Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தாயின் பாசம்-பா.உதயன் உரிமை மறுக்கப்பட்ட தேசம் ஒன்றில் ஓரமாக ஒரு மர நிழலில் உட்கார்ந்தபடி தனிமையாக பேசிக் கொண்டிருந்தாள் கரும்புலியின் தாய் ஒருத்தி அவர் அவர் பிள்ளைகளுடன் கொஞ்சிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள் எங்கும் உலா வருகிறார்கள் எங்கள் பிள்ளைகளை இப்போ மறந்திருப்பவர்கழும் அவர்கள் தியாகத்தை பேசாமல் இருப்பவர்களும் நாளை உன்னை பேசாமல் இருந்திருப்பார்கள் என்று நினைத்து நீயும் போய் இருக்க மாட்டாய் போகட்டும் விடு மகனே யார் மறந்தால் என்ன மூக்கும் முழியுமாய் உயிர் தந்து உன்னை பெற்றெடுத்த தாய் மனம் உனக்காய் அழுகிறது மகனே காற்றோடு சொல்லி கண்ணீரில் எழுதி அனுப்புகிறேன் உன்னை நான் கண்ணுறங்க …

    • 0 replies
    • 417 views
  2. Started by Snegethy,

    என்னுடைய வலைப்பதிவில் நான் போட்ட இந்த குரல்பதிவு எப்பிடி இருக்கென்று சொல்லுங்கள்...யாழில் audio எப்பிடி இணைப்பதென்று தெரியவில்லை அதனால் இங்கே சென்று கேளுங்கள். தத்தக்க பித்தக்க

    • 12 replies
    • 1.9k views
  3. நான் அழுகிறேன் இன்று தோல்விகளின் முழு உருவமாய் பிறந்தேனே என்று...

    • 2 replies
    • 1.2k views
  4. (இராஜரட்டையின்) கொடு வனம் புகு படலம். காரிருள் சாமம் ஒன்றிற் கரு வரியுடை தரித்த தமிழ் மறவர் படையணி ஒன்று, கரந்து, கானகம் நடுவே எதிரி வானகப் பாசறை புகுந்து, வானிடை ஏகி வல்ஈய எச்சமிடும் கொடிய எந்திரப் பறவைகள் வாழும் கூட்டினைச் சிதைத்து எரித்துத், தாமும் அக் களமிடை ஆகுதி ஆகியே, தம் மக்கள் இடர்தனைக் களைந்து வீரகாவியம் ஆகினர். (நினைவுகள்) -------------------------------------- அருண்டனர், பகைவரெல்லாம் மெய் விதிர்த்திட அஞ்சியேயோடி ஒளிந்தனர் நிலவறை தேடிக் கண்ணுறு இடமெலாம் மண்தூர் நிறைய மாண்டதம் மாந்தர் யாக்கை நில வரை பழித்து நிறைய நாலிரு திக்கும் அதிரக் கானகக் காவல் தகரக் கருவரியுடை கண்ணிடை தெரிய. ஊடுடிடைப் புகுந்த புலியோ உறுமியே எழுந்து பாய்ந்து வானிடையேக…

    • 0 replies
    • 1.8k views
  5. பனி தந்த ஈரலிப்பு எதுவரை? காலக்கரைகளிலே வீசிய காற்றில் பறந்த சருகுகள் எங்கோ நாற்றமெடுத்த கூவங்களில் மிதந்து, கானல் கழிவுகளாய் காய்ந்து, மறுபடியும் வீசிய காற்றில் பறந்தபோது மகுடம் சூடியதாய் நினைத்துக் கொண்டன. மடி கனத்த முடிப்போடு குடி கெடுக்க மனக்கணக்குப் போட்டபடி மல்லாக்கக் கிடந்தன. பூமிச்சுழற்சியிலே மல்லாக்கக் கிடப்பவை புதிய புல்வெளிகளில் தம்மைப் பச்சையம் உள்ளவையாகப் பதிவிக்க முயல்கின்றன. பனி தந்த ஈரலிப்பு எதுவரை என்று அறியாத வரைக்கும் அனைத்துச் சருகுகளும்......

