே பெருமை சேர்க்கும் தாய்மை என்னும் உறவுக்குள் நகர தொடங்கி விட்டாள் இன்று முதல்… வெறுமையாய் இருந்த அவள் முழுமையாயாய் ஆனாதினால் ஆனந்தத்தில் மூழ்கியே சரணடைகின்றாள் தன் கணவன் மடியில்…. பிரிவால் துவண்டு இருந்த உறவினர் முகங்களிலே ஆயிரம் மின்னல் அடித்திடும் புன்னகையின் பிரதிபலிப்புக்கள்.. குட்டி நிலவின் வரவை எண்ணி கலண்டரின் அருகில் காத்திருப்பத…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.imeem.com/vaseeharan/music/NoO0...yadiyil_vallam/ பாடலைக் கேட்பதற்கு இங்கே அழுத்தவும் பல்லவி தாளையடியில் வள்ளம் எடுத்து தாய்நாட்டை விட்டுப் போகின்றோம் தமிழ் நாட்டின் கரையைத் தேடி உயிரைச் சுமந்து போகின்றோம் நீயொரு வள்ளத்திலே- அடி நானொரு வள்ளத்திலே இந்தக் கடலில் கரைந்து போவோமோ இல்லை கடலைக் கடந்து போவோமோ சரணம்-1 மேற்கில் சாய்ந்த சூரியன்-நாளை எங்கள் கண்ணில் விடியலாம் மேகக் கூந்தல் காற்றில் விரிய எங்கள் மேனியும் சிலிர்க்கலாம் எனக்குத் தெரியும் வெண்ணிலவு அன்பே உனக்கும் தெரியலாம் எனக்குள் எரியும் காதல் நெருப்பை கடல் நீரும் குடிக்கலாம் உப்புக் காற்றின் ஈரம் வந்து காதில் இனிப்பைச் சொல்லுமோ அனலில் வீழ்ந்த எங்கள் …
-
- 0 replies
- 572 views
-
-
ஒற்றை சொற்களாய் உதிர்த்து வானத்தை நிரப்பிய பின், உன் துயரம் தோய்ந்த நாக்கு என் தனிமையை தின்னத்தொடங்குகிறது. இரவின் நீட்சியும் வியர்வை நாற்றமும் பிசுபிசுப்பின் அந்தரிப்பும் மோகனத் தவம் கலைக்காமல் சாய்ந்தெழும் பெருமூச்சும் அவசத்துடன் பகிரப்படுகையில் யாருக்கும் கேளாமல் நீ சிந்திய ஓலமொன்று நட்சத்திரங்களை விழுத்தியது. நிராகரிக்கமுடியாத முத்தத்தை அவமானத்துடனும், கண்ணீருடனும் அருவருப்புடனும் எதிர்கொள்ளும் அபத்தப் பொழுதொன்று நினைவுகளில் விரிகையில், சொற்கள் வறண்டு ஆவியாகிப் போகிறது, கதவுகள் மூடிய கண்ணீர்வளையத்தின் மறைவில் என்னைத் துகிலுரியத் தொடங்குகிறேன் உனக்குப் பரிசளிக்க. வானத்தை நிரப்பிய உன் சொற்கள் என் தனிமையை தின்று நட்சத்திரங்களாய் பூக்கின்றன
-
- 5 replies
- 995 views
-
-
[size=4]கர்ணனின் கதையில்.[/size] [size=4]புதைந்திருக்கும் அர்த்தங்கள்![/size] [size=4]கால வெள்ளம் கூடக்,[/size] [size=4]கரைக்க முடியாத உண்மைகள்![/size] [size=4]ஆயிரம் திறமைகள்,[/size] [size=4]ஆண்மையின் கம்பீரம்,[/size] [size=4]சத்திரிய வீரம் மட்டுமே,[/size] [size=4]காறித்துப்புகின்ற கர்ச்சனை![/size] [size=4]விசுவாமித்திரனே, [/size] [size=4]வியந்து போன வீரம் தான்![/size] [size=4]பிரமாஸ்திரத்தின் ரகசியம்,[/size] [size=4]மறந்து போகச் சாபமிட்டான்.[/size] [size=4]அன்னைக்குக் கூட,[/size] [size=4]அவனது ரகசியம் தெரியும்![/size] [size=4]அவளின் அரச வாய்கள்,[/size] [size=4]கூடப் பூட்டப் பட்டன![/size] [size=4]தேர்ச் சில்லின் புதைப்பில்,[/size] [size=…
-
- 6 replies
- 858 views
-
-
-
- 0 replies
- 1.2k views
-
-
திக்குத்தெரியாத காட்டினிலே திசை தேடி அலைகின்றோம் திறக்காத கதவுகளை தினம் தினம் தட்டுகின்றோம் கருணையில்லா உள்ளங்களை கருணை காட்டச் சொல்கின்றோம் முட்டுகின்றோம் மோதுகின்றோம் முழிக்கின்றோம் செய்வதறியாது ஏனிந்த வாழ்வென்று ஏங்குகின்றோம் நாள்தோறும் தமிழினத்தின் தலையெழுத்தை தயவின்றி எழுதிவிட்டான் இறைவனவன் காலங்கள் சென்ற போதும் கோலங்கள் மாறவில்லை, எங்கள் அவலங்கள் முடியவில்லை திக்குத்தெரியாத காட்டினிலே திசை தேடி அலைகின்றோம்....
