Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நீயும் நானும் ஒன்றுதான் அங்கே மண்ணை நேசித்தவர்கள் மண்ணுக்குள் பிணம்களாய் இங்கே மண்ணை நேசித்தவர்கள் மண்ணின்மேல் பிணம்களாய் ஆராய்சி செய்வோம் இதயம் இல்லாதவர்களுக்கு எவ்வாறு ரத்த ஓட்டம்

  2. ஆரிடம் சொல்லியழ? தொலைபேசி வைத்திருப்போரே! தொலைந்து போங்கள்…. தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம்…

  3. ஆரிடம் முறையிடுவோம்? ஆரிடம் முறையிடுவோம்? எவரை நம்புவோம்? அவனியிலே எம்மை அணைத்திட யாருளர்? போரியல் வாழ்வினைப் பழக்கத்திற் கொண்டோம் புதியவை யல்லஇத் துன்பங்கள் எமக்கு சூரியத் தலைவனங்கு எதிர்வு கூறுகின்றான் சாற்றும் நூறாண்டு நூறாண்டு காலம் நேரிய பாதையிற் பதிலடி கொடுத்திட நேரம் வந்ததெனத் திடமுரைக் கின்றான் மனிதநேயப் பணியாளர் தாமங்கு செயலாற்ற மிக்கவே அச்சுறுத்தல் நிறையிழி நாடென மனிதவுரிமை அமைப்பொடு ஐ நா சபையினரும் மட்டிலாக் கண்டனம் மனதாரக் கூறுகிறார். நனிவுயர் எம்மக்கள் நாடோறும் மடிதல் நன்றாக அறிந்துமிவர் எதுவுமே செய்திலர் கனியமுத வார்த்தையிற் சிங்களர் அவரைக் கட்டுக்குள் வீழ்த்தித் தம்பக்கம் சாய்க்கின்றார் அறிக்கைகள் விடுகி…

  4. ஆரியகுளத்து தாமரைப் பூவிற்கு அடித்தது யோகம்! பீக்குளத்து பூக்களும் பூசைக்கு போகும்! நாகவிகரையில் பூசை நடந்ததாம் ரூபவாகினி சொல்லிற்று.. இனி என்ன? “காமினி டீ றூம்” கதவுகள் திறக்கும்! சிட்டி பேக்கரியும் சீனிச் சம்பலும் நகரப் பகுதியில் அறிமுகமாகும்! புத்தன் கோவிலுக்கு அத்திவாரம் போட ரத்வத்த வரக்கூடும்! சிங்கள மகாவித்தியாலயம் திரும்ப எழுமா? எழலாம். வெசாக் கால வெளிச்சக் கூட்டை எங்கே கட்டுவார்? ஏன் இடமாயில்லை? வீரமாகாளியின் வெள்ளரசிற் கட்டலாம், முனியப்பர் கோவில் முன்றலிலும் கட்டலாம், …

    • 1 reply
    • 489 views
  5. என் குரல் ஓய்ந்து போனதா?ஓய வைக்கப்பட்டதா?முடக்கப் பட்டு மண்ணுக்குள்மூடப்பட்டதா?புயல் புகுந்து சுழன்ற மண்ணின்பூ என்றுதானே சொன்னார்கள்இன்று புயலடித்து தின்றவாடிய மலரிதழாய்கூடு விட்டு வெளியில் வரமுடியாது செத்து கிடக்கிறதுகாரணம் தெரியவில்லைஅருகில் நின்றவரை கேட்கிறேன்திரும்பி கூட பார்க்காது போகிறான்நான் பார்ப்போரை கேட்டு கேட்டுகளைத்து என் தங்ககம் செல்கிறேன்.தேடி தேடி செத்துப் போன மனம்தோற்றுப் போய் கிடக்கிறது. தொடர்ந்து வாசிக்க ....http://www.kavikkural.com/2016/03/21/%E0%AE%86%E0%AE%B1%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D/

