Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. என் இதயமே எங்கு செல்கிறாய் என்னை பிரிவதில் இன்பம் கொள்கிறாய் தன்னம் தனிமையில் நான் தவிக்கின்றேன் எந்தன் இளமையை இன்று வெறுக்கின்றேன் அடி பூவாய் வந்தாய் புயலாய் சென்றாயே புரியவில்லை சகியே ...... இது நியமா என்று நிழலினை கேட்கிறேன் விடியவில்லை சகியே ............ கண் மூடி வாழ்கிறேன் கனவில் கண்ணோடு வாழ்கிறாய் நினைவில் அடி பொய்யாகி போனதே உறவு - பெண்ணே மெய் தானா உந்தன் பிரிவு என் மெய்யான சோகம் உன் மனம் அறியவில்லை அன்பே உன்னை சுடும் வரை நீ வெயிலென இங்கு எரியும் நிலவு நானே அன்பே ஆசை என்னும் வலியுடனே நடை பிணமாய் தெருவில் திரிகிறேன் அடி காரணம் அற்று கழட்டி விட்…

  2. “திணை” செப்டம்பர் 2016 இதழில் வெளியாகியுள்ள எனது மூன்று கவிதைகளை, யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்கிறேன். யாழ் தோழர்களின் வாசிப்பும், கருத்துகளும் கவிதைத் தளத்தில் என்னைத் தொடர்ந்து இயங்கவைக்கின்றன. ஸ்டிக்கர் --------------- மாபெரும் தீர்க்கதரிசிகள் மறைந்துவிட்டார்களென்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள் உங்கள் கண்முன் உலவும் தீர்க்கதரிசிகளைத் தவறவிடுகிறீர்கள்! இப்போதெல்லாம் தீர்க்கதரிசிகள் வெளிப்படையான நீதிபோதனைகளை வழங்குவதில்லை. நவீன உலகுக்கேற்ப நீதிகளை மறைபொருளாக வழங்குகிறார்கள். மதுக்கோப்பைகளில் நீங்கள் ஒட்டிக்கொள்ளும் இஷ்ட தேவதையின் ஸ்டிக்கர் குடிநோயாளி ஆவதிலிருந்து காக்கும். குறைந்தபட்சம் கோபத்தில் கோப்பை உடைபடுவதையாவது தடுக்கும். சிகரெட் பெட்ட…

  3. சிங்காரச் சிறகு விரித்து சிறகடித்த வானம் அழுகிறது.. நர்த்தன நடை பயின்று நடந்து திரிந்த பூமி கனக்கிறது.. சுதந்திர வானில் உயரப் பறந்த நீங்கள் உயிரற்ற உடல்களாய் உடை களைந்து கிடந்தீர் அங்கே... புதையுண்டு போன உண்மைகள் விக்கித்து நிற்கின்றன காட்சிகளோடு.. வினாக்கள் மட்டுமே மிச்சமாய்..! தமிழீழ மண்ணில் சென்ரி போட்டு தாய் நிலம் காத்து நின்று மக்கள் கையெடுத்து கும்பிட்ட வாழ்ந்தீர்..! இறுதியில்.. தாயக பூமியில் பேரினப் பிசாசுகளின் அடிமை விலங்கு உங்களை... விலங்கிலும் கேடாய் நசுக்கிக் கொல்ல கையறு நிலை சென்றோம் நாம்..! இன்று முற்றே கைவிட்டு விட்டோம் தப்பியோர் உம்மில் பலரை நட்டாற்றில்..! தேச விடுதலை என்றும் மகளிர் விடுதலை என்றும் அடுப்படிக்கு ராரா எ…

