கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5130 topics in this forum
-
-
-
செஞ்சோலை தெருவெல்லாம் புத்தகப்பையும் பிணமும் கனக்கிறதே; தமிழ் படித்த சிறுமியின் குரல் சப்தம் தொலைத்து கிடக்கிறதே; பூத்துக்குலுங்கிய பிள்ளைகளெல்லாம் மரண வாசலில் வீழ்ந்து துடிக்கிறதே; மறக்க இயலா மரணச் சூட்டின் - மண்டியிடவைத்து அவன் சுட்ட வெடி சப்தத்தின் - சற்றும் மனிதம்பாரா எம் குலமழித்த வெறியில் - முளைத்தெழு உறவுகளே; அடிப்பவனை மன்னிக்கலாம் அவனே திருப்பி அடிபானெனில் - திருப்பி அடித்தவனை திருப்பி அடிக்கும் வரை அவன் வருந்தி திருந்தும் வரை மன்னிக்காதே மடையுடைத்த வெள்ளமென பொங்கியெழு உறவுகளே; செத்தவன் செத்தவளெல்லாம் வெறும் சுப்பனும் குப்பனுமல்ல; எம் விடுதலையை 'உயிர்விடும் வரை காத்த வீரர்கள் - அவர் உறைந்த மண்ணில் மீண்டும் புடைச…
-
- 0 replies
- 720 views
-
-
கட்டோடுவந்த கார்குழலாள் தளிர் நடையில் நெஞ்சம் பட்டோடுகின்றதுவே ! இதை எப்பாடு பட்டும் மட்டோடு வைக்க - மனம் விட்டோடுகின்றதுவே . முக்காலம் உணர்ந்த முனிவனவன் மனதுக்கும் மாறாது இந்தக் குறை. சித்தர் பாட்டுக்கும் முன்னாலே வந்தாச்சு அன்றே மாறாத துன்பக் கதை. தடை தட்டாத முகிலும் மண்ணை எட்டாதே மழையாய் துன்பம் பட்டாகவேண்டும் மனம். காதல் கிட்டாத நிலையில், முட்டாத வரையில், வீணாகும் வாழ்வு தினம். பருவச் சிட்டோடு வாழ கிட்டாதோ அந்த எட்டாத வானவெளி ? இனி .. வற்றாது ஊறும் முற்றாகும் வரையில் திகட்டாத காதல்க் கவி. ----------------------------------------------------- 1997 காலப்பகுதி நடுநிசி ஒன்றில்,சந்தத்தை மட்டுமே…
-
- 1 reply
- 801 views
-
-
தாயகத்தில் ஓர் அன்புறவு என் தாயகத்தில் ஒர் அன்புறவு நான் இங்கு வந்தேன் அவளைத் துறந்து என் மனம் முழுதும் அவளின் இருப்பு நான் பாடுகிறேன் என்னை மறந்து. குங்குமப் பூப்போல் செவ்விதழும் - அதில் பூத்துக் குலுங்கும் புன்சிரிப்பும் பல கவிதைகள் பேசும் கயல் விழியும் - என்னை வாட்டுதம்மா அவை இன்றளவும். வானம்பாடிபோல் பாடுகிறாள் - அவள் தோகை மயில் போல் ஆடுகிறாள் - தென்றல் காற்று போல் என்னைத் தழுவுகிறாள் - நம் பிரிவினால் தினம் வாடுகிறாள். வானில் ஒளி விடும் விண்மீனாய் - என் மனதில் இனிக்கிறாள் செந்தேனாய் உடல் வாடிப் போனது ஒரு சருகாய் - நான் காலம் கழிக்கின்றேன் அவள் நினைவாய்.
