Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதைப் பூங்காடு

கவிதைகள் | பாடல் வரிகள்

பதிவாளர் கவனத்திற்கு!

கவிதைப் பூங்காடு பகுதியில் கள உறுப்பினரல்லாதோரின் கவிதைகள், கவிதை மொழியாக்கம், உலகக் கவிதை, பாடல் வரிகள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள உறுப்பினர்கள் அல்லாதவர்களின் கவிதைகள், கவிதை மொழியாக்கங்கள், பாடல் வரிகள் போன்றன மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
ஈழத்தை சேர்ந்த, பூர்வீகமாகக் கொண்டவர்களின் படைப்புக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும். ஏனைய கவிதைகள் தரமான கவிதைகளை அறிமுகம் செய்யும் நோக்கில் இலக்கிய மின் இதழ்களில் இருந்து மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. நெற்றிப் பொட்டை கழற்றி எறிஞ்சா விடுதலை கட்டுற சேலைய கழற்றி விட்டா விடுதலை நீண்ட கூந்தலை கத்தரிச்சா விடுதலை பியர் போத்தலை முழுசா இழுத்தா விடுதலை கட்டின மனிசனை கழற்றிவிட்டா விடுதலை கலியாணம் ஆகாமலே கருத்தரிச்சா விடுதலை கருவில உள்ளத்தை கலைச்சிட்டா விடுதலை கைகோர்த்து திரிஞ்சிட்டு கைவிட்டு கைபிடிக்கிறது விடுதலை போய்பிரண்டு வைச்சிருந்து கறந்திட்டு விட்டா விடுதலை படிக்க என்று பள்ளிக்குப் போய் வம்பளந்தால் விடுதலை பஸ்ராண்டில கும்பலா லுக்குவிட்டு இழிச்சா விடுதலை ரேக் எவேயில சாப்பாடு வாங்க உழைக்க போனா விடுதலை அங்கங்க அங்கங்கள் தெரிய உடுப்புப் போட்டா விடுதலை பெண்ணும் பெண்ணும் கல்யாணம் முடிச்சா விடுதலை காங் கூட சேர்ந்து கஞ்சா…

  2. கங்காரு மண்ணில் ஒரு கடமை வீரன் விடுதலை நேசித்த வெள்ளைச் சிரிப்பு வீரத் தலைவனின் அன்பின் விரிப்பு இடர்களைச் சந்தித்தும் இயங்கிய நெருப்பு இழந்தோமே உங்களை எங்களில் தவிப்பு. நல்ல மனிதநேயம் தாங்கிய ஜீவன் வல்லமை உழைப்பினை வழங்கிய வடிவன் சொல்லிடும் முன்பே செய்திடும் தீரன் தில்லை ஜெயக்குமார் எங்களின் வீரன். அமைதியான தோற்றத்துள் அக்கினிக் குழம்பு அவுஸ்ரேலிய நாட்டிலே பணிசெய்த முனைப்பு இமைகள் மூடும்வரை ஈழத்தின் உழைப்பு ஏங்குது தமிழீழம் இன்றுமை நினைத்து. தாய்மண்ணின் விடிவிற்கு உங்களைத் தந்தீர் தமிழீழ நிலையினை உலகினில் சொன்னீர் வாய்கதறி அழுகின்றோம் ஏன் எமைப்பிரிந்தீர் வரலாற்றின் நெஞ்சினில் படமென்…

  3. பரீட்சை(பிரசவம்!) தாய்மார்கள் மாத்திரமே பிரசவ வலியுடன் பிள்ளைகள் பெறுவதாய் எவர் சொன்னார்? பள்ளியில் கற்கின்ற மாணவர் நாமுந்தான் வருடத்தில் மூன்றுமுறை மகப்பேறு அடைகின்றோம்! கற்பிணிப் பெண்களிற்கு இருக்கையைவிட்டு எழுந்தால் மட்டும் வேதனை! மாணவர்களிற்கோ இருந்தாலும் வேதனை! எழுந்தாலும் வேதனை! தைமாதம் பள்ளியில் தொடங்கும் தேனிலவு சித்திரை புது வருடத்தில் பிரசவ வலியாகி எமது உயிரைக் கொல்லும்! தொடர்ந்து தேனிலவு தொழிலாளர் தினத்துடன் தொடங்கி மூன்று மாதங்களில் எமக்கு மறுபடியும் பிரசவம்! மார்கழியில் குழந்தை யேசுவின் பிறப்பு வரும்வரை தேனிலவும் பிரசவமும் பள்ளியில் எமைச் சக்கரமாய் சுற்றிவரும்! மூன்று மாதங்களில் வருந்த…

