கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
எனது சின்னஞ் சிறிய முகம், உனது முகம் பார்க்கும் கண்ணாடியென, உற்றுப் பார்த்த படியிருப்பாய்! உன் முகத்தின் இளமைக் காலப் புன்னகை, இன்னும் நினைவிருக்கின்றது! உனது அணைப்பின் இதமும், இதயத் துடிப்புக்களின் ஓசையும்,, இன்னும் கேட்கின்றது! மொட்டை வழித்த போது, முதற் பல் தோன்றியபோது, முழங்கால் மடித்துத் தவழ்ந்த போது, முதன் முதலாய் நடந்த போது..... எல்லா முதல்களிலும் , அருகிலிருந்து பூரித்தாய்! நிலாக் காட்டி, நீ ஊட்டிய பால் சோறு, இன்னும் இனிக்கின்றது!, நான் சிரிக்கையில் சிரித்து, நான் அழுகையில் அழுது, உனக்கென்று,ஏதுமின்றி, உணர்ச்சியில்லா ஜடமானாய்! எங்கோ அனுப்பி வைத்தாய்! எத்தனை போராட்டங்கள்? எத்தனை இடம்பெயர்வுகள்? ஆயிரம் …
-
- 15 replies
- 3.7k views
-
-
என் விம்பத்தை கண்ணாடியில் பார்க்கின்றேன் உடைந்து போன ஒரு கண்ணாடியில் தெரியும் சிதறிய முகமாய் எனக்கு என் முகம் தெரிந்தது சிதறல்களில் தெரிந்த என் முகம்கள் ஒவ்வொரு முகமூடி அணிந்து இருந்தது இப்படி முன்னம் என் முகம் இருக்கவில்லை அதற்கே அதற்கு என இரு கண்கள் இருந்தன இரு செவிகள் இருந்தன ஒரே ஒரு நாக்கும் ஒரு சோடி உதடுகள் மட்டுமே இருந்தன எப்ப பார்த்தாலும் இது என் முகம் என்று உரிமை கோரியிருந்தேன் ஆனால் கண்ணாடியில் இப்ப தெரியும் என் முகம் எனதில்லை என் முகத்தை என்னிடம் இருந்து திருடியது யார்? என் கண்களை அகற்றி தம் கண்களை செருகியது எவர்? எனக்கே எனக்காக இருந்த குரலையும் திருடி அதில் தம் குரலையும் பத…
-
- 15 replies
- 2.4k views
-
-
தெந்தமிழீழத் தாயவள் செருக்களம் போயினள் உடலினில் குண்டு சுமந்தல்ல.. வயிற்றினில் பசி சுமந்து.. நெஞ்சினில் புதல்வர் தம் உணர்வோடு..! தமிழீழ விடுதலைக்காய் மாமாங்கம் தனில் மங்கை அவள் தனித்து நின்று துணிந்து திறந்தாள் சாத்வீகப் போர்க்களம். காந்திய தேசத்தின் ஆக்கிரமிப்பு இராணுவம் தமிழீழ மகளிர் தம் மானம் குதறுகையில் பொங்கினள் பூபதி அம்மா நேருவின் பேரனிடம் நீதி கேட்டு..! தாயவள் பசியினில் துடிக்கையில் நேருவின் பேரன் நெஞ்சினில் களிப்புடன் தமிழின அழிப்பினில் கழித்தனன் காலத்தை டில்லியில்..! நாட்கள் கழிகையில் பொங்கிய பூவவள் பூகம்பமாய் சிதறினள் சாவினில் சரித்திரம் படைத்திட்ட தமிழீழத் தாயவளாய் மின்னினள் தமிழீழ வானில்.…
-
- 15 replies
- 3.2k views
-
-