-
- 12 replies
- 2.2k views
-
-
புதிய பாதைகள் படைப்போம் அழகிய பூமி, அதைத் தொடும் எல்லையற்ற வானம் இவை நடுவே விதம் விதமாய் பல்லுயிர்க் கோலங்கள். அவை நடுவே எமை இணைக்கும் பகுத்தறிவுப் பாலங்கள் இப் பிரபஞ்சத்தின் விந்தைகள் பலகோடி வாழ்வின் சிக்கல்களும் அவற்றிட் சிலகோடி அத்தனையும் அவிழ்க்கும் அறிவு சக்தி - நம்மில் அளப்பரிய ஆற்றலாய் இருந்தும் என்ன பயன்? என்ன செய்கிறோம்? எதைக் கண்டு கொண்டோம்? ஆனந்தமாய் உண்டு களிக்க நாமே பயிர் செய்கிறோம் ஆனால்அங்கு எம் பிணங்களையும் அறுவடை செய்கிறோம் எம்மைத் தாங்கும் மண்ணை நம் குருதியால் நிரப்புகிறோம் உள்ளத்தின் ஆழத்தில் உணர்வுகளாய் உதித்து விந்தைகள் புரிந்த கடவுளர் பெயரால் பல வஞ்சனைகள் புரிகிறோம் பகுத்தறிவு இருந்தும் பூமியைப் பல தேசங…
-
- 1 reply
- 1.5k views
-
-
பல்லாண்டு காலமாய் ஆண்ட தமிழ் அடிமையாய் கிடப்பதா? சொல்லாண்டு தமிழினம் அடிபட்டு சாவதா? பொல்லாக்குணம் கொண்ட கொடியர்கள் எம் மண் ஆழ்வதா? மெல்ல தமிழ் இனம் இனி சாகுமா? வெல்லா போர்களம் எங்கும் தமிழனுக்கு உண்டா? எல்லாத்தமிழனும் ஒன்றே ஆகுவோம் எள்ளாய் நினைத்தவன் எலும்பை நொருக்குவோம் கொல்லா குணம் இன்னும் தேவையோ? எல்லாம் அழிந்த பின் நீ அழுவது நியாயமோ? செல்லாப் போர்களம் தோல்வியை நோக்கி ஷெல்லால் அடித்தாதல் உன் ஊர் நாசம்..! கல்லாய் நீயும் இருப்பதோ..! கடவுளையும் துணைக்கழைப்பதோ..! மெல்லத் திறந்திடு உந்தன் சிந்தனையை பொல்லாப்பகை விரட்ட -புலி படையுடன் இணைந்திடு நல்லார் உலகை படைக்க நாமும் இணைவோம் சொல்லார் எம் மீத…
-
- 4 replies
- 1.1k views
-
-
இதுவரை நான் எந்தக் கவிதையையும் சுட்டதில்லை உன் பெயரைத் தவிர * என் கற்பனைகள்தான் அதிகமாய் வாசகர்களுக்கு காட்டிக் கொடுக்கிறது உன்னை நான் கவிதையாய் காதலிப்பதை * உன் சேலை நழுவுவதைப் பார்த்தால் பயமாக இருக்கிறது விழுந்து விடுவேனோ என்று * நீ எனை காதலிக்கிறாய் என்பதை கேக்க காத்திருக்கவில்லை நீ என்னை காதலிக்கவில்லை என்பதையாவது கேக்கத்தான் காத்திருக்கிறேன் * நீ எது கேட்டாலும் சொல்வேன் உன் அழகுகளில் எந்த அழகு பிடிக்கும் என்று கேட்டால் மட்டும் சொல்லமாட்டேன் சொன்னால்... உன் எல்லா அழகுகளின் கோவத்துக்கும் ஆளாகிவிடுவேன் காதல்பித்தன் -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 941 views
-
-
