வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
பெண் ஒருத்தி, இரண்டு கணவர்களுடன் மணக்கோலத்தில் நடந்து வருவது போன்ற மிட்டாய் திரைப்பட போஸ்டர்கள் சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தின. இதே மிட்டாய் திரைப்படத்தில் அடுத்த சர்ச்சைக்குரியக் காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்பட நாயகி மாயா உண்ணி தன் வாயில் தண்ணீரை நிரப்பி, செடிக்கு தண்ணீர் விடுவது போல துப்ப, அதை கதாநாயகன் பிரபா தன் வாயில் பிடிப்பதுபோல காட்சி எடுக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த கிழக்கு கடற்கரைச் சாலையில் இந்தப் படப்பிடிப்பு நடைபெற்றது. நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு அந்தக் காட்சி படமாக ஆரம்பித்தது. கதாநாயகி மாயா உண்ணி வாயில் தண்ணீரை நிரப்பிக் கொண்டார். காட்சியில் நடிக்க தான் தயார் என்பதுபோல், அவர் தனது கட்டை விரலை உயர்த்தினார். இந்த சமி…
-
- 10 replies
- 3.1k views
-
-
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் இரண்டாவது மகள் ஸ்ரீஜா பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக தான் காதலித்து வந்த சிரிஷ் பரத்வாஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சிரஞ்சீவியின் ஏராளமான ரசிகர்கள் இதனால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். என்.டி.ஆருக்கு பிறகு ரசிகர்களால் தெய்வமாக போற்றப்படுபவர் சிரஞ்சீவி. இந்த காதல் திருமணத்திற்கு அவர் எப்படியெல்லாம் எதிர்ப்பு தெரிவித்தார் என்பது பற்றி ஸ்ரீஜா பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக பேசியதுதான் ரசிகர்களின் அதிர்ச்சிக்கு காரணம். நானும் சிரிஷ§ம் கடந்த நான்காண்டுகளாக காதலித்து வந்தோம். இதையறிந்ததும் எனது பெற்றோர் என்னை கல்லூரிக்கு செல்ல விடாமல் ஓராண்டாக வீட்டுக்குள்ளேயே அடைத்து வைத்தனர். இந்த திருமணத்திற்கு எனது பெற்றோர் எதிர்ப்பு…
-
- 10 replies
- 4.6k views
-
-
இளம்புயல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இப்படத்தில் பங்காற்றிய கலைஞர்களில் அநேகம் பேர் இலங்கை தமிழர்கள் என்பதால், அரங்கம் முழுவதும் தூய தமிழின் மணம்! படத்தின் இயக்குனர் கே.எஸ்.துரையின் வரவேற்புரையே பலரை கிறங்கடித்தது. விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட, ஆடியோவை அமீர் பெற்றுக் கொள்வதாக ஏற்பாடு. முன்பாக பேசிய அமீர், 'வாழ்த்துகள்' என்று ஒரே வார்த்தையில் தனது உரையை முடித்துவிட, விழாவுக்கு வந்திருந்த பலருக்கும் அதிர்ச்சி. பின்பு அவரை வற்புறுத்தி பேச வைத்தார் கே.எஸ்.துரை. 'நான் பேசவே கூடாது போலிருக்கிறது. கடந்த வாரம் ஒரு விழாவில் நான் சில கருத்துக்களை சொல்லப்போக, மறுநாளே எல்லா பத்திரிகைகளிலும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அமீர் கண்டனம் என்று கொட…
-
- 10 replies
- 2.6k views
-
-
