கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இனியவளே... தளர்நடை பாதங்களுக்கு உனது கரங்களின் தேவையை பூர்த்தி செய்யும் இந்த குடை தான் இப்போது துணையாயுள்ளது குடைக்கார ஐயாவிற்கு சாப்பாடு போடு குடைக்கார கிழவனை திண்ணையில் துங்க விடாதே குடைக்கார தாத்தாவிற்கு லூசு பிடிச்சுருக்கு என ஒற்றை அடையாளமுமாய், வாழ்தலின் சான்றாயுமுள்ளது அடைமழை நாளில் நனைந்து வருமென்னை துவட்டியபடி வரும் உனது வசவுகளை போலல்லாது மௌனமாய் நின்று காக்கிறது பெருமழைகளில் முன்னெப்போதையும் விட பலவீனமாய் இருந்தாலும் இந்த குடையை விரிக்குமளவு திரானியோடிருப்பதில் எல்லையற்ற மகிழ்ச்சி எனக்கு பிராயத்தின் நினைவுகள் அலையோடும் பொழுதுகளில் குடையை விரித்து சுற்றியபடி இருப்பேன் கானல் வெளியில் நாமிருவரும் குடைக்குள் நடந்து போ…
-
- 16 replies
- 1.2k views
-
-
சிந்தனை எனை விட்டு என்றோ போனதனால் கேட்கும் எதுவும் மனதில் பதிய மறுக்கின்றது பசிதாகம் கூட எடுக்காமல் கிடக்கின்றது நாவின் சுவை மறந்து நாளாகி விட்டது பச்சைத் தண்ணீர் மனம் மறுக்க எப்போதும் பழசெல்லாம் வந்து வந்து போகின்றது காதில் கலகலப்புக் கதைகேட்டு நாளாகி கட்டியவன் கூட காலாண்டாய் இல்லாமல் தொட்டதுக்கும் துணைவேண்டி துயரோடு தூக்கமிழந்து கிடக்கிறேன் கடைகண்ணி சென்றும் கனகாலம் ஆகி கண்ணாடி கூடக் கறுப்பாகிப் போச்சு கண்பார்வை போயும் கனநாளாய் ஆச்சு கோயில் குளமுமில்லை கூடிப்பேச யாருமில்லை கொண்டை மயிர் முடியக் கூந்தலில்லை கோதிக் காயவைக்கும் நிலையுமில்லை பத்துப் பிள்ளை பெற்றும் பசியாற வழியுமில்லை பட்டினி கிடக்கவும் பாள்மனது கேட்குதில்லை பக்கத்தில் இருப்போரின் பாசம் இழந்…
-
- 16 replies
- 8.7k views
-
-
என்னாங்க நம்ம தமிழ்நாட்டில பாட்டெழுதுறவங்க நம்மூரில உள்ள எதையாவது கோத்து பாட்டாக்கிடுவாங்க.. ஏங்க ஈழத்துல இப்பிடி எழுத மாட்டாங்களா? இது நாட்டுப்புறப்பாட்டுங்க புடிச்சிச்சு கொண்டாந்து போடறேன்... ஆக்கம் :- கொ. பெ. பிச்சையா முத்தமிழாய் தோணுதடி முத்துப்போல பல்லழகி முறுவலாய் சொல்லழகி கொத்துக்குலை கனியழகி கோவைப்பழ இதழழகி செப்புச்சிலை சீரழகி – உன்னை சேர்த்தணைக்கத் தோணுதடி திருவாரூர் தேரழகி தென்மதுரை ஊரழகி திருச்செந்தூர் அலையழகி தஞ்சாவூர் கலையழகி ஶ்ரீரங்கக் கோபுரமே – உன்னை சேவிக்கத் தோணுதடி தேனியூர் செங்கரும்பே திருவண்ணைக் கற்கண்டே வேம்பூறுக் கருப்பட்டியே வெள்ளியணை அ…
