வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ரஹ்மானும், ஆஸ்கரும்... ஒரு பிரார்த்தனையும்! விடிந்தால் ஆஸ்கர் அதிகாரப்பூர்வ பட்டியல் தெரிந்துவிடும். நம்ம 'மெட்ராஸ் மொசார்ட்'டுக்கு விருது உண்டா இல்லையா என்ற சஸ்பென்ஸும் நீங்கி விடும். ஆனால் அதற்குள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பணம் சுருட்ட ஒரு கும்பல் தீவிரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏராளமான புதுப்புது இணைய தளங்களை உருவாக்கி வைத்துள்ள இவர்கள், ஸ்லம்டாக் மில்லியனேர் எத்தனை ஆஸ்கர் விருதுகள் வாங்கும்... என்னென்ன பிரிவுகளில் வாங்கும்? ரஹ்மானுக்கு விருது உண்டா இல்லையா? என சூதாட்டம் நடத்தி பணம் பறித்துக் கொண்டுள்ளன. இன்னொரு பக்கம், ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது கிடைத்தே தீர வேண்டும்... அவர் தகுதிக்கு முன் ஆஸ்கர் ஒரு பொருட்டே அல்ல, என்ற குரல்கள் ஒலிக்கத் து…
-
- 11 replies
- 2.5k views
-
-
கடந்த 1 வருடத்திற்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு செம்ம விருந்தாக வந்துள்ளது என்னை அறிந்தால். சில நாட்களாகவே காதல், சைக்கோ கதைகளால் துவண்டு போயிருந்த கௌதம் மேனன் தனது ஹிட் பார்முலாவான காக்கிசட்டையை மீண்டும் எடுத்து உடுத்தியள்ளார். இந்த முறை கொஞ்சம் எதிர்ப்பார்ப்புடன் அஜித் போன்ற மாஸ் ஹீரோவை அணிய வைத்துள்ளார். மேலும் வழக்கமான காதல், ஆக்ஷன் என இந்த படத்தில் இறங்கி அடித்துள்ளார் கௌதம் என்ளே சொல்லலாம். கதை போலிஸ் படம் என்றாலே பழிவாங்குதல் இல்லை என்றால் எப்படி, அதே கதை களத்தை தான் கௌதம் கையில் எடுத்திருக்கிறார். படத்தின் ஆரம்பத்திலேயே அனுஷ்காவை விமானத்தில் வைத்து பார்க்கும் அஜித், அதன் பின் காபி ஷாப்பில் மீட் செய்ய, அங்கு அருண் விஜய் கும்பல் அவரை கொலை செய்ய வருகிற…
-
- 11 replies
- 3.6k views
-
-
Dad's Den அப்பாவின் குகை.... யூடியூப் லைக் வாங்கி பணம் பண்ண பல வழிகளில் பலர் முனைகிறார்கள். இந்த வெள்ளையப்பரோ, வணக்கத்துடன் ஆரம்பித்து, தமிழ் சினிமா விமர்சனத்துக்குள் நிக்கிறார்.... வடிவேலுவையும் ரசிக்கிறார். விஜய் ரசிகர் போல இருக்குது. அவரது சானலுக்குள் பூந்து பாருங்கள், வணக்கம் மக்களே... நன்றி!! Nee Kobapattal Naanum Song | Villu | Thalapathy Vijay & Nayanthara | Reaction
-
- 11 replies
- 1.7k views
-
-
ரஜினியின் அடுத்த படம் "உண்மை" சிவாஜிக்கு பின்னர் ரஜினி நடிக்கவுள்ள படத்தை பிரேம்தான் இயக்கப் போகிறார் என்கிறார்கள். கன்னட திரையுலகை புரட்டிப் போட்டு வருபவர் இயக்குனர் பிரேம். இவர் இயக்கிய 3 படங்களுமே அடுத்தடுத்து சூப்பர் ஹிட். இதனால் பிரேம் மீது ரஜினிக்கு தனி மரியாதை. இவரது ஜோகி படம் தான் பரட்டை என்ற அழகுசுந்தரமாக எனும் பெயரில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில் ரஜினியின் மருமகன் தனுஷ் நடிக்கிறார். தனுஷை இந்தக் கதையில் நடிக்கச் சொல்லி ரெக்கமெண்ட் செய்ததே ரஜினி தான்.
