கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
வலசைப் பறவைகாள் (Immigrant birt) வலசைப் பறவைகாள் தென்திசை நோக்கி போர்விமான அணிவகுபெனெ நீர் குஞ்சுகளோடு எங்கு செல்கின்றீர்? வெள்ளிச் சுவர்க்கமான வடதுருவத்தில் எதிரிவந்தானா? மீண்டும் கிட்லரா எதற்கு இப்படிக் குடும்பம் குடும்பமாய் தெற்க்கு நோக்கிப் புலம்பெயர்கின்றீர். என்ன நிகழ்ந்தது வலசைப் பறவைகாள்? தரை இறங்குங்கள் அஞ்சவேண்டாம் வலசைப் பறவைகாள். இது கிட்லருக்கு தலைபணியாத கிளற்ச்சிக்காரரின் துரொண்கைம் நகரம்’ அதுவும் ஈழமண் காக்க களபலியான எங்கள் மாவீரரைப் போற்றும் திருநாள். வழிய உங்கள் மாவீரர்கள். உஙகளைப்போல நாம் அகதிகளல்ல. நாம் வலசைப் பறவைகள். வெண்பனி விழமுன் சூரியன் தேடி உங்கள் ஊரின் திசையில் பறக்கிறோம். உங்க உறவுகளிடம் நாம் எ…
-
- 13 replies
- 1.8k views
-
-
எஞ்சி இருக்கும் உடலங்களையும் அரிக்கத்தொடங்கிவிட்டது வார்த்தைகளால் வளைத்த கூட்டம், புதிய ஏற்பாடு என்றும், மீள்ந்தெழல் என்றும், அறையப்பட்ட ஆணிகளை அறைந்தவர்களை கொண்டே அகற்றுவோம் என்றும் செவியை வழியாக்கி இதயத்துள் இறங்கினர். நச்சுக்காற்றும் பிணவாடைகளும் முகத்திலறைய, மண்டையோடுகளையும் சிதைந்த கூடுகளையும் தரவைகளிலும் உப்பங்களிகளிலும் எழும் அவல ஓலங்களையும் கடந்து, நம்பிக்கைகள் தொலைந்த நிலத்தில் குருதியுண்டு செழித்த அடம்பன் கொடிகளையும் இறந்தவர்களின் உறுதிகளால் இறுகிப்போன விண்ணாங்கு மரங்களையும் அலகுதுடைத்த ஊனுண்ணிகளின் ஏவறைகளையும் கடந்து, எக்களிப்புடன் வனப்புடல் பார்த்து குறிகசக்கி பல்லிழிப்பவனையும், சுடுகருவிகொண்டு படு என்றழைப்பவனையும் கடந்து, த…
-
- 13 replies
- 951 views
-
-
தோல்வியில் மீளுவோம் நீண்ட பயணம்…., முடிவு வரும் ஆனால் பாதை கடினமானது. தெரிந்து பயணம் செய்தான் எங்கள் தலைவன். வெற்றிகள் வந்தது தோல்விளும் கூடவே….! பயணத்தின் பாதை அது மிகக் கொடுமையானதாய் கொத்துக் கொத்தாய் விலை கொடுத்தோம் …..! சென்னீரும் கண்ணீரும் சேர்வையாய் குருதியாற்றில் குளிர்தோடிய பயணம் அது முடியும் தருவாயில்…..! இதோ கனவின் கடைசித்துளி நிசமாகியதாய் நினைவு. நாங்கள் வென்றோம்…..! பாதியில் பயங்கரக்கனவு போல் பறிபோன கனவின் மீதமாய் தோற்றுப் போனோம்….! பயணம் முடியாமல் தோல்வியாய் பயணவழி வந்தவர்கள் பயணம் முடியாமல் பாழ் சிறைகளிலும் பயங்கர அறைகளிலும்…..! எனினும் எல்லைகளை எட்டும்வரை பயணத்தில் தங்கள் பாதையை தெரிந்த சிலர்…
-
- 13 replies
- 1k views
-
-