  6. Started by theeya,

    மருதம் :- வயலும் வயல்சார்ந்த இடமும் எதுவும் விதைக்கப்படாத வயல்வெளிகள் யாரும் புதிதெடுக்காத தரிசுநிலங்களாக… கண்மூடித் திறப்பதற்குள் கற்சிலையாய் அமைந்துபோன மனிதர்கள் வாழ்தல் எப்படிக் கொடூரமானது? கரடுமுரடான பாதை போல் கடினமானதா என்ன? எதுவுமே புரிவதில்லை… கால் பதிக்க முடியாத சேற்று வயல்வெளிகள் கட்டாந்தரையாகிக் கண்ணீர் வடிக்கக் கண்டேன். ஆற்றுப்படுக்கைகளில் ஆங்காங்கே பிளவுகள்.. வெடிப்புகள். உடைப்பெடுத்துப் பாயும் வெற்றுக்குளங்களில் செத்துக் கிடந்தன நீர்க்காக்கைகள். குளக்கட்டின் மரநிழலில் சிலையாகச் சமைந்திருந்தார் பிள்ளையார்…

    • 0 replies
    • 893 views
  7. மலையொத்த மனிதரெல்லாம் ஏதிலியாய்வாழ்விழந்து ஒருவர் பின் ஒருவராக சிறைப்பட நடந்தனர். சிறுமலைகள் கூடிநின்ற பூமியைப் புறங்கண்ட பின்னொரு நாளில் மலைக்காடுகள் ஒன்றுகூடி மலைகளை மெல்ல மெல்லத் தின்றுகொண்டிருந்தன. மக்களையும் மண்ணையும் நீண்ட மலைத் தொடர்கள் பிரித்துக் கூறு போட்டபோது சூரியன் மலை இடுக்கில் விழுந்து இறந்து போனான். நட்சத்திரங்கள் ஒன்றன்பின் ஒன்றாக உதிர்ந்துகொண்டிருந்தன. நிலவு தேய்ந்து தேய்ந்து மறைந்து போனது. இன்னும்.... மனிதர் மட்டும் ஏதிலியாய் இழந்தவற்றை நினைத்தபடி வான் பார்த்து............

    • 0 replies
    • 481 views
  8. Started by nunavilan,

    ஆறு ஊரின் வெளியே ஆறு - அது ஓடும் அழகைப் பாரு! மாரி பொழிந்தால் வெள்ளம் - கரை புரண்டு ஓடும் எல்லாம்! ஓய்வு சிறிதும் இல்லை - அது ஓய்ந்தால் வருமே தொல்லை! ஆய்வு செய்தால் நிறைய - ஞானம் பிறக்கும் மடமை மறைய! மலையின் மீது தோன்றி - ஊற்று நீராய் வருமே தாண்டி! கலையாய் பூக்கள் எங்கும் - மலர நீரும் போயே தங்கும் துள்ளிக் குதித்து ஆடும் - தங்கப் பாப்பா நீரில் ஓடும்! பள்ளி செல்லும் நேரம் - தேனீ போல விரைந்து போகும்! தடைகள் வந்தால் ஆறு - அவற்றைத் தகர்த்துச் செல்லும் கேளு! மடைகள் திறந்து நீராய் - வெல்லும் படையாய் இருக்க வாராய்!

    • 1 reply
    • 1.3k views
  9. ஆறு வருடங்கள் ஆறுமோ? சொற்கேளாப்பிள்ளையெனினும் ஏறிக் கூரையில் ஏந்திய பொறி ஏற்றாதா சுடர் ஏங்கியமக்கள் நெஞ்சிலும் விழுந்தன தணல்கள். அகம் அழிந்து திரிந்ததும் அறம்பிறழ்ந்ததும் களத்தில் ஆயிரம் கணைகள் பறந்ததும் மறவர்மடிந்ததும் கையறுந்ததும் கண்டவர் விண்டிலர் விண்டவர்கண்டிலர் தீய்ந்தது காடு படர்ந்தது நெருஞ்சி திறமென்றதுஉலகம் தீராது பிணக்கு வராது வழக்கு வரினும் பிழைக்கும் கணக்கு கால ஆற்றில் கண்ணீரா செந்நீரா? படகுகள் பார்ப்பதில்லை போகட்டும் உணர்வழியாது நினைவழியாது என்பிள்ளை தன்பிள்ளைக்குச் சொல்லும் இச்சாவின் கதை எழுதும்: ஈழம் அரும்கனவு. தேவ அபிரா வைகாசி 2015 http://www.globaltamilnews.net/GTMNEd…

