கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
பங்குனி விடியலின் அதிகாலைத் தக்பீர் முழக்கம் அவள்! சித்திரை வசந்தத்தின் முக்காடு போட்ட முதலாம்பிறை அவள்! கார்த்திகை நிலவின் காயம்படாத உமர்கயாமின் கவிதை அவள்! மார்கழித் திங்களின் சல்வார் போட்ட ரம்சான் அவள்!
-
- 17 replies
- 1.6k views
-
-
காதலித்துப் பார்.. கடதாசி வீணாகும் கல்லாப்பெட்டி காலியாகும்.. கண்ணீர் பெருகும் கவலை மிஞ்சும்.. காதலித்துப் பார்.. கடற்கரை வெளியில் கருவாடாய் காய்வாய் கள்ளமில்லா உன் நெஞ்சில் களவும் பொய்யும் குவியும். காதலித்துப் பார்.. காற்சட்டைப் பொக்கட் கிழிஞ்சு போகும் காவாலியும் உன்னைச் சுரண்டுவான்.. காரில் பெற்றோல் தீரும் காண்போர் முகம் சுழிக்கும்... காதலித்துப் பார்.. கிரகம் பிடிக்கும் கிருபை இழக்கும்.. கறுமம் இவன் பிறப்பென்று கவிதை சுயம்பாடும். காதலிக்காமல் பார்.. உன்னை நீயே நேசிக்கப் பழகுவாய் உள்ளம் திடமாகும் உழைப்பு இதமாகும் உன்னை நீ அறிவாய் உலகம் உன்னில் …
-
- 17 replies
- 1.6k views
-
-
அடகு கடையில் ஆச்சியின் காத்திருப்பு. சொந்த மகளின் தாலி தொடங்கி பேத்தியின் கம்மல் வரை ஆச்சியின் மடிப்பெட்டிக்குள் கூப்பன் மட்டையோடு கசங்கிக் கிடந்தன. வட்டியில் வயிறு வளர்க்கும் அடகுகடை ஆறுமுகத்திடம் சரணடையக் காத்திருந்தன. ஆச்சியோ ஓரமாய் குந்தி இருந்து.. கற்பனை வளர்க்கிறாள். இந்தப் போகம் மேடை பார்த்து நல்ல போயிலை மண்டைதீவு போய் வாங்கி வந்து.. கோப்பை போட்டு உழுத நிலத்தில் நட்டு அதை குழந்தை போல தொட்டுத் தடவி வளர்த்து சொந்த வயிற்றுக்கு பாணும் சம்பலும் தந்து.. புகையிலைக்கு பெருத்த செலவில் எருவும் உரமும் நேரம் காலம் பார்த்துப் போட்டு தீனியாக்கி.. வாடகைக்கு மிசின் பிடிச்சு பாத்தி கட்டி வாய்க்கால் வழி தண்ணீர் பாய்ச்சி.. ஊற்றெடுக்கும் அந…
-
- 17 replies
- 3.7k views
-
-
கடவுள் என் கனவில் வந்தார் எப்படி இருக்கிறது பூமி என்றார் உங்களுக்கு தெரியாத என்று கேட்டேன் வேலைப் பழு எல்லாவற்றையும் கவனிக்க முடியவில்லை என்றார் என்னிலும் கொஞ்சம் கோபமாகத்தான் இருந்தார் ஏதோ தேவைக்காய் அவரிடம் அடிக்கடி போய் வந்தேன் எல்லாமே வந்த பின் அவரையும் மறந்தேன் இருந்தபோதும் அனைத்தும் அறிவார் எவன் கள்ளன் எவன் நல்லவனென மனிதர்கள் மனிதர்களாக இல்லை என்றேன் மானிடத்தை ஏன் கொன்றீர்கள் என்றேன் தான் இல்லை அது நீங்களே என்றார் அழிவுகள் தொடர்ந்து கொண்டே போகிறதே என்ன செய்வதாய் உத்தேசம் என்றேன் கட்டுக்கு அடங்காமல் போய் விட்டது அதிகாரம் என் கைகளை விட்டு என்றார் மதமும் …