  4. வாழும் பூமி, வைகறை கவ்வும் சாகும் போதினில் தன்னிலை எண்ணும் வாசம் செய்ததும், வனத்தில் சாகசம் புரிந்ததும் ஏன் இன்னம் அடக்கம்? காசு இல்லையே! கைகளில் காசு இல்லையே!! காத்திட வாடா தமிழா!!! மறத்தமிழன் நீயோ மரத்தமிழனாகின்றாய் குறைத்தமிழ் ஏனோ கதைத்து தமிழ்க் குடும்பத்தை அழிக்கின்றாய் வெட்டுவேனாம், பின்பு காட்டுவேனாம் அதிலும் ஆயிரம் முறைகள் நொட்டுவேனாம் கத்துவேனாம், கூடவிருந்துவிட்டு குத்துவேனாம் என்று சொன்னவனெல்லாம் கூடு கூட இன்றி குறுகிக் காய்கின்றனர். வாழவிடம் இன்றி வசைபட்டு சாகின்றனர். ஆயிரம் பாயிரம் எழுதினாலும் ஆசைகள் குறைவதில்லை ஆசைகள் எட்டித்தான் வானத்திற் பறந்தாலும் மழைகளும் பொழிவதில்லை காலத்தின்…

    • 7 replies
    • 1.9k views
  5. கனவு .! காண்பவை எல்லாம் காட்சிகள் அன்றி நிஜம் இல்லை அப்படி ஒன்று இருத்தால் உழைப்பு ஒன்று இருக்காது ..!! நான் .! நான் எனக்கு சொல்லிக்கொள்ளும் மந்திர சொல் எனக்கு நான்தான் என்பதே .. உலகம் என்னால் மட்டும் தான் முடியும் என்கிற திமிர் இந்த நினைப்புதான் உலகத்துக்கு.. என்னால் மட்டும் மாற்ற முடியும் என்ற நினைப்பு எனக்கு இதில் யாரு வலியவன் யாரு எளியவன் ......?????? பூ .! அழகின் ஆரம்பம் முடிவும் அதுதான் மாலையில் உதிர்த்து விடுவதால் ...!!! கோவம் .! ஏனோ எனக்கு அடிக்கடி வருகிறது கோவம் ஏழையை எவனாவது திட்டினால் உடன் வருகுது முரட்டு கோவம்... சிறு பிள்ளையை யாராவது கைநீட்டி அடித்தால் அக்கணம் வருகுது பாச கோவம்... என்னேருவனை கேலி பண்ணினால் வருகுது பழிவாங்க…

  6. தமிழீழம் செல்லும் வழியில் ஒரு பாறாங்கல்........ அந்த வழியால் வந்தனர் தமிழ் அரசியல்வாதிகள்... சம்பந்தம் இல்லாமல் ஒரு அரசியல்வாதி சொன்னார்.... "இதற்கு வழி, தெரியவில்லை. ஒரே வழி திரும்பி செல்வதே!" தவளை வாயை திறந்து ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு பாதுகாப்பை திருப்பி தருவதே!" தொண்டைய கனைத்து ஒரு அரசியல்வாதி சொன்னார்..... "இதற்கு வழி, போட்ட நாராயணனை வைத்து கல்லை தூக்குவதே!" வெள்ளை வானில் வந்த ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எதிரியின் தலைவனின் காலில் உருண்டு புரள்வதே!" கருணை இல்லாத ஒரு அரசியல்வாதி சொன்னார்....."இதற்கு வழி, எனக்கு எதிரியிடம் உபதலைவர் பதவி பெறுவதே!" வாகன விளக்கை பார்த்த (தொங்கு) மான்கள் போல்... கல்லை பார்த்து பேச…

    • 5 replies
    • 1.6k views
  7. Started by Kavian,

    நிதம் என் விழிகள் உன்னருகே விழுகிறதே, திசை தெரியா என் மனது உனக்காக ஏங்குகிறதே, சொற்களால் வரைய இது வாழ்க்கைக் குறிப்பா வார்த்தைகளால் வளைக்க இது வீரத் தழும்புகளா வானத்திற்கு வளையல் போடும் செயல், எளிதல்ல ஆனாலும் எண்ணம் ஏற்றமுடையது சிந்தித்து அடைகாக்க இது அவையுமல்ல, கைகள் பேச நிதம் பதில்கூறவேண்டும்.... திங்கள் மடிந்து ஞாயிறு மலராது, உன்னை பிரிந்து நானும் வாழமுடியாது.... கற்பது காதலாயினும் கற்பிப்பது என் தேவதையே.... அடிப்பது எதிர் நீச்சலாயினும் நீந்துவது அவள் மனதிலே.