  6. நெல்லும் உயிரல்ல நீரும் உயிரல்ல முல்லை நிலத்தில் அலைந்து உழன்றவரை கொல்லும் எறிகணைகள் கூட்டாக வீசியவன் மன்னாதி மன்னனென மார்தட்டிக் கொள்கின்றான் எண்ணிக்கை யாருக்கு வேண்டும்? மொழியால் அமைந்த நிலம் எனச் சங்கத் தமிழோடும் செம்மொழியின் வனப்போடும் புதைகுழிக்குள் போனவர்கள் நாங்களன்றோ? குழந்தைகளின் மென்கரத்தை அரிந்து நெருப்பில் எறிந்தவனுக்குத் தாம்பூலம் தந்து தாலாட்டுப் பாடி கால்கள் வருடி தலைமயிருக்கு நிறம் தீட்டி அவன் பேழ் வயிறை வழிபட்ட அப்பாலும் அடிசார்ந்தார் இப்பாலும் இருப்போர்கள் முப்பத்து முக்கோடி படையினர்கள் எல்லோரும் பட்டழிவதன்றி வேறென்ன கேட்கும் என் கவிதை? படித்துப்பிடித்தது . ஈழத்துக் கவிஞர் சேரன்.

  7. சேகர் அண்ணாவின் (தமிழ்சூரியன்) பகீரதப்பிரயர்த்தன முயற்சியால் அவரது இசையிலும் எனது குரலிலும் வரிகளிலும் காட்சிப்படுத்தலிலும் வெளிவந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு வலுச்சேர்க்கும் முகமான பதிவு. முள்ளிவாய்க்கால் பேராவலம்முடிவில்லா ஓர் அவலம்பன் நாட்டுப்படை புகுந்துபல்லாயிரம் உயிர் தின்றுசொல்லாத கதை கோடிசுமந்து கிடக்கும் மண்ணதுவில்லாண்ட இனம் ஒன்றுவீறுகொண்டு போர் கண்டுவிடுதலைக்காய் வேள்வியொன்றைவிருப்புடனே நடத்தியதையைகண் காணச் சகிக்காதகாடையர்கள் கூட்டிணைவில்இனம் ஒன்று அழிந்ததுவேஈரல் குலை அறுந்ததுபோல் தவித்தோமேபல தேசம் வாழ்ந்தோம்பார் எங்கும வீதி வழி குவிந்தோம்பலனேதும் கிடைக்காமல்பரிதவித்து பைத்தியமானோம்இனப்படுகொலை ஒன்றைஇரக்கமின்றி சத்தமின்றி அரங்கேறிஇந்தியப் பெருங்கடலும…

    • 2 replies
    • 1.3k views
  8. [size=5]விழியோரங்களில் மலரும் துளிப்பூக்களின் வாசங்களை நுகர்ந்துமகிழ்ந்த யந்தொன்றின், தேடிக்களைத்த கேவலச்சிறகுகளை, மொய்த்துரீங்காரமிட்ட நோக்கல்களை, கணநேர ஈனப்பிதற்றல்களை, பொய்நாக்குகளின் வீணிகளை, விலக்கி சீராக்கமுடிகிறது படுக்கையொன்றை இலகுவாக அவளால். இது திணிக்கப்பட்டதா என்றாலும் தவிர்க்கமுடியாதா என்றாலும் தெரியாதென்பதே பதிலாகுகிறது. வகையறியும் பார்வைகளை தகையுரியும் நாவுரைகளை முகைகருக்கும் வசவுகளை பகைபெருக்குமோர் பல்லவிகளை நகைத்தேவிலக்கி யுள்யெரிதலவள் வழக்காயிற்று. தினவெடுத்த மிருகங்களின் நாவுகளில் படிந்திருக்கும் அழுக்குவேர்களின் அடிநுனியறிந்தவள், தினப்பொழுதுகளின் பின்னான ஒதுங்குதலில் இழிந்த கௌரவவிம்பம் உடைத்தவள்…

  9. சிசிர சிறிபத்தன -உன்னால் தேச அறிவு பண்பாடு கேலிக்குள்ளானது; பேராசிரியர் பெருமையும் கேள்விக்குள்ளானது திலீபன் அஞ்சலி மறுப்பை எதிர்த்த தமிழர் போராட்ட பொருளறியாமல் ’தமிழர் வணிகம் புறக்கணி’ என்றாயே.! இனவாத வணிகனாய் போன அலோபதி வைத்திய பீடாதிபதியே.. இன வாத அரசின் பிச்சைப் பதவிகளுக்காகவா இந்தளவுக்கு இழிந்து போனாய்.? இந்த நாட்டின் இனவாத நோய் இந்தளவுக்கு முற்றிப் போனதா.? https://vanakkamlondon.com/literature/ilakiya-saral/2020/09/85854/