    • 0 replies
    • 510 views
  10. ஆழத்தொலைந்த அலைகளோடு இசைப்பிரியா...! காலம் 2013 ஆடி..., இரவு கரையும் ஈரத்தில் நந்திக்கடல் ஆழத்தில் நிலவு கரையும் நாளொன்றில் அர்த்த இரவொன்று....! அமைதியாய் ஓடியலைந்த அலையில் முகம் நனைத்த அன்றைப் பொழுதின் இனிமை இதய அறைகளில்...! காலம் 2009 மேமாதம்...., காலழைந்த அந்தக் கன இருளின் திரையூடே களமாடியகதை சொன்ன தோழியின் காலடிகள் மீளத் தேடியது நினைவு....! ஆழத்தொலைந்த அலைகளோடு என் ஆத்மா நிறைந்த ஆயிரமாயிரம் பேரின் முகங்களின் ஞாபகம் கண்ணீராய்....! மீளத்தொலைந்து போனது கடைசிக் கதைகளும் காலம் மறைத்த துயர்களும் பின்னிரவுக் கனவுகளில் பிரளயமாக....! பிரியம் நிறைந்த தோழி இசைப்பிரியாவின் இறுதிக் குரலின் துயர் படமாய் ஒருநாள் பலந…

    • 15 replies
    • 1.9k views
  11. எட்டு ஆண்டானாலும் அவலம் மாறாத நிலை வேண்டும் என்று செய்து வேடிக்கை பார்த்தாயோ கடலம்மா தாய் என்று மதித்தோர்க்கு தயவற்ற செயல் செய்தாய் பேயாக நீமாறி பெருந்துயர் இளைத்தாயே கடல் அம்மா என்று வாயார வாழ்த்திய மக்களை வசைபாட வைத்தாயே உன் நியாயமற்ற செயலால் நடுத்தெருவில் எத்தனை பேர் நாதியற்று தனிமரமாய் சிறியோரும் பெரியோரும் சின்ன பச்சிளம் சிறாரும் சிதறி எத்தனை பேர் போனவர்கள் வருவார்கள் என பொய்த்த வரவுக்காய் வழியை வழிபார்த்தபடி எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கூட ஆழாத் துயருடன் இன்றும் எத்தனை உள்ளங்கள் நன்றி : முகநூல்

  12. ஆழிக் கடலடி ஆட்டம் கண்டதால் ஆழப் பெருங்கடல் மேலெழுந்தது அதிர்வின்றி அமைதியாக ஆழ்கடல் அசைந்து வந்து ஓசையற்று ஒட்டுமொத்தமாய் ஒன்றுமிலாது கொண்டு போனது அன்னை மடியென ஆடிக் கழித்தவர் அலைகடலோடு கூடிக் கழித்தவர் ஆவலோடு உனைப் பார்த்திருந்தவர் அத்தனை போரையும் அரை நொடியுள் அள்ளிக் கொண்டு சென்று விட்டாய் அந்த நொடிவரை ஆயிரமாய் அகம் முழுதும் ஆசைகளோடு அடுத்தநாளின் கனவுகளோடு ஆடிப் பாடிக் களித்திருந்தார் அனைவர் மீதும் கோபமென்ன அடித்துக்கொண்டு சென்றுவிட்டாய் பத்து மாதம் சுமந்த பிள்ளையை பள்ளிக்கனுப்பிய பாலகனை கட்டிய கணவனை காதலனை அத்தனை உறவையும் அக்கணமே அகதியாக்கிச் சென்றுவிட்டாய் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்த வீடுகள் ஏகாந்தமாய்த் திரிந்த வீதிகள் எழில் பொங்கும் எங்களின் ஊர்கள் …

  13. கனடா தமிழ் இளையோர் அமைப்பினால் ஆழிப்பேரலை நினைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட ஆவணப்பதிவு. Documentary -Tsunami 2004 video by TYO Canada