  8. கனவு உப்பிய நெஞ்சறை – தீபச்செல்வன்:- ஒரு சோடி பட்டாம் பூச்சிகள் திரும்பாத திசையிற் சன்னம் தைத்துக் கிடந்தது கனவு உப்பிய நெஞ்சறை. உயிருக்கு மதிப்பற்ற நகரில் சக்கரங்களிலும் சப்பாத்துக்களின் கீழும் நசிந்தொட்டிய வெற்றுடல்கள். அவர்கள் நினைத்திருக்கக்கூடும் இத் தெருக்களுக்கு இரத்தம் புதிதல்ல சுடுகலன்களை நீட்டுவதும் அதிசயமல்ல கொல்வது இங்கு பிரச்சினையே இல்லை. குருதியில் தோய்ந்த பின்னிரவில் பிசுபிசுத்தன உருளும் பந்துகளும் சில்லுட…

  9. வண்ண முகம் கொண்டவளே வடிவழகு யாழ்களமே கண்ணழகு கொண்டவளே கருத்தூன்றிப் பார்ப்பவளே பன்முகம் கொண்டவளே பவளவாய்ச் சொல்லமுதே பாடல் புனைகின்றேன் பாராட்ட உன்னையடி பதினாறு வயதில் பாவைநீ பார்த்து மயங்கிடும் அழகோடு பருவ எழில் பொங்க பார்ப்பவரை உன்பின்னே அலைய வைக்கின்றாய் கோல மயில் உன்னழகைக் கண் குளிரக் காணவென்றே கோடி மக்கள் நாடித் தினம் காலநேரமின்றி கண் விழித்து வருகின்றார் கருத்தூண்றி உன்னைக் கவனித்தும் வருகின்றார் தம் திறமை காட்டி உன்னைக் கவர்ந்திட தம்மால் முடிந்த வரை உன் தாள்களில் வரைகின்றார் ஆசை மனம் காட்டி ஆவலொடு நிதமும் ஆர்பரிக்க நிற்கின்றார் ஆனாலும் நீயோ பகட்டில்லாப் பாவை அனைவரையும் அரவணைத்து ஆசைமுகம் காட்டாது அன்பு மனம் காட்டி ஆண் பெண் பேதமின்றி அணைத்த…

  10. பதக்கடச் சாக்கு... பட்டுச் சேல பள பளக்க.. பொட்டிக்குள்ள கம கமக்க - புள்ள புரிசனுக்கு - நீயும் சோறு கறியா கொண்டு போறாய்...? வெயில்ல ஒம்புரிசன் புழுங்கிப் புழுங்கி நிப்பாருண்டு குலுங்கிக் குலுங்கி நீயும் ஓடோடிப் போறாய் போல... சும்மாடு பிரியிற அளவுக்கு - நீயென்ன கோழிக் கறியா கொண்டு போவாய்...? ஆசக்கி அறுத்தாப்புக் கெழங்கும் பொட்டியான் பொரியலுந்தானே..! பொச்சாப்பொல - நீயும் பொரிச்சிக் கொண்டு போவாய்... மாட்டின் சேட்டையிம் மருதமுனச் சாறனையிம் மடிச்சி மச்சான் பொரயில போட்டுப்பொட்டு வீடியும் வாயுமா மம்பட்டியும் கையுமா வெம்பி வெம்பி நிப்பாருண்டு தேம்பித் தேம்பிப் போறாய் போல... புது மாப்புள புறு புறுப்பாருண்டு புசு புசுன சமச்செடுத்து ச…

    • 6 replies
    • 2k views
  11. வெறி பிடித்து திரியுது பார்... சிங்கள இனம்- இங்கே சொறி பிடித்து அலையுது பார்... சில தமிழரினம்! கொள்கை என்று குழு பிரிந்த குரங்குக் கூட்டம்-இப்ப கொப்புத் தாவி போனது பார்... கொள்கை வேஷம்! இருந்தாலும்.... மக்களுக்காய் மடிகின்ற மறவர் கூட்டம்! எதிரி வந்தால்தான்-பதில் அடி கொடுப்போம்.... என்குது பார்..! அன்று தொட்டு இன்றுவரை பேச்சு வார்த்தை இடை..இடையே.... எல்லைச் சண்டை....! எதிரி அழைப்பது.... இப்ப-போருக்கு இன்னும் நாம் சொல்லவில்லை இ....தோடா வாறம் என்று! இன்னும் எதற்காக வெயிற்ரிங்.... அடிக்கின்ற மணிக்கும்.. பாடுகின்ற குருவிக்கும்... செயலால காட்ட வேணும்.... இறுதி போரிங்கு …

