கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே நீயும் நானும் என்றும் ஓர் உயிராக பத்து மாத பந்தத்தில் இனத்தோடு ஆறாவதாய் ,பெற்ற இந்த உயிர் அரக்கரின் நுழைவால் சிதறியோடி அடைக்கலம் புகுந்த கோவில் உனக்கு எயமனின் பாச கயிறுஎனும் செல் விழும் இடம் என்று அறிந்திலேன் . உன் கடை குட்டியுடன் நீயும் என் குஞ்சுகளுடன் நானும் சிதறியோடிய அந்த நாள் பசி, பட்டினி ,யுடன் நான் இருந்தாலும் ,என் குஞ்சுக்கு மாப்பால் பருக்க கெஞ்சி நான் சுடு நீர் வைத்து பால் கொடுக்க , பிஞ்சு என் முகம் பார்த்து முறைத்து ,அடம் பிடிக்க , அம்மம்மாவின் கோமதியின் பசுப்பாலுக்கு ஏங்க ....நான் பட்ட துய்ர்கொஞ்சமா ? ஓடியும் நடந்தும் . பதுங்கியும் நானும் என் குஞ்சுகளும் ,என் மாமா மாமியும் தள்ளாத அவர் வயதில் தடுமாறி…
-
- 1 reply
- 1.9k views
-
-
தனித்திருத்தல் வரம். நீண்ட இரவில் ஏதாவது ஒரு மாலையில் தன் குரல் கேளாத தொலைவில் எதுவும் தேவையில்லை நீ நான் அவர்கள் ஒரு புல்வெளியில் குளக்கரையில் குறைந்த பட்சம் ஒரு பெருமரநிழலில்.. தனித்திருத்தல் பெரும் தவம். இழக்கவும் ஏற்கவும் எதுவுமில்லாமல், கேட்கவும் சொல்லவும் எவருமில்லாமல் பெருவெளியொன்றில் மிதந்துபோகும் ஒற்றை மேகம் போல கிளைநுனியொன்றில் சலனமின்றிக் கிடக்கும் ஒரு பறவையைப் போல தனித்திருத்தல் வரம் தனித்திருத்தல் பெரும் தவம். தனித்திருத்தலில் ஒரு தற்கொலை நிகழலாம் ஒருவன் வன்புணர்வை முயலலாம் தாயொருத்தி அடிவயிற்றின் வலியோடு ஏதாவது கடையொன்றில் பணத்தினை வீசலாம் எவனோவொருவன் எப்பவோ கடந்துபோன பெண்ணின் வனப்போடு காமத்தை கழித்துக் கொண்…
-
- 11 replies
- 1.9k views
-
-
இது துக்கமான விடயமல்ல என்றாலும் அறிந்திடுங்கள்... செம்மனி சுடலை என்றால் பேய்களும் வெருண்டிடும்... பக்கதிலேயே ஒட்டிக்கொண்டு சித்துபாத்தி சுடலை வேறு... யாழ்வரவில் பங்கர் வெட்டி தூங்குவதெல்லாம் செம்மனிக்குள்ளதான்... பார்சலில சோறு வரும் சாப்பிடுவதும் செம்மனிக்குள்ளதான்... பாடசாலை விட்ட பிறகு விளையாடுவதும் செம்மனிக்குள்ளதான்... காணாமல் போன எனது நண்பன் சேரன் உறங்குவதும் செம்மனிக்குள்ளதான்... நான் இந்திய ஆமியிடம் வாங்கிய அடி அதுவும் இந்த செம்மனிக்குள்ளதான்... நண்பா நீ உறங்கும் சுடுகாடு இப்போ சுடுகாடு இல்லையடா... ஈழமே சுடுகாடாகி நாள் ரொம்ப ஆச்சுதுடா... விடுதலைக்கான தேதி இன்னமும் கிடைக்கவில்லை... வீண்கதை பேசும் கூட்டமு…
-
- 11 replies
- 1.9k views
-
-