ஏங்கிய காலங்கள் போதும் கன்னம் சிவந்ததோர் காலம் - எழில் கவிகள் படித்ததோர் காலம். சின்ன வரையரைக்குள்ளே - உன் சிந்தை இழந்ததோர் காலம். வண்ணமயில் என்றும் கூறி.. வஞ்சிக் கொடியென்றும் கூறி... எண்ணம் எங்கும் மென்மை தூவி... -உந்தன் வன்மை அடக்குவர் தோழி! அங்கங்கள் அழகுதானடி -அதை அங்கங்கே போற்றுவர் தேடி.. உங்கருத்தைக் கேட்க யாரடி? - அடி உன்னதப்பெண்ணே! நீ கூறடி!! நுண்ணிடை என்றொரு கூட்டம் - உன்னைப் பண்ணிடை கற்பனை பாடும். மண்ணிடம் காட்டு உன் தாகம் - அதுவுன் பெண்ணுடல் நீத்தாலும் வாழும். கங்கை உனக்கென்ன தங்கையா? மங்கை உdக்கின்னும் மருட்சியா? உன்கையை வான் வரை உயர்த்தி -அதில் உலகை ஈர்க்கலாம் முயற்சி! மையல் காட்டும் கண்ணில் மயங்காத் தையலர் மேன்மையை உணர் நீ! உய்யல் வ…
-
- 13 replies
- 2k views
-
-
என்னணை அப்பு? இடிஞ்சு போய் இருக்கிறாய்! எல்லாம் முடிஞ்சுது...! அது தான் இப்படி! என்னப்பு நடந்தது? ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்! இல்லை...இல்லை..! இன்னும் கொஞ்சம் சறுக்கியிருக்கிறம்! என்னப்பு.. கள்ளுத் தத்துவமோ? கள்ளில முன்னேற்றம் ! அதை விடு..! பிளாவிலை குடிச்சனாங்கள், இப்ப..., கிளாசில குடிக்கிறம்! ஆயிரமாய்த் துலைச்சு..., அலங்கோலங்கள் சுமந்து..., விலாசங்கள் கலைந்து,,, தலையில துண்டோட...! என்னப்பு நடந்தது? கொஞ்சம் விளக்கமாய் சொல்லணை! அது தானே சொல்லிறன்.., ஆரம்பப் புள்ளிக்கே.., திரும்ப வந்திருக்கிறம்!
-
- 13 replies
- 2.6k views
-
-
எண்பத்தி மூன்றினிலே (யுகசாரதி) எண்பத்தி மூன்றினிலே - ஆ இலங்கைத் தீவினிலே எண்பத்தி மூன்றினிலே இந்து மா கடலுக்கு நடுவினிலே - ஆடி இருபத்து நான்கிற் தொடங்கியதே துயர் இலங்கைத் தீவினிலே கண்பட்டதோ இத் தமிழினத்திற்கென கண்டவர் யாரும் வருந்திட எங்களைப் புண்படச் செய்தனரே-ஒரு போக்கிடமற்ற அகதிகளாக்கியே எண்பட்ட யாவரையும் தமிழ் என்றறிந்தால் உடன் கொன்றெறிந்தார் - அந்தோ (எண்பத்தி...) நெஞ்சங் குமுறிடவே-கற்பு நீங்கிடச் செய்த கொடுமையிலே - அந்தப் பஞ்சைத் தமிழ் மகளிர்-கொடும் பாவிகளாற் தங்கள் ஆவியை விட்டிட அஞ்சிய பாலகர்கள்-தங்கள் அன்னையர் மார்பில் அமுதமருந்தியே துஞ்சிய செய்திகளும்-பல துயரக் கதைகளும் மறந்திடுமோ-அந்த (எண்பத்தி...) …
-
- 13 replies
- 2.4k views
-
-