-
- 16 replies
- 1.2k views
-
-
முகநூலில் அகப்பட்ட கவிதை கவிஞர் தமிழ்தாசன் எழுதியது......கவிதையைப்படித்து முடித்து நீண்ட நேரமாகியும் இன்னும் வெளிவராமல் அதிர்ந்து போய் நிற்க வைத்திருக்கும் எழுத்து..... யாழ்க்கருத்துக்கள நண்பர்களுடனும் இதனைப்பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற ஆவலில் இங்கு பதிவிடுகிறேன். விலைமாது விடுத்த கோரிக்கை..! ராமன் வேசமிட்டிருக்கும் பல ராட்சசனுக்கு என்னை தெரியும். பெண் விடுதலைக்காக போராடும் பெரிய மனிதர்கள் கூட தன் விருந்தினர் பங்களா விலாசத்தை தந்ததுண்டு. என்னிடம் கடன் சொல்லிப் போன கந்து வட்டிக்காரகளும் உண்டு. சாதி சாதி என சாகும் எவரும் என்னிடம் சாதிப் பார்ப்பதில்லை. திருந்தி வாழ நான் நினைத்தபோதும் என்னை தீண்டியவர்கள் யாரும் திரும்பவிட்டதில்லை. பத்திரிக்கையாளர்கள…
-
- 16 replies
- 7.8k views
-
-
விடுதலை வேண்டும் என்கின்ற மானிடா இறக்கை அடிக்கும் பச்சைகிளிதான் நானடா என்னை சிறைப்படுத்தி அழகு பார்ப்பது ஏனடா அழகா இருப்பது என் தப்பா நீயும் சொல்லடா உனக்கு இருக்கும் உரிமை எனக்கு ஏன் இல்லையா? இது என்ன நியாயம் நீயும் சொல்லடா?
-
- 16 replies
- 1.3k views
-
-
கடற்கரையில் நாம் நடந்த சுவடுகளை கடலலை அழிக்கும்! கண்ணே நீ என் இதயத்தில் நடந்த சுவடுகளை யாரழிப்பார்? *********** மனசுக்குள் மத்தாப்புக் கொளுத்தியவள்... மனசையே கொளுத்துவாள் என்று யார் அறிவார்? *********** வீணை அங்கே விரல்கள் இங்கே இராகத்தை மட்டும் ஏனடி திருடிக் கொண்டாய்? *********** என் இதயச் சுவற்றில் உன் ஞாபகச் சிலுவைகள்! எப்போதடி உயிர்த்தெழும்?
-
- 16 replies
- 6.5k views
-
-
ஆதாம், ஏவாளாய் வாழ்ந்த காலத்தில், ஆண்டவன் உனக்குக் கட்டளையிட்டானாம்! அந்தக் கனியை மட்டும் புசித்து விடாதே, என்று! ஆசை உன்னை விட்டுவிடவில்லை, கனியிலேயே உன் கண்ணிருந்தது, கடவுள் மறைந்ததும் கனி உன்னிடமிருந்தது! இராமன் ஒரு சிறு குழந்தை, மண்ணுருட்டி விளையாடுகிறான்,, உன் கூனல் முதுகில் பட்டு விட்டது! உலகமா அழிந்துபோய் விட்டது? ஓடோடிப்போய் கைகேயிக்கு உருவேற்றினாய்! காடேகினான் ராமபிரான், மாயமானாகி மாரீசன் வந்தான், மயங்கிப் போய் நின்றாள் சீதாதேவி, மணாளா, எனக்கு அந்த மான் வேண்டும், மானைத் தேடிப்போனவனைக் காணவில்லை,, காவலிருந்த இலக்குவனைக் கலைத்தாள, அண்ணன் திரும்பி வருவான், கவலை விடு, அண்ணன் இறந்து போன பின்னர், என்னை அடைய நினைக்கிறாயா, இலக்குமணா? பேதலித்துப்ப…
