Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தம்பி பாத்து மெதுவா ஆடு- உன் காலடிக்கு கீழே இன்னொரு “கிருசாந்தி” புதைக்கப்பட்டிருக்கலாம். நீ பிடித்திருக்கும் “பியர்” போத்தலுக்குள்ளே கனடாவில் குளிரிலும் பனியிலும் நித்திரையில்லாமல் ஓடி ஒடி உழைக்கும் - உன் அண்ணனின் வியர்வை இருக்கிறது. சிந்தாமல் வீணாக்காமல் குடி..!!! கனடாவில் உன் அண்ணன் கடற்கரை பக்கம் போனதேயில்லை... அதற்கு நேரமும் இல்லை ... நிம்மதியும் இல்லை...!! “கசூறினா” கடற்கரையில் “கையேஸ்” வாகனம் “கயர்” பண்ணி நீ காற்று வாங்கு... உன் அண்ணன் மூச்சு வாங்கி உழைக்கும் காசில்...!!! என் தம்பி “கம்பஸ்” என்று கருவத்தோடு உன் அண்ணன் அவன் தம்பி நீயோ ஒண்டரைக்காலில் “பைலா” பாடு.. நீ “கலோ” என்றால் உனக்கு “காசு” வரும். அந்த காசைத்தேடி நாலு “கூட்டு” வரும். …

  2. தமிழனையே தாக்குகின்றாய் நீயும் தமிழன் இல்லையடா? தேசியத்துக்கு துரோகம் செயவது நீங்கள் இங்கு ஏனடா ஏன் தான் நாய்கள் போல குரைக்கிறீங்கள் இங்கு ஏனடா கிணத்து தவளை போல நீங்கள் கத்துவது ஏனடா மாரித் தவக்கை போல கத்துவது நீங்கள ஏனடா கடசியில வயிறு வெடித்து சாவதும் நீங்கள் தானேடா தமிழனையே தூற்றுவது நீங்கள் ஏனடா இங்கு தமிழ்தாயின் துகிலை உரிவது ஏனடா?

  3. அமெரிக்கா அழிக....!!! அமெரிக்கா என்றரொரு நாடு அழிய என்று நீ பாடு.... யுக்தியை விதைக்கின்ற நாடு.... பின்னர் யுத்தத்தை தொடுக்கின்ற நாடு.... மனிதத்தை மறந்திட்ட நாடு.... மனிதத்தை அழிக்கின்ற நாடு..... கொடுமைகள் விதைக்கின்ற நாடு பெரும் கொடுங்கோல் ஆழ்கின்ற நாடு... ஏழ்மையை விதைக்கின்ற நாடு எழியோர் ஆழ்கின்ற நாடு ... வறுமையை திணிக்கின்ற நாடு வல்லாதிக்கம் செய்கின்ற நாடு... சாதனை புரிகின்ற நாடா...?? பெரும் சாக்கடை திறக்கின்ற நாடு.... விடுதலை மறந்திட்ட நாடு விடுதலையை நசிக்கின்ற நாடு.... கோர முகம் கொண்ட நாடு கோர வஞ்சகம் புரிகின்ற நாடு... சமாதானம் பே…

    • 19 replies
    • 3.1k views
  4. Started by nige,

    பல நாள் தவமிருந்து விரதங்கள் பல பிடித்து கிடைத்த வரம் இவள் கொட்டிக்கிடக்கும் சந்தோசத்தில் மணம் வீசும் மலராய் தினமும் வளர்ந்து மங்கையானாள் வந்தான் ஒருவன் மலர் என்றான் தேன் என்றான் உலகில் நீயே அழகி என்றான் அன்பிற்கு நீயே அகராதி என்றான் மயங்கிப் போனாள் அன்பிற்கு புது அர்த்தம் சொன்னான் காதலை கண்ணால் கற்பித்தான் உறவை புது வழியில் ஒப்பித்தான் அவனின் காதல் மொழியில் அவள் சிறைப்பட்டுப் போனாள் தன்னை மறந்து தன்னையே கொடுத்தாள் பழத்தை உண்டதும் அவன் பறந்து போனான் காத்திருந்தாள் காதலன் வரவில்லை காதல் பொய்த்த பின்னும் காத்திருக்கிறாள் காதலனுக்காக அல்ல சூதுவாது எதுவும் அறியா அந்த பிஞ்சு உயிருக்காய் ........