-
- 0 replies
- 805 views
-
-
கனடாவில் வாழ்வு பத்தொன்பது ஆண்டுகள் கண்ணை மூடி முழிப்பதற்குள் ஓடி மறைந்து விட்டது. திரும்பிப் பார்த்தால் அண்டப்.. பெருவெளியில் நீண்டதொரு பயணத்தின் நடுவில் நின்று கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமா இல்லை என்னோடு சேர்ந்து இன்னும் பலர் பயணிக்கிறார்களா.....??? கடந்து போன ஆண்டுகள் தராத வேதனையை அடிக்கடி வந்து போகும் வெண்பனி தந்து சென்றது. எங்கே போனேன்-எங்கே வந்தேன் ஒன்றுமே தெரியவில்லை. சிட்டுக்குருவியாய் சிறகு விரித்து வானவெளியில் பறக்க-எனக்கும் ஆசை ஆனால் சிறகு உடைந்தவள் ஆச்சே-இல்லை இல்லை விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி.. எதைச் சொல்ல எதை விட எனக்குள்ளும் ஆயிரம் ஆசைகள்-ஆயிரம் நிறை வேறாத கனவுகள். விபத்தும் என்னை தன்னுள் அடக்காமல் இன்…
-
- 24 replies
- 2k views
-
-
கல்லறைமேனியர் காத்திருப்பர் இன்று விழிதிறந்தெதிர் பார்த்திருப்பர் போகும் வழி தெரியல்லையே அங்கொரு தீபம் ஏற்றிட வழியில்லையே வலிசுமந்து எழுகின்றோம் மாவீரரே உங்கள் திசை கண்டு தொழுகின்றோம். உற்றவர் யாருமின்றி பிள்ளைகள் உறங்கிட பகை தின்ற நிலத்தில் கோவில்கள் கலைந்திட காற்றெழுந்து முகம் பார்த்திடுமோ கார்த்திகை மேகம் சிந்திடுமோ யாருமின்றி நீர் எழுந்து நிற்கையிலே கத்தும் கடல் அழுதிடுமே எங்கள் ரத்தம் காய்கிறதைய்யா இங்கு விழிகள் தோய்கிறதைய்யா திசைகள் தாண்டி நீண்டிடும் நினைவு கரங் கொண்டு சேர்த்திடும் மான உணர்வு தூயவர் உறவுகள் இனி சேர்ந்திட தாயவள் நிலை இனி மாறிடும் தாரகைகள் தாமிறங்கி தொழுதிட வான் வளைந்து மாலை சூடிடும் நீரெழுந்து மலர்த்திட ஒளி கூடிடும் தேசத்தின் விடி…
-
- 2 replies
- 714 views
-
-
விண்தொடும் கனவுகள் வீணாகிப்போய் மிதியடி மண்ணாய் தட்டப்படுகையில், அடையாளம் பறிக்கப்பட்டு அடையாளம் குத்தப்படுகிறது அறிந்தவர்களின் அறியாமையால் , பிறிதொரு இருப்பிடம் தேடி அலைகிறது அவர்களின் அவதானம் ......................... உள்ளொருபுள்ளியில் இருக்கிறது இன்னும் அவர்களின் எச்சவடு! எனை கடந்து அவனை கடந்து _பின் மற்றொருவனை அனைத்து செல்கிறது அவதானம் ஆங்காங்கே எச்சவிளைவுகள் பயங்கரமாய் எதிரொலிக்க எதையும் கண்டுகொள்ளாத _அதன் பயணம் தொடர்ந்து கொண்டு ............... இருளாய் வியாபிக்கிறது என்னுள் ஒரு கேள்வி ! இன்னவாகி வருவான் _என்ற எதிர்பார்ப்புகளை எங்கு,எப்படி புதைப்பேன் இனி ................!
