Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. Started by akootha,

    ஈழத் தமிழன் இன்று மறத்தமிழர் வீழ்ந்து போயினர் ஆயினும் தமிழரின் வீர சரித்திரமாயினர் வீரன் வீழ்ந்தாலும் வாழ்வான் பல தமிழர் அகதி ஆயினர் வரலாறில் யூதரும் அகதி தான் அகதி என்பது அகதியின் இழுக்கல்ல யார் அகதி ஆக்கினர் என உரத்து சொன்னால் பல தமிழர் மாண்டு போயினர் யாரேனும் காப்பார் என இறுதி வரை காத்திருந்து சிலர் எதிரியிடம் அகப்பட்டு மறைந்து போயினர் எல்லோருமே ஒருவகையில் சீரழிந்தனர் மேலும் பலர் வேறு வழியின்றி அடக்குமுறைக்குள் வாழப் பழகினர் மனித உரிமை பேசியோர் எல்லாம் தூர ஓடினர் சீனா காரன் பலம் கண்டு சிலர் எல்லாம் மறந்து சேர்ந்து வாழ்வோம் அடுத்த முறை அரசு அடிக்கும் வரை என்றனர் வெகு காலம அடிவாங்கி பழகிய இனம் சோழன்…

    • 0 replies
    • 614 views
  2. ஈழத் தமிழர் - பேராசிரியர் இரா. அரங்கசாமி பீதி யுற்றுப் பிறந்த மண்ணில் பரித விக்கும் ஈழவர் நாதி யற்ற நாய்க ளாக நாளும் சாக லாகுமோ? நீதிக் காக அவர்கள் செய்யும் நியாயப் போரைப் பழித்துமே ஓதிக் கற்ற தமிழர் கூட்டம் ஒதுங்கி நிற்ப தென்னவோ? பயிரை மேயும் வேலி யான பாது காப்புப் படையினால் உயிரை விட்டும் இன்னல் பட்டும் உழைக்கும் மறவர் தளரவே கயிறு திரித்துக் கதைகள் பேசிக் காட்டிக் கொடுத்து நம்மிலே வயிறு முட்டச் சோறு தின்னும் வீணர் கூட்டம் வாழ்வதோ? கூறு கெட்டுத் தமிழர் சாகக் கைகள் கட்டிப் பார்ப்பதோ? சேறு கொண்டு வீசி அவரைச் சாடு கின்ற கும்பலும் மாறு பட்டு நிற்கும் மற்ற மானத் தமிழர் கூடியே வேறு பாடு போக்கி விட்டு வகுக்க வேண்டும் நல்வழி! -தென்…

  3. ஈழத் தமிழ்க் குலமே! எழுக!!!!! புத்தனா,நீ? போய்விடு! போதி மரத்தைத்தான் எத்தனை நாளாக நம்பி யிருப்பது? அகிம்சை போதிக்கும் அண்ணலும் வேண்டாம்! பகையை வளர்க்கும் பாலமும் வேண்டாம்! பிஞ்சுக் கொடியை மொட்டு மலரை நஞ்சுக் கொடியை நசுக்கிய பாவியைக் காணவா, கண்கள்? இருக்கும் உயிரைப் பேணுதல் வேண்டோம்! களத்தில்நில்! நம்முள் இருப்பதும் ஓருயிர்! என்பதை,எண்! செங்களத்தில், அரும்புகளைக் கொன்ற அகந்தை அழிப்போம்! சிங்கள நாயின் சிரந்தனைக் கொய்துநமைப் பங்கப் படுத்தும் படையை ஒழிப்போம்! புலிகளை வெல்லுமோ பசுக்களின் கூட்டம்! அலிகளுக்கா ஆண்மை பணியும்? தமிழா, இறுதிக் களமிது, போராடு! நெஞ்சில் உறுதிகொள்! உள்ளத்துள் ஈழம் தனைநினை! …

    • 3 replies
    • 1.1k views
  4. நீர்த்துளி வடிவ நாட்டில் சிந்துகின்றான் ஈழத்தமிழன் உயிர்த்துளிகளை... அறிந்த பொது கொட்டுதடா எங்கள் உள்ளத்தில் உதிரத்துளிகள் ஆகாயமும் சிந்தியது மழைத்துளிகளை கண்ணீர் துளிகளாய்... படித்தேன்... மழைத்துளி மண்ணின் உயிர்த்துளி என்று; ஆனால் உயிர்த்துளி...? http://kavithai7.blogspot.fr/2012/08/blog-post_10.html#more