    • 26 replies
    • 3.1k views
  5. பல்லாயிரம் ஆண்டுகளாம் புகழ்பூத்த முற்குடியாம் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் நற்குடியாம் தொல்தோன்றி மண்கண்டு மன்கண்டும் பயனில்லை சொல்கொண்டு இணைவர்தம் சிரமெடுப்பர் காலமிதில் ஒருவிரல் வெளிச்சுட்டி மூவிரல் தனைச்சுட்டி தரையினிலே உடல்பரப்பி உமிழ்கிறார் சிரம்நிமிர்த்தி வருவதுவும் பெயரல்ல தருவதுவும் புக‌ழ‌ல்ல‌ திரும்புவது உமிழதுவே மூவிரலும் குறிப்பதுவே க‌ள‌ம‌த‌னில் உரையாட‌ல் க‌னிகின்றார் தின‌ம்தானும் த‌ள‌ம்மாறித் த‌ட‌ம்மாறிப் புனைவாரே வ‌சையாட‌ல் களவுதட்டில் ஒருபேச்சு கருத்தியலில் ம‌றுபோக்கு உளமுரையார் சொல்லதுவும் அம்பலம்தான் ஏறிடுமோ எண்ண‌த்தில் வந்தவுடன் கிண்ண‌த்தில் த‌ந்துவிட்டார் உண்மைநிலை உணர்வின்றி வ‌சைபாடிச் சென்றுவிட்டார் திண்ணையதன்…

  6. மாற்றுக்கருத்து! மண்ணுக்குள் மகனை புதைத்துவிட்டு........... மார்பிலடித்து அழுகிறாள் தாய்......... இவன் முன்னே போய் நின்று சொல்கிறான்.......... மகிந்த ராஜபக்சவும் - மனிசனே என்று! கட்டியணைத்து கொஞ்சிய - தன் மகளும் .......... தொலைந்தாள்.......... தங்கமே என்றழுதான் தகப்பன்.......... இவன் சிங்கத்தின் வால்பிடித்து சிரித்துக்கொண்டே - சொல்கிறான்.. தவறென்ன அதிலே.......... கதிர்காமரும் - தமிழனே எங்கிறான்! சேற்றுக்குள் கிடந்தாலும்................ சோற்றுக்காய்............ தாயின் சேலையை கூவிவிற்று . குடல் நிரப்பி கிடக்கிறான்! குருத்துக்கள் எரிந்து போச்சு. கொள்ளி போட............. மயானம் நோக்கி மனிதம் . பயணம் ஆச்சு . கொள்ளிசட்டியின் …

    • 17 replies
    • 3k views
  7. எப்படி நீ ஊமையாய் உட்கார முடியும்? இன்னும் நீ எழவில்லை. சக்தியின் வடிவமாய் உலா வரவில்லை. கன்னங்கள் சிவக்கவும், காதலின் வசீகரங்களில் கூர்ப்பழிந்து கிடக்கவும், நீண்ட மயக்கத்திலும், உனக்கு மட்டுமான சுயத்தின் பிடிப்பிலும் கட்டுண்டே கிடக்கிறாய். நேற்றொருத்தியின் முகம் தென்றலாய் வந்து தேவிட்டாத மொழியில் பேசியபோது காதினிக்கக் கேட்டாய், கண் விரித்து இரசித்தாய். இன்றவளே பேரினவாத இராணுவத்திற்கிரையானாள். இன்றும் பார்த்தாய் பலப்பலவாய் கோணங்களில் அவளின் பெண்ணுடலை மறைப்புக்கள் அற்று மனிதத்தின் பெயரால் உலகமே உற்றுப்பார்த்து உச்சுக் கொட்டுகிறது. யார் அவள்? உன் தாய் உன் சேய் உன் தோழி உன் மண்ணின் மானம் காத்தவள். …