  10. Started by Elugnajiru,

    கரும்புலி கவிஞர் தாமரை வார்த்தைகளற்ற உயிலும்... ஒரு வாழ்வின் செய்தியும்... அவன் புன்னகைத்துக்கொண்டே இருந்தான் நான்தான் அழுதேன் அவன் கண்களும் சிரித்தன காணச் சகிக்காமல் நான்தான் கண்களை மூடிக்கொண்டேன் ஒரு புன்னகையையும் ஒரு கண்ணீரையும் ஒருசேர விசிறிக்கொண்டு போன அன்றைய தென்றலில் உப்பும் குளிரும் சம அளவில் கலந்திருக்கும் அன்றைய நிலவு... அது ஏன் அப்படி ஒளிர்ந்தது அவன் முகத்தைப் போலவே...? உன் கைகளைத் தொடலாமா என்று கேட்டேன் 'இதோ' என்று நீட்டினான் என் நடுங்கிய கைகளால் தொட முயன்று முடியாமல் இழுத்துக்கொண்டேன் தொட்டிருக்கலாமோ... மோட்சம் பற்றிய என் விசாரணைகள் முடிவுக்கு வந்திருக்கும்! நிதானமாய் அவன் உண்டு முடித…

    • 0 replies
    • 1.1k views
  11. ஈழத்து எழுத்தாளர்களில் கைக்கூ ரகக் கவிதைகள் அதிகம் எழுதுபவர்கள் இல்லையென்ற ஓர் கருத்தை ஓர் இணையத்தளத்தில் பார்த்தேன், ஏன் அதை முயற்சித்துப்பார்க்கக்கூடாது என்ற ஓர் முயற்சி இது.... எனது முதன் முதல் கைக்கூ கவிதைகள் சில... துரோகிகள் உரமிட்டு நெல் விதையிட்டு பார்த்திருந்த ஓர் விளை நிலத்தில் விளைச்சலைப் பாழ்படுத்த முளைத்த சில முட் செடிகள்....! --------------- பெண்புலிகள் அவலம் துப்பாக்கி காட்டி துரத்திய மிருகத்தின் வாயில் துர்ப்பாக்கியமாய் இன்று அவளின் முலைக்காம்புகள்... ------------- பெண்ணின் விழிகள் உடல்காயம் தராமல் உள்ளிருக்கும் இதயத்தை குளிர்விக்கும் அல்லது கூறுபோடும் இரு மந்திர வாள்கள்....

  12. கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! கத்தலோனியர்களே! ——————————— கத்தலோனியர்களே உங்கள் விடுதலைப்பாடல் கத்தலோனியாவிலிருந்து உலகெங்கும் கேட்கிறது! சனனாயகத்தினை நம்பும் அயலவர்கள் உங்கள் அயலிலே! அரசுகள் எப்போதும் விடுதலையை ஏற்பதில்லை அது அவர்களின் மரபுமல்ல ஆனாலும் உங்கள் விடுதலைப்பாடல் உலகெங்கும் கேட்கிறது! உலகின் சில சக்திகள் இன்று உறுமாலாம் – ஆனால் நாளை கைகோர்ப்பர் ஒன்றிணைவர் வளங்களின் வழியே தமது நலன்களைக் காண்பர் ஆனாலும் என்ன உங்கள் விடுதலைப்பாடல் உலகெங்கும் கேட்கும்! தானாகக் கிடைப்பதல்லவே விடுதலை தொடர் முயற்சியே சுதந்திரக் காற்றினை உங்கள் தேசவெளியில் வீசச…

    • 2 replies
    • 639 views
  13. நான் நேசித்தவள் -___________________ வறுமையிலும் கொடுமையிலும் வேலை செய்துகொண்டிருக்கும் என்னை-- காதல் என்ன என்று புரியாத எனக்கு நட்சத்திரம்போல என் வாழ்க்கையில் அவள் வந்தால்-------------- நானும் அவளும் பழக ஆரம்பித்தோம் முகம் தெரியாதவர்களாகவும் இருந்தாலும் ஒன்றாக தொலைபேசியில் கதைப்போம் அவளின் கதைகள் சிரிப்புக்கள் எல்லாம் என் மனதை கொள்ளை கொண்டன அவளோ ஒவ்வொருநாளும் தொலைபேசியில் கதைப்பால் நாட்கள் ஓட ஓட என் வாழ்க்கையில் ஓர் ஏக்கம் அந்த ஏக்கம் எனக்கே தெரியாதே-- அவளின் சிரிப்புக்கள் --என் காதில் கணீர் கணீர் என்றே ஒலித்துக்கொண்டிருந்தன<------ அவளோ என்னை தன் சகோதரங்கள் என்று நினைத்து கதைப்பால் அவள் வேறு மொழி நான்வ…

