Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by nedukkalapoovan,

    வகை வகையாய் வடிவடிவான கோபியரொடு கொண்டாடினும் கொள்கையோடு இருந்தான் இந்த நவீன கண்ணன். அந்த வேளையில்... இணையத்தில் வந்தாள் கண்ணா என்றாள் கண்ணடித்தாள் கருத்தைக் கவர்ந்தாள் காகித ரோஜாவால் காதல் செப்பினாள். காளை இவன் களிப்படைந்தேன் கதைகள் பல பேசி களைப்பும் அடைந்தேன். கடைசியில்.. போன் சிம்மை கழற்றி வீசினாள் கண்ணனோடு மீராவின் காதல் முடிந்தது என்றாள்..!! அந்த மீராவுக்கோ ஒரு தம்புரா துணை இந்தக் கண்ணனுக்கோ தனிமை துணை..!!!

  2. கனடாவில் வாழ்வு பத்தொன்பது ஆண்டுகள் கண்ணை மூடி முழிப்பதற்குள் ஓடி மறைந்து விட்டது. திரும்பிப் பார்த்தால் அண்டப்.. பெருவெளியில் நீண்டதொரு பயணத்தின் நடுவில் நின்று கொண்டு இருக்கிறேன். நான் மட்டுமா இல்லை என்னோடு சேர்ந்து இன்னும் பலர் பயணிக்கிறார்களா.....??? கடந்து போன ஆண்டுகள் தராத வேதனையை அடிக்கடி வந்து போகும் வெண்பனி தந்து சென்றது. எங்கே போனேன்-எங்கே வந்தேன் ஒன்றுமே தெரியவில்லை. சிட்டுக்குருவியாய் சிறகு விரித்து வானவெளியில் பறக்க-எனக்கும் ஆசை ஆனால் சிறகு உடைந்தவள் ஆச்சே-இல்லை இல்லை விளக்கில் விழுந்த விட்டில் பூச்சி.. எதைச் சொல்ல எதை விட எனக்குள்ளும் ஆயிரம் ஆசைகள்-ஆயிரம் நிறை வேறாத கனவுகள். விபத்தும் என்னை தன்னுள் அடக்காமல் இன்…

  3. கோடி அழகுகள் கொட்டிக் கிடந்தாலும் ஆயிரம் அற்புதங்கள் அவனியில் இருந்தாலும் உயிரோடு உலவுகின்ற உவமையிலா ஓவியம் நீ கனவோடு காத்திருக்கும் கனிவான காதலன் நான் நதியாகி நான்வரும் திசைபார்த்து வழிமாறி விலகி ஓடுகிறாய் நீ பெண்ணே விரைவாக அலைகொண்டு கரைமோதும் கடலாகி ஓரிடத்தில் கனவோடு காத்திருப்பேன் கண்ணே உனக்காக

  4. ஆடிவேல் ரதம்வந்த கொழும்புநகர் தமிழரில்லம் கூடிநின்று கொள்ளிவைத்தார் காவலரும் சேர்ந்துநின்றார் தேடித்தேடி வாக்காளர் இடாப்பினிலே தமிழர்பெயர் கோடிட்டுக் கொளுத்திவிட்டார் தமிழழிப்பின் ஒத்திகையாய். சரக்குக் கப்பலுடன் சிதம்பரமும் சேர்ந்துவர - தமிழுணர்வுச் சரக்கேற்றிக் காங்கேசன் துறை சேர்ந்தார். தலைநகர் தந்த தரக்குறைவுப் படிப்பினையில் உலையொன்று கொதித்தது விடுதலைத்தீ கொழுந்தது ஆடிப்புயலில் அடிபட்டுப் போனதனால் - சுயநல நாடித்துடிப்பின் அடி பட்டுப் போனதுவே. நாடிவந்தார் தமிழிளைஞர்: கூடிவிட்டார் விடுதலைக்காய் தேடிவென்ற ஆயுதங்கள் அகலக்கால் பதித்ததுவே. மிதித்தாலும் வாழ்தலுக்காய்த் துடித்தெழும்பும் மண்புழுவும் வெட்டவெட்டத் தழைத்தோங்கும் பூவரசும் கிளுவைகளும்…