  8. என் சிறகுகளை முறித்தெறிந்துவிட்டு, ஏன் சிரித்துக்கொண்டிருக்கிறாய்? அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! என் வலிகளை ரசிப்பாய் என அப்பொழுதே தெரிந்திருந்தால், பூக்களை வெறுக்கும் வண்ணத்து பூச்சியாய் வாழ்ந்திருப்பேன்! வண்ணத்தில் மயங்கி... வாசத்தில் கிறங்கி... வலிகளை வாங்கிய கஷ்டம் எனக்கிருந்திருக்காது. காலங்கடந்த ஞானம் எனக்குள் -இப்போது! என் மெளன மொழிகளில் கெஞ்சிக் கேட்கிறேன், அப்படியே உன் பாதங்களால் நசித்துக் கொன்றுவிடு! -இல்லையேல், என் முறிந்த சிறகுகள் கூட, உன்னைக் காயப்படுத்தலாம்!!!

  9. கருகாத பூக்கள் .....!!!-------எம் .....மண்ணில் தான் ....கறுப்பு பூக்கள் அழகழகாய் ....பூத்தது - பூத்த பூக்கள் ....வாடிவிட்டதே - நினைக்காதீர் ....எம் மனதில் என்றும் வாடாமலர் ....உலகில் என்றும் வாடாமலர்கள் ....!!!எம் மண்ணில்தான் கடலில் ....நீலபூக்கள் பூத்தன ....பூத்த பூக்களை அலை ....அடிதுவிட்டதே - நினைக்காதீர் ....கடல் நீரில் பூத்த செந்தாமரைகள் ....காலத்தால் அழியாத தாமரைகள் ...!!!கறுப்பு எண்ணங்களாலும் ....கருப்பு ஜூலையாலும் ....கருத்தரித்ததே எம் கருப்பு பூ ....கறுப்பு சிந்தனைகளால் ....கருக்கபட்டபூக்கள் காலத்தால் ....கருகாத பூக்கள் .....!!!

  10. சொல்லக்கூடிய வார்த்தைகளுக்குள் என் சோகம் எழுதப்படவில்லை எழுதியதெல்லாம் உன்னைப்பற்றி என்பதால் அழுகைகூட ஆனந்தமாகிறது...! வாசிக்கும் வாய்க்கும் வழிகாட்டும் விழிக்கும் விளங்கவில்லை வாசிக்கும் உன் மடல் முட்களாய் மூளையை கிழிப்பது ...! விழித் தெறிப்புக்குள் தலைகீழாய் விதி எழுதும் சாட்சியத்தில் நானும் கைதியாய் நடிக்கக் கற்றேன் தப்பிக்க முடியவில்லை...! தாகம் அற்ற நிலத்தில் தவறிவிழும் மழைத்துளிபோல் வெயிலுக்கும் வேகாமல் போனது தினம் உதிரும் கண்ணீர் துளிகள் ...! வாழ்வும் ,சாவும் வாழ்க்கைச் சலனங்களில் உயிர் குடிக்கும் உத்தரவாதங்களுக்குள் இன்னும் உயிர் வாழ்கிறது தேடல் திரும்பிப் பார்த்தாவது திருப்பிவிடு உன்னி…

  11. கை தவழும் காதல் பூ விழுந்த மனசு மற்றும் சிதறல்கள் என்ற கவிதை தொகுப்புகளை (இன்னும் வெளிவராமலேயே) இந்த யாழ் இணையத்தினூடாக உலாவ விட்டிருக்கின்றேன். அதன் தொடர்ச்சியாக இனி இந்த கிறுக்கல்களும் வரவிருக்கின்றன. கடிகாரத்தின் முட்களோடு போட்டி போட என் பேனாக்களிற்கு முடியவில்லை. ஆதலால் இயலுமானவரை தருகின்றேன். இன்று தவழ்ந்த காதல் (எனது மகளை நினைத்து கிறுக்கியது) அலைகடலில் ஓடமாய் அந்தரிக்கும் விழி அழகோ அடுக்கடுக்காய் உதிர்ந்து விழும் புன்னகைப் பூக்கள் அழகோ ஆயிரம் அர்த்தம் விதைக்கும் அசைவுகள் அழகோ என் மஞ்சத்தில் உருவாகி கைகளில் தவழுகின்ற காதல்தான் உன்னழகோ அழகிற்கே அழகுரைக்கும் உன்னழகுதான் எதுவோ ?