  14. தமிழீழத்தில் ஒட்டுக் குளுக்களுக்கு தனியான ஓரிடம் தரணியிலே தமிழர்கள் தலைகுனியவைத் தான்தந்த தானினம் தங்களுக்குள் தலைமையில்லா தரங்கெட்ட தனியினம் தன்மானம் தானில்லா தாய் கூட தனக்கில்லா தனியான ஒரு கூட்டம் தப்பான தனிக்கூட்டம் தன்னானத் தழிழர் எல்லாம் தள்ளிவைக்கும் தானிந்த தவளைக் கூட்டம்

    • 4 replies
    • 1.5k views
  15. கொக்கு பற பற............ ஊப்ஸ் ........... மக்கு நீ பற பற!! கூட்டில் - வாழும் ஜீவன் பெயர் கொண்டால். நீயும் குருவியா என்ன? பாம்புக்கும் ஒரு கூடு ....... புற்று என்ற பெயரிலிருக்குமே!! நாயுண்ணியாய்........... ஒட்டி கிட கிட.... வாழ நினைப்பவர் பக்கம் வராதே - வாலை............. ஆட்டிக்கொண்டே பிறர் பக்கம் திரி திரி! பெயரை பார் - பறவையாம்........... தங்காலையில் தமிழன் உறவை......... தங்கம் போல் நிறம் கொண்ட மலரை.. கட்டி தூக்கியபின்னும். கவலை எனக்கு இல்லையென்றே சொல்லி திரிகிறான்.. கருத்துதான் முக்கியம் .............. என்றே கிடக்கிறான்! சொந்த ஒளி இல்லாத - மதியே ............. என் வாழ்வென்று ................. இவன் ச…

    • 12 replies
    • 2.1k views
  16. Started by yaal_ahaththiyan,

    என்னவனே.. உன்னை நினைத்து நினைத்து வாழ வேண்டும் உந்தன் மடியில் உயிர் துறக்க வேண்டும் வருவாயா? காலை மாலையாவதும் மாலை காலையாவதும் உந்தன் ஆசைக்குள் மறைய வேண்டும் வருவாயா? எந்தன் கோட்டையை விட்டு நீ போனாலும் நீ போட்டு விட்டு போன கோடுகள் ஆறவில்லை அதற்காகவேனும் வருவாயா? கோழி கூவினாலும் கோயில் மணி அடித்தாலும் கோலம் போட மறந்தாலும் உந்தன் மடியில் மறக்க வேண்டும் அதற்காகவேனும் வருவாயா? கனவில் நான் குளித்து நினைவில் காய்கிறேன் என்னை உடுத்திக்கொள்ள உண்ர்வோடு வருவாயா? அங்கத்தில் இடம் பிடித்தாய் ஆசையை தூண்டி விட்டாய் அனுபவத்தை கொளுத்தி விட்டாய் அணையாமல் எரிகிறேன் அதற்காகவேனும் வர…

  17. பாரோரே பாருங்கள் அவன் பண்பை பயங்கரவாதியென்றே பட்டியலிட முற்ப்பட்ட பாரோரே பாருங்கள் அவன் பண்பை எதிரியெனில் எங்கிருந்தாலும் எதிர்த்தழிக்கும் எம் தமிழன்! ஏதிலியை ஏழைகளை எதிர்கொண்டு அழிப்பானோ? எங்கெனும் ஓர் குண்டை ஏதும் அறியார் மேல் எறிந்தானோ? பாராயோ அவன் பண்பை பாரோரே? பாடாயா அவன் பண்பை பாரெங்கும்! ஓங்கி அரையப்பட்ட இறைஅதுவே ஓங்கிய கரப்பக்கம் ஒடிந்து வீழ்தால் கொள்ளாத வேங்கையென மாவீரம் கொண்டவரோ! கொண்றிடுவர் ஏதிலியை ஏழைகளை! பார்த்தோமே பாரோரே செஞ்சோலை செங்குருதி! என்னற்ற குண்டுகளை எம் தமிழர் வீடுகளில் எடுத்தெரிந்து கொன்றதையும் பார்த்தோமே? தமிழனின் கறியிங்கே தாராளமாய் கிடைக்குமென்றே ஈனப் பிறவிகளின் இழிச் செயலாய் வாசகங்கள் பார்த்திருந்தும் பாரா…