    • 3 replies
    • 834 views
  5. நினைவஞ்சலி..( சந்தன கடத்தல் வீரப்பனுக்கு) எம் தமிழ் நாட்டின் எல்லையை காத்தவன்.... எண்ணிலே ஆண்டுகள் ஏறியே ஆண்டவன்.... தன் இனம் அழித்தவன் தலைகளை அறுத்தவன்..... தவறுகள் செய்தானை தவறாமால் அழித்தவன்... எம் தமிழ் அழிகையில் எண்ணியே அழுதவன்... நாம் அகதியாய் அலைகையில் அன்றவன் துடித்தவன்.... கருணை கொண்டவன் காட்டுக்குள் வாழ்ந்தவன்.... தன் வாழ்வு இழந்தவன் தமிழ் எல்லையை காத்தவன்... கடத்தலின் வீரனாய் காலமுன் எழுந்தவன்... சரித்திர வீரனாய் சாதனை படைத்தவன்.... பெண்களை தாயாய் எண்ணியே மதித்வன்... மதிப்பினை அவருக்கு மான்பாய் கொடுத்தவன்.... கடத்தல்கள்…

  6. கடைசியாக எப்போது மழையை இரசித்தேன்? நினைவில்லை. கருநிறக் காளானென தெருவெங்கும் ஆங்காங்கே முளைத்திருக்கும் குடைகளின் விளிம்புகளிலிருந்து வெண்பனித் துகள்களாய்.. சரம் சரமாய்.. மழைநீர் கோர்த்துத் தொங்குவதை, தார்ச்சாலைகளில் விழுந்து தெறிப்பதை கடைசியாக எப்போது விழிவிரியப் பார்த்திருந்தேன்? அதுவும் நினைவில்லை. இன்றும் மழைபெய்தது. உச்சந்தலையில் தென்னைமரக் கொண்டையிட்டலைந்து, வீட்டுமுற்றத்தில் தேங்கி நிற்கும் மழைநீரில் காகிதப் படகு விடவென கொப்பித்தாள்களைக் கிழித்து அம்மாவிடம் வாங்கிக் கட்டிக்கொண்ட நாட்களில் பெய்த அதே மழை.., மறுபடியும் இன்று. இப்போதெல்லாம்.., என் கண்களுக்கு எதுவுமே தெரிவதில்லை எதிர்ப்படும் மனிதர்கள், தெருவில் கடந்து போ…

    • 3 replies
    • 1.1k views
  7. நீ நடந்து வரும் பாதையை ... காத்திருந்தே என் கண்கள் .... காய்ந்து போகிறது....!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S ) இதயத்தில் இருந்து வெளியேறாதே.... என்னைவிட உன்னை யாரும் .... இந்தளவுக்கு காதல் செய்ய மாட்டார்கள் ...!!! + கவிப்புயல் இனியவன் குறுங்கவிதை (S M S )

  8. அனைவருக்கும் வணக்கம், காதலர் தினம் 2008 சம்மந்தமாக யாழ் இணையத்தில் ஒரு கவியரங்கம் செய்யலாம் என்று நினைத்து இந்தக்கருத்தாடலை ஆரம்பிக்கின்றேன். நீங்கள் எழுதிய உங்கள் புதிய, பழைய காதல் கவிதைகளை இங்கே இணையுங்கள். உடனடியாக கவிதை எழுதும் நிலமையில் இருப்பவர்கள் உங்கள் கவிதைகளையும் எழுதி இங்கு இணைத்துவிடுங்கள்.. நான் முன்பு சிலகாலம் முன்னம் எழுதிய கவிதை மாதிரி ஒன்றை இணைத்து கவியரங்கை ஆரம்பித்து வைக்கின்றேன். இதுவும் கவிதையோ எண்டு எல்லாம் கேட்கக்கூடாது. ஏதோ எங்களால முடியுமானதை தானே நாங்கள் செய்யலாம். தொடந்து புதிதாக ஏதும் எழுதக்கூடியதாக இருந்தால் அவற்றையும் இங்கு இணைக்கின்றேன். உங்கள் ஆதரவிற்கு நன்றிகள்!

