கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அற்றைத் திங்களும் அவ் வெண்நிலவும் வ.ஐ.ச.ஜெயபாலன் இன்பம் துய்ததுடன் முடிந்து விடுகிறதா எல்லாம். பிடித்த புத்தகத்தில் இரசித்த பக்கமென தட்டிச் செல்ல முடியவில்லையடி. முட்டைகள் மீது பின்காலால் மணல்மூடி திரும்பியும் பாராத ஆமைப் பெண்ணாய்ச் சென்றாய். மாயை போலாயிற்று எல்லாம். இன்பம் இருவரும் நாடியதுதான். நட்பு நான் மட்டுமே தேடியதோ ? முதற் கண் பொழுதில் முதுகு சில்லிட ஒரு கணம் தரித்தாய். உன் இதயத்துள் இருந்து அடி வயிறு அதிர இறங்கிய இன்பச் சூனியம் மறைக்க சினந்து முகம் திருப்பினாய். நானும் கள்வன் என்பதறியாது. அடுத்த நாள் ஆயிரம் ஒத்திகையோடு வந்து மணி கேட்டேனே. ஏழனம் தெறித்தது உன் பார்வையில் …
-
- 21 replies
- 4k views
-
-
நீ என் தோழியா..? இல்லை காதலியா...? கவிதை........ உன்னுடன் நட்புக்காய் உனைச் சுற்றும் பக்தனானேன்..... உன் நட்பை பெறுவதற்காய் என் நாட்கள் பல தொலைத்தேன்....! என் நீண்ட போராட்டத்தில் மெது மெதுவாய் என் நண்பியானாய் அதன் பின் என் நேரங்களில் பல மணிகளைத் தின்றாய் எனை நடு சாமத்தில் எழும்ப வைத்தாய் நடு வீதியிலும் நடக்க வைத்தாய்..... எனை தெரு நாய்கள் பார்த்து தினம் தினம் குரைக்க வைத்தாய்...... நீ என்னை நெகிழ வைத்த நண்பியாய்...! என் இதயத்தின் இடங்களெல்லாம் முழுதாக வல்வளைத்தாய்...! நாம் சந்திக்கும் பொழுதுகளில்... அந்த சந்தோச வேளைகளில்.... உன் சிரிப்புக்காய் சொல்லும் …
-
- 20 replies
- 4k views
-
-
இழப்பதற்கு எம்மிடம் ஏது இனி இழந்து விட்டோம் பிஞ்சுகளை சீதையிட்ட கண்ணீர் அங்கே இன்னுமா ஆறாய் ஓயவில்லை யார் இட்ட சாபம் அங்கே ஏன் இந்த அவலக்கோலம் வெந்தபுண்ணின் காயங்கள் இன்னும் அங்கே மாறவில்லை சொந்த மண்ணில் தமிழன் வாழ ஏன் அவனுக்கு உரிமையில்லை? இறைவன் படைத்த மண்ணில் தமிழனுக்கு ஏன் இறமையில்லை புத்தனின் பெயரினாலே கொடுமைகள் நடக்குது அங்கே புத்தனும் உயிர்த்து எழுந்து வந்தால் தமிழனுக்காக விம்மி அழுதிடுவான் தொப்பிள் கொடி உறவுகளும் தூங்கிப் போய் இருந்தனவே செஞ்சோலை படுகொலையால் உயிர் பெற்று எழுந்தனவே பிஞ்சுகளின் இழப்புத்தான் அங்கே மீண்டும் உறவுப்பாலம் அமைத்தனவோ இழப்புக்கள் இனி எமக்கு வேண்டாம் உறவுகளே இ…
-
- 26 replies
- 4k views
-
-
-
உறங்கிய காதல் பார்த்ததும் உன்மேல் பூத்தது காதல் என்னில் பழகாமலே ருசித்தேன் விலகியே நடந்தேன் விண்ணில் இருந்தே மண்ணில் இருக்குமுனை தொட நினைத்து நீட்டினேன் கைகளை முடியாமல் தவித்தேன் சிட்டாக மாறியுனை கட்டியணைக்க எண்ணி சட்டென வந்தேன் மண்மீது அருகிருந்தே உனை நான் அளந்தேன் பார்வைகளால் இதமாக இருந்த போதிலும் இமைகள் படபடத்தன பயத்தில் பூவான நான் காதலை இயம்ப புயலாக நீ மாறி எனை காயமாக்கி அனலான பார்வையால் எனை தகனம் செய்துவிடுவாய் என்று சொல்ல நினைத்த காதலை சொல்லாமலே புதைத்தேன் இன்றுதான் தெரிந்துகொண்டேன் அன்று நீயும் எனைபோலவே..... ம்ம்ம்ம்ம்...! உன்மீதான என் காதலும் என்மீதான உன் காதலும் உச்சரிக்கப்படாம…
