கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
யாழவளே உனக்கு வயது பதினேளா ?? அதனால் தான் நீ அழகுடை மகளாகி அற்புதங்கள் கொண்டு ஆண்களையும் பெண்களையும் ஆவலொடு உன்பின்னே அலைய வைக்கின்றையோ ?? தேன்மதுரத் தமிழில் தெவிட்டாது தினமும் தெம்மாங்கு பாடி நீ தீந்தமிழில் திசையெங்கும் தமிழ் பரப்பி நிற்கின்றையோ?? வைகறையில் எழுந்தவுடன் உன் வாசல் வரை வந்து உன்முகம் கண்டபின் தான் ஊர் காணப் போகின்றார் உலை வைக்க முன்னரும் உன்னைத்தான் பார்க்கின்றார் உன்மத்தம் கொண்ட உறவுகளாய் உன் தமிழர் எத்தனை வேலைகளை எளிதாகச் செய்தாலும் ஏக்கத்துடன் உன்னை எண்ணியே செய்திடுவர் எப்போ மாலை வரும் என்று உன்னைப் பார்ப்பதற்காய் உற்ற துணையாக உன்னைத் தான் நினைத்து உறவாட வேண்டுமென உணர்வாய் ஏங்கிடுவர் மனைவியின் மந்திரங்கள் உள்ளத்தில் ஓதாது…
-
- 7 replies
- 871 views
-
-
நேற்றைய மாலைப் பொழுதில் என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. . வசந்தகாலத்தின் வரவுக்கண்டு மரங்கள் குருத்தெறிந்து மொட்டுவிட்டுக் கருத்தரிக்க கொட்டும் மழையில் தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து அம்மணமாக நின்றன. வீதியில் தொடை தெரிய நடைப் பயணம் போனாள் ஒரு யுவதி. தெருமுனைப் பூங்காவில் குதூகலத்தில் சில சிறுவர். கடிகாரச் சிறு முள்ளின் ஒரு வட்டச் சுற்றுக்குள் பெரு மாற்றம் வெண்பனிப் போர்வைக்குள் உடல் புதைத்து பதுங்கிக் கொண்டது பசுந்தரை ஒளியும் இருளும் கலந்த எங்கள் நெடுஞ்சாலை தொடர்ந்து பொழியும் வெண்பனியில் கருஞ…
-
- 7 replies
- 1.2k views
-
-
நினவுகளில்... என் அன்பே ஏனோ நான் இன்னமும் உன் நினைவுடனே நீ தான் சொல்லி விட்டாயே நாம் இனிமேல் நண்பர்கள் என்று என்னால் ஏனோ இதனை ஜீரணிக்க முடியவில்லை என்ன நான் செய்வேன் உந்தனை மறக்க நீயே எனக்கு ஏதும் வழி சொல் உன்னில் நான் நிஜமான உள்ளம் இழந்தேன்...இதை நான் திருப்பி பெற்றுகொள்ள விரும்பவில்லை நீயோ எடுத்து செல் என்று கூறி பல காலம் ஆகி விட்டது முடியாது அன்பே என்னால் அது என்றுமே முடியாது அன்பே எப்படி நான் வாழ்வேன் உந்தன் அன்பு அது என்னில் இல்லை என்றால் பதில் ஏதும் கூறு அன்பே என்னவனாய் நீ வர மாட்டாயா...???