-
- 5 replies
- 1.2k views
-
-
வன்னிக்குச் சோறு கொடு இலங்கை வான்படைக்குக் குண்டு கொடு திண்டுவிட்டுச் சாகட்டும் தமிழினம் எண்டந்தப் பாவி சொன்னான் முண்டப் பேதைகளாய் இன்னும் முடங்கிக் கிடப்பாரோ தமிழர் தமிழகத்தில் இல்லை முண்டு பிடித்துத் தொடர்வாரோ தம்போரை பார்ப்பனியம் பணிவதில்லை அது பணியவைத்து ஆழ்வதுவே என்றந்தப்பாவி சொன்னான் இன்னமும் பொறுத்திடுமோ தமிழிதை இந்து மகாசதியும் பெளத்த மதவெறியும் இணைந்து நின்று தமிழைக் கொல்வமெனச் சொல்கிறதே இன்னும் என்ன தூக்கம் என்னருமைத் தமிழகமே நீ பொங்கியெழுந்தாலன்றி மழையில் நனைந்ததிலே பயனுண்டோ எண்ணிப்பார். 27.10.2008.
-
- 15 replies
- 2.2k views
-
-
தினசரி தூறல்கள்... பட்டப்பகலில் ஒரு நிலா..பிரகாசமாக.. அது நீதான்... ஒரு குயில்க்கூட்டம்.. கவலையாக மௌனவிரதம் இருக்கிறது.. நீ பாடியதை அவை கேட்டனவாம்.. நிலைக்கண்ணாடியின் தலைக்கணம் தவறேயில்லை.. தினமும் உன்னைத் தரிசிக்கின்றதே.. உன்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம்..கவிஞரானார்கள்.. உன் பேரைச் சொல்லியே.. எனது வாழ்க்கை.. முழுமை பெறாத நூலாகியது.. உன் முதல் பாதியை நான் படிக்கவேயில்லை.. எங்கள் முதலிரவில் மட்டும் நான் தூக்கத்தில் விழிக்கவில்லை.. அன்றுதான் நாம் தூங்கவேயில்லையே.. ஒரு ஏழையாயிருந்தும். இருபது வயதின் பின்..நான் பசிக்கொடுமையை உணவில்லாத போதும் உணர்ந்ததில்லை.. அப்போதிலிருந்து நீ என்னைக் காதலிக்கிறாய்…
-
- 513 replies
- 102.2k views
-
-
கண் மூடிக்கடவுளைத்தரிசனம் பண்ணினேன் என் முன்னால் ஓர் உருவம் வந்து நிற்பதுபோல் காலடிச்சத்தம் கேட்டது இது யாராக இருக்கும் உள்ளம் கேள்வி கேட்டது இவ்வளவு கம்பீரமான காலடி சத்தம் மெதுவாகக்கண் திறந்தேன் ஆமாம் என் முன்னால் நானே நிமிந்து பார்க்கக் கூடிய ஓர் உருவம் மெல்ல நிமிந்து முகத்தைப்பார்த்தேன் என்னவனை முதல் முதலில் பார்த்த முதல் நாள் மறக்க முடியாத நாளும் கூட கோயிலில் கூட்டம் இருப்பதையே மறந்து உன்னையே பார்த்தேன் உன் மேல் வைத்த கண்ணை எடுக்க முடியவில்லை என்னை ஒரு முறையாவது திரும்பிப்பார்க்க மாட்டாயா என்ற ஏக்கத்தில் உன்னையே பார்த்துக்கொண்டு நின்றேன் கடவுளுக்கு என்னிடம் கருணையே இல்லையே என்று திட்டினேன் நான் திட்டியது அவன் காதில் …
-
- 20 replies
- 2.4k views
-
-
இன்றைய கவிதை 06.08.2007 ஆண் பெண் படைத்து அங்கம் வேறாக்கி அந்தரங்க உறவு காட்டி அற்புதங்கள் செய்தவன் யார் ? பார்க்கும்போதே ஈர்க்கும் சக்தி பார்வையாலே பேசும் மொழி கண்ணை மூட கற்பனை கண்திறந்தால் அற்புதம் படைத்தவன் யார் ? சிறிய குறிப்பு இது தினம் ஒரு கவிதைக்கான தலைப்பு இதற்கான விமர்சனங்கள் உங்கள் கருத்துக்களை அதற்கான தலைப்பின் கீழ் இட்டுக்கொள்ளுங்கள். விரும்பிய உறவுகள் உங்கள் கவிதைகளையும் தினம் ஓரு கவிதையாக இங்கு இடலாம் நட்புடன் பரணீதரன்
