கவிதைப் பூங்காடு
கவிதைகள் | பாடல் வரிகள்
கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
5128 topics in this forum
-
கடமையைச் செய்ய.... மேனி ஒடுங்கி மெல்லிய நடையொடு ஒரு கையிலே துணிப் பையொன்று மறு கையிலே நெய்ப் பந்தமொன்று திருநகரிலிருந்து கனகபுரம் நோக்கி அன்னையவர்கள் நடந்துகொண்டிருந்தாள்! இது அவனுக்காய் விளக்கேற்றும் பன்னிரெண்டாவது ஆண்டு விடுமுறை கிடைத்தால் ஓடி வருவான் அவனுக்காகவே சமைக்கத் தோன்றும் சேர்ந்து உண்டு மகிழ்வான் அவன் வெளிநாட்டில் இருந்து பணம் தருவார்கள் மனம் தருவது அவன் மட்டுமே குடிசையைக் கூட கோவிலாக்குவான்! இரு குழைந்தைகளுக்கு அப்பா அவன் தாய்வீடு வந்தால் அவனே குழந்தை விடைபெறும் நேரம் விழிகொண்டு பாரான் தொடர்ந்து சென்று வாசலில் நின்றால் திரும்பிப் பார்த்து கவனம் என்பான்! அவன் உடலை தொட்டு அழவும் கொடுப…
-
- 2 replies
- 803 views
-
-
கடற் குழந்தை - தீபச்செல்வன்:- பேரலையை தின்று பெருங்கரையில் துயில்கிறது உறங்க ஓரிடமற்ற கடற் குழந்தை செய்வதறியாது திகைத்துப்போயின பொம்மைகள் பறந்தலைந்தன அவன் ஊதிய பலூன்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் கவிழ்ந்து மிதக்கிறது அவன் செய்த காகிதப் படகு அவனருகில் வாடிக்கிடந்தன மீன்களும் கணவாய்களும் யாருமற்று அநாதரவாக கிடப்பனுக்காய் தலை குனிந்தன இறால்களும் நண்டுகளும் பெருங்காற்றே நீயா அவனின் படகை கவிழ்த்தாய்? …
-
- 0 replies
- 1.8k views
-
-
மணல் சுமக்கும் கடற்கரை , இந்தக் கன்னம் சுமக்கும் கை விரல் , . நித்தம் உன் நினைவுகள் சுமக்கும் இந்த இதயம் என மெல்ல நீள்கிறது இந்த கடற்கரை காட்சிகள் இன்னும் என்னுள் கரை தொடாத அலைகலென கனக்கிறது கைரேகை முழுவதும் அழியாத உன் ஞாபகங்கள் !.. - பனித்துளி சங்கர்
-
- 0 replies
- 1.5k views
-
-
கடற்கரைச் சாலையோரம் அந்தி சாயும் மாலை நேரம் கடல் மகள் கலைந்த கோலம் கண்களில் காதல் ஜாலம் அலைகளின் ஆட்டம் எல்லாம் கரைகளை கரைத்து சீண்டும் கடலிடை நாரைக்கூட்டம் காத்திடும் இரைகள் தேட மணலிலே நண்டுக்குடைகள் கடலுடன் தூது பேசும் தவழ்ந்திடும் தென்றல் காற்று உடலதை வருடிச்செல்லும் கரைந்திடும் காக்கை உறைவிடம் நாடிச்செல்லும் இயல் இசைக்கவிதையாக இயற்கையைப் போற்றிப்பாடும்
-
- 11 replies
- 1.8k views
-
-
கடற்கரையில் ஒரு தென்றல்..!! தென்றலுடன் தனிமையில் பேச தனிமையில் நான் கடற்கரை மணலில் தென்றல் என்னை வருடி சென்றது ஆனால் மெளனம் கொண்டது தான் ஏனோ..?? தென்றலின் மெளனம் என்னை மெல்ல கொல்ல. இதமாக தென்றல் என்னை வந்து அணைத்து செல்ல.. ஓசையில்லாமல் வந்த இன்னொருத்தி என் கால்களை முத்தமிட்டு சென்றாள். அந்த சுகத்தில் என்னை நான் மறக்க அவள் தன் முத்தத்தால் என் கால்களை நனைக்க.. என் மனம் தடுமாறி தென்றலை மறந்து தென்றலாக அலை பாய. என் காலில் முத்தமிட்டவள் மெல்ல நகைத்த வண்ணம் செல்ல. அவளுடன் நானும் மெல்ல செல்ல அவளுகுள் ஆதவன் மூழ்குவதை கண்டு என் விழி சிவக்க. அவள் மேனி சிவக்க. மீண்டும் என்னிடம் வந்தவள் என் காலை வாறிவிட்டு…