  4. Started by kavi_ruban,

    விரிகின்ற எந்தன் நினைவதிலே திரிகின்ற ஒர் உரு உன்னையன்றி வேறெது குவிகின்ற உந்தன் இதழ்தனை இமைக்காமல் நோக்குங்கால் அவிகின்றதம்மா எந்தன் மனது! நடக்கின்ற நிலாவோ நீ? அட.... ட... ட... சுவைக்கின்ற பலாவோ நீ? தவிக்கின்ற மனமெங்கும் நீ தவிக்க விடலாமோ என்னை இனி? பிறக்கின்ற கவிக்குள்ளே உள்ள கரு நீ துடிக்கின்ற இதயத் துடிப்பினிலுள்ள சுதி நீ கடக்கின்ற ஒவ்வெரு நாழியும் நான் நினைக்கின்ற பாவையம்மா நீ மொத்தத்தில் மன்மதன் மனதில் நின்று விளையாடும் ரதிக்கு ஒப்பான மதி நீ!

    • 10 replies
    • 1.7k views
  5. நீலம் - வ.ஐ.ச.ஜெயபாலன் தோழி காலமாய் நுரைகள் உடைகிற மணலில் சுவடுகள் கரைய சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா? கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய் நம்மிலும் எதோ படர்கிற தென்றேன். மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய் உன் கண்களில் எனது பிம்பம் அசையும். ஆண்டு பலவாகினும் நரையிலா மனசடா உனக்கென்றாய். தோழி இளமை என்பது வாழும் ஆசை. இளமை என்பது கற்றிடும் வேட்கை. இளமை என்பது முடிவிலா தேடல்; இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும். இளமை என்பது வற்றாத ரசனை இளமை என்பது நித்திய காதல். இளமை என்பது அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன். தோழா உனக்கு எத்தனை வயசு? தோழி எனக்கு சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

  6. Started by nunavilan,

    பெருமூச்சு வலிபடைத்து முறமெடுத்துப் புலியடித்த தமிழகம் கிலிபிடித்த நிலைபடைத்து வெலவெலத்து வாழ்வதோ? பகையொதுங்கப் பறைமுழங்கிப் புகழடைந்த தமிழகம் கதிகலங்கி விழிபிதுங்கி நடுநடுங்கி வாழ்வதோ? படைநடத்தி மலைமுகத்தில் கொடிபொறித்த தமிழகம் துடிதுடித்து அடிபிடித்துத் குடிகெடுத்து வாழ்வதோ? கடல் கடந்த நிலமடைந்து கதையளந்த தமிழகம் உடல் வளைந்து நிலை தளர்ந்து ஒளியிழந்து வாழ்வதோ? மகனிறக்க முலையறுக்க முடிவெடுத்த தமிழகம் புகழிறக்க மொழியிறக்க வெளிநகைக்க வாழ்வதோ? கவிஞர் காசியானந்தனின் கவிதை தொகுப்பிலிருந்து