காத்திருப்பு உன்னைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது. உனது குரலில் அன்பை அனுபவிக்க ஏங்கித் தவிக்கிறது மனம். பாசம் நிறைந்த உன் பார்வைக்குள் நனையும் நாளின் நினைவுகளில் கழிகிறதென் நிகழ்காலம். கால நீட்சியில் உனது கோலத்தில் எழில் கூடியிருக்கும் என்று நினைக்கிறேன் இத்தனை காலப் பிரிவினால் நீயும் என்னைப் போலவே தவித்தபடி இருக்கலாம். நேரில் பேச வேண்டிய செய்திகளை சுமக்கின்ற எங்களின் மனங்களில் சுமைகளை மாற்றிக் கொள்கின்ற நாளின் வருகையை எதிர்பார்க்கின்ற கணங்களில் அழிவுகள் வருடங்களாக நகர்கின்ற பொழுதிலும் தொடர்கிறது உனக்கான எனது காத்திருப்பு. பேசிக்கொள்ள நேரமற்ற விதமாய் உணர்வுமிக்க பொழுதொன்றில் சந்திக்கனும் உனது கனிவான பார்வையே போதும் இன்னும் ஆய…
-
- 15 replies
- 20.9k views
-
-
அணைக்கப்பட்ட ஒளியில் பிணைக்கப்பட்ட நிலையில் ஆண்மையின் வன்மையிலும் பெண்மையின் மென்மையிலும் அலைக்கழிந்து களித்தன அந்தரங்கங்கள்! செளித்து வளர்ந்த புல்வெளியும்... அதில் வளைந்து நெளிந்த நீராறும்... நெடிதுயர்ந்த மலைமுகடும்... கொஞ்சும் இயற்கை எழிலை விஞ்சிய பெண்மையின் நிர்வாணத்துக்குள் ஆழப்புதைந்து களிக்கத் துடித்தது ஆண்மை! மங்கிய ஒளியில் நிகழும்... மங்களமான நிகழ்வுகளெல்லாம் மயங்கிய நிலைகொடுக்க, தயங்கியே தஞ்சமடைவதாய் ஆண்மைக்குள் புகலிடம் கொண்டது பெண்மை! இயங்கிய ஈருடலும்... கிறங்கிய நால்விழியும்... காரிருள் கானகத்தை உரசி... சூடேற்றிப் பற்றவைக்க, அடித்தோய்ந்த மழையில் நனைந்து நின்ற மரக்கிளைகள்போல் ஈரத் துளிசிந்தி பாரமாகின தேகங்கள்!!! …
-
- 15 replies
- 1.1k views
-
-
உன்னை கேட்காமல் உன்னைபற்றி நிறையவே கனவுகள் கண்டுவிட்டேன் நீ எனக்காக படைக்க பட்டவன் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டேன் கடலென நினைத்தேன் நீயோ கானல் நீராய்.. சிரிப்பினில் இனிய சோகம் வைத்தாய் மறக்க முடியவில்லை அந்த நாட்களை மறக்க முடியுமா ? மறைக்க தான் முடியுமா? காலம் பதில் சொல்லும்... கனவுகள் வெறும் கனவுகளாகவே.. போதுமடா நம் உறவு.. வார்த்தையிலே தோழன் என்று கூறிவிட்டு உன்னுடன் பேசும்போதெல்லாம் உன்னை தொலைத்த வேதனையில் நான் வாட தயாராய் இல்லை.. சோகத்தை தணிக்க , எனக்கு ஏதும் வழி தெரியவில்லை கண்ணீரை தவிர... பாவியடா நான்... எப்படி தனிமையில் அவற்றை தணிப்பேன் உன்னை மறந்து விட்டதாக நண்பர்களிடம் கூறினாலும் உன்னை பிரி…
-
- 15 replies
- 8.1k views
-
-
-
- 15 replies
- 2.3k views
-
-
