கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
ஒரு காலை விடிவதற்குள் எத்தனைபேர் அடங்கிப் போனார்கள்!? மீதமிருந்த அழுகுரலையும் பகற்பொழுதுகள் அடக்கியது! ஏங்கித் தவித்தெல்லாம் அனாதையாய்க் கிடக்க, நாங்களும் அனாதைகளாய்த்தான் ஓடி வந்தோம்! வழியில் வந்த குழிகள் எல்லாம்..... அன்று, பதுங்கு குழிகளாகவும் புதைகுழிகளாகவுமே தெரிந்தது!.....இருந்தது! சின்ன மழைத் தூறல் கூட எம் பெருங்கண்ணீரை மறைத்தது! என்னவென்று சொல்ல.... எப்படிச் சொல்ல........??????? மானமுள்ள தமிழர் என்றிருந்த நிலை சொல்லவா? இல்லை... ஓடிவந்து மானம் விட்ட கதை சொல்லவா? கடைசிவரை எதையெதையோ நம்பியிருந்தோம்! ஒன்றுமே நடக்கவில்லை!! இப்பொழுதும் இருக்கின்றோம்.........! சொல்லும்படி ஒன்றுமில்லை!! எதிர்காலம் உட்பட எதுவுமில்லை எங்களிடம்! எதற்காகத் தொ…
-
- 7 replies
- 1.6k views
-
-
கண்ணே என்றேன் கண்ணில் நீர் தந்தாய் பொன்னே என்றேன் பொன்னாய் வாங்க வைத்தாய் என்னே உன் அன்பு அன்பாலே துவைத் தெடுத்தாய் பெண்ணே ஓடிவிடு பித்தனாக மாற முதல். அடுத்த வீட்டை காட்டி நீ என்னையே மாற்றினாயே கொடுத்த தெல்லாம் போதாமல் விதம்விதமாய் சொன்னாயே தடுக்கும் போதெல்லாம் கதறி அழுது ஓடினாயே - எனை ஒடுக்கும் உன் செயல்களாலே நானும் இப்போ தெருநாயே! முட்டை பொரிச்சுத் தந்து முட்டைக் கண்ணீர் விட்டாயே கெட்ட கேட்டுக்குள் கார் ஒன்றும் கேட்டாயே கட்டையிலே போனாலும் போகாத கடனாளி ஆக்கினாயே குட்டையிலே நாறிய மட்டையாகிப் போனேனே! தொலைக்காட்சி சீரியலில் என்னையும் மறந்தாயே மலைப்போடு காட்சிகளில் மனமுருகி நின்றாயே தொலைக்காட்சி படங்களுக்காய் மனமிரங்கி அழும்…
-
- 14 replies
- 2.1k views
-
-
ஈழத்திரு நாட்டில்.. பூர்வீகமாக வாழ்ந்த மண்ணில்.. அடிமைப்பட்ட மந்தைக் கூட்டம் ஒன்றின் விடுதலைக்காய் புலி ஒன்று சொந்த வாழ்வை சொத்தாக்கி உழைத்தது. கூட இருந்த குள்ள நரிகளும் எட்ட நின்ற ஓநாய்களும் மந்தைகளின் வளர்ச்சி கண்டு வாயூறி நின்றன. சில கறுப்பாடுகளும் பட்டியில் காட்டிக்கொடுக்க தயாராகி நின்றன. அப்பப்ப திருடித் தின்றதை விட... ஒட்டுமொத்தமாய் தின்று தீர்க்க தீனியாக்கிட கூட்டுச் சேர்ந்து கும்மாளம் அடிக்க ஓநாய்கள்.. சிங்கத்தின் குகையதில் கழுகுகளின் காலடியில் தவம் கிடந்தன. கால நேரம் வாய்ப்பாகிப் போக சிங்கம் ஒன்றின் பேரினக் கோரப் பசிக்கு மந்தைகள் இரையாகின. சுற்றித் திரிந்த காகம்..கழுகுகள் மிச்சம் தூக்க.. ஓநாய்கள் எலும்பி பொறுக்கி …
-
- 9 replies
- 1.8k views
-
-