-
- 16 replies
- 2.1k views
-
-
இரண்டுக்கும் ஐந்துக்கும் நடுவில், என் இடதுகை இரண்டு விரல்களை... பாலர் பள்ளி செல்லும்வரை... சூப்பிக்கொண்டிருந்த காலமது! எல்லோருக்கும் செல்லமாய்... துள்ளித்திரிந்த காலமது! பசி என்பதே வருவதில்லை... கள்ளத் தீனிகளில் பசியாறியதில், அம்மா அன்போடு ஊட்டிவிடும் உணவுகூட அதிகமாகவே தெரியும்! முழுநேர வேலையென்பது ... நாள்முழுதும், விளையாடிக் களைத்த பின்... விரல் சூப்பியபடியே தூங்கிவிடுவதுதான்! என் கனவுகளில் தேவதைகள் வந்து... பறக்கும் விளையாட்டு விமானங்களை... பரிசளித்துச் சென்றார்கள்! எதைப்பற்றியும் எனக்குக் கவலையில்லை! எதிர்பார்ப்புக்களின் உச்சக் கட்டங்கள்... நான் ஆசைப்பட்ட விளையாட்டுப் பொருட்கள்தான்! மூக்கு வழிய அழுது வடித்தால்... என்ன வ…
-
- 16 replies
- 1.9k views
-
-
பூங்கா மிருகங்களின் அன்புமொழி ஒருபக்கம் பறைவகளின் சங்கீதம் ஒருபக்கம் சின்னஞ் சிறுவர்களின் மழலை மொழியோ மறுபக்கம் காதலர்களின் காதல் மொழியோ இன்னொருபக்கம் இவை மட்டுமா? மரம், செடி, கொடிகள் அசையும் இனிய கீதங்கள் அத்துடன் கூடியே அழகிய பூக்களின் நறுமணங்கள் இவற்றையெல்லாம் உள்ளடக்கிய –ஓர் அழகிய இடம் பூங்கா!
-
- 16 replies
- 3.1k views
-
-
யாழ் இணைய நண்பர்களுக்கு... கவலைகள் சுமக்கும் கவிகளே கண்ணீர் நிறைந்த கண்களை திறந்து கண்ணென்று தெரியும் உங்கள் உள்ளத்தை பாருங்கள் நீங்கள் சில நொடி வாழும் வீட்டில் பூச்சியும் வீறு கொண்டு வாழும் போது நல் வழி உண்டு நீங்களும் வாழ மனபலம் எனும் வாளை எடுங்கள் தடுக்கும் பாறைகளை வெட்டியெறியுங்கள் நடுக்கடலில் விழுந்தாலும் மூச்சுள்ள வரை நீந்தப் பழகுங்கள் இருட்டில் ஓவியம் வரைவதை நிறுத்துங்கள் வெளிச்சத்தில் கோடு போட பழகிக்கொள்ளுங்கள் கோடுகள் ஏணிகள் ஆகட்டும்... ஏணிகளில் உங்கள் பயணம் தொடங்கட்டும் மனதை விரிவாக்குங்கள் விண் மீனை தொட முயற்சி செய்யுங்கள் தோல்வி என்பதும் ஒருவகை பலம் தான் இறுதி வரை போராடுபவர்களுக்கு...