பாதைக்கு பழக்கப்படாத பாதங்களாகவே பயணங்கள் தொடர்கிறது எதிர்படும் எல்லா முகங்களிலிருந்தும் எல்லோருக்குமான முகமொன்றை தேடியலைகிறேன் நாட்காட்டியின் கிழிபடாத நாளொன்றின் மூன்றுவேளை உணவிற்கான கனவுடன் மாற்றுமொரு தாள் கிழிபட துவங்குகிறது வசப்பட்டாக வேண்டிய வாழ்க்கையை வரவேற்க வாயிற் படியிலேயே வாழ பழகிக் கொள்கிறேன் நேற்றைக்கும், இன்றைக்கும், நாளைக்குமான தோழமையின் வருகைமீதான நம்பிக்கையில் தனிமையை எதிர்கொள்ள தயாராகிறேன் நாளைய யன்னல்களில் உட்புகும் ஒளியில் எனது இருண்ட அறையெங்கும் வைகறையை நிரப்பி கொள்வேன் புத்தக பைகளை வீசி எறிந்துவிட்டு சுமைதூக்கிகளுக்கு அழகின் வானவில் வர்ணங்களை வரைய கற்றுத் தருவேன் விலைமாதொருவளின் ஒர்நாளின் ஒரிரவின்…
-
- 15 replies
- 1.4k views
-
-
வா..வா!! ----------------------- கை குட்டையை கண்ணீரில் சலவை செய்த ஆண்டே 2005 போய்வா தோழா! சுனாமி என்று ஆரம்பித்தாய் ஜோசப் பரராஜசிங்கம் வரை கொன்று தொலைத்தாய்! என்ன உனக்கு நாம் செய்தோம் ஏன் இப்படி? இருந்தாலும் போய்வா! 2006 ஏ வா வா ! வண்ணப்பூக்கள் கொண்டு எம் வாசலில் கோலம் போடுவாயா? வாழ நினைக்கும் எங்கள் நெஞ்சில் கூரிய வாளதை.. பிறர் போல் மீண்டும் பாய்ச்சுவாயா? கெஞ்சி கேட்கிறோம்... நீயும் இரத்த சாரலை எம் முகத்தில் தூறாதே... தாங்கமாட்டோம்! வாய் மூடிபோன பீரங்கி வாய்களை ஒலிவம் கிளைகள் கொண்டு அடைத்துள்ளோம்! அதன் இலைகளை நெருப்பு கரம் கொண்டு இனியும் எரித்திடாதே.. அணைத்திடாதே! தர்மம் வெல்லும் என்று நினைத்தோம்-…
-
- 15 replies
- 2.9k views
-
-
மரணத்தில் தொடங்கும் காலை எனது காலை மரணம் பற்றிய செய்திகளில் விடிகின்றது நாள் முழுதும் அவலத்தின் கூக்குரல் எனது கண்களை ஆயிரம் கைகளால் பொத்தி விடுங்கள் என் காதுகளை அறுப்பதற்காய் வாட்களை கொண்டு வாருங்கள் என்னை நான் ஒளிப்பதற்கு பாதாளங்களை திறந்து விடுங்கள் இறந்த குழந்தையின் தலையை வருடி விடுகின்றாள் தாய் சிதைந்த மகனின் உடலை அள்ளி கொள்கின்றான் தந்தை நொடியில் அழிந்து போன தன் அம்மாவின் கைகளை பற்றிக் கொள்கின்றான் ஒரு சிறுவன் வேண்டாம் இவை எதையும் எனக்கு இனி சொல்லாதீர்கள் ஒற்றைச் கையில் தாயின் கபாலம் ஏந்தி ஒரு குழந்தை கனவில் வருகின்றது என் கோப்பையில் போடும் உணவில் பிஞ்சு ஒன்றின் இரத்தம் கசிகின்றது …
-
- 15 replies
- 2.2k views
-
-
பெரியாரின் தம்பி பிரபாகரனின் தொண்டன் பாரதிராசாவின் சீடன் சத்தியராசாவின் தோழன் சீமானின் ஆசான் புலியாக வாழ்ந்த காந்தி சினிமாவில் இருந்தும் போராளிகளைத்தந்தவன் எதைச்செய்தாலும் - அதில் ஈழத்தமிழர் நலன் சேர்த்தவன் எங்கு சென்றாலும் - எமக்காக இரு சொல் பேசியவன் இடியாக இறங்கியது செய்தி இழந்து நிற்கின்றோம் எம் நெஞ்செல்லாம் வீற்றிருக்கும் ஒப்பற்ற தோழனே அண்ணனே உன்னை மறவோம் நாம் தமிழிருக்கும் வரை உன் பெயர் இருக்கும் உன் கனவு பலிக்கும் அதை கண்ணால் காண எம்முள் வந்து பிறப்பாயாக...........