  9. ஒருவருட காதல் வருடப்பிறப்பு அன்று கோயிலில் திருவிழாக் கால மக்கள் திரளுள் கருவிழியாள் உன் பார்வையால் அரும்பியது என்னுள் காதல் தைப்பொங்கல் வரும்வரையில் தையலுன் பின்னால் தினமும் அலைந்த என் காதலுள் தொலைத்தாய் உன் இதயத்தை மாசி வந்ததும் நாமிருவரும் பேசி பேசி காதல் செய்தோம் பங்குனி மாதத்தில் உன் சங்கு கழுத்தில் முத்தமிட்டேன் சித்திரை மாதம் வந்ததும் நித்திரையின்றி புரண்டேன் வைகாசி பூத்ததும் நாமிருவரும் கைராசி பார்த்து சந்தோசப்பட்டு ஆனி வந்ததும் உல்லாசமாக தேனீக்கள்போல பறந்து திரிந்து ஆடி வந்ததும் இருவரும் பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர் ஆவணி உதித்ததும் உனக்கு நான் தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில் புரட்டாதியு…

  10. அருவி ஊற்றெனஅழுது வடித்தவள்அடங்கிக் கிடக்கிறாள்பொருமி வெடித்திடபுழுங்கித் தவிக்கிறாள்தழுவித் தகித்தவள்தயங்கி நிற்கிறாள்ஒற்றைநாள்ஒருதலைப்பட்சயுத்த நிறுத்தமாம்சத்தம் இன்றிசலனம் இன்றிஇப்போதான்சற்று சிரித்துச்சிவக்கிறாள்சிவக்கிறாள்சிரிக்கிறாள் இவளெனசிந்தை தெளிந்துசிரிக்க முடியவில்லைஒருதலைப்பட்சஒருநாள்யுத்த நிறுத்தம் தானாம்யுத்தம் எப்பவும்சத்தத்தோடு வெடிக்கலாம்பாதிப்பு முன்னதை விடபலமாயும் இருக்கலாம்யுத்த நிறுத்தம்காலவரையற்றுநீடிக்கவும் படலாம்எதற்கும் தயாராய்த்தான்இருப்பை நிலை நிறுத்தஎடுத்தடி வைக்கிறேன்...#ஈழத்துப்பித்தன்19.04.2016 http://inuvaijurmayuran.blogspot.ch/2016/04/blog-post_19.html

    • 7 replies
    • 1k views
  11. Started by சண்டமாருதன்,

    புணர்ச்சியின் பின் பெண் சிலந்தி ஆண் சிலந்தியை கொன்று தின்பதுபோல் ஈன்ற குட்டிகளை தின்னும் கரடிகள் கடற்சுறா போல் தோழில் சுமந்தவர்களை தோழில் இருந்தவாறே தலையை கடித்து குதறிய பொழுதுகள் ஏழாண்டுகள் கடந்தும் விடியாது விறைத்து நிற்கின்றது. யானையை கொன்று தந்தம் எடுப்பதுபோல் பிடரியில் அடித்தும் முதுகில் குத்தியும் தன் விரலைக் கொண்டே கண்ணில் குத்தி குருடாக்கிக் கொன்று கொன்ற பின் கட்டை விரலை வெட்டி எடுத்து கைநட்டு வைத்து பெற்ற பெருவாழ்விலிருந்து நேற்று நீலிக்கண்ணீர் வடித்தோம் இன்று அதற்கும் நேரமில்லை நேற்று எரியிற வீட்டில் புடுங்குவது லாபம் என்ற சூழல் இன்று எரிப்பதற்கு க…

