கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா? ஆணதாய், பெண்ணதாய் பிம்பங்கூட பேரன்பில் மாய்ந்ததாய் மனதில் தோன்றி ஊரதும், உலகதும் உறைந்தே போக – உன் உறவது மட்டுமே உயிர் மேவுமோ? தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன் தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன் வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக் கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன? நேற்றுவரை மோகித்த கனவு எல்லாம் நெடுந்துயர் தந்ததன்றி வேறு இல்லை ஆற்ற வா…. அன்பே! அருகே நீதான் – அன்றில் ஆற்றாத துயரோடு……. உயிர் போகுமோ? எதையுமே கேட்டதில்லை உன்னிடத்திலே என்னையும் தந்ததில்லை உன் கரத்திலே பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப் பேதையின் நெஞ்சம் செய…
-
- 20 replies
- 4.8k views
-
-
நண்பர்களே! தமிழீழ தேசிய கீதத்தை எழுதும் போட்டியொன்றை விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தமை நீங்கள் அறிந்திருக்கக் கூடியதே. இது வரை அப்படி ஒரு தேசிய கீதம் இயற்றப்பட்டதாகவோ யாரும் பரிசு பெற்றதாகவோ நான் அறியவில்லை. இங்கு கவி வடிக்கும் பல கவிஞர்களின் திறமையையும் கண்டு வியந்த நான் ஏன் நீங்கள் அதற்கு முயற்சி செய்யக்கூடாது என்று கேட்கிறேன்? தமிழீழ தேசிய கீதம் மிக எளிமையான சொற்களால் ஆனதாக இருக்கவேண்டும். ஆக, இது வரை நாம் அறிந்த இலகுவான தமிழ்ச் சொற்களின் கோர்வையே தமிழீழ தேசிய கீதமாக மலரப்போகிறது. ஆனால், அது எதைச் சொல்லப்போகிறது, சொல்ல வேண்டும் என்பதே கேள்வி. எனவே, பல்வேறு நாடுகளின் தேசிய கீதங்களையும் தமிழில் சேகரிப்போமென ஒரு முயற்சியைத் தொடங்குகின்றேன். சேகரிக்கப்படும் …
-
- 12 replies
- 4.8k views
-
-
மழை பெய்தது வயல் நிறைந்தது உயர்த்தி கட்டிய வரப்பில் நிறைந்து வந்தது வெள்ளம் நிறைந்ததால் நிமிர்ந்தது நிறை குலை தள்ளிய நிறைந்த நெற்கதிர் விளைந்தது விண்ணுயர்ந்து விளைவித்தவன் விவசாயி உழுது மறுத்துளுது உயர் விதை தேடி உண்மை உழைப்பை குருதியை உருக்கி வியர்வையாய் கொட்டி வான் பார்த்த பூமியில் தான் பார்த்து ஆய்ந்து நாற்று நடவு நட்டு அங்கெ இங்கே கடன வாங்கி அதிகமும் இல்லாமல் குறைச்சலும் இல்லாமல் அளவாய் வரப்பு வெட்டி அன்பான குழந்தைக்கு பால் புகட்டுவது போல் நன்றாய் நீர் விட்டு அந்த மருந்து இந்த உரம் என்று இன்னும் கடன் வாங்கி உழைப்பை போட…
-
- 2 replies
- 4.8k views
-
-
இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை பூங்குழலி வீரன் ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றிச் சிந்திக்கும்போது அடிப்படையில், அவை நான்காகப் பகுக்கப்பட்டு விவாதிக்கப்படுவது காணக்கூடியதாக இருக்கிறது: 1. மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்திற்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு மரபு வழிப்பட்ட நிலை ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப எழுத்தாளர்களிடம் காண முடிகின்றது. அ.குமாரசுவாமி புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி. சி.கணேசய்யர், அருள்வாக்கு அப்துல் காதிர் புலவர், மாதகல் மயில்வா…