  12. ஜூலை மாதம் வந்தால் . . . . . ஆடிமாதம் எம்தமிழர் ஆடிப்போன மாதம் கூடிவாழ்ந்த வீட்டைவிட்டு ஓடிப்போன மாதம் மாடிவீடும் குடிசைவீடும் வீதிவந்த மாதம் கோடிகோடி யாகச்சொத்தை தாரைவார்த்த மாதம் இறையும்கூடத் தேரிலேறி தெருவில்நின்ற மாதம் சிறையில்கூடச் சிங்களவன் பலியெடுத்த மாதம் மறையின்வழி நின்றவர்கள் பதைபதைத்த மாதம் குறைவிலாமல் தமிழன்நிலை உலகறிந்த மாதம் ஆண்டுபல போனபோதும் மறந்திடாத மாதம் மாண்டுபோன உறவினைநாம் நினைத்துநிற்கும் மாதம் கூண்டுவிட்டு அகதியாகப் பெயரவைத்த மாதம் சீண்டிவிட்ட சிங்களத்தின் அமைதிசெத்த மாதம் புத்தன்சொல்லே வேதமென்றோர் புலையரான மாதம் சித்தம்தன்னில் ஈரமிலார் கொடுமைசெய்த மாதம் சொத்துசுகம் பேணநாட்டின் தேவைகண்ட மாதம் சத்தமின்றித் …

  13. அடிமை வாழ்வு வாழ்வதற்கு அகதியாதல் மேலதாம் அறிவு மெல்ல உந்தி நிற்க அணியணியாய்ப் பறந்தவர் அனைத்தையுமே துறந்து இங்கு அன்னியராய் நிற்கையில் அணைத்துச் செல்ல இணையவழி தந்தவரை நினைக்கிறேன். திசை தெரியாப் பயணம் தந்த திகில் நிறைந்த வேளையில் தவித்த எங்கள் தாகம் தீர்க்க தரணியிலே ஓர் களம் தமிழால் மட்டும் சேர்ந்து நிற்க தனித்துவாய் யாழ் களம் தந்த எங்கள் மோகன் அண்ணா விருட்சமாகத் தெரிகிறார் யாவரையும் அரவணைத்து கருத்துகளைப் பகிர்ந்திட யாழ்களத்தை அமைத்து எம்மை உணர்வினாலே இணைத்தவர் யாருமில்லை என்ற எங்கள் மனக்கிலேசம் தகர்த்தவர் யாதுமாகி நின்று களத்தை வழிநடத்தி வந்தவர் ஆண்டு பல சென்று விட்ட அகாலமான போதிலே அறிவுடனே ஆட்சிசெய்த அதிசயத்தை வியக்கிறேன் அடுத்தவரை நொந்திடாமல் …

  14. உலகின் மிக அழகிய பெண்ணொருத்தி! இன்று காலையிலிருந்து இந்தக் கவிதை வரிகளே எனக்குள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. வார்த்தைகளில் பொங்கும் விடுதலைக்கான வேட்கையும், வெப்பமும் நாடி நரம்புகளுக்குள் துள்ளிக்கொண்டு இருக்கின்றன. துனிசியாவில் ஒரு காய்கறி விற்கும் அன்றாடங்காய்ச்சியின் உடலில் பற்றிய தீ, அந்த தேசத்தின் வரலாற்றையே இன்று மாற்றியிருக்கிறது. தங்களின் வேதனைகளுக்கு, ஒரு முடிவெழுத அம்மக்கள் கூடி நின்றார்கள். வாட்டி வதைத்த சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக ஆர்ப்பரித்து எழுந்த மக்களால், காலம் தன்னை புதுப்பித்துக் கொண்டிருக்கிறது. மகத்தான அந்த தருணங்களில், ஒரு பெண்ணின் குரல் மக்களிலிருந்து எழுந்து விடுதலையை இசைத்திருக்கிறது. பெரும் ஜனத்திரளுக்கு நடுவே அது …

