கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
இப்ப தான் ஏடு தொடங்குறேன்...பிழைகளை மன்னித்து பொருத்தருளவும். நன்றி இனிப்பும் கசப்புமாய் என் காதல் காதலுக்கு பல எதிரிகள் இங்குண்டு மற்றவர்களுக்கு? ஏனோ எனக்கு என் காதலே எதிரியாய் போனதேன்? அன்பாய் தான் இருக்கிறான் அழகாய் தான் எனை ரசிக்கிறான் நிறைவாய் தான் தருகிறான் நிறைமதியாய் எனை தாங்குறான் இருந்தும் எனக்கேனோ நிம்மதியாய் ஒருநாளும் உறங்கமுடியவில்லை.. என்னவனின் அன்பு முகம் இதுவெனில் அவன் அடுத்த முகம்... நண்பர்கள் உனக்கெதுக்கு வேண்டாம் என விட்டுவிட்டேன் நானிருக்க சுற்றம் ஏன் அதை கூட விட்டு விட்டேன் படிப்பெதற்கு, வேலை எதற்கு நான் உன்னை பார்த்துக்கொள்வேன் அவன் மேல் உள்ள அன்பில் அத்தனையும் துறந்துவிட்டேன் கடைசியில் வ…
-
- 60 replies
- 7.6k views
-
-
கடற்கரையில் ஒரு தென்றல்..!! தென்றலுடன் தனிமையில் பேச தனிமையில் நான் கடற்கரை மணலில் தென்றல் என்னை வருடி சென்றது ஆனால் மெளனம் கொண்டது தான் ஏனோ..?? தென்றலின் மெளனம் என்னை மெல்ல கொல்ல. இதமாக தென்றல் என்னை வந்து அணைத்து செல்ல.. ஓசையில்லாமல் வந்த இன்னொருத்தி என் கால்களை முத்தமிட்டு சென்றாள். அந்த சுகத்தில் என்னை நான் மறக்க அவள் தன் முத்தத்தால் என் கால்களை நனைக்க.. என் மனம் தடுமாறி தென்றலை மறந்து தென்றலாக அலை பாய. என் காலில் முத்தமிட்டவள் மெல்ல நகைத்த வண்ணம் செல்ல. அவளுடன் நானும் மெல்ல செல்ல அவளுகுள் ஆதவன் மூழ்குவதை கண்டு என் விழி சிவக்க. அவள் மேனி சிவக்க. மீண்டும் என்னிடம் வந்தவள் என் காலை வாறிவிட்டு…
-
- 21 replies
- 7.6k views
- 1 follower
-
-
தூயவன் அழைப்பு..! யாழினில் ஒரு பகலவன் கலகங்களின் தலை இவன் அரிச்சகர்களின் துணை இவன் அவனே நம் தூயவன் சிறு ஊடல்கள் சில சில பெருஞ்சமர்களோ பலப்பல சினமது மிக வெளிப்பட வெளியேறினான் தனிப்பட வானவரில் நம்பிக்கை மதமது உன் தும்பிக்கை உன் தெய்வம் கணேசனோ கடுப்படித்தவன் சபேசனோ அடிக்கடி நீ வருபவன் அடிக்கு அடி நன்கு தருபவன் கெடுத்தவன் எந்த அரக்கனோ கொடும் நாரதக் கொடுக்கனோ களத்தில் கடுப்பு என்னையா நீ குளத்தில் எறிந்த கல்லையா நீ வருவதெப்போ சொல்லையா உன் மறுபிறப்போ பொன்னையா வருந்திப் பெறவில்லை தடை வெளியேறக் கிடைக்க இல்லை விடை உனக்கு இடம் இருக்கையா உடனிருப்பார் நம்ம தயா…
-
- 50 replies
- 7.5k views
-
-
