கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
மாறாத வடுக்களை எம் இதயங்களில் எழுதிவிட்ட எதிரியே.. இந்தப் பிஞ்சுகள் செய்த குற்றம் என்ன..??! ஏன் இந்தத் தண்டனை…??! உலகம் இயக்கும் இயந்திரப் பறவைகள் கொண்ட உன் பலத்தால்.. அதன் திமிரால் மக்களை… தண்டிக்க அவசரப்பட்ட நீ… இழந்து போன இந்த மொட்டுக்களின் வாழ்வை மீளளிக்க முடியுமா..??! போர் செய்து என்ன வென்றாய்..?! தமிழர் நிலங்களைப் பறித்தாய். மனித மனங்களை சரித்தாய்.. மனிதம் அழித்தாய்..! ஏன்… நீ.. மனிதன் அல்ல சிங்களப் பேரினப் பிசாசு என்று மொழிந்தாய். மனிதனாய் உன்னோடு வார்த்தைகளால் பேசிப் பயனில்லை.. இந்த மொட்டுக்கள் விர…
-
- 9 replies
- 1.3k views
-
-
எல்லா காலங்களினது உழைப்பையும் ஒன்று திரட்டி சேகரித்த விதைகளை பயிரிடும் சற்றுமுன் தீர்ந்துபோன விதைப்புக் காலத்தின் கடைசி பின்மாலைப் பொழுதில் அஸ்தமன சூரியனின் இளஞ்சூட்டில் நெளிவெடுத்து வருடும் காற்றில் தலையசைத்து சிரிக்கும் நெற்பயிருக்கு தீங்கொன்றும் நேரா வண்ணம் வழிநெடுகிலும் கையில் உள்ளதை சிந்திச் சிதறியபடி செலகிறேன் பசித்திருக்கும் பறவையின் கூடுவரை.., நகரத்தின் பல்லிடைச் சக்கரத்தில் சக்கையாய் சிதறுண்ட வாழ்க்கையின் எஞ்சிய சிறுதுரும்பின் உயிர்நீட்சிக்காய் கனவுச் சிறகுகளை களைந்துவிட்டு மீண்டுமொரு விதைப்பு காலத்திற்காக தேடல் துவங்குகிறது..... ~ராஜன் விஷ்வா
-
- 9 replies
- 927 views
-
-
உன் கண்களில் மிதக்க ஆசைபட்டு மூழ்கிப்போனது யார் யாரோ கண்களில் என் கவிதைகள் * என்னைக் காட்டிக் கொடுப்பவன் தான் தூரோகி என்றால் என்னவளைக் காட்டிக் கொடுக்கும் என் கண்களை யார் என்பேன் * நீ அழகாய் கிழித்தெறிவதை ரசிப்பதற்காகவே அழகான கவிதைகளாய் எழுதிக் கொண்டுவருகிறேன் * சாண் ஏற முழம் சறுக்கிறது உன் வீட்டு வாசல்படி எனக்கு * என் நம்பிக்கை மீது நம்பிக்கையில்லாமல் போனது நீ என்னை மறந்ததை நான் இன்னும் நம்பவில்லை * அவளைச் சிரிக்கவைத்து அழாமல் எடுத்துக் கொடுத்தேன் என் செத்தவீட்டு புகைபடக்காரனாய் அவளின் கல்யாணவீட்டுப் புகைப்படத்தை * உன் வீட்டுச் சுவரில் எனக்கு யாரோ எழுதிய இரங்கல் கவிதை இன்…
-
- 9 replies
- 1.5k views
-
-
