கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஆராரோ பாடிய தாய்க்கு நிகர் ஆனவரே தாய் இறந்தால் தகப்பன் சித்தப்பன் என்ற நிலையை மாற்றியவரே தாய்க்கு பதிலாக பாச மழையில் எம்மை நனைத்தவரே உமது வாழ்வின் இனிமையை எமக்காக துறந்தவரே கண்டிப்புடன் பாசத்தையையும் ஊட்டியது நீங்கள் தானே நாம் தப்பு செய்த போதிலும் உங்களைத் தண்டித்து நம்மைத் திருத்தினீர்களே அளவுக்கதிகமாக செல்லமும் தந்தீர்கள் அலட்டல்களை தவிர்க்க அடியும் தந்தீர்கள் அன்போடு பழகு என்று குட்டும் போட்டீர்கள் அறிவு பசியை நமக்கு உணர செய்தீர்கள் தத்தி தத்தி நடக்கையில் கைப்பிடித்து விட்டவரே வாழ்க்கை பயணத்தில் தடுமாறுகின்றோம் கரம் பிடித்து விடுவதற்கு வருவீர்களா கனவுகளில் என்றாலும் நிஐ வாழக்கையில் நிழல் போலாகி விட்டது உமது உருவம் ஆயிரம் கனவுக…
-
- 43 replies
- 6.8k views
-
-
அப்பா என்றால் அன்பு……. எம் முகவரிகளுக்கு முதலெழுத்து எம் அகரங்களுக்கு தலையெழுத்து நாம் முந்தி நின்று முகம்காட்ட தன்னை தந்து உருவாக்கிய சிற்பி குடும்பச் சுமைகளில் அன்னைக்கு ஊன்று கோல் இடுக்கண் சமயங்களில் இவரின் சொல் ஆறுதல் மனம் நோகும் வேளையிலோ இவர் வாய் மொழி மயிலிறகு குடும்ப வட்டத்திற்குள் உலகத்தையே உற்று நோக்கிய தத்துவ ஞானி இசை இவரது உயிர் இனிமை இவரது குணம் மௌனம் இவர் தரும் தண்டனை மனமெல்லாம் மழலைகள் சிந்தனை அன்பு இவரது மந்திரம் இவரிடம் இல்லை என்றும் தந்திரம் கல்விக்கு இவர் வாழ்வில் முதலிடம் கடமைதான் இவரது புகலிடம் இறைவனுடன் உறவாட விருப்பம் ஏராளம் இவரின் கை மட்டும் கொடுப்பதில் தாராளம் ஏம் தந்தை எமைப்பிரிந்து ஆண்டுகள் பதினாறாகு…
-
- 11 replies
- 17.1k views
-
-
அப்பா என் அப்பா ஏழை தான்! ஆனாலும் என்னை எப்போதும் ஏழையாக வளர்க்க நினைத்தது இல்லை. என் தாய் என்னை இடுப்பில் வைத்திருக்கும் பொழது தனக்கு தனக்கு இணையாகத்தான் தந்தை யை காட்டினாள். ஆனால் என்தந்தையோ என்னை தோளில் ஏற்றித் தான் கான இயலாத ஒன்றையும் காணவைக்கிறார். அப்பா என்னும் பொக்கிசம் நாம் அருகில் இருக்கும் போது நமக்கு தெரிவதில்லை, தாயை இழக்கும்பாசத்தையும் . தந்தை இழக்கும் போது பாதுகாப்பையும் இழந்து விடுகின்றோம் . மரமாய் வளர்ந்து கிளை பரப்ப உரமாய் இருந்தவர் தந்தை, எந்த உறவு பக்கத்தில் இருந்து எதைசொன்னாலூம். அப்பாவின் ஒரு வார்த்தைக்கு இடாகுமா? அப்பா எப்பவும் எங்களுக்கு காவல் தெய்வம். முடிந்த வரை எமக…
-
- 4 replies
- 2.7k views
-
-
