Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. வீர நாய்கள் – தீபச்செல்வன்:- எனது வீதிகளில் தடுத்து நிறுத்தி மேற்கொள்ளும் எல்லா விசாரணைகளையும் அழைக்கப்படும்போதெல்லாம் சென்று வாக்குமூலங்கள் அளிப்பதையும் எனது வீடுகளில் எந்த வேளையிலும் சோதனைகள் நடத்துவதையும் அந்நியத்தை உணர்த்தும் தேசிய கீதத்தை கேட்டபடி என்னைப் பிரதிபலிக்கா கொடியின் முன்பாய் நிற்கவும் எனது மொழி தவறாய் எழுதப்படும்போதும் எனது வரலாறு தவறாக பேசப்படும்போதும் எனது தோழி குளிப்பதை இராணுவச் சிப்பாய் ஒருவன் பார்த்துச்செல்லும்போதும் துஷ்பிரயோகிக்கப்பட்ட யாரோ ஒரு குழந்தையின் ம…

    • 1 reply
    • 1.2k views
  2. (முல்லை செஞ்சோலை வளாகத்தில் சிறீலங்காவின் வான் படையினரால் 61 சிறுமிகள் கொல்லப்பட்டதின் எதிரொலி... ) கண்மணிகள் சோலை மீது வான் பறவை பறந்தது! வடிவான வளர் இளம்பிறைகளை வாடி வதங்கச் செய்தது! தலைவன் அடி தாங்காது ஓடி மறையும் கோளைகாள்... பேடித் தனம் செய்தனீர்! - உம் கோர முகம் காட்டினீர்! கொலர் உயர்த்திக் கொக்கரிக்காதீர்... மலர்களைப் பறித்த உங்களுக்கு மரணப் படுக்கை ரெடி! 'கலர்' கனவு ஏதேனும் இருந்தால் தீர்த்துக் கொள்ளும்! உம் 'உயிர்'ப்பறவை பறக்குமடா சீக்கிரம்! அழுது வடிவதால் ஏதும் ஆகாது தோழரே! சர்வதேச அரச மேடைகளில் குருத்துகளில் குருதி பூசியவன் …

    • 1 reply
    • 1.4k views
  3. அமரர் அசோகமித்திரன் அவர்களுக்கு என் அஞ்சலிகளும் பிரிய பிரியாவிடையும் * 1976 அல்லது 1977ம் வருடத்தில் யாழ் பல்கலைக்கழக முதல்வர் கலாநிதி கைலாசபதியின் அழைப்பின்பேரில் எழுத்தாளரும் அப்போதைய கணயாழி ஆசிரியருமான அசோக மித்திரன் இலங்கைக்கு வருகை தந்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவன் என்கிற முறையில் நானும் அமரர் அசோகமித்திரன் அவர்களது வரவேற்பிலும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினேன். அவர் தமிழ் நாடு திரும்புகையில் எனதும் சேரனதும் கவிதைகள் உட்பட ஈழத்து எழுத்துகள் சிலவற்றை எடுத்துச் சென்றார். * அமரர் அசோகமிதிரன் கணையாழி இதழில் ”பாலி ஆறு நகர்கிறது” என்ற எனது கவிதையை வெளியிட்டதன்மூலம் தமிழகத்துக்கு என்னை அறிமுகம் செய்தார். சேரன் கவிதைகளையும் அவர்தான் முதலில் வெளியிட்டிருக்கக் கூ…

  4. கடுநோய் கொண்டும் காற்றாய்ப் பறந்து கனலாய் தெறிக்கும் விதமாய் பேசி இடுமோர் வெற்றிக்கிணையே இல்லை எதிரிக்கிவரோ பெருமோர் தொல்லை எதானால் இவரை அழைத்தாய் எங்கள் இறைவாஉனக்கேன் இரக்கம் இல்லை பதமாய் பொங்கிப் படைக்கும்வேளை பானைஉடைத்தாய் பார்த்துக்கெடுத்தாய் மனதில் உரமும் செழிக்கும்வேளை மரணம்தந்தே மயங்கச்செய்தாய் கனவில்மட்டும் நிம்மதி என்று காலமெல்லாம் கலங்கச் செய்தாய் உரையைக்கேட்க இதயம் மகிழும் உண்மைப் பேச்சில் உணர்வும் கசியும் வரமாய் தமிழர்க் கொளியாய் வைத்து வழியில் செல்ல இருளைத் தந்தாய் இருந்தால் எங்கள் ஈழம் வெல்லும் என்றா இவரை கொண்டாய் சதியை பெரிதாய்போட்டே பிரிவைச்செய்தாய் பிழையை செய்தாய் பேசற்கரிய தமிழாம் ஈழத்தலைவர் எல்லாம் தர…