-
- 11 replies
- 3.1k views
-
-
கோவிலுக்குள் ஷூட்டிங் - பொங்கிய பக்தர்கள் சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள கோவிலில் நடந்த வடிவேலு நடிக்கும் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் பட ஷூட்டிங்கால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். சென்னையை அடுத்துள்ள ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது. 1,000 ஆண்டு பழமையான இந்தக் கோவிலில் தற்போது திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணிவரை யாரும் அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் வடிவேலு நாயகனாக நடிக்க, தீத்தா ஷர்மா ஜோடி போட, தம்பி ராமையா இயக்க,ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தின் ஷூட்டிங்கை இங்கு நடத்தி வருகின்றனர். இதற்காக 500க்கும் மேற்பட்ட படக்…
-
- 10 replies
- 3.7k views
-
-
'அகநக முகநக' பாடல் வரிகள் எப்படி உருவானது ? - குந்தவையின் காதலை சிலாகிக்கும் பாடலாசிரியர் இளங்கோ கிருஷ்ணன் பட மூலாதாரம்,MADRAS TALKIES 31 நிமிடங்களுக்கு முன்னர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து, முதல் பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த பாடல் வெளியான அன்றைய தினம், நடிகர்கள் கார்த்தி மற்றும் த்ரிஷா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வந்தியத்தேவன் மற்றும் குந்தவையாக உரையாடி வந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ”அகநக அகநக முகநகையே” என தொடங்கும் இந்த பாடல் வரிகள்தான் கடந்த இரண்டு நாட்களில் பொன்னியின் செல்வன் ரசிகர்களின் முனுமுனுப்பாக மாறியிருக்கிறத…
-
- 10 replies
- 654 views
- 1 follower
-
-
நான் அறிந்த இசை அரசன் எஸ்.பி.பியும் அவரின் இன்னிசை சாம்ராஜ்யமும்; பகுதி -01 – என்.கே.எஸ். திருச்செல்வம் நேற்று முன்தினம் ஒரு மறக்க முடியாத நாள். இசை மாமேதை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் தன் உடலை மட்டும் இவ்வுலகில் இருந்து எடுத்துச் சென்ற நாள். ஆனால் நம் நெஞ்சில் நிறைந்த பாடல்களை எமக்கெல்லாம் உயிராகத் தந்து விட்டுச் சென்ற நாள். அண்ணன் எஸ்.பி.பி. அவர்களின் பாடல்கள் தொடர்பில் கடந்த 50 வருடங்களாக என் அடி மனதில் தேங்கிக் கிடக்கும் நினைவுகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஏனெனில் அன்று எனது பேச்சாகவும், மூச்சாகவும் இருந்தது அவரின் பாடல்களே. ஒரு திரையுலகப் பிரபலத்திற்காக நான் அதிக மனவேதனை அடைந்த இரண்டாவது சந்தர்ப்பம் நேற்றைய தினத்தில் நடந்தது. …
-
- 10 replies
- 2.7k views
-
-
கவிதையில் வேட்டைக்காரன்... இப்போது சினிமாவில் 'பேட்டைக்காரன்’! 'ஆடுகளம்’ படத்தில் கிடா மீசையோடு சேவல் சண்டை வாத்தியாராக மிரட்டி இருக்கும் வ.ஐ.ச.ஜெயபாலன், ஈழத்துக் கவிஞர்களில் முன்னோடி. நேர்ப் பேச்சில் கலகலக்கவைப்பவர். ''நான் இதுக்கு முன்பு நடிச்சது இல்லை. என் தோற்றத்தைப் பார்த்துட்டு, வெற்றிமாறன் நடிக்கக் கூப்பிட்டார். 'மேடையில் நடிச்ச அனுபவம் எனக்கு இல்லை. ஆனா, 87-ம் வருஷம் கல்யாணம் ஆனதுல இருந்து மனைவிகூட நடிச்சுக்கிட்டு இருக்கேன்’னு சொன்னேன். 'அது போதும், வாங்க’ன்னு சொல்லிட்டார். எனக்கு சாவித்திரி,சுஹாசினி, ஜோதிகான்னு ஹீரோயின்களைத்தான் பிடிக்கும். அதனாலேயே என்னவோ என் உடல்மொழியில் சின்னதா பெண் தன்மை இருக்குன்னு சொன்ன வெற்றிமாறன், அதைத் திருத்தினார். ஜிம்மில்…