  5. ஈழத்தமிழனின் குரல்: "என்று திரும்பும் எம் வாழ்வில் விடியல்?" எதிர்பார்த்து இருந்தோம்! சிங்களம்- கொன்று குவித்த பின்னர் தானோ உலகம் பார்வை திருப்பும் என்று குமைந்தோம்!???? வண்ண வான வேடிக்கை கண்டு நாளாச்சு தினம் வான் பொழியும் குண்டுமழை காணும் நிலையாச்சு! உரிமை கேட்டு குரல் கொடுத்தோம்! உயிர் நசுக்குகின்றான் எங்கள் சந்ததிகள் அனைவரையும் சாகடிக்கின்றான்! மரத்தினடி ஒதுங்குகின்றோம் நிழலுக்காக அல்ல மரணம் ஓட்டிக்கொண்டு வந்து விட்டதென்ன சொல்ல?!"மருந்துக்காகவேனும் இங்கு உணவைக் காணவில்லை வற்றிப்போயாச்சு வடிக்க கண்ணீரும் இல்லை! புலம் பெயர்ந்த உறவுகளே 'வேரின் நிலை கண்டீர்! வேற்று நாட்டில் இருந்தாலும் எம் வேதனைகள் அறிவீர்! ஈழத்தமிழர் வேதனையை எங்கும் சென்று உரைப…

  6. Started by nunavilan,

    ஈழத்தமிழன் நீரால் பிரிந்தாயோ தமிழா நிலத்தால் பிரிந்தாயோ தமிழா இயற்கை பிரித்ததோ தமிழா தமிழ் மொழியால் ஒன்றுபட்டோம் - தமிழா வாழ்கை நெறி கண்டவனும் தமிழன் உயர்வு வாழ்வுநெறி சொன்னவனும் தமிழன் உலக நீதி கண்டவனும் தமிழன் உலகம் முழுவதும் வாழ்பவனும் தமிழன் வான்புகழ் கண்ட வள்ளுவனும் தமிழன் மானம் உயிரெனக் கொண்டவனும் தமிழன் கொஞ்சும் தமிழ் கண்ணீர் சிந்துதே குளிர்ந்த ப10மி குருதியில் நனையுதே இதைக் கண்டு எம்கண்கள் குளம் ஆகுதே எட்டுத் திக்கும் மகிழ்ந்து தமிழ் வாழுமா? ஈழத்தமிழனின் சோகக்கதைதான் தீருமா? இருளை விலக்கித் தமிழ் ஈழம் தளைக்குமா? உண்மையென்றும் சாவது இல்லை தமிழா! உன் உரிமைக்கு நீதி கிடைக்கும் தமிழா! J.டானியல் (யாழ்ப்பாணம்) கி…

  7. ஈழத்தமிழருக்காக பிரளயனின் கலைக் குரல். -வ.ஐ.ச.ஜெயபாலன் இரண்டு இரவுகளும் ஒரு பகலும் என்னால் எழுத முடியவில்லை. பண்டிச்சேரி பல்கலைக் களக நடபகத்துறையினர் தயாரிப்பில் பிரளயன் இயக்கிய பாரி படுகளம் நாடகத்தின் தாக்கத்துள் இருந்து இன்னும் வெளிவர இயலவில்லை என்பதுதான் அதற்க்குக் காரணம். மூவேந்தர்களால் சுற்றி வழைக்கப் பட்ட பரம்பும் கூலிக்குப் போராட வந்த மூவேந்தர் படையும் மண்ணையும் மக்களையும் மீட்க்கப் போராடும் பெண்களும் ஆண்களும். மாவீரர் தின நடுகல் வழிபாடும். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் தமிழால் ஒன்றுபடுவோம் என்றும் எழும் வானதிரும் கோசங்களும். சுவடிக்குள் உட்சுவடியாக ஈழத்தமிழர் போராட்ட ஆதரவு கலைத்துவமாக வெளிப்பட்டு மனசு கனக்க நிறைந்தது. மாவீரர் நடுகல் வழிபாட்டில் போர…