  7. குருதி படிந்த சுவடுகள் கழுமரம் கூடப் பூத்தது புதுமை கவ்வாரியில் அன்பு பெருகிய மகிமை பகைவரின் மனமும் கனிந்திடும் இனிமை பார்த்தவர் கண்களும் பகர்ந்திடும் எளிமை சிந்திய குருதியால் சிவந்தது வானம் சிதறிய வார்த்தையால் பிறந்தது கானம் முந்திய மானிடம் இழந்தது ஊனம் முகவரி இழக்குமோ முதல்வனின் மானம் தனிமையின் வேளையில் துணையாக வருவார் தடுமாறும் வேளையில் தாங்கியே சுமப்பார் அவமான நேரத்தில் ஆறுதல் தருவார் அன்பினால் அனைத்தையும் ஆற்றியே மறப்பார் வருத்தங்கள் வாழ்வில் திருத்தங்கள் தரலாம் நெருக்கடிகள் எம்மை நெறிப்படுத்திடலாம் அழுகைகள் அகத்தில் அமைதியைத் தரலாம் வறுமைகள் வாழ்வில் திறமைகள் பெறலாம் குருதியில் குளித்து இக் குவலயம் சிறக்க இறுதிவரை இ…

  8. ஆனந்த விகடனில் இந்த வாரம் (20.1.16) "மனசுக்குள் பனித்துளி" என்ற எனது கவிதை தனிப்பக்கத்தில் வெளியாகியுள்ளது, என்பதை யாழ் களத் தோழர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மனசுக்குள் பனித்துளி ஒரு குழந்தையைக் கைப்பிடித்துக் கூட்டிவருவதைப்போல் இந்தக் குளிர்க்காலத்தை என்னிடம் கொண்டுவந்துவிட்டு விடைபெற்றுச் சென்றுவிட்டது மழைக்காலம். நெற்பயிரின் நுனியில் ஒரு பனித்துளி முழு வயலையும் வானத்தையும் தலைகீழாகப் பிரதிபலிக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக கதிரின் வெம்மையில்ஆவியாகிறது. மறுநாளும் அதே நெற்பயிரில் அதேபோல் பனித்துளி …

  9. Started by nunavilan,

    கவிப்பயணம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">

  10. மலர் கொண்டு வருவன் .......... புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு ஒரு நினைவலை தாலாட்டு பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு பாசமுடன் பேறு எடுத்த கடைக்குட்டிபேட்டை நான் ,பாலுட்டி தாலாட்டி பண்புடன் ,நல்ல பழக்கமுடன் பாங்கை அனைத்து வளர்த்திடாள் பள்ளி சென்று நானும் படிகையிலே பக்குவமாய் இ பாடங்கள் பலதும் சொல்லிதந்தவளிகாட்டி கடை குட்டி என் மீத கூடிய கரிசனம் கண்ணன் மணி போல காத்து கல்லூரிக்கு அனுய்பி வைத்தாள்விடுதி விட்டு வீடு வந்தால் விசேடமாய் சாப்பாடு விதவிதமாய் பல்கலைக்கு காலடி நான் வைத்த போது கண் கான தேசம் கவனமடி கன்ன்மனியே கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது .................

    • 12 replies
    • 2.2k views
  11. குதிரைக்கு கொம்பு முளைத்த காலமிருந்து கற்பனைக் குதிரைகளின் இனப்பெருக்கத்திற்கும் குறைவில்லை..! களத்தில் அன்று ஒரு லங்காபுவத்..! கடல் கடந்த தேசங்களில் இன்று எல்லாமே அதுவாய்…! இல்லாத… பிரபா அணி கிட்டு அணி சண்டை..! இருந்த… கிட்டு மீது பொட்டு தாக்கு பொட்டு மீது மாத்தையா தாக்கு மாத்தையா மீது யோகி தாக்கு யோகி மீது கரடி தாக்கு….. இப்படியே திண்ணைப் பேச்சில் பொழுது கழித்த கூட்டம் புலம்பெயர்ந்து மட்டும் திருந்தவா போகுது..??! இறுதியில்… சூசை மகன் மீது பிரபா தாக்கு பிரபா மீது சூசை கடுப்பு… அன்ரன் மீது பிரபா விசனம் விசனம் மீது பிரபா கொலைவெறி… போராட்டம் நெடுகிலும் எம்மவரின் கற்பனைக் குதிரைகளின் தடாலடி ஓட்டப் போட்டிகளுக்கும் குறைச்சலில்ல…

