Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நினைவுப்படிமங்களிலிருந்து எழும் ஓலக்குரல்கள் ஈனஸ்வரத்தில் ஒலிக்கிறது யாருக்கும் கேளாமல், மனக்காயங்களிலிருந்து கசியும்நிணநீர் கோடுகளாய் உறைந்து வடுக்களாய் வதைக்கின்றன , யாருக்கும் தெரியாமல் , வலுவிருந்து சில கணம் சோர்ந்து ஓய்கிறது_ உடல் கனமாய் விழுகிறது . துரோகியா நான் ? ஓரத்தால் விலத்திவந்து _இங்கு வீரக்கதைகள் பேசவில்லை செத்தவர்கள் மீதேறியென்று _அந்த சரித்திரம் பாடவில்லை , நெருப்பில் நீராடிய மறவர்களின் தேகவாசமிது _ என்று தேவாரம் இயற்றவில்லை . குண்டுவிழும் தேசத்து தெருக்களில் ஆற்றாமையுடன் அலைந்த அதே கணவிளைவுகளே இங்கும் துரோகியா நான் ?

  2. கூட்டினோம் பெருக்கினோம் கழித்தலையும் துடைத்திட்டோம் எட்டு மணி வேலை என்பதை எழுத்திலும் நாம் அறியோம் இரவு பகல் வந்ததாக சொல்கிறர்கள் அதை நாம் என்றுமே பார்த்ததில்லை சுமந்தோம் பெற்றோரை உடன் பிறந்தோரை அவரது பிள்ளைகளை உற்றார் உறவினரை தாயகத்தை......... வீட்டுக்கு கலோ என்றால் கிலோ எவரானாலும் அய்யோ என்றால் அஞ்சோ பத்தோ வயிற்றைக்கட்டினாலும் வட்டிக்கெடுத்தாலும் எம் நிலையை வாய்திறந்து சொல்லோம் களவெடுக்கவில்லை கையேந்தி வீதியிலும் நிற்கவில்லை சொல்லொணா துயரங்கள் துரத்தியபோதும் வாய்ச்சொல் தவறியதில்லை எவன் வயிற்றிலும் என்றுமே அடித்ததில்லை மூழ்கும் நிலைவந்தால் அடுத்தவேலை எடுப்பதுண்டு அதற்கு அடுத்தவேலையும் பார…

  3. Started by pakee,

    உன்னைக் காட்டிலும் ரோஜா செடி பரவாயில்லை , நீ என்னை மறந்த போதிலும் எனக்காக தினம் தினம் மலர்தூவிக்கொண்டிருக்கிறது அந்த அன்பு ரோஜாச்செடி...

    • 0 replies
    • 676 views
  4. எல்லோரும் புறப்படுவார்கள் ஆயத்தங்கள் மிக மிக இலாவகமாகவே நடக்கின்றது நேற்று ஒருவன் புறப்படிருந்தான் இன்று ஒருவன் புறப்பட்டுவிட்டான் நாளை ஒருவன் புறப்படுவான் சிலர் அடம் பிடிக்கின்றார்கள் நிச்சயமானவர் தாங்கள் என்று அவர்களை அதட்ட முடியவில்லை அது அறியாமையின் முதற்புள்ளி வலுக்கட்டாயமாக இழுக்கவும் முடியவில்லை அழுத்தங்கள் கொடுப்பது அறிவுடையவன் செயலன்று இப்போது என்ன செய்வோம் இந்த பயணத்தை நினைத்து உறக்க அழுவோமா? இல்லை இருக்கும் காலத்தை இனிமையாக்குவோமா? யாரெல்லாம் ஆசைப்படுகிறார் கோவப்படுகிறார் கொஞ்சித்திரிகிறார் கொள்கை பரப்புகிறார் வாருங்கள் உரக்கத்சொல்வோம் எங்கள் பயணத்தை எங்கலோடு விட்டு விடுங்கள். கட்டாயம் திணிக்காதீர்கள் அத…