[size=5]மண்டியிடாத வீரம் !![/size] [size=1] [size=4]நேற்று மாவீரர் நாள் [/size][/size][size=1] [size=4]உலகெங்கும் நாம் நினைவில் கொண்டோம் [/size][/size][size=1] [size=4]மாவீரர்கள் தியாகத்தை சுதந்திரமாக [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]தமிழீழமெல்லாம் அரக்கர்கள் இன்று[/size][/size][size=1] [size=4]ஒரு பெண் மானபங்கப்பட்டால் துடித்திடுவார்கள் [/size][/size][size=1] [size=4]எம் கவிஞர்கள் [/size][/size] [size=1] [size=4]நீங்கள் இன்னும் முடியாத தாகத்திற்குள் [/size][/size] [size=1] [size=4]அப்பெண்ணே முன்னாள் போராளி என்றால் [/size][/size][size=1] [size=4]கேட்டிடுவார்கள் கணக்குகளை …
-
- 24 replies
- 1.9k views
-
-
திலீபன் புன்னகைக்கும் இதயம் கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும் அழத் தோன்றும் முகத் தோற்றம் நேசத்தை யாசிக்கும் யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் ! திலீபன் ! காற்றில் உதித்தவன் ! நெஞ்சங்களில் அநேகமானவற்றை விட்டுச் சென்ற முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில் ஒரு ‘கமா’வாக மறைந்த விலைமதிப்பற்ற யௌவனத்தை கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த நேர்மையான புன்னகையும் தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன் அன்றிலிருந்து இன்று வரை கண்ணீர் ருசிக்கும் அன்னையர் கைகளிலில்லா ஐவிரல்களையும் தேடியலையும் தந்தையர் ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும் புதல்வர்களின் சடலங்களின் மீது ஓலமிட்டழுபவர்கள் எல்லா இடங்களிலிலும் இரு…
-
- 19 replies
- 1.9k views
-
-
தலையின் மேல் தொங்கும் தூக்குக் கயிற்றின் கீழிருக்கும் துயரம் அவன்….. பெயருக்குள் பேரறிவைத் தாங்கிய தமிழின உணர்வின் ஊற்று அவன்…. சாவின் நிணம் அவன் நாசிக்குள் முட்டிக் கிடக்க சாவுமின்றி வாழ்வுமின்றி சந்தேகத்தின் பெயரால் இன்னும் செத்துக் கொண்டிருக்கிறான்….. வசந்தம் துளிர்த்த வயதில் வாழும் ஆசைகளுடன் போனவன் மரணம் கொல் இருளில் மன உழைச்சலும் மனப்பாரமிறக்க முடியா வலிகளுடன் பாழும் உயிரும் பாரமாய் பழியுடன் நீதி செத்துக் கிடக்கிற காந்திய மண்ணில் இன்னும் நீதிக்காய் காத்திருக்கும் ஏழை…… 19வருடச் சிலுவையின் பாரம் குருதியழுத்த நோயாளியாய் வாழ்வின் காலங்கள் நோயின் கோரங்களோடு கழிய காற்றணைத்த ஒளியில் கருகிக் கொண்டிருக்கிற திரிய…
-
- 13 replies
- 1.9k views
-
-
உன்னைக் கவிபாட எனக்கு வெக்கமடா உன்னைப்போல அழகன் யாரும் இல்லையடா கருமை நிற சுருள் முடியழகா உனக்கு நான் தான் பேரழகா அகன்ற தோழ்கள் வீர மார்பழகா அதில் என் முகத்தைப் புதைத்தேன் அது நாணமடா சிங்கம் போன்ற வீர நடையழகா உன் கருணையின் கண்கள் தானழகா என் கண்களின் ஒளி விம்பம் நீதானடா அன்புக்கு நீயும் என் தந்தையடா அரவணைப்பில் நீயும் என் தாய்தானடா உன்னைப்போல என்னைக் கவர்ந்தவர் இல்லையடா மொத்ததில் நீயும் என் இதயமடா