கவிதை எனும் பெயரில்.... நண்பர்களே, கவிதையெனும் பெயரிலிங்கு கண்டபடி கருத்துக்கள் எழுதுகின்றார் சிலபேர்கள்; கவிதை என்றால் என்னவென்று அறிந்திடாத கடைகெட்ட மூடர் அதை ரசிக்கின்றார்கள்! பெண் என்ற பெயராலே எழுதிவிட்டால் பேயாக ரசிப்பது போல் கருத்துச் சொல்லி கண் என்றும் உயிர் என்றும் கசிந்துருகி கருத்துக்கள் சொல்லி,அதை ருசிக்கின்றார்கள். மூடர்கள், முட்டாள்கள், தமிழ் மொழியின் முடவர்கள், குருடர்கள், செவிடு கொண்ட கேடர்கள் அவரைநாம் என்ன சொல்ல? கிறுக்கர்கள்தாம் அவரை மன்னிப்போமா? நல்ல தமிழ் எதுவென்று அறிந்ததில்லை; நயமான கற்பனைகள் கொண்டதில்லை; சொல்ல வரும் கருத்தில் ஓர் புதுமையில்ல; சுவையாக எழுதிடவும் பழக்கமில்லை! ஆனாலும் முகநூலில் எழுது…
-
- 27 replies
- 3.2k views
-
-
ஒப்பிலாது நீ உலவினை உலகிடை!- பாவலர். பரணன் குழந்தை யோவெனுஞ் சுபதமிழ்ச் செல்வனே குழைந்த தோவுடல் கோழையர் குண்டினால் விழுந்தை யோநிலம் வென்றிடப் போகையில் இழந்த மேமதி யென்செய்கு வாமினி ஒப்பி லாதுநீ யுலவினை யுலகிடை ஒப்பி யேற்கிலா நாட்டினர் கூடவுன் செப்பு வாயதன் சிரிப்பினா லொப்பியே எப்ப வுந்துணை யாகுவம் என்றரே! அண்ணன் பாலசிங் கத்தையி ழந்தபுண் இன்னும் ஆறவில் லையதற் குளேயுமே அன்ன ரோடுநீ கலந்துமே சூழவும் பின்னர் அங்குதான் பெயர்ந்துந டந்தையோ! அண்ணன் பாலாவின் அரசியல் வடிவமே கண்ணைப் பிசையவே கடந்துமேன் சென்றனை மண்ணிற் புதைந்துநீ மறுபடி யெழுவையோ? விண்ணிற் பாலாவிடம் வெற்றிவி ரிப்பையோ? முங்கி னாரவர் மூழ்கடித் தோமெனச் சிங்கள நாய்களும் சிர…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
- 0 replies
- 795 views
-
-
நீராவியென அனுபவத்திரட்சி ஒடுங்கும் தருணத்தில் முதுமை பெற்றேன் கட்டுடைத்த பெரும் குளமெனச் சிதரும் வார்த்தைப் பிரளயம் புழுதி மழையில் நனையும் பூவரசம் சருகெனச் சரசரக்க நீர்க்குடம் உடைத்த நெடி மாறாக் கன்றுகள் பறக்கும் மேகத்தை புகை என்ற பருவம் தொலைத்த அனுபவங்களின் சீவன் கட்டும் சொற்களை கன்றுகள் கேட்டுத்தான் வளர்ந்திடுமோ?
-
- 7 replies
- 2.2k views
-
-
இனி வருமா டோறா...??? ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றில் சேதி யானதே...இன்று சேதியானதே.... பாயும் புலி வேங்கை படை தனை அழிக்க ஓடி வந்த டோறா ஒய்ந்து போனதே - இன்று ஓய்ந்து போனதே.... அண்ணனவர் சொல்லில்- வேங்கை அலையதில் நடக்க பாய்ந்து வந்த டோறா பாதியானதே சுக்குநுாறாய் போனதே... எங்கள் புலி வீரரை ஏளனங்கள் செய்தவன் அஞ்சி ..அஞ்சி ..போனான்- இன்று அஞ்சி..அஞ்சி..போனான்... எங்கள் கடலேறி இன்னும் பகை வரு..மா..? வந்தால் அடி முழங்கும்- வானில் வேங்கை கொடி ஆடும்... //// ஆழக் கடல் ஏறி... ஆடி வந்த டோறா பாதி வழி வந்து பாதியானதே..... தமிழ் ஈழமது காற்றி…
-
- 6 replies
- 2.1k views
-
-