  5. சாலை ஒரத்து குப்பைத்தொட்டிக்குள் துர் நாற்றம் வீசிக்கொண்டே இருந்தது. போபவர்கள் வருபவர்கள் எல்லோரும் மூக்கைப் பொத்திக் கொண்டும்….; எச்சிலைத் துப்பிக் கொண்டும்…. சுயநலமாக நகர்கிறார்கள். ஒருவரேனும் நின்று நிதானித்துப் போவதாய் நான் அவதானிக்கவில்லை…நாற்றம் என் மூக்கையும் தைத்தது. நாக்கையும் பிய்த்தது. வாடிய வாழை இலையில் சுற்றப்பட்ட … எலும்புகள் தெரியும் படியான… போசாக்கு குறைந்து போனதான…ஒரு பிஞ்சுக் குழந்தையின் நிர்வாணமான காய்ந்த சடலம். தொப்பிள் கொடியின் துவாரத்திலும்…… உதடுகளின் ஈரத்திலும்…பால் உறுப்பிலும்… மல வாசலிலும்…ஈக்கள் இரை திரட்டிக் கொண்டிருந்தன. இரக்கமில்லாமல் ஏன் தானோ..? குழந்தை குப்பைத்த…

  6. அன்னையர் தினம்..! அகிலத்தின் அன்னையர்களுக்கு…, இது ஒரு தினம் ! என் தேசத்து அன்னையருக்கு.., இது ஒரு செய்தி! எம்மை ஈன்றவளை ஒரு நிமிடம், நினைத்துப் பார்க்கையில்…! இதயத்தின் ஆழத்தில் …, எங்கோ ஒரு மூலையில், இலேசாக வலிக்கின்றது! அப்பா என்னும் ஆண் சிங்கம், பிடரி சிலிர்க்கும் போதெல்லாம்.., அடங்கிப் போன அம்மா! பிரசவங்களின் போதெல்லாம்,, மரணத்தைத் தரிசித்து…, மீண்டு வருகின்ற அம்மா! ஆண் என்றாலும். பெண் என்றாலும், ஆண்டவன் தானே தருகின்றான் என்று, ஆறுதல் கொள்ளும் அம்மா! அவளுக்கென ஆஸ்பத்திரியும் இல்லை, ஆறுதல் சொல்லத் தாதிகள் இல்ல…

    • 12 replies
    • 5.8k views
  7. மெல்லிசையின் இனிமை மறந்தேன் இயற்கை எழில்மேல் ரசனை இழந்தேன் செயற்கைகள் நிறை வாழ்கை முறை அதனால் நானும் இங்கோர் எந்திரனானேன் உள்ளத்தின் ஓசையின் ஏவல் கேளாமல் உலகின் ஓட்டத்தில் ஓட விளைந்தேன் மனிதனின் மனிதத்தை மதிக்க மறந்து - கொண்ட பொருளினால் அவன் மதிப்பைக் கணித்தேன் பொருளோடு, கல்வியும் தேட வந்து வாழ்வு தந்த தேசத்தில் வாசம் கொண்டு தவழ்ந்து வளர்ந்த தேசத்தின் வாசம் மறந்து விழுமியங்கள் மறந்தேன், என் சுயத்தை இழந்தேன் (27 August 2010)

  8. ஏன் உதைத்தீ ( ர )ர்களே ?? இருட்டில் இருந்த உங்களுக்கு வெளிச்சம் காட்டியவர்கள் நாங்கள் உங்கள் பசியெடுத்தபொழுது குறிப்பறிந்து ஊட்டியவர்கள் நாங்கள்..... உங்கள் வலி கண்டு எங்கள் வலியாய் துடித்தவர்கள் நாங்கள்....... உங்கள் வெம்பலுக்கும் தேம்பலுக்கும் குளிர்நிலாவாய் இருந்தோம் நாங்கள்..... எங்களுக்கு என்று ஒரு சந்தோசம் நீங்கள் கண்டதுண்டா ?? உங்கள் வாழ்கையில் மெழுகுதிரியாய் எரியும் எங்களை ஒருகணம் உங்கள் , பார்வை திரும்பியதுண்டா ?? உங்கள் ஏற்றம் இறக்கம் எதிலும் ஒன்றாய் கலந்த எங்களை ஏன் எட்டி உதைத்தீ(ர)ர்களே ?? மைத்திரேயி 19/01/2013

