கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
புலிகளின் இரையாண்மை!!!!!!!! நனறி-முகநூல் http://a6.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/563189_229347280500032_100002742857647_315612_598241312_n.jpg
-
- 3 replies
- 1k views
-
-
ஓடி விளையாடு பாப்பா - தமிழை பாடி மகிழ்ந்தாடு பாப்பா கூடி களியாடு பாப்பா - விடிவை நாடி நடைபோடு பாப்பா தமிழனுக்கென உண்டு தாயகம் - நற் தமிழீழம் அதன்பெயர் பாப்பா தாய்க்கு நிகரான தாய்நாடு - அதைத் தலையாய்க் காத்திடு பாப்பா எதிரிப் படைவரும் பாப்பா - நீ ஏக்கம் கொள்ளலாகாது பாப்பா சீறும் விமானம்வரும் பாப்பா -நீ சிந்தை கலங்காதே பாப்பா கடவுள் மறந்துவிட்ட போதும் - உன் கடமையை மறவாதே பாப்பா மடமையை ஒழித்துவிடு பாப்பா -தேச உடமையைக் காத்துவிடு பாப்பா காணாதிருக்கும் தமிழரும் உண்டு -முகத்தில் காறி உமிழ்ந்துவிடு பாப்பா காட்டிக்கொடுக்கும் தமிழரும் உண்டு -அவரைக் காலால் மிதித்துவிடு பாப்பா மண்ணுக்காய் மாய்ந்த மாவீரர் - அவரை…
-
- 3 replies
- 1.4k views
-
-
காதல் அம்மாவின் மார்புக்குள் அப்பாவை தொட்டபடி விளையாட்டுப் பொம்மையுடன் தூங்குகிறேன். வெளியில் நான் இலைபோட்டுக் காப்பாற்றிய மழைவெள்ளத்தில் நனைந்த எறும்பு குளிருக்கு என்ன செய்யும்? ஐயோ பாவம்! எல்லாமே என் சொந்தம் சொந்தங்கள் எல்லாமே எனக்காக என்கிறது குழந்தை எனக்குப் பசித்திருக்கும் அவனுக்குப் பால் கொடுப்பேன். எனக்குத் தூக்கம் வரும் அவனைத் தாலாட்டுவேன். தந்தைக்குச் சேமித்த நேரத்தையும் அவனுக்குச் செலவு செய்வேன் என்கிறாள் தாய் என் வலிய தோள்களே வலிபெறுமளவுக்கு சுமப்பேன். முடமான கால்களால்கூட அவனைச் சுமந்து நடப்பேன். வீட்டுக்கொரு கொலுசுச் சத்தம் கூட்டி வந்த பின்பும் கண்ணை இமைபோல அவனை நான் காப்பேன். என்கிறார் தந்தை. …
-
- 3 replies
- 1.7k views
-
-
நம்பிக்கை நண்பா! மேற்கில் மலரும் சூரியன்-மீண்டும் கிழக்கில் உதயமாவதில்லையா? ஒருநாளில் வாடிப்போகும் பூ கூட சிரிக்கவில்லையா? மேலிருந்து விழுந்த நீர்வீழ்ச்சி-மீண்டும் எழுந்து அருவியாய் ஓடுவதில்லையா? வண்ணங்களை காட்டி மகிழ்விக்கும் வானவில் கூட தோன்றியவுடன் மறையும் ஆனால் திரும்பவும் தோன்றும் தானே அது போல் தோல்வியென்று எண்ணாதே நம்பிக்கை வை நீ உயர்வாய் வசந்தம் உன் வாசல் தட்டும்!