தன் தந்தையை நேசிக்கும் எல்லோருக்கும்...!!! இந்த கவிதை...!!! சமர்ப்பணம்..!!! அப்பா...! " நான் காதலித்த முதல் ஆண் நீங்கள் அப்பா..." என் முதல் கதாநாயகன்.. நீங்கள் தான் அப்பா..! தலைகனத்தில் நான் ஆடும் போது குட்டு வைத்தது நீங்கள், தடுமாறி நான் விழுந்த போது தூக்கி நிறுத்தியதும் நீங்கள் அப்பா..! உங்கள் உயிரே என் மீது வைத்து இருந்தும், ஒரு சிறு இடைவெளியில்தான் நம் பந்தத்தை நீங்கள் வைத்து இருந்தீர்கள், அந்த இடைவெளிதான் உங்கள் பாசத்தை உணர வைத்தது எனக்கு, கம்பீர பார்வை, நேர் படும் பேச்சு, அஞ்சா நெஞ்சம், சில சமயம் ரௌத்திர குணம் இருந்தாலும் உங்கள் மனம் என்றும…
-
- 4 replies
- 874 views
-
-
நான் கேட்டுத் தூங்கிய ஆராரிரோ பாட்டில், பாதிப் பாட்டை பாடி முடித்த... பாசத்தின் உருவம் அவர்! சரியெது பிழையெது எதுவும் தெரியாத பருவம், அம்மாவைத் தாண்டினாலும்..... என் அப்பாதான் எல்லை! கண்டிப்பும் தண்டிப்பும் இருந்தாலும், அன்பு அத்தனைக்கும் உறைவிடம் அங்கேதான்! அப்பாவின் கைபிடித்து நடைபயின்ற நேரங்களும், கல்லூரிவரை கவனித்த காலங்களும், இன்றுவரை கண்முன் காட்சிகளாய்... காலத்தால் அழியாத பாசங்களின் சாட்சிகள்! உயிரைக் கொடுத்து உருவாக்கி... தன் உயிரைக் கொடுத்தும் தன் உயிராய் எனை நினைத்து வளர்த்த... என் தெய்வத்துக்கு, என்ன கடன் பட்டேனோ? என்ன தவம் செய்வேனோ?? நாளைக்கு.... நானும் ஒரு அப்பா!!!
-
- 5 replies
- 1.3k views
-
-
அப்பாவின் ஈர நினைவுகள்.... வேர்களில் இருந்து கசியும் நீராய் அப்பாவின் நினைவுகள் எனக்குள்.. ஐந்து வயது வரை நடக்கமுடியாது தவிக்கும் போது தோள்களில் தூக்கி திரிந்த காலங்கள்... பனைவெளிகளின் ஊடாக சைக்கிள் பாரில் எனை வைத்து கதை சொல்லிய பொழுதுகள்.... பெரும் குளக்கட்டின் ஓரம் தடுக்கி விழாமல் இருக்க விரல்கள் இறுக்கி நடந்த நேரங்கள்... பெரும் மழை சோ என்று கொட்ட நனைதலின் சுகம் சொல்லித் தந்த தருணங்கள்... இப்பதான் நடந்ததாய் தெரியும் பொழுதுகளெல்லாம் எப்பவும் தொட முடியாத திக்கில் உறைந்து விட்ட சித்திரங்களாய்... ஆற்றாத் துயர் அணை மேவினும் நெருங்க முடியாத தூரங்களாய்.... பசிய இலையொன்றின் அந்திம காலத்து உதிரும் தவிப்பில் அப்பாவை கண்ட இறுதிப் பொழுத…
-
- 19 replies
- 128.6k views
-
-
அப்பாவுக்கு ஒரு கவிதை. எப்படி எப்படி எல்லாமோ தன் பாசம் உணர்த்துவாள் அம்மா ஒரேயொரு கைஅழுத்தத்தில் எல்லாமே உணர்த்துவார் அப்பா… முன்னால் சொன்னதில்லை பிறர் சொல்லித்தான் கேட்டிருக்கிறேன் என்னைப் பற்றி பெருமையாக அப்பா பேசிக்கொண்டிருந்ததை… அம்மா எத்தனையோ முறை திட்டினாலும் உறைத்ததில்லை உடனே உறைத்திருக்கிறது என்றேனும் அப்பா முகம் வாடும் போது உன் அப்பா எவ்வளவு உற்சாகமாக இருக்கிறார் தெரியுமா என என் நண்பர்கள் என்னிடமே சொல்லும் போதுதான் எனக்குத் தெரிந்தது எத்தனை பேருக்குக் கிடைக்காத தந்தை எனக்கு மட்டும் என… கேட்ட உடனே கொடுப்பதற்கு முடியாததால் தான் அப்பாவை அனுப்பி இருக்கிறாரோ கடவுள்..? சிறுவயதில் என் கைப்பிடித்து நடைபயில சொல்லிக்கொட…
-
- 0 replies
- 3.5k views
-