  9. தாயகம்பற்றிப் பேசவா? யார் முந்தி நானா?...... நீயா? உணர்வெடுத்து, உரிமைக் குரலெடுத்து ஆகாய வெளிகளை அதிர வைப்போம்..!!!!! திட்டங்களும், கருத்தாடல்களும் கேட்கக் கேட்க உற்சாகம் பிறக்கும். ஆகா இனிக் கவலையில்லை எவ்வளவு குரல்கள்…! உலக அங்கிகாரம் எதற்கு? நாங்களே இராசாங்கம் இதோ தாயகம் எங்கள் கைகளில் இதனைச் சீராட்டுவோம் பாராட்டுவோம். சிரசின்மேல் சுமப்போம். வானலைகள் கதவுதட்டி வார்த்தைகளை குவித்தெறியும்! நம்பி நம்பிக்கை கொண்டேன் வானலை வந்த என்னருந் தோழருடன் பேச தொலைபேசி எடுத்தேன்.. ஆகா நான் கதைத்தது கேட்டீரா? எப்படி இருந்தது? உணர்வாய் இருந்ததா? என ஆயிரம் வினாக்கள். அடுத்ததென்ன? அப்ப நாளை காலையில் செயலாற்றும் இடத்தில் சந்…

  10. கார் கூந்தல் "டை"களின் இரசாயனத்தில் விளைவு காட்டி செம்மை அடிக்க.. காற்றில் பறக்கும் ஒற்றை முடியும் ஸ்ரெயிட்னர் சூட்டில் நிமிர்ந்து கம்பியாகிக் குத்த நிற்க.. கயல்கள் கண்ட விழிகள் பென்சில் மைகளின் படையெடுப்பால் கரிக்கட்டைகளாகி பயங்காட்டி நிற்க.. அப்பிள் கன்னங்கள் அள்ளிப் பூசும் வர்ணப் பவுடர்களின் சூறாவளியில் சிக்கி சிதைந்து சிவந்து நிற்க.. கொவ்வை இதழில் சுரந்த அமிர்தமும் லிப்ஸ்டிக் கலந்து அமிலமாகி அரித்து வடிய.. சந்திர நகங்கள் மின்னல் இழந்து ஸ்ரிக்கர் ஒட்டி குட்டை கண்ட உடலாய் அலங்கோலம் காட்ட.. வெள்ளிக் கொலுசு சிணுங்கிய இடத்தில் சிறைச்சாலை "ரக்"காய் ஏதோ இரத்தம் கண்டக் கட்டி இருக்க.. பிறை நுதல் தன்னில் முட்டி விழும்…

  11. திங்கட்கிழமை தீ மூட்டிக் கொன்றார்கள் செவ்வாய்க்கிழமை செல் அடித்துக் கொன்றார்கள் புதன்கிழமை புகை விட்டுக் கொன்றார்கள் வியாழக்கிழமை விண்ணில் வந்து கொன்றார்கள் வெள்ளிகிழமை வெடி வைத்துக் கொன்றார்கள் சனிக்கிழமை சத்தம் இன்றிக் கொன்றார்கள் ஞாயிற்றுகிழமை நஞ்சு விட்டுக் கொன்றார்கள் ஏழு நாளும் இரக்கமின்றிக் கொன்றார்கள் விடிகாலையிலே வீடு வந்து கொன்றார்கள் மதியவேளையிலே மோட்டார் அடித்துக் கொன்றார்கள் பின்னேரத்திலே பிடித்துச் சென்று கொன்றார்கள் இராப்போழுதினிலே ராக்கெட் விட்டுக் கொன்றார்கள் அமாவாசையில் அடித்து அடித்துக் கொன்றார்கள் பௌர்ணமியில் பட்டினி இட்டுக் கொன்றார்கள் கரிகாலத்திலே கற்பழித்துக் கொன்றார்கள் சுபயோகத்திலே சிரமறுத்துக…

  12. சிங்கள நண்பா! உங்களுக்காக அழுவதற்கு நான் தயார்! ஆனால் என்னிடம் கண்ணீர் இல்லை! உன்னைக்காப்பாற்ற என் கைகளை நீட்டியிருப்பேன்! உன்னைக்காப்பாற்ற ஓடி வந்திருப்பேன்! முடியவில்லை என்னால்; காரணம் இதே போல ஒரு மாதத்தில்த்தான் அவற்றை நீ வெட்டிவிட்டாயே! நீ மறந்திருப்பாய். என்னால் மறக்கமுடியவில்லை. காரணம் என்னால் நடக்கமுடியவில்லை! நினைவிருக்கிறதா உனக்கு.. நீ மறந்திருப்பாய். நீ கொலைவெறியோடு விரட்டும் போது; ஒரு கையில் குழந்தையும் இன்னொரு கையில் நாய்க்குட்டியுமாகத்தான் ஓடினோம். நாய்க்குட்டிக்கு அழுத நாங்கள் உனக்காய் அழமாட்டமா? ஆனால்; மன்னித்துவிடு சகோதரா... இப்போது எங்களிடம் கண்ணீர் கைவசமில்லை! நீ தண்ணீரில் தான் தத்தழிக்கிறாய் நாங்கள…