  18. Started by கவிதை,

    வண்ண வண்ணக் காகிதங்கள் வேண்டுமென எண்ணி... மனித நேயங்களை காலி பண்ணிய உலகத்திலே, காசு மட்டும் பேசும் என்று முடிவாகிவிட்ட பிறகும்.. என்றாவது ஒருநாள் அந்த வண்ணமுத்திரைகள், வானவில்லாகிப் போகாதா? என்று... ஏங்கும் , பசித்து ஒட்டிய வயிறுகள்!!! மனித நேசங்கள் பேசிக்கொள்ளும்போது... பணம் பந்தியில் இருக்காது! "காலங்கள் மாறும்" என்பது.... வெறும் நம்பிக்கையாய் மட்டும்!!!

  19. எழுதவேண்டும் என்பதற்காக எழுதி 2 ஆயிரம் கருத்துக்களை எட்டிவிட்டேன். அதன் சந்தோசத்தில் ஒரு காதல் விதையோடு. . . . மௌனம் கலைந்து விழியுடன் மோதி விடைகள் தேடும் இமைகள் பைங்கிளி பறந்து பருகிடுமோவென பயந்து ஒன்றுடன் ஓன்று உரசி மறையும் கனியிதழ்கள் சலனமற்ற நீர்தடாகததில் வீழ்ந்த துளியாய் அலைவீசிச்செல்லும் கன்னக்குழி வதனம் கூந்தல் மருவி காயமாகிவிடுமோவென கலைத்திட விரையும் கரங்கள் அடடா அழகிய சொர்ப்பனம் அர்ப்புத தரிசனம் விடியலின் எழுச்சியில் வீணாக கலைந்தது

    • 8 replies
    • 1.3k views
  20. நீ இல்லை என்று தான் எனக்கு சொல்லிக் கொள் (ல்) கிறார்கள் நானும் இல்லை என்றே சொன்னேன் உன்னையல்ல அவர்கள் சொன்ன சொல்லை இன்று ஏனோ என் மனம் தவிக்கிறது இத்தனை நாளாய் தேடியும்...???? உள்மனம் சமூகச் சொல்லை ஏற்க விளைகிறது. இந்த மண் - உன்னை விழுங்கிய நாளை மறந்திருக்கும் ஏனென்றால் அது உன்னை மட்டும் விழுங்கலியே. ********************************* ஊரறிந்த ஒரு நாளில் ஒரு தீபமேற்ற வழியில்லை தெருவில் சிலர் உன்னை சூடு வைத்த எழுத்தாணியுடன் பார்த்து நிற்கிறார்கள். நான் பொதுவாய் ஒரு தீபமேற்றுவேன் “அம்மா பெரியறை விளக்கை நானே வைக்கிறேன்” யாரோ என்றோ கண்டதாய் சொன்ன கடவுளுக்கு என்றும் தீபம் வைக…

  21. என் மனநிலைக்குள் எனைத் தொலைக்க யார் காரணம் ? என் (தலை) எழுத்தின் தடைகளுக்கு... எவை காரணம் ? வெற்றுத் தாள்களில் எழுதிக் கசக்கியெறிந்தாலும், நிம்மதியாய் இருந்திருக்குமோ ??? விளங்கவில்லை...! புரியவில்லை...!! தெரியவில்லை...!!! கண்றாவிக் க(வி)தைகளை... கோவேறு கழுதைகளில் சுமந்த, பாவியாகிப் போனேனோ...... இன்று ? மற்றவரின் கேலித்தனமான அடைமொழிக்குள்... அடைக்கப்பட்ட கோழிக்குஞ்சா நான்? என்ற கேள்விகள் எனக்குள்! கேலிக்கூத்தாட,கேளிக்கை களியாட வென்றுகொண்டே இருப்பவர்களா நாம்?? விழுந்த வேகத்தில் எழும் என் வார்த்தைகளை... "அடக்குதல்" என்பதுதான் என் 'நாகரீகம்' என்பதுவும் வீண்தானோ??? கேள்விகள் கேட்கப்போனால்... நக்கீரன்களையும், நிறையக் கேட்கலாமோ? உண்மையான பதிலி…