  12. உறுதி இது தமிழீழம் உருவாகும் வரலாற்றில். கல்லூரி செல்லும் கன்னிப் பெண் சட்டையில் கைக்குண்டு தேடுது காவாலி இராணுவம் சந்தியில் சென்ரியில் சவப்பெட்டிப் பயணம் ஜ.டி யில் தானே-எங்கள் ஆத்மா வாழுது அண்றைக்கு சென்ரியில் நிண்றவன் கண்ணுக்கு தம்பியின் தோற்றத்தில் ஏதோ தவறாம் இன்றைக்கும் அவன் இருப்பிடம் தெரியாமல் ஈழத்தில் தவிக்கிறாள் ஈரஞ்சு மாதங்கள் கருவிலே சுமந்தவள் எட்டப்பன் கூட்டம் எல்லாளன் தேசத்தில் கொட்டம் விடுகிறது கொடுமை பல புரிகிறது வெட்டிச்சரிக்கிறது-இனத்தை வேருடன் அழிக்கிறது காவலர்கள் காடேக கடிநாய்கள் புகுந்ததனால் வாடி வதங்கி வலி மிகக்கொண்டு கூடு திரும்பும் குஞ்சிழந்த பறவைபோல் காக்க ஏதுமின்றி கவனிப்…

  13. Started by கோமகன்,

    ஓய்ந்த மழை பட்சிகளின் அயர்ச்சிகளை ஒன்றுக்கொன்று சீண்டிக்களைத்த மேகங்கள் தன்னிலை மாற்றி ஒழிகிறது களைகூட்டி காடு செய்த வானம் முன்பொருபோதுமில்லாத சிறகுகளிழந்து வெறித்துக் கிடக்கின்றது இரவைக் காத்து புத்தகங்களுக்குள் மறைத்த புகைப்படங்கள் காட்டும் புன்னகையும் பொருத்தமில்லாது பொய்த்து விடுகையில் விடுபட்ட சுவர்களுக்கிடையே குடிகொண்ட்ட கரப்பான்களின் ஒழுக்கமற்ற சத்தங்களின் விதைகள் நிலமூர்கிறது அங்கொரு மழை ஓய்கிறது.. யாழினி பண்புடன் இணையத்திற்காக http://new.panbudan.com/archives/401#more

  14. காத்திருக்கும் இதயம் கனவுகள் பூத்த இரவுகள் எல்லாம் - உன் நினைவுகளால் வேகுகின்றன இதயம் துடிக்கும் ஓசைகள் எல்லாம் - எனக்கு மட்டும் ஒப்பாரிச்சத்தங்களாகின்றன - உன் நினைவு பூத்த வெம்மை நிலப்பரப்பாய் என் உள்ளம் தகிக்கிறது அசைவற்ற வெறு வெளியில் நினைவற்ற ஜடம்போல - என் மனவறையின் சுவர்களில் வெறுமைகளே நிறைந்து கிடக்கின்றன உன் நினைவு சுமந்த என் இதயம் கனத்துப்போன இரும்பாக மரத்துப்போய்க்கிடக்கின்றது என் பாலைவனத்தின் வெண்மணலில் நீர் வார்க்கும் ஊற்றாக நீ வரும் நாள்பார்த்து - உன் நினைவுகள் சுமந்து - ஒற்றைக்கால் தவமியற்றும் பற்றற்ற கொக்காக உனக்காக உனக்கேயாக - இன்னும் உயிர் சுமக்கிறேன் - இந்த உணர்வற்ற உடலில்

  15. ஒரு வசந்தம் தொலைந்து விட்டது எங்கள் தேசத்தின் வாசலில் ஏற்றி வைத்த தீபம் ஒன்று ஏகாதிபத்திய நெருப்பில் எரிந்து பொய் விட்டது. எங்கள் விளை நிலத்திக்கு வித்துக்களை ஊன்றி வந்த விருட்சமொன்று சரிந்து விட்டது எங்கள் புனித மூச்சை புயல் தின்று விட்டது இருள் சூழ்ந்து கிடந்த எங்கள் எல்லைக்கு ஒளி சுமந்து வந்த உயிர் ஒன்று அணைந்து விட்டது பாசத்தோடு பேணிக்காத்த சிறகொன்று பாரத வலையில் சிக்கி முறிந்து விட்டது அந்நிய தேசமெல்லாம் எங்களது அவலங்களை சொல்லி நின்ற இதயமொன்று அவிந்து விட்டது செரு முனையில் நின்று செந்தமிழின் பண்ணிசைத்த சிட்டொன்று சிதைந்து விட்டது எங்கள் இமயம் ஒன்றை இருள் விழுங்கி விட்டது எங்கள் விழி மடல்கள் வெல்ல முடியாதோரின் வஞ்சனையால் கிழிந்து விட்டன துணிச்சலையே த…