-
- 7 replies
- 1.2k views
-
-
லண்டனில் ஒரு மாமி மாமியைப் போல புருஷன் பாவம் இவோ புருஷன் பயந்த சுபாபக்காரன் மாமி ஒருக்கா பார்த்தால் மனுஷன் பயந்து போவேர் இரண்டு பேரும் சேர்ந்து காசு காசாய் உழைத்து இன்னும் போதாது என்று இரவு பகல் வேலை வட்டிக்கு எல்லாம் கொடுத்து குட்டி போடுது காசு காசு மட்டும் மாமிக்கு கடவுள் போல காணும் சீட்டு கீட்டு என்று சேர்த்து வைச்சு காசை போட்டு போட்டு பாங்கிலா காட்ட மாட்டா வெளியில மாளிகை போல் வீடு மனது மட்டும் சிறிது யாரும் உதவி கேட்டால் வாரும் பிறகு பார்ப்பம் என்று நைசா மாமி நழுவிப் போடுவா வெறும் கசவார மாமி கை இறுக்கம் பாரும் காசை வச்சு மாமி என்ன செய்யப் போறா கட்டிக் கொண்டா போவா. பா .உதயன்
-
- 7 replies
- 1.8k views
-
-
"வெற்றிக்கனி" எட்டுத்திக்கும் முட்டட்டுமே பகை!! உடைத்தே எறிவோம் எம் கைவிலங்கை! அடிமையாய் வாழ்வது ஈனம்! வீரம் தமிழரின் மானம்!. எட்டடா! எட்டு வெற்றிக்கனி!- பகை ஓட்டி வெல்வோம்! நாங்கள் புலி! கட்டுண்டு கிடப்பதோ இன்னும்?! எழுந்துவிட்டால் எம்கொடி விண்ணில்! ஈழம் எங்கள் உடமை தமிழா காப்பது நம் கடமை! உரிமை மறுக்கும் சிங்களத்தின் வேரை அறுத்தே நாட்டு உந்தன் பேரை! 'விதி வசம் என்பதை விட்டு! தடை உடைத்தே புறப்படு இது நம்நாடு! எரிமலையாய் இருடா! தமிழா! இருட்டினை விரட்டத் தீயாய் எழடா!.
-
- 7 replies
- 1.9k views
-
-
கடவுளே அங்கே இருந்து இங்கே ஓட்டுபவர்களையும் தெரியவில்லை. இங்கேயிருந்து அங்கே ஓட்டுபவர்களையும் புரியவில்லை அடுத்த பிறப்பிலாவது ஆறறிவைக் கொடு
-
- 7 replies
- 1.2k views
-
-
தேவனவன் சிலுவையிலே தொங்குகின்றார் திருமகனின் இருபுறமும் திருடர்கள் ! இதயத்தைத் திருடியவர் இயேசு என்பார் இரும்புப் பெட்டியைத் திருடியவர் மற்றோர் ! மன்னனிட்ட கட்டளையில் மாற்றமில்லை .. மனுமகனோ சிலுவையிலே மரணத்தீர்ப்பு திருட்டு என்பதுதான் குற்றச்சாட்டா ? இல்லை திருமகனையே விற்று விட்ட பற்றுச் சீட்டா ? மதுரா. தலைப்பு திருத்தப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 7 replies
- 1.4k views
-
-
இனி!! பதுங்குது பதுங்குது புலி! பாயும் காலம் இனி! தமிழரைக் கொண்ட கலி! இனி பகைவன் மண்ணில் தானே கிலி!. மெளனத்தின் பலத்தை மறந்து தோற்றதாய் எம்மை நினைத்து எங்கள் மண்ணைப்பறித்து! கொண்டாடினீர் வெற்றி களித்து! அண்ணனின் ஆணைக்குப் பணிந்து! வருவோம் பகையே துணிந்து! வருமே காலம் கனிந்து! ஈழம் மலரும் வேளையே எம் விருந்து!. நன்றி..!