    • 0 replies
    • 771 views
  8. ஒன்றும் புரியவில்லை, இன்றும் வெளிச்சங்கள் இல்லை, அருகிருக்கும் தோழனின் அம்மா நித்தம் வந்தால், பக்கத்தில் எனக்கும், மலர் வைத்துச்சென்றாள், அவள் வரவும் இன்று இல்லை, விடுதலைக்காய் வீழ்ந்த தோழர்களை, வித்துடலாய் காவி வந்த, தோழர்களே,எம்மை துயிலெழுப்பி மவுனமாய், சத்தியம் செய்து சென்றீரே, உங்களை இன்று காணவில்லையே? எழுந்து வந்து தேடவும் முடியவில்லை. இன்று எல்லாம் மாற்றமாய் கிடக்கிறது, சிங்கள மொழி கேட்கிறது, சீரும் இயந்திரம் எங்கள் கல்லறை மீது போகிறது, சப்பாத்து கால்கள் எங்கள் இல்லங்களை சாக்கடை ஆக்கின்றதே, சத்தியம் செய்து சென்ற தோழர்களே, லட்ச்சியம் மறந்து போனிரோ? பூமிக்குள் நாம் படும் வேதனை புரியவில்லையா? எம்மை புதைத்த தோழர்களே, …

  9. இன்றைய நாள், ஈழத் தமிழர்களின் வரலாற்று பாதையில் கால(க்) கடவுளர்களை நினைவு கூரும் கண்ணீர் கலந்த நாள்! எங்கே அவர்கள் என ஏன் தேடுகின்றீர்கள்? அட கல்லறைகள் எங்கே எனவுமா தேடுகின்றீர்கள்? எங்கள் உள்ள(க்) கோயிலினுள் உறவுகள் வாழ்வதற்காய் உயிர் கொடுத்த உத்தமர்கள் தூங்குவதை அறியாது தேடுவது மடமை அல்லவா? நாம் சுவாசிக்கும் மூச்சுக் காற்றில் அவர் தம் நினைவுகள் பறந்து வந்து மேனியில் ஒட்டி சிலிர்ப்பை தருகின்றதே! நீங்கள் உணரவில்லையா? உங்கள் கண்களை ஒரு கணம் மூடி மீண்டும் திறவுங்கள்! இதோ கல்லறைகள் சிகப்பு மஞ்சள் கொடி கொண்டு அலங்கரிக்கப்பட்டு கண்ணீரால் கழுவப்படுகின்ற காட்சியினை(க்) காண்பீர்களே! சற்று(த்) …

  10. அகன்று திரண்டு அன்பு கனிந்தொரு அன்னை வளர்த்தாலும்-பிள்ளை தெருவில் நடந்தொரு பள்ளி பயின்றிட எதிரி தடையாக. நிமிர்ந்து எழுந்தனர் கருவி சுமந்தனர்-புலி தமிழர் படையாகி களங்கள் திறந்தனர் சமரில் உயர்ந்தனர் உலகம் வியந்தாக. படையில் விழுவதும் எழுந்து நிமிர்வதும் புதிய விதியல்ல விழுந்த மாவீரர் விதையா யாயினர் எழுவார் என்றென்றும். படலை திறந்தொரு தெருவில் இறங்கிட பயந்து சிலரோட நடுத்தெருவில் பலர் கதை முடிந்து சாவொரு மலிந்த நிலையாக, களங்கள் திறந்து சுழன்று சமரிடை புலி நிமிர்ந்த மாவீரன் குருதி படிந்து புதைந்து கிடந்தமண் கோவில் லாகாதோ. சதிகள் குவிந் தொரு நிலையில் மனமது தளந்து போகாமல் விமானத் தளங்கள் அழிந்தன களங்கள் எரிந்தன தமிழர்…

  11. எனக்குள்ளே புதைந்து போன ஈழம் நீ உன்னை விட உன் நினைவுகளையே அதிகம் நேசிக்கிறேன் ஏன் தெரியுமா உன் நினைவுகள் மட்டும் என்னோடு இருப்பதால்

