Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. அன்னைமண் காக்க ஆசைகள் துறந்து ஆயுதம் ஏந்திய போராளிகளை.... சதிவலையால் சிதைக்கப் பட்ட போது சரணடைந்த போராளிகளையே.. துரோகிகளாக்கும் சமூகத்தில் நானும் ஒரு துரோகிதான்.... மூன்றுலட்சம் மக்களையும்,போராளிகளையும் முட்கம்பி வேலிக்குள்ளிருந்து... மீட்க பேய்களின் கால்களில் விழுந்தேனும் காக்கத் துடிக்கும் இதயங்களும்... அவர்களுக்காக ஒலிக்கும் ஓரிரு குரல்களும் துரோகியானால் நானும் ஒரு துரோகிதான்... சோற்றுப்பாசலும் காசும் கொடுத்துவிட்டு சொல்லித்திரியும் உள்ளங்களின் மத்தியில்.. சொந்தங்களையும் சொத்துக்களையும் இழந்து அநாதையாக நிற்கும் மக்களும்.. சொந்த சகோதரனைப்போல் ஒவ்வொரு புலிவீரனையும் நெஞ்சில் சுமந்ததால் சொல்லாமல் கொள்ளாமல்... ச…

    • 15 replies
    • 2.6k views
  2. ஊருக்கு ஏற்றார்ப்போல் பேசி... உறவுகளுக்காக நடித்து...... வேலைக்கு ஏற்றார்ப்போல் ஆடி... வேண்டிய மட்டும் பொய் வார்த்தைகள் கூறி... நாட்களை நகர்த்துகிறேன் நான்.... என்னுடைய சுயத்தை இழந்தபடி.... http://www.ilankathir.com/?p=2622

  3. இணைய பரந்தவெளியில் .. பல்லாயிரம் முகவரியில் .. பாமரன் முதல் பண்பாளன் வரை .. தேடி அலையும் தேடலில் ... கூகுளில் மூழ்கி யாழில் மிதந்தேன் .. என்ன ஆச்சரியம் அதிசய தீவா.. அல்லது மூழ்கிய குமரிகண்டமா.. எங்கும் தமிழ் ..எதிலும் தமிழ் .. நெஞ்சம் நிறைந்த தமிழ் என்னை ... நிலை குலைய வைத்த தமிழ் .. நானே என்னை தேடிய தமிழ் .. என்னை நானே வளர்க்க உதவிய தமிழ் .. எல்லாம் ஒருங்கே கண்டேன் உலவி யாழில் .. வணக்கம் வைத்து அழைப்பதில் இருந்து .. அழகா விருந்தினரை சுற்றி காட்டி .. எங்கு நீங்கள் என்ன தமிழ் படிக்கலாம் .. என்று அறைகள் பிரித்து அடுக்கடுக்கா .. பல சுவை தமிழ் படைத்து நிறைந்திருக்கு .. யாழ் உலாவி ... தமிழ் தோன்றல் முதல் தேசியம் வரை .. தமிழை அழகா செதுக்கி வைக்க உளிகள் பல ..…

  4. என் திருமணம் கூடக் காதல் திருமணம் தான். கணவர் காதலராய் இருந்தபோது வெளிநாடு சென்றுவிட்டார். அப்போது நான் கொண்ட தவிப்பை இன்று நினைத்துப் பார்த்தேன். இக்கவிதை வந்தது. காதலர் தினம் எனக்குப் பழசாக இருக்கலாம். கவிதை புதிது. கற்பனையில் எண்ணியவை உன்னிடம் கண்டதனால் காதல் கொண்டேனடா காலமெல்லாம் காத்திருந்து உன்னைக் கண்டேனடா கண்ணிமை மூடினும் என்முன்னே நின்று காதல் செய்கிறாய் காதினிக்க வந்து காதல் மொழி பேசுகிறாய் கயவனே உன்னைக் காணாதிருந்திருந்தால் காலமெல்லாம் நான் கற்பனையில் வாழ்ந்திருப்பேன் கண்டதனால் நிதம் என் உயிர் துடிக்க நினைவு நிதம் வதைக்க நேர காலம் தெரியாது நெகிழ்ந்து போய் கிடக்கிறேன். நெருப்பாய் இருந்தவள் நெக்குருகி நிற்கிறேன் நெஞ்சம்…