நடிகர் வடிவேலு பிபிசி தமிழுக்கு பேட்டி - “இம்சை அரசன் படத்தை ஒத்து கொண்டது என் கெட்ட நேரம்” ச. ஆனந்தப்பிரியா பிபிசி தமிழுக்காக படக்குறிப்பு, வைகைப் புயலுக்கு ஏற்பட்ட இம்சை முடிவுக்கு வந்தது. நடிகர் வடிவேலுவுக்கு வழங்கப்பட்ட 'ரெட் கார்ட்' நீக்கப்பட்டு, தற்போது அவர் மீண்டும் படங்களில் நடிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் படங்களில் நடிக்க இருப்பது, மீம் கிரியேட்டர்கள், 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' பிரச்னை என பலவற்றை குறித்து நடிகர் வடிவேலு பிபிசி தமிழிடம் பகிர்ந்திருக்கிறார். நடிகர் வடிவேலுக்கு நடிக்க தடை கொடுக்கப்பட்டது ஏன்? தமிழ்த்…
-
- 10 replies
- 1.3k views
- 1 follower
-
-
முதல் கல்யாணத்தின் தோல்வியால் நான் உடைந்து போய் விடவில்லை. கண்டிப்பாக இன்னொரு கல்யாணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் சொர்ணமால்யா. சன் டிவியில் இளமை புதுமை நிகழ்ச்சி மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களிடையே அறிமுகமானவர் சொர்ணமால்யா. அதன் பிறகு பெரும் பாப்புலர் ஆன சொர்ணமால்யா மணிரத்தினத்தின் அலைபாயுதே மூலம் சினிமாவுக்கும் வந்தார். டிவியில் இருந்தவரை அமைதியான பிரபலமாக அறியப்பட்ட சொர்ணமால்யா சினிமாவுக்கு வந்த பிறகுதான் பல மாற்றங்களில் சிக்கினார். 2002ல் கல்யாணம் செய்த சொர்ணமால்யா, அடுத்த ஆண்டே விவாகரத்து செய்தார். அதன் பின்னர் முழு நேர நடிகையாக மாறினார். ஆனால் அவருக்கேற்ற ரோல்கள் கிடைக்கவில்லை. இதனால் அவரது திரை வாழ்க்கை அமைதியான கடல் போல காணப்பட்டது. இடைய…
-
- 10 replies
- 3.9k views
-
-
நட்சத்திர ஓட்டலில் நள்ளிரவு பார்ட்டி : போதையில் நடிகைகள் குடுமிப்பிடி சண்டை சென்னை: போதையில் நள்ளிரவு சூடிஸ்கோத்தே' நடனத்தில் நடிகைகள் இருவர் குடிமிப்பிடி சண்டை போட்ட விவகாரம் குறித்து விசாரணை நடக்கிறது. சூதுணை நடிகை அடியாட்களுடன் எனது வீட்டிற்கு வந்து கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார்' என நடிகை ஐஸ்வர்யா போலீசில் புகார் கொடுத்தார். நடிகை லட்சுமியின் மகள் ஐஸ்வர்யா. சூஎஜமான், ராசுக்குட்டி' உட்பட பல படங்களில் நடித்தவர். சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியைச் சேர்ந்த துணை நடிகை ப்ரீத்தி உன்னி. இவர்கள் இருவரும் கோலிவுட்டில் நுழைவதற்கு முன் இருந்தே தோழிகளாக பழகினர். சினிமாவிற்கு நடிப்பதற்கு முன் சூடான்ஸ் கிளப்' உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றினர். இடையில…
-
- 10 replies
- 35.8k views
-
-
ஹரியின் இயக்கத்தில், சூர்யா- அனுஷ்காவின் நடிப்பில் வெளிவந்த சிங்கம் மாபெரும் வெற்றி பெற்றது. எனவே சிங்கம் 2 பாகத்தை எடுக்க முடிவு செய்தார் ஹரி. இப்படத்திலும் அனுஷ்காவே நாயகியாக நடித்துள்ளார். ஆனால் இந்த முறை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், வெளிநாட்டில் நடப்பது போன்று கதை பண்ணியுள்ளார்களாம். அதனால் அனுஷ்கா பகுதி ரொம்ப சிறியதாகி விட்டதாம். அதேசமயம், படத்தில் இன்னொரு நாயகியாக நடித்துள்ள ஹன்சிகாவின் கதாபாத்திரம் தான் கதையையே நகர்த்தி செல்கிறதாம். இதனால் அவருக்குத்தான் கதையில் அதிக முக்கியத்துவமாம். இதை போகப்போக தெரிந்து கொண்ட அனுஷ்கா, பின்னர் தான் ஓரங்கட்டப்பட்டதை தெரிந்து கொண்டு பீல் பண்ணியிருக்கிறார். அத்துடன் சில நாட்களில் தனக்கான காட்சிகள் படமாக்கி முடிந்தது…