-
- 20 replies
- 4k views
-
-
புலிகளைச் சீண்டிப்பார்க்கும் சில ”கழுதைகளுக்கு” ..... ஒருநாள் என் நாட்டு அரசியல் சாரா அறிவு ஜீவிகள் எளிமையான எம் மக்களால் குறுக்கு விசாரணை செய்யப்படுவர். தன்னைச் சிறுகச் சிறுக இழந்து கொண்டிருந்த தீச்சுடரென மெதுவாக அவர்கள் தேசம் செத்துக் கொண்டிருந்தபோது அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று விசாரிக்கப்படுவார்கள். ஒருவரும் அவர்களிடம் அவர்கள் உடைகளைப் பற்றியோ அவர்களின் மதிய உணவையடுத்த நீண்ட உறக்கத்தைப் பற்றியோ கேட்கப் போவதில்லை. அவர்களின் ‘உலகலாவிய’ கருத்துக் கொண்ட மலட்டுப் புரட்சியைப் பற்றிக்கூட அறிய எவரும் ஆவலாக இல்லை. அவர்கள் தங்கள் நீதியை எப்படிப் பெற்றார்கள் என்று ஒருவருமே கவலைப்படவில்லை. கிரேக்கப் புராணங்களைப் பற்றியோ ஒரு சுய மாறுதலை அவர்கள் உணர்…
-
- 24 replies
- 4k views
-
-
தியாக தீபமே தாயகம் தந்தநற் புதல்வர்கள் வரிசையில் தனக்கென இடத்தினைப் பிடித்தஎம் திலீபனே அவனியில் தமிழினம் வாழ்ந்திடும் வரையினில் அடிக்கடி உன்பெயர் நினைவினில் வந்திடும் ஊரே எழுந்திடில் உரிமைகள் கிடைத்திடும் ஊரெழு மண்ணினில் பிறந்தவன் நம்பினான் ஊரினை எழுப்பிட உண்மையாய் உழைத்தவன் கூரிய நாவினைக் கருவியாய் ஆக்கினான் தனித்துவம் இழந்ததோர் இனமதாய் வாழ்ந்ததால் மருத்துவம் மனதினில் படிந்திட மறுத்தது இனத்துவம் காத்திடும் பணியினில் இணைந்தவன் இளைத்துமே சாய்ந்தனன் நல்லையுூர் மண்ணிலே சுந்தரப் பெண்களைச் சதந்திரப் பெண்களாய் கண்டிடும் பணியிலே முன்னிலை நின்றவன் தந்திர இந்தியச் சதியினால் நொந்துமே தந்தனன் உயிரினை காந்தியும் நாணவே அண்ணலின் வழியினில…
-
- 28 replies
- 4k views
-
-
chating ( தமிழ் ஆக்கம் தெரியாது ) முகங்கள் புதைத்து முகவரி கள் தொலைத்து வயதுகள் மறைத்து உணர்ச்சி விளையாட்டில் பறிபோனது இங்கே இதயங்கள் பண்பாடு தொலைத்து காதல் மொழி பேசி உணர்ச்சி விளையாட்டில் பிரிந்தது குடும்பங்கள் நிஜத்தை தொலைத்துவிட்டு போலி வாழ்க்கைக்காய் வழக்காடு மன்றத்தில் பிரிவுக்காய் தவிக்க குழந்தையோ வீதியில் அனாதையாக தத்தளிக்குது. நாகரிக வளர்ச்சியால் தமிழ் பண்பாடு அகதியாய் அலைகின்றது எம்மைப் போல். தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 30 replies
- 3.9k views
-
-