  5. தம்பி... சுத்தமானது என் சமாதி சத்தியமாய் சொல்கிறேன் ! ஆண்டுக்கு இரண்டு முறை தான் தம்பிகள் என் சமாதிக்கு வருவீர்கள் பிறந்த நாளில் ஒரு முறை மரித்த நாளில் மறு முறை அது என்ன ஏப்ரல் 27-ல் என் சமாதியில் இத்தனை கூட்டம் ! கடும் கூச்சல் !! ஆழ்ந்த நித்திரையில் இருந்த என்னை ' ஏன் எழுப்பினார்கள் என்பது புரியாமல் தவித்தேன். சூரிய உதயத்தை என் வாழ்வில் கண்டதில்லை ஆனால்இ அதிகாலையில் தம்பி வந்ததுமே தூக்கம் கலைந்திற்று! துக்கம் கவ்விற்று !! வந்தது என் தம்பி கருணாநிதியல்லவா? அதிகாலை என் இருப்பிடத்தைத் தேடி வந்த காரணத்தை கருணாநிதி சொன்னதும் தான் தெரிந்துகொண்டேன். இலங்கைத் தமிழர்களுக்காக என் சமாதியில் உண்ணாவிரதமாம் ! அருமை தம்பி கருணா…

    • 1 reply
    • 1.4k views
  6. இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு அரசியல் எண்ணம் இதில் வாழும் தெய்வம் மைத்திரி நீ(நீங்கள்) உயிரில் கலந்து பேசும் பொழுது எதுவும் அரசியலே அரசியல் பேச்சுக்கள் எதுவும் புதிதல்ல ஒப்பந்தங்கள் கோடி கோடி அதுவும் புதிதல்ல எனது இதயம் ஒன்றுதான் புதிது நீயும் நானும் போவது அரசியல் என்ற பாதையில் சேரும் நேரம் வந்ததும் தமிழன் வாக்கு போட்டு கவுத்தானே ஒற்றையாட்சியில் ஒரு தீர்வை சிங்களவன் தடுத்தானே சிங்களவனின் நாடு சிங்களவர்க்கே எனதாருயிர் ஜீவன் என்னை ஆண்டாயே வாழ்க என்றும் வளமுடன் என்றும் வாழ்கவே எந்த தலைவனிடமும் இல்லாத ஒன்று உன்னிடம் உள்ளது அது எதோ அதை அறியாமல் விட மாட்டேன்....

  7. " என் இதயத்தை பறித்தாள் அவள் இதயம் என்னோடு அழுதது "-------" உயிராய் காதல் செய்தேன் இதயம் இறந்துவிட்டது "-------" தோற்ற காதலின் இதயம் கல்லறையை சுமக்கும் "-------"கண்ணால் காதல் செய்தேன் இதயத்தால் அழுகிறேன் "-------"கண்ணிலும் இதயத்திலும் காதலால் காயப்பட்டு விட்டேன்"-------" கவிதைதான் காதலின் சுவர்க்கமும் இன்பமும் "-------" உன்னோடு வாழ்வதை விட கவிதையோடு வாழ்வது அழகு "-------" காதலில் தோற்றேன் கவிதையில் வென்றேன் "-------"இதயத்துக்கு பயிற்சி காதலும் கவிதையும் "-------"காதலை ஆரம்பித்தேன் கவிதை நூல் பிறந்தது "-------"இரண்டு இதயம் மெல்ல சாவது காதல் தோல்வி "----"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் மெல்ல சாவது காதல் ஏமாற்றம் "-----"இரண்டு இதயத்தில் ஒரு இதயம் கண்ணீர் விடுவது ஒருதலை காதல் "---…