-
- 3 replies
- 1k views
-
-
ஆடிக்கலவரம்- கறுப்பு ஜீலை ஓடி ஓடிச் சிங்களம் ஈழத்தமிழரைக் கொன்று குவித்த நாளாம் அம்மா சொன்னாள்! கண்டதில்லை கலவரத்தின் நிலவரம் ஆனால் கண்டவர் உணர்ந்தவர் யாவரும் சொன்னார் "வாழை" போலே வெட்டிச் சாய்த்தார்களாம் நம் உறவுகளை தலைமுறைத் தளிர்களை" நாவினை அறுத்தால் கோஷங்கள் அடங்கலாம் தமிழீழம் எனும் உணர்வுகள் அடங்குமா?! கைகளை அறுத்தால் வேறு கதி இன்றி அடங்குவோம் என்று நினைத்தால் நம்பிக்கை அறுபட்டுப்போகுமா? அடிபட்டுப் போகுமா?! ஆண்ட பரம்பரை நாங்கள் என்று சொல்லித் திரிந்தால் போதுமா? மீண்டும் ஆளவேண்டும் என்று நினைப்பது தமிழனே தவறென்று ஆகுமா? கொன்று குவிப்பவன் காலைப் பிடித்தொரு கோழை பிழைப்பு இங்கு வேண்டுமா?! வென்று எங்கள் கொடி நாட்டுதல்…
-
- 3 replies
- 1.1k views
-
-
-
பச்சோந்தி கைஃபி ஆஜ்மி ஒரே கழுத்தில் எண்ணற்ற முகங்கள் ஒவ்வொரு முகத்திலும் ஆயிரமாயிரம் தழும்புகள் ஒவ்வொரு தழும்பும் மூடிய கதவுகளாய் அதனின்று வெளிச்சம் வராது அதனின்று வெளிச்சம் போகாது எந்தக் கருப்பை பெற்றெடுத்ததோ இதனை எந்த வீட்டில் வளர்ந்ததோ இது எந்த வீட்டில் திரிந்தோ இது எல்லா மொழியையும் பேசுகிறது ஜன்னலைப் போல் திறக்கிறது காயங்களை இதயத்திடம் சொல்கிறது கதையை உனது மதம்; உனது உன்னத கடவுள் உனது பண்பாட்டின் அடையாளத்தை இவையனைத்தையும் அபாயம் சூழ்ந்துள்ளது இவற்றை பின்தொடர்கிறது பேரிருள் உறைந்து போகிறதென் குருதி முடிக்கொள்கிறதென் திறந்த விழி உலகின் அனைவருமென் எதிரிகள் இப்படியே உணர்கிறேன் தோழர்களாக எவருமில்லை என்னை உயிருடன் வி…
-
- 3 replies
- 1.5k views
-
-
2017 ஆண்டு சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் - ஏவிளம்பி வருடம் ----------------------------------------- வருக வருக புத்தாண்டே வருக ...... தருக தருக இன்பவாழ்க்கை தருக...... பொழிக பொழிக வளம் பொழிக ..... வாழ்க வாழ்க உயிரினங்கள் வாழ்க ......!!! போ போ பழைய ஆண்டே போ ..... ஓடு ஓடு துன்பங்களோடு ஓடு ..... போதும் போதும் துன்பங்கள் போதும் .... மேலும் மேலும் தாங்க முடியவில்லை....! அணு அணுவாய் பெற்றோம் இன்பம் ..... வண்ண வண்ண கனவுகள் கண்டோம் .... விடிய விடிய கண் விழித்து உழைத்தோம் .... ஓட ஓட நினைக்க வைத்தது காலம் .......!!! இனிக்க இனிக்க வாழ்கையை தா புத்தாண்டே .... அன்பான அன்பான உறவுகளை தா புத்தாண்டே... உழைக்க உழைக்க உடல் உறுதியை தா …
-
- 3 replies
- 2.6k views
-
-