-
- 3 replies
- 4.8k views
-
-
நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்... நங்கை அவளிடம்.. ஆணுக்கும் பெண்ணுக்கும்.. காதலும்.. காமமும்தான் பாலம் போடுமா.. இல்லை... நட்புப்பாலத்தில்.. நானும் அவளும்.. அவள் என் வாழ்வுக்கு ஒளி தந்த வெண்ணிலவு.. என் தாயைப்போல.. அவள்..என் துயருக்கு தோள் தந்த தோழி.. என் மனைவி போல.. அவள் என் சிரிப்புக்கு சேதி சொன்ன சினேகிதி ஆருயிரைப்போல.. அவள் என் துயிலுக்கு மடி தந்த நாயகி நான் மழலை போல... அவள் என் சோர்வுக்கு விடை தந்த தாதி என் தந்தை போல... அவள் கண்ணீரால்.. என்னைக் காயப்படுத்தியிருக்கிறாள்... என் கண்ணீரால் நான் அவளைக்குணப்படுத்தியிருக்கி
-
- 22 replies
- 4.8k views
-
-
-
- 33 replies
- 4.7k views
-
-
சுகம் எதுவோ? திங்கள் முகம் சிரிக்க திக்கெட்டும் ஒளி பொங்க தங்க மண் பரப்பில் தலை சாய்ந்தால் அது சுகமா? தென்றல் தாலாட்ட தென்னங் கீற்றிசைக்க தன்னந் தனியிருந்து தான் இரசித்தால் அது சுகமா? முல்லை முகையவிழ முசுரங்கள் தள்ளாட - அதன் எல்லையில் போயிருந்து எழில் பருகில் அது சுகமா? மெல்ல மினுக்கி - வான் மின்மினிகள் கண்சிமிட்ட காத்திருந்நு அவ்வனப்பில் கரைந்திடின் அது சுகமா? இன்னும் வளரும்....... சுகம் தேடும் ஆதிவாசி
-
- 35 replies
- 4.7k views
-
-
வெள்ளை வானை எண்ணயிலே மிச்ச உயிர் போகுதய்யா... ( ஆள்கடத்தல்) நாளு சுவர் வீட்டுக்குள்ளே நாளாந்தம் வாழ்க்கை ஜய்யா.... வெளியில் போக முடியவில்லை வெள்ளை வான் கடத்தலய்யா... ஓடி ஒழிய முடியவில்லை ஊறடங்கு வேறு ஜய்யா... நட்டு வைச்ச மரம் போல தெருவெல்லாம் ஆமி ஜய்யா... அவனை கண்ட அச்சத்திலே பாதி உயிர் போகுதய்யா.... எட்டப்பர் வேறு ஜய்யா எட்டர் வேலை புரியுதய்யா.... இலக்க தகடு கழட்டிப்பிட்டு இல்லம் உள்ளே புகுருதய்யா... காரணங்கள் இன்றி இங்கு கைதுகள் நடக்குதய்யா... காணவில்லை பட்டியலில் வேறு இன்று போடுதய்யா... என்ன செய்வோம் நாங்களய்யா எங்கு போயு சொல்வோம் ஜய்யா..??? எங்கள் …
-
- 34 replies
- 4.7k views
-
-
தகிக்கும் தாபங்களின் உச்சக் கட்டமாய், தளர்வதற்காய்த் தள்ளாடும்... தேகங்களின் தேடல்களுக்கு, இடுக்களில் வடிந்தோடும் - மன்மத நீரில் நீந்தியபடியே... உயிர் பிரியும் போராட்டம்!!! பதின்மங்களில் பெற்றதை பலமுறை பழகிப் பார்க்க, தவறிய சந்தர்ப்பங்களை... இப்பொழுதேனும் முறையாய் நிறைவாய் பயின்றிடத் துடிக்குது, நெஞ்சம் - கொஞ்சம்! ஆனாலும் பக்கத்தில் இல்லையே... என் மஞ்சம்!!! "இயற்கையின் தவிப்பு இயற்கைதான் ! -அப்படியானால், அதை அடக்குதல் என்பது செயற்கையோ???"