சரஸ்வதி துதி வெள்ளைத் தாமரையில் வெண்ணிற உடை உடுத்து வீணை தனை மீட்டிடும் வாணியே... கலை மகளே..! வெள்ளை உள்ளத்துடன் எளிய தமிழ் கவிதைகளை எழுதிட நீ உதவிடம்மா... ******** நாளெல்லாம் நவராத்திரி யாழ் களத்திலே... நாமகளும் உறைந்திடுவாள் எங்கள் படைப்புகளிலே இனிய தமிழ் கவிகள், கதைகள் புதுமைக் கருத்துக்கள், செய்திகள் மனம் மகிழவைக்கும் நகைச்சுவை கண்ணுக்கினிய காணொளிகள் இவை வழங்கும் யாழ் களம் நான் பயிலும் பல்கலைக்கழகம். நாளும் நாம் எழுதும் படைப்புகள் நவதானியமாய் விதைக்கப்பட, இவை வழங்கும் படைப்பாளிகள் தாமே அழகிய கொலுக்களாக, வளரும் அழகு தமிழ் யாழ் களத்தில் அழியாது என்றும் இவரிருக்க. உள்ளத்தில் உள்ள ஆணவத்தை அழிப…
-
- 13 replies
- 2.5k views
-
-
ஒருமுறை ஆய்வு செய்ய......... வட்டி முதலாய் படர்ந்து விட்ட கடன் கட்டி முடிக்க வேண்டும் தவணையோடு பட்டு விட்ட கடனை சேர்ந்தே அடைக்க மனதினில் தட்டிவிட்டதோர் சட்டென்ற ஒர் யோசனை வெட்டியாய் வீட்டிலிருந்தே வெறுமனே மெட்டி ஒலி பார்த்து மென்னுடலை பொட்டலமாய் உருத்தெரியாமல் மாறிடாமலே கட்டு மேனியை கட்டோடு வைத்திருக்க எட்டு மணி நேர வேலைதனை எட்டியே போய் செய்யலாமே கட்டியதனால் கணவனார் உரைத்தலாலே எட்டு மணி நேர வேலை இயல்பாய் எட்டிரண்டாகி இயந்திரமாகிப் போனதில் எட்டிப் பார்த்ததோ நோயும் நொடியும்தான் கட்டியவனுக்கு நோய் என்றால் கட்டியவள் காப்பாள் நிதம் பத்தியம் கட்டியவளுக்கு நோய் என்றால் கட்டியவன் காப்பானா பத்தியம் அடுப்படி விசயம் …
-
- 13 replies
- 2k views
-
-
காதல் என்றால் என்ன என்று காகிதத்தில் எழுதிவைத்து- நீயும் காத்திருந்தால் காதல் வந்திடுமோ? காலம்தான் பதில் சொல்லிடுமோ? காதல் கன்னி அவளைக் கண்டு காதல் நீயும் கொண்டுவிட்டால் காத்திராமல் சொல்லிவிடு-அன்பே காதல் என்னும் கனி இரசத்தை காதல் கொண்டு நீயும்-உன் காதல் சொல்லாவிட்டால்-நண்பா காலம்முழுவதும் அவள் நினைவாகி காற்றோடு பறந்திடும் உன் அன்பு :wink:
-
- 13 replies
- 2.1k views
-
-
தமிழன் இராவணன் ஆண்ட புரி ஹிந்திய இராமன் ஆக்கிரமித்த புரி தமிழிச்சி குவேனி பூர்வீகமாய் குடியேறிய புரி கள்வன் விஜயன் குடி அமர்ந்த புரி..! மொழிப் பிசையல் சிங்களம் உதித்த புரி செந்தமிழ் உதிர்ந்த புரி சிங்கம் - மனிதக் கலப்பு கதை தலையெடுத்த புரி சோழப் பரம்பரை புலி தலை சரிந்த புரி..!! மேற்கு ஐரோப்பியர் விரும்பிய புரி வடக்கு ஹிந்தியர் அரவணைத்த புரி பெருஞ்சுவர் தாண்டி சீனர் கொண்டாடும் புரி கிரம்ளின் கண்ட ரஷ்சியர் அதிசயத்த புரி..!!! கடலலை கொட்டும் மணற்திட்டால் இணைந்த புரி பல கடற்கோள் கண்ட புரி மகிந்த எனும் மந்தியால் சிதையும் புரி ஆண்ட தமிழர்களுக்கு புதைகுழியாகி நிற்கும் புரி..!!!! கழனியும் காடும் கண்ட புரி மலையும் மடுவும் கொண்ட புரி இனக் குரோதம் வளர்த்…
-
- 13 replies