-
- 15 replies
- 1.9k views
-
-
(விடுதலைப்புலிகளின் யாழ் மாவட்ட முன்னாள் தளபதி கேணல் கிட்டு மாமா நினைவாக...) வெடியோசை எழுந்தது எங்கள் நெஞ்சோசை அழிந்தது களத்தோடு களமாடி கோட்டைக்குள் அடித்தெழுந்த அந்தப் புயலும் ஓய்ந்தது...! தங்க தமிழீழ வேங்கையது வங்கக் கடல் நடுவே சரிந்தது...! அசோகச் சக்கரத்தின் அகோரத் தாண்டவம் - எங்கள் மாமாவின் உடல் கிழித்தது...! ஆதிக்க வெறி பிடித்த அகிம்சா தேசமது அவன் ஆன்மா குடித்துக் குதூகலித்தது...! தமிழீழ அன்னையவள் கொடிதனைச் சுமந்தவன் ஆழி தன் அலையோடு மீண்டிட்டான் தமிழ் மண்ணை...! குரலோசை எழுந்தது - அது அவன் புகழோசை சொன்னது விடியலின் தாய் மகன் விடிவெள்ளியான கதை முடிவின்றிச் சொன்னது....! தர்மம் வெல்லும் என்பது காலத்தின் கோலம் என்றத…
-
- 11 replies
- 1.9k views
-
-
இயந்திர வயல் வெண்நாரைகளின் இயந்திரவயல்களில் கறுப்புக்காகங்கள் உருக்குலைய கரிய மை உதிர்க்கும் எழுதுகோல் உறைத்துப்போனது. மூன்றாந்தர உலகநாடுகளில் போரை வளர்க்கும் முதல்தர வல்லாண்மைகளின் பிடியில் சிக்கி மீளமுடியா வலிக்குள் புதைகிறது மனிதம் கந்தகப் பரீட்சிப்பு வளங்களைத் தின்ன, உயிருக்காய் அஞ்சிப் புகலிடம் தேடும் மனித வளங்களைத் தின்று கொழுத்தன வலியவை. நூற்றாண்டுகளின் கடப்பில் தொடர்ந்தபடி.. மனுநீதி வல்லரசுகளின் காலடியில் நசியுண்டு கிடக்க, போலி வெண்புறாக்கள் பூரித்துப் பறப்பது மூன்றாந்தர நாடுகள்மேல் திணிக்கப்பட்ட சாபம் எண்ணச் சூடேற்றலில் மனிதம் கொதிக்க இயந்திர வயல்களின் அழைப்பு.. உறைய வைத்தது.
-
- 5 replies
- 1.9k views
-
-
-
ஒட்டியுலர்ந்து ஊட்டச்சத்தெல்லாம் உறிஞ்சப்பட்டுப் பதுங்குளியிலிருந்து இழுத்துவரப்பட்ட போது மிரளும் விழிகளின் அருகாய் அருகாய் துப்பாக்கிகள்….. *அம்மா காப்பாற்று அப்பா காப்பாற்று* கண்ணீர் வற்றிய கண்களிலிருந்து சொட்டிய துயர்….. கனவுகளைத் துரத்திக் கொண்டு இரவுகள் அலைகிறது…… கட்டையாய் கத்தரிக்கப்பட்ட தலைமயிருக்கான காரணங்கள் கேட்டுக் கேட்டுப் பதிவிடுகிறார்கள்….. சொல்லால் வசியம் செய்து சொல்ல முடியாக் கதைகள் நிரம்பிய கதைகளை மீள்பதியமிடும்படி வேண்டுகிறார்கள்…… ‘எனக்குத் தெரியாது‘ எத்தனையோ தரம் எழுத்துமூலமும் வாக்குமூலமும் எடுத்த பின்னாலும் கிளறிக் கிளறி ரணங்களைத் தோண்டுகிறார்கள்….. *பம்பைமடு* விசப்பாம்புகளின் குடியிருப்புகள் பே…
-
- 12 replies
- 1.9k views
-
-
-
- 7 replies
- 1.9k views
-
-
