கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இறக்கபோகிறேன் ... என்று தெரிந்துகொண்டு.... தீக்குச்சி எரிகிறது .... தீக்குச்சிக்கு அது இறப்பல்ல .... தீக்குச்சியின் வாழ்க்கை....!!! இறப்பு பெரிதல்ல .... எப்படி வாழ்ந்தோம் என்பதுதான் முக்கியம் ....!!! தான் மட்டும் எரிந்து .... சாம்பலாகவில்லை ... இன்னொன்றுக்கு ... வாழ்க்கையும் ...... கொடுத்துவிட்டு ....... சங்கமமாகிறது தீக்குச்சி ....!!! ^ முயன்றால் முடியாதென்றொன்றில்லை கவிப்புயல் இனியவன்
-
- 2 replies
- 931 views
-
-
முதல் கோணல் முற்றும் கோணல் பழமொழியாம்... முதல் கோணல் முன்னேறும் அறிகுறி என்பேன் நான்.. முதல் முறை உயர்தரம்.. தோற்றபோது கவலையுற்றேன் இரண்டாவது முறையில் உயர்வான பேறு கொண்ட போது உவகையுற்றேன் முதல் காதல் கண்டதும் காதல் வழமைபோல் தோற்றது வேதனை கொண்டேன் என் சகியைக் கண்டதன்பின் அத்தோல்விதான் விதிக்கெதிராக நான் செய்த சாதனை என்பேன் உலகத்தில் ஒரு விஞ்ஞானியும் முதல் முயற்சியில் வெற்றிகொண்டதாக சரித்திரம் இல்லை.. பின்பு ஏன் நீ நினைக்கிறாய் தரித்திரம் என்று.. நண்பா என்னனுபவத்தில் சொல்கிறேன் முதல் தோல்விதான் முன்னேறும் முதல் படி மறந்துவிடாதே.. ஆகவே நண்பா தோல்வியைக்கண்டு துவளாதே,முயற்சிசெய் முடியாதது எதுவும் இல்லை
-
- 9 replies
- 2.2k views
-
-
எனக்கும் அவனுக்கும் வாழ்கையென்னும் விடுதலையில்லா சிறைச்சாலைக்குள் புரிந்துகொள்ளா முரண்பாடு விரக்தியான நாட்கள் கண்ணீர் சிந்தும் கோலங்கள் முகமூடியால் மறைத்துக் கொள்ளும் முரண்பாடு போலியான உறவிற்கள் மலர்ந்து நிற்கும் சின்ன மலர்கள் சிக்கித் தவிக்கின்றது பாசமென்னும் முரண்பாட்டுக்குள் யாரோடும் சொல்ல முடியாச் சோகங்கள் எம் முரண்பாட்டால் நாளைய முதியோர் இல்லத்திற்காய் தயார்ராகின்றது
-
- 16 replies
- 4.3k views
-
-
முரண்பாடுகள்!!! இரவும் பகலும் சிகப்புச் சிங்கமாய் இறுமிய எனகுள்ளே ஏதோ சில முரண்பாடுகள் தமக்குள்ளே அடிபட்டுக்கொள்கிறது என் மனதில் அய்யரை பேசி கோயிலை திட்டி சாத்திரங்களை எரித்து..வேதாந்தம் பல பேசிய பல பேரில் நானும் ஓருவன்! வீரமகன்! சிகப்புச்சிங்கம்! திருமணம் என்கிற பந்தம் வந்ததோ வந்தது! மாமாவின் புற்றுநோய்க்கு என் மனைவி கதிர்காம கந்தனிடம் வைத்த நேர்த்திக்கு நேரம் பார்த்து போய் வந்தோம்! மாமிக்கு வயசாகி கண் மங்கலாய்த் தெரிய என் மனைவி கனடா ஐயப்பனுக்கு நேர்த்தி வைத்தாள் "ஐயப்பனே என் அம்மாவின் கண்கள் சரியாக வர என் கணவர் இந்த முறை மாலை போடுவார்" நண்டு உயிரோடு இருந்தா…
-
- 11 replies
- 1.7k views
-
-
-