ஓப்ரா கவுசில் ஒரு மாலை பொழுது ஒலித்தது ஒரு கணீர் குரல் ஒவசீஸ் தமிழன் தனை இழந்தான் ஓப்பாரியும் ஓலங்களும் களத்தில் ஒப்ரா கவுசில் தேனிசை மழை ஒமந்தையில் குண்டு மழை ஒரு சாண் வயிற்று பசியிலும் போராட்ட உணர்வு அங்கு ஓய்யார பகட்டிலும் களியாட்டம் இங்கு ஓசி தமிழன் நாம் ஓடி விளையாடி,பாடி பாரதி கனவினை நனவாக்கிடுவோம் ஓடு ஓடு என்று விரட்டுகிறார்கள் ஓப் போடுகிறோம் நாம் ஒப்ரா கவுசில் தமிழ் வாழ்க தமிழன் வாழ்க
-
- 12 replies
- 1.9k views
-
-
ஓய்ந்த மழை பட்சிகளின் அயர்ச்சிகளை ஒன்றுக்கொன்று சீண்டிக்களைத்த மேகங்கள் தன்னிலை மாற்றி ஒழிகிறது களைகூட்டி காடு செய்த வானம் முன்பொருபோதுமில்லாத சிறகுகளிழந்து வெறித்துக் கிடக்கின்றது இரவைக் காத்து புத்தகங்களுக்குள் மறைத்த புகைப்படங்கள் காட்டும் புன்னகையும் பொருத்தமில்லாது பொய்த்து விடுகையில் விடுபட்ட சுவர்களுக்கிடையே குடிகொண்ட்ட கரப்பான்களின் ஒழுக்கமற்ற சத்தங்களின் விதைகள் நிலமூர்கிறது அங்கொரு மழை ஓய்கிறது.. யாழினி பண்புடன் இணையத்திற்காக http://new.panbudan.com/archives/401#more
-
- 5 replies
- 814 views
-
-
அவர்கள் சூரியனை தேடிநடக்கவில்லை சூரியனாக மாறினார்கள் இருள் மறைய தொடங்கியது என்னும் அவர்கள் மாறுகின்றார்கள் புளியமர இடுக்கினூடே நிலவு மேறகில் இருந்து இறுமாப்புடன் வேகமாக எழும்பியது நிலவுக்கு எதிர்ப்புறமாக கிழக்கு நோக்கி நடந்தார்கள் நிலவும் சில கிளிகளும் கெக்கட்டம் விட்டு சிரித்தது கேட்டது விடியலை நோக்கி நடந்தார்கள் நடுங்கிய தேகத்திலும் வன்மம் வான்வரை எட்டி நின்றது தள்ளாடி தடுமாறினார்கள் இருந்தும் பசியும் தாகமுமும் வலியும் முன்னேற சக்தி தந்தது செவிப்பறைகளில் வீறிட்ட ஓலங்கள் வழித்துணைக்கு தாலாட்டின தொடர்ந்து வந்தது நிலவு சிரித்துக்கொண்டே வந்தது ஏளனம் செய்தது எள்ளிநகையாடியது என்ன ஒரு இறுமாப்பு …
-
- 10 replies
- 1.9k views
-
-
[size=5]ஓரிடத்தில் மாவீரரைத்துதிப்போம்[/size] [size=5] [/size] [size=5][/size] [size=5]தமிழே உயிரே தலைதாழ்த்தியொரு வணக்கம் தரணியில் உனக்கென்றொரு நாட்டுக்கென்ன சுணக்கம் தண்ணொளி மண்ணிலின்று உன்னவர்களுக்குலில்லை இணக்கம் தரங்கெட்ட மனிதராய் தமிழர்களுக்குள்ளே பிணக்கம்.[/size] [size=5] தமக்கென வாழாது நமக்கென மாண்டவர்கள் தன்னலம் பாராது சமராடிய தாண்டவர்கள் தமிழ்த்தாய் மீது அழியாப்பாசம் பூண்டவர்கள் தரணியிதில் மாவீரரென்று பேர்கொண்ட ஆண்டவர்கள்.[/size] [size=5]மங்காத வீரமுகம் தன்னை கொண்டவர்கள் மகிழ்வாக தலைவன் அடியொற்றி [/size]நின்றவர்கள் [size=5]மண்டியிட்டு மாற்றான்பாதம் தொழுதிடா மன்னவர்கள் மறப்பரோ அவர்தம் மாண்புகள…
-
- 11 replies
- 951 views
-
-