1)என் இனத்தின் சில மனிதங்கள்..... போராட்டம் வீறு கொண்டு பயணித்த நாட்களில் விடுதலை கனவினை உன் உரிமைக்காக தங்கள் வாழ்வினை அர்பணித்த புலிகள் மேல் நீ துரோகத்தின் காலில் கிடந்தது ஆயிரம் ஆயிரம் இழிநிலை வதை சொற்கள் வீசினாய் என் இனத்தின் சில மனிதங்கள்..... * சிறுவர்களை பிடிபதாகவும் * காணிகளை பறிப்பதாகவும் நடக்காதவற்ரை நடந்ததாக சித்தரித்த என் இனம் ஈழத்திலும் / புலத்திலும் ஆயிரம் ஆயிரம் ஊடகத்துக்கு செல்விகள் வழங்க்கினீர்களே ? ஆனால் இன்று கண் முன்னே வயது வேறுபாடு இன்று பிஞ்சுக் குழந்தை கூட இனவெறியனாலும் சில துரோக காடையர்களாலும் சிதைக்கபட்டு எம் இனதின் ஆணிவேர்களே அறுக்கபட்டும் செல்கிறதே எங்கே உங்களின் வாய்மையின் வீச்சு ?... இன்று எங்கே உங்கள் ஊடக பற்று ! .... புத்த…
-
- 125 replies
- 7.5k views
-
-
நான் கண்டது என்ன கனவா கனவா.. கன்னி அவள் கண்கள் எனைத் தீண்டியது என்ன நனவா நனவா..! பாதைகள் ஆயிரம் இருக்க பக்கம் வந்து முட்டிப் போனது என்ன முட்டுமுட்டு பாடலின் விளைவா விளைவா..! பார்வைகள் பரிமாறி மெளன மொழி பேசியது என்ன நாட்டியமா நாடகமா..! கருங் கூந்தல் பரப்பிய அவள் முதுகு என்ன சந்தனம் பரப்பிய அம்மிக் கல்லா கல்லா என் கண்கள் என்ன அதில் உருளும் அம்மிக் குழவியா குழவியா..! காற்றிலாடும் சுடிதார் என்ன சாமிக்கு வீசும் சாமரமா இந்த ஆசாமி அந்தப் புயலில் சிக்கிச் சிதைந்தது என்ன விதியா சதியா..!! முடிவாய் என்ன கண்களுக்குள் சிக்கி மூளையில் பதிவானது அவள் நினைவா நினைவா அதன் தவிப்பில் இவன் கமராவை நோண்டுவது என்ன தலை விதியா விதியா..! இதன் பெயர்தான் …
-
- 67 replies
- 7.5k views
-
-
அனைவருக்கும் ஒரு சிறு காதல் பாடல் போட்டி. காதலர் தினம் நெருங்கிவிட்டது. இரசிக்கவும், மகிழ்ச்சியாக இருக்கவும் இங்கே "காதல்" என்ற சொல்லில் அல்லது காதலிக்க, காதலுடன் இப்படியான சொற்களில் ஆரம்பிக்கும் சினிமாப்பாடல்களை எழுதுங்கள். ஒருவர் ஒரு பாடலின் வரிகளில் குறைந்தது முதல் வரியையாவது உருப்படியாக எழுதவேண்டும். முழுவதும் எழுதமுடிந்தால் எழுதுங்கள். ஒருவர் ஒருநேரத்தில் ஒரு பாடலை மட்டும்தான் எழுதவேண்டும். அடுத்தவர் வந்து ஒரு பாடலை எழுதியபின்னர் முன்னர் வந்தவர்கள் திரும்பவும் வந்து இன்னொரு பாடலை எழுதலாம். சரி, எங்கே பார்ப்போம்..... நானே ஆரம்பித்துவைக்கிறேன். குறிப்பு:-ஆரம்பத்தை மட்டும் படித்துவிட்டு என்ன ஆசிரியரே! இது உங்கள் சொந்த அனுபவமா? என்று கேட்கவேண்டாம். …
-
- 50 replies
- 7.5k views
-
-
ஈரமாக இருந்த நிலம் .... வறண்டு வருவதுபோல் .... விவசாயியின் மனமும் .... வறண்டு வருகிறது .....!!! கடனை கொடுக்கமுடியாமல் ..... உயிரை கொடுகிறார்கள் .... உலக மயமாக்கலின் ..... ஈர்ப்பு உலக முதலீட்டை .... அதிகரிக்க செய்கிறது ..... உணவளிப்பவனை.... உதறி தள்ளி விடுகிறது .....!!! + கே இனியவன் சமுதாய சிறு கவிதைகள்