  12. கரும்புலி அலையோடு அலையாகி படகேறினாய்.... அந்த அன்னியரின் கலமதுவை சமராடினாய்.... உடலோடு வெடி சுமந்து உயிர் வீசினாய்..... உன்னத விடுதலைக்காய் உயிர் நீக்கினாய்... கரும்புலி ஆகியே களமேறினாய் அந்த கரிய பகை கலங்களையே சிதையேற்றினாய்... வீரத்தின் வீடுதலைக்காய் நீ ஆடினாய்.... எங்கள் உயிர் காத்திடவே நீ ஓடினாய்.... அந்த விடுதலைக்காய் உன் உயிரை நீ நீக்கினாய்... சாவறிந்தும் சாகமால் சமராடினாய்.... வரலாற்றில் சரித்திரமாய் நீ பதிவாகினாய்..... தற்க்கொடை ஆளியாய் நீ உருவாகினாய்..... 01-09-06 தாளையடி கடற்ப்பரப்பில் வீரமரணம் ஏய்திய 5 கரும்புலிகள் உட்…

  13. முகப் புத்தகம் இணைய இணைப்புகளிட்கு இங்கு அவசியம் இல்லை இதய இணைப்புகள் இருந்தால் போதுமே - உன் முகப்புத்தகத்தை தரிசிக்க . உனக்கு மட்டும் நண்பர்களை பரிந்து உரைக்க மாட்டேன் உலகமே என்னை மட்டும் நண்பனாக உனக்கு பரிந்து உரைக்கட்டும் . உன் சிரிப்புகளை அப்லோட் பண்ணுகின்றாயே சிதறிப் போகின்றேன் சில்லறைகளாக . புறநிலை எல்லாம் புறம் தள்ளிவிட்டு -உன் புரபைலினை மட்டும் உச்ச்சரிகின்றேன் . துனிசியா ,எகிப்து ,லிபியா முகப் புத்தகம் வீழ்த்திய இராச்சியங்கள் உன் முகப்புத்தகம் வீழ்த்திகொண்டிருக்கும் பூச்சியம் நான் மட்டும் . by Jeyashankar Somasundaram

  14. உந்தப் பழைய பேப்பரை வைச்சு என்ன செய்யப்போறியள்? இது எங்கட சொந்த வீடேயப்பா? வீடு மாறேக்கை பிறகு எல்லாத்தையும் கொண்டு திரியேலாது................ என்றதும் ஒருமுறை வெள்ளம் கெல்லருக்குள்(நிலவறைக்குள்) புகுந்ததில் நனைந்தவை போக மிகுதியாக இருந்த எரிமலை, விடுதலைப்புலிகள் போன்றனவற்றைத் தட்டிப் பார்த்தேன். மனம் கனமானது. எப்போது எரிமலை, விடுதலைப்புலிகள் வரும் என்று எதிர்பார்த்திருந்த காலமொன்று இருந்தது. ஆனால் இன்று.......... அவற்றில் காலம் கடந்தாலும் இன்றைய காட்சிகளோடு அப்படியே பொருந்துகிறது. உலைக்களத்திலே வியாசனவர்களால் 2003 இல் எமுதப்பட்ட கவிதையான " கை தவறிப் போகிறது எம் காலம்" ஆம்! இப்போதும் அதே நிலமைதான்.............. படித்துப்பாருங்கள் யாழ்க் கள உறவுகளே! …