-
- 21 replies
- 7.6k views
- 1 follower
-
-
கடற்புறம் காலமகள் மணலெடுத்து கோலமிட்ட கடற்புறத்தில் ஏழை மகள் ஒருத்தி. முன்னே கடல் விரியும் முது கடலின் பின்னாடி விண்ணோ தொடரும் விண்ணுக்கும் அப்பாலே விழி தொடர நிற்கின்றாள். தாழை மர வேலி, தள்ளி ஒரு சிறு குடிசை; சிறுகுடிசைக்குள்ளே தூங்கும் சிறு குழந்தை ஆழ்க்கடலில் ஆடுகின்ற தோணியிலே தாழம்பூ வாசம் தரைக் காற்று சுமந்து வரும். காற்று பெருங்காற்று காற்றோடு கும்மிருட்டு. கும்மிருட்டே குலைநடுங்கி கோசமிட்ட கடல் பெருக்கு. கல்லுவைத்த கோவிலெல்லாம் கைகூப்பி வரம் இரந்த அந்த இரவு அதற்குள் மறக்காது. திரை கடலை வென்று வந்தும் திரவியங்கள் கொண்டு வந்தும் இந்த சிறு குடிசை, இரண்டு பிடி சோறு, தோணி உடையான் தரும்பிச்சை என்கி…
-
- 14 replies
- 2.5k views
-
-
A POEM WRITTEN IN கடற்புறம் - வ.ஐ.ச.ஜெயபாலன் . 1979ல் எனது யாழ்பாணம் பலகலைக்கழக நாட்களில் எழுதிய கவிதை. முதலில் பல்கலைகழக மாணவர் சங்க அறிவித்தல் பலகையில் ஒட்டப்பட்டது. பின்னர் பெருந்தோழர் டோமினிக் ஜீவா அவர்கள் தனது மல்லிகை சஞ்சிகையில் பிரசுரித்தார். அதன்பின் பலதடவை மீழ் பிரசுரம் செய்யப்பட்டது. மலையகத்தைச் சேர்ந்த தோழி ஞானாம்பிகை ( gnana chitraranjan ) இலங்கை உயர்கல்வித் துறையில் பணியாற்றியபோது பாடபுத்தகத்தில் இக்கவிதை சேர்க்கபட்டதால் இலங்கை தமிழ் ஆசிரியர்கள் மாணவர்களிடையே பிரபலமானது. . இக்கவிதையை தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் கே.எஸ்.சுப்பிரமனியன் ஆங்கிலத்தில் மொழி பெயர்திருக்கிறார் யாரிடமாவது பிரதி இருந்தால் அனுப்பி உதவுமாறு கேட்…
-
- 1 reply
- 759 views
-
-
கடலம்மா கடலம்மா கருணை கொண்ட தாயம்மா அலை மடி மீது தாலாட்டி அமுதூட்டிச் சீராட்டி வளர்த்திட்ட சேயும் நானம்மா…! முடிவில்லாப் பயணங்கள் உன் மடிமீது நாம் செய்தோம் அளவில்லாப் பொறுமை தந்து அருள்பவளும் நீயம்மா…! ஆதிக்க வெறியர்கள் அடுக்கடுக்காய் குண்டுதள்ள உன் வயிற்றில் அவை தாங்கிக் காத்தவளும் நீயம்மா..! அமைதியின் கோலமாய் சீரான அலை கொண்டு கரையோடு மோதுபவளே அழிவில்லா அழகு தந்து அகம் மகிழ அழைப்பவளே அழிவுக்கு வகை செய்ய ஆர்ப்பரித்ததுவும் ஏனம்மா…! இன்று…. கணமும் எங்கள் தொண்டைக்குழிக்குள் சிக்குமந்த ஏக்கத்தின் முதலாய் நீயம்மா…! உறவுகளின் உயிர் குடித்த பூதத்தின் விளை நிலமாய் ஆகினையே ஏனம்மா…?! மடி தாங்கிய மகவுகளின் மகத்தான் உயிர் குடித்து சாதிக்க நினைத்ததுவும…
-
- 5 replies
- 529 views