நன்றி சொல்லவார்த்தை இல்லை நண்பனே உனக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை தானாடாவிட்டாலும் தசை ஆடும் உன் போராட்டம் உலகையே ஆட்டும் கொடியவன் சிங்களன் கொடுமைகளை ஈழத்தமிழனைக் கொன்ற கொடுங்கோலரை வெளிக் கொணரும் உன் போராட்டம் உளி போல உனக்கு நான் ஒளிபோல எனக்கு நீ தமிழன் நீயடா தலை நிமிரடா; வெளியேறும்சிங்களம் ஒருநாள் தெளிவாகும்தமிழீழம் மறுநாள் தனியாக நீயில்லைத் தமிழா என்னோடு தரணியெங்கும் தமிழன் உன்னோடு முகம் தெரியா முத்தமிழா உனக்கு என் வீரமுத்தங்கள்; ;
-
- 9 replies
- 1.8k views
-
-
சமாதான தேவதை - நீ சமர் கண்டு சோர்வதா? அவமான அர்ச்சனை - நீ அருகிராமல் எங்கெங்கோ போவதே! சுகமான வாழ்வது சுடராமல் அணைவதா? சாவின் கரத்தில் உயிர் சடுகுடு விளையாடி மாய்வதா? நிழலாக எம் கழல் தனை தொடர்கின்ற சுற்றமது சுவர்க்கமதை அணைப்பதா? இமையாக நின்றெமை சுமையாக நினையாத அன்னை, அப்பனை அடுத்தடுத்து அவலமாய் இணைப்பதா? தமையனாய் நின்றவர் தம்பியாய் வந்தவர் தமக்கையாய் அணைத்தவர் தங்கையாய்ச் சிரித்தவர் நீட்டி முழங்கிப் போக அனுமன் வாலாய் நீள்பவர் கவலை மறந்து, சிரித்து மகிழ்ந்து இந்நாட்டு மன்னராய் நின்றவர் அன்பென்னும் ஆகுதியில் உயிர்தனைச் சலவை செய்து அவலம் எதுவென மறந்தவர் பட்... பட்... எனப் பறக்கும் வேட்டுக்கு சட்... ச…
-
- 9 replies
- 1.7k views
-
-
வள்ளி திருமணம். வள்ளி திருமணம் (பாலபாடம்) எங்கள் புராணக் கதைகள் பலவற்றுள் எங்கள் முன்னோர்களின் கிராமியக் கதைகள் பொதிந்துள்ளன என்று கருதுகிறேன். முருகன் வள்ளி காதல் எனக்கு பிடித்த கதை. பின்னர் வட இந்திதிய ஸ்கந்தரையும் முருகனையும் இணைத்தபோது தெய்வஞானி வருகிறதாக கருத்துள்ளது. ஸ்கந்தர் கிரேக்க மன்னன் அலக்ஸ்சாந்தர்தான் என்றும் சொல்கிறார்கள். வசதியின்மையால் இந்த இசை நாடகத்தை ஒலிவட்டடாக்கும் /மேடை ஏற்றும் வாசுகியின் முயற்ச்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை. நானனும் அக்கறைகாட்டவில்லை. ஏனேனில் அது எனது பணியல்ல. எனினும் தமிழ் நாட்டு மேடைகளில் பாடப் பட்டபோது மிகுந்த வரவேற்பைப் பெற்றது. வள்ளி திருமணம் ஒலிவடிவம். http://tamil.sify.com/audio/fullstory.php?id=14213814 வள்ள…
-
- 9 replies
- 5k views
-
-
நான் தான் கொரோனா கொல்லுறன் என்று நாடுகளை எல்லாம் நாசம் செய்கிறேன் என்று வீட்டுக்குள்ள பூட்டி இருந்து போட்டு ஊசியை போட்டு என்னை ஓட வச்சுப் போட்டு சத்தம் இல்லாமல் கிடந்த நீங்கள் இப்போ யுத்தத்தை கொண்டு வந்திட்டியள் பேயை விரட்டிறம் என்று இப்போ பிசாசை எல்லா கொண்டு வந்திட்டியள் என்ன செய்வது எனக்கே சிரிப்பாய் கிடக்கு எட என்னை விட பெரிய கொரோனாக்கள் இருக்குது உலகத்தில என்னைப்போலவே இதுகும் கொல்லும் என்னைப்போலவே எல்லாத்தையும் அழிக்கும் சொல்லப்போனால் சும்மா விடாது சுய நலன்கள் கொண்ட கொரோனாக்கள் நான் இனம் மதம் சாதி சமயம் எந்த நாடு என் நலன் என்று பார்க்காமல் எல்லோரையும் கொன்றே…