  13. அடியே பெண்டாட்டி நீதான் என் உலகமடி வாடி பெண்டாட்டி நீதான் செல்லக்குட்டி நீ போனா போகும் என் உசிரும் சேர்ந்து உன்னைவிட்டா எனக்கு யார் இருக்கா சொல்லு (அடியே பெண்டாட்டி நீதான் ...) கண்ணை கட்டி நடந்தா பாதையை காட்டு பாதை மாறி போனா செல்லமா குட்டு உன்னை மட்டும் தானே நெஞ்சு மேல வைச்சு தூங்கவேணும் நானே பிள்ளை போல கொஞ்சு. (அடியே பெண்டாட்டி நீதான்.... ) சத்தியமா நீதான் சாகும் வரை எனக்கு மொத்தமா என்னை தந்துவிட்டேன் உனக்கு கண்ணுக்குள்ள நுழைஞ்சு காலம் வரை உறங்கு சாகும் வரை என்னை மடியில தாங்கு (அடியே பெண்டாட்டி நீதான் .....) சின்ன சின்ன கோபம் செல்ல செல்ல சண்டை போட வேணும் நாளும் என்கூட நீயும் ஊட்டி விடு சோறு உனக்கே என் உயிரு வாழ்கையில பாதி உங்கிட்ட தானே என் உசிரே போகும் உன…

  14. மீட்டுத் தருமா??? இந்திய மண்ணின் மானத்தைக் காக்க கார்கிலுக்குப் புறப்பட்டான் காவிரியாற்றுத் தஞ்சை மண் வீரன் தடுத்தான் அவனது தம்பி இனமான இளவேள் அண்ணா! நீ புரியும் போர் மீட்டுத் தருமா நம் தமிழர் இழந்த தேவிகுளம், பீர்மேடு, வேங்கட மலை, கோலார் தங்கவயல் கச்ச தீவு போன்றவற்றை ஏன் நம்மின மக்களின் காவிரியாற்று நீரையாவது சிந்திக்கத் தொடங்கினான் கார்கில் வீரன். - இளங்கோ (பிரித்தானியா) வாளை எடுக்கட்டும் கரங்கள்! பாலுக்கு பாலகன் வேண்டி அழுதான் கல்லுக்கு பாலூற்றி தமிழன் தொழுதான் வேலுக்கு முருகன் எம் இனத்தின் தந்தை புல்லுக்கு தம்பியாய் செய்தான் நிந்தை தமிழன் ந…

  15. வெளிநாட்டில் தமிழனுக்கு தமிழில் பேச வெக்கம் நாகரீகம் முத்திப்போய் நடை உடையிலை மாற்றம் பிள்ளைகளின் பெயரைக்கேட்டால் தமிழனோ எனத் தடுமாற்றம் தமிழ் இனத்தின் தலை எழுத்தில் இப்படி ஏன் மாற்றம் இன்னும் இரண்டு தலைமுறையில் இவனின் நிலை இங்கு சோகம் அரசாங்க இலவசப்பணத்தில் ஆடம்பர ஆட்டம் அதை எடுத்து சிலதுகள் இங்கு சூது ஆட்டம் அகதியாகி வந்தும் இங்கே சண்டியர் கூட்டம் கோவில்களில் சிலதுகள் நர பலியாட்டம் காசுக்காக குடும்பம் பிரிந்து இருப்பது இது என்ன கோலம் பிள்ளைகள் வாழ்க்கை பாழகப் போவதுதான் மிச்சம் ஊரில சுவாமிக்கு பந்தம் பிடித்தவன் …