-
- 10 replies
- 2k views
-
-
சிம்புவும், நயன்தாராவும் திகதி இருந்தால் ஜோடியாக நடிப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை என்று அறிவித்துள்ளனர். கொலிவுட்டில் இதன் மூலம் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து அறிக்கை விட்டுக் கொண்டிருந்த இருவரும் மீண்டும் இணக்கமாகிவிட்டனர். நாயகி நயன்தாராவும், நாயகன் சிலம்பரசனும் வல்லவன் படத்தில் ஜோடியாக நடித்த போது இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து நயன்தாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் காதல் மலர்ந்து சமீபத்தில் இருவரும் பிரிந்தனர். இப்போது ஆரம்பத்தில் பிரிந்த சிம்புவும் நயன்தாராவும் இணக்கமாகி வருகிறார்கள். இப்போது சிலம்பரசன் நடிக்கும் வாலு என்ற புதிய படத்தில் நயன்தாராவை கதாநாயகியாக நடிக்க கேட்டதாகவும், அப்போது நயன்தாரா தனக்கு ரூ…
-
- 10 replies
- 4k views
-
-
மேதகு 2 பற்றி TN Media 24 எனது கருத்து. பாருங்கோ மக்களே. இதற்கு பின்னால் ஒரு அரசியலும் இல்லை என்பதை பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
- 10 replies
- 1.4k views
-
-
32 வயதில் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே கேன்சர் பாதிப்பால் உயிரிழந்துள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Poonam pandey பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் பூனம் பாண்டே. இவர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான நாஷா என்கிற இந்தி படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து சமூக வலைதளத்தில் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பேமஸ் ஆன இவர் அடிக்கடி சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளார். இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் ஆனது. தன்னுடைய நீண்ட நாள் காதலனான சாம் பாம்பே என்பவரை திருமணம் செய்துகொண்டார். கொரோனா சமயத்தில் இவர்களது திருமணம்…
-
- 10 replies
- 1.4k views
- 1 follower
-
-
நடிப்பு: தனுஷ், ஸ்ருதி எழுத்து, இயக்கம்: ஐஸ்வர்யா.R.தனுஷ். இசை: அனிருத் பட வெளியீடு: 30 march 1st trailer http://www.youtube.com/watch?v=fRCct9cstUA 2nd trailer http://www.youtube.com/watch?v=2QPHTLTDjNU 3rd trailer (new) http://www.youtube.com/watch?v=6Km3A6njgFM&feature=related 4th trailer (new ) http://www.youtube.com/watch?v=8jSP6C7QKvI&feature=related 5th - last and mind blowing trailer.(my favorite)
-
- 10 replies
- 1.5k views
-
-
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் சிவாஜி பட ஷýட்டிங் ஹைதராபாத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்கியது. ஏவி.எம். நிறுவனத்தின் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் படம் சிவாஜி. மிகுந்த பொருட்செலவில், தனது 60வது ஆண்டில் சிவாஜி படத்தைத் தயாரிக்கிறது ஏவி.எம். நிறுவனம். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஷ்ரேயா நடிக்கிறார். இவர்கள் தவிர வில்லன் வேடத்தில் பிரகாஷ்ராஜ், காமடிக்கு விவேக் ஆகியோரும் இப்படத்தில் உள்ளனர். ரஜினி படங்களில் வழக்கமாக தலை காட்டும் விஜயக்குமார் உள்ளிட்டோரும் இப்படத்தில் இருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ரஜினி படத்திற்கு திரும்பியுள்ளார். கே.வி. ஆனந்த் கேமராவைக் கையாளுகிறார். கலையை தோட்டா தரணி கவனிக்கிறார். வசனத்தை சுஜாத…