-
- 9 replies
- 737 views
-
-
ஆழ்கடலின் அலை அயத்தமானது அது புரியாது நானும் அதன் அழகில் மயங்கி அலையின் சீற்றம் புரியாது கடலின் ஆழம் தெரியாது கரையின் ஓரமாய் நின்று ஆர்ப்பரிக்கும் அலை கண்டு அகமகிழ்ந்தே காத்திருந்தேன் அலை உயந்து பின் தணிந்தது சுழன்ற காற்றின் திசையெங்கும் சுழற்றி வாரி நீரை இறைத்தது என்மேல் தெறித்து விழுந்த நீர்த்துளிகள் மேனி நனைக்க அலையின் மகிழ்வில் நானும் ஆர்ப்பரித்து நின்றேன் எழுந்தது எதிரியாய்ப் பேரலை என் அங்கம் அத்தனையும் சுருட்டி ஆத்மாவின் மூச்சை நிறுத்தி சிந்தனை எல்லாம் அழித்து சிகரங்கள் எல்லாம் தொட்டவளை தன்னை நம்பியே நின்றவளை ஆழ்கடலின் இருண்ட அறையில் எழுந்திடமுடியாப் பாறைகள் நடுவே எதிரியாய்த் தள்ளி எக்காளமிட்டது என்ன செய்வேன் நான் எழுந்துவர முடியவில்லை எ…
-
- 9 replies
- 907 views
-
-
கார்த்திகை பூக்களே நலமா? கல்லறை தெய்வங்களே சுகமா? உறவுகள் நலமா? நீங்கள் துயிலும் தாய்மடி நலமா? தூயவர்ளே நீங்கள் துயின்ற துயிலும் இல்லங்கள் இல்லையே...!!! எங்கே போனீர்கள்? எங்கள் மனங்களில் நிம்மதி இல்லையே...!!! அட யார் அழுவது அங்கே?..... எங்கள் பிள்ளைகள் கண்மூடி துயின்றது தாய்மண்ணின் மடியில் அவர்கள் எப்போதும் வாழ்வது எங்களின் இதயங்களின் அடியில்.....!!! கடைசித்தமிழன் இறுதிமூச்சு இருக்கும் வரை எங்கள் கண்மணிகளின் நினைவிருக்கும். அவர்களின் கனவும் இருக்கும். கார்த்திகை பூக்களே நலமா? கல்லறை தெய்வங்களே சுகமா? உறவுகள் நலமா? நீங்கள் துயிலும் தாய்மடி நலமா? விதையாய் விதைத்தோம் …
-
- 9 replies
- 1.3k views
-
-
என்றென்றும் நன்றியுடன்..... முப்பாலுக்கு அப்பாலும் முதற்பாலாய் தாய்ப்பாலுடன் தமிழ்ப்பாலும் ஊட்டி நோய் ஏதும் அணுகாது நோன்பிருந்து சேயாய் எமை எல்லாம் செம்மையாய் வளர்த்தெடுத்த தாயே உனை வாழ்த்த தமிழில் வார்த்தையில்லை நீ தண்ணீர் ஊற்றி வளர்த்திருந்தால் நாம் தறுதலையாய் வளர்ந்திருப்போம் நீயோ கண்ணீர் ஊற்றி எம்மைக் கண்ணியமாய் வளர்த்ததனால் உன் கண்ணின் நீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராய் மாறியது கண்ணீரோடு விதை விதைப்போர் கம்பீரத்தோடு அறுத்திடுவார் என்று சொன்ன வேதமொழி என்றும் பொய்ப்பதில்லை எத்தனை இரவுகள் நீ உறக்கத்தைத் தொலைத்து விட்டு எம் இரவுகளைப் பகலாக்க உன் இரவுகளை இழந்திருந்தாய் எத்தனை தடவைகள் நீ உன் கனவுகளைத் தொலைத்து விட்டு எம் எதிர் க…