உயிர் அழுகின்ற போது ஒசைகள் கேட்பதில்லை... ஒசைகளை மவுனித்த நாங்கள் ஊமைகள் அல்ல... மவுனமாய் எமக்குள் பேசிக் கொள்ளும் மொழிகள் உங்களுக்கு புரிய போவதில்லை... சப்த நாடியும் உறையச் செய்யும் எங்களின் உயிரின் ஒசைகள் வெளிப்படும் நாளின் தோன்றலுக்காய் இந்த மவுனமான நாட்கள் மெல்ல எம்மைவிட்டு கடவதாக.....! # 18-05-2013
-
- 10 replies
- 1.9k views
-
-
போராளிப் பெண்ணுக்கு அம்மாவின் கடிதம்.... கவிதை.... அன்புள்ள மகளுக்கு உன் அம்மாவின் ஆசிர்வாதம் காவலுக்கு செல்கிறேன் என்றாய் எம் இனத்தை காக்க எழுந்துவிட்டேன் என்றாய்..... ! உன் ஆசைத்தம்பியை பட்டினிக்கு பறிகொடுத்தாய் அவனைப்போல் பலபேரைக்காக்க பகைவனுடன் மோதச் சென்றாய்..... எனக்கும் தெரியும் நீ புலியாக பிறக்கவில்லை புலியாக மாற்றப்பட்டாய் எங்களின் விடுதலைப் போரிலே புள்ளியாக என்னையும் ; எதிரி புலியாக வைத்துவிட்டான் அவன் உருவாக்கிய புலிகலெல்லாம் பிரம்மிட்டின் உருவம் போல் வியாபித்து எழுதிடுவர் ; என்று எதிரி இன்னமும் நினைக்கவில்லை என்று எழுதிவைத்து நீ சென்றாய்.... பட்டினி எங்களுக்கு பழகிவிட்ட ஒன்று என்றாய் பசிதாங்காப் …
-
- 10 replies
- 1.9k views
-
-
"வெற்றிக்கனி" எட்டுத்திக்கும் முட்டட்டுமே பகை!! உடைத்தே எறிவோம் எம் கைவிலங்கை! அடிமையாய் வாழ்வது ஈனம்! வீரம் தமிழரின் மானம்!. எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகை ஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி! கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?! எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்! ஈழம் எங்கள் உடமை தமிழா காப்பது நம் கடமை! உரிமை மறுக்கும் சிங்களத்தின் வேரை அறுத்தே நாட்டு உந்தன் பேரை! 'விதி வசம் என்பதை விட்டு! தடை உடைத்தே புறப்படு இது நம்நாடு! எரிமலையாய் இருடா! தமிழா! இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.
-
- 7 replies
- 1.9k views
-
-
நாளை நாளை என்றொரு நாளை எண்ணி மனம் வெம்பிப் போகாதே தம்பி - அந்த நாலுந் தெரிந்தவன் நடத்தும் நாடகத்தில் குறை சொல்லி மாளாதே தம்பி விதை விதைப்பதும் அது முளைப்பதும் உந்தன் கையிலா தம்பி? எல்லாம் இயற்கையின் கையினை நம்பி! கவலைகள் கிடக்கட்டும் காரியம் நடத்திவிடு மலைகள் எதிர்க்கட்டும் துணிவாய் இருந்துவிடு பிறந்தது இன்று வாழ்வது இன்று சாவதும் இன்றே என்று எண்ணி விடு துன்பங்கள் ஓடும் இன்பங்கள் கூடும் உல்லாசம் உன் மார்பைத் தொட்டுத் தொட்டுத் தாலாட்டும் கொண்டாட்டம் நாமெல்லாம் இன்று பூத்த மலர்க்கூட்டம் நமக்கு ஏது கவலை - ஊதடா உல்லாசப் பண்பாடும் குழலை நாமெல்லாம் இன்று பிறந்த மழலை நமக்…
-
- 7 replies
- 1.9k views
-
-