-
- 17 replies
- 2.7k views
-
-
மகரந்தங்களின் கண்ணீரும் பருவம் தப்பிப்போன பாலணுக்களின் திட்டைக்களும் நிறைந்து கிடக்கின்றன தேன்களில்கூடுகளில், சுடர் தின்ற விட்டிலின் கனவுகள் கருகி பரவுகின்றன அழகோடு இயைந்த நிலவினைப் புணர தேடியலைகிறான் சூரியன் இரவினை கொன்றும் பிறக்கிறது இரவும் நிலவும். இலைகளை வெறுத்த கிளைகள் காத்திருக்கின்றன, பறவையொன்றின் விரல்களின் தீண்டலுக்காக, சாம்பல்மேடுகளில் மேய்ந்த மாடுகளின் மடிகள் கறக்கின்றன ஆசை தீய்ந்துபோன வெப்பத்தோடு, அன்பு... ஒருவர் மனம் நெகிழும்படி மற்றொருவர் வெளிப்படுத்தும் பாசமும் நேசமும் நட்பும் என்று தெளிவாக வரையறை செய்கிறது அகராதி. அநேக நாக்குகளில் வழிகிறது துர்நாற்றம் சிலவேளைகளில் விசமாகவும். அடங்க மறுத்து ஆர்ப்பரிக்கும் விடைகள…
-
- 17 replies
- 943 views
-
-
வந்துவிடு வரைவில் ! தூக்கம் என் கண்களுக்கு தூரமாகிறது..... இரவுகளும் நீளமாகின்றன.. நிமிடங்கள் யுகங்கள் ஆகின்றன... தனிமை தரும் தாளாத துயரத்தை அணு அணுவாக அனுபவிக்குது உள்ளம் அழுதபடியே... வயிற்றில் பசியில்லை உணவில் பிடிப்பில்லை மனதுக்கு நிம்மதியில்லை எப்போது மீண்டும் உன்னுடன் கதைப்பேன்?... அதுவும் தெரியவில்லை... வெளியே சிரித்து உள்ளுக்குள் ஓயாது அழுகிறேன் செழிப்பிழந்த வதனத்துடன். நெஞ்சமே நீதானடி.....அதற்காகவேனும் வந்து விடு விரைவில்..
-
- 17 replies
- 2.2k views
-
-
சதுரங்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன் சிருஸ்ட்டி வேட்கையில் ஆனைமலைக் காடுகள் பாடுகிற அந்தி மாலை. அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில் உன்னையே சுற்றுதடி மனசு. இது தீராத காதலடி நீதான் கண்டு கொள்ளவில்லை. அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய் தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும் யானைபோல உண்மையில் என் காதலும் பெரியதடி. காமத்தில் சூரியன் பொன்சிந்த இறங்கி வர. நாணிப் புவிமகள் முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்.. ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற உனது நாடகம் அல்லவா இது. ஆண் பெண்ணுக்கிடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை எப்போதும் விரிகிறது. என்னோடு இன்னும் சிலரை பந்துகளாய் எறிந்து ஏந்தி …