ஓரு கைய்தியின் கண்ணீர்.....!! ( களுத்துறை. வெலிக்கடை .புசா..அவலம்) சுற்றி வளைத்தொரு முற்றுகையிட்டு சுற்றி பிடித்தான்... பற்றியே பிடித்து தேகம் மீதிலே பறைகள் அடித்தான்... கை களை கூட்டியே விலங்கினை மாட்டியே கட்டியே இழுத்தான்... கோர சொற்களை கத்தியே உரைத்து எட்டியே உதைத்தான்... கொட்டியே கொட்டியே என்றென கத்தியே முட்டியை உடைத்தான்.... நாளங்கள் உடைத்து குருதிகள் பாயவே குலுங்கியே சிரித்தான்.... எரிதனல் போலவே வலியினில் துடிக்கையில் ஏறியே அடித்தான்... தளும்புகள் மீதிலே பெற்ரோலை ஊத்தியே அலறவே வைத்தான்.... நினைவுகள் இழந்து நிலத்தினில் வீழ்கையிலும் நிமிர்தி…
-
- 1 reply
- 960 views
-
-
உனைக் காணாத கணங்களில் காதல் எண்ணம் காட்டாற்று வெள்ளமாய் கரைபுரண்டு ஓடுகிறது பெருக்கெடுத்து ஓடும் உன் எண்ணச் சுமைகளின் திண்ணம் தாளாமல் தவித்துப் போகிறேன் திறன்பேசியில் குறுஞ்செய்தி தேடி நொடிக்குகொருமுறை நெருடுகிறேன் குறுஞ்செய்தி காணாது குன்றிப் போகிறேன்... அருகலையில் ஐயம் கொண்டு திசைவியை திருகிப் பார்க்கிறேன்.. என் கனவுக் கூட்டங்களின் பிறப்பிடமே அவற்றின் இருப்பிடமே….!! வீசும் தென்றலும் விசும்பின் சாரலும் உன் நினைவுகளை அள்ளித் தெளிக்கிறது!! ஆதவனின் கதிரொளிகளும் உன் எண்ணங்களால் சுட்டு விட்டுச் செல்கிறது !! என் கனவுகளை நீயே பிரசவிக்கிறாய் அவற்றை போற்றுகிறாய் அழிக்கவும் செய்கிறாய்..!! ஐம்பூதங்களும் என் வேட்கை அறியும் அர…
-
- 5 replies
- 870 views
-
-
அலைகள் தொடும் கரையினிலே கரை தொடும் அலையினை ரசித்தபடி கற்பனை அலைகளை மனமெனும் கரையினில் மோத விட்டு காத்திருந்தாள் அவனுக்காய்... ஒருதலைக்காதலாய் வளர்த்திட்ட அவள் முடிவை அவனிடம் சொல்லிட அழைத்திட்டாள் அவனை அழைப்பை ஏற்ற அவனுக்காய் காத்திருந்தாள் கடற்கரையினிலே....... எதிர்கால வாழக்கையினை ஏணிபோல் ஏற்றிட இவன் வேண்டும் என்றெண்ணியவளாய் திரும்பினாள் எதிரினிலே அவன் நின்றான்..... அவனை பார்த்தவுடன் அவசரமாய் எழுந்து நின்றாள் ஆவலுடன் அவன் நலம் அறிந்து அமரும்படி அழைத்திட்டாள்...... இடைவெளியுடன் இருவரும் இரு கல்லில் அமர்ந்திட - அவன் இரு கண்கள் இயற்கையின் விந்தையை ரசித்திட இவள் பார்வை அவனை நோக்கி ஏக்கத்துடன்.... ஆறு வருடங்க…
-
- 12 replies
- 1.1k views
-
-
கண்ணுக்குள் சூரியச் சிரிப்பும் வாய்ச் சொல்லுக்குள் இனிமையும் கனிவும் நெஞ்சுக்குள் விடுதலைப் பெருநெருப்பு கண்ணால் யாவையும் பேசியே மனசில் சிம்மாசனமிட்ட தம்பி ஊர் போனதில் உறவானவருள் ஒருவன் உயிர் கரைக்கும் இசையால் மனங்களைத் தன்னோடு ஒட்ட வைத்த தன்னினிய குரலில் தந்தவொரு பாடல்….அவன் நினைவுகள் சுமந்து அவன் பாடிய பாடலிது.... பாடலை நேரடியாகக் இங்கே அழுத்துங்கள். பாடலை தரவிறக்கிக் கேட்க இங்கே அழுத்துங்கள்.