1989.... ஈழத்தில் இந்திய ஆக்கிரமிப்பு நேரம் புலியும் சிங்கமும் கைகுலுக்கிய காலம்.... பலாலியில் இருந்து சிங்கள விமானப்படை இருக்கை கழற்றிய வெற்று.. விமானங்கள் சில பல ஆயிரங்கள் கறந்து.. மந்தைகளாய் அடுக்கிப் பறந்தன தமிழ் இளைஞர்கள் கூட்டம்..! மேற்கு நாட்டில் அகதி அந்தஸ்துக்காய் அலையும் தமிழன் அணியணியாய் புறப்பட்டான்.. காணி விற்றும் தாலி விற்றும் பணம் திரட்டியே சொகுசாய் ஒரு வாழ்க்கை தேடி.. தாயக விடியலைப் பின்போட்டு தன் குடும்ப விடியலை முன் வைத்து...! 1990...... காலம் மாறிப் போனது குலுக்கிய கரங்கள் சண்டை இட்டன..! அதே இருக்கை கழற்றிய விமானங்கள் தமிழன் தலையில் பீப்பாய் குண்டுகளாய் கொட்ட... ஓடினவன் அதிஸ்டமென்…
-
- 116 replies
- 11.2k views
-
-
பாலைவனத்தில் முளைத்த கள்ளியாய் என் மனதில் முளைத்த கள்ளி நீ . பருவத்தின் வாசலில் எனக்கு நீ ராணி தான் . உன் உதடும் என் உதடும் பற்றியவேளை , உலகமே எமக்கில்லை . வளர் பிறை போல் எம்காதல் மலர பிடித்தது சனி உன்னப்பனுக்கு . தன்னையும் உன்னையும் பிரிக்கவந்த சுவர் நான் என்றான் . இனிப்பான பேச்சினால் தந்திரமாய் உனை மாற்றி , மாணவர் விசாவில் பறக்கவைத்தான் . உன் தொடுகைச் சூடும் , உன் முத்தத்தின் இனிப்பும் , இனியவையாகவே என்மனதில் இருக்கும் . உன் பிரிவு வாட்டினாலும் உன் நினைவுடன் நான் இருப்பேன் கள்ளி ....................
-
- 24 replies
- 2.5k views
-
-
யாழ் நூலகம் எரிப்பு ஆயிரம் ஆயிரம் புலவர்களை, எழுத்தாளரை, ஆய்வாளரை பலி கொண்ட இனவெறித் தீ புலமைகளையும், வித்தகங்களையும் ஆய்வுகளையும்கூட... நன்றி: ஓவியர் புகழேந்தி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது: 1981 மே மாதம் 31ம் திகதி
-
- 1 reply
- 895 views
-
-
-
முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு: ஆற்ற ஒண்ணா அஞர் சேரன் சில வாரங்களுக்கு முன்பு தொறொன்ரோ நகரின் மத்தியில், குளிரில் மெல்ல நடுங்கியவாறு, குளிராடையுமின்றிக் கோப்பிக் கடையொன்றின் வாசலருகே கோப்பியொன்று வாங்கித் தருமாறு போவோர் வருவோர் எல்லோரையும் இரந்த ஒரு தமிழரைக் கண்டேன். எனது வீட்டுக்கு அருகில் ஸ்கொட் மிஷன் நூறு ஆண்டுகளாக நடத்திவரும் வீடற்றவர்களுக்கான இரவுநேரத் தங்குமிட வாயிலில் அவரை அடிக்கடி கண்டிருந்தாலும் பேச வாய்ப்புக் கிடைத்ததில்லை. (ஒருமுறை இந்த மிஷனுக்குச் சாப்பாடு வழங்க என இடியப்பம் எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த அம்மணி, “இங்கு வருபவர்கள் இத்தகைய அந்நியச் சாப்பாடுகள் சாப்பிட மாட்டார்கள். வேறு ஏதாவது கொண்டு வாருங்கள் என்று சொன்னது நினைவு வந்தது”) …
-
- 6 replies
- 2.6k views
-
-