-
- 17 replies
- 3k views
-
-
-
நாம்... ரொம்பவும் நேசிக்கும் ஒருவரால்தான், 'துரோகம்' எனும் பரிசையும்... புன்னகைத்தபடியே... கொடுக்க முடிகிறது! மனச்சாட்சிகள் எப்பொழுதும் தொடர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதில்லை..! அது... துரோகம் செய்தவரையும் ஒருநாள் தட்டியெழுப்பும்..!! காலம் கடந்த ஞானத்தால்... கோலம் மாற்ற முடியாது! காலைச் சுற்றிய பாம்பாக... மனச்சாட்சியின் தொண்டைக்குழியை, இறுக்கிக்கொண்டேயிருக்கும்...!! துரோகத்தின் தடங்களில்... அனுபவப்பாதை விரிந்து செல்லும்...! தாங்களே பின்னிய வலையில், துரோகிகள் சிக்கித் தவிக்க... மற்றவரின் பயணம் மட்டும் தொடரும்! மீண்டுமொருமுறை துரோகச் சந்திகளில் தரிக்காத, தனித்த நீண்ட பயணங்களில்...... மாற்றங்கள் இருக்கும்...! ஏமாற்றங்கள் இருக்காது...!! இனிமையான பொழுதொன்றி…
-
- 17 replies
- 4.5k views
-
-
எம்தமிழ் தேசத்திலே ஏற்றமுடன் நாம் இருந்தோம் செந்தமிழ் தேசத்திலே சேர்ந்து நாம் வாழ்ந்திருந்தோம் அத்தனை உறவுகளும் ஆவலாய்க் காத்திருந்தோம் அண்ணன் பிரபாகரனின் ஆணையில் வாழ்ந்திருந்தோம் விடுதலை விலங்ககலும் வேளைதான் பார்த்திருந்தோம் விதி செய்த வலையினதில் வெந்தே நாம் வீந்துவிட்டோம் அஞ்சி அஞ்சி நாம் அடிமையாய் வாளோமென அன்னை மண்ணின் அடிமை விலங்கொடிக்க வெஞ்சினம் கொண்டே வேங்கைகள் எழுந்தனர் போராட்ட வீரராய் போர்க்கோலம் பூண்டனர் சொத்து சுகங்கள் சொந்தங்கள் இழந்தனர் பருவ வயதின் பற்றெல்லாம் துறந்தனர் அன்னை மண் காத்திட அத்தனை பேரும் ஆயுதங்கள் தாங்கி ஆணைகள் காத்தனர் புன்னகையுடன் அன்று பொருதிடச் சென்றனர் புறநானூறு படைத்தே புனிதராய் நின்றனர் சுதந்திரம் வேண்டி சுவாசத்தைச் …
-
- 17 replies
- 3.5k views
-
-
பசிவந்து உணவு உண்டால் முடிவு இன்பம் தரலாம் உணவைக் கண்டு பசிவந்தால் முடிவு துன்பம் தரலாம் உணர்ச்சி வந்து உறவு கொண்டால் முடிவு இன்பம் தரலாம் உறவுக்காக உணர்ச்சி கொண்டால் முடிவு துன்பம் தரலாம் காதல் வந்து அழகைக் கண்டால் முடிவு இன்பம் தரலாம் அழகைக் கண்டு காதல் வந்தால் முடிவு துன்பம் தரலாம் வாழ்வதற்குப் பொருள் தேடினால் முடிவு இன்பம் தரலாம் பொருள் தேடுவதே வாழ்க்கையானால் முடிவு துன்பம் தரலாம் பாஞ்சின் கவி படிப்போருக்கு கவியா..? கிறுக்கலா...?