[size=5] [/size] [size=5]சிற்றலை ஓடிவர சிறுநண்டு குழிபுக சிதறுண்டு கிடந்த சோகி சிறுகை கொண்டு சேர்த்தேன். பொறுக்கிய சோகி சேர்த்து பொதுவில வைத்து விட்டு பொத்தலானவென் பையிலிருந்த பொரி முறுக்கை விற்று வந்தேன். கடற்கரை ஓரத்தில் காலாற நடந்துவந்த கனவான்களிடம் தான் காசாக்கினேன் என் பொரி முறுக்கை. சிக்கடித்த தலையுமாய் சீரற்ற உடையுமாய் சில்லறைக்கு முறுக்குவிற்கும் சிறுபையன் தான் நான். இருக்கின்ற முறுக்கு விற்று இனிதாய் திரும்பும் வேளை இருக்குது சில்லறை இவளவும் உனக்கென்றான். எனக்கேன்றதாலோ என்னவோ ஏழைமனம் விரும்பியது எதையும் பார்க்காது ஏங்கியபடி போனதவன்பின்னே. போனவன் சேர்ந்தான் பொ…
-
- 11 replies
- 3.9k views
-
-
மீள் ஆயுள் ஓலிவடிவில்... உன் தோள்களை விட்டு நகர்ந்தால் என்னை இழுத்து இழுத்து அணைத்தவனே இரவில் உலாப் போக பிடிக்கும் என்பதால் நிலாவை ஓய்வெடுக்கச் சொன்னவனே உனக்கு பிடித்த பகலை இரவாக்கி காத்திருக்கின்றேன் என் மரணத்திற்க்காய் வாழ்வின் இறுதி நாளில் தொலைத்த உன்னைத் தேடுகின்றேன் நீ தொலைந்ததை மறந்து யார் செய்த பாவமடா? யார் தந்த சாவமடா? உன்னை காதலித்தபடி இந்த ஆயுள் என்னை மறு ஆயுளுக்காக அழைக்கின்றது நான் சென்று வருகிறேன் -இனியவள்
-
- 12 replies
- 3.9k views
-
-
வேர்களை நினைந்தழுதபடியே தூங்கிப்போன நீண்ட ஒரு துயரநாளின் நடு நிசியில் தூக்கம்களுக்கிடையே கனவுகளின் வீதியில் கோபத்துடன் கணன்றுகொண்டிருந்த ஊரை எரிக்கும் நினைவுகளை பின்தொடர்ந்தேன்... கழுகளுக்கஞ்சிய கண்களில் மிரட்சியுடன் சேதி சொல்லி அழைத்துச்சென்ற நினைவுகளின் கரங்கள் எல்லாவற்றிலும் தழும்புகள் நிறைந்து கிடந்தன... ஒவ்வொரு தழும்புகளில் இருந்தும் சொட்டிக்கொண்டிருந்த ஆன்மாக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருந்தன... உற்றுப்பார்க்கிறேன்.. ஈழத்து இதிகாசங்களில் எழுத்தப்பட்ட பெயர்கள் எச்சங்களைத் தேடியவாறு.. முகவரி கொடுத்தவர்களின் எச்சங்களின் முகங்கள் எல்லாம் வறுமைக் குழிகளுக்குள் அடித்த சுழிகளுக்கிடையே செத்தழிந்துகொண்டிருந்தன.. …
-
- 29 replies
- 3.9k views
-
-
வணக்கம் ரமா, கள உறவுகளே. இது நல்லதொரு முயற்சி, பாராட்டுக்கள். ஆனால் ஒன்று இல்லை இரண்டு: (1). எழுதிய கவிதையை களத்திற்கு அனுப்புவதற்கு முன்னர் இரு தடவைகளாவது படித்துவிட்டு எழுத்துப்பிழைகள் இருந்தால் திருத்திவிட்டு அனுப்புங்கள். (2). தயவுசெய்து ஆங்கிலச் சொற்களைக் கலக்காது எழுதுங்கள். கவிதைகள் (10 வரிக்குள்) குறுங்கவிதைகளாக இருந்தால் நல்லது என்று எண்ணுகிறேன். தாய்மொழியிலே தவறு செய்யக்கூடாது . அதுவும் கவிதையிலே!... "கண்ணுக்கு எண்ணெய் விட்டுக்கொண்டு இருக்கவேண்டும்" இல்லையேல் சொல்லவந்த கருத்துக்கள் காற்றோடு போய்விடும். நன்றி
-
- 29 replies
- 3.9k views
-