-
- 4 replies
- 7.5k views
-
-
உன் ஆதரவாய் நான் இருந்தேன் நீ என் ஆதரவாய் இருந்தாயா?? நம் உறவுக்குள் பல வீழ்ச்சிகள் இருந்தாலும் அதை தாங்கி பிடித்தேன் இருந்தாலும் நமது காதலை தாக்கியது ஒரு சுனாமி அதையும் தாங்கியது என் காதல் ஏன்? நீ என் அருகில் இருந்ததால் வந்த நம்பிக்கை நம் காதலுக்காக எதையும் செய்ய துணிந்தேன் என் துணிவுக்கு தந்தாயடா தண்டனை என்னும் அழகிய பரிசு பாசம் வைப்பது பாவமா??? என் காதல் தப்பாகி போனதோ?? ஏன், இந்த வேசமடா?? உண்மைப் பாசத்துக்கு இந்த உலகில் கண்ணீர் தான் பரிசா????
-
- 59 replies
- 7.5k views
-
-
பால்ராஜ் அமரனுக்கு வ.ஐ.ச.ஜெயபாலன் அமரா நீ மீட்ட ஆனையிறவில் சுடப் பட்ட செங்கால் நாரைகள் போல் வன்னியெங்கும் தாயின் மணிக்கொடிகள் பதிகின்றனவே. என் கவிதையிலே நீ இருக்க ஈழம் கதறியழும் நியாய மென்ன. நீயோ முடங்கிய காலில் மூண்டெரிந்த விடுதலைத் தீ. தீவெட்டியாய் உன்னைச் சுமந்து சென்ற தோழருக்கு 'இத்தாவில்' பகையிருட்டில் வெற்றியின் பாதை விளங்க வைத்த மாவீரா. உன்னை எழுதாமல் இந்தத் தமிழ் எதற்கு. களம் களமாய்த் தோழர் உன்னைச் சுமந்ததுபோல் காலங்கள் ஊடே என் கவிதை இனிச் சுமக்கட்டும் அவனை ஆழப் புதைக்காதீர் ஆலயங்கள் கட்டாதீர். நாளை மணலாற்றை மீட்டு வாழ திரும்புகையில் நம் சனங்கள் மசிரை விட்டுதுகள் தம் மனம் நிறைந்த நாயகனை. …
-
- 26 replies
- 7.5k views
-
-
நான் நடந்த திசைகளின் பாதைகளில்... துணையில்லாத.... என் தனித்த பயணங்கள்! கண்ணுக்கெட்டிய தூரம்வரை... வெறுமை மட்டுமே, என்னை வரவேற்கத் தயாராய் இருந்தது!! தோல்விகளை மட்டுமே பரிசாகக் கொடுத்துவிட்டுச் சென்ற காலங்கள்கூட... என்நிலை பார்த்துக் கலங்கியிருக்கும்! கலங்கிய கண்களுடன் உறங்கிய என் விழிகளுக்கு... கடினமான அதிகாலைகள்தான் இன்னொரு பொழுதினையும்... உயிருடன் பார்க்க வாய்ப்பளித்துப் போயின!! சுட்டெரிக்கும் வெயிலின் தகிப்பு தாங்கொணாது, என் நிழலில் அமர முயன்று... தோற்றுப்போனேன்! கொதிக்கும் சூழலில் வெந்துபோனது... என் பிஞ்சு மனமுந்தான்! என் உடலினை... என் கால்களே சுமந்தாலும், மனதின் சுமைகள் காற்தட வழியோரமாய்... கண் வழி நீரூற்றி... ஆறுதல் சொல்லின!! …
-
- 15 replies
- 7.4k views
-
-