யுகமாறு காலம் நிலாந்தன் முந்தித் தப்பினவன் நீதிபதியானபோது பிந்தித் தப்பினவன் துரோகியாக்கப்பட்டான் குற்றவுணர்ச்சியின் மீது கொழுவப்பட்டிருக்கிறது நியாயத்தராசு முந்தித் தப்பினவன் தனது வம்சத்தையும் வம்சவிருத்தியையும் பாதுகாத்துக் கொண்டான் பாதுகாப்பான ஒரு இறந்தகாலத்தைப் பெற்றவனெல்லாம் நிகழ்காலத்தின் பேச்சாளன் ஆனான் சீவியத்தில் நேசித்தவரை மரண நேரத்தில் கைவிட்டுச் சென்றவனெல்லாம் இறந்த காலத்தைத் தத்தெடுத்து விட்டான் சீவியத்தில் நேசித்தவரை மரணம் வரை பின்தொடர்ந்தவனோ மரணத்தால் உமிந்து விடப்பட்டு கைதியும் அகதியுமானான். வீரயுகமொன்றின் முடிவில் கொல்லப்படாதவனெல்லாம் கோழையெனில் தற்கொலை செய்யாதவனெல்லாம் ஒற்றனெனில் எங்களில் எ…
-
- 3 replies
- 678 views
-
-
வாழ்கை போல் வசந்த காலத்தின் துடிப்புகள் எல்லாம் மெல்ல மெல்ல கண்களில் இருந்து மறைக்கிறது . சுயனலம் அற்ற போர்வீரர்கள் போல் இலைகள் மண்ணில் குவிந்து கிடக்கின்றது ஏகாந்தம் பேணிக்கொண்டு இறக்கையின் துடிப்பில் உலகை அளக்கும் தனித்த பறவைபோல் மெல்லிய குளிரின் வருகை அணைப்புகளற்ற வாழ்கையின் ஏக்கத்தை நினைவுபடுத்துகிறது வருடம் ஒருமுறை மாறிவரும் பருவத்தின் புதுமை முதுமையின் நீளம்போல் சோர்ந்து கிடக்கின்றது பிரிந்த நாள் முதலாய் ஊர்நினைவு வருமானமின்றிக் கட்டமுடியாத வட்டிக் கடனைப்போல் உள்ளுக்குள் பெருக்கி கொண்டே இருக்கின்றது
-
- 3 replies
- 3.6k views
-
-
"பாரிஸ் பையா பாரிஸ் பையா" [திருமண நிகழ்வை மையமாக வைத்த துள்ளு பாட்டு / முதல் முயற்சி] "பாரிஸ் பையா பாரிஸ் பையா பாய்ந்து வாடா பாய்ந்து வாடா பைசா கோபுரம் கொஞ்சம் சரியுது தோள் கொடுடா தோள் கொடுடா" "படிப்பு பாதி தியாகம் பாதி பல்லக்கில் வருவாள் உந்தன் பாதி எண்ணம் பாதி கனவு பாதி மஞ்சத்தில் சாய்வாள் உந்தன் பாதி" "பாரிஸ் பையா பாரிஸ் பையா பச்சை கிளி எட்டி பார்க்குது பஞ்சு மெத்தை காத்து இருக்குது தோள் கொடுடா தோள் கொடுடா" "ஆண்மை கொண்ட அழகு சிங்கமே ஆசை நிறைந்த அழகு வாலிபனே ஆலாத்தி எடுக்க மாமி நிற்கிறா கழுத்…
-
- 3 replies
- 396 views
-
-
1 ‘சே’ சொன்னார் ஒரு புரட்சிகாரனின் தகுதிகள் வலிய கால்கள் எளிய சுமை பசித்த வயிறு என்னிடமோ மூன்றும் இருக்கின்றன நான் என்ன புரட்சிக்காரனா, பாட்டாளியா, பிச்சைக்காரனா? எது நான்? சம்பூரிலிருந்தும், காசா பள்ளத்தாக்கிலிருந்தும், துரத்தியடிக்கப்பட்டவர்களின
-
- 3 replies
- 1.3k views
-
-
மாவீரர் புகழ் பாட தீபம் ஏந்தி செல்வோம் , மலரோடு ,நம் கண்ணீர் மழையாக சொரியும் உடலோடு உயிரும் ,விதையாக் தந்தீர் உயிர் உள்ள வரையும் மறவோமே நாளும் மகன் இல்லா,அன்னை,மகள் இல்லா அன்னை உறவற்ற ஊரார் உயிரற்ற மனைவி ,தன்னை விழி திறந்து பாரீர் ,முடிவு தான் இல்லை வழி ஒன்று பிறக்கும் ,நம் தலைவன் நோக்கில் மாவீரம் ஒரு போதும் ,மறையாது மறையாது தாய் மண்ணின் புதல்வர் ,தம் கடன் முடித்து ஓய்வில்லா உறக்கம் ,கொள்ளுவீர் அங்கு தாய் மண் என்றும் மறவாது சத்தியம் ............... ,
-
- 3 replies
- 1.3k views
