கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5129 topics in this forum
-
என் கல்லறைச் சினேகிதியே...... கவிதை....... என் கல்லறை சினேகிதியே உன்னை காணவென்று வந்தேன் உனை காக்க வரவில்லை....! நீ சொல்லிவிட்டுச் சென்ற என் கடமைகள் ஏராளம் அதிலும் சில நிமிடங்கள் உனக்காய் தருகிறேன்... அதுவே ஏராளம்....! பல வருங்களாய் நம் தேசத்துக்காய் போரிட உன் தூக்கம் இழந்தாய்.... உன் தாமரை விழியிரண்டும் செண்பக விழியானாய்.... உன் பஞ்சுப் பாதங்களால் பாறையிலும் நடந்தாய்.... எதிரியை எதிர்த்து மண் காக்கும் சமரில் விதையாக விழுந்து என் விழியையும் திறந்தாய்..... கல்லூரிக் காலத்தில் நீ என் கண்கவரும் காதலி நானோ உன்னைத் தேடுவேன் ; நீயோ விடுதலையைத் தேடிச்சென்றாய்... மூடிய சிறையில் உலவும் சுத…
-
- 9 replies
- 1.7k views
- 1 follower
-
-
சேய்களைக் காத்த தாய். வீரமங்கை செங்கொடி |சீமான் | தமிழ் தேசியம்
-
- 0 replies
- 599 views
-
-
நீ.. எனக்கு ஒரு ஏஞ்சல் நான்.. உனக்கு ஒரு வலன்ரைன் கிவ்ட் சுத்திய கஞ்சல். ஓசில வந்ததென்று கிவ்டை கவ்விக்கிட்ட நீ கஞ்சலை.. தூசென.. தூக்கி வீச முன் கண் திறந்து பார்.. அங்கு.. கசங்கிக் கிடப்பது நானும் என் அன்பும்..!
-
- 34 replies
- 2.2k views
-
-
பாரே உந்தன் இதயம் உள்ள பக்கம் கையை வைத்துப் பார் வீட்டை விதியை எண்ணித் தினமும் விழிகள் கலங்கும் எம்மைப் பார் தனியாய் வாழ்ந்த தமிழரைச் சிங்களத் தலையினில் கட்டியே விட்டவர் நீர் உரிமை இழந்த இனமாய் நாங்கள் உலகம் முழுதும் உழல்வதைப் பார் மழையில் பனியில் மாக்களைப் போல மருளும் தமிழர் நிலையைப் பார் மண்ணைப் பிடிக்கும் மனிதப் பேயாம் மஹிந்த செயலை அடக்கப் பார் ஆண்டாய் ஆண்டாய் வாழ்ந்த மண்ணை அராஜகர் பறித்த கொடுமையைப் பார் அகதிகளாய்த் தினம் இருப்பிடம் தேடி அலைபவர் துயரைக் களையப் பார் காமுகர் வெறியால் ஆவியை இழந்து கிணற்றில் கிடக்கும் பெண்ணைப் பார் கன்னியர் தங்கள் சுதந்திரம் தேடிக் கருவியை எடுத்த காரணம் பார் பால்மணம் மாறாப் பாலகன் கூடப…
-
- 4 replies
- 1.4k views
-
-