- 1.6k views
-
-
இவை கவிதைகளும் அல்ல, ஹைக்கூக்களும் அல்ல, எவையும் அல்ல...ஆனால் ஏதோ கணங்களில் கடந்து போன சில வரிகள் 1. ரயிலில் எனை உதைத்தது நான் இருக்கை வழங்காத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்த குழந்தை 2. பூச்செடி பூக்கவில்லை; தூக்கி எறியும் போது முளையில் தொங்கியது உயிர் கொண்ட புழு 3. சிவனே அர்த்தநாரீஸ்வரன்!! மறுத்து தானே என்றது மண் புழு சின்னக் குறிப்பு: மண் புழுவில் ஆண் உடலும் பெண் உடலும் சேர்ந்தே இருக்கும் 4. அன்று வைரவர் திருவிழா ! ஊரில் இருந்த நாய்களுக்கு காயடித்தனர் பக்தர்கள்
-
- 13 replies
- 3.5k views
-
-
-
- 13 replies
- 2.4k views
-
-
இன்பம் எங்கே...........இன்பம் எங்கே என்று தேடு மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம் சிறுமிக்கு விழாது பொம்மை மீது இன்பம் மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம் பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம் மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும் பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம் கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின் (************** ) விரும்பியதை போட்டு வாசிக்க தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம் தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம் பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம் வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம் தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம் ு யாழ் களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம் மனிதருக்கு இன்…
-
- 13 replies
- 2.3k views
-
-
என் இதயக் கோயிலுள் தெய்வம் நீயே! என் இதயத்தை எடுத்துக் கொண்டவனும் நீயே! காதலுக்கு வரைவிலக்கணம் தந்தவனும் நீயே! காதலுக்கு வழிகாட்டியவனும் நீயே! என் வாழ்க்கையை உணர்ந்தவன் நீயே! என் வாழ்க்கைத் துணைவனும் நீயே! நான் காதலிக்கும் ஒருத்தனும் நீயே! எனக்காக பிறந்தவனும் நீயே! :P :P
-
- 13 replies
- 2.5k views
-
-
புலம் பெயர்ந்து பிரான்சில் வாழும் சிங்கள கவிஞரான மஞ்சுள வெடிவர்த்தன பாலச்சந்திரன் நினைவாக எழுதிய கவிதை.. பாலச்சந்திரன் சிறு நிலா சிறு நிலாவா? அதைச் சொல்லவும்கூடுமோ? பத்துத் திக்கும் சுடரொளி வீசிய சூரியனைக் கொன்றது சிங்கம் தாய்நிலத்தைச் சூழ்ந்த குருதியால் சுவரோவியங்கள் வரையப்படுகின்றன சினத்துடன் சிங்கம் சிறிய நிலாவையும் கொன்றபோது முகில்களின் திரையைக் கிழித்து உள்ளே ஒளிந்தது நிலா பயத்தில் ஒடுங்கின நட்சத்திரங்கள் இருளின் சஞ்சாரம் நிலா சூரியனாக மாறுகிற ஒரு நாள் வரும் அப்போது எங்களுக்கு ஒளிவதற்கும் இடம் கிடையாது. நன்றி : காலச்சுவடு நீ சாகவில்லையடா என் தம்பி... எம்மைப்போல் ஆயிரம் ஆயிரம் அண்ணண்களின் இதயங்களில்…