-
- 3 replies
- 1.9k views
-
-
ஓர் வெள்ளைப் புறாவின் இறகுகள் ஒடித்து........ தமிழ் செல்வனின் கண்ணீர் அஞ்சலிக்காய்..... கடந்த வருடம் கார்த்திகை இரண்டில் சமாதானம் கேட்டு பறந்து திரிந்த வெள்ளைப் புறாவின் இறகை ஒடித்து வீதியில் போட்டு புத்தரின் மைந்தர்கள் மகிழ்ந்த இன் நாள்..... உலகம் முழுவதும் வெட்கத்தால் தலை குனிந்த ஓர் நாள்....... தமிழன் இறுதி அமைதி முயற்சியும் அரை நொடிப்பொழுதில் அழிந்திட்ட கரி நாள்....! அகிம்சைக்காய் முதல் பலி எம் உயிர் திலீபன்...... அதன் பின் ஓர் வலி அன்னை பூபதி.... அரசியல் பேசி அமைதியை நாடிய அண்ணா நீயும் இறுதியாய் ஓர் பலி....! தமிழர் இனத்தின் விடுதலை வேண்டி வீரியம் கொண்ட வே…
-
- 8 replies
- 1.6k views
-
-
ஓற்றை தீயே ஒற்றை தீயே ஓசையில்லாமல் விழுந்ததேனோ ! பற்றை மனதை வெட்டையாக்கியதேனோ ! கற்றை கற்றையாய் களித்திருந்தேன் காற்றில் கரைத்தெறிந்ததேனோ ! சிப்பியென எனையெண்ணி முத்தொன்றை சேர்க்க முனைந்தேன் முடிவறியுமுன்னே முழுதாய் பறித்தெறிந்தாய் ஓற்றை வெண்ணிலா ஓய்யார உறக்கத்தில் பற்றேதுமின்றி பாவியாய் இருந்ததே ! இமைக்கும் நொடியினுள் இருளாக்கி மறைந்தாய் எனக்குள்ளே என்னை உருக்கி ஏழ்மைக்காதலை வளர்த்து வைத்தேன் காற்றினில் கரைத்து காதலை பறித்தெறிந்தாய் ஓற்றை தீயே ஒற்றை தீயே ஓசையில்லாமல் விழுந்ததேனோ ! பற்றை மனதை வெட்டையாக்கியதேனோ ! கற்றை கற்றையாய் களித்திருந்தேன் காற்றில் கரைத்தெறிந்ததேனோ ! மூன்றெழுத்தே என் மூச்சென்று முடிவாய் வாழ்ந்திருந்தேன் …
-
- 4 replies
- 1.1k views
-
-
ஓவியங்கள் செந்-தமிழ் ஓலைக்காவியங்கள் உள்ளத்து உணர்வுகளின் உன்னதக் கோலங்கள் கண்கண்ட கவிதைகளை கவர்ந்திடும் வண்ணமிட்டு கலை நயம் கலந்து காட்சியாக விரியவிடும் எண்ணற்ற சிந்தனையை-மன எண்ணத்தில் தீட்டி விடும் மாசற்ற புதுமை மொழி மண்ணுலகில் மகிமை வரி பட்டறிந்த பண்டிதனும் பாரறியா பாமரனும் பார்த்து அறியும்-இனிய பன்னாட்டு தொடர்பு மொழி எதுகை மோனையில்லை எடுகோள் எதுவுமில்லை தூரிகை தூவிவிடும் தூய்மையான கவிதை