  16. வெண்புறா பனியும் என்னிடம் கடன்கேட்கும். - பஞ்சு முகிலும் என்னிடம் கடன்வாங்கும். கனிவும் என்னிடம் மண்டியிடும். - எக் கருமமும் என்னிடம் சிரம் தாழ்த்தும். உயர்திணை, அஃறிணை பிரித்தெடுத்தால் அஃறிணை எந்தன் ஆதாரம். உயிரே இல்லாச் சடமல்ல - நான் உரைக்கும் கதையைக் கேள் மெல்ல! காவியத்தூது போனதுண்டு. கலங்கரை விளக்கு ஆனதுண்டு. சோவியத் வானில் பறந்ததுண்டு. சொர்க்க வாசலைத் திறந்ததுண்டு. வானிடை உலவும் மதியழைத்து - மந்த மாருத இழையில் ஏணை கட்டி மானுடப் பிறப்பைத் தாலாட்டி மகிழ்ச்சி தந்திடக் காத்திருந்தேன். இன்று..... அமைதிக்கு என்னைத் தேர்ந்தெடுத்தார். அன்புச் சின்னமாய் ஆக்கி வைத்தார். அகிம்சை காக்கும் அரியணையில் அடிமைப்படுத்திப் …

  17. வரியில்லா மொழி ஒலியில்லா பேசும் அவள் கண்கள் ********* ****** படபடக்கும் பட்டாம் பூச்சியின் இறக்கைகள் பார் அங்கே அவள் இமைகளில் ********************** ஏன் இத்தனை மொழிகள் இந்த உலகத்தில் அவள் கண்களால் பேசும் இந்த மெளன மொழியே போதும் *********************************** என் பெயரின் இனிமை எனக்குப் புரிந்தது நீ... என் பெயர் சொல்லி அழைத்த போது.. ***************** வான் மதியே தேய்ந்ததுவோ உன் மதிமுகம் கண்டதாலா? ************* கவிதைகள் என்றார்கள் உன் பெயரை நான் கிறுக்கியபோது **************** வரி -என்பது எழுத்துருவைக்குறிக்கும்

  18. Started by nunavilan,

    பூக்கள் எப்படி அது நடக்கப் போயிற்று ஒரு மாதத்திற்கு முன்வரை எங்களுக்குள்ளே உறவு முறை சுமுகமாய் இருந்தது ஒன்று சேர்ந்து அருகருகே உட்காரும் குருவிகளாய் ஒருவொருக்கொருவர் மிகவும் பணிந்து போய் ரொம்பவும் நேசத்துடனே இப்போது நினைக்கவே என்னவோபோல இருக்கிறது இருவருக்குமுள்ள தூரம் நீண்டு போய் பார்த்துக்கொள்ளவே மனசைக் கொண்டு வர முடிவதில்லை அப்படியே பார்த்துக் கொண்டாலும் பேசுவதற்கு ஒன்றுமேயில்லாமல் வேற்று மனிதர்களாய் முகங்கள் குரங்குகளாய் மாற அடையாளங்கள் மறந்துபோக கோபம் மட்டும் இந்த சமயத்தில் வரவே கூடாது கோபம் பழைய கணக்குகளைப் போடும் போன மாதம் நான் என்ன பேசினேன் அதற்கு முன்மாதம் அங்கே என்ன நடந்தது குழப்பம் அதிகமாகிக் கதவு தானே மூடிக்கொள்ளும் …

    • 4 replies
    • 1.3k views
  19. கையில்லதவனும் கால் இல்லாதவனும் கண் இல்லாதவனும் சாதிக்கிறான் எல்லாம் இருப்பவன் காதல் தோல்வி என்ற பெயரை சொல்லி சாகிறான் சாவதற்க்கு ஒரு நொடி யோசித்தால் போதும் சாதிப்பதற்க்கு பல நொடி யோசிக்க வேண்டும் நீ சாகப்பிறக்கவில்லை சாதிக்க பிறந்திருக்கிறாய் சாதித்து காட்டு...

    • 2 replies
    • 1.2k views
  20. கிளைகளை வெட்டி விட்டேன் பக்கத்துவீட்டுக்காரன் ஒரே சத்தம் காணியை கடத்து கொப்பு வருவதாக மீண்டும் மீண்டும் துளிர்த்து அத்திசையே போகிறது கொஞ்சம் யோசிச்சேன் மரம் இருந்தால் தானே மாதம் மாதம் வெட்டும் வேலை நச்சரிப்பு தாங்கும் எண்ணம் இல்லை இனி ஆதலால் மரத்தை அறுத்து விட்டேன் அட ஆறுதலா அமரும் இடம் எந்த போக்கத பயல் வெட்டியது பக்கத்துக்கு வீட்டு கிழவி இது ஒம்மென ஆச்சி என்றால் பேத்தி எதிரில் வந்த வேலிக்காரன் ஏன் மரத்தை வெட்டினியல் என்றான் இருக்கும் போது என்னை நீ இருக்க விட்டியா இப்ப சோகம் வேர் இருக்கு மீண்டும் துளிர்க்கும் கிளை என் பக்கம் வரட்டும் பிள்ளைக்கு ஊச்சல் கட்டனும் இது அவன் சேர்த்து இருத்து கதை பேசலாம் இனி இது நான் .