-
- 15 replies
- 1.9k views
-
-
இணைய உறவு இனிய உறவு இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு இருபத்தோராம் திகதி இதே சித்திரை மாதத்தில் இதோ பசுமையாக அவ்நினைவுகள் இன்றும் என் நெஞ்சில்; இனிமையான காலைப்பொழுதில் இயக்கினேன் கணனியை இணைந்தேன் அரட்டைக்குள் இயற்பெயர் வெண்ணிலாவாக இவளுக்காகவே காத்திருப்பதுபோல்; இன்முகத்துடன் அரட்டைக்குள் இளங்கவிக்குயிலாக நீயிருந்தாய் இதமாக கதைக்க நினைத்து இதழ்விரித்துக் கேட்டேன் இருக்கின்றீர்களா நலமா என்று இதயத்தை தொடுவது போல் இயம்பினாய் ஆம் நலமே என இலங்கையில் வசிக்கின்றேன் நான் இங்கிலாந்தில் வசிக்கின்றாய் நீ இவ்வாறாக தொடர்ந்த அரட்டையில் இருநாடுகளில் வாழ்ந்தாலும் இணைபிரியாது வாழ எண்ணி இருவரும் கலந்தாலோசித்…
-
- 15 replies
- 3.8k views
-
-
பள்ளி நாட்களில் பட்டாம் பூச்சிபோல் பழகிய உன் நினைவு பசுமையாக என் மனதில்... பல்லாண்டுகள் பல பொழுதுகள் பறந்து போனாலும் பால் நிலவாக உன் நினைவு... நட்புக்கு நீயும் தோழி இரங்குவதில் நீயும் என் தாய் அன்புக்கு நீயும் காதலி அறிவில் நீயும் என் ஆசான் உன்னை நான் சந்தித்தேன் இளவேனிற்காலம் உன்னை நான் பிரிந்தேன் இலையுதிர்காலம் உன்னைப்பிரிந்த பின் என்வாழ்வு மாரிகாலம் வாழ்கை என்பது உன் நினைவுகள் உறங்குமா உன்
-
- 15 replies
- 1.9k views
-
-
அன்பே வா...... நீயும் நானும் அன்போடு நீண்ட காலம் இன்போடு உறவு என்ற ஓடத்தில் ஏறி உல்லாசமாக ஒன்றாக உலகைச் சுற்றி ரசிக்கணும் என உறக்கத்தில் கனவு கண்டேன் உன் பொல்லாத கோவம் கண்டு என் கனவு நனவாகா என இன்றுதான் உணர்ந்தேன் நான் அன்று போலில்லை நீ என்பதை எப்போதும் இனிமையாக இருந்தேன் தப்பேதும் நான் செய்ததறியேன் வேண்டாம் என்மேல் அன்பே வீணான கோவம் உனக்கு துன்பங்கள் புடைசூழ நீயின்றி துவண்டு துடிக்கின்றேன் உனைப்போல் வேறோர் துணையின்றி ஊனை மறந்து கலங்குகின்றேன் விட்டுவிடு உன் கோவமதை கட்டியணை பாவியிவளை கெட்டிக்காரி என அடிக்கடி தட்டிக்கொடுப்பவனே அடிமேல் அடிவைத்து உனக்கு நடை பழக்கிய உன்னவளை இடி ப…
-
- 15 replies
- 3.9k views
-
-
மலர்களிலே குருதி மணக்கிறது, நாளை அவைகள் குண்டுகள் காய்க்கலாம் வன்டுகள் இப்பொழுதெல்லாம் தேன் குடிப்பதில்லை - அவை குருதி குடிக்கப் பழகியதால் துப்பாக்கிகளையல்லவா காதலிக்கின்றன. காற்றில் உயிர்கள் மிதக்கின்றன அவை பலாத்காரமாக பறிக்கப் பட்டதனால் உரிய இடம் சேராமல் காற்றில் மிதந்து அலைகின்றன. நாளைகளில் ஊர்கள் இருக்கும் புல் பூண்டு, மிருகம், பறவைகள் எல்லமே இருக்கும் மனிதனைத் தவிர..............