  8. மடியில் கிடத்தி இப்போதும் தலை கோதுகிறாள் அம்மா தன் செல்லப் பிள்ளையென குழந்‌தையென உறங்குகிறேன் நான் கைவிரல் பதியும் அப்பாவின் முரட்டு அடி இப்போதும் பயம் தான் எப்போதும் ஓரடி தள்ளியே நிற்கிறேன் அன்பாய் சொல்கையிலும் அதட்டலாய் தொனிக்கும் பாட்டியின் சொல்லை இப்போதும் மறுப்பதில்லை பழுத்து தழுத்த போதும் நரைத்த என் தலைக்கு பின்னிருந்‌து கழுத்தைக் கட்டிக்கொண்டு தொங்கும் என் பிள்ளை பிறந்‌தது நேற்றெனவே தோன்றும் ஆனால் ஒரு நமட்டுச் சிரிப்பில் சட்டென உணர்த்தி விடுகிறாள் மனைவி எனக்குக் கழுதை வயதாவதை கழுதையின் வயதென்னவோதான் தெரிவதில்லை லோ.கார்த்திகேசன்

  9. கண்களில் தொடங்கி கருத்தினில் வளர்ந்து, உருவமில்லாமல் உயிரை வதைக்கும் இன்ப சித்திரவதை காதல். காதல் கனிந்து கல்யாணத்தில் முடிவதும் உண்டு. களிப்பு பொங்கும் வாலிப வயதில் வரும் பாலினக் கவர்ச்சியாக அற்பாயுசில் முடிவதுமுண்டு. அப்படிப்பட்ட காதல் கூடாவிட்டாலும், கல்லறை வரை அதைப் பொக்கிஷமாய் வைத்திருப்பவர்களும் உண்டு. “அன்று, நான் அவள் மனதிலும், அவள் என் மனதிலுமாய் எங்கள் காதலை வளர்த்தோம் கம்மங்காட்டின் கடைசியிலும் காளியம்மன் கோயிலிலும் சோளக்காட்டின் சந்தினிலும் செம்மண் புழுதியிலும். கதிராய், காவியமாய், செங்கரும்பாய், செந்தாமரையாய் செழித்து வளர்ந்த காதல் சூழ்நிலைச் சூறாவளியால் சொந்தமின்றி போனது. இன்று, அவள் அவளின் வீட்டில் கணவனுடன் நான் என் வீட்ட…

  10. அவனும் இவனும்.. அவனும் கொலை செய்தான்.. இவனும் கொலை செய்தான்.. முன்னவனை தியாகி என்றனர்.. பின்னவனை துரோகி என்றனர்..

  11. ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! அந்த நாட்கள் தீயின் நாக்குகளால் தின்னப்பட்ட தீராத்துயர் எங்கள் வீரத்தின் விலாசங்களை வெ(கொ)ன்ற நாட்கள். வெற்றிகள் தந்தெங்கள் விடுதலைச் சுவடுகளில் வீரம் எழுதிய மகனாரும் , மகளாளும் இறுதிச் சமர் புரிந்து எரிந்து கரைந்த 5ம் ஆண்டு நினைவில் ஆனந்தபுரம் அழியாத நினைவாக....! பூக்களின் வாசனை கலந்த பொன்னிதழ் விரியும் புன்னகை முகங்கள் பொசுங்கிக் கிடந்த நாளை வசந்த கால மலர்வாசம் தரும் ஏப்றல் மாதம் என்றென்றும் எங்களில் எரியும் தீயாய்...! இழப்பின் கதைசொல்லும் என்றைக்கும் இதயம் நிரம்பிய துயர் தருமாதம் நஞ்சு கலந்து எங்கள் கனவுகள் பறிக்கப்பட்ட நிலத்தின் கதைசொல்லும் நீங்காத…

  12. என்ன தான் என்னவோ....??? குரங்குகளின் கைகளில் அகப்பட்ட பூமாலைகளைப் போல் எம் மண்ணில் பூக்கப்பட்ட எம் இன இளஞ்சிட்டுக்கள் முதல் தள்ளாடும் முதியோர்கள் வரை இவ் விசர் பிடித்த சிங்கள மடையர்களின் அடாவடித் தனங்களால் நித்தம் நித்தம் தம்மைக் காப்பாற்று என்று மரணதேவதையிடம் இரங்கல் பிரார்த்தனை செய்து கொண்டும் அல்லல்பட்டும் அவஷ்த்தைப் பட்டுக் கொண்டும் இருக்கின்றார்களே.... இதற்கு முற்றுப் புள்ளி என்ன தான் என்னவோ...????