-
அமரர் அசோகமித்திரன் அவர்களுக்கு என் அஞ்சலிகளும் பிரிய பிரியாவிடையும் * 1976 அல்லது 1977ம் வருடத்தில் யாழ் பல்கலைக்கழக முதல்வர் கலாநிதி கைலாசபதியின் அழைப்பின்பேரில் எழுத்தாளரும் அப்போதைய கணயாழி ஆசிரியருமான அசோக மித்திரன் இலங்கைக்கு வருகை தந்தார். யாழ் பல்கலைக்கழக மாணவர் தலைவன் என்கிற முறையில் நானும் அமரர் அசோகமித்திரன் அவர்களது வரவேற்பிலும் நிகழ்ச்சிகளிலும் பங்குபற்றினேன். அவர் தமிழ் நாடு திரும்புகையில் எனதும் சேரனதும் கவிதைகள் உட்பட ஈழத்து எழுத்துகள் சிலவற்றை எடுத்துச் சென்றார். * அமரர் அசோகமிதிரன் கணையாழி இதழில் ”பாலி ஆறு நகர்கிறது” என்ற எனது கவிதையை வெளியிட்டதன்மூலம் தமிழகத்துக்கு என்னை அறிமுகம் செய்தார். சேரன் கவிதைகளையும் அவர்தான் முதலில் வெளியிட்டிருக்கக் கூ…
-
- 1 reply
- 1.1k views
-
-
-
இரவல் மொழியில் பெருமை பேசி இழந்த உண்மை இன்பம் கோடி கோடி இரைந்து கத்தும் காகத்தை போன்று இல்லாமையில் பெருமை தேடும் பலர் இங்கே தட்டி தமிழ் மகான்கள் சொன்னப் போது தாழ்மையுடன் உணர்ந்தோம் நம் பெரும் பிழையை தாயாய் காக்கும் நம் தமிழ் மொழியை தரணி எங்கும் வாழ்த்த வழி செய்வோம் வெளிநாட்டு மோகம் எம்மை ஆட்கொண்டு வெள்ளையர் வாழ்வு சீர் என நினைத்தும் ஏன் ? வெளிர் நிறத்தில் உள்ள அழகும் நிலையில்லையே …
-
- 1 reply
- 524 views
-
-
அமெரிக்க மூத்திரம். இடிபாடுகளுக்குள் இருந்து சிலிர்த்துக் கொண்டு எழுந்து வரும் அக் குழந்தைக்கு கைளும் இல்லை; கால்களும் இல்லை நிலைத்த அதன் விழிகளுக்குள் உறையும் பொருள் அறிபவர் யாரும் இல்லை. அக் குழந்தைக்கு முன் நீங்கள்விரித்து வைக்கும் உலகம் இதுதான் : வற்றிய முலையுடன் சிதறிய பேரன்பு, மண்ணுடன் கலந்த கோதுமை மாவை பிரித்தெடுக்கச் சென்று பிணமான அரவணப்பு, தகர்ந்து சிதறிய கட்டிக்குவியலுட் சிக்கிய உடன்பிறந்த பொம்மைகள், சுற்றிச் சுற்றி திசை அழிந்த சுடுமணற்காற்று அன்றில் குளிர் உறையும் கூடாரம் அலையும் சிறு நிலம். அக்குழந்தைக்கு கந்தகக்காற்று வாக்களிக்கப்பட்டது. அதன் நிலம் பறிக்கப்பட்டது. பசியையும் தாகத்தையும் புறக்கணித்து கொடும் அதிர்வுகளும் கொலைவெறிப் பேச்சுக்களும் இல்லாத ஒ…
-
-
- 4 replies
- 413 views
-
-
அமெரிக்கா அழிக....!!! அமெரிக்கா என்றரொரு நாடு அழிய என்று நீ பாடு.... யுக்தியை விதைக்கின்ற நாடு.... பின்னர் யுத்தத்தை தொடுக்கின்ற நாடு.... மனிதத்தை மறந்திட்ட நாடு.... மனிதத்தை அழிக்கின்ற நாடு..... கொடுமைகள் விதைக்கின்ற நாடு பெரும் கொடுங்கோல் ஆழ்கின்ற நாடு... ஏழ்மையை விதைக்கின்ற நாடு எழியோர் ஆழ்கின்ற நாடு ... வறுமையை திணிக்கின்ற நாடு வல்லாதிக்கம் செய்கின்ற நாடு... சாதனை புரிகின்ற நாடா...?? பெரும் சாக்கடை திறக்கின்ற நாடு.... விடுதலை மறந்திட்ட நாடு விடுதலையை நசிக்கின்ற நாடு.... கோர முகம் கொண்ட நாடு கோர வஞ்சகம் புரிகின்ற நாடு... சமாதானம் பே…