  5. ஒவ்வொரு நாளும் குடைந்துகொண்டிருக்கும் கேள்விதான்.. பிறந்த நாளில் இன்னும் சற்று அதிகமாகவே குடையும் கேள்வி.. நானென்பது யாதென்பேன்..? ------------------------------------------- நானென்பது யாதெனப் புரியவில்லை... தேடித் தேடிக் களைத்து முதிர்ந்த மனக்காலத்தின் ஒரு மூலையில் பெருங்கேள்விக்குறியுடன் விழித்துக் கிடக்கிறது அறிவு... நானென்பது யாதென்பேன்..? எனை வனைந்த அனுபவங்களா..? மூளைத்திரட்சிகள் எங்கும் நீந்திக்கொண்டிருக்கும் நினைவுகளின் தொகுப்புகளா..? படித்து முடித்த புத்தகங்களா..? நம்பும் நம்பிக்கைகளின் சாயைகளா..? ஜீன்களின் வழி புகுந்த காலப்படுக்கைகளில் புதைந்துகிடக்கும் மூதாதைகளின் கனவுகளா..? சொல்லற்று நிற்கிறேன்... விளங்க முடியாப் புதிராக வெளியிலிருந்து …

  6. Started by கோமகன்,

    பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்... பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் ... படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்... அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் .... அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் .... பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் .... மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் ..... பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் ... முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் .... வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதென…

  7. சுற்றமும் உற்றமும் ஊர் முற்றமும் முழு நிலவும் கவளச் சோறும் கருவாடும் பனங்கட்டியும் பணியாரமும் மண்சட்டியும் கல்லடுப்பும் தட்டை வடையும் எள்ளுப்பாகும் ஒடியல்கூழும் நண்டுக்கறியும் ஊறுகாயும் மோர்மிளகாயும் ஆலமரமும் பிள்ளையார் கோயிலும் வறுத்த கச்சானும் வில்லுப்பாட்டும் கிட்டிப்புள்ளும் கொக்குப்பட்டமும் மாட்டுவண்டியும் பொச்சுமட்டையும் பஞ்சுமுட்டாயும் இஞ்சித் தேநீரும் பூவரசும் நாதஸ்வரமும் வாழைமரமும் பாலைப்பழமும் வல்லைவெளியும் முல்லை நிலமும் பள்ளிக்கூடமும் பழைய நண்பரும் சித்திரைவெயிலும் செவ்விளநீரும் மாரி மழையும் மண்வாசமும் மதவடியும் உதயன் பேப்பரும் லுமாலா சைக்கிளும் குச்சொழுங்கையும் பேரூந்தும் ப…

  8. Started by சண்டமாருதன்,

    கோவத்தின் பெறுமதி அறியாதவன் கண்ணீரின் கனதி அறியாதவன் அடிமைத்தனத்தை அழகென ஆரதிப்பவன் மானத்தின் மகத்துவம் புரியாதவன் அவன் யார்? நான் நான் இழவு வீட்டில் சண்டை பிடித்தேன் மயானத்துக்கு செல்ல முடியாத பிணங்கள் முற்றத்தில் நாறுகின்றது பாடை தூக்க நாலுபேரை ஒன்றாக நிற்க விடவில்லை ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழியை ஊர் ரெண்டுபட்டால் கொன்றவனுக்கு கொண்டாட்டமென்று புதுமொழியாக்கியவன் பேரினவாதம் கோவணங்களை அவிட்டு கொடியாய் பறக்கவிட்டுள்ள நிலையில் உரிமையாளர்கள் என்கோவணம் பெரிது உன்கோவணம் பெரிது என போட்ட சண்டையில் முன் நிற்பவன் சாவு வீடு நோக்கி நட்பு பகை மறந்து செல்வார்கள…

  9. நான் அழுகிறேன் இன்று தோல்விகளின் முழு உருவமாய் பிறந்தேனே என்று...