-
- 17 replies
- 1.8k views
-
-
Ranger with Tusks of Killed Elephant, Amboseli 2011 © Nick Brandt கென்யா நாட்டின், கொடும் கோடையிலும், பனிக் கவசம் சுமக்கின்ற, கிளிமாஞ்சரோ மலைக்குன்றின், அடிவாரத்தில்………! பிளெமிங்கோ பறவைகள், உழுது கோடு வரைந்த நிலம், பாளம் பாளமாய், பிளந்து கிடக்கிறது! பிளந்த நிலத்தின் வடுக்களுக்குள், புதைந்து மறைகின்ற, சிறு தவளைக் குஞ்சுகள் கூட, கதிரவனின் கொடுங்கரங்களின், வெம்மையை உணர்கின்றன! நாளைய மேகங்களின், வருகைக்காக, நம்பிக்கை சுமந்து, அவை வாழ்ந்திருக்கின்றன! இரக்கமில்லாத தரவைகளில், கருக்கட்டி வளர்ந்த, பெரிய யானையின் தந்தங்கள், சிறிய மனிதனொருவனின், துப்பாக்கியின் வெற்றிக்குச், சாட்சியாகிக் கிடக்கின்றன! தனது தோள்களில் கூடத், தூக்கிவைக்க முடியா…
-
- 17 replies
- 7.6k views
-
-
மாற்றுக்கருத்து! மண்ணுக்குள் மகனை புதைத்துவிட்டு........... மார்பிலடித்து அழுகிறாள் தாய்......... இவன் முன்னே போய் நின்று சொல்கிறான்.......... மகிந்த ராஜபக்சவும் - மனிசனே என்று! கட்டியணைத்து கொஞ்சிய - தன் மகளும் .......... தொலைந்தாள்.......... தங்கமே என்றழுதான் தகப்பன்.......... இவன் சிங்கத்தின் வால்பிடித்து சிரித்துக்கொண்டே - சொல்கிறான்.. தவறென்ன அதிலே.......... கதிர்காமரும் - தமிழனே எங்கிறான்! சேற்றுக்குள் கிடந்தாலும்................ சோற்றுக்காய்............ தாயின் சேலையை கூவிவிற்று . குடல் நிரப்பி கிடக்கிறான்! குருத்துக்கள் எரிந்து போச்சு. கொள்ளி போட............. மயானம் நோக்கி மனிதம் . பயணம் ஆச்சு . கொள்ளிசட்டியின் …
-
- 17 replies
- 3k views
-
-
காலத்தால் மறைந்திடுமோ அம்மா பாலமு தூட்டடிட நீ காட்டிய வெண்நிலவு பாட்டில் கதைகளில் நீ பாங்குடன் ஊட்டிய சோற்றினிலே நாற்றில் பயிரெனவே நல்லறிவோடு நான் செழித்து விட்டேன். எத்தனை கற்பனைகள் அங்கே எத்தனை சுடர்கின்ற நம்பிக்கைகள் முத்தேன நெஞ்சில் வைத்தாய் என் முழுமையின் வேரேன மறைந்து நின்றாய். ஒலிவடிவம் http://tamil.sify.com/audio/fullstory.php?id=14465321 கண்ணம்மா இந்த பனி கொட்டும் இரவினீலே இலையற்ற தனி மரமாய் உன்னையே நினைத்திருந்தேன். என்று உன் பூவிரல்கள் தீண்டிடுமோ என்று ஏங்கிடும் வீணையைப்போல் துயருறுதே நெஞ்சம். பூத்திடும் கனவினில் கானகங்கள் எங்கும் புலர்ந்திடும் வச்சந்ததின் கற்பனைககள் தேற்றுமுன் காதலில் பாரதியி…
-
- 17 replies
- 2.9k views
-
-
27.8.15 ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, தளத்தின் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். மந்திரக்காரி! என்னை ஒரு நாய்க்குட்டியாக இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக தலையணை மெத்தையாக கண்ணீர்த்துளிகளை ஒற்றி மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல் அவளிடம் இருக்கிறது. பிறர் காணும்போது அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும் என்னை மாற்றிக்காட்டும் மாயவித்தைக்காரி அவள். வார நாட்களில் என்னை நானாக்கி வாசல் நிலையில் சாய்ந்து நின்று வழியனுப்பிவைப்பாள் மந்திரக்கோலை முதுகில் மறைத்து! - சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்