-
கண்ணும் கண்ணும் பேசினும் கண்ணுக்குத் தெரியாதது... தொட்டுத் தொட்டு பேசினும் புலனுக்கு புலப்படாதது... சோடி போட்டு சுத்தித் திரியினும் சாட்சி சொல்லாதது... கட்டிப் பழகி கழற்றி விடினும் மெளனமாய் இருப்பது... புளுகித்தள்ளி உசத்தியாக் காட்டி ஏமாற்றினும் அலட்டிக் கொள்ளாதது... மாற்றி மாற்றி பலது வந்து போயினும் குற்றம் காணாதது... இடையில் ஒன்றைவிட்டு ஒன்று தாவினும் கண்டுக்காதது... மனசில் ஆயிரம் வைச்சுப் பழகினும் காட்டிக் கொடுக்காதது... ஓசிக் காரில, காசில பவனி வரினும் கெளரவமாய் நினைக்க வைப்பது... பூங்காவில பீச்சில ஒளிச்சிருந்து கும்மாளம் அடிப்பினும் சாட்சிக்கு வராதது... அப்பா அம்மா கண்டுபிடிக்க முடியாதது... நல்ல மாப்பிள்ளை பார்த்து கட்…
-
- 29 replies
- 3.9k views
-
-
-
-
- 23 replies
- 3.9k views
-
-
1993.... சிங்களரும் தமிழுரும் மரமும் கொடியும் சிந்தனை செய்து டிங்கிரி பண்டா தமிழின அழிப்புக்காய் ஏவி விட்ட ரஷ்சிய டாங்கிகளின் அணிவகுப்பாய் யாழ் தேவி....! ஆனையிறவு தாண்டி கிளாலி வெளியில் புலிப் பாய்ச்சலில்.. தடம்புரண்டு போச்சுது அது..! தோல்விக்கு விலையாக சங்கத்தானையில் போட்ட விமானக் குண்டில் பலியான தமிழினம் இன்னும் அலறுது வேதனையில்...!! 2013... முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நாயகன்... "வடக்கின் வசந்தம்" மகிந்த சிந்தனையின் பிறப்பிடம்.. மகிந்த பண்டா ஏவும் இந்த வெற்றி மமதை யாழ் தேவி ஹிந்தியத் தடமதில் சீன உருவமாய் தடமுருண்டு வந்தாலும் தமிழர் நிலத்தில் - அது ஓர் பாழ் தேவி..! இதன் வரவில் பாழாகப் போகுது எம் தமிழ் தேசம்..! விபத…
-
- 30 replies
- 3.9k views
-
-
பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா காரிருள் அகன்றது பேரொளி பிறந்தது- அவ் ஓரொளி மகிமையில் உவகையே நிறைந்தது வானமும் வையமும் வாழ்த்தியே மகிழ்ந்தது விண்ணக வேந்தனை மண்ணதில் வாழ்த்திடும் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா தீபங்கள் கரமேந்தி தெய்வீக மனமேந்தி ஆனந்த உணர்வேந்தி அகமெங்கும் மகிழ்வேந்தி மனங்களில் அன்பேந்தி மனிதத்தை அகத்தேந்தி மழலையாய் மலர்ந்தநம் மகிமையின் தேவனின் பிறந்தநாள் திருவிழா பேருவகையின் ஒளிவிழா எதிர்காலம் சிறந்தோங்க எம் மண்ணும் தளைத்தோங்க வருங்காலம் வளமோங்க எம்வாழ்க்கையும் நலமோங்க வழியதன் வெளிச்சமாய் வாழ்வுக்கே அர்த்தமாய் ஒளியதன் மைந்தனின் உண்மையின் வேந்தனின் பிறந்தநாள் …
-
- 5 replies
- 3.9k views
-
-