-
- 7 replies
- 1.5k views
-
-
[size=4] [size=4]ஆஸ்திரேலியா, கேசி தமிழ் மன்றம் நடத்திய ஆடிப்பிறப்பு நிகழ்வு அன்று “மறந்து போகுமோ?” என்ற கவியரங்கத்தில் “பள்ளிப்பருவம்” பற்றிய எனது படைப்பு. இதில் கவித்துவமோ, நான் பகிர்ந்த விதத்தில் ஒரு அரங்க பாணியோ கிடையாது. ஆனால் அனுபவங்களின் நினைவூட்டல் என்ற வகையில் ஓரளவுக்கு திருப்தியை தந்த படைப்பு. வாசித்து விட்டு சொல்லுங்கள்![/size][/size] [size=4] தமிழுக்குள் என்னை ஆட்கொண்ட எழுத்துக்கு வேந்தர் சுஜாதா எங்கள் கம்பவாரிதி ஜெயராஜ் இருவரையும் மனதார பணிந்து வணங்கி! [/size][size=4] கூழுக்குள் நீந்தியது காணும்! கரையேருங்கள்! எனக்கு புரையேறுகிறது! கவிதைக்கு அவ்வப்போது கரவோசையும் வேணும்!. அவைக்கு அடங்கி ஆரம்பிக்கிறேன் வணக்கம். [/size] …
-
- 7 replies
- 1.1k views
-
-
யார் செய்த சூழ்ச்சி இது? ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா? அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா? யார் செய்த சூழ்ச்சி இது? ஐ. நா சேவகரின் அரியணைத் துரோகமா? அயல்நாட்டு வல்லரசின் ஆணவ குரோதமா? தமிழர் கூட்டத்தின் தறுதலைகள் விரோதமா? தவறிழைத்து விட்டது நோர்வேயின் ஆட்டமா? ஆலமரம் ஒன்று அடிசாய்ந்து போனது பாழும் சேதி காதில் பாதரசம் வார்த்தது. பல்லாயிரம் உயிர் தின்று பெருங்கூட்டு வென்றது. பணிந்த புலி உயிரறுப்பில் பாரதமும் நின்றது நந்திக் கடலோரம் மனித நேயம் நொந்தது. நடேசன் என்ற எங்கள் சாந்த நிலா வெந்தது. வல்லரசுச் சதிகள் எங்கள் வாழ்வள்ளித் தின்றது. வெள்ளரசுப் புதல்வரிடம் வெள்ளைக் கொடி தோற்றது. ஐ.நாவின் அரியணையில் நீதி செத்துப் போனத…
-
- 7 replies
- 1.8k views
-
-
முதல் வசந்தப் பாடல் வ.ஐ.ச.ஜெயபாலன் சுனாமிக்குச் பிந்திய வசந்தத்தில் மீனவ குப்பங்களில். பூத்த மரங்களின் எச்சங்களில் குயில்கள் பாட மாலைசூடிய குழந்தைகள் எசப்பாட்டுப் பாடியதை கண்ணீரூடு பார்த்தது போல இன்றும் கரைந்தபடி.. . மனிதனின் வாழும் ஆசையை எந்தக் கொம்பனாலும் கொம்பியாலும் பறித்து விட முடியாது என்றபடி வருடந் தோறும் கீரோசீமா நாகசாக்கியில் செறிகள் மலர்கிறதுபோல என் மண்ணிலும் முறிந்த வேம்புகள் மலர்கின்றன.. . . இற்றை வசந்த இப்பூந் தென்றலில் சுட்டெரிக்கப் பட்ட எங்கள் சோலைகளின் எச்சங்களில் பிள்ளைகளின் மதளைக் கூவலில் காமுற்று குயில்கள் பாடுகின்றன பாதைகளில் கால் மிதிக்க உயிர் கிழிகிறது. குலதெய்வங்களின் கல்லறைகளை உடைத்து …