-
-
நாம் ஆயிரம் எழுதலாம். ஆனாலும் ஒரு கவிஞர் எழுதுவது போல் வருமா? கவிஞர் பழனி பாரதி புதிய இந்தியா என்ற தலைப்பில் எழுதியிருக்கும் கவிதை மோடியின் டிரவுசரைக் கழட்டுகிறது.. விவசாயிகளுக்கு வாய்க்கரிசி போடுவதுதான் புதிய இந்தியா நெசவாளர்களுக்கு சவத்துணி நெய்வதுதான் புதிய இந்தியா சில்லறை வணிகர்களுக்கு நெற்றிக்காசு வைப்பதுதான் புதிய இந்தியா மாட்டுக்கறி உண்பவரை கொன்று கொன்று மனிதக்கறி உண்பதுதான் புதிய இந்தியா இல்லாதவனின் கோவணத்தை பிடுங்கி இருக்கிறவனுக்கு கம்பளம் விரிப்பதுதான் பு…
-
- 3 replies
- 2.9k views
-
-
வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே..! ******************************************** மு.வே.யோகேஸ்வரன் ********************************* எரிமலையின் தீப் பிளம்பை எமது உறவுகளின் கண்களில் கண்டேன்.. கல்லூரி மாணவர்களா இவர்கள்..? இல்லை வல்லூறாம் சிங்களவரை விரட்ட வந்த நம்மூரின் நாயகர்கள்..தமிழ்ச் சொல்லூறும் எம்மினத்தின் போர்க் குயில்கள்! சின்னத் தளிருடல் வாடுதையா-உங்கள் சோர்வில் எம்மீழம் தோன்றுமையா..! உண்ணா விடுதலை நோன்பில் உங்களை ஆகுதி ஆக்கிக்கொண்ட எங்கள் திலீபர்களே..! வண்ணத் தமிழுக்கு வளைகாப்புப் போடவந்த வாலிபப் பீரங்கிக் குண்டுகளே.. நாளை மலரும் எம்மீழ வரலாற்று நூலில் தோளை நிமிர்த்தி நிர்ப்பீர்கள் ...திண்ணம் இது!…
-
- 3 replies
- 823 views
-
-
உனைத் தொடர்ந்த எனைப் பிறர் தொடராதிருக்க, எங்கள் தடங்களை என் கூந்தலால் மறைத்தேன். எங்கள் கட்டில் தீவில் சூரியன் அஸ்த்தமித்தது, எதிரொலிகளை உண்டபடி இரவு எழுந்தது. கடலில் மிதக்கும் மரக்கட்டைகளைப் போல் கிடந்த நம் முதுகளோடு மெழுகுவர்த்த்தி மின்னி மறைந்து இரகசியம் பேசியது. எங்கள் தீவில் எங்கள் கடற்கரையில் நாங்கள் பின்னிப் பிணைந்து கிடந்தோம். எனக்கு மேல் உந்தன் விழிகள் கடைப்பிடித்துவிடுவேனோ எனத் தோன்றிய எனது வாக்குறுதிகள் பற்றிய பயத்தோடு, நாங்கள் பகிர்ந்து கொண்ட மெய்களைக் காட்டிலும், உரைக்கத்தவறிய பொய்களிற்காக அதிகம் வருந்திக்கொண்டு, நான் ஆழமாய்ச் சென்றேன். உனக்காக இறந்த காலத்தோடு போர் புரிய, நான் ஆழஆழமாய்ச் சென்றேன். இப்போ எங்கள் இருவரிற்கும் த…
-
- 3 replies
- 1.1k views
-
-
'' போராட புறப்பட்டது பிழையா....???'' கட்டிவைத்த என் வீட்டை கயவன் வந்து இடிக்கின்றான்.... அவனை தட்டிகேட்க துணிவின்றி கை கட்டி நிற்கின்றேன்... துப்பாக்கி முன் நிற்க துணிவு வரும் எப்படி....??? தட்டி கேட்க நிற்பேனா...?? தப்பிக்க நிற்பேனா....??? முரண்டு பிடித்தால் முண்டமாய் நான் கிடப்பேன்.... அடங்கித்தானே போக வேண்டும் சிறு பாண்மை என்ன செய்யும்....??? சீற வா முடியும்..?? சினக்கவா முடியும்..??? இன்றிங்கு இப்படித்தான் நடக்கிறது.... யார் தட்டி கேட்டார்...?? யாரால் முடியும்....??? தட்டி கேட்டால் பதில் என்ன வரும் - நீ பலியாய் போவாய்.... இது என்ன...?? இது தானே அடக்கு முறை... இப்போ சொல் உலகே ந…