தோசை - கவிதை கவிதை: சௌவி, ஓவியம் ஸ்யாம் அன்னபூர்ணாவில் மசால் தோசை ஆரிய பவனில் வீட்டு தோசை சரவண பவனில் ஆனியன் தோசை வசந்த பவனில் பொடி தோசை கௌரிகிருஷ்ணாவில் நெய் தோசை அஞ்சப்பரில் சிக்கன் தோசை ஹரி பவனில் காடை தோசை ஆனந்த பவனில் பூண்டு தோசை முருகன் இட்லிக் கடையில் காளான் தோசை முனியாண்டி விலாஸில் முட்டை தோசை ஆச்சி மெஸ்ஸில் பேப்பர் தோசை ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் ஸ்கை தோசை தள்ளுவண்டிக் கடையில் தட்டு தோசை இவை எதுவும் சின்னப் பலகையின் மேலமர்ந்து புகை சூழ விறகு தள்ளிவிட்டுக்கொண்டே அப்பாவின் கிழிந்த வேட்டியின் சிறுதுண்டை காய்ந்த மரக்குச்சியில் கட்டி கண்ணாடி பாட்டிலுக்குள் கீழிருக்கும் எண்ணெயைத் தொட்டுப் பூசி ஓரங்கள் கருக…
-
- 0 replies
- 3.9k views
-
-
சிங்கள நண்பா! உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்! ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை! உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்! உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்! முடியவில்லை என்னால்; காரணம் இதே போல ஒரு மாதத்தில்த்தான் அவற்றை நீ வெட்டிவிட்டாயே! நீ மறந்திருப்பாய். என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் என்னால் நடக்கமுடியவில்லை! நினைவிருக்கிறதா உனக்கு.. நீ மறந்திருப்பாய். நீ கொலைவெறியோடு விரட்டும் போது; ஒரு கையில் குழந்தையும் இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம். நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா? ஆனால்; மன்னித்துவிடு சகோதரா... இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை! நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய் நாங்கள…
-
- 20 replies
- 3.9k views
-
-
அன்பே வா...... நீயும் நானும் அன்போடு நீண்ட காலம் இன்போடு உறவு என்ற ஓடத்தில் ஏறி உல்லாசமாக ஒன்றாக உலகைச் சுற்றி ரசிக்கணும் என உறக்கத்தில் கனவு கண்டேன் உன் பொல்லாத கோவம் கண்டு என் கனவு நனவாகா என இன்றுதான் உணர்ந்தேன் நான் அன்று போலில்லை நீ என்பதை எப்போதும் இனிமையாக இருந்தேன் தப்பேதும் நான் செய்ததறியேன் வேண்டாம் என்மேல் அன்பே வீணான கோவம் உனக்கு துன்பங்கள் புடைசூழ நீயின்றி துவண்டு துடிக்கின்றேன் உனைப்போல் வேறோர் துணையின்றி ஊனை மறந்து கலங்குகின்றேன் விட்டுவிடு உன் கோவமதை கட்டியணை பாவியிவளை கெட்டிக்காரி என அடிக்கடி தட்டிக்கொடுப்பவனே அடிமேல் அடிவைத்து உனக்கு நடை பழக்கிய உன்னவளை இடி ப…
-
- 15 replies
- 3.9k views
-
-