முருகதாஸா…. 5 Views ஐக்கிய நாடுகள் அவையின் முன்பாக 2009 பெப்ரவரி 12ஆம் திகதி ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்தார். இவரின் நினைவு நாளையொட்டி அவருக்கான கவிதை பிரசுரமாகின்றது. முத்துச்சிரிப்புக் கொண்டவனே முருகதாஸா! வீர வித்துக்கள் வீழ்ந்தபோது உன்னை நீயே வீரத்தீ மூட்டிக்கொண்டாய்…. விடுதலை முற்றம் பற்றியெரிகையில் வீரனாய் எழுந்துநின்று உன்னையே தீயாக்கி உண்மைக்காய் ஒளி தந்தாய்! உன் முகத்திற்குள் இருந்த பரவசத்தில் உன் அகத்திற்குள் குடிகொண்டதீயை – யாருமே கண்டுகொள்ளவே இல்லை…! சினக்கக்கூடத் தெரியாத சிரித்தமுகத்தில் எப்படி இந்தச் சிறுத்தையின் சீற்றத்தை மறைத்துவைத்தாய்…? அகிம்சை வழியில…
-
- 0 replies
- 537 views
-
-
முருங்கை ஏறும் வேதாளம் முத்துப் பல்லக்கில் ஏறிடுமா? காலப் புரவி காற்றாக கண்களை விட்டு நகர்கிறது. யுத்த நிறுத்த அமுலாக்கம் பித்தம் நிறைத்து நகைக்கிறது. முருங்கை ஏறும் வேதாளம் முத்துப்பல்லக்கில் ஏறிடுமா? எத்தனை சபைகள் சென்றாலும் புத்தக ஞானம் வென்றிடுமா? நடுவர் என்பவர் நலன்விரும்பி நட்பாய் நிற்போம் தலைவணங்கி அடிமை என்பது பொருளல்ல - எம் தேசியம் வெல்லும் திறன் சொல்ல. உலக வேதங்கள் எமக்குதவா.. ஊமையாக்கி எமை வாட்டும். உரிமை எவரும் தருவதில்லை. உன்னிப்பாக எண்ணிப்பார்! மெய்யதை வருத்திப் புண்பட்டோம். மேனியில் எத்தனை காயங்கள். பொய்யதுவாகிப் போய்விடுமோ? புூமிப்பந்தே கண்திறவாய்! வேளைகள் வந்தும் வெறுமையுற்றோம். வீரம் நிறைந்தும்…
-
- 7 replies
- 1.7k views
-
-
பொங்கலுக்கு தேவையான பொருட்களெல்லாம் வாங்கிவிட்டேன்.. பொங்கலிட முற்றமதை எங்கே போய் வாங்குவேன் .. சிங்களனின் பாசறையாம் என் வீடு அவனாடும் மைதானம் என் முற்றம் . எங்க போய் பொங்கலிட ??? ««««««««««««°»»»»»»»»»»»»»» "பொங்கலிட முற்றமில்லை.. சொந்தமென யாருமில்லை .. வெந்தமனம் நொந்துதினம் வாடுகையில்.. எங்குபோய் இவர் பொங்கலிட தைத்திங்களதில் ? தை பிறந்தால் வழிபிறக்கும்.., பொய்யானால் மனம் சலிக்கும்.., இருபத்தைந்தாண்டுகள் ஆண்டுகள் நொந்தகதை யாரறிவார்? போர் ஓய்ந்து ஏழாண்டு.., பொய்மட்டும் ஒளியாண்டு... …
-
- 2 replies
- 714 views
-
-
திரும்பும் திசையெல்லாம் திருடப் பார்க்கிறார்கள். தமிழனின் தன்மானத்தை.. வறண்ட தீவாய் முல்லை மண் வந்து போகிறது கனவில்.. ஈரப்பதம் இல்லை அதிலெங்கும்.. கண்களில் கூடத்தான் தினமழுது தீர்ந்துவிட்டது என் செய்வேன் யார் யாரோ சொல்கின்றனர், தனி நாடு அமைப்போம் என்றும் தனி ஆட்சி செய்வோம் என்றும் உரிமைகள் தொலைத்து, உயிரையும் தொலைத்து, சலனமற்ற சடலங்களால், செய்யப்போகிறோமா அதை.? கேள்விக்குறியாக இருக்கும் எம்மிடம் கேள்வி கேட்க ஆயிரம் பேர் முற்றுப்புள்ளி வைக்க எவனும் இல்லை முடிந்த கதை முடிந்த கதை என்று எம்மை முடக்க தான் பார்கிறார்கள்.