  14. Started by சொப்னா,

    அக்காங்களா அண்ணனுங்களா!! இது என்னோட முதல் கவிதைங்க :) . ரெம்ப பயமா இருக்குங்க என்ன சொல்லவீங்களோன்னு :( . என்னோட கவிதய படிச்சு பாத்து கொமன்ஸ் குடுங்க ஓக்கேயா?? சொப்பனா ஜூட் . தமிழ் மீது மையல் கொண்டே தட்டுத் தடுமாறித் தடுக்கி விழுந்தே முதல் கவி பாட வந்தாள் சொப்ப (னா )ன சுந்தரி யாழ் களத்தில். பல வித்தகர் கண்ட களத்தில் பவ்வியமாகவே பா படிப்பேன் , இரவல் கொடுங்கள் உங்கள் செவியிரண்டையும் . சொல்லில் சிறுபிள்ளை நான் சொற்குற்றம் கண்டால் , செருப்பால் அடிக்காதீர் சொப்பனாவை...... பெண்ணுக்கு பெண் எதிரி நிலை மாற வேண்டும்! பெண்ணை ஆண்கள் மதிக்க வேண்டும்! அன்பால் கொண்ட திருமணம் வாழவேண்டும்! பணத்தால் கொண்ட திருமணம் அழியவேண்டும்! தீண்டாமை தீ…

  15. Started by தமிழரசு,

    உன்னுடன் சேர்ந்து நடக்க ஆரம்பித்த பிறகுதான் சாலை ஓர மரங்களிலிருந்து உதிரும் பூக்களின் மௌனத்திலும் நான் இசை கேட்க ஆரம்பித்தேன் அறிவுமதி-தமிழ் கூடல்.

  16. இசை ஞானி காலத்தை வென்றவர்..! தயை கூர்ந்து இசை ஞானி அவர்களை ஈழ விசயத்தில் இழுக்காதீர்கள்..? அவர் ஒன்றும் அரசியல்வாதி அல்ல..! அவர் ஒன்றும் திராவிட/ ஆதி திராவிட அரசியலுக்கு மாற்று அல்ல..! அவரை ஏன் இழுக்க வேண்டும்..? ஈழ அரசியலில்..! கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட ஈழத் தமிழ் மக்களுக்கு இவர் எப்படியும் பொறுப்பாளர் என்ற அவசியப் பொருள் முத்திரை ஏன்..? தடுமாற்றம் கொள்கிறார்களோ..? காலம் பெருவெளி சூனியம் அந்திவெளி வண்ணங்களில் தோன்றும் ராக ஓசைகள் இவை மிஞ்சியவை அல்ல அனைத்தும் என்று தெரியுமா உங்களுக்கு..? பழந் தமிழனின் கொடுந் துயரமோ இசை ஞானி அவர்கள்..? சங்கிலிக்கருப்பு

    • 3 replies
    • 827 views
  17. இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை:- ஆதிலட்சுமி Tuesday, November 5, 2013 @ 11:50 PM இசைப்பிரியாவுக்கு இதயத்திலிருந்து…. ஒரு மானுட வதை மகளே……. பிறக்கும் போது யாருக்கும் பிறப்பின் அருமை தெரிவதில்லை நீ பிறந்த போதும் அப்படித்தான். நீ மட்டுமல்ல… லும்பினியில் மாயாவின் மடியில் சித்தார்த்தன் பிறந்தபோதும் அவன் பிறப்பை யாரும் உணரவில்லை…. மாட்டுத் தொழுவத்தில் மரியாளின் மடியில் உதித்தபோது… ஏசுவையும் எவரும் கண்டுகொள்ளவில்லை…. மக்காவில் நபிகள் பிறந்து 40 வயதாகும் வரை அவர் பெருமை யாருக்கும் புரியவில்லை… சரவணப் பொய்கையில் தாமரைப் பூக்களாய் தோன்றிய போது சூரனை வதம் செய்ய வந்தவன் என முருகனை யாரும் நினைக்கவில்லை அப்படித்தான்….. நீ பிறந்தபோதும் உலக…