    • 4 replies
    • 3k views
  15. அன்றைய காலத்தில் அனைவரிற்கும் தம்பி அடுத்து வந்தவர்களிற்கெல்லாம் அண்ணன். அன்பான கணவன் அற்புதமான தந்தை அலையாய் எழுந்த தமிழினத்திற்கு தலைவன். தன்மானத்தை விற்றவர்களின் தலை வலி எதிரிக்கு எட்டாத சூரியன் சுற்றியிருந்த சுயநலக்கூட்டத்திற்கு புகழ்பாடும் கடவுள். தமிழினத்தின் குறியீடு தலைவணங்குகிறேன் அண்ணை

    • 29 replies
    • 3k views
  16. வாடி வதங்கி நின்றாலும் - எமக்கு வல்லரசுகள் எதிராகும். நலமா?....... என்றும்மை நான் கேட்கப் போவதில்லை, நாடு விட்டுப் போனவர்கள்... அனைவரும் நலமென்று.. நானறிவேன் கண்ணாளா! - இதை கேடு கெட்ட பிழைப்பென்று பழித்தவரும் நீங்கள்தான்! கொண்ட கொள்கை மாறி - மனம் களிப்பவரும் நீங்கள்தான்! அன்று... இலட்சியங்கள் பேசி - எனை இலாவகமாகக் காதலித்து - இன்று அந்நிய புலத்தில்.... ஏன் அவலட்சணம் ஆகிவிட்டீர்? சாகச வீரனென்று - உம் சந்ததியே உமைச் சொல்லும்! ஆதலால்தானே - உம்மில் ஆசைகள் கோடி வைத்தேன் - இன்று சாகரம் கடந்து சென்று சா...தப்பும் கோழைத்தனம்!?....... நான்... ஆதி நாளில் பார்த்ததில்லை அது எப்படி வந்ததும்மில்? அன்பே! வாகை …

  17. 27.8.15 ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, தளத்தின் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். மந்திரக்காரி! என்னை ஒரு நாய்க்குட்டியாக இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக தலையணை மெத்தையாக கண்ணீர்த்துளிகளை ஒற்றி மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல் அவளிடம் இருக்கிறது. பிறர் காணும்போது அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும் என்னை மாற்றிக்காட்டும் மாயவித்தைக்காரி அவள். வார நாட்களில் என்னை நானாக்கி வாசல் நிலையில் சாய்ந்து நின்று வழியனுப்பிவைப்பாள் மந்திரக்கோலை முதுகில் மறைத்து! - சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்

  18. சதுரங்கம் - வ.ஐ.ச.ஜெயபாலன் சிருஸ்ட்டி வேட்கையில் ஆனைமலைக் காடுகள் பாடுகிற அந்தி மாலை. அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில் உன்னையே சுற்றுதடி மனசு. இது தீராத காதலடி நீதான் கண்டு கொள்ளவில்லை. அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய் தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும் யானைபோல உண்மையில் என் காதலும் பெரியதடி. காமத்தில் சூரியன் பொன்சிந்த இறங்கி வர. நாணிப் புவிமகள் முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்.. ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற உனது நாடகம் அல்லவா இது. ஆண் பெண்ணுக்கிடையில் ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை எப்போதும் விரிகிறது. என்னோடு இன்னும் சிலரை பந்துகளாய் எறிந்து ஏந்தி …

    • 17 replies
    • 3k views
  19. நான்கு வருடங்களுக்கு முந்தைய பதிவு இது. ஒரு பெருங் கவிஞனின் வாயில் உதிர்ந்த ‘துருப்பிடித்துப் போனவளோ?’ என்ற ஒற்றைக் கேள்விக்கு எழுதுகோல் உதிர்த்த பதில் இக்கவி வரிகள். மீண்டும் மானுட வாழ்வின் அசை போடலில் மீட்பித்துப் பார்க்கிறேன். இங்கு கீழ்க்காணும் கவிவரிகள் நேற்றைய காலங்களுக்கு உரியன. இருப்பினும் இன்றும் சில விடயங்கள் மாற்றமடையாமல் தொக்கி நிற்கின்றன. தூர தேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல். கட்புலன் அறியாக் காற்றே! உட்புலன் அசைக்கும் உந்து பொருளே! உயிர்ப்பில், இயற்கை அணைப்பில் நின்னை உணர்த்தும் உயிர் மூலமே! தூரதேசத்திலிருந்து துருப்பிடிக்கா மடல் தந்தேன். தாயகக் கவிஞனவன் உலைக்களப்புலவனிடம் உரியபடி சேர்த்து விடு! - இல்லாவி…