  12. ஈழத்தின் போர்க்கோலம் வண்டியில் பூட்டிய மாடுகள் முதுகு நிமிர்த்தி நம்பிக்கையோடுதான் நடக்கிறது அகப்பட்டதை ஏற்றிய கைகளும் கால்களும் வலிகளோடுதான் மிதக்கிறது குண்டு சுமந்து வரும் வானூர்தி நெஞ்சைக் கிழிக்கிறது நெடுநாள் எரியும் நெருப்பில் பிஞ்சைப் புதைக்கிறது பதினைந்தைக் கடக்காத பருவத்தின் கனவுகள் பறித்து வன்னிக் காட்டின் நடுவிலே வான் குண்டு குருதிக் கோலம் போடும் ஆசை ஆசையாய்க் கட்டிய வீடுகள் எல்லாம் முகமிழந்து... முகவரியிழந்து... அழிந்து போய்க் கிடக்க ஆச்சியின் புலம்பல் கேட்கும் பாடசாலைக்குப் போன பிள்ளை பாதி வழியிலே... தாய்மண்ணை அணைத்தபடி இரத்தச் சகதிக்குள் விழிகள் திறந்தபடி இழவு வீட்டின் குரல்கள்கூட இல…

  13. [size=3][size=4]ஈழத்தின் மூச்சே என்றன்[/size] [size=4]எண்ணத்தின் கருவே - தங்கம் கீழிடை பணிந்துபோக கிளம்பிய புகழே வாழி! மானமே மகுடம் என்று மலையென எம்மில் மீண்டு காலத்தால் உருவாய் வந்த கதிரவன் வாழ்க வாழ்க!. உலகத்தில் உயர்வு நீதான் உண்மைக்கு உரைகல் நீதான் கலங்கரை விளக்கம் நீதான் கடுமையும் நீதான் என்பர். விடுதலை வேள்வி மூட்டி விண்ணதிர் களங்கள் கண்டு சாவினை மீண்ட தங்க தலைவனே வாழி வாழி! ஒப்புக்கும் பயந்ததில்லை -உன் உருவத்தில் கடுமையில்லை தப்புடன் ஒருநாள் கூட - நீ தன்நிலை பகிர்ந்ததில்லை நிச்சியம் உங்கள் எண்ணம் நிமிர்ந்திடும் நாளை என்போம் அத்துணை காட்சி காண்போம் ஆதவன் நீவிர் வாழ்க! மூட்டிய பயணம் மீழும் முடிவது நன்றே சேரும் …

  14. ஈழத்திலிருந்து, காலத்துக்குகேற்ப அற்புதமான கவிதை. - திரு ராஜேஸ்வரன்.-

    • 2 replies
    • 1.2k views
  15. இப்போது கார்த்திகை மாதம்! கரு மேகம் சூழ்ந்து இடி இறக்கி எம் கண்ணீரில் வறண்டு போன தேசத்திற்கு மழை பொழிந்து காலப் பெரு வெளியில் தமிழர் தம் வாழ்விற்காய் கல்லறையுள் துயில் கொள்ளும் ஞாலத்தில் வாழும் தெய்வங்களினை நினைவு கூர்ந்து குளிர்விக்கும் நன் நாள் இது! அடிமைத்தளையுள் சிக்கி தமிழன் உணர்வை தொலைத்து வம்சம் தனை இழந்து வாழ்வை பறி கொடுத்து வந்தேறு குடி என சிங்களரால் வழங்கப்படும் நாமத்தை பெற்று வடக்கிலும் கிழக்கிலும் புதைந்து உலகறியா இனமாக ஈழத் தமிழன் உருமாறிச் சிதைந்திடுவான் என இறுமாப்போடு எமை அழிக்க வந்தோர்க்கு தமிழர் தம் வீரம் உணர்த்தி துயில் கொள்ளும் குழந்தைகளை நினைவு கூறும் நன் நாள் இது! பேசும் தெய்வங்களும் …

  16. படித்ததில் மனதுக்கு பிடித்திருந்துச்சு, இணைத்துவிட்டேன் எங்கோ பிறந்தோம்! எங்கோ வளர்ந்தோம்! அனைவரும் இங்கே! சந்தித்துக் கொண்டோம்! இதயத்தை நட்பால சிந்தித்துக கொண்டோம்! முகங்களைப் பற்றி யோசித்ததுமில்லை! இனம் பணம் பார்த்து நேசித்ததுமில்லை! எதிர் பார்ப்புகள் எதுவுமில்லை! ஏமாற்றங்கள் சிறிதுமில்லை! அவரவர் கருத்துக்களை இடம் மாற்றிக்க கொள்வோம்! பாரட்டுக்களை பரிமாறிக்க கொள்வோம் ! சின்ன‌ சின்ன‌ ச‌ண்டைக‌ள் இடுவோம் சீக்கிர‌த்திலேயே ச‌மாதான‌த்திற்கு வ‌ருவோம்! கவலைகளை கிள்ளி எறிவோம்! இலட்சியஙகளை சொல்லி மகிழ்வோம்! நன்மைகள் வளர முயற்சிப்போம்! நட்பால் உயர்ந்து சாதிப்போம்! நன்றி - adhikesan.blogspot.com