-
- 7 replies
- 1.7k views
-
-
பாசறையில் பூத்து கல்லறைகளில் உறங்கும் மாவீரர்களே............ நீங்கள் ஒடுக்கப்பட்ட நம் தமிழினத்திற்காக மண்ணிற்க்குள் புதைக்கப் பட்டு, விதைக்கப் பட்டவர்கள். நீங்கள் மண்ணிற்க்குள் புதைக்கப் படவில்லை நமது தாயகமெனும் கட்டிடத்திற்க்கு உறுதியான அத்திவாரமாக்கப் பட்டவர்கள். மண்ணிற்க்குள் விதைக்கப்பட்ட உங்களின் கனவுகள் எரிமலைகளாக குமுறிக்கொண்டிருக்கின்றன நாளை நிச்சயம் எரிமலைகள் வெடித்துச் சித்றும் அப்போது உங்கள் ஆசைகள் நிறைவேறும் உறங்குங்கள் அமைதியாக அதன்பின்பு
-
- 7 replies
- 1.8k views
-
-
அடிமையாய்ப் போவோமென்று நினைத்தாயா? -இல்லை ஆடிப்போய்...ஆறித்தான் போவோமென்று நினைத்தாயா? இப்படியொரு இனம் வீரமுடன் வாழ்ந்தது - அதில், ஈனப் பிறவிகளாய்ச் சிலவும் இருந்தது என... உலகறியச் சொல்லி உரைத்துவிட்டு, ஊண் உறக்கமின்றி கந்தகவெடிகளில் சிதறி அழிந்ததையும்... எழுதிவைத்துச் செல்லுவோம் !!!!! - இதை, ஏட்டில் படித்தேனும்..... எப்படியேனும்... ஐயமின்றி ஐந்தறிவைத் தாண்டி வந்து - இனிமேலேனும், ஒழுங்காய் நடக்கும் எம் எதிர்காலம்! ஓரமாய் ஒதுங்கிப்போய் ஒழிந்திடுவோம்... என்று நினைத்தாயா? ஒளவை பின் பாரதி சொன்ன "அச்சம் தவிர்" ஆத்திசூடியை இன்னும் (ஃ) ஆயுதமாய் எம்கையில்... தாங்கியபடி ... எம் விடுதலைநோக்கி...... நம் பரம்பரை உன்னைத் தொடரும் - வெல்லும்வரை!!!!!!
-
- 7 replies
- 1.5k views
-
-
அவளை அனுபவிக்கஇ அணு அணுவாய் உள்ளிழுக்கஇ இதழ் குவித்து இன்பம் காணஇ சுற்றம் மறந்து சுகம் காணஇ சற்று நேரம் சொர்கம் செல்லஇ விரல் இடுக்கில்இ இதழ் இடுக்கில் - இறுதியில் இதய அடுக்கில் - இன்பமாய் இடம் மாறிட. வெண்ணிற மேனியில் பொன்னிற கேணியில் மூழ்கி நான் மூச்சிழுக்க... அவளை அழைத்துஇ ஆடை உரித்துஇ வாயில் பொருத்தினேன் - சிகரெட்
-
- 7 replies
- 3.6k views
-
-
[size=5]ஒரு கோப்பை தேநீர்... [/size] மண்புழுவினும் அதிகமாக மண்ணில் நாங்கள் உழன்றதால் எங்கள் சதைப் பிண்டங்கள் நீங்கள் வளர்க்கும் தேயிலைக்கு உரமானது. செழித்து வளர்ந்ததால் சந்தோசமாயிருந்தீர்கள்... அட்டை உறிஞ்சியது போக மிச்சமுள்ள எங்கள் குருதியேறி செம்மண் இன்னும் சிவப்பானது. மண்ணின் நிறமும் அதனால் தேயிலையின் தரமும் சேர்ந்து உயர்ந்ததையெண்ணி கர்வமடைந்தீர்கள்... உடல்சோர்வு நீங்க நீங்கள் பருகும் தேநீர் எங்கள் வியர்வையில் குளித்து வளர்ந்ததால் கொஞ்சம் உவர்ப்பாயிருந்தது. பருகுவது எங்கள் குருதியில் வளர்ந்த வியர்வையாதலால் புதுசுவையென இன்னும் இன்னும் அதிகம் பருகுனீர்கள்... அப்படியே உங்கள் பதிவேட்டில் எங்கள் எல்லோரது ப…