மகிந்தவுக்கு ஒரு மடல் மகிந்தா கிளிநொச்சி இன்று உன் வசம் அதனால் நீ அடைந்திருக்கிறாய் பரவசம் நீ கொண்டாடிக் கொண்டிருக்கிறாய் பட்டாசு வெடித்து அப்பாவித் தமிழர்கள் கதறி அழுகிறார்கள் கண்ணீர் வடித்து சற்றே சிந்தித்துப் பார் ஆறேழு நாடுகளின் உதவி கொண்டு தமிழ்த் துரோகக் கும்பல்களையும் துணைக்குக் கொண்டு மனித உரிமை விதிகளை தட்டிக் கழித்து பத்திரிகைச் சுதந்திரத்தையும் முற்றாக மறுத்து மருத்துவ மனை, அகதி முகாம்களையும் தாக்கி அழித்து அப்பாவித் தமிழர்களையும் கொன்று குவித்து நீ அடைந்திருப்பதெல்லாம் ஒரு வெற்றியா நீ வெட்கமின்றிப் பிதற்றுகிறாய் இதைப் பற்றியா நீ இன்று போட்டிருகிறாய் போர்க் கோலம் அதனால் தமிழர் வீடுகளில் மரண ஓலம் …
-
- 4 replies
- 1.6k views
-
-
பசியாறல் அரிசி நன்றாக பூத்திருந்தது முன் விரிக்கப்பட்ட இலையில் பக்கத்தில் துணையாக காய்கறிகள் கரண்டியின் அளவைக் காட்டிச் சிரித்தது அரைத்தும் நிறம் மாறா பருப்புகள் நிறைந்த பிளாஷ்டிக்குள்ளிருந்து நீர் விளாவி உண்ணச் செல்ல மணம் ஈர்த்தது மதுவாகினி மழையாய் நைய் பொழிந்தாள் பசியடங்குதல் பரிமாறப்படும் பதார்த்தங்களால் மட்டுமல்ல… ந . பெரியசாமி பண்புடன் இணயதிற்காக http://new.panbudan.com/archives/11
-
- 0 replies
- 567 views
-
-
கல்லறைத் தெரு என் தெருவின் பெயர் மரித்தவர் நடுவே நான் வசிக்கிறேன்... சோகமும் கண்ணீரும் என் கொடி இலச்சினைகள் இரவில் மட்டுமே என் உரையாடல்கள் அதுவும் அவர்களுடன் மட்டுமே ஒவ்வொரு நாளும் இறக்கிறேன் மறுநாள் உயிர்த்தெழுவதும்கூட அன்றிரவு மரிப்பதற்கே பாழ்நிலத்தில் விருப்பமுள்ளவர்கள் வாழட்டும் நான் அப்பால் ஏகுகிறேன் என்னுடன் உரையாடுபவர்களுடன் எருக்கம்பூக்களின் வாசம் மனத்துக்கு இதமாய் மரமல்லியை விடவும் இருளும் வெற்றிடமும் சூழ்ந்திருக்கும் இவ்விடத்திற்கு நாளை நீங்கள் வருவீர்கள். * தி. பரமேசுவரி
-
- 3 replies
- 860 views
-
-
காதலைப்பிழிந்து பிழிந்து கவிதை வடிப்போம்..! மென்மனசுக்காரர் நாமெனப் பீற்றித் திரிவோம்..! எம்மைக் கடிக்கும் எறும்பையும் தடவிக்கொடுக்கும் வள்ளலார் ஆவோம்! மிருகவதைக்கு எதிரானவர் என்று கோஷமிடுவோம்..! ஏட்டில் எல்லாமே எழுதி வைப்போம்! சொல்லில் வாள் வீச்சு நடத்துவதே நம் செயலாக்கி மகிழ்வோம்! துடித்து அழும் என் இனம்.. உயிர் வதையில் வலி கொள்ளும்.. என் உதரம்.. முள்வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ள எம் உறவுகள்.. ம்ஹீம்.. அவர் விழிநீர் துடைக்க கூட விரல் கொடுக்கமாடோம்.. ஏனெனில் நாம் மனிதாபிமானிகள்..! - அஞ்சனா மூலம்: கரும்பு வலைப்பூ
-
- 7 replies
- 1k views
-
-