  18. இசைப்பிரியாவும் கார்த்திகைப் பூக்களும்...! -எஸ். ஹமீத்- *செந்தாமரைகள் சிலிர்த்துப் பூக்க வேண்டிய அந்த சேற்று நிலத்தில், பெண் தாமரையே உன்னைப் பிடித்துத் தள்ளியது யார்...? *மானமும் கானமும் வாழ்வெனக் கொண்ட மாதரசியே, உன் துகிலைக் கிழித்துத் துப்பிய அந்தத் துச்சாதனர்கள் யார்...? *வெறி பிடித்த நாய்களின் நடுவே- தாயே நீ, தனித்து விடப்பட்ட ஆட்டுக்குட்டியாய்... விஷம் கொண்ட பாம்புகள் நடுவே- அம்மா நீ ஆதரவற்ற அணிற் குஞ்சாய்...! *நீ அசைத்து வந்த வெள்ளைக் கொடியா அது...? அது, உன்னுடையதாகத்தானிருக்கும்! இல்லாவிட்டால், அந்த நேரத்தில் அவர்களுக்கேது அந்தத் துணி...??? *சரணடையச் சென்ற வேளையுந்தன் சமாதானக் கொடியைப் பறித்து வைத்துவிட்டு-தம் பாவக் கரங்களால்-கோர நகங்களால் அவ…

  19. அப்பால் தமிழ் இணையத்தளத்தில் வெளிவந்துள்ள கவிதை இது. படித்தேன். பிடித்திருந்தது. பகிர்கிறேன். எதிரிக்காயும் கவலைப்படும் உள்ளம் தமிழர் உள்ளம் என்பது கவிதையில் மீண்டும் வெளிப்படுகிறது. போர்த்துக்கீசரில் தொடங்கி, சிங்களவரிடம் வந்து... கவிஞர் மிக இயல்பாகவும், கவிநயத்தோடும் கவிதை வடித்து வைத்துள்ளார். இந்தக் கவிதையை வாசித்ததும் எனக்கு நினைவில் வந்த வரிகள்: இசையை மட்டும் நிறுத்தாதே எழுதியவர்: க.வாசுதேவன் 1. அமெலியா, போர்த்துக்கல் அழகியே, நீ சற்று அதிகமாகவே குடித்துவிட்டாய் இன்று இது எம் இறுதி இரவு சாளரத்தினூடே பார் இருள் அடர்த்தியாக இருக்கிறது வானெங்கும் அளவிற்கதிகமாகவே விரவிக் கிடந்தாலும் நட்சத்திரங்களால் என்னதான் செய்முடியும்? …

    • 5 replies
    • 1.8k views
  20. [An assault rifle and fragments of skull coming out at a scratch of the earth in a mass burial area. Mu'l'livaaykkaal bunker area.] ஐரோப்பாவில்.. ஒற்றைச் சிறுமியின் கடத்தல்... ஒரு தேசமே கண்ணீர் வடிக்கிறது..! இந்து சமுத்திரத்தில் ஒரு தேசமே கூட்டழிப்பு யார் கண்ணிலும் தண்ணீர் படாத துயரமங்கு..! மண்ணோடு மண்ணான மண்டை ஓடுகளும் விடுதலைக்காய் முழங்கித் தள்ளிய துப்பாக்கிகளும் பயங்கரவாதக் கூக்குரலில் அடிபட்டு.. கூடவே உக்கி உரமாகின்றன..! தூரத்தே இருந்து கூச்சலடித்த கூட்டமும் மனிதப் பிணங்களின் "ஸ்கோர்" எண்ணி செய்தி போட்ட ரொய்டர்களும் ஏ எவ் பிகளும் ஏ பிகளும் இன்னும் இன்னும் பிழைப்பை ஓட்டிய தீரர்களும் இன்று எதிரிக…

  21. இடமொன்று தருவாயா? ஈர்பத்து ஆண்டுகளாய் இடறாத என்மனதை அசைத்தவளே அகிலத்தை அழகாக்க வந்தவளே வாசமில்லா மலராகி வாடி நிலம்தொட்டு கசங்கிக் கிடந்தவனை கவர்ந்திழுத்த காரிகையே கானல் நீரென்று கனவெல்லாம் களைந்தகற்றிக் கடிமனதைத் திடப்படுத்தும் காலம்வரை காத்தனையோ ஆண்டைந்து பொறுத்(து)அன்னை அகிலத்தில் போட்டிருந்தால் துணையாக வாவென்று துணிவோடு கேட்டிருப்பேன் விதிவந்து விளையாடி விரிசல்கள் செய்யாமல் கற்றவனாய் இருந்திருந்தால் கன்னியுனைக் கேட்டிருப்பேன் எட்டாத கொப்பென்று என்மனது சொன்னாலும் என்னவளே உன்நினைவை எடுத்தெறிய முடியலையே அன்பென்ற வார்த்தைக்கு அழகூட்ட வந்தவளே - உன் இதயத்தில் உட்கார இடமொன்று தருவாயா?