-
- 21 replies
- 4.7k views
-
-
கவிதைக்குள் எழுத வரவில்லை ஏன் என்று தெரியவில்லை அதனால் தான் இதனுடாக அனுப்புகின்றேன் காதல் காதல் புனிதமானது அற்புதமானது முறையாக உண்மையாக காதலிக்கும் போதுஃ ஆனால் தற்போது காதல் மலிந்து முறை கெட்டு விட்டது அதுவும் வெளிநாடுகளில் காதல் சீர்குலைந்து விட்டது காதலர்கள் சோடி மாறியது அல்ல அதிசயம் கணவன் மனைவி குழந்தைகளை அநாதையாக்கி சோடி மாறுவதுதான் ஆச்சரியம் வேதனை அதுமட்டுமா தாயகத்தில் நிச்சயிக்கப்பட்டு ஏன் திருமணமும் செய்து கொண்டு வெளிநாடு வந்து அவர்களை ஏமாற்றி விடுவது கொடுமையல்லவா அதுவும் இப்பொழுது நடக்கின்றது ஒருவர் காதலித்து விட்டு அல்லது திருமணம் செய்துவிட்டது அதை உதறி எறிந்து விட்டு இன்னொருவரை காதலிப்பதாக அவர்…
-
- 16 replies
- 4.7k views
-
-
போலிக் காதல் மயக்கத்தில்_மது போதை வகுத்த ஒழுக்கத்தில் நீலிக்கண்ணீர் உறவுகளில் _பலர் நிகழ்காலங்கள் இறந்து போகின்றன இரை தேடி வந்து இரையாகும்_விதி எண்ணி சிரித்திருக்கலாம் சமுத்திரம் கடக்க முடிந்தும்_கண் கடக்க முடியவில்லை என்று கலங்கியிருந்திருக்கலாம் மேகத்தில் இரத்தம் பூக்களில் மாமிசம்_கத்தியில் கண்ணீர் விழிந்தன் கனவில் நியத்தைதான் சொல்கிறேன் மாற்றமில்லை_ காதல் நெருப்பொன்றே புதுப்பிக்கும் மானிடத்தை
-
- 31 replies
- 4.7k views
-
-
இன்று காதலர் தினம் இன்றும் எனது காத்திருப்பு.....அவனுக்காகவே.. எனக்கொன்றும் சலிப்பில்லை ஐந்து வருடங்கள் அனுபவத்தாலோ...என்னவோ.. கொட்டும் பனிக்குள் என்ன... கோடை வெயிலில் என்ன..... வீசும் காற்றில் என்ன.... மேனி நடுங்கும் சினோவில் என்ன.... அவனுக்காகவே எனது காத்திருப்பு.. தொடர்ந்திருக்கின்றது.. வருவான்....அவன்... ம்ம்.....வருவான்... இன்றும்... நம்பிக்கை கையோடு இருக்கின்றதே... .. இன்றும் பற்கள் ஒன்றோடு ஒன்று அடித்துக்கொள்ளும் குளிர்.. கைகளை ஜக்கெற் பொக்கெற்றுக்குள்ளும்.. கண்களை பனி படர்ந்திருக்கும் வீதியிலும்.. விட்டுக்கொண்டு..வழமை போலவே.. காத்திருக்கிறேன்... நேரம் ஆக..நினைவுகள்...பறந்தன பறவையிடம் கடன் வாங்கியதோ...சிறக…
-
- 28 replies
- 4.7k views
-
-