-
-
கடலலையின் வழிநெடுகே கடலலையின் வழிநெடுகே தத்தளிக்கும் உறவுகள்.. கண்ணெதிரே உயிர்துறக்கும் தமிழர் உடன்பிறப்புகள் படகுகளில் கரையொதுங்கப் பரிதவிக்கும் முயற்சிகள் பாரதத்துக் கடற்கரையில் தினம்தினம் இந் நிகழ்ச்சிகள் என்னவெல்லாம் நடக்குதடா ஈழமகன் காணியில் எமது ரத்தம் கொதிக்குதடா இவற்றையெல்லாம் காண்கையில் சின்னமதிச் சிங்களனின் வெறியடங்க வில்லையோ!.. செந்தமிழன் வாழிடங்கள் சித்ரவதைப் பள்ளியோ?... வாழ்ந்திருந்த தமிழனுக்கு வந்ததென்ன சாபமோ! வரலாற்றின் தலைவனுக்கு அகதியென்ற பட்டமோ! ஊழ்வினையோ, உறுவினையோ, கேட்பதெலாம் உண்மையோ?... ஒருமரத்துப் பறவைகட்கு முடிவிலாத கொடுமையோ?... இந்தியனாய்ப் பிறந்ததனால் தமிழனுக்கு மௌனமா? இலங்கையிலே பிறந்ததனால் தமிழனுக்…
-
- 6 replies
- 1.3k views
-
-
நான் ரசித்த மற்றுமொரு கவிதையை இணைத்து விடுகிறேன். கடலும் நதியும் கடலும் நதியும் ஒருமுறை முரண்பட்டுக் கொண்டன தேடி ஓடி வரும் நதியா தாங்கி ஏற்று நிற்கும் கடலா உயர்ந்தது ? எப்போதும் நீ கேட்கும் எந்த ஆழத்திற்கும் நான் வருவேன் என்றது நதி ! எப்போதுமே சலசலத்து ஓடும் உனக்கு எனது ஆழத்திற்கு வரமுடியுமா என்றது கடல் ! உயர இருக்கும் மலை உச்சிகளிலிருந்து இறங்கி இறங்கி ஓடோடி எவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் நீண்டு விரிந்து மணல் பரப்பி பச்சையாய் விரிந்து என்னை மகிழ்வோடு முத்தமிடக் காத்திருக்கும் நிலத்தை விட்டு விட்டு ஓடோடி வந்தேன் உனக்கு எனது ஆழம் புரியவில்லை அலட்சியப் படுத்தி விட்டாய் என்றது நதி சிரித்தது கடல் சி…
-
- 0 replies
- 1.6k views
-
-
கடலைக் கொத்திய பறவை- உடலிலிருந்து பிரிந்த மென்னிறகை காற்று கடலிடம் சேர்த்தது ராஜாவின் உத்தரவின் பேரில் சேவகர்கள் இறகை இழுத்து வந்து கரையில் எறிந்துவிட்டார்கள் கடுஞ் சினம்கொண்ட பறவை வேதனை மிகுதியால் கடலைக் கொத்தி விழுங்கியது தானியம் என்றுதான் அது கடலை நினைத்திருக்க வேண்டும் எச்சமாகி வெளியேறிவிடும் என்றுதான் மரக்கிளையில் ஓய்வாக அமர்ந்திருக்க வேண்டும் முதன் முதலில் பறவைக்குள் ஆழ் கடல்தான் உற்பத்தியானது அமைதியாக அமர்ந்திருந்த பறவைக்கு கண்ணி குத்தியவர்கள் அப்படித்தான் நினைத்தார்கள் திடீரென பறவைக்குள் அலை அடிக்கத் தொடங்கியது கரையை உருவாக்கிக் கொள்ளுமளவுக்கு இதயத்தில் இடவசதி இருக்கவில்லை கடல் ஸ்தம்பித்துவிட்டது தனக்குள் மிதக்கும் இறகை …
-
- 21 replies
- 2.1k views
-
-
கடல் நுழையும் மணற் பதுங்குகுழி ஒரு பக்கத்து வானத்தில் பெருந்துயர் மிகு சொற்கள் எல்லாருக்குமான பாவங்களைச் சுமக்கும் சனங்களின் குருதி மிதக்கும் துண்டுக் கடலில் கறுப்பு இரவு திரிகிறது. எல்லாவற்றையும் கிடங்கிலிருந்து கழித்து ஓ.. என்ற பெரும் மூச்சை மணல்வெளியில் புதைத்தாய் வானம் தாறுமாறாய் கிழிந்தது. சப்பாத்துகள் நெருக்கி கடலில் தள்ளிவிடத்துடிக்கும் ஒரு துண்டு நிலத்தில் எச்சரிக்கப்பட்டிருக்கும் வாழ்வு மணல் போல உருந்துபோகிறது. எல்லாவற்றையும் இழந்து ஒடிவரும் இரவு சிக்கியது மிருகத்தின் வாயில் எறிகனை கடித்த காயத்திலிருந்து கொட்டும…