    • 7 replies
    • 1.8k views
  12. கண்ணா லட்டு தின்ன ஆசையோ ?? எல்லோர்க்கும் தெரிந்த லட்டு எண்ணத்தில் இனிக்கும் லட்டு தின்னத் தின்ன திகட்டா லட்டு ரவா லட்டு , பூந்தி லட்டு....... நாலுபக்கமும் நாலுபேர் இழுக்க நாம் செய்த லட்டோ பலர் பல்லுடைத்து பாவப்பட்ட லட்டு.......... அவரவர் வாழ்வை அவராகவே தியாகம் செய்து திகட்டுவதற்கே , ரத்தத்தையும் தசையையும் பக்குவமாய் கலந்து தேசியத்தில் பதமாய் குழைத்து எங்கள் தியாகநெருப்பில் செய்த லட்டு ........... லட்டால் வந்த வெக்கை பலபேரைக் கிலி கொள்ள பலகைகள் ஒன்றாய் சேர்ந்ததே செய்த லட்டை பிரிக்கவே!!!!!!! லட்டுக்கு வந்த சோதனை உடன் சேர்த்த கஜூ பிளம்ஸ்சால்........ மெல்லிசு மெல்லிசாக லட்டுவும் உலுர்ந்ததே !!!!! மண்ணுடன் மண்ணாக கரைந்ததே !!!!!!!! கண்ணா ம…

  13. வேண்டாம் இனி ஒரு தீக்குளிப்பு ......... தியாகியே முருகதாசா ..... ஏன் இந்த அவசரம்..... உன் கல்வி இளமை ,உன் உயிர் நம் விடியலுக்கு தேவை அப்படி இருந்தும ஏன் இந்த் அவசரம் தீக்குளிப்பு தான் முடிவென்றால் மீதியை யார் முன்னெடுப்பது ... தேவையல்லவா உன் போன்ற இளையர்களின் பணி ... முருக தாசா ...முத்துக்குமரா ... ஏன் இந்த அவசரம் .பணியாற்ற ஏதேதோ வழி இருக்க மீள பெறமுடியாத . விலைமதிப்பற்ற உயிரை ஈந்த செல்வங்களே நீள் துயில் கொள்வீர் . .மலர்வீர் தமிழ் ஈழத்தில் ஒரு பூவாக .. .அமைதி ..... புறாவாக

  14. தமிழினமே.......நீ தகிக்காதே தவிக்காதே தளர்ந்து விடாதே.... துடிக்காதே துவளாதே துன்பப்படாதே..... மறக்காதே மயங்காதே மடிந்து விடாதே....... ஓடாதே ஒழியாதே ஓய்ந்து விடாதே....... தயங்காதே தலை குனியாதே தனியாதே தாகம் தான் தமிழீழத் தாகம் தான் திக்காதே திணறாதே திகைக்காதே பொய்க்காதே தமிழீழம் பொய்க்காதே.

    • 0 replies
    • 1.4k views
  15. Defending Tamils is Tamils’ responsibility Saturday, 02 May 2009 21:02 administrator -When - When Sri Lankan state unleashed its hate, World failed to defend Tamils’ fate. When they killed without hesitation, World stood still in hallucination. When they sent us on boats to the North, World looked at us as refugees of no worth. When the Tsunami swallowed our families, World treated us like we were anomalies. When we saw murders with heart full of terror, World looked in its rearview mirror. When those devils did the slaughter, World let Tamil lives become shorter. When we stood-up peacefully against Racists, World …

  16. பழி மறந்துவிட்டாய் போ…! எமை ஊர்விட்டு-உறவுகளின் உயிர்விட்டு போகச் செய்தவனை உனில் வேர்விட்டு-எம் மண்ணில் படரவிட்டு நிற்கின்றாய்…? காதல்..! சாதி,மதம் பார்க்காத சமத்துவவாதிதான்-அதற்காக உறவையெல்லாம் கொன்று-பெண்கள் கற்பையெல்லாம் தின்று…. பசியாறிக் கொண்டவனை கட்டிக்கொண்டாயே….? உனதூரில்… காந்தனோ,சாந்தனோ,கந்தனோ கிடைக்கவில்லையா? இந்தக் களுபண்டாவா கிடைத்தான் நீ காதல் மணம் புரிந்து கொள்ள..? உனைத் தொடும்போதெல்லாம்-நீ கட்டியவனிற்கு மட்டுமே கடைவிரிப்பதாய் சிலிர்ப்பாய்… அவன் எப்படி நினைப்பானோ…! முள்ளிவாய்க்காலில் குற்றுயிராய்க் கிடந்தவரை தாம் புனர்ந்ததை நினைப்பானோ…! கண்களைக் கட்டி பெண்களைக் கொல்வதற்கு முன்னே கூட்டமாய் சதை பிய்த்துத் தின்றத…