நிலா அக்காவின் கவிதைகள் நேக்கு மிகவும் பிடிக்கும் நேரம் கிடைக்கிற நேரம் பழையகளம் யாழ்களத்தில் போய் படித்தேன் அதில் பல கவிதைகள் என்னை மிகவும் கவர்ந்தன சோ அங்கே இருந்து தூக்கி கொண்டு வந்துட்டேன் ................நிலா அக்கா ஏசமாட்டீங்க தானே (அது தானே போட்சாச்சு பிறகு என்ன என்று கேட்கிற மாதிரி இருக்கு ) வெண்ணிலா அக்கா யாழ்களம் 2 யில் எழுதிய கவிதைகளிள் சில!! காத்திருக்கிறேன் வாழ்வின் தேடுதலுக்காக நகர்ந்த நாட்களில் என்னை நீதான் அடையாளப்படுத்தினாய் உன் மௌனத்தின் வேர்களில் பூத்திருக்கிறது என் காதல் பூ பனித்துளியை பேட்டி காணும் மேகங்கள் விண்மீனைப் பிடிக்கும் மூங்கில்களில் அவசரம்.. இப்படியான என் கனவுகளின் தொடர்ச…
-
- 5 replies
- 3.9k views
-
-
ஏழு வயதுகள் மட்டுமே நிறைந்த என் மகனின் முதல் கவிதை. அழகு என்ற தலைப்பில். (இந்தியா திருச்சியில் இருந்து.) அழகு. நீல வானம் அழகு - அதில் பறக்கும் குருவிகள் அழகு பச்சைப்பசேல் மரங்கள் அழகு- அதில் மலரும் மலர்கள் அழகு உயர்ந்த மலைகள் அழகு -அதில் வளரும் தேயிலை அழகு நீண்ட கடல் அழகு - அதில் விளையும் முத்து அழகு பூக்களின் இதழ்கள் அழகு - அதில் தேனுறிஞ்சும் தேனீ அழகு பச்சை புல்வெளி அழகு - அதில் மேயும் பசு அழகு மு.ஷதுர்ஜன்.(குட்டி வல்வையூரான் )
-
- 25 replies
- 3.9k views
-
-
நானும் நோக்கினேன் அவளும் நோக்கினாள் அவள் கண்ணுக்குள் காதலைத்தேடினேன் கானகத்துக்குத்தான் வழி காட்டின
-
- 15 replies
- 3.9k views
-
-
நண்பர்கள் சமீபத்தில் லீனா மணிமேகலை எழுதிய இரண்டு கவிதைகளைப் படித்து விட்டு கட்டுரைக்கு வரவும். 1.முதல் கவிதை: நான் லீனா நான் இலங்கையில் இந்தியாவில் சீனாவில் அமெரிக்காவில் ஆப்பிரிக்காவில் செரோஜெவாவில் போஸ்னியாவில் துருக்கியில் ஈராக்கில் வியட்நாமில் பொலியாவில் ரெமானியாவில் வாழ்கிறேன் என் வேலை என்னிரு தொடைகளையும் எப்பொழுதும் பரப்பியே வைத்திருப்பது நாடு கோருபவ்ர்கள் ஜிகாத் தொடுப்பவர்கள் புரட்சி வேண்டுபவ்ர்கள் போர் தொடுப்பவர்கள் ராஜாங்கம் கேட்பவர்கள் வணிகம் பரப்புபவர்கள் காவி உடுப்பவர்கள் கொள்ளையடிப்பவர்கள் நோய் பிடித்தவர்கள் எவன் ஒருவனும் வன்புணர்வதற்கு ஏதுவாய் யோனியின் உதடுகளை அரிந்துப் போட்டு கருங்குழியென செத…
-
- 3 replies
- 3.9k views
-
-
ம(ர)ணமாலை பச்சை நிறமறியா.. இறுகிக்கிடந்த மன வெற்றுநிலத்தில் வந்து விதை போட்டாள்.. வெளியில் கிடந்த விதை...இளகி.. முளைகள் விட தன்னைப் படுத்தியே.. தண்ணீர் ஊற்றினாள்.. தன் கையைக்கீறியே.. செந்நீர் ஊற்றினாள்.. காளை மனதிலே ஈர கங்கை பாய்ந்தது.. காதல் முளைத்தது.. காலம் இனித்தது.. பார்வையில் உயிரைப் பகிர்ந்து பாவையின் மடியில் துயின்று... இதழ்களை இதழ்களால் இழுத்ததும்..குளித்ததும்.. இருபது விரல்களும்.. பனியில் தளிராய்.. இறுகிக்கிடந்ததும்.. ஊரை இருட்டென ஏய்த்து உயிருக்குள் தீப்பந்தம் கொழுத்தி வைத்திருந்ததும்.. தெளிந்த நீலவானில் ஒரு விண்கல புகையின் கோடாய் கூட்டத்தில் காதல் ஜோடி..கூடித்திரிந்தது.. …
-
- 25 replies
- 3.9k views
-