-
- 38 replies
- 9.6k views
-
-
-
திபெத் மொழி பேசும் முத்துக்குமார் 43 வயது நிரம்பிய இந்தியாவில் கல்வி பயின்ற திபெத்திய கவிஞர் குத்ருப்...! சீனாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து வியாழக்கிழமை தீக்குளித்து இறந்து விட்டார் சுமார் 50 - க்கும் மேற்பட்ட திபெத்தியர்கள் தீக்குளித்து இறந்திருக்கிறார்கள் வியாழக்கிழமை இறந்தவர் கவிஞர் என்பது தான் மிகப் பெரும் துயரம்..! ஒரு படைப்பாளி..! திபெத்திய இலக்கியங்களை கற்று அறிந்தவர், அந்தோ பரிதாபம்..! என்றாலும் இந்தப் போட்டியிலும் எவரையும் விஞ்சி நிற்கிறார்கள் தமிழர்கள்..! இந்த வளரும் திபெத்திய படைப்பாளிக்கு, கவிஞனுக்கு ஆழ்ந்த இரங்கல் இவை தவிர நாம் வேறு என்ன சொல்ல முடியும்..! சங்கிலிக்கருப்பு
-
- 0 replies
- 689 views
-
-
தியாக தீபமே தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையுூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில…
-
- 28 replies
- 4k views
-
-
தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சுதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில் வந்தவர் செய்கையால் ஆத்திரம் கொண்டவன் அஹிம்சையை நாடினான்…
-
- 1 reply
- 514 views
-
-
தியாக தீபம் அன்னை பூபதி – மாரீசன் 80 Views இன்று தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் 33ஆவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இக்கவிதை பிரசுரமாகின்றது. சிங்களப் படைகள் கொடுமைகள் கண்டனள் அங்கம் நெகிழ்ந்திட வெகுண்டு எழுந்தனள் எங்கும் எழும்பிய அவலக் குரல்களால் பொங்கியெழுந்திடும் எரிமலையாகினள் அகிம்சை வழியைக் காட்டிய பாரதம் அனுப்பிய படைகள் இம்சைகள் கண்டனள் புலிகளைத் தேடி அழித்திட அலைந்ததை வாலிபர், இளைஞரைக் கொன்று குவித்ததை கண்டனள், அன்னையின் விழிகள் சொரிந்தன இதயம் குமுறிட எரிமலை வெடித்தது சிலையெனப் பிள்ளையார் முன்றலில் அமர்ந்தனள் முந்…
-
- 0 replies
- 563 views
-
-
நாட்கள் பத்தும் நம்மைத் தாண்டியது [size=4]நாடி நரம்புகளும் ஓயத் தொடங்கியது[/size] [size=4]நாதியின்றி இதயம் மட்டும் இயங்கியது[/size] [size=4]துளித்துளியாய் உன் இரத்தம் அடங்கியது[/size] [size=4]நல்லூர் கந்தன் பவனி வந்த வீதியிலே [/size] [size=4]அலையாய் வந்த மக்கள் வெள்ளத்திலே[/size] [size=4]சிலையாகி நின்றேன் _ நான்[/size] [size=4]உனைப் பார்க்கையிலே [/size] [size=4]சிந்தியது கண்ணீர் வெள்ளம் [/size] [size=4]உருகியது உன்னருகில் மக்கள் வெள்ளம்[/size] [size=4]ஒலித்தது ஈழப்பாடல் ஒன்று[/size] [size=4]மரணித்த வீரா உன் ஆயுதத்தை எனக்கு தா[/size] [size=4]உன் ஆடையையும் எனக்கு தாவென்று[/size] [size=4]இன்றும் ஒலிக்கின்றது [/size] [size=4]உடல்[/size]…
-
- 4 replies
- 594 views
-