-
- 9 replies
- 2.1k views
-
-
தமிழர்களும் மனிதர்கள் தான்!!! அண்ணாவை காணவில்லை என அழுதாள் "தங்கச்சி" அவளும் காணாமல் போனாள்..!!! என்ர பிள்ளையை திருப்பித்தாங்கோ என கதறினாள் ஒரு "தாய்" அவளும் காணாமல் போனாள்..!!! இதயமே இல்லாத இரும்புமனிதர்கள் தேசத்தில் கண்ணீர் வடிப்பது தண்டனைக்குரிய "குற்றம்"! மனிதமே இல்லாத மிருகங்கள் தேசத்தில் விழி நீரின் "வலி" தெரியாது அழுபவனுக்கு மரண "தண்டனை"! நாக்குகள் அறுக்கப்படும் நரக பூமியில் கேள்வி கேட்பவன் "தீவிரவாதி" நீதியே இல்லாத "நிர்வாண" நாட்டில் கோமணத்தோடு திரிபவன் "குற்றவாளி"! கேட்க நாதியற்ற இனமாய் இருப்பதால் நாய் கூட துணிந்து காலைத்தூக்கும் "நரக தேசம்"! விசர் நாய்க்கு தண்ணீருக்குப் பயம் வெறிநாய்களுக்கு தமிழனின் கண்ணீ…
-
- 9 replies
- 1.1k views
-
-
சர்ச்சுக்குப் போனேன்! கடவுள் அங்கில்லை! சலிக்கவில்லை! மசூதிக்குப் போனேன்! அங்கும் அவனில்லை! விடவில்லை! விகாரைக்குப் போனேன்! எவனும் அங்கில்லை! முடியவில்லை! மயங்கிப் போனேன்! விழித்துப் பார்த்தேன்!! மனைவி மடியிலே!!!
-
- 9 replies
- 778 views
-
-
கனவினிலே நீ ஏன் வந்தாய் கன்னி இளம் புள்ளிமானே என் நெஞ்சினிலே குடிகொண்ட பூங்கோதை எனும் பெண் பூவே தேடிவந்த என்னை நீயும் கவிபாடவைத்தாய் உன் அன்பு என்னும் மதுக்கிண்னத்தில் என்னை நியும் விழ வைத்தாய் தாயைப்போல என்னை அன்பு செய்து என்னை வென்று போட்டாய் உன் பார்வையாலே என்னை நீயும் சிறைப்படுத்திவிட்டாய்
-
- 9 replies
- 1.7k views
-
-
உயிரில் உள்ள ஒவ்வோர் அணுவும் வலியால் துடிக்க வாடும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நெஞ்சம் முழுதும் நிறைந்த சோகம்... கொஞ்ச மேனும் கருணை கொண்டு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? பெற்றார் இன்றிப் பிள்ளைகள் இன்றி உற்றார் இன்றி உழலும் எனக்கு- உதவிட இந்த உலகினில் யாருளர்...? நாளும் பட்டினி.. நாளையும் பட்டினி.. வீழும் கண்துளி விரல்கொண்டு துடைத்தினி- உதவிட இந்த உலகினில் யாருளர்...? எண்ணற்ற துக்கம்... இடையற்ற துயரம்... கண்ணுற்றுக் கலங்கிக் கடுகியே வந்து- உதவிட இந்த உலகினில் யாருளர்...?