-
- 7 replies
- 1.4k views
-
-
எனது சின்ன இரவொன்றில் வாடிய மலரொன்று.... ஆம்..அவள்..என்னவள்.... எண்ணத்தில் தாங்காது நினைவுகளை-தனது வண்ணத்தில் வாட்டி... கன்னத்தில் வடிக்கின்றாள் ஆம்... அவள் - காத்திருந்து பூத்துப்போன விழிகள்....... ''கலங்காதே..கொஞ்சம் பொறு'' எத்தனை வார்த்தைகள் எத்தனை தரம்..... புளித்துப் போன கதை புதிதாக என்னவுண்டு......? விழித்துப்பார்த்தேன் நனைந்து போன- என் தலையணை...... ஓ.... எனது நெஞ்சிலும் ஈரம் உண்டு........... எனவே.. ''கலங்காதே....கொஞ்சம் பொறு''
-
- 7 replies
- 1.9k views
-
-
நொடிப் பொழுதில் மடியக் குண்டு செய்யும் தொன் கணக்கில் அது கொட்டி.. மடிந்த பின் கட்டுப் போடும்..! மடியக் கொலைக்கருவி தரும் மடிந்த பின் ஒளித்து விட்ட அக்கருவி சாட்சியம் தேடும்..! மடியக் கொலைஞர்கள் ஏவி விடும் மடிந்த பின் ஏவியவர் யாரோ நீர்த்துவிட்ட நீதி தேடச் சொல்லும்...! மடியும் போது ஊடக வாய்கள் மெளனமாகும் மடிந்த பின் கூக்குரல்கள் அனுமதிக்கப்படும்..! மடியக் காரணம் யாரோ மடிந்த பின் மரண விசாரணை அவனிடமே பாடை தரும் ...! மடியும் போது ஒற்றைக் கரணம் மடிந்த பின் ஆயிரம் காரணங்கள் கண்டுபிடிக்கும்..! மடிய முன் பயங்கரவாதின்னு உச்சரிப்பு உச்சக்கட்டம்..! மடிந்த பின் தியாகின்னு உச்சரிப்பு முணு முணுப்பாய் மாறி நிற்கும். மடியும் போது …
-
- 7 replies
- 869 views
-
-
[size=4]காலன் கூடக் கண்ணீர் விட்ட நாள்![/size] [size=4]கனவுகள் தொலைந்து போன நாள்! கரம் தூக்கிய மனிதக் கூடுகளைக்,,. காந்தீயம்,கழுவிலேற்றிய கரி நாள்! நம்பிக்கை வைத்தவர்கள் எல்லாம், நடு முதுகில் கத்தி ஏற்றிய நாள்! நம்பிக்கை ஊட்டியவர்கள் எல்லாம், நரிகளாக மாறிவிட்ட நாள்! உலகத் தமிழர்களின் இதயங்கள், ஊமைக் கண்ணீர் வடித்த நாள்! உலகத் தலைவர்களின் காலடிகளில், ஈழத் தமிழன் விழுந்து கெஞ்சிய நாள்! கையிழந்தும், காலிழந்தும், கட்டியணைத்த துணையிழந்தும், கருக் குழந்தைகளின் தொப்புள்கொடிகள், துண்டிக்கப் பட்டதொரு கரிநாள்! கரம் கூப்பி நான் தொழுத தெய்வங்களும், காவடியேந்தி நேர்த்தி வைத்த தேவதைகளும்…
-
- 7 replies
- 1.1k views
-
-