-
- 13 replies
- 2.1k views
-
-
ஆயிரம் கால்களுடன் மரஅட்டையொன்று, மனதினுள் ஊர்ந்து கொண்டிருக்கிறது சில காலங்களாக....!!! பரந்த வெளிப்பரப்பின் சன நெரிசலின் எதோவொரு மூலையில் முகமறியாத முகமொன்றின் புன்னகைக்காக தவமிருக்கிறது.....!!! தாழ்வாரத்தை நோக்கி பாய்ந்து முடிந்த, மழை வெள்ளத்தின் ஈரலிப்பை நோக்கி கால்கள் நகர்கின்றன.....!!! பாதையில்லாப் பயணமொன்றின் நடுவில், வழிதவறிய பாதையின் பாதச்சுவடுகளை தேடி கண்கள் பணித்து கலங்குகின்றன....!!! பாலைவனப் பாறையொன்றின் அடியில், இதிகாசங்களாய் கிடந்தது போல் இதயம் கணக்கிறது....!!! தேடிக் கிடைத்த பொருளை தொலைத்து விட்ட இயலாமையின் வலியை இன்றியமையாததாக்கி கொள்கிறது காலம்....!! மகரந்த தேனை உண்டு புசித்த வண்டை, பூக்கள் இல்லாத தேசத்தில் பறக்க விட்ட வெறு…
-
- 13 replies
- 1.7k views
-
-
அடங்கிக்கிடக்கிறது. என்றும் இப்படி கிடந்ததில்லை இறகுகோதும் ஓசையாவது கேட்கும். எதுவுமில்லை. நேரம் அறியக்கூட பர்ப்பதுண்டு காலம் தப்பியதில்லை ஒருபோதும். காலம்...?? எங்கே போயிருக்கும், இரைபோதாமல் இன்னும் தூரம் போயிருக்குமோ இணைகூடி இடம் மாறி இருக்குமோ இரையாகி இருக்குமோ இறகு உருத்தியும், எச்சமிட்டும், சுள்ளித்தடிகளை விழுத்தியும், தூண் விட்டத்தில் குறுகுறுத்து தலை புதைத்தும், எங்கே போய் தொலைந்திருக்கும். "சனியன்" என்று வாய்விட்டு திட்டவேண்டும் போல ஒரு உணர்வு. காலம் காத்திருப்பை சேமிப்பதில்லை. சிக்கிக்கிடந்த ஓரிரு இறகுகளும் தவறி அலைகின்றன. எச்சங்கள் காய்ந்து துகளாகி இல்லாமல் போகின்றன. சந்தங்களால், குதூகலித்துக்கிடந்த கூட்டிலிருந்து வெற…
-
- 13 replies
- 1.2k views
-
-
மனிதா..மனிதா... கலைக்கு விசிறியாய் இரு... "தல"க்கு விசிறியாய்.. இராதே... திரைக்கு விசிறியாய் இரு.. விஜய்க்கு விசிறியாய் இராதே.. தமிழ்த்தாய் செத்துக்கொண்டிருக்கிறாள்.. அவளுக்கென இல்லையாம் ஊர் சுற்றும்.. உல்லாசப்பிறவிகளுக்கு ஊரெல்லாம் மன்றம். தமிழன் பட்டினியில் இறப்பெதெதிர்த்து.. தீக்குளிக்க ஆளில்லை.. தலைவனென்றும் கட்சியென்றும்.. தன்னிலை மறந்து தீக்குளிக்கிறான்.. அண்ணன் தம்பியாயிருந்தும்.. யாரோ நடிகனுக்காய்.. வீட்டினுள்ளே.. அடித்துக்கொண்டு..தலையுடைத்து