  13. போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! போர் முற்றம் நின்று பூங்கொத்து ஏந்திய புன்னகை மன்னவனே! தூர் முட்டும் தீயின் ஓரத்தில் வீசிய சில்லென்ற நதிக்காற்றே! ஆர் சுற்றம் பிரித்தறியா ஈழத்தின் உறவான இன்முகத் தமிழ் எழிலே! பார் சுற்றி தாய் முற்றக் கதை சொல்லிப் பயணித்த பண்புநிறை தமிழ்செல்வா! உலகின்....... தீர்வற்ற நெடுங்கதைக்கு தீர்வெழுதி முடிக்கவா, நீ தூங்கிப் போய்விட்டாய்? ஊர் முற்றம் அணைத்த இதமான அணைப்பிலா, நீ உறங்கி ஓய்வெடுத்தாய்? நாரோடு மலர் தொடுத்து நாடு சூடும் வேளையிலா, நயனத்தை மூடிக் கொண்டாய்? - எங்கள் நாயகனின் தோளான நல்லதொரு தோழனே! நம்மைவிட்டு ஏன் பிரிந்தாய்? யார் குற்றம் செய்தோம்? விழிநீர் முட்டிக் காயாத விதி வ…

    • 1 reply
    • 1.2k views
  14. ஒரு கோடியேற்றும் நாளின் சிரிப்பும்.. வந்தேமாதரமும்!! by வித்யாசாகர் சுதந்திரம் என்று சொன்னாலே உள்ளே இதயம் படபடக்குமொரு பயம்; ஏன்? அதன் ஒவ்வொரு எழுத்திற்கும் எம் முந்தையோர் சிந்திய ரத்தமும் கொடுத்த உயிரும் காலம் பல கடந்தும் மறக்கவேண்டாத நினைவின் வலிபற்றிய பயமுமது; நிற்க முறைத்தலும் பார்க்க அடித்தலும் எதிர்த்துப் பேச உயிர்துறத்தலுமென நீண்ட கொடுமைதனைத் தாளாது திருப்பியடித்ததில் வாங்கியச் சுதந்திரம் – இன்று எம் தேசத்தின் ஒற்றைதின சிரிப்புசப்தமாகக் கேட்டாலும் இன்னுமன்றைய வலிக்கான கண்ணீர் ஓய்ந்தபாடில்லையென்பது வருத்தமில்லையா ? சேற்றிலிருந்து எடுத்த காலை மீண்டும் மனிதசாணத்தில் வைத்துக்கொண்டதைப் போல வெள்ளையனை வெளியேற்றிய கையோடு ஒற்றுமையை மண்ணில…

  15. நீ என்னைத் தேடி வருகிறாய் நான் நீயாக மாறி என்னைத் தேடுகிறேன் * நடைபயிலும் குழந்தையாய் வருகிறாய் தாயாய் என் கவனம் எல்லாம் உன் மேல் * நீ எங்கெல்லாம் என்னைத் தேடுகிறாய் என்பதை ரசிப்பதற்காகவே நான் தொலைந்து போகலாம் * நீ வந்தவுடன் கை கொடுப்பதா கன்னம் கொடுப்பதா என்ற குளப்பத்தை சாதுரியாமாய் தீர்த்து வைத்தாய் கைகூப்பி வணக்கம் சொல்லி * உன் தாவணிக்கு எப்போது என் தாயின் கைவிரல்கள் முளைத்தது தடவியதும் குழந்தையாய் உறங்கி விட்டேனே -யாழ்_அகத்தியன்

  16. Started by வர்ணன்,

    உனக்கென்று - ஒரு கொள்கை உள்ளவரை உன்னை யாரும் கொல்ல முடியாது! தரிசாய் கிடந்தாலும் எரிந்து போக துணியும் ! அடுத்தவன் வந்து........ எம் நிலத்தில் ஆர்பாட்டமாய் ......... ஏதும் செய்ய நினைத்தால் ....... மொத்தமாய் வெறுக்கும்! முடியாமல் போனாலும்.. மோதி முக்கி தன்னை அழிக்கும்....... தாயை விற்று பிழைக்க நினைக்காது! கோவம் கொள்வாய் நீ முடக்கிய விரல்களில் கோவம் - நீளம்.. கொன்றுதான் ஆகணும்......... யாரை -? தெளிவில்லை! அது இருக்கட்டும்- அண்ணாக்கு திவசம் கொடுக்கணுமே இன்று- முடிந்ததா? கவனம் - சடங்கு என்று ஏதோ செய்கிறாய் உன் சமையல் அறையில் சிங்களன் ஏவிய செல்- விழகூடும்! மொத்தமாய் - உன் சந்தத…