வட்ட..... வட்ட .... வெண்ணிலாவே... தொட்டு தொட்டு பேச வாவேன்..! நெட்டநெடு வானதிலே தன்னம் தனியாக நீ என்னை... என்னை சுற்றி வாறாய் இதை நிறுத்தாயா...? உன்னை...... உன்னை.... நித்தமுமே நான்நினைத்து வருந்துகிறேன்.. நிம்மதியாய்... நித்தியமாய் இரண்டு வார்த்தை கொஞ்சி... கொஞ்சி ....பேசிடலாம் கீழ் இறங்கி வராயோ..? நீல நீள வானத்திலே நீ வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி..... அதைக் காணும் போது உனைக் கட்டியணைச்சு முத்தமிட ஆசை ஆனால் ....முடியவில்லை..என்னால்.. கதிரவன்... கண்ணுறங்கும்நேரத்தில்... நீ என் வீட்டுக்கு விளக்கேற்ற வாறாயே.... எப்படித் தான் நன்றி சொல்வேன்.. நான் உனக்கு... மல்லிகை மொட்டவிழும் மாலை நேர…
-
- 24 replies
- 7.4k views
-
-
தொட்டுவிட்டவள் தொற்றிவிட்டவள் என்றிரண்டு பொண்டாட்டிங்க எனக்கு..! எங்களுக்க விவாகமுமில்ல விவாகரத்துமில்ல சண்டையுமில்ல சச்சரவுமில்ல கூவத் தெரிந்த நான் கூனியதுமில்ல.. கொண்டை வைச்ச நான் தலை சாய்த்ததுமில்ல..! இவ்வளவைய கட்டிமேய்க்கிறேன் கனகாலமாய்..! நானும் இரண்டு பொண்டாட்டிக்காரன் தான். Spoiler (இப்படிக்கு வெள்ளைக் கோழி.. சிவப்புக்கோழிகளின் கணவன் செஞ்சேவல்) படம்:முகநூல்
-
- 51 replies
- 7.4k views
-
-
முத்தேவியரின் புகழ் பாடிடும் இனிய இரவு முத்தமிழ் இன்பத்தில் மூழ்கித்திளை மனது மெய் ஒன்று உளதென ஆன்மா உணரும்; மெய்யன்போடு வையத்தை வாழ்த்தி மகிழும். ********* வண்ண நறுமலர்கள் கண்கவர் அலங்காரம் எண்ணெய் தீபம் காண் உள்ளமும் பிரகாசம். பண்ணுடன் இசை வாணி புகழ் கேள் மனம் மண்ணிலே ஓர் சொர்க்கத்தை உணரும். ********* சங்கீத சுரங்கள் செவி தனைச் சேர்ந்திட சிந்தையில் உதித்திடும் அழகுக் கோலமும், அசைவிலா வண்ணச் சித்திரம், சிற்பம் மனதை அசைவுறும் வண்ணம் செய்திடும் விந்தையும், அழகுறு மங்கையர் அபிநய நடனம் காண் ஆன்மா செய் நடனத்தின் அற்புத உணர்வும் கலைமகள் உந்தன் இருப்பினை உணர்த்திடும் ; கலைத்தாய் உன்னைப் போற்றிடும் என்னுள்ளம்! ********* ப…
-
- 2 replies
- 7.4k views
-
-
பாட்டி வீட்டுப் பழம் பானை பாட்டியின் வீட்டுப் பழம்பானையடா அந்தப் பானை ஒரு புறம் ஓட்டையடா ஓட்டைவழி ஒரு சுண்டெலியும் அதன் உள்ளே புகுந்து நெல் தின்றதடா உள்ளே புகுந்து நெல் தின்று தின்று வயிறு ஊதிப் புடைத்துப் பருத்தடா மெள்ள வெளியில் வருவதற்கும் ஓட்டை மெத்தச் சிறிதாக்கிப் போச்சுதடா பானையைக் காலை திறந்தவுடன் அந்தப் பாட்டியின் பக்கமாய் வந்த ஒரு பூனை எலியினைக் கண்டதடா அதை அப்படியே கௌவிச் சென்றதடா கள்ள வழியில் செல்பவரை எமன் காலடி பற்றித் தொடர்வானடா! நல்ல வழியில் செல்பவர்க்கு தெய்வம் நாளும் துணையாக நிற்குமடா! படித்ததில் பிடித்தது குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