    • 2 replies
    • 1.2k views
  10. நான் இசைப்பிரியா ஓயாத கடலின் அலைகள் இடைவிடாது என்னுடலில் மோதியபடி மடிந்து சரிகின்ற வேளையில் ஆழமாய் வேர்ப் பரப்பி விரிந்திருக்கும் நீர்த்தாவரத்தைப் போல என்னை இழுத்துச் செல்கிறாய் என் காலடியிலிருந்து ஒழுகி வழியும் நீர்த்துளிகள் உன் அழித்தொழிப்புக்குச் சாட்சியாய் வெளியெங்கும் உருண்டு கொண்டிருக்கும். அடர்ந்த வனத்தில் தனித்துத் திரியும் மிருகத்தின் வெறிகொண்டு என்னை வல்லுறவு செய்கின்றாய் சதையை ஊடுருவிய உன்னால் என் நிலத்தின் நிணநீர் ஓடும் எலும்புகளை என்ன செய்ய இயலும்? என் மார்பகங்களை அரிந்து வீசிய உனக்கு அதன் அடியிலிருக்கும் நெருப்பின் சூடு தகிக்கவில்லையா? நீ ஏந்திய இரும்புக் கருவியும் பாய்ச்சிய உடற்குறியும் இனி எழுச்சியின் அமிலத்தில் கரைந்தே போகும் …

  11. புலவன் என்று பொய்புரைத்து மணந்துகொண்டவன் தன் மனைவி படிப்பறிவற்றவள் என அறிந்து ஆறுதல் அடைந்தான். அவன் சொல்லும் சொற்களை அவள் கவிதை என நம்பினாள். அந்நிலையில் அவள் கணவனுக்குச் சோதனை வந்தது. கவிதைக்குப் பரிசளிப்பதாக அரசனின் அறிவிப்பை செவிமடுத்த அவள், அவனைக் கவிதை எழுதி அரசனிடம் பரிசு பெற்று வருமாறு வேண்டிணாள். அன்புடடையாள் வேண்டுதலை மறுக்கமுடியாது விதியே! என்று அவன் அரசவைக்குப் புறப்பட, அவள் கட்டுச்சோறும் கட்டிக் கொடுத்தாள். என்ன எழுதுவது! எதை எழுதுவது! புரியாத அவன் போகும் வழியில் எலியொன்று மண்தோண்டுவதைக் கண்டான். உடனே மண்ணுண்ணி மாப்பிள்ளையே! என்று எழுதினான். சற்றுத் தூரம் செல்ல அவன் கட்டுச் சோற்றை முகர்ந்த காகம் ஒன்று கா! கா! என்று கத்தியது. கத்தலைக் கேட்டு காவிறையே! என்ற…

    • 0 replies
    • 1k views
  12. நான் இறந்தே போனேன் ஆனால் ... என் இதயம் துடி துடிக்க. நான் பேச்சு அற்று கிடந்தேன் ஆனால் ... எனக்குள் குரல் ஒலிக்க நான் பார்வை இன்றி கிடந்தேன் ஆனால் ... வெளி உலகை உள்ளூரப் பார்த்து நான் அசைவின்றி கிடந்தேன் ஆனால் ... கனவு என்னை தொலை தூரம் கொண்டு செல்ல நான் இறந்தே போனேன் ஆனால் ... உயிராய் ... உயிராய் இறந்தேன்.

    • 5 replies
    • 951 views
  13. அழவேண்டும் ஒரேயொரு முறை ஓங்கி அழவேண்டும். அழுகை அடையாளமாகவோ அவதானமாகவோ இருந்துவிடக் கூடாது. அழுகை மீதான குறிப்புக்கள் இன்னொருவரால் கடத்தப்படுமாகையால் அழுகைக்கு காரணமாகிவிடவும் கூடாது. தலைகோதவும் விரல்களைகளை வருடவும் மடி சாய்த்து கன்னம் தடவவும் அணைத்து முதுகை நெகிழ்க்கவும் ஒருவரும் இருக்கவும் கூடாது. என் அழுகை இறுதியானதாகவும் இயல்பானதாகவும் உண்மையானதாகவும் இருக்க உதவுங்கள். எப்போது அழுதேன். சுயநலத்தால் குரலெடுத்து கண்ணீர்விட்டுத் தொலைத்ததையெல்லாம் அழுகைக்குள் எப்படியடக்குவது. ஒலியில்லாமல் கண்ணீரில்லாமல் ஒடுங்கி தளர்ந்து நின்றதையெல்லாம் எதில் அடக்குவது? அழவேண்டும் ஓங்கி அழவேண்டும் அது நான்…