தேனீர் கவிதைகள்: தொலைந்து போன நாட்கள் ஓவியம்: வெங்கி எப்படி இழந்தோம் என்பது தெரியாமலேயே தொலைந்து போய்விட்டன அந்த இனிய நாட்கள். கணக்கன் தோட்டத்து உப்புநீரில் குளித்தால் மேனி கருக்குமென்ற அம்மாவின் அதட்டலுக்கு அஞ்சி வியாபாரி தோட்டத்து நன்னீர் கிணறு அதிர குதித்தாடிய ஈர நாட்கள்... ஓடைநீர் ஊற்றில் சிக்கிய உறுமீனுக்காய்த் துள்ளி விலாங்கு மீன் வேட்டைக்காரனாய்ப் பீற்றிக்கொண்ட நாட்கள்... கவட்டைக் கொம்பொடிய நுங்கு மட்டை வண்டியு…
-
- 0 replies
- 561 views
-
-
கும்பாபிசேக மேளச்சத்தத்திலும் அமைதியாய் இருக்கும் சாமி போல அடக்கம் உனக்கு எப்படி நாதஸ்வர இசைபோல வாசித்தாய் உன் காதலை * அழும் குழந்தையைக்கூட அழகாய் சிரிக்கவைத்து புகைப்படம் எடுக்க தெரிந்த கலைஞன் நான் எப்படி உன் அழகான புன்னகை மட்டும் புரியாமல் போனது எனக்கு * பொறுக்கவே முடியவில்லை என் மறதிகளை நீ கொட்டித்தீர்த்த ஞாபகங்கள் அவ்வளவும் அளவில்ல பொக்கிசங்கள் * பிழையின்றி தமிழ் எழுத தெரியாத என்னை கவிஞனாக்கவே வந்து தொலைத்திருக்கிறது காதல் * வெக்கப்படுவதற்காகவே சேலை கட்டும் பெண்கள் மத்தியில் வெக்கத்தையே ஆடையாய் கட்டியிப்பவள் நீ -யாழ்_அகத்தியன்
-
- 1 reply
- 1.7k views
-
-
நாய்கள் கடி படுது தமிழுக்கு...நல்ல காலம் பிறக்குது.....!!! கூட்டணிகள் போட்டு வைச்சு கூட்டினைஞ்சாங்க... இப்போ குத்து வெட்டு என்றதுமோ தாம் பிரிஞ்சாங்க...??? ஆதி அந்த காலம் எண்ணா அவங்க நினைச்சாங்க...??? அதை எண்ணி புட்டா புலியழிக்க இவங்க முனைச்சாங்க...?? சங்க காலம் தொட்டிவிங்க சதிகள் செய்தாங்க... எம் தமிழை அழித்தவங்க பழிகள் ஏற்றாங்க... அவங்கள் இட்ட சாபமதால் இன்றழிந்தாங்க... தேடி ஓடி எம் தமிழை தேடி அழித்தாங்க... தெரு நாய்கள் போல தெருவில் சுட்டெறிந்தாங்க.... புலிகள் என்று முத்திரைகள் வேறு பதித்தாங்க..... கொலைகள் எண்ணு கொள்ளை எண்ணு எத்தனை தாங்க.... …
-
- 7 replies
- 1.9k views
-
-
முற்றும் துறந்த முனிவர் முற்றும் துறந்த முனிவர் அவர் - வேதம் கற்றுணர்ந்த காரணத்தால் மானைப் போன்ற துணையை விட்டு கானைத் தேடிப் புறப்பட்டார் - திரு மாலைத் தேடித் தவமியற்ற விலங்கினம் வாழும் ஒரு காடு - அங்கு அமைத்தார் தான் வாழ ஒரு வீடு ஏந்தினார் கையில் கமண்டலத்தை மறந்தார் ஊன் முதல் உறக்கத்தை - புந்தியில் வைத்தர் ஐயன் நாமத்தை மறுநாள் காலை விடியும்வேளை புறப்பட்டார் அருவியை நோக்கி சந்தியாவந்தனம் செய்வதற்கு - அங்கு கண்டார் ஓர் இளங் குருவியை ஆடை நெகிழக் குளிப்பதை விடுவாரா! முற்றும் துறந்த மாமுனிவர் விரகம் அவரைத் தலையெடுக்க அடையத் துடித்தார் அந்தப் பெண்மலரை நெருங்கினார் அவளைத் தாகத்துடன் காமம் கண்களில் கொப்பளிக்க விலகினா…