-
- 19 replies
- 3.1k views
-
-
-
அமைதித் தளபதி – தீபச்செல்வன்:- அமைதித் தளபதி அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் தொங்கும் நகரில் சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில் சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள் நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து விரிந்த மலர்கொத்துக்களைபோல் புன்னகையை நீட்டியவனின் உதடுகளை மூடிக் கிடந்தது ஈரமண் முள்முருக்கில் அமர்ந்திருந்த வெண்புறா எழுந்து ப…
-
- 0 replies
- 923 views
-
-
அமைதித் தளபதி- அதிகாலை இருண்டுபோகும்படி வீசியெறியப்பட்ட குரூரக்கல்லில் உடைந்து கிடந்தது வார்த்தைப் பெருமலர் தகர்க்கப்பட்ட வெண்சொற்கள் தோரணங்களாய் தொங்கும் நகரில் சரித்து வீழ்த்தப்பட்டது பெரு நட்சத்திரம் முறித்தெறியப்பட்ட சமாதான ஒப்பந்தத்தினடியில் சூழ்ச்சியை முறிக்கும் சாதுரியமான முடிவற்ற புன்னகையின் தீராத் துகள்கள் நேற்றும் நமது தலைநகரிற்கு வந்தவர்களுக்கு கைலாகு கொடுத்து விரிந்த மலர்கொத்துக்களைபோல் புன்னகையை நீட்டியவனின் உதடுகளை மூடிக் கிடந்தது ஈரமண் முள்முருக்கில் அமர்ந்திருந்த வெண்புறா எழுந்து பறந்தது கொடும் சிங்கத்தின் முகத்துடன…
-
- 0 replies
- 1.1k views
-
-
இதோ இன்றைய பொழுதுடன்.......... ஒரு அரசியல் வேட்டைக்காரன் -எம்மிடமிருந்து ....... விடைபெறுகிறான்!! அலைகடல் கடந்தும் - நிலை தளராது.... வேரினை மட்டும் -கடலடி துழைத்து..... மண்ணில் - படரவிட்டு.......... ஒரு விருட்சம்....... எமை விட்டு விட்டு விலகி ........ தன் முகம் சாம்பலாக்கி ..... சரித்திரம் முடிக்கிறது! பாவபட்ட இனத்துக்காய் ... பகலையும் இரவையும்... சமமாய் மதித்து உழைத்த சரித்திர புருசனே........ போய் வா இந்த பொய் உடம்பு தொலைத்தாய்! நீ போட்ட அத்திவாரம் ஆட்டம் காணாது அதுவரை - உம் தூக்கம் கலைக்க மனசு வராது........... வென்றோம் என்றொரு சேதி மெல்ல வந்து காதில் உரைக்கும்........ காலம். வரும்...! அப்போ …
-
- 6 replies
- 1.3k views
-
-
அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? _________________________ தீபச்செல்வன்
-
- 1 reply
- 1.2k views
-
-
அமைதியின் நிழல் மரணம் கொன்றடக்கப்படும் ஆயுதமாகும் பொழுது யார் யாரோ போராடத் தொடங்குகிறார்கள் சனங்கள் அமைதியின் நிழலை இப்பூமியில் என்றாவது ஒரு நாள் மீளவும் உருவாக்குவார்கள் இருள் கவிழந்த பொழுதில் இந்த வார்த்தைகளை எழுதி வைக்கிறேன் உனது போரைத் துடைத்து அதிகார நிழலை அடித்து விரட்டுகையில் இப்பூமியில் வெளிச்சம் படரும் இரத்தமும் காயமும் இல்லாத பூக்கள் பூத்துக் கொட்டும் அமைதியின் நிழலைப் பார்க்காது முடிக்கிறது இந்தக் காலம் அது எவ்வளவு அழகாயிருக்கும்? http://deebam.blogspot.in/2011/10/blog-post_05.html