-
- 9 replies
- 839 views
-
-
புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் குரலில் சில வரிகள்! பகுதி - 01 http://www.ijigg.com/songs/V2A4GBAFPB0 பகுதி - 02 http://www.ijigg.com/songs/V2A4GBBEP0 பகுதி - 03 http://www.ijigg.com/songs/V2A4GBC0PB0
-
- 9 replies
- 2.2k views
-
-
புத்தன் காந்தி யேசு பிறந்தது பூமியில் எதற்காக தோழா ஏழை நமக்காக தமிழா நீ புத்தன் ஆக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உனக்கு மொட்டையடித்து காவியுடை மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ காந்தியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சுட்டு விட்டு கோவணம் மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ யேசுவாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை சிலுவையில் அறைந்துவிட்டு ஒரு துண்டு துணி மட்டும் தந்து விட்டு போவான் தமிழா நீ புலியாக இருக்கிறாயா போறவன் வாறவன் எல்லாம் உன்னை பார்த்து தலை வணங்கி விட்டு போவான்.
-
- 9 replies
- 2.2k views
-
-
எழுத்தாக்கம் - குரல்வடிவம் : ஒருவன் ~ கவிதை கரைமணலைத் தொட்டுத்தொட்டு விளையாட... நுரையலைகள் விட்டுவிட்டு அலையாட... திரைகடல் மெட்டுப்போட்டு இனிதான, திரைப்பாடல் ஒன்றின் முதல்வரியை ஞாபகமூட்டும்! மெதுவாய் வீசுகின்ற உப்புக்காற்றின் ஈரம், பக்கம்வந்து பேசுகின்ற வார்த்தைகள்... முன்பொருநாளின் மாலைப்பொழுதில் அன்போடு மணல் அளைந்த இருபது விரல்கள் பற்றிய கதை பேசும்! உப்புக்காற்றில் உலர்ந்துபோன இருஜோடி இதழ்கள் காதலின் பருவமழையில் முழுதாக நனைந்துபோக... செக்கச் சிவந்த வானம்கூட அவளின் கன்னம் பார்க்க வெட்கப்பட்டு மேகத்தை அள்ளிப் போர்த்துக்கொள்ளும்! மெளனங்கள் பேசிக்கொள்ளும் ரம்மியமான மாலைப்பொழுதில் விரிந்த கடலுக்கும் வானத்துக்கும் இடையே எதிர்காலக் கனவுகளை தி…
-
- 9 replies
- 9.5k views
-
-
பார்த்தலையும், புன்னகைத்தலையும், நிராகரித்துவிடும் பலரை கடக்கவேண்டியிருக்கிறது. அரவணைப்புகான ஏக்கத்தைதையும் இன்றின் ஏமாற்றத்தையும் சுமந்து திரியும் சிலரையும் கடக்கவேண்டியிருக்கிறது. வீடுகளில், வேலைத்தளங்களில் - இருந்து ஏதாவதொன்றைக் காவி வருபவர்களையும், ஒரு சீக்கரெட் , கபே வழியாக ஏதோவொன்றை இறக்கி வைக்க முயல்பவர்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. லெதர் ஜக்கெற்றுக்களும் மப்ளர்களும் மனதையும் மூடிவிட ஐபோனும் கூலிங்கிளாசும் பொறிகளையும் தின்றுவிட கொட்டடி முதல் கொடிகாமம் வரை உறவாடி உணர்வோடு இருந்தம் என்பவரையும் பொறுத்துக்கொள்ள வேண்டித்தான் இருக்கிறது. சென் நதியிலும் லூவர் மியூசியத்திலும் ஈபிள் கோபுரத்திலும் நீண்ட மெற்றோக்களிலும் ஏறிவந்த பின்னும்…