  14. அவன் புலி அவர்கள் புலி ஆதரவாளர்கள் இவன் அகிம்சாவாதி இவர்கள் அகிம்சாவாதிகள் அவன் துரோகி அவர்கள் துரோக கும்பல் இவன் எட்டப்பன் இவர்கள் எட்டப்பர்கள் அவன் புலம் பெயர்ந்தவன் அவர்கள் புலம் பெயர்ந்தவர்கள் இவன் தாயகத்தான் இவர்கள் தாயகத்தவர்கள் அவன் ஜனநாயவாதி அவர்கள் ஜனநாய்கவாதிகள் இவன் சோசலிசவாதி இவர்கள் சோசலிசவாதிகள் அவன் குறும்தேசியவாதி இவன் பெரும்தேசியவாதி நீ சந்தர்பவாதி நான் இவையாவும் சேர்ந்த கலவை சூப்பர் சுப்பிரமணிவாதி

  15. [size=4]இனியவளே என்னுள் இருக்கும் உன் நினைவினை அழித்துவிடலமென்று நினைக்காதே அந்த சூரியன் கூட என்னை எரிக்கலாம் ஆனால் என்னுள் இருக்கும் உன் நினைவினை அழிக்க முடியாது நான் உயிருடன் இருக்கும் வரை...[/size]

    • 2 replies
    • 880 views
  16. இளையராஜா. --------------------- நான் உயிர் வாழ கார்பன் - டை - ஆக்ஸைடே போதும் - அது உன் ஹார்மோனிய பெட்டியில் இருந்து வந்தால்.

  17. 1 ‘சே’ சொன்னார் ஒரு புரட்சிகாரனின் தகுதிகள் வலிய கால்கள் எளிய சுமை பசித்த வயிறு என்னிடமோ மூன்றும் இருக்கின்றன நான் என்ன புரட்சிக்காரனா, பாட்டாளியா, பிச்சைக்காரனா? எது நான்? சம்பூரிலிருந்தும், காசா பள்ளத்தாக்கிலிருந்தும், துரத்தியடிக்கப்பட்டவர்களின

  18. கண்டதையும் கேட்டதையும் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? பயணம் பல செல்கிறேன் பயணத்தில் பல பார்க்கிறேன் பட்ட பார்த்த அனுபவத்தை வாழ்க்கை கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? மரம் வெட்டும் போது என் மனதில் இரத்தம் வடியும் எழும் என் உணர்வை சமுதாய கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? அடிமாடாக அடித்து அடுத்த வேளை உணவுக்கு அல்லல் படும் குடும்பங்களை பார்ப்பேன் மனம் வருந்தும் பொருளாதார கவிதை என்ற தலைப்பில் கண்டபடி கிறுக்குகிறேன் யார் சொன்னது நான் எழுதுவது கவிதை என்று ....? காதோரம் கைபேசியை வைத்து கண்ணாலும் சைகையாலும் தன்னை ம…

  19. கௌதம முனிவரின் மனைவியை ஏமாற்றி கெடுத்தவன் தேவன் ஆனான் கண்ட பெண்களிடம் எல்லாம் காதல் லீலை புரிந்தவன் கடவுள் ஆனான் பத்து இருவது என மனைவிகளை அடுக்கிவன் எல்லாம் அரசன் ஆனான் நேசித்து பழகிய ஒரே பெண்ணிற்காக அலையும் நான் மட்டும் பொறுக்கி ஆனேன் . - வை .நடராஜன்

  20. நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... ஏடும் எடுத்ததில்லை ஏரெடுத்த அழுக்கும் கலைஞ்சதில்லை ஏர்போட் ஏறி இறங்க எடி நான் உனக்கு ஏற்ற ஆளாய் வரமாட்டேன்.. பாடமும் படிச்சதில்லை பட்டமும் பெற்றதில்லை பகட்டும் எனக்கு இல்லை.. எடி நான் உனக்கு ஒத்துவரமாடேன்.. நான் ஏழை வீட்டுப் பிள்ளை கிடுகு வீட்டுக் கிள்ளை கிட்ட வந்து தொட்டு நிற்க.. எடி நான் உனக்கு சரிவர மாட்டேன்... **** வாசலில் வாடி நிற்கும் செவ்வரத்தை நான் மடி மீது ஊஞ்சல் கட்ட மாதுளை உனக்கு மன்னன் மகனும் அல்ல எடி நான் உனக்கு என்றும் தோதாய் வரமாடேன் காவல் காக்க நான் நாயும் இல்லை உன் காலடி சுற்றிவர பூனையும் இல்லை கட்டிலில் …