  16. ஒரு கிறுக்கல் ஒன்று: எது நடக்கின்றதோ அதுவும் அநீதியாகவே நடக்கின்றது எது நடக்க இருக்கின்றதோ அது அறம் மீறியே நடக்க இருக்கின்றது உன்னுடையதை எல்லாவற்றையும் எல்லாவுமாய் இழந்தாய், ஆயினும் ஏன் ஆனந்தப்படுகின்றாய் எதை நீ பிறப்பிலிருந்து கொண்டு வந்தாயோ அவை அனைத்தும் பறிக்கப்படுகின்றன எதை உனக்காக படைத்தாயோ அதை அவர்கள் அவர்களுக்காக எடுத்துக் கொண்டனர் எதை அவர்கள் எடுத்தார்களோ அவை அனைத்தும் உன்னிடம் இருந்து பறித்துக் கொண்டவை எதை நீ அவர்களிடம் இழந்தாயோ அவை அனைத்தும் மீண்டும் உன்னாள் பெறப்பட வேண்டியவை பறித்த எதை அவர்கள் தமதென்று கொண்டாடுகின்றனரோ அவை அனைத்தும் உனக்கும் உன் சந்ததிக்குமானவை பிறிதொரு நாளில் உன் தெருவில் தோரோட்டி போகும் போது உனக்கான கீதையாக உன் சுதந்திரத்…

  17. கும்மியடி பெண்னே கும்மியடி தமிழ் ஈழம் மலர்ந்தது எனக்கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி வீரத்தலைவன் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி மாவீரர் புகழ்பாடிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி புலிக்கொடியைப் போற்றிக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழனின் அடிமை விலங்கு உடைந்தது எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி தமிழுக்கு என ஒருநாடு உண்டு எனக் கும்மியடி கும்மியடி பெண்னே கும்மியடி இந்தக்கவிஞன் கனவு நினைவாகும் எனக் கும்மியடி

  18. புதியவள் ஒருத்தி என் அறையில் என்னோடு.. நடு நிசியை நோக்கி நேரம் ஆகிறது.. படுக்கைக்குப் போக.. விளக்கை அணைக்கவா இல்லை விடவா.. உள்ளம் தடுமாறுகிறது...! உள்ளூர ஒரு பயம் என்னை அணுகுவாளா உயர நகர்வாளா பின் என் உடல் மீது பாய்வாளா.. அவளிடம் அகோரத்தனம் இருக்குமா..??! அனுபவமின்றியவன் நான் சற்றே சிந்திக்கிறேன்.. தயங்குகிறேன்... அவளோ என் அறைக்குள் துணிவோடு.. அனுமதி இன்றி நுழைந்தவளாய் சுவரோடு ஒட்டியவளாய் நகர்வின்றி... என்னையே கண்ணெடுத்துப் பார்க்கிறாள் அதை அழைப்பு என்பதா எச்சரிக்கை என்பதா..??! சிந்தனை குழம்புகிறது..!! போனால் போகுது எனியும்.. விடுவதில்லை இவளை..! விட்டால் என் நித்திரை இன்றி இரவுகளுக்கு யார் பதில் சொல்வது..??! நொடிகளை வீணாக்காமல் …