  15. காதல் காதலே உனக்கு கண்கள் இல்லை உண்மைதான் நீ பாதை மாறி முறை கெட்டு வாழ்கின்றாய் காதலே காதலுக்காய் காதலர்களை சிதைத்து சேகத்தின் கடலில் முழ்கடித்து கரையில் நின்று சிரிக்கின்றாய் காதலே உன்னால் குடும்பம் பகையாகி உறவு தூரமாகி தனிமை கொடுமையாகி வாழ்க்கை சுமையாகி வாழ வைக்கின்றாய் காதலே காதலை வாழவைக்க காதலை சாகடித்து கண்ணீரில் முழ்கடித்து எதிர்காலம் வீணாவதேன் காதலே கணவனுக்கோர் காதல் மனைவி க்கோர் காதல் குழந்தை அநாதையாய் வாழ்விழந்து நிற்பதேன் காதலே நீ யே வாழ்க்கையல்ல வாழ்க்கையே போராட்டம் போராட்டமே நீயானால் வாழ்க்கை வெறுமையாய் வெறுத்து போவதேன் காதலே உண்மையே நீயானால் வந்துவிடு பொல…

  16. சுதந்திரம் வரும் ஒருநாள் நம் கௌரவமும் அன்று வரும் தமிழீழம் புதிய சூரியனாய் உலகுக்கு உதயம் தரும் அந்த நாள் காண நான் இருப்பேனா ஏங்குகிறேன் ஆயிரம் ஆண்டுக்கு ஒருமுறை பிறப்பாராம் வீரத் தலைவர்கள் தமிழீழத் தலைவன் அவன் நீடுழி வாழ வாழ்த்துகிறேன் என்ன விநோதம்! காலம் ஏன் இப்படி கடுகதியில் ஓடுகின்றது தம்பி என்று அழைத்தவர் இன்று அருகி உன்னை பலர் அண்ணன் என்று அழைப்பது எனக்கு அதிசயம் ஆம், அதுவும் பாசம் தான் ஆனால் எனக்கு நெஞ்சம் துடிக்கிறது மேலும் விரைந்து நடக்கிறேன் செய்ய முடிந்ததை நான் செய்தபின் தான் மடிவேன் மேலும் வேண்டும் உத்வேகம் புத்துணர்வு வாசலில் நிற்கும் புதிய சமுதாயம் அதன் கையில் பொறுப்புகளை அர்ப்பணித்துச் செல்வோமா பூமி அது காத…

  17. அன்று அடைமழைகாலத்தில் அழுதகண்ணீர் ஆழக் குழியில் விதைத்த விதைகளை நனைத்து உயிர்ப்பித்தது. இன்று விதைத்த விதைகளை தோண்டி எடுத்து வித்தை காட்டும் காலம் தோப்பாக வேண்டிய விதைகளை முளைக்கக்கூட விடுவதில்லை அறுபடைக்காக அன்றி அடையாளத்திற்காக விதைத்த வயலுக்குள் மீண்டும் நூறுவகைத் தானியத்தை விதைக்கின்றார்கள் எதுவும் முளைக்கவும் வளரவும் முடியாமல் செத்துப்போகின்றது தன்னை விட பெரிய சாணி உருண்டைகளை தள்ளிக்கொண்டுபோன வண்டுகள் தந்த நம்பிக்கையை கூட எதுவும் தருவதில்லை மாமரத்தடியில் ஈன்ற கன்றின் துவாலைகளை நக்கும் தாய்ப்பசு போதித்த பரிவுபோல் எதையும் எங்கும் உணர்வதில்லை கோடிக்குள் இருந்த கோழிக்கூட்டில் கக்காவுக்கு கூட போகாமல் அடைகாத்த…

  18. குருவிக்கு வேண்டுகோள் : ஞானக்கூத்தன் கூடுகட்ட விடமாட்டேன் சின்னக் குருவியே! என் வீட்டு சன்னல்கள் திறந்திருக்கக் காரணம் பருவக் காற்றுகள் உள்ளே வர எஞ்சிய உணவின் வாசம் மறையவும் துவைக்கப்படாத துணிகளின் வாடை போகவும் இன்னும் ஏதோ ஒன்று என்னவென்று தெரியாத ஒன்றின் சிறு நெடி போகவும் பருவக்காற்றுகள் உள்ளே வீசத் திறந்துள்ளன எனது சன்னல்கள் எனது வீட்டுக்குள் வருவோர் தனது வாசத்தோடு வந்து போகிறார் திரும்பிப் போகும் போது அதிலே கொஞ்சம் விட்டு விட்டே போகிறார் தெரியுமா? சன்னல் வழியே சிறகை மடக்கி வர முயலாத சின்னக் குருவியே கூடு கட்டப் பொருந்தி இடங்கள் இல்லை குருவியே எனது வீட்டில் நாட்டின் வளர்ந்த மரங்கள் எல்லாம் என்ன ஆயின? நீயேன் கூட்டை…