[size=2][/size] நான் காதலெனும் தடாகத்தில் தகுதியின்மை கண்டு தரையில் விடப்பட்ட ஒற்றை மீன் உனது நீதிமன்று குற்றப்பத்திரிகையே இல்லாமல் மரணதண்டனை விதித்தது எனக்கு. இலங்கையின் இன்றைய சிறைகளைப்போலவே காரணமில்லாமல் நம் உறவில் கத்திரி போட்டவளே சொல் என்ன குற்றம் கண்டாய் என் அன்பின் ஆழத்தில். அடியேய் மரியான ஆழி உன் மனதிடம் மடிப்பிச்சை கேட்க வேண்டும். வைரமானவற்றை வைரத்தால் அறுப்பார்களாம் வைரத்தை தோழி உன்னால்தான் அறுக்க முடியும். ஏய் உழவன் மகளே என் நெஞ்சில் வேதனையை விதைத்தவளே வந்து பார் விளைச்சலை அற்புதமாய் இருக்கிறது. நீ கனவுகளை அடைமானம் வாங்கி கவிதைகள் தரும் அடைவுக்காறி. வ…
-
- 3 replies
- 1.1k views
-
-
புலிகள் எதற்குப் பின்னே இன்றையதினம் படித்ததில் கிடைத்தவை இவை புலிகள் எதற்குப் பின்னே நடந்தார்கள்..? இராவணன் தோல்விக்கு விபீஷணன் காட்டிக் கொடுத்தான்.. கட்டபொம்மன் தோல்விக்குக் எட்டப்பன்..காட்டிக் கொடுத்தான்.. பண்டார வன்னியனுக்கு அவன்சாதி காக்கை வன்னியன் குழிபறித்தான்.. சங்கிலினுக்கு இன்னொரு காக்கை என்கிறது கண்டவர் சரித்திரம்.. ஊமைத்துரை என்பதே கேள்விப்பட்ட பெயர்.. சிவன்பூமி இலங்கையின் செறிந்த வரலாற்றில் இன்னொரு பக்கம்..இது.. தமிழ் மன்னன் தேவநம்பிய தீசனின் தந்தை மூத்தசிவன்.. மூத்தசிவன் மைந்தன் தேவநம்பிய தீசன் மகன் கோத்தபாயா கோத்தபாயா மகன் துட்டகைமுனு.. சோரம்போன தமிழ்ச் சாதியின் சொந்தங்கள்.. …
-
- 1 reply
- 3.9k views
-
-
ஆர்கலிவானம் புணர்ச்சி வேட்கையில் தன்னிறம் உழல கார்மேக இதழ்கள் கனைகடலைத் தழுவ கலவிமேவலில் வான் தனைமறந்து மின்னலிசைக்க நறுந்தென்றல் பரவி கலவி வெம்மையகற்ற விண்வெளி இருள்பரப்பி குடைவிரிக்க மோகமிகுதலில் தன்முனைப்பு அறுந்து ஏகாந்த அமைதி நிலவ கனைகடல் அடங்கி விசும்பின் துளிகள் ஏற்க பிரபஞ்சம் எங்கும் புது உயிர்களின் தோற்றம்....... ஆர்கலிவானம் - சத்தத்துடன் முழக்கமிடும் வானம் கனைகடல் - கத்தும் கடல் கலவிமேவலில் - கலவி விருப்பம் விசும்பின் துளிகள் - மழைத்துளிகள்
-
- 1 reply
- 570 views
-
-
மன்னித்துக் கொள்ளுங்கள் முத்துக்குமாரர்களே! எண்களில் தொலைந்தது இன முழக்கம்! ஏழுக்கும் ஐந்துக்கும் மூன்றுக்கும் ரெண்டுக்கும் விலை போயின அக்னி மரணங்கள்... உரத்து முழங்கியவன் சிறையிலிடப்பட்டான்! அடக்கி வாசித்தவன் அணியில் சேர்க்கப்பட்டான்! மேடைப்புலிகளின் வீரவாள் உறையிலிடப்பட்டது! தியாக தீபங்களே... உங்களைச் சற்றே மறந்திருந்து தேர்தல் முடிந்ததும் திரும்பிப் பார்ப்போம்! இன உணர்வுக்குக் குறுக்கே எலெக்ஷன் வந்தால் என்ன தான் செய்வது? மறதித் திலகங்களே.. வாருங்கள் ஜனநாயகக் கடமையாற்றுவோம்... இறையாண்மையைக் காப்போம்! போங்கடாங்...! ஆக்கம்: தாமிரா நன்றி:பெயர் தெரியாத தமிழக சஞ்சிகையொன்றிலிருந்து. எனக்குக் கிடைத்தது மின…