-
- 4 replies
- 732 views
-
-
முற்றும் துறந்த முனிவர் முற்றும் துறந்த முனிவர் அவர் - வேதம் கற்றுணர்ந்த காரணத்தால் மானைப் போன்ற துணையை விட்டு கானைத் தேடிப் புறப்பட்டார் - திரு மாலைத் தேடித் தவமியற்ற விலங்கினம் வாழும் ஒரு காடு - அங்கு அமைத்தார் தான் வாழ ஒரு வீடு ஏந்தினார் கையில் கமண்டலத்தை மறந்தார் ஊன் முதல் உறக்கத்தை - புந்தியில் வைத்தர் ஐயன் நாமத்தை மறுநாள் காலை விடியும்வேளை புறப்பட்டார் அருவியை நோக்கி சந்தியாவந்தனம் செய்வதற்கு - அங்கு கண்டார் ஓர் இளங் குருவியை ஆடை நெகிழக் குளிப்பதை விடுவாரா! முற்றும் துறந்த மாமுனிவர் விரகம் அவரைத் தலையெடுக்க அடையத் துடித்தார் அந்தப் பெண்மலரை நெருங்கினார் அவளைத் தாகத்துடன் காமம் கண்களில் கொப்பளிக்க விலகினா…
-
- 5 replies
- 7.1k views
-
-
முல்லைப் பாட்டு - வ.ஐ.ச.ஜெயபாலன் ஆயிரம் காலங்களைக் கடந்த கடல் ஒரு முதுகவிஞன் காதலைப் பாடுவதுபோல இன்றும் புது அலைகளை எழுப்புகிறது. அந்த அலைகளின் எல்லைக்குமேலே யுகம்யுகமாய் மோர் வார்த்துக் கைசிவந்த இடைச்சிகளின் மேச்சல் நிலம். அந்தக் கானல் பொட்டலின் கந்தல் குடையான சிறு மரம் நோக்கி கத்திக் கம்போடும் செல்பேசியோடும் பெயர்கிறாள் ஒரு புல்வெளியின் இளவரசி. நூல் பாவையாய் அவள் அசைவின் ஏவலுக்கெல்லாம் ஆடித் தொடர்கிறது நாய். அந்த நான்கு கண்களின் பார்வையில் கட்டுண்டு மேய்கிற ஆட்டுக்கிடைகள் செம்புழுதி போர்த்த பற்றைகளிடை காடைகள் மிரளாமல் ஊரும். ஆயிரம் காலத்து வளமையாய் நிழல் தேடிவரும் ஆயர்குலத் தேவதைக்கு பழமும் வைத்திருக்கிறது இலந்த…
-
- 14 replies
- 3.1k views
-
-
வெள்ளி முளைக்கும் ஒரு மாலை நேரத்தில் முள்ளிவாய்க்காலின் பரந்த மணல் வெளிகளில் புதிதாகத் தோன்றியிருந்த குழிகளைக் கண்டு பூமித் தாயின் முகம் கூடத் தனது முகம் போலப் பார்க்குமிடமெல்லாம் எரி வெள்ளி விழுந்து வெடித்த எரிமலைகளின் வாய்களைப் போல, வட்டமாகத் தனது முகத்தைத் தானே கண்ணாடியில் பார்ப்பது போல, எண்ணிய படியே தன் பாதையில் நகர்ந்தது நிலவு! இரண்டு வருடங்களாக, இந்தப் புதை குழிகளுக்குள் மறைந்து கிடக்கும் கதைகளும், மனிதக் கூடுகளும் துரத்தித் துரத்தி வேட்டையாடப் பட்ட அவர்களின் சரித்திரமும், செத்துப் போன நினைவுகளும் புதையுண்டு கிடக்கும் புனிதக் கனவுகளும், ஒரு நாள் விதையில் இருந்து துளிர் விடும் மரங்களாய், வளரும் என்ற கனவி…
-
- 9 replies
- 2k views