-
- 1 reply
- 934 views
-
-
பாய் விரித்து படகெடுத்து பாய்ந்து கடல் ஆண்டவர் பார் முழுதும் தமிழர் என்று போய்த் திரும்பி மீண்டவர் தாய் மடியில் மீண்டெழுந்து நாங்கள் அன்று ஆளுவோம் தாவும் கடல் புலிகளினால் நாளை கடல் ஆளுவோம் ஏறி வரும் பகை யாவும் இனி இல்லை எனும் நிலை ஆகும் மாறி அடித்திடும் காற்று கடல் மீதினில் புலிக்கொடி ஏற்று - நன்றி முகநூல்
-
- 0 replies
- 1.2k views
-
-
-------------------------------- கடல் வழிக்கால்வாய் -------------------------------- .........இயற்கையோடு ஓட்டபந்தையம் ....... ^^^^^^^^^^^^^^^^^ எனக்கும் இயற்கைக்கும் .... ஓட்டப்பந்தையம் ...... எல்லை கோட்டை தொடுவதில் .... கடும் போட்டி ......!!! போட்டியின் தொடக்கமே .... இயற்கை முன்னணி பெற்றது .... சற்று என்னை திரும்பி பார்த்து .... உன்னை படைத்த என்னோடு .... உனக்கு போட்டியா ...? தோல்வியை ஒப்புக்கொள் ... நான் விலகி விடுகிறேன் .....!!! நான் விடவில்லை .... என் முழு முயற்சியையும் ..... பயன்படுத்தி இயற்கையை .... சற்று முந்திக்கொண்டேன் ..... நானும் சளைத்தவனில்லை .... திரும்பி பார்த்து சொன்னேன் .... படைத்தது நீயாக இருக்கலாம் …
-
- 5 replies
- 2k views
-
-
கடல்நாகம் சடை விரிக்கும் காட்சியினை இரசித்தபடி கண்ணாடி மணல்வெளியில் கால் புதைய நடக்கவேண்டும்
-
- 45 replies
- 7.6k views
-
-
உனது துணைவி உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவள் ஆனால் உன் அன்னையோ கடவுளால் உனக்களிக்கப்பட்ட அரிய தொரு பரிசாகும் விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவளுக்காக பொக்கிஷமான தாயைத் தொலைத்து விடாதே...
-
- 8 replies
- 1.2k views
-
-
கடவுளின்_கைபேசி_எண்..? ஐந்துவேளை தொழும் முல்லாக்களே உங்கள் அல்லாவின் கைபேசி எண்ணைத் தாருங்களேன் என்னிடம் சில கேள்விகளுண்டு.. புனித இஸ்லாத்தின் பெயரில் பூவுலகெங்கும் நடக்கும் பயங்கரவாதங்களில் பொசுங்கிக் கருகும் பிஞ்சுக் குழந்தைகள் பெண்களின் கதறல்கள் உங்கள் காதுகளில் ஒருபோதும் விழுவதேயில்லையா..? அரை நூற்றாண்டு காலமாக ஒரு அந்திப் பொழுதுகூட அமைதியாகக் கண்ணுறங்க முடியாத காஷ்மீரத்து மக்களின் கண்ணீரைத் துடைக்க கருணையின் வடிவான உங்கள் கரங்கள் ஏன் ஒருபோதும் நீளவேயில்லை..? ஆறுகால பூஜை செய்யும் அம்பாளின் அர்ச்சகரே அம்பாளின் கைபேசி எண்ணைத் தாருங்களேன் அம்பாளிடம் ஒரு கேள்வி... ஆசிஃபா எனும் அப்பாவிக் குழந்தையை ஆறு …