-
- 16 replies
- 2.2k views
-
-
கரியமேகங்கள் திரண்டு கலையும்_அந்த நிழல் படிந்து மறையும், வெயில் பட்டு தேகம் சிலிக்கும், மெல்லிய கூதல் காற்றில் பரவும். மாலை சரிகையில் _அந்தரத்தில் மழைப்பூச்சிகள் உலாவும் பின்னான இரவுகள் இருண்டு கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். நீர் மோதும் வரப்புகளில், கொக்குகளும் நாரைகளும் நடைபோடும் இரை தேடி, சிலநேரம் இடம் மாறும். வத்தாக்கிணறு மேவிக்கிடக்கும் வெள்ளம் மிதப்பவற்றில் எல்லாம் எரியெறும்புகள் ஏறித்தவிக்கும். காற்றில் சலசலக்கும் நெற்கதிர்கள் நெஞ்சம் தொடும், *நெற்கொழுவில் விதைக்காத சில நிலத்தில் அல்லியும் நீர்முள்ளியும் முளைதள்ளி கிடக்கும். இது மாரிகாலம் எந்தனூரில். பச்சைபிடித்து, அடர்ந்து நிற்கும் ஆலமரம்_அருகில் அடங்கி இருக…
-
- 16 replies
- 1.4k views
-
-
கை தவழும் காதல் பூ விழுந்த மனசு மற்றும் சிதறல்கள் என்ற கவிதை தொகுப்புகளை (இன்னும் வெளிவராமலேயே) இந்த யாழ் இணையத்தினூடாக உலாவ விட்டிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக இனி இந்த கிறுக்கல்களும் வரவிருக்கின்றன. கடிகாரத்தின் முட்களோடு போட்டி போட என் பேனாக்களிற்கு முடியவில்லை. ஆதலால் இயலுமானவரை தருகின்றேன். இன்று தவழ்ந்த காதல் (எனது மகளை நினைத்து கிறுக்கியது) அலைகடலில் ஓடமாய் அந்தரிக்கும் விழி அழகோ அடுக்கடுக்காய் உதிர்ந்து விழும் புன்னகைப் பூக்கள் அழகோ ஆயிரம் அர்த்தம் விதைக்கும் அசைவுகள் அழகோ என் மஞ்சத்தில் உருவாகி கைகளில் தவழுகின்ற காதல்தான் உன்னழகோ அழகிற்கே அழகுரைக்கும் உன்னழகுதான் எதுவோ ?
-
- 16 replies
- 3k views
-
-
பேராவலுடன் பெய்யும் பெருமழையாய் எனக்குள் இறங்கிச் செல்கின்றாள் என்னுயிர்த் தோழி என் வரண்ட காடுகளுக்கிடையே பாய்ந்து செல்லும் பெரும் ஆறாய் பெரும் தீயுக்குள் இறங்கிச் செல்லும் பனிக்காற்றாய் மனவெளிகளில் புரண்டு எழும் கடலலைகளாய் எப்பவும் எனக்குள் வியாபித்த பெரும் பொருளாய் நீக்கமற நிற்கின்றாள் என் தோழி ஆயிரம் முத்தங்களை பதியும் இரு இதழ்களில் கோடி கணங்களை உறையவிடும் தந்திரக்காரி மார்புகளின் இடையே என்னை சோழிகளாய் சுழட்டி எறிந்து வித்தைகாட்டும் சாகசக்காரி தன் வாசல்கதவுகளால் வாரிச் சுருட்டி தனக்குள் பொதித்து இன்னும் இன்னும் என என்னை தனக்குள் பருகிக் களிக்கும் பேராசைக்காரி ஆற்றாத் துயர் மேவி நான் எனைத் தொலைந்த கணங்களில் எல்லாம் ஆயிரம் விரல்கள்…
-
- 16 replies
- 7.3k views
-
-