-
- 9 replies
- 871 views
-
-
என்னதான் பெரிதாய் .. ஒப்புக்கு ஜனநாயகம் பேசு........ என்னமோ பெரிதாய் ஊரோடு ...... சண்டைக்கு வா.! என்னதான் பெரிதா... ஏதும் வேசம் போட்டாலும்....... தென்னை ஓலையில் வளர்த்திய...... உன் தங்கை உடல் பார்த்து அழுவாய்.....அழுதே ஆவாய்..! கன்னமது சுட்டு கொண்டு ஓடி ........ உன் கரங்களில் பட்டு தெறிக்கும்....... கண்ணீரில்....... எழுத்துக்கள் வாசி........! குளிர் காய நினைத்து...... வீட்டை எரித்தாய்....... குப்பி விளக்கை அணைத்துக்கொண்டு...... கூரைமீது படுத்தாய்..! பற்றி எரிகிறது பார் - இப்போ....... நீ சுமந்த பாவம் ........ உன்னை கொல்லும்......! நாம் நேசிக்கும் பூமி....... நாமிருக்கும் வரை- என்றும் உன்னை வெல்லும்! 8)
-
- 9 replies
- 1.8k views
-
-
வலிகளும் வேதனைகளும்... புணர்ந்து பெற்ற மழலை! சொல்லி விளங்காத வரிகளில்... தெரியுமா இவன் செயலை? தூக்கிய ஆயுதம் வைத்து... தூங்கிய பின்னரும் -இவன், கனவில் பேனாதான் வந்து நிற்கும்! ஒரு பேனா முனையின் உயர் அழுத்தம், முற்றுப்புள்ளிதான் வைக்க முடியும்! ஆனால் இவன் கனவுகளிலும்... அதன் முனை அசைவதையே ஆசைப்பட்டான்! இரவெல்லாம் அழுதுமுடித்த... பேனாக்களின் வண்ணக் கண்ணீரில், காகிதத் தலையணைகள்... ஈரமாகிப் பாரமாகின! முதற்பக்கம் இல்லாத புத்தகம் போல், முகமூடிகள் மட்டும் முகப்பானது! பொறுப்பாக பொறுப்பேற்க பொறுப்பற்ற வெறுப்போடு வெறுப்புற்று வெளியேற்ற... இன்னும் நீர் பேதம் பார்த்தால்.... வெறியான எண்ணங்கள் வெளியேற வெறுப்பற்ற வெளிப்படையாய், புரிதல் எ…
-
- 9 replies
- 1.5k views
-
-
ஓர் வெள்ளைப் புறாவின் இறகுகள் ஒடித்து........ தமிழ் செல்வனின் கண்ணீர் அஞ்சலிக்காய்..... கடந்த வருடம் கார்த்திகை இரண்டில் சமாதானம் கேட்டு பறந்து திரிந்த வெள்ளைப் புறாவின் இறகை ஒடித்து வீதியில் போட்டு புத்தரின் மைந்தர்கள் மகிழ்ந்த இன் நாள்..... உலகம் முழுவதும் வெட்கத்தால் தலை குனிந்த ஓர் நாள்....... தமிழன் இறுதி அமைதி முயற்சியும் அரை நொடிப்பொழுதில் அழிந்திட்ட கரி நாள்....! அகிம்சைக்காய் முதல் பலி எம் உயிர் திலீபன்...... அதன் பின் ஓர் வலி அன்னை பூபதி.... அரசியல் பேசி அமைதியை நாடிய அண்ணா நீயும் இறுதியாய் ஓர் பலி....! தமிழர் இனத்தின் விடுதலை வேண்டி வீரியம் கொண்ட வே…
-
- 8 replies
- 1.6k views
-
-