-
- 12 replies
- 9.9k views
-
-
நல்ல உச்சி வெய்யில்.. நடந்து வந்த கிழவிக்கோ பெரும் களைப்பு.... அங்கிருந்த திண்ணையில் ஓய்வாக அமர்கிறார்... பசி.... தாகம்.... அங்கும் இங்கும் பார்க்கிறார்.... கண் அயர்ந்து விட்டார். அப்போது அவ்வழியே வந்த மனிதர் அவரை இனம் கண்டு கொண்டார். பசி, தாகம்.... பார்த்தவுடன் புரிந்தது. பாட்டி.... எனது வீட்டுக்கு வாருங்கள்.... உண்டு களைப்பாறி செல்லலாம் என்கிறார். பாட்டியும் புறப்படுகிறார். அவனது மனைவியோ.... ஒரு அரக்கி.... அவனுக்கே சமைத்து உணவு கொடுக்க மாடடாள். இன்று இந்த கிழவி வேறா? நம்பிக்கையில் அழைத்துச் சென்றான். திண்ணையில் இருக்க வைத்து உள்ளே செல்கிறான். மனைவியை மகிழ வைத்து.... அதன் பின்னர் சமைக்க வைக்க வேண்டுமே... பெரும் பிரயத்த…
-
- 0 replies
- 6.5k views
-
-
உதட்டில் வழுக்கியதைக் கூட்டி விரல்களில் ஏந்திக் காற்றில் மிதந்ததில் ஏத்தினேன். மிதந்தது சுமந்ததன் நிறைவேறாத கனவோடு புணரமுயன்றதில் உருமாறிக்கொண்டது. மாறியதால் விழுந்திட மோகங்கொண்ட நட்சத்திரம் உடன் கட்டை ஏறியது, துகில் போர்த்தி வானம் அழுதது. கண்ணீரோடு கலந்து வேர்களால் நுழைந்து மலரொன்றில் உறங்கிட விளைகையில் ஒட்டிக்கொண்ட வாசனையால் வியாபிக்கத்தொடங்கியது எங்கும், யாரோ சிலரின் உரையாடலில் இதழ்களாய் பிரிபட இசையாகியது. இன்னும், சிலரின் சினத்துப்பலால் இறுகி உறைந்துபோனது. இப்போது உங்களிடம் வந்திருக்கிறது என்ன செய்யப்போகிறீர்கள்? * இது ஒரு முயற்சி. என்னனவில் நான் தோற்றுபோயும் இருக்கலாம். உங்கள் கருத்துக்காக காத்திருக்கிறேன் நண்பர்களே..