கவிதையின் கவிதைகள் http://eluthu.com/ka...image/51704.gif எண்ணங்களும் நினைவுகளும் அதிகமாகப் பயணிக்கும் இரவுவெளிகளின் இறுதியில் கண்களின் ஈரங்களோடு... உறங்கிப்போகின்றது "நேற்று" ! நாளைய அதிகாலையின் இறுதிகள் மீண்டும் மீண்டும்... இரவுகளையே கொடுத்துவிட்டுச் செல்கின்றன! விடியாத இரவுகள் இருந்தாலும் பரவாயில்லை என... ஏங்குகின்றது மனம் இப்போது! கவிதை அனுப்பிய கவிதை பகுதி 1 ஐப் படிக்க இங்கே அழுத்துங்கள் http://www.yarl.com/...howtopic=105253
-
- 16 replies
- 1.3k views
-
-
படித்ததில் பிடித்துப் போய் பகிர விரும்பும் ஒரு கவிதை இது விகடன் இணையத்தில் உலாவரும் போது கண்ணில் பட்ட ஒரு கவிதை. நானே கேள்வி நானே பதில் பகுதியில் இடம்பெற்று இருந்தது. ''ராஜபக்ஷே...'' ''சமீபத்தில் 'காக்கைச் சிறகினிலே’ என்கிற சிற்றிதழில் படித்த ஸீர்கோ பெகாஸின் கவிதைதான் நினைவுக்கு வருகிறது... 'வான்வெளியில் கொல்லப்பட்டன அந்தப் பறவைகள் கொலைகாரர்களுக்கு எதிராக நட்சத்திரங்களும் மேகங்களும் காற்றும் கதிரவனும் சாட்சி கூறவில்லை என்றாலும் அடிவானம் அதுபற்றிக் கேட்க விரும்பவில்லை என்றாலும் மலைகளும் ஆறுகளும் அவற்றை மறந்துபோய்விட்டாலும் ஏதேனும் ஒரு மரம் அந்தக் கொடுஞ்செயலைப் பார்த்துத்தானிருக்கும் தன் வேர்களில் அக்கொடியோனின் பெயரை எழுதிவைக்கத…
-
- 16 replies
- 6.2k views
-
-
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை எத்தனை தடவை சொன்னேன், அந்த கறுப்புப் பை கவனம் என்று மனைவி கவலைப்பட்டாள், அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே... காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள் இன்னும் 10 நாட்கள் கடற்கரையில் உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ... இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு தொலைபேசி செய்தியில் மூழ்கிப் போனான் நாளைய நாள் கண் முன்னே நடமாடியது, அலுவலகத்தில் முக்கிய மூன்று சந்திப்பு, நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும் அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ... முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார், நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்…
-
- 16 replies
- 1.9k views
-
-
-
- 16 replies
- 4.6k views
-
-
வேட்டைக்காறி....... இவள் நச்சுக்குண்டைப் போடவைத்த மோசக்காறி....... நாடு விட்டு நாடு வந்த வேட்டைக் காறி...... இத்தாலி நாடு தந்த அகங்காரி..... அப்பனோ சர்வாதிகாரி..... ஆத்தாளோ இறுமாப்புக்காறி...... மகளோ அடங்கா பீடாறி...... உன்னால் நாம் நிற்கும் நிழலும் இழந்தோம்... இருக்க வீடும் இழந்தோம்.... படுக்க பாயும் இழந்தோம்.... உண்ண உணவும் இழந்தோம்..... உன் தாலி போனதால் எங்கள் தாலியையும்: அறுக்க நினைத்தாயே...? உனக்கு அப்பாவித் தமிழர் நாம் என்னதான் பாவம் செய்தோம்....? காடேறி உனக்கு தாலியின் மகிமை தெரியுமா...? காலையில் ஒண்டு மாலையில் ஒண்டு அது உன் கலாச்சாரம்....! ஒருவனுக்கு ஒருத்தி அது எங்கள் கலாச்சாரம்..... இந்திராவ…