-
- 15 replies
- 2k views
-
-
-
-
நாலிரண்டு திக்கிருந்தும் - நல் அருவிகளாய் ஊற்றெடுத்து யாழெனும்...... ஆழியிலே சங்கமித்து ஆனதுகாண் அருஞ்செல்வம் மானமது காக்கும் மறக்குலத்தின் மாவிளக்கே தேனமிழ்தே தாயகத்தின் மணம் உணர்த்தும் தனிமலரே திசை வெளிகள் உன் உறவொளிரும் தீந்....தமிழால் யாழ் இசைக்கும் நரம்பொளிரும் பாரொளிரும் பருவமது பதினாறின் பேரழகே! நாமொளிரக் களமுவந்த யாழ் அரங்கே நீ வாழீ. வானமெனத் தமிழ் பரந்த வலையுலகத் திருவே, ஊனுனதாய், உளமுனதாய் கானமிது எழுகிறதே கண்மணியே..... ! எம் கவின்வனமே! காலவெளி கடந்தும், காற்றுவெளி நிறைந்தும் நீ ஆனதென வாய்கள் மலர்ந்தும் வாழிய நீ பல்லாண்டு
-
- 15 replies
- 1.2k views
-
-
மனிக் ஃபாம்... இளங்கவி - கவிதை.... மரணத்தின் பிடியிலிருந்து மீண்ட நம் உயிர்களுக்கு மனிக் ஃபாம் என்ற மரண வலயத்தில் இலவச உணவாம்...!.இல்லை..! இலவச உடையாம்.....! அதுவுமிலை...! நிம்மதி தூக்கமாம்...! சுத்தப் பொய்....! தமிழன் வாழ்க்கையில் இளமையிலும் மரணம் தரும் ஓர் இருண்ட நிலமது....! ஆம்...! பூமியில் எமன் அமைத்த மகிந்தரின் புனித பூமி அது....! எமனின் முகவர்கள் எகத்தாளமிடும் பூமி.... சிறுமி முதல் குமரிவரை சுவைத்திடுவான் ஆமி.... வன்னியிலே.. மழை வந்தால் ஆடிய மயக்கிட்ட மயில்களும்..... மனம் விட்டுப் பாடிய தேனிசைக் குயிகளும்...... கால்களும் ஒடிக்கபட்டு..... குரல்வளையும் நசுக்கப்பட்டு..... கட்டிய கூடாரத்தினுள் ஒட்டுண்…
-
- 15 replies
- 1.6k views
-
-
-
" இப்பொழுது நாங்கள் இல்லை...! உங்களுக்குத் தொல்லையில்லை...!!" செத்துப்போ என்று தள்ளிவிடப்பட்ட தரித்திரங்களின் குழந்தைகள்! இத்தனை நாளும் பக்கமிருந்து அல்லல் கொடுத்த தொல்லைகள்! சேர்த்துவைத்த செல்வங்களை வாரிச் சுருட்டிய பிடுங்கிகள்! செங்குருதி தெளித்து வல்லூறுகளை வரவழைத்த வல்லூறுகள்! வீணான ஒன்றுக்காய் வில்லாடிய வீணர்கள்! மண்ணோடு மண்ணாக குடியழித்த கொடூரர்கள்! தீவிரவாதிகளென தீர்ப்பெழுதப்பட்ட தீராத போர்வெறி வியாதிகள்! முப்பதாண்டு காலமாய் முன்னேறவிடாத தடைக்கற்கள்! அப்பாவிப் பிஞ்சுகளை பலிகொடுத்த பாவிகள்! சாதிப்போம் என்று சொல்லி சாகடித்த சனியன்கள்! இப்படியெல்லாம் எங்களைத் திட்ட, நிறைய வார்த்தைகள் இருக்கும் உங்களிடம்!!! …
-
- 15 replies
- 1.4k views
-
-