  17. Started by kanithan,

    இது எம் காலம்.. காலம் கனிந்தது.-கார்த்திகை மலர்ந்தது - மனங்கொள்வோம் எம் உயிர் உரையும் மாவீரர் மலர் குடில் கொள்ளும் காலம் மனதார பாவிசைப்போம் -அவர்தம் புகழ் இசை கொன்டு..... நெஞசுருகிப்போவோம் நேசங்களின் வழியுணர்ந்து....... தேசம் பல கண்ட தமிழரே நிஜ தேசிய தினம் - உமக்கிது.... நம் தேசம் தந்த வேந்தர் புகழ் தேசம் எங்கும் உரைப்போம்- வாரும் உயிரில் உணர்வோம் உயிரீந்த- எம் உறவை

  18. Started by nunavilan,

    பூமி கேட்டினால் மேவிப் பெருகிய பாலியாற்றைப்போல பேராராய்ப் பெருக்கெடுத்த நம் குருதி உதுமானியப் பேரரசின் சிறைகளுக்குள் சிந்தப்பட்ட ஆர்மீனியரின் குருதி வற்றி வறண்ட நெடிய சமுத்திரம்போல் புழுதியாய் கிளம்பி நமக்கெடுத்த தாகம் பாலைவனங்களில் கருகிய தார்பூரரின் தாகம் தணல் மூண்ட பெருங்காடுபோல் தீயாய் நாம்மை துவட்டிய பசி பட்டினியோடு மூச்சடங்கிய கம்போடிய வியட்நாயிமரின் பசி தலை அறுக்கப்பட்ட பறவைபோல் அனல் படரத் துடித்த நம் வயிறு பசியால் மடிந்த உக்கிரேனியரின் ஒட்டிச்சுருங்கிய வயிறு விசமேற்றி இறந்த மீன்களின் மூடா விழிகள்போல் நஞ்சுறைந்து வாட…

    • 1 reply
    • 1.1k views
  19. பயங்கரவாதியின் மகள் இறந்தேனும் தன் துணைவனைக் கண்டுகொண்டாள் அவள் இப்படி ஒரு நீள் பிரிவு எந்தப் பெண்ணுக்கும் கிடைத்துவிடக்கூடாது என எண்ணியபடி ஆயுட் சிறைவண்டியில் ஏறினாள் சிறுமி எந்தக் குழந்தையும் இப்படி ஒரு சிறை வண்டியில் ஏறிவிடக்கூடதென எண்ணியபடி தாயின் சடலத்தின் பின் கொள்ளிக்குடத்துடன் சென்றான் சிறுவன் எந்தக் குழந்தையும் இப்படி ஒரு வயதில் தன் தாயிற்கு கொள்ளி சுமக்கக்கூடாதென எண்ணியபடி காத்திருந்து காத்திருந்து இறந்துபோன துனைவிக்கு விலங்கிடப்பட்ட கைகளால் அரப்பும் சந்தனமும் அப்பினான் அவன் எந்த ஒரு துணைவனுக்கும் இப்படி ஒரு இறுதிச் சந்திப்பு நிகழ்ந்துவ…

  20. [size=5]பனியில் மொழி எழுதி - கவிஞர் சோலைக்கிளி[/size] சோலைக்கிளி இலங்கையின் கிழக்கும் மாகாணத்தின் கல்முனையைச் சேர்ந்த கவிஞர். இவரது இயற்பெயர் உதுமாலெவ்வை முகம்மது அதீக் ஆகும். இவர் 1980களிலே எழுதத் தொடங்கியவர். ஈழத்து கவிதைப் பரப்பில் சோலைக்கிளியின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கவிதைகளை எட்டுத் தொகுதிகளாக வெளியிட்டிருக்கிறார். பாம்பு நரம்பு மனிதன், காகம் கலைத்த கனவு, பனியில் மொழி எழுதி, எட்டாவது நகரம் போன்றவை இவரின் கவிதை தொகுப்புகளில் சிலவாகும். அந்த வகையில் இம்மாத சுவடுகள் பதியுமொரு பாதையில் கவிஞர் சோலைக்கிளியோடு பயணிப்போம். இதைத்தான் இவன் இவ்வளவு நாட்களாகப் படித்துக் கொண்டிருந்தான் மேசைப் புத்தகத்…