-
- 5 replies
- 7.3k views
-
-
அகதிப்பொன்னியும்..தனித்துப்போன அவளின் கனவுகளும்.... தனிச்சு ஒருத்தியாய்க் காடுவெட்டிக் கல்லுடைத்து வேலிபோட்டுக் கூடுகட்டி கோழிவளர்த்து ஆடுவளர்த்து சிறுகச்சிறுகச் சேமித்துக் கட்டிய அந்தவீட்டில்த்தான் ஊர்விட்டுப்போயும் போகாமல் வேர்விட்டுக் கிளைபரப்பி எங்கும் வியாபித்திருக்கின்றன போரிற்கு இடம்பெயர்ந்த பொன்னியின் கனவுகள்.... புழுதிவாசம் காற்றிலெழப் புழுங்கிக்கிடக்கும் முற்றத்தில்தான் அகதியாக்கப்பட்ட பொன்னியின் வியர்வைகள் ஆவியாகின.. புழுங்கலும் ஒடியலுமாய்க்காய்ந்த புழுதி முற்றத்தில்தான் சுழிப்பும் முனுமுனுப்புமெனக் கலைக்கும் பொன்னிக்கு அலைத்துத் தண்ணிகாட்டிப் புன்னகையும் சிரிப்புமெனப் புறாக்கள் மேய்ந்துசெல்லும்... ஊற்ற…
-
- 0 replies
- 920 views
-
-
நாட்டுப் புதினம் - 1 நாலாண்டு(5) சமாதானம் நாவறண்டு நாசமாய் கிடக்குது- அரச அதிபர் அறைகூவல் விடுகிறார்- இது போர் அல்ல மக்காள் போர் அல்ல போர் என்று சொல்லாமலே தமிழ் மக்களை கொல்லுவம் சமாதானக் கதவுகளை இன்னும் திறந்து வைத்திருக்கிறதா சொல்லுவம் தமிழ் மக்களைக் கொல்வதால் எங்கட இலங்கையை பாதுகாக்கலாம் சிங்கள ராணுவத்தைக் இழப்பதால் அவங்கட புலிகளை வெல்லலாம் செஞ்சோலையில போய் குண்டுகளை கொட்டுவம் உலகத்துக் அங்க புலிகள் முகாம் எண்டு சொல்லுவம் திட்டம் தீட்டி படுகொலை செய்யவம் கண்ணை மூடிக்கொண்டு-அதை நியாயப் படுத்த நீங்க இருக்கீங்க தானே ரம்புக்வெல கண்காணிப்பு குழுவுக்கு மெல்ல காதில பூவை சுத்திட்டு ஐக்கிய நாடுகள் சபையில சொல்லுவம் …
-
- 4 replies
- 1.2k views
-
-
வென்றால் சிரி.............. வெள்ளம் கால் நனைத்தால்..... சிரி............ முழங்கால்மேலது உயர்ந்தால்........... முற்றும்போனதென்று புலம்பு...! ஒண்டும் காணம் ... ஒண்டும்காணமென்றே அழு.,... ஏதும் நடந்தால்...... இடுப்பை குலுக்கி குலுக்கி........ என்னமோ பண்ணு...... நான் என்ன சொல்ல.......... சிலவிடத்தில்........ சத்தம் போட்டு அழுவதை விட... மெளனமாய் சிரிப்பது மேலாம்!