காதல் கடவுள் போல அன்பு கடல் போல நெஞ்சில்.. கருணை அள்ள அள்ள இருந்தும் என்ன பயன்.. கடனட்டையில் டொலரும் களுசான் பையில் பவுன்ஸும் பாண்டு பொக்கட்டில் ரூபாயும் மாடிமனையொடு நல்ல காரும் இல்லையேல்... இல்லானை இல்லாளும் வேண்டாள் இதுதான் மானுட உலகம் இன்று..! நோயென்று பசியென்று புசித்தலுக்கு உணவின்றி ஒரு பாதி உலகில்... மானுடர் பதை பதைக்கையில் மறுபாதி உலகில்.. பகட்டுக்கு செய்யும் செலவில் பாதி என்ன.. பருப்பளவு போதும் உண்டி சுருங்கிய வயிறுகள் கொஞ்சம் நிரம்ப...! இருந்தும் இல்லை என்று சொல்லும் உலகில்.. இல்லானை இல்லாளும் வேண்டாள்..! இதுதான் மானுட உலகம் இன்று. கத்தர் என்றும் அல்லா என்றும் சிவன் என்றும் விஷ்னு என்றும் சிலைக்கும் சிலுவைக்கும் பிறைக…
-
- 21 replies
- 4.7k views
-
-
பின் மண்டையில் சுடுபட்டு... நான் வீழ்ந்தபோது, என் மூளைநரம்புகளின் அதிர்வுகளை... நீங்கள் புரிந்திருக்க வாய்ப்பில்லைத்தான்!!! வெறும் செய்தியாகத்தான்.... அதுவும் உங்களுக்கு இருந்திருக்கலாம்!!! சாகப் போகின்றோம்.... எனும்போது, "கடைசி ஆசை" என்றொன்று..... எனக்கும் இருந்தது! இயலாமையுடன் எதிர்ப்பட்ட எண்ணங்களில்... யாரேனும் எம்மை காப்பாற்ற வரமாட்டார்களா? எனக் கூட, எண்ணத் தோன்றவில்லை! அனாதையாகி நிற்கும் தாய்மண்ணில்.... நாங்களும் நாதியற்றுத்தான் நின்றோம்!!! பிரடி மயிரைத் தொட்டு... கனலாய் வந்த தோட்டா.... விரைவாகத் துளைபோட்டு... மெதுவாகச் சுழன்று, என் மூளை திருவி... வலக்கண் வழியே, வெளியே வர.... பீறிட்ட இரத்தம்... தொடர்ந்தோடியும், எனக்கு வலிக்கவேயில்…
-
- 42 replies
- 4.7k views
-
-
கிளிநொச்சி உன் பார்வைகாய்........ கவிதை...... கிளிநொச்சி..! கிளிநொச்சி...! வாயில் சொல்லப்பட்ட தடவைகள் அதிகம் எதிரியின் வாயிலல்ல தமிழனே..! இன்று உன் வாயால்.... கிளிநொச்சி போய்விட்டதாம்...! கிளிநொச்சி போய் விட்டதாம்...! அழுதழுது இன்றுடன் ஐந்து நாட்கள்மேல் போக்கிவிட்டாய்...! அழாமல் அடுத்த அடி வைத்திருந்தால் மறுபடியும் ஐந்து அடி முன்னெறியிருப்பாய்....! எம் மனவுறிதி போய்விட்டதா..? சொல்..! உன் கொள்கைதான் தோற்றதா..! சொல்..! தமிழீழமே உன் குறிக்கோள் கிளிநொச்சி அல்லவே...! கிளிநொச்சி எங்களின் தமிழீழத்தின் நகரம் தான் அழகான நகரந்தான் இன்று எதிரியின் வல்வளைப்பில் சிக்கிவிட்ட நகரந்தான்... முழுமையாய் செத…
-
- 23 replies
- 4.7k views
-
-