  17. http://www.youtube.com/watch?v=encZArh2wrY&NR=1 வாழ்க்கை இருளுக்குள் அடங்கி பரிதவித்து மடிகின்றது எங்கள் அவலக்குரல்கள் உலக ஜனநாயகத்துள் அமைதியாகின்றது வல்லவர்கள் வெல்வார்கள் என்பது இயல்பாகின்றது மனிதாபிமானம் வேடிக்கை பார்க்கின்றது வல்லரசுகளின் போட்டி இயந்திரத்தால் நாம் விழுங்கப்பட்டோம் இயந்திரத்தின் செமித்த கழிவுகளாய் எஞ்சி நிற்கின்றோம் கழிவுகளையும் மீள இரையாக்கும் புதிய உலக ஒழுங்கின் முன்னால் மண்டியிட்டு மெளனித்து நிற்கின்றோம் என்னை சாதி சொல்லி உதைத்த கால்களை இறுக்கப்பற்றிக்கொள்கின்றே

  18. Started by nochchi,

    புதிய பௌத்தம் யு9 பாதை திறந்தாயிற்று ஈழத்தமிழர்களின் வாழ்வுபோல் தலை இல்லாத் தென்னையும் பனையும் தான் தெருவெங்கும் தோற்றுன்றன. துக்கத்திலும் அவமானத்திலும் தலைகுனிந்து நிற்கும் மரங்களுக்கும் எம்மக்களுக்கும் துப்பாக்கி காட்டியே ஆறுதல் சொல்கிறார்கள் படைகளும் அவர்களின் குடைகளும். துப்பாக்கி தூக்கிய கைகள் வெறுமையாக உயர்த்தப்பட்டபோது வெளிநாட்டில் எம்தமிழ் மனங்கள் விதைவையாய் போயின. மாறிநின்றவர்களுக்குக் கூட மாண்டவர்கள் தமிழரின் அடையாளமாய் போயினரே. திவசத்துக்குக் கூட அடையாளம் இன்றி வன்னி வடுவின்றி எலும்புகள் கூட எரியத்தொடங்கிவிட்டன- ஆனால் …

    • 2 replies
    • 945 views
  19. இடுகாட்டு இருட்டில் சிதைக்கு மூட்டும் தீயில் வெளிச்சம் பிறக்கும் என்று மாண்டார்கள் அடிமைகள் ஆழுக்கொரு கொள்ளிக்கட்டையை எடுத்து காலடி வெளிச்சம் பிடித்து எஜமான் வீடு நோக்கி நடந்தார்கள் நெஞ்சாங்கட்டையையும் பங்குபோட்ட அடிமைகளைப் பார்த்து சிதைகள் எழுந்து அழுது மீண்டும் மடிந்தது. எஜமானின் கோடிக்குள் திவசம் கொண்டாடவும் முடியாத அடிமைகள் காக்காவுக்கு சோறு வைக்க கரைகின்றார்கள். சீமைப்பசுவின் கோமயத்தில் முகம்கழுவி முக்தி பெற்ற பெருமக்கள் ஆங்காங்கே திவசம் கொண்டாடுகின்றார்கள். வடையும் வாய்பனும் கூடவே டோனற்றும் படைக்கின்றார்கள். காரிருளை கலைத்த சிதைகளின் தீயையும் சூறையாடிய அடிமைகள் மேற்கில் வெண்மேகம் மோதி மின்னல் பாய்ந்து தேசம் விடியும் என்ற கனவில் மிதக்கின்றார்கள். கதிரவன் …