-
- 1 reply
- 831 views
-
-
"லிபரேசன் ஒப்பரேசன்"..... வடமராட்சி மக்களால் எனதூர் நிறைந்தது இளவட்டம் நிறையவே வந்தது பு+சாவைத் தப்பிய பெருமூச்சு எங்கும். எங்கள் வளவிற்கும் வந்தார்கள். காய்த்துக் குலுங்கிய மரமுந்திரிகை, அது முற்றத்தில் முன்னிற்கு நின்றது. கனியாதனவும் உண்டார்கள்! ஐயோ தம்பி பழமே கடினம் காயாய் வேணாம் சமைக்கிறோம் பொறுங்கள் முடியாது போனால் கொல்லையில் மாமரம்..… "முந்திரி தானே உடனே எட்டுது" பசியில் தோய்ந்த பதிலே கேட்டோம். ரூபவாஹினிச் செய்தியின் நேரம் வீட்டிற்குள் குறைந்தது நூறு பேர் இருக்கும் பு+சாக்குப் போகும் கப்பலைப் பார்த்து அடையாள அணிவகுப்பு அன்றங்கு நடந்தது! புங்கடிக் குளமும், ஈட்டி எறிஞ்சானும் கொட்டிகை வெளியும், கட்டுவரம்பும் காட்டினேன், …
-
- 6 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தமிழ்க் கவிதைகள் ஒரு பார்வை பூங்குழலி வீரன் ஈழத்தில் தமிழ்க் கவிதை வளர்ச்சிபற்றிச் சிந்திக்கும்போது அடிப்படையில், அவை நான்காகப் பகுக்கப்பட்டு விவாதிக்கப்படுவது காணக்கூடியதாக இருக்கிறது: 1. மரபு வழிப்பட்ட நிலை 2. சுதந்திரத்துக்கு முந்திய சமூக மறுமலர்ச்சிப் போக்கு 3. சுதந்திரத்திற்குப் பிந்திய நவீன கவிதை வளர்ச்சி 4. அண்மைக்காலப் போக்கு மரபு வழிப்பட்ட நிலை ஆறுமுகநாவலரால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சைவசமய ஆசாரம் பேணும் இறுக்கமான செய்யுள், பிரபந்த நடையினை ஈழத்தில் கவிதை எழுதிய ஆரம்ப எழுத்தாளர்களிடம் காண முடிகின்றது. அ.குமாரசுவாமி புலவர், சுவாமி.விபுலாநந்தர், வித்துவ சிரோன்மணி. சி.கணேசய்யர், அருள்வாக்கு அப்துல் காதிர் புலவர், மாதகல் மயில்வா…
-
- 3 replies
- 4.8k views
-
-
தள்ளாத வயதில் ஊண்டும் தடியை - முதுமை இல்லாத வயதில் ஊண்டியவன். தள்ளாடி சாகத் துடிப்போர் உலகில் - களத்தில் மல்லாடி சாகத் துணிந்தவன். அமைதி விளக்கு அணைந்த உலகில் - அமைதி காண நடந்த வீரன். குண்டு விழாத தேசம் காண - விமான குண்டேந்தி விழுந்த வேங்கை. நால்வர் வேண்டும் தூக்கி செல்ல - இவனோ ஐவரோடு சேர்ந்து நடந்தவன். காந்திக்குப் பின் கைத்தடி ஏந்தி - அமைதிக்கு பாடுபட்ட அழிவில்லா வேங்கை. பேசத்தெரியா சிங்கள அரசுடன் பேசுவதில் - இனி பயனில்லை என்று கண்டவன். பேச்சுக்கள் முடிந்துவிட்ட செய்தியை உலகிற்கு - தன் பேச்சற்ற முடிவால் சொன்னவன். அவன் பெயரைச் சொன்னால் எதிரியின் - வாய்க்குள்ளும் தமிழ் நுழைந்து போராடும். …
-
- 0 replies
- 1.9k views
-
-