நட்பு கடல்... பல நதிகளின் சந்தோச சங்கமம் நட்பு... பல மனச் சுடர்களின் சங்கம சந்தோசம்... கடல் என்றுமே எதிர்பார்த்ததில்லை நதிகளின் குலாவலையோ... அல்லது தழுவலையோ....! நட்பும் அப்படித்தான்... மனங்கள் உரசினாலும் சரி மனங்கள் மணந்தாலும் சரி மரணிக்காத சொந்தங்களின் மறுக்காத உரசல்கள்.... அலைக்களின் ஆர்ப்பரிப்பும் நட்பின் சிதறல்களும் ஒன்றென்பேன்...! அவை என்றுமே தாமாக நிகழ்வதில்லை காற்றின் உந்துதல் அலைகளின் பிறப்பு என்றால் காலத்தின் கட்டாயம் நட்பின் சிதறலாகின்றது... சுனாமிப் பேரலையாய் கடல் வெடித்துத் தெறித்தாலும் மீண்டும் கடல் சேர்வதில்லையா...??? அப்படித்தான் - நட்பின் சிதறலும் ஆனாலும் என்ன சுனா…
-
- 10 replies
- 1.9k views
-
-
கணவன் கடிந்து கொண்டான் மனைவியை எத்தனை தடவை சொன்னேன், அந்த கறுப்புப் பை கவனம் என்று மனைவி கவலைப்பட்டாள், அடடே அவர் சொல்லியும் நான் மறந்து விட்டேனே... காதலன் இறுக ஒரு முறைஅணைத்துக்கொண்டான் அவளோ அவன் இதழில் அழுத்திப் பதித்தாள் இன்னும் 10 நாட்கள் கடற்கரையில் உன்னை என்னசெய்கிறேன் பார் ரகசியம் பேசினாள் ... இன்னும் ஒருவன் கண்ணாடியை சரிசெய்து கொண்டு தொலைபேசி செய்தியில் மூழ்கிப் போனான் நாளைய நாள் கண் முன்னே நடமாடியது, அலுவலகத்தில் முக்கிய மூன்று சந்திப்பு, நண்பனை காண வேணும், பழைய கதைகள் பேச வேணும் அவன் விரும்பும் மதுப் புட்டி வாங்கவேணும் ... முதியவர் மனதுக்குள் பேசிக்கொண்டார், நேரத்துக்குப் போய்விட்டால் மகனுக்கு சுலபம் மருந்துகள் வாங்கவேணும், மனைவியும் பாவம்…
-
- 16 replies
- 1.9k views
-
-
நாய்கள் கடி படுது தமிழுக்கு...நல்ல காலம் பிறக்குது.....!!! கூட்டணிகள் போட்டு வைச்சு கூட்டினைஞ்சாங்க... இப்போ குத்து வெட்டு என்றதுமோ தாம் பிரிஞ்சாங்க...??? ஆதி அந்த காலம் எண்ணா அவங்க நினைச்சாங்க...??? அதை எண்ணி புட்டா புலியழிக்க இவங்க முனைச்சாங்க...?? சங்க காலம் தொட்டிவிங்க சதிகள் செய்தாங்க... எம் தமிழை அழித்தவங்க பழிகள் ஏற்றாங்க... அவங்கள் இட்ட சாபமதால் இன்றழிந்தாங்க... தேடி ஓடி எம் தமிழை தேடி அழித்தாங்க... தெரு நாய்கள் போல தெருவில் சுட்டெறிந்தாங்க.... புலிகள் என்று முத்திரைகள் வேறு பதித்தாங்க..... கொலைகள் எண்ணு கொள்ளை எண்ணு எத்தனை தாங்க.... …
-
- 7 replies
- 1.9k views
-
-
இன்றைய காலையின் விடியலின் வரவினை அறியவிக்க சேவல் கூவவில்லை..! களவாடிப் போனது யார்,,,,? விழித்துப் பார்த்தேன் வெளிச்சத்தையும் காணவில்லை..! போர்-மே(மோ)கம் சூழ்ந்ததால் எமது காலைச் சூரியனும் காணாமல் போய்விட்டான்...! இன்றைய பொழுதுகள் நற் பொழுதுகளின் விடியலுக்கான... தேடல்களாய்-நாளும் தொடர்கிறது..... நமது விடியல் விடிகிறது விடியாப் பொழுதுகளாய்...!