  19. பூவால் குருவி நெஞ்சுக்குள் தொலையாதிருந்து ஒரு சிற்றாறாய் ஊருகின்ற என் முதல் காதல் பெட்டை ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி. பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில் வன்னிக் கிராமத் தெருவொன்றில் வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும் பொன் சருகை கலையா முகமும் இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய் போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு போட்டிச் சிறு நடையில். அது என்ன போட்டி. காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய். அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய். என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில் இன்று நீ அன்னை. நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும். ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான். இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும் …

    • 18 replies
    • 2.9k views
  20. ஜம்மு பேபி மிகவும் விரும்பி படிக்கும் கவிதைகளிள் புதுவைஇரத்தின துரை அண்ணாவின் கவிதைகள் தான் முதலிடத்தில் அடங்கும் அந்த வகையில் இந்த பக்கத்தில் நான் புதுவைஇரத்தின துரை அண்ணா எழுதிய கவிதைகளிள் என்னை மிகவும் கவர்ந்த கவிதைகளை இணைக்கிறேன் !!அவர் எழுதிய கவிதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் அழகு அதிலும் எனக்கு பிடித்த கவிதைகளை இங்கே இணைக்கிறேன் .........முதலாவதாக நான் தெரிவு செய்யும் கவிதை "காதல் பற்றிய ஒரு கவிதை" எவ்வளவு அழகான வரிகள் கற்பனை என்பதை நீங்களும் வாசித்து பாருங்கள்!! காதலிக்க கற்று கொள்!! காதலே உன்னதம் காதலே பரிபூரணம் காதலே நேசிப்பின் "நிலாவரை" ஆதலால் மானுடனே! காதல் செய்வாய். காதலிப்பதென்று முடிவெடுத்து விட்டாயானால்' யாரை காதலிக்கலாம்? …

    • 0 replies
    • 2.6k views
  21. கண்ணீரே கதியென்றான இனமொன்று... தன் தண்ணீருக்கு போராடும் நிலைமை பாரேன்! செந்நீர் சிந்திய இனமன்று... அதே செந்நீரில் மூழ்கிப் போனது பாரேன்! மலையாள மாந்திரீகம் டெல்லிவரையென்ன... உன்னையும் ஆட்டிப்படைக்கும் பாரேன்! தமிழா!!!!!!!!!!!! கண்ணீரே கதியென்று கிடவாதே! செந்நீரில் குளித்தேனும்... செம்மொழியர் நாமென......... செயலில் காட்டுவோம்!! நீ எரியாதே... எரி! அடி வாங்காதே... அடி!! பணியாதே...... மிதி!!! மனிதச் சங்கிலிகளை... நாடகமேடைகளில் போடாதே! பட்டினிப் போரை மணிக்கணக்கில்..... நடிக்காதே!! நீ உனக்காகப் போராடு! இனிமேல் இல்லை....... எம் பொறுமைக்கும் எல்லை!! பொறுத்தது போதும்........! பொங்கியெழு தமிழா!! தமிழன் எங்கு அடிபட்…

  22. 27.8.15 ஆனந்தவிகடனில் சொல்வனம் பகுதியில் "மந்திரக்காரி" என்ற எனது கவிதை வெளியாகியுள்ளதை, தளத்தின் தோழர்களிடம் பகிர்ந்துகொள்கிறேன். மந்திரக்காரி! என்னை ஒரு நாய்க்குட்டியாக இருட்டில் உருட்டும் திருட்டுப் பூனையாக தலையணை மெத்தையாக கண்ணீர்த்துளிகளை ஒற்றி மூக்கைச் சிந்தும் கைக்குட்டையாக மாற்றிக்கொள்ளும் மந்திரக்கோல் அவளிடம் இருக்கிறது. பிறர் காணும்போது அவளை ஆட்டுவிக்கும் மந்திரவாதியாகவும் என்னை மாற்றிக்காட்டும் மாயவித்தைக்காரி அவள். வார நாட்களில் என்னை நானாக்கி வாசல் நிலையில் சாய்ந்து நின்று வழியனுப்பிவைப்பாள் மந்திரக்கோலை முதுகில் மறைத்து! - சேயோன் யாழ்வேந்தன் நன்றி: ஆனந்த விகடன்