-
- 3 replies
- 648 views
-
-
கங்காரு மண்ணில் ஒரு கடமை வீரன் விடுதலை நேசித்த வெள்ளைச் சிரிப்பு வீரத் தலைவனின் அன்பின் விரிப்பு இடர்களைச் சந்தித்தும் இயங்கிய நெருப்பு இழந்தோமே உங்களை எங்களில் தவிப்பு. நல்ல மனிதநேயம் தாங்கிய ஜீவன் வல்லமை உழைப்பினை வழங்கிய வடிவன் சொல்லிடும் முன்பே செய்திடும் தீரன் தில்லை ஜெயக்குமார் எங்களின் வீரன். அமைதியான தோற்றத்துள் அக்கினிக் குழம்பு அவுஸ்ரேலிய நாட்டிலே பணிசெய்த முனைப்பு இமைகள் மூடும்வரை ஈழத்தின் உழைப்பு ஏங்குது தமிழீழம் இன்றுமை நினைத்து. தாய்மண்ணின் விடிவிற்கு உங்களைத் தந்தீர் தமிழீழ நிலையினை உலகினில் சொன்னீர் வாய்கதறி அழுகின்றோம் ஏன் எமைப்பிரிந்தீர் வரலாற்றின் நெஞ்சினில் படமென்…
-
- 2 replies
- 1.3k views
-
-
கங்காருவின் மைந்தர்களே களிப்பெமக்குத் தாருங்கள் சிங்கத்தின் குழந்தைகளை சிதறடிக்க விரட்டுங்கள் தடுப்பரண் போட்டெம்மை படுத்துகின்ற சிங்களத்தை துடுப்பாட்டக் களத்தினிலே கடுப்பாக்கி அனுப்புங்கள் மைதானம் வந்திருக்கும் மனிதக் கொலைகாரன் மகிந்த முகத்தினிலே மண்கவ்வ வையுங்கள் சிங்கக் கொடிதாங்கி சிரித்துக் கூத்தாட சீமைக்கு வந்தவனைப் - பார்த்துச் சிரித்துநிற்க உதவுங்கள்
-
- 5 replies
- 1.4k views
-
-
கஞ்சி குடிக்கும் கனவில் கதறியழும் பதுங்குகுழிகள் நிலங்களை விழுங்கும் சிங்கத்தின் திறந்த வாய்க்குள் எறும்புகள் போல் நுழைந்து போர்முகங்கள் தற்கொலை செய்கிறது ஒருவேளை கஞ்சிக்காய் உயிர் சுமக்கும் கோப்பையில் உச்ச துன்பங்களை அணைத்தபடி உறங்கும் எலும்புக் கூடுகள் தொண்டு நிறுவனங்களும் எட்டாத தூரத்தில் தொலைந்து போனது எலும்புக் கூடுகளில் பட்டினிப் பதாகைகள் ஏந்தியபடி காலில்லாத கைகள் அசைகிறது அழித்து அழித்து ஆனா எழுதிய மண்ணில் உயிர்எழுத்தும் மெய்யெழுத்தும் உயிர் இழந்து கிடக்கிறது கண்ணீர் வெடித்துச் சிதறியபடி ”ஐயோ அறுவான்கள் பல்குழல் அடிக்கிறாங்கள்” மௌனக் குரல்கள் கொதிக்கிறது வல்லினம் மெல்லினம் இடையினம் எல்லாம் வ…
-
- 4 replies
- 1.2k views
-
-
கரைந்து ஓடும் காலங்களின் கரை சேரா நாட்களுடன் கனவுகளைச் சுமந்து கால்கடுக்க நடக்கின்றனர் கண்களை மூடியபடியே காரணம் அற்றவர்கள் காற்றும் சென்றிடமுடியா கனதியான வெளிகளினூடே கர்ப்பம் சுமக்க முடியாதவராய் கருகிப் போனவர் முன்னே கபடு நிறைந்த முகங்களுடன் கல்லறை தேடுகின்றனர் கிரகிக்க முடியாத கணக்குகளை கிஞ்சித்தும் காணமுடியாது கிளர்ந்தெழும் கீற்றுக்களாய் கீழ்ப்படிய மறுப்போர்க்கான கடைநிலைக் கருவறுப்பாய் காகங்களின் கரைதல்கள் கோரமுகங்கள் உருமாற கொடுவினையின் உருவங்களாய் கொள்கைகள் அற்றவராய் கூற்றுக்கள் குதிர்களாக கும்மாளத்துடன் அலைகின்றன காற்றின் கடும் வீச்சில் கலைந்தே குலைந்துபோகும் கனமற்ற கடதாசிக் குருவிகள்