ஒட்டி விட்ட ஊரை விட்டு ஓடி வர மனசின்றி.. ஒட்டிய விசா ஸ்ராம் உந்தித் தள்ள பள்ளிப் படிப்பு இழுத்து வர ஓடி வந்த இடத்தில் ஒதுங்க ஓர் இடம்..! மோகன் - யாழ் என்ற உறவுகளின் சிந்தனையில் உதித்த ஓர் தளம். ஆங்கில மேடையில் விதம் விதமாய் அலங்கரிக்க அங்கீகாரம் இருந்தும் அங்கும் எழுந்தது தாய்த் தமிழ் தாகம்..! நட்புக்கள் தம் உறவாடலில் யாழெனும் இணையத் தொடர்பும் பிணைந்து கொள்ள "வைரஸாய் " முதல் நாமம் இட்டு தொற்றிக் கொண்டது இன்னும் பசுமையான நினைவுகளாய். கேடு இன்றி விளையாட்டா "ஹாக் "செய்து யாழின் "கோட்" எடுத்து தமிழ் போறம் செய்து நண்பர்கள் விளையாட.. கூடியிருந்து களித்தமை இன்றும் நினைவதில் ஊஞ்சலாடுது..! யாழின் நெருக்கம் எம் எஸ் என் வழி கை நீட…
-
- 60 replies
- 4.7k views
-
-
கயல் விழியாள்... பயல் மனசைப் பறிக்க, வயல் வழியால் ஏதோ புயல் வருதே! காதலும் வேண்டாம்... கூடலும் வேண்டாமென... ஒதுங்கிப் போனவனின் மனம், பதுங்கிப் பாய்கிறதே! செதுக்கிய சிற்பங்களின் பார்வையில் வழுக்கிய இதயம் இடறி... வாய்க்காலோரமாய் விழுகிறதே! மனத்தடைகளைத் தகர்த்து... உடலுடைகளை அவிழ்த்து... தன் படைகளால் ஆக்கிரமிக்கும் பாதகி! கண்ணகி காலத்தில் வாழ்ந்த மாதவி!! கோவலனாகி கோணலாய்... கேவலமாகி நாணலாய்... மாறும்வரை மாற்றுகிறாள்! முத்து முத்தாய் முத்தங்கள்... ஒத்திக்கொள்ளும் சத்தங்கள்... தூறும் மழைச் சாரலைப்போல், மெதுமெதுவாய் நனைக்கிறாள்! நனைந்தவன் மேனியில், புனைந்தவள் தாகம் தீர்க்கிறாள்! சிதைந்தவனின் சிந்தையில்... புதைந்தவனின் விந்தையில்... இணைந்தவள்,…
-
- 19 replies
- 4.7k views
-
-
எங்குதான் கற்றாய் நீ பொய்.. இளமை சொல்கிறதா... ஆசை சொல்லத் தூண்டுகிறதா.. இதுவரை இல்லாமல்.. இப்போது.. பொருத்தம் இல்லாமல்.. பொய்சொல்கிறாயே.. நீ உரைப்பதை நம்பிவிடும்.. முட்டாளா நான் மாறிவிட்டேன் என்று எண்ணிவிட்டாயா..முட்டாள்க் காதலனே... நீ நிற்பது கடல் நடுவில்.. நான் நிற்பது கரைமணலில்.. நீதான் இங்கு வரவேண்டும் நானல்ல.. காதல் மனதைத் தொடும் கலை.. உடலைத் தொட அலைவது கொலை காமம் தாம்பத்யத்தை ஸ்திரப்படுத்த... காதலைப் பலவீனப்படுத்த அல்ல நீ நேசிப்பது என்னையென்றால்.. நான் என் இதயத்தை என்று எடுத்துக் கொண்டேன்.. நீ உடலை என்பதைக் காட்டிச்சென்றாய்.. உன் வேலையாகவில்லை என்று எரிகிறாய்.. என் காதலன் கண்ணியத்தை எண்ணி நான் அழுகிறேன்.. பரிபூரண இதயத்தைக் க…
-
- 37 replies
- 4.6k views
-
-
-
- 16 replies
- 4.6k views
-
-