அவர்கள் சூரியனை தேடிநடக்கவில்லை சூரியனாக மாறினார்கள் இருள் மறைய தொடங்கியது என்னும் அவர்கள் மாறுகின்றார்கள் புளியமர இடுக்கினூடே நிலவு மேறகில் இருந்து இறுமாப்புடன் வேகமாக எழும்பியது நிலவுக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கி நடந்தார்கள் நிலவும் சில கிளிகளும் கெக்கட்டம் விட்டு சிரித்தது கேட்டது விடியலை நோக்கி நடந்தார்கள் நடுங்கிய தேகத்திலும் வன்மம் வான்வரை எட்டி நின்றது தள்ளாடி தடுமாறினார்கள் இருந்தும் பசியும் தாகமுமும் வலியும் முன்னேற சக்தி தந்தது செவிப்பறைகளில் வீறிட்ட ஓலங்கள் வழித்துணைக்கு தாலாட்டின தொடர்ந்து வந்தது நிலவு சிரித்துக்கொண்டே வந்தது ஏளனம் செய்தது எள்ளிநகையாடியது என்ன ஒரு இறுமாப்பு …
-
- 10 replies
- 1.9k views
-
-
திருச்செங்கோடு டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தமிழகத்தை உலுக்கிப்போட்டிருக்கும் நிலையில், இது குறித்து கவிஞர் பழநிபாரதி தன் வலிமையான வார்த்தைகளால் அவரது மரணத்திற்கு கவிதை எழுதியிருக்கிறார். உருக்கமான அந்த கவிதை இங்கே.... உண்மை கண்ணாடியின் முன் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது... கண்கள் ஆழ்ந்த இருளில் இரண்டு விளக்குகளைப் போல பிரகாசித்தன விலை பேச முடியாத அழகு அதன் கர்வமாக இருந்தது யாருடைய கைகளோ கண்ணாடிக்குப் பின்னிருந்து பாதரசத்தை உரிக்கத் துடித்தன முடியாத ஓர் இறுக்கத்தில் கண்ணாடி உடைத்து நொறுக்கப்பட்டது உடைந்த சில்லுகளில் உண்மையின் ஒரு முகம் பத்து நூறு ஆயிரம் லட்சமென விரியத் தொடங்கின - பழநிபாரதி
-
- 2 replies
- 703 views
-
-
காரணத்தையேனும் சொல்லிவிட்டு மௌனம் கொள் Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் Thursday, May 10, 2012 04.2000...., ஆனையிறவு வெற்றி மேடையில் சந்தித்தோம் அரியதொரு பொக்கிசத்தை அந்த நாள் தந்தது அது உனது ஆழுமையின் வெளி.... பெயருக்கு ஏற்றாற்போல் உனது எண்ணங்களும் பிரகாசமாக மேதைகளை வென்ற தமிழின் வனப்பு உனது திறனாய்.... பேச்சுக்களும் எழுத்துக்களுமே எழுச்சியாக வெற்றுப் பேச்சாளர்களால் நிறைந்த மேடையின் நிறத்தையும் குணத்தையும் மாற்றியவன் நீ..... பழமைவாதிகளாலும் பொறாமையாளர்களாலம் குற்றப்பட்ட உனது திறனை சிரித்தபடி சமாளித்துச் சிகரங்கள் தொட்டவன் நீ.... சமாதான காலக்கதவுகள் திறக்க ஊர்காணப்போவதாய் விடைபெற்று போராளியாய் ஆனவன்.... போ…
-
- 7 replies
- 1.7k views
-
-
[size=4]இது வரை குளத்தில் மட்டுமே மீன்களைப் பார்த்திருக்கிறேன் முதன் முறையாக உன் முகத்தில் கண்கள் வலை வீசுவது யார்? கரையில் இத்தனை காவலர்கள் - இமை முழு நிலவு முகத்தில் இடது வலதாய் இரு மூன்றாம் பிறைகள் - புருவம் என்ன அதிசயம் தென்றலைத் தாலாட்டும் கூந்தல் அய்யயோ... வார்த்தைகள் வரவில்லை பார்த்து விட்டேன் இதழ்களை வரைந்தது யார்? ஏய் அழகுத்தீவே சிரிக்காதே நான் உயிர் வாழவேண்டும் - உனக்காக...[/size]