  21. களத்தில் ஓர் காதல்..... கவிதை.... என் அன்புக் கண்ணனுக்கு உன் ஆசை மலர் எழுதும் மடலிது.... எனக்கான உந்தன் காதல் பரிசும் கிடைத்தது கார்த்திகை பூவும் கிடைத்தது..... கார்த்திகைப் பூவின் நிறங்களிலே எங்கள் ஈழத்தின் புலிக்கொடி பறக்கக் கண்டேன்..... எக்கணமும் அந்தப் பூ என் சொந்தம் ஆகலாமென்ற உன் உள்மனது சொல்லும் சேதியும் அறிந்தேன்.... நீ கொடுத்த; வெற்றுத் தோட்டா எண்ணிக்கையில் நீ வீழ்த்திய எதிரியின் என்ணிக்கையும் கண்டேன்... இதுதான்..! இந்த வீரத்தின் பாய்ச்சல்தானே எனை உன்பால் ஈர்ப்படைய வைத்தது காதலின் மரபு நீங்கி கார்திகைப் பூவில் காதலைச் சொன்னாய்.... எங்கள் காதல் மலர்ந்து சில நாளில் கதை…

  22. தொழிலாளர் தினம் பாரிலுள்ள தொழிலாளர் பர்ர்த்திருந்த மே ஒன்று ஊரெங்கும் உன்னதமாய் உருவெடுக்கும் ஊர்வலங்கள் தினக்கூலி ஊழியரும் ஆர்ப்பரிக்கும் மேதினத்தில் மனக்கெழிர்ச்சி பொங்கியங்கே முழக்கமிடும் நாளின்று அலுவலகத் தொழிலாளர் ஆலை நிறுவனங்கள் கல்லுடைப்போர் மற்றும் கட்டிட வல்லுனர்கள் உழவுசெய்து உணவளிக்கும் உத்தமத் தொழிலாளி வழக்கம் போல் விதைகளைத் தூவிநிற்க இன்று மூழ்கிநிற்கும் இயற்கையின் வருகையிலே நன்றேயுழைத் தால்தான் உணவில்லா நிலைமாறும் அன்னாளே பொன்னாளாய் ஆறுகின்ற வார்த்தையொடு உழைப்பவரின் வியர்வையிங்கே உலருமுன்னே ஊதியங்கள் அழைத்தங்கே அளித்திடல் வேண்டுமென ஆன்றோர்கள் அன்போடு அறவார்த்தை அனைவர்க்கும் பொதுவாக உன்னத கருத்துக்கள் உவந்தார்கள் அந்நாளில் உ…

  23. ஏய்.. பயங்கர வாத சமூகமே என் மீது காரி உமிழ்வாய் என் கருவருப்பாய் என்னினம் பங்கமுற்று அழிய கொல்லி ஈட்டுவாய் நான் எள்ளி நகைக்கவா????? ஏனென்று கேட்டால் என்னை தீவிரவாதி என்கிறாய்; நீ சுட்டுப் பொசுக்குவாய் புதைகுழிக்குள் உயிரோடு புதைப்பாய் மலை போல் என் மனிதர்களை கொட்டி எரிப்பாய் வெறி வந்தால் வீடேறி கற்பழிப்பாய் என் தேச விடுதலைக்கென போராடும் இதயங்களை வெளியே எடுத்து - நீ தானே.. நீ தானே… என கண்டம் துண்டமாய் வெட்டி வெட்டி அடுப்பு விறகிற்கு மத்தியிலேயிட்டு வெற்றி வெற்றி என கர்ஜிப்பாய்……………… நீ போராளி? நான் தீவிர வாதியா?????? பாருங்கள் உலகத்தீரே.. எங்களின் கண்களிலென்ன கண்ணீரா வடிகிறது அப்படி வேடிக்கை பார்கிறீர்களே, ரத்தம் உலகத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.