-
- 12 replies
- 1.7k views
-
-
கோவம் குட்டிக் குட்டிக் கதைகள் சொல்லி குதூகலப்படுத்துபவனே சபை நடுவே துணிவுடன் உலாவரும் சகலகலா வல்லவனே விடிய விடிய தூக்கமின்றி விருப்போடு பேசிப் பேசி சிரிப்புகளோடு கூடிய அரட்டையில் சிந்திக்கவும் சிறகடிக்கவும் வைப்பவனே தேடலின் நாயகனே வானொலியின் தலைவனே அரட்டையில் மன்னவனே எனதன்புத் தம்பியே அன்றொரு நாள் எனை நீ திடீரென சந்தித்த போது அடைமழை பெய்கையில் குடையின்றி நான் நனைந்ததையும் பெரியம்மா வீட்டு நாயை தைரியமாக களவாடியதை தெருவோரமாக ஒதுங்கி நின்று தெரியாமல் பார்த்த நீ சொல்லமாட்டேன் யாருக்கும் லொலிபொப் வாங்கித் தா என செல்லமாக கேட்டதும் செலவழிக்கின்றேன் இப்போதும் நான் ஆனால்... யாவற்றையும் யமுனாவாக …
-
- 12 replies
- 3.4k views
-
-
நினைவில் உருவாகி கனவில் கவிபாடி காதல் வழர்த்தேனடி... கனவை நினைவாக்க நினைவை நிஜமாக்க நீயே- வருவா யாடி....? உயிரில் உனதாகி உறவில் உனை வேண்டி மனதைக் கொடுத்தேனடி... உயிரில் உயிராகி உணர்வில் உனதாகி உலகை இழந்தேனடி... உலகில் நாம் வாழ உரிமை நீ யாக உனை நீ தருவாயா...டி........??
-
- 12 replies
- 2.2k views
-
-
என் ரோசாப்பூ சேலைக்காரி.... கவிதை - இளங்கவி........ குட்டைப் பாவாடையுடன் மனதை கொள்ளை கொள்ளும் சிரிப்பு கொண்டு நல்லூர் வீதியெல்லாம் சுற்றிடுவாய் நானும் உன்னை சுற்றிடுவேன்...... கரம்சுண்டல் வாங்கி வந்து என் கைகளிலே வைத்திடுவாய் வாங்க மறுத்துவிட்டால் என் காலை மிரித்திடுவாய்..... கடைக்கண் பார்வைகொண்டும் அடித்திடுவாய்.... நல்லூர் முருகனை மறந்துவிட்டு உனை உன்முடிபோல தொடர்ந்திடுவேன் முழு கண்கள் பார்க்கமுதல் இருளாக மறைந்திடுவேன்.... சில திருவிழாக்கள் ஓடி உன் சிறு அழகெல்லாம் வளர்ந்துவிட ரோசாப்பூ சேலைகட்டி என்மனதை ஜோராக இழுத்தவளே...! சிறுவயதில் நீ தந்த பொரிகடலை சுவையும் போய்.... நீ சிறிதாக வாங்கித்தரும் கரம்சுண்ட…
-
- 12 replies
- 1.7k views
-
-
சில நாட்கள்... சில நாட்கள் சந்தோசமானவை சில நாட்கள் சோகமானவை சில நாட்கள் சுறுசுறுப்பானவை சில நாட்கள் சோம்பேறித்தனமானவை சில நாட்கள் அறிவுபூர்வமானவை சில நாட்கள் முட்டாள்தனமானவை சில நாட்கள் உயிர்ப்பானவை சில நாட்கள் தூங்கிவழிபவை சில நாட்கள் பையில் காசு உள்ளவை சில நாட்கள் கை கடனில் ஓடுபவை சில நாட்கள் நண்பர்களுடன் கழிபவை சில நாட்கள் எதிரிகளுடன் கழிபவை சில நாட்கள் நீதிவழி செல்பவை சில நாட்கள் திருட்டுத்தனமானவை சில நாட்கள் வெற்றியில் வருபவை சில நாட்கள் தோல்வியில் செல்பவை சில நாட்கள் அமைதியில் கழிபவை சில நாட்கள் அலைச்சலில் கழிபவை சில நாட்கள் பாடம் படிப்பவை சில நாட்கள் பாடம் எடுப்பவை சில நாட்கள் சிரிப்பவை சில நாட்கள் அழுபவை சில நாட்கள…