-
- 2 replies
- 644 views
-
-
உன் ..... கண் அசைவில் மதி ...... இழந்தவன் நான் ..... நீ கண்ணை அசைத்தாய் .... என் வாழ்க்கையே அசைந்து ..... விட்டது ..................!!! ^ கவிப்புயல் இனியவன் கடந்த காதல் - குறுங்கவிதை
-
- 6 replies
- 1.7k views
-
-
கடந்த காலமும் எதிர் காலமும் நடந்தவை பற்றி சிந்திக்காதீர்கள் நடக்கபோறவை பற்றி சிந்தியுங்கள் நடந்தவை எல்லாமே கனவுகள் நடக்கபோறவைகள் தான் நிஜங்கள் நடந்த பாதையில் நிழல்கள் அதிகம் நடக்கபோகும் பாதையிலோ நியங்கள் நடந்து வந்துவிட்டேன் என பெருமிதம் கொள்ளாதீர்கள்...இடர் பட்டாலும் நடக்கபோகும் பாதயில் இடர் வராது பாதுக்காத்துக்கொள்ளுங்கள் நடந்தவை நாடகங்கள் ஆகட்டும் நடக்கபோறவை நிஜங்கள் ஆகட்டும் கடந்த கால நினைவுகளில் எதிர்கால கனவுகளில் இந்த நிகழ் காலத்தை தொலைத்துவிடாதீர்கள்
-
- 4 replies
- 1.3k views
-
-
கடந்து செல்லும் 2009....... -------------------------------------------- கடந்து செல்லும் 2009 மறந்திட முடியாத துயர ஆண்டு தமிழினம் குருதியும் சதையுமாய் கொடுமையைச் சுமந்த துயர ஆண்டு துயரங்கள் வாழ்வின் பகுதியானது துவண்டு நாம் வாழ்ந்திடல் பயன் தராது ! இழப்பின் வலிகளை இதயத்தில் பதிவோம் இனியென்ன உள்ளது என்றே நிமிர்வோம் பணியெங்கள் பணியது தேசம் மீட்பதே என்பதை எங்கள் இதயத்தில் பதிவோம் கனியெங்கள் கைகளில் வருமோர்நாளென்று காரியம் ஆற்றிடும் வலிமையை பெறுவோம்! கையைக் குலுக்கியே முதுகிலே குத்தினார் அவரைக் கட்டித் தழுவியே முகத்திலே அறையும் நல் தந்திரங்களை நாமும் தேடுவோம் நாளைய ஆண்டினை எமதாய் மாற்றுவோம்! நம்பிக்கையோடு எம் மனங்களை இணைப்போம் நாளையென்பதை…
-
- 7 replies
- 1.2k views
-
-
கடனில் முளைத்த பூ - கவிதை கவிதை: நிலாகண்ணன், படம்: அருண் டைட்டன் சில்லறை மீன் வியாபாரி விபத்துக்குள்ளாகிக் கிடக்கின்றான் கூடையிலிருந்து சிதறிய மீன்கள் அவன் குருதியில் நீந்திக்களிக்கின்றது. பாவம் வியாபாரிதான் காற்று குடித்து மூர்ச்சையானான்... தவிர வண்ணமீன்கள் சுற்றும் தட்டைப்பேழைக்குள் நான் என் சைக்கிள் பெல்லை அடித்தபடி கவனமாய் நீந்திவந்தேன் என் வீட்டிற்கு. *** தையல் எந்திரத்திற்காக வாங்கிய கடனால் உறவில் ஒரு கிழிசல் நேர்ந்துவிடுகிறது. நல்லவேளை துணைவி கத்தரி நிறத்தில் அதன்மேல் ஒரு பூ வரைந்துவிடுகிறாள். ஒரு தாவரத்தைப்போல் படருகின்ற கடனால் மறைந்துகொள்ள ஒரு காடும் கிடைத்துவிடுகிறது. என்னைத்தேடி வனம்புகும் …
-
- 0 replies
- 1.3k views
-
-
கடன் கொடுக்கும் நாடுகளே மானாட மயில் ஆட கடன் வந்து மேல் ஆட ஸ்ரீ லங்கா கொண்டாட கடன் கொடுத்த நாடுகள் திண்டாட தயவு செய்து கடன் கொடுக்காதிர்கள் இப்படிக்கு அனலைதீவன்
-
- 0 replies
- 484 views
-