- 1 follower
-
-
அன்று எங்களை 1983 கலவரமும் தமிழர் போராட்டங்களும் உலுப்பியதுபோல கோபம் கொள்ள வைத்ததுபோல இன்று கலைஞர்களை, குறிப்பாகச் சமகாலக் கவிஞர்களை முளிவாய்க்கால் உறங்கவிடாமல் கோபத்தில் கொதிக்கவும் சபிக்கவும் வைக்கிறது. எமது வன்னி மண்ணின் இரட்டையர்களான கருணாகரனும் தீபச்செல்வனும் எழுதிய இரண்டு கவிதைகளை அதன் பொருத்தப்பாடு கருதிப் பதிவு செய்கிறேன். முள்ளிவாய்க்கால் 2017 - கருணாகரன் ( Sivarasa Karunagaran ) -------------------------------------------- இரத்தமும் உயிரும் உறைந்து அனலடிக்கும் இந்த மணல் வெளியில் நேற்றும் பட்டி பூத்திருந்தது இன்றும் பூத்திருக்கிறது நாளையும் பூக்கும் நேற்றைய பட்டிப் பூக்கள் தனித்திருந்தன. இன்று வெள்ளை உடைகளில் விருந்தாளிக…
-
- 2 replies
- 1.9k views
-
-
இன்றோடு.....! இன்னுமொரு ஆண்டு . எமைக் கடந்து செல்கின்றது!, முள்ளி வாய்க்காலின், வெள்ளைக் கடற்கரையில், துளை போடும் சிறு நண்டுகள், இடை நடுவில்....., துளையிடுதலை நிறுத்துகின்றன! ஏதோ...! அவற்றின் கால்களுக்குத், தடை போடுகின்றன! வேறென்ன...? இடை நடுவில் எமைப் பிரிந்த, எங்கள் சொந்தங்களின், எலும்புக்கூடுகளாகத் தான் இருக்கும்! உழுது விதைக்கப் பட்ட, பாளையங்கோட்டையின் நினைவில், மனம் புதையுண்டு போகின்றது! அன்றைய..., பாஞ்சாலங் குறிச்சியின், குறு நிலத்து மன்னர்கள், இன்றைய ராஜதந்திரிகளாய், எமக்கென ஒரு தீர்வு தேடுகின்றார்கள்! பதின்மூன்று..பதினாலு., பத்தொன்பது என்று, தீர்வுத் திட்டங்களின், வரிசை நீள்கின்றது! எல்லோரும்....! இணைந்து வாழும் …
-
- 12 replies
- 2.9k views
-
-
எல்லாமே ... கடந்துபோகும் .... நீ மட்டும் ... விதிவிலக்கா ....? ஆயிரம் காலத்து .... பயிர் -திருமணம் .... காதலின் ஆயிரம் .... நினைவுகளை .... கொன்று நிறைவேறும் ...!!! வாழ்க்கை ஒரு .... நாடக மேடை .... காதலர் .... விட்டில் பூச்சிகள் ....!!! ^ முள்ளில் மலர்ந்த பூக்கள் கஸல் கவிதை K இ K A 00 A
-
- 70 replies
- 11k views
-
-
முள்ளிவாய் வீரத்தின் உள்ளக் குமுறல்கள் உண்ண உணவின்றி உறங்க இடமின்றி உடுக்க உடையின்றி ஊனுக்கு மருந்தின்றி உள்ளம் ஒன்றே உறுதியென்று உயிரை தம் உடலுள் புதைத்து வாழ்ந்தால் மானத்துடன் வாழ்ந்திடுவோம் அஃதின்றேல் அழிந்திடுவோம் அரக்கன் சிங்களவன் உலகத்துணைகொண்டு நெருங்கி வந்து தடைகொண்ட ஆயுதத்தால் போர்விதி மீறி