-
- 17 replies
- 3k views
-
-
கடப்பு வைச்சு காத்திருந்த வேளை - மர்மமாய் கழுத்திறுகி இறந்தது ஓர் ஆடு. கள்வரும் அது கண்டு.. கட்டியே இழுத்துச் சென்றார். கண்ணியமாய் நீதி உண்மை விளம்ப முன்..! கள்ளுக் கடையருகில் கள்ளக் கடை விரிச்சு கள்ளாடும் ஆனது பங்கிறைச்சி. கள்ளின் வெறியதில் கழிவு விலை கேட்ட இடத்தில் கன்னம் பறக்க கதறி அழ கட்டிப்புரண்டு.. கண்டபடி நடந்தது அடிபாடு. களத்திலும் அது கதை.. கட்டுரை என்றாக கடைசியில் கன்னம் பழுத்த கூட்டம் கழுதைக் கத்தல் கத்துது கதைகள் பல விடுகுது... கள்ளாட்டுக்கும்... யாரும் உரிமை கோரவில்லை.. கறுத்தாடு அதுவும் கோரை தின்றே.. "கேர்ணல்" ஆனது என்று. களவெடுத்தது நாமும் அல்ல கள்வரும் அல்ல - நாம் கண்ணியமானவரே என்று. கடைக்கண் விழி திறந்து கவனமாய் சிரிக்…
-
- 17 replies
- 1.1k views
-
-
என்- இடத்தில் என்னை இழந்தேன் வாழ்வது நானல்ல என்னினைவில் நீ தான் இங்கு....! களங்கமற்ற உன் நினைவில்- கனவில் நிழல்களுடன்....நிதமும்.. நிஜமாகுமா...........?? "அம்மா.......'' அலறிடத் துடித்தேன் அழுதால் வாய் விட்டு..... அயலில் இருந்து அன்னியமாவேன்...! மனதுள் விக்கி...முனகி... முடியாமல் கதவினை மூடி... தாப்பாள் போட்டு கட்டிலில் சாய்ந்து.. கண்களை மூடினால்...... ''அம்மா.......'' அலறிடத்துடித்தேன் அழுதால் வாய்விட்டு.......? களங்க மற்ற-உன் நினைவில்....கனவில்.... நிழல்களுடன்....நிதமும்.... நிஜமாகுமா...... :?: :?: :?:
-
- 17 replies
- 3.1k views
-
-
உன் நெஞ்சக் கூட்டறையில் நிலவரசி முற்றத்தில் வந்திருந்து கதைபேசும் வரம் ஒன்று வேண்டும் :lol:
-
- 17 replies
- 1.3k views
-
-
-
- 17 replies
- 3.4k views
-
-
சீனியம்மா என்னைப்பெற்றது என் அம்மாவானாலும் சிறுவயதில் உன்மடிதானே என் இடம் என் சீனியம்மா... நான் சிரிக்கப் பேசி சின்னக் கதை சொல்லி சித்திரமாய் என்னை வளர்த்தாய் ... உன்கை பிடித்தே நான் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது உலகமே என்கால் அடியில் ........ காலம் என்ற நதியில் கரைபுரண்ட வெள்ளத்தில் நீயும் நானும் மல்லுக்கட்டினோம்......... ஒவ்வரு வருடமும் இங்கு தோல் உரிந்து முடி உதிர்ந்து குளிர் வேளையில் உறையும் ஃபைன் மரங்கூட வெய்யில்பட புதுப்பெண் போல் பொலிவு பெறும்........ குருவிகளும் தேன் வண்டுகளும் ஃபைன் மரத்தை சுத்திவர , உனக்கும் எனக்கும் மட்டும் ஏன் சீனியம்மா கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல் பொலிவு இழக்கின்றோம் ?????????? காலம் கிழித…
-
- 17 replies
- 3.2k views
-
-