-
- 3 replies
- 1.3k views
-
-
-
இசையை ஒலியினாலான கலை வெளிப்பாடு என வரையறுக்கலாம். இசையில் நல்ல இசை கெட்ட இசை என்பதை வரையறுப்பது மிகவும் கடினம். இதற்குக் காரணம் இசை குறித்த உணர்வு தனிப்பட்ட நபரின் விருப்பு வெறுப்பு சார்ந்தது. சில வகையான ஒலிகள் நம் செவியில் இரசிக்கத்தக்க உணர்வை உண்டாக்குகின்றன. வேறு சில வகையானவை இரைச்சலாக உணரப்படுகின்றன. நல்ல இசை குறித்த வரையறை பெரும்பாலும் நாம் எப்படிப்பட்ட இசையைக் கேட்டு வளர்ந்திருக்கிறோம் என்பதைப் பொருத்தது. மேற்கத்திய செவ்வியல் இசையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு கர்நாடக இசையோ அராபிய இசையோ உடனடியாக இரசிக்கும்படியாக இருப்பதில்லை. காரணம் இரண்டு வேறு செவ்வியல் இசைகளுக்குகிடையே ஒலியிலான அடிப்படை வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் குறித்து பின்னர் ஒரு நாள் இன்னும் கொஞ்சம் விரிவாகப…
-
- 3 replies
- 2.4k views
-
-
கட்டுண்டு கிடக்கும் காலச்சக்கரம் தன்னியக்கம் பெறுக கண்கள் சிவப்பேறிக் கிடக்கின்றன. அழுகின்றேனா? அனல்கின்றேனா? விழியோடையில் உலர்ந்த திரவத்தின் சாட்சியமாக இமையோரத்தில் பிசுபிசுப்பு. பிம்பங்களற்ற எழுதுகோல் நட்பின் கவிதைப் பேச்சும், தோழமைக் கடிகளும் இருண்ட துயருக்குள்… எழுதும்போதே எண்ணங்கள் தோற்கின்றன மீளாத் துயரின் வடுக்களாக ஒளித்தெறிப்புகள் மங்கிக் கலங்குகின்றன. எல்லையற்ற கற்பனை வெளிகள் வெறுமைப்பட்டதாய் ஆங்காங்கே சுமைதாங்கிகளின் படிமங்களாய்…. உன்னில், என்னில் ஆழப்படிந்து, உயிர்ப்பின் மூச்சுவரை உட்கார்ந்து விட்டன. வானம்பாடிகள் ஊமையான வரலாறு ஒன்று தோற்றம் கொண்டுள்ளது. பிராணவாயு இல்லாவிடத்தில் …
-
- 3 replies
- 1.1k views
-
-
நீர் பகைஅருகில் போகும்போது பாம்புகளும் நடுங்கும் பாதைதனை விடும் .. கம்பி பட்டு முள்வேலிகள் பூமாலையாய் தெரியும் .. எதிரியின் மண்ணரன் சிறு புற்றாய் இருக்கும் . கந்தகப்பொதி புத்தக்பைபோல இருக்கும் சுடுகோல் எழுதுகோலாய் இருக்கும் கைக்குண்டு அழி ரப்பர் ஆகமுன் நிங்கள் அதிகாலை மீண்டும் வந்திடுவீர் ஓய்விடம் ... மச்சான் நீ எனக்கு பூசிவிட்ட கரி போகவில்லை நாளை உனக்கு பூசுறன் கரி எண்ணை கலந்து கழுவினாலும் போகாது காய்ந்தாலும் போகாது பருவாயில்லை மச்சான் வெடிவிளுந்தா போயிடும் ... டேய் நான் பக்கத்தில் உள்ளவரை ஒரு ரவை .. உன்னை நெருங்கா வேங்கையா கொக்கா .. என்று நீ கட்டி என்னை அணைத்த கணம் நினைவில் ... கண்கள் கண்ணீரை தூவுதடா உன் மேல் என் பாசக்கார தோழா..