நீ! என் நிழலல்ல நிஜம்! நான் நிகழ்த்திவந்த காதல் தவத்தின் வரம்! உள்ளத்தில் செதுக்கிவைத்த உருவத்தின் உயிர் வடிவம் நீ! அள்ள அள்ளக் குறையாத அன்பு தந்து என் ஆயுள் வளர்க்கின்ற அமுதமும் நீ! எப்படிச் செல்லம் நீ எனக்குள் புகுந்தாய்? கள்ளூறும் தமிழாலே கவிதைகள் தந்ததாலா? தெள்ளுத்தமிழ் சொல்லாலே என் இதயம் தொட்டதாலா?! நெருக்குப்பட்டு மனம் சுருங்கும் வேளையில் சுருக்கென உன்னைத் தைக்கும் சொற்களில்!! மெளனம் காத்த பொழுதுகள் தன்னில் மிரட்டும் வார்த்தையின் அடர்த்திக் கணங்களில்!! என்னை நீ ஆராதித்த பொழுதுகளாலா? !எந்தன் தவறை எனக்கே உணர்த்தி உனக்கு ஈடாய் என்னைச் செதுக்கி கவிதைத் தமிழைப் பருக்கி பருக்கி! உருக்கிவிட்ட உன்னதத் தாலா?!! எந்தன் தமிழே என் உயிரின…
-
- 7 replies
- 1.9k views
-
-
காட்டுமல்லிக்கொடியாய் யாருமற்ற வனத்தில் முளைத்து கிடந்தேன் பூப்பறிக்க வந்தவள் - இந்த கொடியில் ஆசை வைத்து பறித்து போனாள் பதியம் போட்டாள் , பொழுது தவறாமல் நீர் ஊற்றினாள் உரம் போட்டு என் வளர்ச்சிகண்டு பூரித்தாள் மொட்டுவிடும் பருவத்திலொரு நாள் நன்று கொதித்த வெந்நீர் ஊற்றினாள் வேர் வரை பாய்ந்து துடித்தேன் - ஏன் இப்படியென்றேன் பூக்கள் பிடிக்காதென்றாள் பூப்பதுதானே என் இயற்கை விதி என்றேன் பூக்காது பார்த்துக்கொள் என்றாள் ............. முயற்சிக்கிறேன் என்று சொல்லி செத்துப்போனேன்
-
- 7 replies
- 1.5k views
-
-
உன்னை தேவதை ஆக்கியது உன்னை ...நான் காதலியாக.... மட்டும் நினைக்கவில்லை..... வழிபடும் தெய்வமாகாவும் கருதுகிறேன் ......சில வேலை நீ கூட ......சிரிப்பாக எடுக்கலாம் ......!!!. நீ இருந்துபார் நீயே ,,,,,உனக்கு கடவுளாக தெரிவாய் ....உன்னை தேவதை ஆக்கியது என் "நினைவு அலை" தான் இந்த உலகில் எண்ணத்தை விட ஒரு கருவி இல்லை....!!!
-
- 7 replies
- 842 views
-
-
முதல் வெடியோசையில் பிறக்கிறது காதல் .. பக்கத்துக்கு கூடாரம் யாராக இருக்கும் .. எண்ணிய வேளையத்தில் பிள்ளை வேகமா வா .. என் அழைக்கும் அவள் அம்மாவின் சத்தம் .. நிலா ஒளியில் அவள் நிலா முகம் பார்க்கிறேன் .. ஓடி சென்று மாமர அருகில் இருந்தவாறு .. ஒன்னை பெத்து வைத்திருக்கிறேன் .. கட்டிகாக்க நான் படும் பாடு பெரும்பாடு . . என்னும் ஏக்க பெரும்மூச்சு விடும் அவள் அம்மா .. கற்பூர வள்ளி போல வாடாமல் இருக்கிறாள் .. கண்களில் மட்டும் சிறு நீர் நிரம்பி இருக்கு .. அது ஒரு வயது பார்த்தவுடன் வாழ்க்கை கொடுக்கும் .. கட்டினால் இப்படி ஒரு பிள்ளையைத்தான் .. என்னும் மன ஓட்டத்தில் இயங்கும் நிலை .. எம்மை பற்றி சிந்தித்ததை விட அவளை பற்றி அதிம் .. அடிக்கடி பவுடர் போடும் …