-
- 4 replies
- 707 views
-
-
அவ்வளவு ஆசையா உனக்கு என் மீது கோவத்தில் நீ சட்டி பானையோடு சண்டைபிடித்தும் இவ்வளவு ருசியா சமைத்திருக்கிறாய் * அமாவாசை விரதத்தில் நீ "கா கா கா" என கரைந்து கொண்டு வெளியே வருகிறாய் உன்னைக் கண்டதும் காகங்கள் குழம்பிவிட்டது பெளர்ணமி விரதமோ என்று * இந்த மழை உடனே நின்றுவிடும் பார் எப்படித் தெரியும் நீதான் குடை விரித்துவிட்டாயே * என் கவிதை படிப்பவர்கள் எல்லாரும் என் காதலி கொடுத்து வைத்தவள் என்கிறார்கள் அதற்காகவாவது உன்னைக் காதலிக்க வேண்டும் எங்கே நீ... * என் கண்களுக்கு இமைக்க மட்டும்தான் தெரியும் உன் கண்களில் ஒன்றைக்கொடு உன்னை மாதிரியே உன்னை நான் இமைக்காது பார்க்க வேண்டும் -யாழ்_அகத்…
-
- 4 replies
- 1.2k views
-
-
வீடெங்கும் தடபுடல் அமளியென அதிர்ந்திடவே வீதியெங்கும் தோரணங்கள் தொங்கிச் சிரித்திடவே வீடியோக்காரர்களும் வித விதமாய் படம்பிடிக்க வீணான செலவுகள் எதற்கென்றே புரியவில்லை! பதின்மூன்று வயதிலவன் பத்து "ஏ"க்கள் பெற்றிருந்தான் பந்தலும் போடவில்லை பரிசுகளும் குவியவில்லை பத்தே வயதுபெண் பருவம்தான் அடைந்துவிட்டால் பட்டுப்புடவைகட்டி பலகாரங்கள் பல ஊட்டி பத்திரப்படுத்துவாதாய் பதுக்கியேவைத்தார்கள் பத்தியமானதாய் எதை எதையோ சொன்னார்கள் ஆருமில்லா அறைதனிலே அவளை அமர்த்திட்டர் ஆணியொன்றினையோ அவள்தலையில் செருகிட்டர் அதற்கான காரணம் யாதென கேட்டிட்டால் அமுக்கிப்போடும் பேயினை விரட்டவே என்றிட்டர் ஆண்பாலும் பெண்பாலும் தெரிந்திருக்கு பேயுக்கு அப்பெண்படும் பாடுத்த…
-
- 1 reply
- 457 views
-
-
தமிழுக்காய், தமிழ்மண்ணுக்காய் தற்கொடை தந்த தமிழ் சகோதரியின் தியாகத்தைக் கொச்சைப்படுத்திய குட்டிரேவதியின் கவிதைக்கான பதில் அம்மணமாய் நிற்பவர்களே! சினிமாக் குப்பைகளிலும் சின்னத்திரை குழறல்களிலும் சிந்தனையைத் தொலைத்துவிட்டு குழாயடிகளிலேயே வீரங்காட்டும் விவஸ்தையில்லா வீணர்களுக்கு தாய்மண் காத்தலையே விரதமாக்கி வித்தைகள் புரிவது வீணானதாய்ப் படலாம் கட்டிளம் காளைகளின் கடைக்கண் பார்வைக்காய் காலமெல்லாம் காத்திருப்பதும் களியாட்டங்களில் கரைவதுமே கன்னியர்க்கு விமோசனம் என்றெண்ணும் சிங்காரிகளுக்கு களத்துத் தியாகங்களும் தீரங்களும் ஏளனங்களாகலாம். அந்நிய மொழியும் அடுத்தவன் கலாச்சாரமுமே கண்ணில் தெரிய அடுத்தவனின் அழுக்குகளையே அரவணைத்து ஆராதித்து அடுக்களைய…
-
- 16 replies
- 5.2k views
- 1 follower
-
-