-
- 16 replies
- 1.7k views
-
-
கவிதைக்குள் எழுத வரவில்லை ஏன் என்று தெரியவில்லை அதனால் தான் இதனுடாக அனுப்புகின்றேன் காதல் காதல் புனிதமானது அற்புதமானது முறையாக உண்மையாக காதலிக்கும் போதுஃ ஆனால் தற்போது காதல் மலிந்து முறை கெட்டு விட்டது அதுவும் வெளிநாடுகளில் காதல் சீர்குலைந்து விட்டது காதலர்கள் சோடி மாறியது அல்ல அதிசயம் கணவன் மனைவி குழந்தைகளை அநாதையாக்கி சோடி மாறுவதுதான் ஆச்சரியம் வேதனை அதுமட்டுமா தாயகத்தில் நிச்சயிக்கப்பட்டு ஏன் திருமணமும் செய்து கொண்டு வெளிநாடு வந்து அவர்களை ஏமாற்றி விடுவது கொடுமையல்லவா அதுவும் இப்பொழுது நடக்கின்றது ஒருவர் காதலித்து விட்டு அல்லது திருமணம் செய்துவிட்டது அதை உதறி எறிந்து விட்டு இன்னொருவரை காதலிப்பதாக அவர்…
-
- 16 replies
- 4.7k views
-
-
உன் நிழல் கூட இனி உனக்கு இல்லை!! வெட்டி வெட்டி எறிந்தாலும் நகம் துளிர்விடும்...! துட்டகைமுனு படை... விட்ட தவறை.... சரி செய்ய.. விளங்காமல் தவிக்கும்! செத்து செத்து பிழைக்கும்... இனத்தின் முகத்தில்-ஒரு சிரிப்பு பூக்கும்...!! யூலை படுகொலை... ஆரம்பம் அவருக்கே-இனி முடித்து வைக்க.... முடியுமா அவராலே? தன் வினை.. தன்னைச் சுடும்... தமிழனை எரித்தவர்.. வாழ்வு........ இனி தலைவர் அனுமதி பெற்றே... தன் நிழலைக்கூட இனி தான் நம்பும்!!
-
- 16 replies
- 2.3k views
-
-
தோழிகளின் கிண்டல் பேச்சில் "வெட்கித்து தலைகுனிந்திருந்த" தருணங்களவை.... எதிர்வரும் பேய்களின் கண்ணிற்க்கு "விருந்தாகி நாணிக்குறுகியிருந்த" தருணங்களவை.... தலைவனின் தழுவலில் "பெண்மையில் சிலாகித்திருந்த" தருணங்களவை.... குழந்தையின் அரவணைப்பில் "தாய்மையில் திளைத்திருந்த" தருணங்களவை.... கண்ணாடியின் பிம்பங்களில் வழிந்த "வனப்புகளில் பெருமித்திருந்த" தருணங்களவை.... . . . அவ்வாறு இருக்க கூடாதென "கடவுளை வேண்டியிருந்த" தருணங்களவை.... அப்படியேயென கும்பிட்ட "கடவுள் கைவிட்ட" தருணங்களவை... தனக்கு மட்டும் ஏன்? இப்படியென "ஆற்றாமையில் அழுதிருந்த" தருணங்களவை.... "கற்சிலைக்கேன் இத்துணை கலைநயமென" கண்கள் பூத்திருந்த தருணங்களவை ... "கடன்பட்டு புலம்பெயர்த்…
-
- 16 replies
- 1.2k views
-
-
மெல்லிதாய் மேலெழும்பி நாள் தோறும் புலர்ந்து மறையும் வலையுலக நாழிகைகள் நடுவே தொலைந்து போகின்றன எங்களின் உணர்வலைகள்! நிரூபனின் நாற்று ஆண்கள் மட்டும் தான் அதிகம் எழுதலாம் என்பதும் அவர்கள் மட்டும் தான் தம் உணர்வுகளை உச்சுக் கொட்டலாம் என்று கூறுவதும் யார் இங்கு இயற்றி வைத்த சட்டமோ தெரியவில்லை! எங்களுக்குள்ளும் சாதாரண மனிதர்களைப் போன்ற மன உணர்விருக்கும், எம் உணர்வுகளுக்கு உருவம் கொடுத்து எழுதிட இணையம் வாய்ப்புத் தந்தது- ஆனால் எம் இடையே உள்ள பச்சோந்திகளும், நரிகளும் காழ்ப்பில் எம்மைக் கொல்கிறார்கள்; காம சுகம் தேடும் மோகத்தில் அலைந்து காறி உமிழ நினைக்கிறார்கள்! நாளைய பெண்களின் விடுதலை நம் உளத்தில் தோன்றும் இன்றை…