  22. முள்ளுக் கம்பிக்குள்ளே முடங்கிப் போகிறோம்! துப்பாக்கி முனைகளுக்குள் துவண்டு கிடக்கிறோம்! ஒவ்வொரு வீட்டுச் சுவரிலும் அழகான குழந்தைகளின் படங்கள்!பிறப்பு-இறப்பு திகதிகளோடு! நிவாரண அரிசிக்காய் நிறையில் நிற்கிறோம்! ஊரடங்குச் சட்டத்தால் அடக்கப் படுகிறோம்! சிறைச்சாலை நாற்சுவருக்குள் நசிங்கிப் போகிறோம்! ஆயுத முனையில் சகோதரிகளின் கற்புக்கள் களவாடப் படுகின்றது! தூக்கம் என்பது நாங்கள் தொலைத்தவைகளில் ஒன்று! துக்கம் என்பது நாங்கள் உழைத்தவைகளில் ஒன்று! எங்கள் வீட்டுக்குள் போக அந்நியனின் அனுமத்திதேவை! சொத்துகள் பற்றின கவலையில்லை சொந்தங்கள் பறிபோன கவலையே! யாருக்கு யார் அறுதல் சொல்வது கண்ணீரால்தான் பேசுகிறோம்! …

  23. இந்த வார ஆனந்த விகடனில் (17.9.15-23.9.15) சொல்வனம் பகுதியில் "உள்ளுறையும் ஈரம்" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, யாழ் களத் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். உங்கள் ஊக்கத்துக்கும் வாசிப்புக்கும் நன்றி! உள்ளுறையும் ஈரம் ஊருக்கு வரும்போதெல்லாம் அம்மாவிடம் நான் வழக்கமாகக் கேட்கும் கேள்வி மழையேதும் பெய்துச்சா? அம்மா கூடுதலாக இன்னொரு பதிலும் சொல்வாள் விடுப்பில் வந்தபோது நீயும் வீட்டுக்கு வந்து போனாய் வழக்கம்போல் என் நலத்தை விசாரித்துச் சென்றாய் என்று. நான் இல்லாதபோதும் என் மண்ணில் மழை பொழிவதும் என் மனையில் நீ புகுவதும் எனக்கு மகிழ்ச்சியே. பிடிவாதம் என்ற செல்லாக்காசின் இரு பக்கங்களாய் நீயும் நானும்! -சேய…

  24. இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட வேண்டும் உணவை;உணவே மருந்து இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட வேண்டும் கலவியை; நிறைந்த இல்லற வாழ்வினை அனுபவித்த பின்னர் ஆன்மீக நாட்டம் கொண்டு இல்லற சுகத்தை விட வேண்டும் இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட வேண்டும் பணத்தை. பணத்துக்கு நீ அடிமையாகி விடுவாய் இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட வேண்டும் மூச்சை. கிடந்து அழுந்தாமல் இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும் இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது பாவப்பட்ட மனித வாழ்க்கை. படித்து சுவைத்தவை . _________________

  25. Started by Thamilthangai,

    நீ! என் நிழலல்ல நிஜம்! நான் நிகழ்த்திவந்த காதல் தவத்தின் வரம்! உள்ளத்தில் செதுக்கிவைத்த உருவத்தின் உயிர் வடிவம் நீ! அள்ள அள்ளக் குறையாத அன்பு தந்து என் ஆயுள் வளர்க்கின்ற அமுதமும் நீ! எப்படிச் செல்லம் நீ எனக்குள் புகுந்தாய்? கள்ளூறும் தமிழாலே கவிதைகள் தந்ததாலா? தெள்ளுத்தமிழ் சொல்லாலே என் இதயம் தொட்டதாலா?! நெருக்குப்பட்டு மனம் சுருங்கும் வேளையில் சுருக்கென உன்னைத் தைக்கும் சொற்களில்!! மெளனம் காத்த பொழுதுகள் தன்னில் மிரட்டும் வார்த்தையின் அடர்த்திக் கணங்களில்!! என்னை நீ ஆராதித்த பொழுதுகளாலா? !எந்தன் தவறை எனக்கே உணர்த்தி உனக்கு ஈடாய் என்னைச் செதுக்கி கவிதைத் தமிழைப் பருக்கி பருக்கி! உருக்கிவிட்ட உன்னதத் தாலா?!! எந்தன் தமிழே என் உயிரின…

    • 7 replies
    • 1.9k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.