-
- 1 reply
- 1k views
-
-
இரத்தம் வெவ்வேறு நிறம் அங்கே பிணங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன நாம் “எத்தனை விக்கெட்டுகள் விழுந்தன?” என்று விசாரித்துக் கொண்டிருக்கிறோம்! அங்கே குண்டுகள் வெடித்துக் கொண்டிருகின்றன நாம் பட்டாசு வெடித்துப் பரவசப்பட்டுக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வேட்டையாடப்பட்டுக் கதறிக் கொண்டிருக்கிறார்கள் நாம் வெள்ளித் திரைகளுக்கு முன் விசிலடித்துக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் நாம் “கற்பில் சிறந்தவள் கண்ணகியா? சீதையா?” என்று பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருக்கிறோம்! அவர்கள் வெளிச்சத்தின் விளைச்சலுக்கு இரத்தம் சொரிந்துக் கொண்டிருக்கிறார்கள் நாம் இருட்டுக்காடுகளுக்கு வேர்வை வார்த்துக…
-
- 1 reply
- 792 views
-
-
அம்மாவுக்கு - வ,ஐ,ச,ஜெயபாலன் (1985) . அம்மா தங்கக் கனவுகளை இழந்த என் அம்மா. எனக்கென வரலாற்று நதியின் படுக்கையில் நீ கட்டிய அரண்மனை யாவும் நீருடன் போனது. . இன்று கோவில்கள் தோறும் கைகளைக் கூப்பி "பிச்சை வேண்டாம் நாயைப் பிடி" என இறைவனை வேண்டும் என்னுடைய அம்மா. .. யாழ்ப்பாணத்து செம்மண் தெருக்களில் வன்னிக் காட்டின் வயல்வெளிப் புறங்களில் கீழ் மாகாணத்து ஏரிக்கரைகளில் முகம் அழிந்த பாதி எரிந்த பிணங்களைப் புரட்டி தங்கள் தங்கள் பிள்ளையைத் தேடும் அன்னையர் நடுவில் . தமிழகத்தில் இன்றுநான் உயிருடன் இருப்பதை அறிந்து பாக்கியம் செய்தவள் என மனசு நிறையும் என்னுடைய அம்மா! . இப்படியுமொரு காலம் வந்ததே நம்முடைய மண்ணில் . இன்று உனக்கு நான் கதைகள் சொல்வேன் மரணம் பற்றிய கதை…
-
- 0 replies
- 939 views
-
-
விழிநீரால் குளிப்பாட்டி எனக்கு விடை தருவாயா? ஆணதாய், பெண்ணதாய் பிம்பங்கூட பேரன்பில் மாய்ந்ததாய் மனதில் தோன்றி ஊரதும், உலகதும் உறைந்தே போக – உன் உறவது மட்டுமே உயிர் மேவுமோ? தோளிலே சாயவே வரத்தைக் கேட்டேன் தோல்வியில் சாயெனச் சாபம் பெற்றேன் வாயது விட்டழா வலிந்த பெண்மை – உனைக் கண்டதும் கண்ணீரில் கரைவதென்ன? நேற்றுவரை மோகித்த கனவு எல்லாம் நெடுந்துயர் தந்ததன்றி வேறு இல்லை ஆற்ற வா…. அன்பே! அருகே நீதான் – அன்றில் ஆற்றாத துயரோடு……. உயிர் போகுமோ? எதையுமே கேட்டதில்லை உன்னிடத்திலே என்னையும் தந்ததில்லை உன் கரத்திலே பிரிவினை மட்டுமே பேறாய் பெற்றேன் – இந்தப் பேதையின் நெஞ்சம் செய…
-
- 20 replies
- 4.8k views
-