  19. நட்புக்கு இலக்கணம் நான் கண்டு கொண்டேன்.. பொல்லாதார்..யார் பொய்யரையார் யார்-இனம் கண்டு கொண்டேன்.. சிலர் மாசற்ற நட்பென்பார் காசென்றால் விற்றிடுவார் சிலர் காசுக்காய் நட்புறுவார் செல்வம் போக சென்றிடுவார் உள்ளத்தூய்மையில்லா மனதறிந்த ஊமையாய் இருக்கிறேன்.. பொய் பொய்யாய் உரைப்பார்..மற்றவரின் புத்திஎடை குறைப்பார்.. சிரிப்பாய் இருந்தாலும்.. சிந்திக்க வைத்துவிடுவார்.. நட்பாய் பழகு நம்பிப் பழகாதே.. அன்பாய் பழகு ஆதரவாய் நினைக்காதே.. தோள் கொடுக்கும் தோழமை தொலைந்த தேசத்தில்..முதுகில் வாள் ஏறும்வரை கைகட்டி நிற்காதே..

  20. உயிரின் வலி அறிவாயோ மானிடா ஊனுருக்கி உடல் கருக்கி உள்ளனவெல்லாம் மறக்கும் உயிரின் வலி அறிவாயோ உள்ளக் கருவறுத்து ஒவ்வொரு நொடிப்பொழுதும் உயிர் வதைத்து உணர்வு கொல்லும் உயிரின் வலி அறிவாயோ எதுவுமற்று ஏதுமற்று எங்கெங்கோ மனம் அலைத்து ஏக்கங்கள் கொள்ளவைக்கும் உயிரின் வலி அறியாயோ எதிரியாய் எமை வதைத்து எட்டி நின்றே வகுத்து எல்லையில்லா துன்பம் தரும் உயிரின் வலி அறியாயோ எண்ணத்தை எதிரிகளாக்கி எல்லையற்று ஓடவைத்து என்புகள் மட்டுமே ஆனதாய் என் உயிரின் வலி அறியாயோ சரணடைந்து சரணடைந்து சர்வமும் இழக்க வைத்து சக்தியெல்லாம் துறந்து நிற்கும் உயிரின் வலி அறியாயோ மானிடா உயிரின் வலி அறிவாயோ

  21. ''கண்ணீரை துடைத்து விடு..'' வெள்ளைத் தேரேறி வெளியுலகு போனவனே- உன்னை கள்ளத் தேரேறி வந்து கயவன் உனை கொன்றானே... வெலிகந்தையில் வைத்துன்னை வெறியர்கள் கொன்றாரே நினைத்து பார்க்கையிலே நெஞ்சு கொதிக்குதய்யா... உன்னை இழந்தின்று தமிழினம் தவிக்குதய்யா- உந்தன் கல்லறை இன்று கண்ணீரால் நனையுதய்யா... விலை போனதொன்று வீம்புகள் செய்கையிலே தப்பிப் போய் தலைவனடி தமிழீழம் காத்தாயே... ஜநா முந்தலிலே ஜயா நீ உரைத்தாயே அண்ணன் உள்ளவரை அஞ்சாதே தமிழ் என்றாயே... ஒட்டு படையதற்க்கு ஓல வாழ்வளித்தாயே மட்டு நகர் நின்று மரண அடி கொடுத்தாயே... பல் குழல் பேச்சாலே- அவர் பரப்புரை அழித்தாயே அனுகுண்டாகி நீ அகிலத்தில் திகழ்ந்தாயே... ஈழமத…

  22. எப்படி மறப்பேன் என் தாய் நிலத்தை ? - நிர்வாணி - எங்களின் தாய்நிலத்தை அவ்வளவு இலகுவில் மறந்துவிடமுடியாது காலங்கள் எத்தனை கடந்தாலும் இந்த உடல் கோலங்கள் எத்தனை கண்டாலும் சொந்த மண்ணை மறந்திடமுடியாது மறந்துவிடச் சொல்கிறாள் என் காதலி கனடாவில் குடியேறிவிட்டோம் கனடியனாய் வாழ்ந்திடுவோம் வா என்கிறாள் எனதருமைக் காதலியே எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? தை பிறந்தால் பட்டம் விட்ட நாட்களையா ? அத்துளு வெளியில் பந்தடித்த நாட்களையா ? கோயில் திருவிழாவில் அழகான பெண்களைப் பார்த்து ஏங்கி நின்ற நாட்களையா? எதை மறந்துவிடச் சொல்கிறாய் ? சொல்லடி பெண்ணே எத்தனை காலமடி ? இன்று நினைத்தாலும் நெஞ்சம் இனிக்குதடி எப்…