-
- 3 replies
- 765 views
-
-
துவேச துவசத்தின் திவசம்! ஆண்டாகி போனதுவோ மாண்ட கதை கேட்டு ? பூண்டோடு கொளுத்தி கொன்றான் இனவெறியன் ! தாங்க முடியாமல் பாராளுமன்ற சதுக்கம் சென்று இரவிரவாய் ஓலமிட்டு கதறிய காலம் அது ! பச்சிளம் குழந்தை தாயின் பிணத்தினிலே பால் தேடி புழுவோடு போட்டி போட்ட அந்த கேவலத்தை கண்டோமே ! பிறக்காத குழந்தைதனை வயிற்றை பிளந்து கொன்று இனவெறியின் கொடுமை அதை கொதித்தபடி பார்த்தோமே ! எத்தனை கொடுமை அதை என்னால் எழுத பலமில்லை ! இன்னும் என் இமைக்குள்ளே உறுதியாய் பதிந்த படம் ! தூக்கமும் வாராமல் கண் முழித்து வலையில் தேடி பார்த்தேன் எதாவது ஒரு "பதில்" செய்தி, அதை இன்றுவரை தேடுகிறேன் ! முள்ளிவாய்காலில் பாய்ந்து ஓடிய தமிழ் இனத்தின் ரத்தம் கடலோடு கலந்ததுவோ? இல்லை! உலக…
-
- 3 replies
- 1k views
-
-
காதல் பரம்பரை சொத்துமல்ல பரம்பரை கடத்தியுமல்ல ^ ---- நான் காதலாக இருந்து பயனில்லை நாம் காதலாய் இருக்க வேண்டும் ^ ----- காதல் - இரு - வாசகங்கள் கவிப்புயல் இனியவன்
-
- 3 replies
- 2.5k views
-
-
நமக்குள் போர் நிறுத்த ஒப்பந்தம் வேண்டாம் நமக்குள் சமாதான ஒப்பந்தம் செய்து கொள்வோம் அப்படியென்றாலாவது சமாதான மீறல் புரிகிறாயா என்று பாப்பம் நான் குடிக்கவேயில்ல இருந்தபோதும் குடிகாரனாய் நடிக்கிறேன் உன்னை பேசவைக்க வேண்டுமே என்ன தவம் செய்ததோ என் வார்த்தைகள் உனக்காய் கவி எழுதுகையில் மெய் எழுதுக்களும் உயிர் பெற்று விடுகின்றது மழை விட்டது உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் இருந்தும் என் குடைக்குள் இன்னும் நீ கோவம் வரும் போது உன்னை நினைக்க சொன்னாய் வராத போதும் உன்னை நினைத்தேன் இப்ப என்னை நினைப்பாயோ -யாழ்_அகத்தியன்
-
- 3 replies
- 1.2k views
-
-
கனவும் நனவுமாய்ப்போன காலபைரவர்களே கார்த்திகை நாளில் வணங்குகிறோம் உம் காலடித்தடம் பற்றி கடலளவு கருணை இல்லாவிடினும் _சிறு கடுகளவேனும் நெஞ்சில் ஈரம் கொண்டு விடுதலை வேட்கையைக் கூட விலைபேசும் மனிதர்கள் மத்தியில் வீர வரலாறு எழுதினாயேடா தோழா வீர வரலாறு எழுதினாயே... தீட்டிய மரத்தில் கூர்பார்க்கும் எமக்காய் தினம் தினம் சிலுவை சுமந்தாயே தோழா தினம் தினம் சிலுவை சுமந்தாயே... உணவுண்ட கோப்பையில் மலங்கழிக்கும் ஈனமா இனத்திற்காய் உன் இன்னுயிரை ஈய்ந்தாயே தோழா இன்னுயிரை ஈய்ந்தாயே... கூடப்பிறந்த சோதரியை கூட்டாக கருவறுக்கும் போது கூட்டிக்குடுக்கும் கயவர்கள் மத்தியில் குண்டு சுமந்தாயேடா தோழா குண்டு சுமந்தாயே... இரக்கப்பட்டு விடும் கண்ணீரையே …
-
- 3 replies
- 672 views
-