அம்மம்மா அம்மா என்று அறிமுகம் ஆனவரே அம்மாவின் அன்பையும் சேர்த்து தந்தவரே அம்மாக்கு நிகர் அம்மாம்மா என்ற புதிய மொழியை சொல்ல வைத்தவரே ஆராரோ பாட்டில் ஆயிரம் கதை சொன்னவரே ஆயிரம் தான் இருந்தாலும் நீங்கள் வேண்டும் எமக்கு அன்னை பிரியும் போது உங்கள் மடியில் கிடத்தினாள் நீங்கள் எம்மை உமது முதுகில் அல்லவா சுமந்தீர்கள் ஆயிரம் பேர் இங்குண்டு அன்பு கொள்ள ஆனாலும் மனம் உங்கள் அன்பைக்காவே ஏங்கின்றது ஆயிரம் புத்திமதிகள் அன்புடனே கூறும் நீங்கள் ஆதரவாய் அரவணைப்பீர்களே நாம் தோற்கும் போதும் எத்தனை அடிகள் வாங்கினாலும் குட்டி நாய்கள் போல் உங்கள் காலடியையே சுற்றி சுற்றியே வருவோம் காலமெல்லாம் கண்ணுக்குள் இமையாக எம்மை காத்தீர் நீர் கண் மூடு…
-
- 30 replies
- 16.8k views
-
-
செத்துப் போனவர்களெல்லாம் வானத்தில் நட்சத்திரங்களாய் மாறிவிடுவார்களாம்!? அம்மம்மா எனக்குச் சொன்ன சிறுபருவக் கதைகள் இன்னும் ஞாபகம் இருக்கு! என் பேரப்பிள்ளைகளுக்கு சொல்வதற்கு நிறையக் கதையிருக்கு...! அம்மம்மா சொன்னகதை நிறைய இருக்கு...! பாட்டி வடை காகம் நரியிலிருந்து உச்சிக் கொப்பு முனியிருக்கும் புளியமரத்தடி தாண்டி... வைரவருக்கு நாய் வாய்ச்ச கதையோடு, தமிழருக்கு கரிகாலன் கிடைச்ச கதையெல்லாம் அம்மம்மா சொல்லித் தந்தா! அம்மம்மாவை நினைத்துக்கொண்டே இருண்ட வானத்தை அண்ணாந்து பார்க்கின்றேன்... புதிதாய் ஒரு நட்சத்திரம் எனைப்பார்த்துச் சிரிப்பதுபோல் மின்னுகிறது! என் பேரப்பிள்ளைகளின் வானத்தில் இன்னும் பல நட்சத்திரங்கள் புதிதாய்ச் சிரிக்கும்! வானத்தைப…
-
- 1 reply
- 750 views
-
-
அம்மம்மம்மா! மண்ணில் இருந்து விண்ணுக்கு நீ எதையும் எடுத்துச் செல்லவில்லை என்னுள் சில விதைகளை விதைத்துச் சென்றுவிட்டாய்! இதோ உன் நினைவு மலரில் நம் உறவுச் செடி வேர் ஊன்றுகிறது மெது மெதுவாக! மறக்க முடியவில்லை! மின்னலாய் தோன்றி மறைந்த நம் 24 வருட உறவை! நடந்தவையெல்லாம் கனவாக இருக்கக் கூடாதா! கிள்ளிப்பார்த்தேன்.... வலிக்கிறது அம்மம்மா! அம்மம்மா என்னும் ஆடையை உனக்குடுத்தி பேத்தி என்னும் சட்டையை எனக்குடுத்தி காலன் தைத்த உறவில் நாம் வாழ்ந்த வாழ்க்கை என்ன! அம்மம்மா உன் அன்பை ஆழ்ந்து அனுபவித்த முதல் பாக்கியசாலி நான்! வெளிமனம் அறியாது உன் அருமைகளை! உள்மனம் மறவாது நீ அருளிய வரங்களை! உன் குழந்தைகள…
-
- 27 replies
- 4.2k views
-
-
அம்மா இருந்த உணவை பகிர்ந்து எம் வயிறு நிரப்பி நீரை மட்டும் நீ குடித்து சிரித்தபடி எமை வளர்த்தாய் வளர்ந்தால் உன்னை பார்ப்பார் என்றோ படித்து பெரியவர் ஆவார் என்றோ நீ கனவு கண்டிருப்பாய் எதுவும் நடக்கவில்லை யாருக்கும் உதவும் உன்மனம் பிள்ளைகளோடு பிறந்ததால் பிள்ளைகள் உன்னோடு இல்லை ஒருபோதும் நீ நினைத்திருக்கமாட்டாய் உன் இறுதிசடங்கில் கூட உன் பிள்ளைகள் வரமாட்டார் என்று அம்மா நீ விரும்புவாயோ இல்லையோ அடுத்த பிறப்பிலும் நீதான் எமக்கு அம்மாவாகவேண்டும்
-
- 4 replies
- 800 views
-