  20. உறவுகளே... ஒரு கவிதைக்கு அதைப் படைத்தவனால்தான் பூரணமான உயிர்ப்பினையும் உணர்வினையும் பூரணமாகக் கொடுக்க முடியும் என எண்ணுகின்றேன். அத்தகைய என் முயற்சியில்.... பரீட்சார்த்தமாக இன்று முயற்சிசெய்ததன் விளைவே இந்த ஒளிப்படத் தொகுப்புடனான கவிதை. இதனை என் சொந்தக் குரலில் படைத்திருக்கின்றேன். தயவுசெய்து சகித்துக் கொள்ளுங்கள் !!!

  21. கிறுக்கு கிழவி! சென்ற ஆண்டு வந்த ஆண்டுடன்........ அஞ்சலோட்டம் புரிந்தது........ கூடி ஓடின காலம்....... பார்த்துப்பார்த்து எனை வளர்த்தவள்....... இப்போ படமாய் என்னெதிரே! முட்டிய வயிறுடன் நானிருந்த போதும்.. இன்னும் ஒருவாய் ஊட்டிவிட ஏங்கியிருந்தவள்....... அம்மா அடியிலிருந்து என்னை ..... காத்த காவலரண்! அடி வயிற்றில் சுமக்காவிடிலும்... பிரசவிக்காமாலே ...... பிரசவ வேதனை கொண்ட கடவுள் அவள்! தடக்கி தடக்கி நான் நடந்த நாளில் இன்னுமொரு தாயானவள்...... தடியூன்றி அவள் நடந்த நாளில் ...... என் சேயானவள்......... சொல்லாமல் ஓடிட்டாள் சுயநலகாரி! அழுக்கு படிந்த தாவணி ..... முடிச்சு அவிழ்ப்பாள்- ரகசியமாய் தெருவோரம் - மணி சத்தம் கே…

    • 16 replies
    • 3k views
  22. Started by gowrybalan,

    ஆ...என்ற கண்ணன் வாய்க்குள் அகிலம் தெரிந்ததாம்.... ஆனால் அதற்கும் உள்ளே அவர்கள் இல்லை...... ஆமாம்... அவர்கள் உலகம் வேறு.... ஒருவர் மூச்சு ஒருவர் சுவாசம்... அவளுக்கெல்லாம்-அவன் அவனுக்கெல்லாம்-அவள் இதுதான் இவர்கள் உலகு ஆமாம்... இவர்கள் உலகம் வேறு....

    • 19 replies
    • 3k views
  23. தைத்திருநாள் இல்லம் எல்லாம் தழைத்திடும் தைப்பொங்கல் இத்தனை நாள் காத்திருந்தோம் இனிய தமிழ் பொங்கல் கூவியழைத்திடும் சேவல் குதித்தெழுவோம் குளிப்போம் பூவெடுப்போம் புதிதணிவோம் பொங்கலன்று நாங்கள்

  24. 2 Poems on Canada ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல் - வ.ஐ.ச.ஜெயபாலன் சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில் கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது வசந்தத்தின் வருகையை எழுதியபடி ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது ஒரு தனித்த காட்டு வாத்து. சிறகுகளால் என் கண்ணீர் துடைத்தபடி. அம்மாவின் மரணத் துயரோடு வெண்பனியையும் உருக்கிவிட்ட காலம் வலியது. ரொறன்ரோ அடி நகரின் இடுக்குகளில் குனிந்துவந்த சூரியன் ஒளி விரல்களால் மிலாறுகளை வருடிவிடுகிறது. மொட்டை மரங்களின்மீது பசிய அறோரா துருவ ஒளியையும் வானவில்லையும் உலுப்பி விடுகிறது சூரியன். எங்கும் பசுமையும் பூக்களும் பட்டாம் பூச்சியுமாய் வண்ண உயிர்ப்பும் வாழ்வின் சிரிப்பும். உலகம் சிருஸ்டி …

    • 7 replies
    • 3k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.