  20. அரசன் கொண்டு வந்த பழங்களுக்காக நாம் வழங்கிய பூக்கள் அரசன் பழங்களுடன் வந்திருக்கிறான். யுத்தத்தில் பிடுங்கப்பட்ட பழங்களை நேற்று மைதானம் எங்கும் எறிந்துகொண்டிருந்தான். நான் இப்பொழுதும் கேட்கிறேன் அடிப்படையாக எங்கள் வேலிகளில் இருக்க வேண்டிய மரங்களையும் குழந்தைகளின் பொம்மைகளையும் தந்துவிடு என்று. என் அன்பு மிகுந்த சனங்களே! எங்கள் பிடரிகளால் குருதி கசிந்துகொண்டிருக்க இந்த மைதானம் இழந்தவற்றைக் கோரிக்கொண்டிருக்கிறதை நீங்கள்தான் அமைத்து வைத்திருக்கிறீர்கள். எங்கள் கோரிக்கைகளும் அரசனின் தந்திரம் நிரம்பிய வாக்குறுதிகளும் நஞ்சுக் கனிகளில் மறைந்திருக்கின்றன. துக்கம் உறைந்த நாட்களை எண்ணி கவலைப்படும் எங்கள் தந்தையே! ஒரு நாள் குழந்தைகள் புதருக்கிடைய…

  21. புதிய கிளிநொச்சி அழகு தேசமே எழில் கொஞ்சும் பேரழகே-உன் இறக்கை ஒடிந்து இயற்கை வற்றி இடிந்து போனதேனோ உறக்கம் அறியா-எங்கள் ஊர்களின் மெளனம் தான் என்ன..? பட்டுப் போய் கிடக்கும்-என் பழைய ஊரே கிளிநொச்சி மண்ணே-நீ கிலி கொண்டு இருப்பதேனோ...? உன்னில் கொட்டுண்டு கிடக்கும் அத்தனை அழகும் எங்கே...? சாலையோரம் உயர்ந்து நின்ற கட்டடங்களே........... டிப்போ பேருந்து தரிப்பிடமே... யாருக்கு ஏது செய்தீர் தெருவின் ஓரம் சிரித்து நின்ற சந்திரன் பூங்காவே உன்மீதும் புதியதோர் சிலையா..? சிங்கள வெறியன் நினைவுத் தூபியா நீ அதிர்ந்தாவது வீழ்த்திடமாட்டாயா..? இதமிதமாய் குளிரவைத்த சேரன் பாண்டியன் சுவையூற்றுக்களே உங்கள் அத்திவாரங்கள் எங்கே...? நீதி …

    • 5 replies
    • 1.7k views
  22. Started by சந்தியா,

    புரட்சி அழுது பார்த்தோம் தொழுது பார்த்தோம் உழுதும் பார்த்து விட்டோம் சமூகத்தைப் பழுது பார்க்கவெனத் தலைவன் புறப்பட்டான் ஆலம் விழுதுகளாய் தோழர்கள் ஆயிரம் பார்த்து விட்டோம் இனி எழுகின்ற கதிரவனைப் பார்த்திடுவோம் பார்த்திடுவோம் Inthuja Mahendrarajah நன்றி இது என் மனதை நன்றாக கவர்ந்த ஒரு கவிதை அதனால் தான் உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.

  23. வெறுமையாய் த‌னிமைக்குள் சுழ‌ல்கின்ற‌ ப‌ய‌ண‌ம் அமைதிக்குள் தொலைந்துவிட‌ நினைக்கின்ற‌ ம‌ன‌ம் இவைக‌ளை இய‌ல்பாய் இணைக்கின்ற‌ கோடாய் நின் புன்ன‌கையின் சாய‌ல் நினைவுக‌ளில்-அன்னையே வாழ்க்கைப் பாதையில் வலிமிகும் பொழுதுகளில் ஏக்கங்கள் எழுந்து எரிக்கின்ற வேளைகளில் உணர்வுகள் உடைந்து உயிர்சுடும் கணங்களில் தாங்க முடியாமல் தவிக்கும் தருணங்களில் உணர்வற்ற ஜடமாய் வார்த்தைகள் வடிந்து வலியோடு வருமொரு முனகல் ’அம்ம்ம்மா’ மெல்ல வலிகுறைந்து கண்ணில் நீர் நிறைந்து ஏக்கப் பெருமூச்சொன்று எழுந்து அடங்கிவிட மீண்டும் முன்புபோல் முட்டி மோ…

  24. Started by மாறன்,

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.