யாழ் உறவுகளே யாரும் இல்லாத் தனியனென்று யாரோ சொன்ன வார்த்தையினால் சோகம் கொண்ட எந்தனுக்குச் சுகமாய் வந்த யாழ்தளமே வாழப் பிடிப்பும் இல்லாமல் வெழும் வழியும் தெரியாமல் சோம்பிப் பொன எந்தனையும் சுறுசுறுப் பாக்கிய உறவுகளே அனைவருக்கும் வணக்கம் உங்கள் எல்லாரோடையும் கொஞ்சம் மனம்விட்டுக் கதைக்கோணும் போலக் கிடக்குது. என்ன சொல்ல வந்தனான் எண்டா நான் இந்த யாழ் குடும்பத்துக்குள்ளை சேந்து ஒரு கிழமைதான். ஆனா அதுக்கள்ளை எனக்குள்ளை நிறைய மாற்றங்கள். சத்தியமாச் சொல்லுறன் ஏதோ தனிமைப் பட்ட மாதிரி யாருமில்லாத மாதிரி ஒரு உசாரில்லாமை இருக்கேக்கைதான் தற்செயலா இந்தத் தளத்துக்குள்ளை புூந்தனான். ஆனா இப்ப தான் தெரியுது எனக்கு எத்தினை பேர் இருக்கிறியள் எண்டு.. என்ரை கதை கவி…
-
- 17 replies
- 2.8k views
-
-
தனியாக நானும் அலைகின்றேன் துணையாக நீயும் வருவாயா தூக்கங்கள் இன்றி தவிக்கின்றேன் கனவாக மட்டும் வருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) தவமாக நானும் இருகின்றேன் வரமாக நீயும் வருவாயா சுகமாக நானும் தொலைந்துவிட இதமாக உன்னை தருவாயா அன்பே ஆருயிரே அன்பே என்னுயிரே (2) காதல் ஒன்றின் அர்த்தம் கண்டுகொண்டேன் பெண்ணே நெஞ்சுக்குள்ள உன்ன பூட்டி வைத்த பின்னே சாயங்கால பூவாய் நீயும் பூத்திருந்தாய் சாலை தோறும் பெண்ணே உன்னை பார்த்திருந்தேன் (2) மலரே நான் மயங்கிவிட்டேன் மனதில் உன்னை சுமந்துவிட்டேன் (2) உயிரே என்னை வாழவிடு உயிரை கொஞ்சம் வாழவிடு (2) அங்கும் இங்கும் சுற்றும் வாலிபத்தில் பெண்ணே உன் காலுக்குள்ள நானும் சுற்றுகின்றேன் கண்ணே இரவினை பகைத்தேன் விழிகளினால் இதயமும் த…
-
- 17 replies
- 1.4k views
-
-
காதலியே .... நீ ..... விட்டு போனபின்னும் .... காதல் ...... என்னோடு இருக்கிறது ...!!! எல்லாவற்றையும்.... இழந்துவிடேன் .... என்று சொல்லமாட்டேன் .... உன் நினைவுகள் .... என்றும் இழக்கமாட்டேன் ...!!! & காதல் சோகக்கவிதைகள் கவிப்புயல் இனியவன்
-
- 17 replies
- 3.2k views
-
-
என் வணக்கம் தீஞ்சுவைத் தமிழால் உனைப் பாட வந்தாரே அரசமகனார் யாழே, உனைப் பாட வந்தாரே!!! எட்டுத்திக்கிலும் பட்டி தொட்டியெங்கிலும் உன் கால் பதித்து, தமிழால் ஒன்றிணத்தாய் எனைப்போல் பல தமிழரை . இன்று, நீ வாலைக் குமரியென்றும் கட்டிளங்காளையென்றும் அணிபிரிந்து அளக்கின்றனர் உனைப்பற்றி ....... செந்தமிழ் மொழியாள் உனக்கேது பால் ?? மொழிக்குமுண்டோ ஆண்பால் பெண்பால்?? எனைகேட்டால் , தமிழ்மொழிப்பாலே உன்பால் என்பேன் ........ நித்திரையிலும் எனைத் தட்டி செல்லக்கதை பேசும் என் இனத்து யாழ் நீ .... உன் நரம்புகளை மீட்டியே நாளும் ஒரு இசை படிப்பேன் உன் மீது தூசு விழவும் நான் விடேன் என் யாழே !!!!!!! நீ ........ வாழிய வாழியவே பல்லாண்டு ந…
-
- 17 replies
- 2.2k views
-
-
ரசித்த சில குட்டிக் ஹைக்கூக் கவிதை வரிகளுக்குக் காட்சி கொடுத்தால் நன்றாக இருக்குமா என்று நினைத்தேன்... (வரிகளுக்குச் சொந்தக்காரரின் பெயரை மறக்காமல் இணைத்துள்ளேன் ) தொடரும்...
-
- 17 replies
- 17k views
-