  21. காற்று கொதிக்கிறது நீ மௌனத்தை கரைத்திருக்கிறாய் மரங்களும் ஏரிகளும் கூட எரிந்துபோகலாம் இனி.. ஏன் இந்த இளவேனில் பொழுதில் உன் விழிகள் துயரப் பாடலை கேட்கிறது.. நேற்றைய உறைபனிவிலக்கி, ஒழுகும் கதிர்கள் தரைகளை தழுவுவதைப் பார் வீட்டுக் கூரைகளில், இலைபோர்க்கும் மரங்களில் மின்சாரக்கம்பிகளில் பெயர் தெரியாத பறவைகளின் மகிழ்வைப் பார் நீ புல்லாங்குழல். காற்றை புகவிட மறுக்கிறாய்.. தூசிகளை நிரப்பி பெருமிக் கிடக்கிறாய் அநாதையாகி அலைகிறது நேற்றைய உன் குழலோசை.. நேற்றுக்கும் நாளைக்கும் இடைப்பட்ட பொழுதொன்றை மென்றுவிட்டு போகிறாய்.. எப்போது அசைமீட்கப்போகிறாய்....?

  22. நான் ஒரு இஸ்லாமியன் இஸ்லாமியக் குடியரசுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் எனக்கும் எந்திரத் துப்பாக்கிகளுக்கும் பெண்களை இருட்டறையில் பூட்டுவதற்கும் அமெரிக்க டாலர்களுக்கும் கல்லால் அடித்துக்கொல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை நான் ஒரு இஸ்லாமியன் இறைவனை நம்புகிறவன் அதனாலேயே கருணையை நம்புகிறவன் கடவுளினால் நீதி மறுக்கப்பட்டால் அந்தக் கடவுளை சந்தேகிக்கவும் தயங்காதவன் சமாதானத்திலும் சுதந்திரத்திலும் இறைவனை தொட்டு உணர்கிறவன் மசூதியை இடித்தவனை எப்படி வெறுக்கிறேனோ அவ்வாறே புத்தரின் சிலையை வெடிவைத்து தகர்ப்பவனையும் வெறுக்கிறேன் எல்லா பழங்கால தண்டனைமுறைகளும் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று நம்புகிறேன் நா…

  23. காலைக் கதிரொளியில் காற்று வரும் வழியில் - புதுக் காதல் கண்களுடன் உன் முகம் மாலை மயங்குகையில் மார்பில் ஜடை தவள -நகை மலரும் கண்களுடன் உன் முகம் நீண்ட இரவொன்றில் நிலவின் கீற்றொளியில்- நீர் மல்கும் கண்களுடன் உன் முகம் பாழும் பகலொன்றில் பாதைகள் மாறிய போது - துயர் நிறைந்த கண்களுடன் உன் முகம்....

  24. கருத்தும் கவிதையும் - வ.ஐ.ச.ஜெயபாலன் . பெண்கவிஞர் ஒளவ்வையார் கற்பை உடலுடனோ மனசுடனோ இணைக்காமல் ”கற்பெனப் படுவது சொற் திறம்பாமை” என ’சொல்; சம்பந்தப் பட்டதாக வரையறை செய்கிறார். சொல் அடிபடையில் குழந்தை பெறுவது தொடர்பானதுதான். சொல் அடிப்படையில் உன்னோடு வாழும்வரை வேறு பெண்ணை/ஆணைச் சேரேன் என்பதுதான், இது இருவருக்கும் பொதுவானது. . இந்த வரைவிலக்கணத்தின்படி என் அனுபவத்தில் நோர்வீயிய ஆண்களும் பெண்களும் கற்புநிலையில் உச்சம் என்பேன். ஒரு சமயத்தில் ஒருவன் ஒருத்தியென தளம்பாமல் வாழ்வது, மனம் கசந்தால் நேரே பேசி விலகியபின் மட்டுமே வேறு துணை தேடுவது என அவர்கள் பண்பில் சுதந்திரமான கற்புநிலை. சிறக்கிறது. இதனால் உறவின் வெளியே தொடர்புகள் அக குறைந்த சூழல் அமைந்துள்ளத…

    • 1 reply
    • 828 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.