அழித்தபோது மௌனித்த இவ்வுலகில் வாழ்வென்னும் வளம் ஒன்று தேவைதானா? ஈழமது எங்கள் தேசம் அதில் சுதந்திரமா வாழ்வது தான் எங்கள் தாகம் இன்றேல் நீதியற்ற உலகத்திலே இதுவே நீதியற்ற விதியென்றால் எம்முயிரை மாய்ப்பது எங்கள் திண்ணம் முள்ளிவாய்தனில் எழு அழுவோசை காப்பாற்று காப்பாற்று எனும் அபயக்குரலெல்லாம் வானெழுந்து உலகமெல்லாம் ஒலித்தபோது …
-
- 1 reply
- 1.3k views
-
-
தோற்றுப் போனவர்களின் பாடல் எல்லா திசைகளில் இருந்தும் எழுந்து அறைகிறது வெற்றி பெற்றவர்களின் பாடல். பாடலின் உச்சம் எச்சிலாய் எங்கள் முகத்தில் உமிழ் படுகிறபோதும் அவர்கள் அஞ்சவே செய்வார்கள். ஏனெனா? அவர்களிடம் தர்மத்தின் கவசம் இல்லையே.. எரிந்த மேச்சல் நிலத்தின் சாம்பரில் துளிர்க்கும் புற்களின் பாடலைப்போல தோற்றுப் போன எங்களுக்கும் பாடல்கள் உள்ளன. உரு மறைந்த போராளிகள் போன்ற எங்கள் பாடல்களை வென்றவர்கள் ஒப்பாரி என்கிறார்களாம். காவிய பிரதிக்கிணைகள் பல புலம்பலில் இருந்தே ஆரம்பிக்கிறது. அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் செல்வத்தைத் தேய்க்கும் படை என்று சொல்லப் பட்டுள்ளதே தர்மத்தின் தோல்விகளில் இருந்து ஆரம்பிக்கிற மாகாவியங்களில் முன்னமே இதுபோல் பாடல்கள் உள்ளன. காலம்தோறும்…
-
- 1 reply
- 1.6k views
-
-
ஒரு உறவை இழந்தாலே ஆண்டாண்டு தவிக்கும் எம் இனத்தில் கொத்துக்கொத்தாய் ஆயிரமாயிரமாய் கொடுத்துக்கொண்டிருந்ததை கேட்டு பார்த்து அழுது புரண்டு காப்பாற்றும்படி மன்றாடி தோற்று இன்றும் எழும்பமுடியாமல் நித்திரை தொலைத்து நினைவுகளை மட்டுமே நெஞ்சில் சுமந்து நடைப்பிணங்களாக வாழ்கின்ற தமிழினம் தொலைத்தவை கொஞ்சமா? காவலுக்கு நின்ற தம்பிகளை தங்கைகளை பறி கொடுத்து தலைமை தாங்கிய தளபதிகளை இழந்து காப்பாற்றவேண்டிய தலைமையை தொலைத்து இந்த நூற்றாண்டின் இணையற்ற வீரர்களின்றி தலை குனிந்து நிற்கும் எம் இனம் மீண்ட…
-
- 1 reply
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்காலில் புதைந்த முகங்கள்.... கவிதை - இளங்கவி பாத்தி கட்டி நீர் பாச்சிய வயல்களில் இரத்த ஆறு உடைப்பெடுத்து ஓடிய இறுதி நாட்கள்.... வருடங்கள் இரண்டின் முன்தான் எங்கள் வலிகள் உச்சங்கண்ட நாட்கள்..... அழுத குழந்தையின் ஏக்கம் தீரமுன் அதன் மூச்சே நின்றுபோன கொடூர நாட்கள்..... எங்கள் மரண ஓலங்கள் மண்ணுக்குள்ளேயே புதைந்துபோன நாட்கள்... எங்கள் வயிற்றுப் பசிக்கு மரணத்தைப பரிசளித்த நாட்கள்..... எங்கும் கொலைகளின் உச்சம்.... கூக்குரல்களின் உச்சம்.... காம வேட்டையின் உச்சம்.... கொண்டொளித்த பிணங்களும் உச்சம்..... ஆம்...மிஞ்சிப்போன எம் உயிரின் மரணத்தின் விளிம்பில் அவனின் இரும்புக் கையின் கொட…