  17. நாளை நான் உயிரோடு இருப்பேனா ஈழத்தில் நண்பனின் இறந்தவிட்டில் இன்று நான் * அம்மா அங்கே அம்மாக்காக அகதியாய் இங்கே நான் * காணாமல் போனால் கண்டுபிடித்து தருவார்கள் பிணமாக * தினமும் இறப்பவர்களின் பட்டியலில் சேரதவர்கள் சுனாமியால் இறந்த ஈழத்தமிழர்கள் * வகுப்பறையில் மகள் படிக்காட்டியும் உயிரோடு திரும்ப வேண்டும் சாமியறையில் தாய் * நான் இறந்தால் கொள்ளிவைக்க வந்துவிடாதே நான் பெற்றதில் உன்னை மட்டும்தான் காப்பாற்ற முடிந்தது * அம்மாவோடு ஆசையாய் பேச தொலைபேசி எடுத்தால் அம்மா கவலையாய் பேசுவதை கேக்கவே நேரம் முடிந்துடும் * என் தாயை நான் பார்த்தே இருபது வருசமாச்சு எப்படி சொல்ல…

  18. உலகப் போருக்கு முன்னால் உள்ளம் கதிகலங்க யூதர்கள் அனுபவித்த இனக் கொடுமையும், தென்னாப்பிரிக்க மண்ணிலே தோலை மட்டும் வெண்மையாய்க் கொண்டோர் கொண்டாடிய இனவெறியும், தமிழனின் தலையெழுத்தில் சிலையில் எழுத்தாய்ப் பொறிக்கப் பட்டுவிட்டது. மொத்தமாய் அவனிடமிருந்து எல்லாம் பறிக்கப் பட்டுவிட்டது. சொந்தமாக உறவுகளை மட்டுமல்ல அத்தியாவசியப் பொருளைக் கூட வைத்துக் கொள்ள வாய்ப்பில்லாத நிலை. ஈழத்து சோகம் ஆழத்தில் நெஞ்சை அழுத்தி விடுகிறது. அதில் புதையுண்டு மனம் அழுது விடுகிறது. புலிகளைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்த்துத் தடை விதித்தால் மட்டும் தீர்ந்து விடாது பிரச்னை. மனித உரிமைகள் மறுக்கப் படுவதும், மாற்றான் தாய்க் கொடுமை…

    • 2 replies
    • 864 views
  19. சென்னையில் உள்ள ஒரு சகோதரிக்கு ஈழத்து பெண் கவிஞர்களது தொடர்பு தேவை. குறிப்பிட்ட சகோதரி தனது ஆய்வாக தமிழக பெண் கவிஞர்களை பேட்டி கண்டு வருகிறார். ஈழத்து பெண் கவிஞர்களையும் தொடர்பு கொள்ள விரும்புகிறார். தெரிந்தவர்களும் , விரும்பியவர்களும் இங்கோ அல்லது எனது தனிமடலுக்கோ எழுதலாம். நன்றி! info@ajeevan.com க்கு கூட எழுதலாம்.

    • 0 replies
    • 847 views
  20. Print this Page கிளிநொச்சி, இரத்தினபுரத்தில் பிறந்த தீபச்செல்வன் கவிதை, பத்தி எழுத்து, ஆவணப்படம், திறனாய்வு, ஊடகவியல் எனப் பல்துறைகளில் இயங்கிக்கொண்டிருப்பவர். ‘பதுங்கு குழியில் பிறந்த குழந்தை’ (காலச்சுவடு 2008), ‘ஆட்களற்ற நகரத்தை தின்ற மிருகம்’ (உயிர்மை 2009), ‘பாழ் நகரத்தின் பொழுது’ (காலச்சுவடு 2010) ஆகிய நூல்கள் இதுவரை வெளியாகியுள்ளன. போரைக் குறித்தும் போரின் வடுவைக் குறித்தும் அலைந்து திரியும் ஏதிலி வாழ்வு குறித்தும் தொடர்ச்சியாக எழுதிவரும் தீபச்செல்வன் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளராகவும் செயற்பட்டவர். ‘தீபம்’ என்ற வலைப்பக்கத்தை தமிழ், சிங்களம், ஆங்கிலம் என மும்மொழிகளிலும் நடத்திவருகிறார் (deebam.blogspot.com). தற்போது யாழ் பல்கலைக்கழக ஊடக நிலையத்தி…