-
- 8 replies
- 1.5k views
-
-
கடவுளின் ஞாயிறு - கவிதை கவிதை: அ.வால்டர் ராபின்சன், ஓவியம்: ரமணன் ஞாயிறென்றும் பாராமல் இன்பாக்ஸில் தொடர்ச்சியாக வந்துவிழும் வேண்டுதல்களால் எரிச்சலுற்ற கடவுள் தனது கைப்பேசியை எதிர்ச்சுவற்றில் ஓங்கி அடிக்கிறார் இதுவரை நிறைவேற்றிய வேண்டுதல்களுக்காக ஒருமுறைகூட நன்றியை ருசித்ததில்லையென வருத்தம் கொள்கிறார் தான் மிகக் கடுமையான மனஅழுத்தத்தில் இருப்பதாகச் சிதறிக்கிடக்கும் கைப்பேசிச் சில்லுகளைப் பார்த்து ஆவேசமாகக் கத்துகிறார் ஆசுவாசப்படுத்திக்கொள்ள மனிதக்கூட்டத்தில் ஒளிந்துகொள்வது சரியெனப்படுகிறது கடவுளுக்கு பூமிக்குத் திரும்ப நினைத்த மறுகணம் ஒரு புறவழிச்சாலையின் திருப்பத்தில் இறங்கிக் கொள்கிறார் வெயில் சுடும் உடலி…
-
- 1 reply
- 1.9k views
-
-
உன் வலிகளின் பெறுமதி அறிவேன் கண்ணே! சிறகெனச் சொல்லி சிலுவை தந்து சுமக்கச் சொல்வர்! முத்துநகை சிதறிவிழ முள்முடி சூடி அழகு பார்ப்பர்! கருணையுடன் கைகளில் ஆணிகள் கடாவிக் களிப்புறுவர்! எட்டி நின்று எட்டி தந்து குடிக்கச் சொல்வர்! ஏனெனில் கடவுளின் மகள் நீ! என் அன்புச் சகோதரி யாயிக்காக 01 sep 2014
-
- 0 replies
- 749 views
-
-
கடவுளுக்கு ....கேட்குமா ?.... என் குஞ்சுகளும் நானும் பசியால் துஞ்சுகின்றோம் பாவி படுபாதகன் ,குண்டு மழையாக பொழிகின்றான் இரவினில் ,காடுகளில் ,பாம்பு பூச்சிகள் நடு , நடுவே உறக்கமோ , கோழியுரக்கம் ,குடிநீருக்கும் தொலை தூரம் என்னவனை கொன்றது உன் கொடிய செல்வீச்சு ஊர்விட்டு ,ஊர் மாறி , நடந்த காலும் சோர்ந்து போச்சு அக்கினி பிழம்பாக ,கொட்டும் வான வேடிக்கை கண்டு குஞ்சுகள் கலங்கி அழ ,என் நெஞ்சம் படும் பாடு உண்ணவும் முடியவில்லை ,உறங்கவும் முடியவில்லை இன்னும் தான் விடிவுமில்லை ,கொஞ்சமும் இரக்கமில்லை ஏனிந்த வேதனையோ ? எவ்வளவு காலத்துக்கோ இந்த நெஞ்சு கூடு வேகமுன் ,கொஞ்சமேனும் இரக்கம் உண்டா தாய் இழந்தேன் தந்தை இழந்தேன் ஊர் இழந்தேன் உற்றார் …
-
- 7 replies
- 1.4k views
-
-
கடவுளே, நாம் பறந்தால் எம்மை கழுகாக்கு, நாம் நீந்தினால் எம்மை சுறாவாக்கு, நாம் கடித்தால் எம்மை முதலையாக்கு, நாம் பிராண்டினால் எம்மை கரடியாக்கு, நாம் சிந்தித்தால் எம்மை நரியாக்கு, நாம் ஓடினால் எம்மை சிறுத்தையாக்கு, நாம் சீறினால் எம்மை புலியாக்கு, நாம் கொத்தினால் எம்மை நாகமாக்கு, நாம் மிதித்தால் எம்மை யானையாக்கு, நாம் முட்டினால் எம்மை எருமையாக்கு, நாம் பிறந்தால் எம்மை தமிழராக்காதே! நன்றி, விடை பெறுகிறேன். குளவி பி. கு: யாழ் கள உறவுகளுக்கு, குளவி கலைந்தாலும், யாழ் கூட்டை சுற்றி சுற்றி பார்க்க வரும். பி.பி.கு: குளவி குழவியாக குலவி வைத்து கலையவில்லை. தமிழக வார இதழில் ஆறு வருடங்கள் ஈசனாக இருந்து, ம…
-