-
- 10 replies
- 2.4k views
-
-
ரேணுகா விட்ட 'பளார்.. பளார்' கலாபக் காதலன் படத்தில் நடித்து வரும் ரேணுகாவுக்கும் ஹீரோ ஆர்யாவுக்கும் ஏதோ கச முசா என்கிறார்கள். சூட்டிங் ஸ்பாட்டில் ஆர்யாவுக்கு மூஞ்சியைச் சேர்த்து ஒரு பளார் விட்டாராம் ரேணுகா. இந்தப் படத்தில் மிக நெருக்கமான காட்சிகளை வஞ்சமில்லாமல் வைத்திருக்கிறார்களாம். அப்படி ஒரு காட்சியில் கொஞ்சம் நெருக்கமாகக் கட்டிப் பிடிக்கும் காட்சியில், நரம்பெல்லாம் நொறுங்கும் அளவுக்கு ஆர்யா பலம் காட்டியதாகவும் கடுப்பாகிப் போன சேச்சி பளார் விட்டதாகவும் சொல்கிறார்கள். ஆனால், சினிமாவில் அறை விட்டதையும் அறை வாங்கியதையும் யார் தான் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதுபோலவே இருவருமே அதை மறுக்கிறார்கள். ஆர்யாவை அறைந்தீர்களா என்று கேட்டால், ஆர்யா ரொம்ப…
-
- 10 replies
- 4.8k views
-
-
தமிழில் எந்த ஹீரோவுடன் வேண்டுமானாலும் நடி.. ஆனால் சிம்புவுடன் மட்டும் வேணவே வேணாம் என்று தன் காதலி சமந்தாவுக்கு அட்வைஸ் செய்துள்ளாராம் நடிகர் சித்தார்த். சமந்தா தமிழில் அறிமுகமானதே சிம்புவுக்கு ஜோடியாகத்தான். விண்ணாத் தாண்டி வருவாயாவில் அவர்தான் சிம்பு ஜோடி. பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சிம்பு நாயகனாக நடிக்கிறார். இதில்தான் சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். படத்தில் சமந்தா நடித்தால் நன்றாக இருக்கும் என சிம்பு விரும்பினாராம். எனவே சமந்தாவிடம் பேசியுள்ளனர். இது பற்றி அறிந்ததும் சிம்பு படத்தில் நடிக்க வேண்டாம் என சமந்தாவுக்கு சித்தார்த் தடை போட்டுவிட்டதோடு, தமிழில் யாருடன் வேண்டுமானாலும் நடி.. ஆனா சிம்புவுடன் வேணாம் என்று அட்வைஸ் செய்தாராம் சித்த…
-
- 10 replies
- 1.2k views
-
-
ஆர்யாவை திருமணம் செய்ய 7 ஆயிரம் பேர் விருப்பம்!! ஆர்யாவை திருமணம் செய்து கொள்ள 7 ஆயிரம் பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். நடிகர் ஆர்யா, 2005-ல் ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தில் அறிமுகமாகி 13 வருடங்களாக முன்னணி கதாநாயகனாக நடித்துக்கொண்டு இருக்கிறார். நான் கடவுள், அவன் இவன், வேட்டை, ராஜாராணி, கடம்பன் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். தற்போது கஜினிகாந்த், சந்தனத்தேவன் படங்களில் நடித்து வருகிறார். ஆர்யாவுக்கு 37 வயது ஆகிறது. சில நடிகைகளுடன் அவரை இணைத்து கிசுகிசுக்கள் வந்தன. அவற்றை மறுத்தார். இந்த நிலையில் தனக்கு பெண் பார்ப்பதாகவும் திருமணம் செய்துகொள்ள விருப்பம் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் …
-
- 10 replies
- 2.4k views
-
-
சென்னை: திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன், உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 69. கடந்த 1980-ம் ஆண்டு வெளியான ‘நிழல்கள்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘பூங்கதவே தாழ் திறவாய்’ என்ற பாடல் மூலம் பாடகியாக திரை உலகில் உமா ரமணன் அறிமுகமானார். அந்த படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். தீபன் சக்ரவர்த்தி உடன் இணைந்து அந்தப் பாடலை அவர் பாடி இருந்தார். கேளடி கண்மணி, தூறல் நின்னு போச்சு, வைதேகி காத்திருந்தாள், தில்லுமுல்லு, பன்னீர் புஷ்பங்கள், முதல் வசந்தம், ஒரு கைதியின் டைரி, புதுமைப் பெண், தென்றலே என்னை தோடு, திருப்பாச்சி உள்ளிட்ட பல படங்களில் இவர் பின்னணி பாடலுக்கு பாடியுள்ளார். https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1239836-film-playbac…