வாழ்வு சூறையாடப்பட்ட தேசத்தில் இருந்து வந்த சுடலைக் குருவி எனக்கு கதை சொல்லிற்று தம் நிலங்களில் ஊழித்தாண்டவம் முடிந்து மூன்று ஆண்டுகள் ஆயினவாம் மேய்ப்பனும் அவனது ஆடுகளும் அறுக்கப்பட்ட நிலத்தில் அறுக்கப்படா உயிர்களின் கேவல்கள் இன்னும் அடங்கவில்லையாம் பின்னிரவில் கதவுகள் தோறும் கடக்கும் இராணுவ சிப்பாயின் சப்பாத்துகளில் ஒவ்வொரு முறையும் மரணம் வந்து குந்தி இருந்து கணக்கெடுத்து போகுமாம் ஊரெல்லாம் அடங்கிய பின் உடைக்கப்பட்ட கல்லறைகளிலிருந்து உழுதப்பட்ட உடலங்களின் பெருமூச்சு பெரும் காற்றாய் வீசுமாம் தம் ஆத்துமா இளைப்பாற ஒரு சிறு விளக்குத்தானும் இல்லையென அழுது அரற்றுமாம் மம்மல் அப்பிய பொழுதொன்றில் மாட்டு வண…
-
- 23 replies
- 4.6k views
-
-
தேசத்து அன்னையவள் துயர் துடைத்திட பெற்றவர் மறந்து நீர் புலிப்படை கண்டீர் பாரினில் பலரும் பயந்து நடுங்கிடும் படை கண்டு பகை வென்று போர் கண்டு நின்றீர் ஊனாகி உயிராகி உதிரத்துள் உணர்வாகி உயிரை நீர் எமக்காகத் தந்தீர் ஊரெங்கும் உறங்காது உணர்வுகள் பொசுக்கி உங்கள் மண் காத்திட ஒன்று திரண்டீர் போர் கண்ட பூமியில் புது நெற்களாய் நீர் பூத்துக் காய்த்துப் பொலிந்து தான் நின்றீர் பாதகர் கண்கள் பட்டதனால் இன்று பகடைக் காய்களாய்ப் போனீரோ வீரரே வேர் கண்டு விழுதாகி விருட்சமாய் ஆனீர் வினை கெட்டு விதி கெட்டு வில்லங்கம் சூழ வீழ்ந்திட முடியா மானிடர் நீங்கள் வீதிகள் எல்லாம் வீழ்ந்துதான் போனீர் …
-
- 8 replies
- 4.6k views
-
-
விழி மூட முடியவில்லை விடியும் வரை கண்ணே!! விடிவெள்ளி பார்பதிற்கில்லை பெண்ணே விடியலுக்காய் உன்னை தேடி........... வில்லங்கங்கள் பல உண்டு வில்லன்ளும் பல உண்டு விடயம் அறிந்த பெற்றோர் உண்டு விட்டு வைப்பார்களா எம்மை........... விதி விட்ட வழி என்று கண் கலங்காதே வியாக்கியானங்கள் பேசாதே விகடமாக என்னிடம் பேசிய நீயா-இன்று!! விரக்தியாக பேசி என்னை கொல்கிறாய்!! விரியத் துடிக்கு பூவே நீ விருப்பத்தோடு காத்திரு வீரத்தோடு நான் வருவேன் விரைவில் உனைக் கைப்பிடிக்க............. எல்லா கவிஞர்களுக்கு வணக்கமுங்கோ..........நாமளும் ஒன்றை எழுதி பார்தோம் இதில போடுறேன் பேபி பென்சில் பிடித்து எழுதின முதல் கவி ஒருத்தரும் ஏசி போடாதையுங்கோ........கவியா தெரியாட…
-
- 44 replies
- 4.6k views
-
-