-
- 6 replies
- 1.5k views
- 1 follower
-
-
நல்ல பாடம்! குருவி நானும் ஆலமர உச்சியில் ஒரு கூடுகட்டி நான்கு பிள்ளைகள் பெற்றிட அயலிருந்த காக்கையும் உயர பறக்கும் பருந்தும் வல்லூறும் எதிரிகளாகின! அன்றொருநாள் விசை கொடுகாற்றாய் புயலடித்திட கலைந்தது என் மனையொடு குடும்பமே! கலங்கினேன் வருந்தினேன் கவலையில் பிறந்தது உறதி! மீண்டும் கட்டினேன் ஒரு கூடு வலுவான கிளைதனிலே! பல சந்ததி கண்டு வாழ்கிறேன் சுதந்திரமாக! ஈழத்தமிழா நீ குருவியல்ல! மறத்தமிழன் வீணர்கள் காட்டுவர் வார்த்தையாலம்-அதில் மயங்கிடாது முயற்சி என் வாழ்க்கையை பாடமாய்க் கொண்டு! ஒரு நாள் உனது வெற்றித் திருநாளாகும்! யாழில் 2003 இல் பதியப்பட்டுள்ளது. http://www.yarl.com/kalam/viewtopic.php?f=6&t=1033 [காக்கை - இந்தியா பருந்து - …
-
- 1 reply
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் ஒரு நீண்ட தவத்தை உடைத்தெறிந்து நெடிய பயணத்தின் முடிவுரை எழுதிய தீயினால் வேகாமல் பொய்யினால் வெந்த மண் ஆயிரம் ஆயிரம் கனவுகளை கருக்கியெறிந்த மண் அன்னிய சக்திகளின் பசிக்கு இரையாகி பட்டினியில் வெந்த மண் வேரோடு விழுதுகளையே வீசியெறிந்த மண் வரலாற்றில் தன்மீது கறை படித்த மண் எம் கனவெல்லாம் தன்னுள்ளே கரைத்தெறிநத மண்
-
- 1 reply
- 982 views
-
-
முள்ளிவாய்க்கால் பாலைமரக் கிளிகளே! பாசமுடன் பாடும் பறவைகளே ! சோலையதை விட்டெங்கே சென்றீர்கள்? பாவியரின் 'பொமபரினால்' . பாலைமரம்..வீரைமரம் எல்லாம் வேரோடு சாய்ந்து விழுந்தன..! தாவியதில் ஏறும் மந்தியினம் கூவிவந்த குண்டுகளால் அழிந்தன..! பாட மறந்தன குயில்கள். ஆட மறந்தன மயில்கள் ஓட மறந்தன மான்கள் காடுதரும் சுகத்தில் களித்திருந்த காடைகளும்..சேவல்களும் பாடையிலே ஏறி பறந்தன! தேன்தேடும் வண்டினம் வான்கூவி வந்த 'பொஸ் பரசால்' தாம் கூடும் கானகத்து மரக்கிளையில் எரிந்தன ! கூழைக் கடாக்கள் .... கட்டிய கூடுகளில்... சிறகு முளைக்காத சிறுகுஞ்சுகள் பாவியர்.. கொட்டிய …
-
- 1 reply
- 584 views
-
-