துரோகத்தின் தருணம் by ஃபெய்ஸ் அஹ்மத்ஃபெய்ஸ் இன்னும் சிறிது நேரத்தில் கூரைகளின் மீது தன் ஒளியை வாரி இறைத்துவிடும் தன்னுள் இருந்த பிம்பங்கள் மறைய கண்ணாடிகளுக்கு தாகம் எடுக்கும் தூசிபடிந்த தாரகை சொர்க்கத்தின் கண்ணீராய் கீழே விழும் சிலர் தங்கள் பாழடைந்த அறைகளில் தனிமையை போர்த்திக் கொள்வார் வேறுசிலர் விரக்தியை போர்த்தி இருப்பார் இது நீசத்தனமான துரோகத்தின் தருணம் அனைத்து கருணையும் முடிவுக்கு வரும் தருணம் அனைவருக்கும் சுயநலமே நோக்கமாக மாறும் தருணம் எங்கே செல்வாய் நீ என் ஊர் சுற்றி நெஞ்சமே உன்னிடம் யார் சினேகம் கொள்வார் இன்னும் கொஞ்சம் காத்திரு விடியலின் அம்பு பாய்ந்து குருட்டுக் கண்களுக்கு பார்வைகிட்டும் வரை அன்னியோன்னியமான முகங்களுக்கு காத்திரு …
-
- 8 replies
- 1.1k views
-
-
இன்று நான் கவிதையொன்றெழுத முயன்றிருக்கின்றேன். நீங்களும் படிச்சுப்பாருங்கோ. பிடிச்சிருந்தாச் சொல்லுங்கோ.அன்புடன்சாதாரணன். உண்மை அல்லது குழப்பம் பனைமரத்தின் கீழே பச்சைத்தண்ணியைக் குடிச்சிட்டுப் பாலென்று சொல்லக் கள்ளென்று நம்பும் …
-
- 8 replies
- 1k views
-
-
தோல்வி நிலையென நினைத்தால்..... கவிதை - இளங்கவி தொடர்வாய்ப் பெற்ற பல வீழ்ச்சியினாலும்..... தொடர்ந்து கொண்டிருக்கும் பல அதிர்ச்சிகளாலும்..... துவண்டு விடாதே தமிழினமே....! எங்கள் விதியினை நாமே எழுதுவோம் எழுச்சி கொள்ளு எம்மினமே...! எதிரியின் கூச்சலுக்கேல்லாம் பயந்து ஓட நீயொன்றும் கொல்லையில் பறக்கும் கோழியல்ல.... எதிரியின் குதம்வரை சென்று அவன் குடலைப் புடுங்கிய கோரப் புலியின் பலம் உனக்கு.....! நீ கோடியாய்ச் சேர்ந்து கொதித்து எழுந்திட்டால் ; அவன் கோட்டைகள் எரியும் உன் விடுதலைக்கு....! அவன் கோவணம் கழட்டி நீ தோய்த்துப் போட்டால் கொத்தடிமையாய் இருப்பாய் அந்தக் களிசறைக்கு.... நம் விரலை வைத்தே எம் கண்ணைக் குத்துறான் …
-
- 8 replies
- 1.2k views
-
-
இதயமில்லா மனிதர் கூட கலங்கி நிற்கும் கொடூரங்கள்.. ஈழ மண்ணில்..! முன்வினைச் சொந்தமோ.. பந்தமோ.. ஈழ மண்ணின் மீது பிறவிக் காதல் கிருஷ்ணமூர்த்திக்கு..! ஈழ தமிழர்கள் ஈனத் தமிழர்களாய்.. தங்கள் குழந்தைகளை இஞ்சினியராக்கி கொழுத்த சீதனத்தில் வெளிநாட்டில் வாழ வைச்சு மகிழும் வேளையில்.. இஞ்சினியராகி வெளியூர் போயும் ஈழத்து நினைவாகி இள வயதை மறந்து துயர் கொண்டனன் இந்தக் கிருஷ்ணன். தேரோட்டியாய் அன்றி தன் தேகம் தீயினில் வேக.. மீண்டும் ஓர் முத்துக்குமாரனாய் பிறப்பெடுத்திருக்கிறான் இவன். ஐநா அறிக்கை முழுசா பிரசவிக்கவில்லை.. கவலை மட்டும் முழுதாய் பிறப்பெடுக்க.. தாங்க முடியா வேதனையில்.. தன் சுற்றம் மறந்து சுகம் மறந்து இன வாழ…
-
- 8 replies
- 2.4k views
- 1 follower
-