  22. Started by சுஜி,

    அன்பே நீ இருக்கும் போதுதான் எனக்கு உன் மனதில் இடம் தர வில்லை நீ இறந்த பிறகு ஆவது உன் கல் அறயில் ஆவது எனக்கு இடம் தருவயா?

  23. தடங்களில் இருந்து எழுகின்ற கரியநாகம் பின்னந்தலையில் சுருண்டு கொள்ள, வெளியேறும் எலிகள் தலையணை விளிம்புகளை முகரத்தொடங்குகின்றன... எலிகளும் நாகங்களும் இல்லாத நாளொன்றில் நான் என்னவாக இருப்பேன். அத்துமீறி இந்த இரவுகளில் உலவுகின்ற வண்ணத்துப்பூச்சியை கொன்றொழிக்க வேண்டும், இல்லையேல் நான் மலர்ந்துவிடவேண்டும். சாத்தியமில்லாத போதிலும் உயரித்தென்னையின் பொந்தில் இறுதியாக பார்த்த கிளி அறையின் சட்டகத்தில் வந்துவிடுகிறது. காலமுள்ளில் சிக்கிய மீனின் கண்களில் இருந்த கடல் வறண்டுபோக, ஆதியில் பெயர்தெரியாத ஒருவனின் வளர்ப்பு மிருகங்களின் எச்சங்கள் தோன்றத்தொடங்கின. "ஆழிசூழ் உலகில்" இருந்து இறங்கிய சூசையும் சுந்தரிரீச்சரும் வசந்தாவும் கோத்தராப்பிள்ளையும் ஊர…

  24. (படித்ததில் பிடித்தது) அன்பின் சுந்தரம், நிலா நட்சத்திரங்கள் அணைந்துபோன ஏழை வானத்தின் கீழ் அந்தகார இரவு முகாமுக்குச் சுருண்டு கொள்ளும்போது ஊமை ஓலமிடும் நிலத்தின் கீழே எந்த இடத்திலாவது நீங்கள் உறங்கியிருப்பீர்களென உங்களைக் கடந்து போகும் வரும் பூட் சப்பாத்துக்களின் ஒலி அசைகின்ற உலகைச் சொல்லித் தரும் எனக்கு அன்றைய நள்ளிரவு இருள் பஞ்சாயுதங்கள் வீழ்ந்த களப்பு அப்பா இல்லாமல் போன காலம் குஞ்சுகளுக்கு யாருடைய காவல் அங்கிருந்தும் இங்கிருந்தும் கொஞ்சம் பேர் வந்து அடிக்கடி விசாரிக்கிறார்கள் ருசி தானே இந்த (சிறை) உணவு வேறெங்கும் கிடைத்ததா இதை விடவும் …

    • 2 replies
    • 941 views
  25. இடி – பாவேல்! அவர் கொன்றவர்க்கும் இவர் கொன்றவர்க்கும் அயலவர் கொன்றவர்க்கும் இருளற்ற இதயம் கொண்டதனாற் எவரெவராலோ கொல்லப்பட்டவர்க்கும் அள்ளிச் செல்லப்பட்டவர்க்கும் தள்ளி நில்லென்று சொல்லப்பட்டவர்க்கும் இன்னும் எதற்கென்று தெரியாமலேயே கொல்லப்பட்டவர்க்கும் நினைவுத் துாபிகளை எழுப்பியே தீருவேன் . எங்கே என்றும் சொல்லி விடுகிறேன் கடல் என்றால் அலையிலும் கரை என்றால் நுரையிலும் நிலம் என்றால் புழுதியிலும் நீர் என்றால் வான் பாயும் வெள்ளத்திலும் வளி என்றால் அது வென்ற காற்றிலும் ஆறென்றால் அதில் மிதக்கும் இலையிலும் நெருப்பென்றால் அதுவுறங்கும் சாம்பலிலும் எதுவுமே இல்லையென்றால் துணை வேந்தரின் கவட்டிலும்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.