-
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
வேட்டையாடு விளையாடு ஒருவழியாய் ரிலீஸ் வேட்டையாடு விளையாடு படம் இன்று ரிலீஸாகும் நிலையில் கமல் தனக்துத் தர வேண்டிய சம்பள பாக்கியைக் கேட்டு நடிகர் சங்கத்தில் புகார் கொடுத்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இருப்பினும் கமல் சமரசத்திற்கு ஒத்து வந்ததால், பிரச்சினை சுமூகமாக¬ முடிந்தது. காஜாமைதீன் தயாரிப்பில் வேட்டையாடு விளையாடு படத்திற்கு பூஜை போடப்பட்டது. ஆனால் பணப் பிரச்சனையில் காஜாமைதீன் சிக்கிக் கொண்டதால் படம் ஆஸ்கர் பிலிம்ஸுக்கு கை மாறியது. ஆனால் திடீரென ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டது. இதையடுத்து படத்தைத் தயாரிக்கும் பொறுப்பை செவன்த் சானல் நிறுவனத்தின் மாணிக்கம் நாராயணன் ஏற்றார். இதைத் தொடர்ந்து கமல்ஹாசன்ஜோத…
-
- 10 replies
- 5.6k views
-
-
[size=2]ஆர்யாவுடன் காதல் இல்லை என்றார் டாப்ஸி. விஷ்ணுவர்தன் இயக்கும் புதிய படத்தில் ஆர்யாவுடன் நடிக்கிறார் டாப்ஸி. இப்பட ஷூட்டிங்கில் இருவரும் நெருங்கி பழகுவதாகவும், டாப்ஸியை ஷூட்டிங்கிற்கு அழைத்துச் செல்வது, மீண்டும் அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு கொண்டுவந்துவிடுவது போன்ற வேலையை ஆர்யா செய்து வருவதாகவும், அடிக்கடி பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக பங்கேற்பதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகின. [/size] [size=2]இதற்கு தற்போது டாப்ஸி பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: [/size] [size=2]என்னைப்பற்றிய காதல் கிசுகிசு கதைகள் வருவது வாடிக்கையாகிவிட்டது. அதை கேட்டு கேட்டு சோர்ந்துவிட்டேன். ஆர்யாவுடன் சில நாட்கள்தான் ஷூட்டிங் நடந்தது. அவருடன் அதிகம் பேசக்கூட நேரம் கிடைக்கவி…
-
- 10 replies
- 651 views
-
-
நடிகர் வினுசக்கரவர்த்தி காலமானார் ! சென்னை: உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல குணசித்திர நடிகர் வினுசக்கரவர்த்தி இன்று காலமானார். அவருக்கு வயது 72. குரு சிஷ்யன்', 'அண்ணாமலை' உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர் வினு சக்ரவர்த்தி (72). உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாலை 7 மணியளவில் மரணம் அடைந்தார். அவரது மனைவி பெயர் கர்ணப்பூ. மறைந்…
-
- 10 replies
- 3.4k views
-
-
பழைய பாடல்களை ‘ரீமிக்ஸ்’ செய்வது தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட இசை அமைப்பாளர்கள் மீது வழக்குத் தொடர்வேன்’ என்று தனது ஆதங்கத்தை ‘அய்யா வழி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாகவே சீற்றத்தோடு வெளிப்படுத்தி, ஒரு புதிய பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார் பாடலாசிரியர் புலமைப்பித்தன். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நாடகம், சினிமா, அரசியல் ஆகிய தளங்களில் இயங்கி வரும் இவர், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்பாடல்களை எழுதியவர். அவரிடமே பேசினோம். உங்களுக்கு ‘ரீமிக்ஸ்’ பாடல்கள் மீது அப்படி என்ன கோபம்? ‘‘ ‘ரீமிக்ஸ்’ செய்வதன் மூலம் அந்தப் பாடல்களை உருவாக்கிய படைப்பாளிகளைக் கேவலப்படுத்துகிறார்கள். ஒரிஜினல் பாடலில் உள்ள அழகைக் கெடுத்து காட்டுமிராண்டித்தனமான இசையைச் சேர்க்கிறார்கள…