    • 5 replies
    • 1.3k views
    • 14 replies
    • 2.4k views
  21. நான் படித்தவனல்ல படிபிக்கப்பட்டவன் அனுபவங்களால். உங்க ஊர் பள்ளியில்தான் நீங்கள் பட்டம் பெற்று இருப்பீர்கள் நான் ஏடு துவக்கியதுதான் சொந்த ஊர் பள்ளியில் ஆரம்ப கல்வி படித்ததே மூன்று பாடசாலையில். யுத்தம் என்பதை நீங்கள் பாடத்தில் படித்திருப்பீர்கள் அனால் நான் யுத்தத்துக்குள் பள்ளி சென்றவன். குடை இல்லை என்பதற்காக பள்ளி சென்று இருக்க மாட்டீர்கள் நான் குண்டு மழைக்குள்ளும் பள்ளிவரவை அதிகரித்திருக்கிறேன். நீங்கள் காகிதத்தில் செய்த ரொக்கேற்றுகளைத்தான் வகுப்பறையில் பறக்கவிட்டு இருப்பீர்கள் நான் குண்டு விமானங்கள் சுற்ற சுற்ற படித்திருக்கிறேன். நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்னைப்போல் அயுத வெடிசத்த…

    • 2 replies
    • 1.1k views
  22. எனக்கு மின்னஞ்சலில் வந்தது ஈழத்துப் பாப்பா பாடல் ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்த…

    • 2 replies
    • 1.1k views
  23. ஓடி மறைந்துகொள் பாப்பா - நீ ஒளிந்து வாழப்பழகிக்கொள் பாப்பா பங்கருக்குள் முடங்கிக்கொள் பாப்பா - நீ பதுங்கி வாழப்பழகிக்கொள் பாப்பா சிங்களப் படைகள்வரும் பாப்பா - வானில் சீறும் விமானம்வரும் பாப்பா எங்களுக்கெனக் குரல்கொடுக்க உலகில் - மனிதர் எவரும் இல்லையடி பாப்பா சினத்தோடு வந்தான் எதிரி பாப்பா - எம்மை இனத்தோடு அழிக்க நினைத்தான் பாப்பா வனத்தில் விலங்குகளாய் ஆனோம் பாப்பா -எம் மனத்தில் சோகங்கள் ஆயிரம் பாப்பா பகைவனுக்கு வேண்டியது சண்டை - அவன் வகைவகையாய் வீசினான் குண்டை புகைமண்டலமாய் ஆனதெம்தேசம் - பார்த்து நகைக்கிறான் எதிரி பாப்பா தெய்வமும் மறந்ததடி பாப்பா - வெறி நாய்கள் சூழ்ந்ததடி பாப்பா பொய்யும் வெல்லுதடி பாப்பா - …

    • 5 replies
    • 1.5k views
  24. ஓடி விளையாடு பாப்பா - தமிழை பாடி மகிழ்ந்தாடு பாப்பா கூடி களியாடு பாப்பா - விடிவை நாடி நடைபோடு பாப்பா தமிழனுக்கென உண்டு தாயகம் - நற் தமிழீழம் அதன்பெயர் பாப்பா தாய்க்கு நிகரான தாய்நாடு - அதைத் தலையாய்க் காத்திடு பாப்பா எதிரிப் படைவரும் பாப்பா - நீ ஏக்கம் கொள்ளலாகாது பாப்பா சீறும் விமானம்வரும் பாப்பா -நீ சிந்தை கலங்காதே பாப்பா கடவுள் மறந்துவிட்ட போதும் - உன் கடமையை மறவாதே பாப்பா மடமையை ஒழித்துவிடு பாப்பா -தேச உடமையைக் காத்துவிடு பாப்பா காணாதிருக்கும் தமிழரும் உண்டு -முகத்தில் காறி உமிழ்ந்துவிடு பாப்பா காட்டிக்கொடுக்கும் தமிழரும் உண்டு -அவரைக் காலால் மிதித்துவிடு பாப்பா மண்ணுக்காய் மாய்ந்த மாவீரர் - அவரை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.