-
- 16 replies
- 1.8k views
-
-
மாலை ஒன்று நான் தொடுக்க மலர்பறிக்கப் போயிருந்தேன். கைநீட்டிக் காம்போடு - நான் பூ பறிக்கு முன்னே 'பூ கேட்டது...' 'நாளை நான் வாடிப்போவேன் இன்று என்னை வாழவிடு' பூபதியின் நினைவுநாள் என்று நான் சொன்னதுமே நேற்று என்னை மொட்டோடு பறித்திருந்தால் பூபதித்தாயின் கழுத்தில் இரண்டு நாள் மாலையாய் வாழ்ந்திருப்பேன். வளைந்து கொடுத்தது பூ என்னை வாரி எடுத்துக்கொள் என்று. பூபதித்தாய் அவள் உருகி பூத்த தமிழினத்தின் வாடாத நினைவுப் பூ. வாழ்க்கையே உணவுக்காக வாழும் பிறப்பில் இனத்தின் வாழ்வுக்காய் உணவு மறுத்து உதிரம் உறைந்து உடலை உருக்கி உயிரை காற்றோடு கலந்து மாமாங்கப்பிள்ளையார் உள்ளே கற்சிலையாய் இருக்க உண்மை தெய்வமாய் நீ வீதியிலே கிடந்ததை நெஞ்சம் மறக்குமோ தாயே...? தத்த…
-
- 16 replies
- 4.2k views
-
-
கனவும் நினைவும் உன்னால் கனத்து காலமும் நேரமும் போகிறதே உணவும் ஊனும் உந்தன் போக்கை தினமும் நினைத்து வேகிறதே! அடுத்து உன்னில் என்ன மாற்றம் என்ற எண்ணம் என்னுள்ளே தடுக்க முடியாப் பெரும் புயலாக இறுக்கி இழுக்குது தன்னுள்ளே! பொய்கையும் நீயாய் புழுக்கமும் நீயாய் வண்ணம் மாற்றி விரிந்தாயே - என் பொழுதும் நீயாய் கொள்கையும் நீயாய் எண்ணம் முழுதும் பரந்தாயே! செய்தியும் அறியேன் முயற்சியும் நாடேன் மெய்யாய் உன்னில் விழுந்தேனே கைதியும் ஆனேன்நீ சிறையும் ஆனாய் மெய்யும் உருக அமிழ்ந்தேனே! நாளை எப்படி நீவருவாய் என நினைத்து நினைத்து பதைத்தேனே காலை மாலை என வந்தாலும் காலம் நீயென துடித்தேனே! வாரா வாரம் தொடர்ந்து என்னை …
-
- 16 replies
- 2.4k views
-
-
காலைச் சூரியனை கையெடுத்துக் கும்பிட்டு.. மாலைச் சந்திரனை வீழ்ந்து வணங்கி.. சுழன்றடிக்கும் சூறாவளிக்கு பயந்து நடுங்கி... மின்னலும் இடியும் மரணத்தின் தூதென்று ஓடி ஒளித்து.. தீயதும் சுடுவது முன்வினைப் பயனென்றும் பூமியது அதிர்ந்து பிளப்பது பாவிகள் அழிவென்றும் இயற்கைக்குள் உள்ளதை விளங்காமல் உளறிய கணங்களில்.. எதிர்வினை சொல்லி பகுத்தறிவென்று வாய் வீரம் பேசி வீண் பொழுது கழித்திடாமல் ஆயிரம் கதை கட்டி அலைந்து கொண்டிராமல்.. மூளையைக் கசக்கி விண்கலம் கட்டி விண்ணுக்கு அனுப்பி வீர சாதனை படைத்த திருநாள் இன்று..! "புட்னிக்" எனும் மனிதப்பட்சி ரஷ்சிய மண்ணிருந்து விண்ணேகி அரை நூற்றாண்டும் கடந்தாயிற்று. மனித வரலாற்றின் புது …
-
- 16 replies
- 2.7k views
-