-
- 9 replies
- 1.9k views
-
-
அவர்கள் சூரியனை தேடிநடக்கவில்லை சூரியனாக மாறினார்கள் இருள் மறைய தொடங்கியது என்னும் அவர்கள் மாறுகின்றார்கள் புளியமர இடுக்கினூடே நிலவு மேறகில் இருந்து இறுமாப்புடன் வேகமாக எழும்பியது நிலவுக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கி நடந்தார்கள் நிலவும் சில கிளிகளும் கெக்கட்டம் விட்டு சிரித்தது கேட்டது விடியலை நோக்கி நடந்தார்கள் நடுங்கிய தேகத்திலும் வன்மம் வான்வரை எட்டி நின்றது தள்ளாடி தடுமாறினார்கள் இருந்தும் பசியும் தாகமுமும் வலியும் முன்னேற சக்தி தந்தது செவிப்பறைகளில் வீறிட்ட ஓலங்கள் வழித்துணைக்கு தாலாட்டின தொடர்ந்து வந்தது நிலவு சிரித்துக்கொண்டே வந்தது ஏளனம் செய்தது எள்ளிநகையாடியது என்ன ஒரு இறுமாப்பு …
-
- 10 replies
- 1.9k views
-
-
கவிதை :P நீ கடல் நான் கரை நீ வானம் நான் முகில் நீ வீதி நான் கார் நீ பெற்றோல் நான் எஞ்சின் நீ சந்திரிக்கா நான் லக்ஸ்மன் கதிர்காமர் நீ அசின் நான் விஜய் நீ அமேரிக்கா நான் இஸ்ரேல் நீ ஜ நா சபை நான் கோவி அன்னன் நீ பின்லேடன் நான் அவர் தாடி நீ கீட்லர் நான் நாஸி நீ யாழ்ப்பாணம் நான் கொழும்பு நீ திருநல்வேலி நான் அல்வ நீ கரவெட்டி நான் டங்ளஸ் தேவனந்தா நீ ஆனந்தசங்கரி நான் குழந்தபிள்ளைகள் நீ முதலாளி நான் கடன்காரன் நீ யாழ்கவிதை பகுதி வடகைக்கு எடுத்தவள் நான் யாழ்கவிதை பகுதியைசொந்தமாக வாங்கியவன்
-
- 10 replies
- 1.9k views
-
-
என் இருப்பும், உன் இருப்பும் அவசியம் பருத்த கலசங்களும், பெருத்த தம்புராவுமே நட்பை நிலைப்படுத்தும் நிர்வாண நிலையென்றால் கரிக்கிறது கண்மணிகள். உறுத்தலின்றி தரித்த விசம்போல் ஒரு பேராற்றில் கலக்கும் துளிகளில் மாள்வது நட்பாகில்.... மானுடம் சிகிலமாகி, நாகரீக வெளிகளெல்லாம் நரகல் புவியாகி சீழ் பிடித்து மணக்கும். என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம். நட்பென்ற உன்னதத்தின் மேன்மையைப் புரிய வைக்க நண்பா! என்னிருப்பும், உன்னிருப்பும் அவசியம்.
-
- 6 replies
- 1.9k views
-
-
கழிவறையில் ஓவியம் தீட்டுவதில் அலாதி சுகமெனக்கு. மனதிற்கு உகந்தவளை சுவற்றில் தீட்டுவதும் மனதார இகழ்ந்தவர்களை சொல்லத்தகா திட்டுவதும் இங்கேதான்.. சில புகழ்பெற்ற ஓவியங்கள் வரையக்கற்றுக் கொண்டதும் இங்கேதான். இங்கே சுழிப்பவர்கள் அங்கே இளிப்பார்கள். கழிவறைக் கதவைத் திறந்து வெளியே செல்லுகையில் ஆழ்ந்த திருப்தி எனக்கு. இன்னும் நால்வர் அதைக் காணக்கூடுமல்லவா?
-
- 6 replies
- 1.9k views
-
-
மாறும் உலகில் மாற உன் உறவே நிரந்தரம் தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் இம்மை வாழ்வில் மறுமை நிரந்தரம் நான் மாண்டபின்னும் உன்னில் உயிர்பது நிரந்தரம் தாயின் அன்பு சேய்க்கு நிரந்தரம் நான் சாயும்போது காப்பது நீயே நிரந்தரம் செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம் நிலைவாழ்வு என்னும் நிஜமான நீயே நிரந்தரம அதன் விலையாக என்னை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம்
-
- 4 replies
- 1.9k views
-