-
- 7 replies
- 907 views
-
-
எத்தனை எத்தனையோ பிறந்தநாள் பாடல்கள் வந்திருக்கு... சரி நம்ம பாட்டையும் கொஞ்சம் கேட்டுப் பாருங்கள். பிடித்திருந்தால் உங்கள் பிள்ளைகளின் பிறந்தநாள் விழவாவிலும் போட்டு எங்கள் செல்ல மழலைகளை ஆடவிடுங்கள். http://vaseeharan.blogspot.com/ பல்லவி பிறந்த நாளைக் கொண்டாடும் பிஞ்சு மழலைகளே இந்த வீட்டின் சந்தோஷத்தை கொண்டு வந்தவர்களே அம்மாவின் அன்புபிள்ளை அப்பாவின் நல்ல பிள்ளை ஆண்டவனின் செல்லப் பிள்ளையாய் நல்ல நல்ல பாட்டைக் கேட்டு தன்னாலே ஆட்டம் போடுங்க நல்லாய் படிச்சு பட்டம் முடிச்சு உலகை நீங்கள் வெல்லுங்க சரணம்-1 தரணியெங்கும் சென்று நீயும் தமிழைப் பரப்பிட வேண்டும் நெஞ்சை நிமிர்த்தி நின்று நீயும் தமிழில் கதைத்திட வேண்டும் உன்தன் மூ…
-
- 7 replies
- 1.7k views
-
-
இலக்கியமே நீ தூங்கு இழப்புக்கள் எமக்குப் புதிதல்ல இருந்தும் இம் மாவீரனின் இழப்பறிந்து ஏனோ? ஏங்கோ? வலிக்கிறதே ஏன் என்று தெரிகிறதா? மத்தாப் பூவாக மனங்களிலே மலர்ந்திருக்கும் சித்திரச் சிரிப்பொன்று நித்திரையாகியதா? வரலாற்றில் நிலைத்திட்ட வண்ணத் தமிழ் காவியமே மரணத்தை வென்றிட்ட மாவீர மன்னவனே சித்தமெல்லாம் தமிழீழக் கனவோடு உறவாடி வித்தாகி விதையான சத்தியனே நீ தூங்கு காற்றைவிட வேகமாய் கடுகிவரும் வேகமெங்கே? களத்தினில் புயலாக புகுந்திடும் தீரமெங்கே? சீற்றமுறும் சிறுத்தையாய் சினந்தெழும் வீரமெங்கே? மாபெரும் சபைகளில தோள் சேர்ந்த மாலையெங்கே? இலட்சியத்தின் வேட்கையுடன் இறுதிவரை போராடும் இலக்கணங்கள் இங்குண்டு இலக்கியமே …
-
- 7 replies
- 1.7k views
-
-
விடிந்தும் விடியாததொரு காலை அம்மணமாய் கிடக்கும் என் சோதரி உடலை என் மேலங்கி கொண்டு போர்த்தி தரையில் அடித்து அழுதாலும்... உமது இறப்புக்காகவும் இரங்குகிறேன்! கல்லாகி போகாத மனிதனென்று நாம்...............ஆனதால்........... கல்லீரல் புற்று கணக்கு முடித்ததால் உம்...அற்ப ஆயுள் சோகம் எண்ணி மனசு - கனக்கிறோம்- ஆயினும் எலும்பெங்கும் வலிக்கிறது! அடி காயங்கள் ஆறுவதாய் இல்லை! இன்றும் உம் தோழர் - எம் அடிமடியில் தீ மூட்டுவதை எப்பிடி மன்னிக்க? மறக்க? வலிக்குது! தேரோடும் வீதியில் சேறள்ளி கொட்டிவிட்டு கோயில் வாசல் அது வருகையில் விடைபெறுகிறேன் ... புலிதான் எல்லாமென்றொரு புராணமா? கேவலம்... நீரல்ல...போய்விட்டீர் இன்னும் உம் காலடி தொழுப…
-
- 7 replies
- 1.8k views
-