என்றேனும் நினைத்ததுண்டா? புலம்பெயர்ந்து வந்திங்கே புதுவாழ்வு பெற்றாலும் பிறந்தஎம் மண்நினைவாய் என்றென்றும் வாழ்கின்றோம். எல்லோர் முன்னாலும் எடுப்பாகப் பேசும்பலர் எமமண்ணின் குறைகளைய எதனையுமே செய்ததில்லை பசியெடுக்க வில்லையெந்தன் பிள்ளைக்கு எனச்சொல்லி பரிகாரம் செய்வதற்காய்ப் பகலிரவாய் அலைபவர்கள் பசியெடுத்த போதெல்லாம் பச்சைத் தண்ணீரால் பசிமாற்றும் எம்மீழக் குழந்தைகளை நினைப்பதில்லை கிழங்குப் பொரியலுடன் குளிர்பானம் கொடுத்துத்தம் குழந்தை இடையுணவுத் தேவையினைப் போக்கும்பலர் கிழங்கை அவித்துத்தம் முழுநேர உணவாக்கும் கண்மணிகள் பசியகற்ற உருப்படியாய்ச் செய்ததில்லை பிறந்த நாளென்றும் பிறவென்றும் கொண்டாடிப் புகைப்படப் பெட்டிமுன்னால் புன்னகைத்து நிற…
-
- 15 replies
- 2.1k views
-
-
பூப் பூவாய் பூப்பூவாய் பூத்துவிட்ட ஆசைகள் பூப்பூவாய் என் மனதிலும் பூத்தது வெள்ளையாய் சிரிக்கின்றதே மனது பூத்த பூவுக்குள் புகுந்ததோ நிறம் என்ற கருமைத்துளிகள் பூபடைத்தான் பூவைக்குள் பெண் பூவாய் பெண்ணை படைத்தான் பூவுக்குள்ளும் பனித்துளிகள் நித்தம் விழியினை மறைக்கும் உப்புநீராய் இதயத்துக்குள்ளும் சிந்துவதோ ரத்தத்துளிகள்
-
- 15 replies
- 2.3k views
-
-
எங்களுக்கும் காதலிக்கு கவிதை எழுத வருமல்ல அமேரிக்கன் ஜீண்ஸ் போட்டு பொட்டு வைக்காமல் கியூட் பிகர் போல பூனை நடையில் நீ வரவேண்டும் அந்த அழகை அடுத்த தெரு பிகரும் பெற வேண்டும் பசுபிக் கடலினிலே சிவந்த மாலை பொழுதினிலே பெண்குமரி நீயும் நானும் ஆடுவோம் அங்கு செய்யாத செயல் எல்லாம் செய்வோம் சென்ட் பூசுவோம் கிங்கிலிஸ் பேசுவோம் ஜாலியா யோக்கிங் போவோம் நாம் ஜாலியா ஆடுவோம்
-
- 15 replies
- 1.1k views
-
-
புயல் சுழன்றடித்த பெருந்தீவின் மாயான அமைதியில் சலனமில்லா ஊர்களின் நிசப்தம் தின்று மூச்சடங்கிபோன தெருக்களில் வீடுறையும் மனிதர்கள் ஒருவரும் இல்லாது தாழிடப்பட்ட கதவுகளுக்கு பின்னால் முன்பொரு காலத்தில் எந்நேரமும் விளையாட்டு சாமான்கள் விழுந்துடையும் சத்தங்களும் விண்ணதிரும் வாய்பாடொதும் ஒசையும் கண்ணுறங்க வைக்கும் தாலாட்டு பாட்டும் நினைவின் தொகுப்பாய் எஞ்சிய ஒற்றை நிழற்படம் முன் சிறுபிள்ளை பிரார்த்தனை முனுமுனுப்புகளுமிருந்தன இமைப்பொழுதில் ஒன்றுமில்லாதுபோன துயரிரவின் பேரமைதியில் ஊமைநிலத்தில் ஊடுருவிய புத்தரின் நிலைகுத்திய காந்த விழிகளுக்கப்பால் 'புயலின் சூன்யத்தை, கோர பசியை, தீரா உயிர்வேட்கையை, மாளா குரூரத்தை, அழிவின் ஆரோகணத்தை, ஏதொவொரு பிணத்தை புண…
-
- 15 replies
- 1.2k views
-