    • 10 replies
    • 1.7k views
  23. வணக்கம் நண்பர்களே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். என் தமிழில் நடைபயில எனது இலக்கியப்பூங்கா. எனது முதலாவது படைப்பான இன்ரநெற் யுகமும் இருபத்தியோராம் நூற்றாண்டும் நூலில் இருந்து கவிதைகள் இங்கே மலர்கின்றன. நான் கிட்டத்தட்ட பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பாக எழுதத் தொடங்கி இரண்டாயிரம் ஆண்டுவரை எழுதிய பல கவிதைகள் இங்கு இடம்பெற்றுள்ளன. சிறிய வயதில் கவிதை மீது கொண்ட தீராத காதலால் என் தாயகம் சார்ந்து எழுதிய என் உணர்வின் பதிவுகள் இவை. அவற்றில் சொற்பிழைகள் பொருட்பிழைகள் இருந்தால் என்னை மன்னித்து பொறுத்தருளுவீர்கள் என நம்புகின்றேன். என்னுடைய முதல் கவிதைத் தொகுப்பினை மிகவும் அழகாக வடிவமைத்து பதிப்பு செய்தளித்த மறவன்புலவு திரு.சச்சிதானந்தன் ஐயா அவர்களை நன்றியுடன் ந…

    • 2 replies
    • 1.1k views
  24. விண்தொடும் கனவுகள் வீணாகிப்போய் மிதியடி மண்ணாய் தட்டப்படுகையில், அடையாளம் பறிக்கப்பட்டு அடையாளம் குத்தப்படுகிறது அறிந்தவர்களின் அறியாமையால் , பிறிதொரு இருப்பிடம் தேடி அலைகிறது அவர்களின் அவதானம் ......................... உள்ளொருபுள்ளியில் இருக்கிறது இன்னும் அவர்களின் எச்சவடு! எனை கடந்து அவனை கடந்து _பின் மற்றொருவனை அனைத்து செல்கிறது அவதானம் ஆங்காங்கே எச்சவிளைவுகள் பயங்கரமாய் எதிரொலிக்க எதையும் கண்டுகொள்ளாத _அதன் பயணம் தொடர்ந்து கொண்டு ............... இருளாய் வியாபிக்கிறது என்னுள் ஒரு கேள்வி ! இன்னவாகி வருவான் _என்ற எதிர்பார்ப்புகளை எங்கு,எப்படி புதைப்பேன் இனி ................!

  25. ஆதிக்குடி எங்கள் அழகான தமிழரென அகிலத்தில் வாழ்ந்திருந்தோம் - இன்று நீதிக்குப் போராடும் நிலை ஒன்று வந்ததால் நிம்மதி தனை இழந்தோம் சாதித்த புகழதும் சரித்திர வாழ்வதும் சந்ததி தான் கண்டது - நாங்கள் போதித்த பொறுமையால் புகலிடம் பறிபோக புவிதனில் அகதியானோம் வந்தேறு குடியான சிங்களர் வாழவே வகையாக வாழ்வளித்தோம் - அவர் சொந்தமாய் எம்மண்ணைச் சுரண்டியது தெரியாது சுயமாக நாம் இருந்தோம் ஆதிக்க வெறிகொண்ட அந்த ஒரு நிலையதில் அடங்கியே தான் போவதோ சாதி;க்கப் பிறந்திட்ட சந்ததி என்பதை சரித்திரம் மறந்து போமோ எரிமலையாகவே மறவர்கள் கூட்டமது எதிரியைக் களமாடுவார் - அவர் எரிநெருப்பாகவே பொங்கிடும் தீயினில் எதிர்காலம் தனை வெல்லுவார் தென்னை பனையோடு தேமாங்கனி என்று தேனாறு பாய்ந்த எங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.