-
- 9 replies
- 7.4k views
-
-
வவுனியா முகாமிலிருந்து ஒரு சனநாயக தமிழ்கட்சி ஒன்றிடம் பெருந்தொகை பணம் கொடுத்து வெளியே எடுத்து தற்சமயம் இந்தியவில் வந்து தங்கியிருக்கும் போராளியாகவிருந்த எனது சகோதரியிடம் தொலை பேசியில் கதைத்தபின்னர் எழுதியது.. வளைய முட்கம்பிகள் வற்றியொடுங்கிய உடலும் முகமும் வயதையும் வடிவையும் வைத்து விடிய விடிய நடக்கும் விசேட விசாரணைகள் நாளைய பொழுதாவது நன்றாய் விடியாதாவென நாட்களை எண்ணி புரளும் நள்ளிரவென்றில் மப்படித்த சிப்பாயின் கைகள் என்னை தட்டியிழத்துப்போகும் கைத்துவக்கின் அடி கவட்டுத்துவக்கின் இடி கசக்கப்படும் முலைகளில் கடி அடி...இடி...கடி.. அடுத்தடுத்து விசாரித்தில் அடிவயிற்றில்வலி மெல்லப்பெய்த மழையில் மகிழமரத்தில் …
-
- 60 replies
- 7.4k views
-
-
பேராவலுடன் பெய்யும் பெருமழையாய் எனக்குள் இறங்கிச் செல்கின்றாள் என்னுயிர்த் தோழி என் வரண்ட காடுகளுக்கிடையே பாய்ந்து செல்லும் பெரும் ஆறாய் பெரும் தீயுக்குள் இறங்கிச் செல்லும் பனிக்காற்றாய் மனவெளிகளில் புரண்டு எழும் கடலலைகளாய் எப்பவும் எனக்குள் வியாபித்த பெரும் பொருளாய் நீக்கமற நிற்கின்றாள் என் தோழி ஆயிரம் முத்தங்களை பதியும் இரு இதழ்களில் கோடி கணங்களை உறையவிடும் தந்திரக்காரி மார்புகளின் இடையே என்னை சோழிகளாய் சுழட்டி எறிந்து வித்தைகாட்டும் சாகசக்காரி தன் வாசல்கதவுகளால் வாரிச் சுருட்டி தனக்குள் பொதித்து இன்னும் இன்னும் என என்னை தனக்குள் பருகிக் களிக்கும் பேராசைக்காரி ஆற்றாத் துயர் மேவி நான் எனைத் தொலைந்த கணங்களில் எல்லாம் ஆயிரம் விரல்கள்…
-
- 16 replies
- 7.3k views
-
-
தந்து விடு.....!!! (01) என்னவனே என்னவனே என்னருகில் வந்து விடு.... உன் உள்ளமதில் குந்திவிட எனக்கு இடம் தந்து விடு.... உந்தன் கொஞ்சு மொழி வார்த்தை எல்லாம் கொட்டி வந்து தந்து விடு.... நான் கண்ணு மூடி உறங்கி விட கண்ணாளனே தந்து விடு.....!!! விட்டு விடு.....!!! (02) மங்கையவள் கவிதைகளை மணமில்லை என்றவனே..... அவள் சொர்ப்பணத்து வரிகளையே சொர்கம் இல்லை என்றவனே.... கிணத்து தவளை என்றவரை கிண்டலடிக்க வந்தவரே.... உந்தனுக்கு கவி தெரிந்தால் வந்துயிங்கு பாடி விடு... பெண்ணவளை கிண்டலடிக்கும் வேலைதனை விட்டு விடு....!!! இறந்து விடுகிறேன்....!!! (03) உன் இ…
-
- 78 replies
- 7.3k views
-
-