  21. Started by ரதி,

    நாடிருந்தும் நாடோடியாய் நாளேல்லாம் நாடெல்லாம் ஓடுகின்றேன் ஓடுவதற்கு உடல்வலு தேவையில்லை மனவலு இருந்தால் மட்டும் போதும் ஓடுவதற்கு கால் எனக்கு தேவையில்லை போதிய உள வரம் வேண்டும் ஓடுவதால் மீண்டும் மீண்டும் உர‌ம் பெறுகின்றேன் நாம் ஓடாமல் இருப்பதற்கு ஓர் சுதந்திர‌ நிலம் அமைக்க வேண்டும் என்று இதை நான் எழுதவில்லை...எழுதியவர் ஒரு முன்னால் காலம் சென்ற புலிகளின் தளபதி...யார் என்று சொல்லுங்கள் பார்ப்போம்

  22. இன்று ஒரு சகோதரி எழுதியதை வாசித்தேன். நான் வாசித்ததை இங்கு பதிவு செய்கிறேன். இந்த காலங்களில் நானும் பிறந்த மண்ணில் இருந்தேன். மொறிஸ் குறிப்பாக வடமராச்சியில் அந்நிய படைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர். இவருடன் ஜேம்ஸ், ஜூட், ரமேஷ் மாஸ்டர், ஜீவா, ஜெயம், ஐயன் இன்னும் பலர் களமாடினார்கள். அனைத்து மாவீரர் தெய்வங்களுக்கும் எனது வீர வணக்கம் - அகஸ்தியன். சுமை தாளாத சோகங்கள்! வெளியிலை மைதானத்திலை சின்னச் சின்னப் பிள்ளையள் எல்லாரும் விளையாடிக் கொண்டிருக்கினம். சில பிள்ளையளோடை அவையளின்ரை தாய், தகப்பன்மாரும் நிற்கினம். இவரை இன்னும் காணேல்லை. வழக்கத்திலை நாலு மணிக்கெல்லாம் வந்திடுவார். இண்டைக்கென்ன ஐஞ்சு மணியாகியும் காணேல்லை. யன்னலாலை அவர் வாற வழியைப் பார்த்துப் பார்த்துக் கொண…

    • 1 reply
    • 1.2k views
  23. http://youtu.be/9eHfgta1ClQ உக்கிப்போன நினைவுகளில் துளிர்விடும் காளான் கனவுகள் ஆராதிக்க முடியாத பொழுதுகள் கரைந்து காணாமல் போகின்றது விறகில் எரித்த கரிப்பானையை கழுவுவதுபோல் துக்கம் படிந்த முகத்தை கழுவி கழுவி மீண்டும் அடுப்பில் வைத்தபடி வாழ்க்கை.. கச்சைக்குள் எதுவும் இல்லாத வெறுமை சனக் கூட்டத்தின் நடுவே அர்த்தமற்று நடக்கின்ற உணர்வு வெட்ட வெளியில் ஆணிவேர் அறுந்த மரமாய் எட்டுத் திசையில் இருந்து வரும் காற்றுக்கு அஞ்சியபடி.. எங்கும் எதையோ தேடியபடி.. நிச்சயமாக கடவுளை இல்லை. யாரோ ஒருவன் வந்து திடீர் என்று கன்னத்தில் அறைகின்றான் மறுகன்னத்தையும் காட்ட தென்பில்லாமல் நடந்தபடி.. ஏன் என்ற கேள்விக்கு இடமே இல்லை அடிமையாக விரும்பியவனுக்கு…

  24. பட்டு தெளியாத பாதையில் .. பாடையை கட்டிவைத்து .. இதில் வந்து படுங்கள் என்று .. நான் மட்டும் கூவி அழைக்கையில் .. தெட்ட தெளிவா தெரிந்த பின்னும் .. சீவன் போன ஜீவன் கூட வராது .. ஆவிகளை மீண்டும் போருக்கு அழைக்கும் .. ஆற்றல் மிகு விசுவாசங்கள் ஒருநாளும் .. போரறியாது அதன் வலி அறியாது .. காவி காவி சென்று மாறி மாறி .. புற்றுகள் மேல் கொட்டில் போடும் .. தவளைகள் நிலையறியாது .. பாம்புகளிடம் இருந்து உமக்கு விடுதலை .. வாங்கலாம் அதுவரை அதிலே படும் .. உறக்கம் இன்றி அவர்கள் விழித்திருக்க .. நாம் உண்டுவிட்டு ஏப்பம் விடும் சத்தம் .. பாம்புகள் சீறும் சத்தமாவே காதுகளில் கேட்கும் .. ஒவ்வெரு நாளும் மேட்டில் இருந்து .. நொந்து சாவதை விட தண்ணியில் .. ஊறி திளைக்கலாம் என்று நினைக்கிற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.