இக்கவிதையின் நாயகியான் என் மனைவி வாசுகிக்கு சமர்ப்பணம் என் கதை வ.ஐ.ச.ஜெயபாலன் * அவள் தனி வனமான ஆலமரம். நான் சிறகுகளால் உலகளக்கிற பறவை. என்னை முதன் முதற் கண்டபோது நீலவானின் கீழே அலையும் கட்டற்ற முகிலென்றே நினைத்தாளாம். நானோ அவளை கீழே நகரும் பாலையில் தேங்கிய பாசி படர்ந்த குளமென்றிருந்தேன். * ஒருநாள் காதலில் கிளைகளை அகட்டி ஜாடை காட்டினாள். மறுநாள் அங்கிருந்தது என் கூடு. இப்படித்தான் தோழதோழியரே எல்லாம் ஆரம்பமானது. தண்ணீரை மட்டுமே மறந்துபோய் ஏனைய அனைத்துச் செல்வங்களோடும் பாலை வழி நடந்த காதலர் நாம். * அவளோ வேரில் நிமிர்ந்த தேவதை. நிலைப்பதே அவளது தர்மமாயிருந்தது. சிறகுகளில் மிதக்கும் எனக…
-
- 16 replies
- 4.6k views
-
-
வாசனை --- வ.ஐ.ச.ஜெயபாலன் அதிலாந்திக் சமுத்திரத்தின்மேல் பறந்தபோது அவளது வாசனையை உணர்ந்தேன். நாங்கள் பிரிந்தபோது வசந்தத்தைக் கொண்டுவந்த பறவைகளும் ரொறன்ரொவை நீங்கின. ஒன்ராறியோ ஏரியின்மீது தெற்கு நோக்கிப் பறந்த வாத்துக்களுள் கண்ணீரை மறைத்தபடி நாம் விடைபெற்றோம். அந்த வசந்தத்தில் சினைப் பிடித்த சல்மன் மீன்கள் நீந்திய ஒன்ராறியோ ஏரிக்கரையின் எந்தச் செடிகளை விடவும் பூத்துப்போயும் வாசனையோடும் என் படகில் இருந்தாள். படகை விட்டு இறங்கும்போது ஈழத் தமிழர் தலைவிதி என்றாள். நாங்கள் மட்டக்களப்பின் வாவிக் கரைகளில் சந்தித்திருக்கலாமே என்று பெருமூச்செறிந்தாள். வானை வெண்பறவைகள் நிறைத்தன. ஒருகணம் போர் ஓய்ந்தது. வடமோடிக் கூத்தர்களி…
-
- 24 replies
- 4.6k views
-
-
http://youtu.be/bKy6lO-TJvw உடல் இரசாயனங்களின் உந்துதலில் உன்னைக் கண்டேன். உன்னதமாய் தோன்றிய உன்னால் பைத்தியமும் ஆனேன் - கூடி உலவவும் செய்தேன்..! உயிர்மெய்யென உன்னில் நானே உளறியும் கொட்டினேன். உன்னை நீயே உத்தமன் இவனென்று எனக்குத் தந்தாய்...! உறவுகள் விரிந்தது உண்மைகள் என்பதாய் வளர்ந்தது. உடலும் உறவு கொண்டது உயிர்களும் தோற்றம் பெற்றன. உடைக்க முடியாத பந்தம் உன் - என் உறவென்று உறுதியாய் நம்பி இருந்தேன் உன் அன்பை உண்மை அன்பெனக் கண்டதால்.! உறுத்தலாய் உருண்டது ஓர் நாள்..!! உன் முன்னவன் என்று உதிரியாய் ஒருத்தனை உதாரணம் காட்டினாய். உள்ளதில் படர்ந்தது உதவாக்கரை எண்ணம். உன்னை அது உறவால் வெறுக்க வைத்தது. உறவுகள் விரிசல் காண... உயிர்கள் அந்நிய…
-
- 32 replies
- 4.6k views
-