-
- 10 replies
- 2.4k views
-
-
எனக்கும் சிலம்பரசனுக்கும் இடையே இருந்த நட்பு முறிந்துவிட்டது, இனிமேல் நானும் அவரும் அவரவர் பாதையில் போகப் போகிறோம் என நயனதாரா பகிரங்கமாக அறிவித்துள்ளார். சிம்புவோடு சேர்ந்து சுற்றியதால் நயனதாராவை தமிழ், தெலுங்கைச் சேர்ந்த பிற இளம் ஹீரோக்கள் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனர். 'பெரிசுகள்' மட்டுமே அவ்வப்போது ஜோடி போட்டு ஆட கூப்பிடுகின்றனர். இதனால் சினிமாவில் தனது எதிர்காலம் பெரிய கேள்விக் குறியாகிவிட்ட நிலையில் இந்த முடிவுக்கு வந்துள்ளார் நயனதாரா. வல்லவன் படத்தில் நயனதாரா நடிக்க ஆரம்பித்தபோது அவருக்கும், சிம்புவுக்கும் இடையே உதட்டுக் கடி ஸ்டில் மூலம் நட்பு உருவானது. அது நாளடைவில் இறுக்கமாகி, உருக்கமாகி, நெருக்கமாகி காதலாக கசிந்து உருகியது. இருவரும…
-
- 10 replies
- 3k views
-
-
இதுவரை ஹீரோக்கள் கூட கிள்ளாத தனது இடுப்பை சந்தானம் கிள்ளிவிட்டதை நினைத்தால் அவரால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லையாம். இனியும் இங்கிருந்தால் நம்ம இமேஜ் டேமேஜ் ஆகிவிடும். யா யா படத்தில் சந்தானம் தனது இடுப்பில் கிள்ளியதை நினைத்து நினைத்து புலம்புகிறாராம் சந்தியா. Â சந்தியாவின் மார்க்கெட் படுத்துவிட்டதையடுத்து அவர் யா யா படத்தில் காமெடி சந்தானத்தின் ஜோடியாக நடித்துள்ளார். படத்தில் ஹீரோ ரேஞ்சுக்கு சந்தானத்திற்கும் காதல், ரொமான்ஸ், கொஞ்சல் காட்சிகளாம். சில காட்சிகளில் சந்தானம் சந்தியாவின் இடுப்பை கிள்ளுவது, முத்தம் கொடுப்பது என்று ரொம்பவே ரொமான்டிக்காக நடித்துள்ளாராம். இப்படி காமெடி நடிகரோடு முத்த காட்சியில் நடித்துவிட்டோமே என்று சந்தியா நொந்து கொண்டிருக்கிறாராம். இங்கிருந்…
-
- 10 replies
- 2.7k views
-
-
விரைவில் திருமணமாம் - புதிய வாய்ப்புகளை தட்டிக்கழிக்கும் அனுஷ்கா! [Wednesday 2014-09-17 22:00] அனுஷ்காவுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் முன்னெப்போதையும் விட இப்போதுதான் கவனமாக அதற்கேற்ற மாதிரி கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன. ஏற்கனவே. தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமாதேவி’ என்ற படத்திலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ‘பாஹுபாலி’ என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதுதவிர சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக ‘லிங்கா’ மற்றும் அஜித்துக்கு ஜோடியாக அவரது 55வது படங்களில் நடித்துவருகிறார். இந்தப்படங்களுக்குப்பின்..? நிச்சயமாக டு…
-
- 10 replies
- 5.4k views
-
-
சில திரைப்படங்களைப் பார்க்கும் போது எந்தவிதமான பெரியதொரு உணர்வையும் ஏற்படுத்தாது. ஆனால் மனசின் ஓரத்தில் அந்தப் படம் உட்கார்ந்து அசைபோடவைக்கும். அப்படியானதொரு உணர்வை ஏற்படுத்தியது தான் "வடக்கும் நாதன்" மலையாளத்திரைப்படம் முழுப்பதிவிற்கும் http://kanapraba.blogspot.com/2006/10/blog...og-post_29.html
-
- 10 replies
- 2.3k views
-