-
- 3 replies
- 653 views
-
-
நிறமற்றவன் எதில்தான் இல்லை வர்ணம் இலையில் பூக்களில் மரத்தில் பூச்சிகளில் மனிதர்களில் எதில்தான் இல்லை வர்ணம் மனங்களில் சோதியில் சாதியில் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் முஸ்லீமாய் இந்துவாய் கிறித்துவனாய் சீக்கியனாய் வர்ணங்களற்று வாழவே முடியாது நம்மால் புத்தனுக்கென்று ஒரு நிறமில்லை எந்த வர்ணத்தையும் அவன் வரைந்து கொள்ளவில்லை அதனால் தான் நம்மிடமிருந்து புத்தனையே துடைத்தோம் நம் வர்ணத்துக்கு புத்தன் ஆக மாட்டான் இம்சையே நம் இயல்பின் வண்ணமாயிருக்க நம் நிறத்தை மறுத்தார் ஒருவர் அஹிம்சையின் நிறத்தினை துப்பாக்கியால் துடைத்தோம் நம் குரூரத்தின் வர்ணத்தினை அவரிலிருந்து வெளியாக்கினோம் வெண்புறாக்கள் பறக்கும் …
-
- 3 replies
- 913 views
-
-
நான் ரசித்த மற்றுமொரு கவிதையை இணைத்து விடுகிறேன். கடலும் நதியும் கடலும் நதியும் ஒருமுறை முரண்பட்டுக் கொண்டன தேடி ஓடி வரும் நதியா தாங்கி ஏற்று நிற்கும் கடலா உயர்ந்தது ? எப்போதும் நீ கேட்கும் எந்த ஆழத்திற்கும் நான் வருவேன் என்றது நதி ! எப்போதுமே சலசலத்து ஓடும் உனக்கு எனது ஆழத்திற்கு வரமுடியுமா என்றது கடல் ! உயர இருக்கும் மலை உச்சிகளிலிருந்து இறங்கி இறங்கி ஓடோடி எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் நீண்டு விரிந்து மணல் பரப்பி பச்சையாய் விரிந்து என்னை மகிழ்வோடு முத்தமிடக் காத்திருக்கும் நிலத்தை விட்டு விட்டு ஓடோடி வந்தேன் உனக்கு எனது ஆழம் புரியவில்லை அலட்சியப் படுத்தி விட்டாய் என்றது நதி சிரித்தது கடல் சி…
-
- 0 replies
- 1.6k views
-
-
நீ என் தோழியா..? இல்லை காதலியா...? கவிதை........ உன்னுடன் நட்புக்காய் உனைச் சுற்றும் பக்தனானேன்..... உன் நட்பை பெறுவதற்காய் என் நாட்கள் பல தொலைத்தேன்....! என் நீண்ட போராட்டத்தில் மெது மெதுவாய் என் நண்பியானாய் அதன் பின் என் நேரங்களில் பல மணிகளைத் தின்றாய் எனை நடு சாமத்தில் எழும்ப வைத்தாய் நடு வீதியிலும் நடக்க வைத்தாய்..... எனை தெரு நாய்கள் பார்த்து தினம் தினம் குரைக்க வைத்தாய்...... நீ என்னை நெகிழ வைத்த நண்பியாய்...! என் இதயத்தின் இடங்களெல்லாம் முழுதாக வல்வளைத்தாய்...! நாம் சந்திக்கும் பொழுதுகளில்... அந்த சந்தோச வேளைகளில்.... உன் சிரிப்புக்காய் சொல்லும் …
-
- 20 replies
- 4k views
-