அறுபது மாதங்களாய் ஆறாத் துயர் கடந்து ஆற்றமுடியா வடுக்கள் சுமந்து ஆற்றாமையுடன் காத்திருக்கின்றனர் அடிமைகள் ஆக்கப்பட்ட எம்மக்கள் கருகிய பூமியில் கால் பதிக்க இடமின்றி கசங்கக் கிடக்கிறது கந்தகம் சுமந்த பூமி கொடும் கனல் குருதி தோய்ந்து கோரங்கள் சுமந்த நந்திக்கடல் கேட்பார் ஏதுமற்றுக் கேவலுடன் கிடக்கிறது வீறுநடை போட்ட வெற்றிகள் கொய்த தேசம் ஏறுபோல் எழுந்து எதிகள் வீந்த தேசம் எதிரி கைபட்டு எள்ளி நகைபுரியும் எத்தர்களின் கைகளில் ஏக்கம் சுமந்து ஏதுமற்று ஏற்றமிழந்து கிடக்கிறது வந்தவரை வரவேற்று வயிறார வழிசெய்து வள்ளல்களாய் வாழ்ந்தவர்கள் வாய்க்கரிசி கூட இன்றி வக்கற்று கருணையற்ற கயவனிடம் கையேந்தும் கடை நிலையில் கண்ணிழந்து நிற்கின்றார் மானத் தமிழரென மார்தட்டி வாழ்ந்த…
-
- 3 replies
- 656 views
-
-
முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு: ஆற்ற ஒண்ணா அஞர் சேரன் சில வாரங்களுக்கு முன்பு தொறொன்ரோ நகரின் மத்தியில், குளிரில் மெல்ல நடுங்கியவாறு, குளிராடையுமின்றிக் கோப்பிக் கடையொன்றின் வாசலருகே கோப்பியொன்று வாங்கித் தருமாறு போவோர் வருவோர் எல்லோரையும் இரந்த ஒரு தமிழரைக் கண்டேன். எனது வீட்டுக்கு அருகில் ஸ்கொட் மிஷன் நூறு ஆண்டுகளாக நடத்திவரும் வீடற்றவர்களுக்கான இரவுநேரத் தங்குமிட வாயிலில் அவரை அடிக்கடி கண்டிருந்தாலும் பேச வாய்ப்புக் கிடைத்ததில்லை. (ஒருமுறை இந்த மிஷனுக்குச் சாப்பாடு வழங்க என இடியப்பம் எடுத்துச் சென்றபோது, அங்கிருந்த அம்மணி, “இங்கு வருபவர்கள் இத்தகைய அந்நியச் சாப்பாடுகள் சாப்பிட மாட்டார்கள். வேறு ஏதாவது கொண்டு வாருங்கள் என்று சொன்னது நினைவு வந்தது”) …
-
- 6 replies
- 2.6k views
-
-
முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்து கொண்டிருக்கிறது என் தாய்மொழி கவிஞர் இன்குலாப் நினைவுப் படலத்தில் குருதிக் கோடுகளாய்ப் படர்ந்த கொடிய நாட்கள் அவை வானம் மறுக்கப்பட்ட பறவைகளை நான்கு திசைகளிலிருந்தும் நச்சு அம்புகள் துரத்திய நாட்கள் கலைக்கப்பட்ட கூடுகளிலிருந்து அடைகாக்கப்பட்ட முட்டைகள் உடைந்து சிதற, மண்ணெல்லாம் உதிரக்கொடி படர்ந்த நாட்கள் பறவைகளின் நெஞ்சப்படபடப்பில் காற்றும் நெளிந்து கூகூவெனக் கூக்குரலிட்ட நாட்கள் வேடுவனின் இறையாண்மையில் குறுக்கிடமுடியாதென்று நாக்கைச் சப்புக்கொட்டி பறவைகளின் பச்சைக் கறிவிற்கக் கடைதிறந்த சந்தை வணிகர்களின் பங்கு நாட்கள். கிளிகளுக்கு இரங்குவதாய் அழுத பூனையொன்று ஒரு சிட்டு…
-
- 0 replies
- 735 views
-