மகசீன் சிறையிலிருந்து பளையூரான் என்ற கைதி எழுதிய உணர்வுகள் இவை. யாழ் வாசகர்களுக்காகத் தருகிறேன். நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க அரக்கன் பிடியில் அகப்படாத நாளில் அரைகுறை வயிறுதான் - ஆயினும் அழியவில்லை எங்கள் அழியாச் சின்னங்கள் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... வளம் கொழிக்கும் வன்னி மண்ணின் வாசல் வரை வந்தான் அன்று வாசமின்றி வாடுகின்றோம் நாமின்று நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... கடைசிவரை கலங்காத மக்கள் - தம் கச்சையும் இழந்து இன்று கயவன் பிடியில் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... பூசிக்க வேண்டியவர்களைப் பூவின்றிப் புதைத்தோம் பார் போற்றியவரை பாதையில் கைவிட்டோம் நெஞ்சு வெடிக்குது கவிதை வடிக்க... அழிந்து போன ஆத்மாக்களை அடக்…
-
- 36 replies
- 7.2k views
-
-
மயங்கொலிச் சொற்கள் என்பன தமிழில் கிட்டத்தட்ட ஒரே வடிவிலான எழுத்துருக்களை கொண்டவைகளாகவும், முற்றிலும் வேறுபட்ட பொருள் கொண்டவைகளாகவும் காணப்படும். இவ்வாறான சொற்கள் ஒலிப்பின் போது நுண்ணிய வேறுபாடுகளை மட்டுமே கொண்டிருப்பதால் எது சரி, எது தவறு என மயங்க வைப்பவைகளாக இருக்கும். அதனாலேயே இவற்றை மயங்கொலிச் சொற்கள் என்றழைக்கப்படுகின்றன. நாம் அதிகமாக இந்த எழுத்துக்களில் தவறு செய்கிறோம். அவற்றை பற்றி ஒரு அறிதலை ஏற்படுத்தவே இந்தப் பதிவு. கவிதை எழுதுபவர்கள் இதனை கவனத்தில் கொண்டால் கவிதை இன்னும் சிறப்பாக இருக்கும். என்னுடைய ஒரு சிறிய முயற்சி தான் இந்தக் மயங்கோகொலி சொல் விளையாட்டு. கவிதை எனக் கொண்டாலும் சிறப்புதான் குழவியுடன் குலவியிருக்கும்போது குளவியோன்று கடியிலிருந்து கடிதாக வ…
-
- 11 replies
- 7.2k views
-
-
http://youtu.be/Gj3Fs8IQscE எங்களுக்கும் ஆயிரம் ஆசைகள் உண்டு.. அதில் கட்டுநாயக்கா போய் கடல் கடந்து அந்நியப்பட்டு அந்நிய தேசத்தில் கடவுச்சீட்டொன்றில் வதிவிடம் வாங்கி களித்துப் பின் கலியாணம் கட்டி இசைஞானியின் காதல் இசையில் கருத்தால் மயங்கி கலவி செய்து கலந்திப்பதும் ஒன்று...! ஆனாலும் கால்கள் நகர மறுத்தன. காலம் தடுத்து நிறுத்தின. அன்னை தேசம் அடிமை விலங்கு தாங்கி அழுது புலம்பும் நிலை அனுதினமும் அமைதி குலைத்தது...! கழுத்தில் நஞ்சு கட்டி களமதில் கருவி ஏவி சாவு பல கண்டோம் ஏன்..... கார்த்திகை 27 இல் எமக்கு ஓர் நாள் கழிப்பு கழிப்பீர் என்றோ..???! கல்லறைகள் வரிசையாய் அடிக்கி நிற்கும் கோலம்.. எம்…
-
- 109 replies
- 7.2k views
-
-
திருமணவாழ்த்து, அரங்கேற்ற விழா வாழ்த்து எங்காவது தமிழில் வாழத்து மடலாக எடுக்க முடியுமா? யாழ் இணைய கவிஞர்களே தமிழில் பொதுவான திருமணவாழ்த்துப்பா எழுதி இணையுங்களேன் இணைப்பவர்களுக்கு நன்றி.