- 29 replies
- 2.8k views
-
-
கடவுளுக்கோர் கடிதம் எல்லாம் வல்லவராம் எல்லாம் தெரிந்தவராம் எல்லாம் செய்பவராம் எங்கும் இருப்பவராம் அகிலத்தில் வாழ்பவர்கள் அப்படித்தான் சொல்லுகின்றார் ஆனாலும் என்னிடத்தில் அடுக்கடுக்காய் பலகேள்வி மனச்சிறையில் இதைப்போட்டு மறுவிக் கொள்ளாமல் மனந்திறந்து கேட்டுவிட மடலிதனை வரைகின்றேன் அண்டத்தை ஆள்கின்ற ஆண்டவன்உன் செயல்களுக்கு காரணத்தை அறியாத காரணத்தால் ஒருகடிதம் அடுக்காத செயல்செய்த அநியாயக் காரனைப்போல் தலைமறைவாய்ப் போயிருக்கும் தங்களுக்கே இக்கடிதம் முறையாக அனுப்பிவைக்க முகவரியும் தெரியாது இரகசியமாய் அனுப்பிவைக்க இருக்குமிடம் தெரியாது திருமுகத்தை அனுப்பிவைக்க திசைதெரியாக் காரணத்தால் திறந்த மடலாகத் த…
-
- 34 replies
- 4.5k views
-
-
ஏன் படைத்தாய் இறைவா என்னை ஏன் படைத்தாய் ஏன் வதைத்தாய் இறைவா என்னை ஏன் வதைத்தாய் பாவி ஜீவனாக என்னை ஏன் இறைவா நீ படைத்தாய் பரலோகத்தில் ஏன் என்னை ஏற்கமறுத்தாய் ஏன் இந்த பூலோகத்தில் என்னைப் படைத்தாய் நான் உன்மீது கொண்ட அன்பினாலா என்னை உதைத்தாய் பாவம் அறியாத என்னை ஏன் இந்த சாத்தானின் பூமியில்படைத்தாய்
-
- 2 replies
- 962 views
-
-
கடவுளே உனக்கு கண்ணில்லையோ? கடவுளுக்கும் கண்ணில்லையோ -அது கல்லாகிப்போய் கன காலமோ! குந்த ஒரு குடிநிலம் கேட்டது பிழையோ -அதுக்கு தமிழீழம் எண்டு பெயரிட்டதுதான் தவறோ? அடிச்சவனை திருப்பி அடிச்சால் குற்றமோ?-நாங்கள் அழுதுகொண்டே செத்துபோவதுதான் விதியோ? தமிழராய் பிறந்ததுதான் தவறோ?-தமிழன் கேக்குறதுக்கு நாதியற்ற இனமோ? இன்னும் எத்தின நாளுக்குதான் அழுவமோ?-இதை கேக்குறதுக்கு யாருமில்லா உலகமோ? நாடு நாடாய் அலைவதுதான் கதியோ? அகதியாய் செத்துப்போவதுதான் முடிவோ? நீதி என்ன ஒரு நிறத்துக்கு மட்டுமோ? -அது தமிழருக்கு ஒரு நாளும் கிடைக்காதோ? மனிதாபிமானம் செத்து கனகாலமோ? -அதை குழிதோண்டிப்புதைத்தவர்கள் தான் பெரிய ஆக்களோ? விடுதலை கேட்பது பயங்கர…
-
- 6 replies
- 886 views
-
-
பகட்டான கோயில் அமைத்தோமே -நாம் பங்கரில் வாழ்வது தெரியவில்லையா பொங்கலும் படையலும் படைத்தோமே - இன்று பொங்கும் எம்கண்ணீர் தெரியவில்லையா பாலால் அபிஷேகம் செய்தோமே -குழந்தை பாலுக்காய் தவிப்பது தெரியவில்லையா பண்டிகையும் திருவிழாவும் செய்தோமே -நாம் குண்டினால் சாவது தெரியவில்லையா தேரில் வைத்து இழுத்தோமே -நாம் தெருவில் நிற்பது தெரியவில்லையா பன்னீரால் தீர்த்தம் கொடுத்தோமே -நாம் செந்நீரில் தோய்வது தெரியவில்லையா பூங்காவனத் திருவிழா செய்தோமே - இன்று தூங்காத எம்துயர் தெரியவில்லையா நமசிவாய என்று துதித்தோமே - காற்றில் நச்சுவாயு வருவது தெரியவில்லையா மேளமும் தாளமும் இசைத்தோமே -இன்று மரணஓலம் இசைப்பது தெரியவில்லையா கண்ம…
-
- 9 replies
- 1.8k views
-