-
- 12 replies
- 2.1k views
-
-
நிர்வாண மரங்கள் கிளைகள் தளிர் நிறைக்க இலையாடை அணிந்து தம்மை அழகாக்க ஆயத்தமாகின்றன பூமியின் காதலன் நிதம் கதிர் பரப்பி தூங்கிக் கிடக்கும் வேர்களைத் தட்டி எழுப்ப கிளைகள் எங்கணும் மகிழ்வின் துடிப்பில் மொட்டுக்கள் பூக்களாகி மாலை கட்டி நிற்கிறது மரம் மறைந்து வாழ்ந்த பறவைகள் மரங்களில் அமர்ந்து மகிழ்வாய்க் காதல் செய்ய மன நிறைவாய் தளிர்கள் நாளும் பொழுதும் விரிந்து நாட்டியமாடும் மங்கையராய் நடை பரப்பி நிதம் நகைக்க வைக்கின்றன பார்க்கும் இடம் எங்கும் பச்சை வண்ணம் காண பசுமை கொண்ட மாந்தமனம் மனதெங்கும் மகிழ்வோடு துன்பங்களைத் தூர வைத்து இயற்கை எழிலை எல்லையின்றி எங்கும் நிரப்பிக்கொள்ள போதும் இன்று என எண்ணித் கதிர்க் குடை சுருக்கக் கதிரவன் காலம…
-
- 12 replies
- 1.2k views
-
-
இதயத்தில் , உன் பெயரையும் உயிரில் உன் முகவரியையும் சுமந்தபடி! முகம் இழந்தது அகம் சிவந்து நடக்கின்றேன் வரைந்துவிடு பெண்னே எனக்கு ஒரு கவிதயை கல்லுக்குள் காதலை தேடினேன்-என் நெஞ்சுக்குள் உன்னைத் தூவினேன் எத்தனை இரவுகள் கடந்து சென்றுருக்கின்றேன் எத்தனை நினைவுகளை மறந்து சென்று இருக்கின்றேன்- பெண்னே உன்னை மட்டும் மறந்து செல்ல முடியவில்லை பூட்டிய உன் இதயத்தால் ஈட்டியாய் தைக்கும் என் உயிரை மீட்டிய பல்லவி கொண்டு தீட்டியே விடடி எனைக்கவியாய் -இனியவள் பூட்டிய இதயம் ஓலிவடிவில்.....
-
- 12 replies
- 2.5k views
-
-
மோசமான நாட்கள் உக்கிரமடைந்த போர் வேட்டையில் கலைக்கப்படும் மிருகத்தைப்போல ஓடுகின்றோம் தொடர் குண்டுத்தாக்குதல்கள் இரத்த ஓடைகள், பிணக்குவியல்கள் மனிதப்பேரவலம்! உலகம் சொல்லிற்று காப்பாற்றுவார் யாருமில்லை! கோழியின் இறகுக்குள் பதுங்கும் குஞ்சுகள் போல பிள்ளைகள் உயிரைக்காக்கும் இறுதி முயற்சியில் பதுங்குகுழிகள்! அவையே சவக்குழியாகும் அவலம்! இறுதியில் ஆக்கிரமிப்பாளனிடமே போக வேண்டிய துர்ப்பாக்கியநிலை! நீரேரி வழியாக வெளியேற நிர்ப்பந்தம்! நெஞ்சளவு தண்ணீர் நடக்கமுடியாத அம்மா! எப்படி கொண்டு செல்வது நடக்கக்கூட ஜீவனில்லை! பெற்றெடுத்து தோளில் சுமந்தவள் கூலிவேலை செய்து என்னை வளர்த்தெடுத்தவள்! மொட்டுவிடும் பருவத்தில் பேரப்பிள்ளைகள்! திரிசங்கு நிலையில் நான், யாருக்கும் வரக்கூடாத…
-
- 12 replies
- 861 views
-