-
- 3 replies
- 7.2k views
-
-
ஆள் ஆரவாரமற்று கிடக்கிறது வேப்பங்கிளையில் தூளி.., ஒன்றுகூட பசியாற்றா பாவத்தில் கிளைநிரப்பிய கொய்யா.., யாரினிதென்று இரைந்தபடி கிடக்கின்றன யாழும் குழலும்.., விண்ணவரும் கண்ணுறங்கி விட்டனர் இன்னும் முடிக்கவில்லையொரு கதைசொல்லி.., புள்ளதாச்சி குழிகளின் சாபம் முத்துக்களை உதிர்த்தபடி பல்லாங்குழி.., மழைநீரால் ஒளிந்து கொள்ளும் பழைய கொள்ளைபுற நீர்த்தொட்டி.., சிலேட்டு பலப்பத்தில் உயிர்த்தெழ வரிசையில் நிற்கின்றன அ,இ,ஆ,உ.., விடுப்பு கடிதமெழுதி அனுப்புநர் முகவரி தொலைத்த விடுமுறைகாலம்.., மழைநீரை வெறித்தபடி கவலைகளில் மிதக்கின்றன சில காகிதங்கள்.., புதுவர்ண பூச்சு அலங்கோலம் தூரிகை மாயம் சுவற்றில்.., மதிப்பிழந்த சில்லறை காசுகள் அறைகளில் அங்கொன்றும் இங்கொன்றும்.…
-
- 54 replies
- 7.2k views
-
-
Vagina அது ஒன்றும் Diana தங்கையல்ல..! கருப்பைக் குகையின் சுரங்கப் பாதை..! மள மளவென மொழுகிவிட்ட கணக்காய் மழமழப்புத் தசைகள் ஆள இழையங்கள் இணையப் பெண்ணோடு பிறந்தது..! சுரங்கப் பாதையெங்கும்.. சிற்சில சுரப்பிகள். ஆணின் தூண்டலில் அவை துலங்க ஆறாய் பெருகும் உராய்வு நீக்கி.. ஆணின் நுழைவிற்காய் ஏங்கியபடி..! மாதம் தோறும் கடமை மறவாத சேவகம் கருப்பையில் இருந்து கழிவு வர கால்வாய் வழியாகி கடத்தி வருவதும் அதன் கடன்..! சேதி ஒன்று தெரியுமா.. ஆணின் விறைப்பில் அதற்கும் ஓர் விருப்பம் இறுக அணைத்து இன்பமுற்று வீச்சுக் கூட்டிட ஆட்லறிகள் வீசும் எறிகணைகள் முட்டையை தாக்கும்..! அங்கு இழப்பு என்று ஒன்றுமில்லை இன்பமே என்கின்றார் …
-
- 11 replies
- 7.2k views
-
-
எனது மரணம்: முதலாவது அறிக்கை இப்போதெல்லாம் மரணம் பற்றிய எண்ணங்கள் அடிக்கடி வருகின்றன பல தடவை மரணத்தின் கற்பூர வாசனை (இடையில் சாணி வாசனையும் வரும்) என்னருகே வந்தும் உள்ளது மரணம் நேற்று காபி கடையில் (Starbucks) நான் ஒடு cup காபிக்காக காத்திருக்கையில் என் பக்கம் வந்து அமர்ந்திருந்தது எதுவும் பேசாமல் அதன் கண்ணின் ஓரம் நீர் துளி இருந்தது திடீரென ஒரு Right turn இல் என் car திருப்புகையில் மரணம் என் பக்கத்து seat இல் அமர்ந்திருந்தது என்னை கேள்வி கேட்குமாய் அதன் முகம் இருந்தது பின் அந்த இரவில் சரியாக நடுச் சாமத்தில் மனைவியை தேடி கைகள் போகையில் அருகே மரணம் படுத்திருந்தது இம்முறையும் ஒற்றை வார்த்தையும்…
-
- 36 replies
- 7.1k views
-
-