  23. Started by வெண்ணிலா,

    அன்பே வா...... நீயும் நானும் அன்போடு நீண்ட காலம் இன்போடு உறவு என்ற ஓடத்தில் ஏறி உல்லாசமாக ஒன்றாக உலகைச் சுற்றி ரசிக்கணும் என உறக்கத்தில் கனவு கண்டேன் உன் பொல்லாத கோவம் கண்டு என் கனவு நனவாகா என இன்றுதான் உணர்ந்தேன் நான் அன்று போலில்லை நீ என்பதை எப்போதும் இனிமையாக இருந்தேன் தப்பேதும் நான் செய்ததறியேன் வேண்டாம் என்மேல் அன்பே வீணான கோவம் உனக்கு துன்பங்கள் புடைசூழ நீயின்றி துவண்டு துடிக்கின்றேன் உனைப்போல் வேறோர் துணையின்றி ஊனை மறந்து கலங்குகின்றேன் விட்டுவிடு உன் கோவமதை கட்டியணை பாவியிவளை கெட்டிக்காரி என அடிக்கடி தட்டிக்கொடுப்பவனே அடிமேல் அடிவைத்து உனக்கு நடை பழக்கிய உன்னவளை இடி ப…

  24. 01 அடை மழை பெய்கிறது. கூரைகள் வழியாக ஒழுகும் மழை நீருக்கு குழந்தைகள் பாத்திரம் வைக்கிறார்கள் . மின்சாரம் தடைப்படுகிறது . விறகுகள் நனைந்து விட மதிய உணவும் கனவாகி விடுகிறது. நாய் பூனை கோழிகள் எல்லாம் நனைந்து நனைந்து நடு வீட்டிற்குள் வருகின்றன. கிணறு நிரம்பி பக்கத்து வாய்க்காலோடு கலக்கிறது. சாக்கடை நீர் மணக்கிறது. பாடசாலை கொப்பி புத்தகங்கள் பாதுகாப்பிற்காக அடுப்படி பரணில் வைக்கப்படுகிறது. கோதுமை மா பையை தலையில் போட்டுக் கொண்டு காயவிடப்பட்ட துணிகள் எடுக்கப்படுகின்றன. மரங்கள் முறிவதும் தவளைகள் கத்துவதும் கேட்டுகேட்டு அலுத்து விடுகிறது. இரவுப் படுக்கைக்கு பக்கத்து கோயிலுக்கு போவதாக எல்லோரும் முடிவு எடுக்கிறார்கள். 02 அடைமழை ப…

  25. ஓய்வு நாள் ஒன்றின் மாலை நேரம் சோகச் சுமைகளால் மனதில் பாரம் இரு மருங்கும் மரங்கள் நிறைந்த வீதி ஓரம் என் கால்கள் நடந்தன வெகு தூரம். 'ஏ... கால்களே, நாம் போகும் இடம் எதோ?' வேதனையான மனம் கால்களைக் கேட்டது. 'ஏதுமறியா என்னை மூளை தான் ஏவியது' வேலையாள் கால்கள் சொன்ன பதிலிது. எண்ணிவிட்ட கருமத்தில் மூளை முழு மூச்சாக, புண்பட்ட மனமோ வேதனையில் சோர்வாக, நீண்ட தூர பயணத்தால் கால்களும் தடுமாற விண்ணுயர்ந்த மலைச்சாரலை அடைந்தது என் பயணம். நுரை ததும்ப சலசலத்துப் பாயும் மலையருவி, இலையுதிர்த்து பூக்களை மட்டும் தாங்கி நிற்கும் மரங்கள், இவற்றிடையே மனதை வருடும் சிரு குருவிகளின் இனிய கானம் இயற்கையின் இவ்வெழிலில் தனை மறந்தது எந்தன் மனம்! 'என் சோகத்தை மறக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.