-
- 10 replies
- 9.8k views
-
-
ஏன் எமது சினிமா சாகிறது? சுதேசமித்திரன் தன்னிகரில்லாத தமிழ் சினிமாவின் தொன்று தொட்ட வரலாற்றில் ஆகச்சிறந்த அம்சக்கூறுகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள் என்று யாராவது என்னிடம் கேட்க விரும்பினால் நான் நல்க விரும்பும் பட்டியல் இதுதான். ஜெயமாலினியின் இடுப்பு, ஜோதிலட்சுமியின் அலட்சிய ஆட்டம், சில்க் ஸ்மிதாவின் கண்கள், அனுராதாவின் தொடைகள், ராதாவின் காது, ஸ்ரீதேவியின் ஸ்கின்டோன் மர்மம், ஸ்ரீப்ரியாவின் க்ளிவேஜ், கமலஹாசன் நெளியும் நளினம், சுருளிராஜனின் குரல் வளம், டி. ராஜேந்தரின் தைரியம், கவுண்டமணியின் செந்தில், மோகனின் ஒலிவாங்கி, ராமநாராயணனின் சாதனை, ஏவியெம்மின் வெற்றிப் படங்கள், சிவக்குமாரின் தெய்வீகத் திருவுருவம், பாலச்சந்தரின் குடும்பக் கட்டுப்பாடில்லாத கதைகள்,…
-
- 10 replies
- 4.5k views
-
-
பெர்லின் நகரில் நடைபெறும் 58வது சர்வதேச பட விழாவில் இயக்குநர் அமீரின் பருத்தி வீரன் திரையிடப்படுகிறது. ஐந்து நாட்களுக்கு இப்படம் திரையிடப்படுகிறது. பெர்லின் பட விழாவில் மொத்தம் 135-க்கும் மேற்பட்ட படங்கள் கலந்து கொள்கின்றன. இந்தியாவிலிருந்து பருத்தி வீரன் கலந்து கொள்கிறது. இப்படம் நேரடிப் போட்டிப் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதேசமயம், ஷாருக் கானின் ஓம் சாந்தி ஓம் சிறப்புத் திரையிடுதல் பிரிவின் கீழ் இடம் பெற்றுள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் ஐந்து நாட்களுக்கு பருத்தி வீரன் திரையிடப்படவுள்ளது. இதில் 2 நாட்கள் ஜெர்மனி மொழி சப் டைட்டிலுடன் படம் திரையிடப்படுகிறது. 3 நாட்கள் ஆங்கில சப் டைட்டிலுடன் திரையிடப்படும். கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த 9-வது ஓஸியான்…
-
- 10 replies
- 2.3k views
-
-
“ஒரு திருடன் உங்களை முத்தமிட்ட பிறகு பற்களை எண்ணிக் கொள்ளுங்கள்; ஒரு திருடனின் எழுத்தை படித்த பிறகு உங்களின் விழுமியங்களை சரி பாருங்கள்!”. – புது மொழி 2.0 முதல் பார்வை – கருப்பின் வெள்ளை அழகு எந்திரனுக்கு சன் குழுமத்தின் கலாநிதி மாறன் சுமார் 130 கோடி ரூபாய் செலவழித்தார். இரண்டாவது பாகத்திற்கு இலண்டன் வாழ் லைக்கா மொபைலின் அதிபர் சுபாஷ்கரன் அல்லிராஜா சுமார் 350 கோடி ரூபாயை செலவழிக்கிறார். காலம் நவம்பர் 20, 2016. இடம் மும்பை புறநகரில் இருக்கும் யாஷ் ராஜ் ஸ்டூடியோ. அலைஅலையான விசில்கள், விளிப்புகளுடன் ரசிகர்கள். தமிழகத்திலிருந்தும், தாரவியிலிருந்தும் தர்ம சேவையாக அவர்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம். அலைக்கு அணை போட்டுக் கொண்டிருந்தார்கள் பவுன்சர்க…
-
- 10 replies
- 2.4k views
-
-
பட மூலாதாரம்,ACTOR VIJAY கட்டுரை தகவல் எழுதியவர்,பொன்மனச்செல்வன் பதவி,பிபிசி தமிழுக்காக 31 மே 2023 நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் இப்போது, அப்போது எனும் பேச்சுகள் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் உட்கட்டமைப்பு பணிகள் பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், அவற்றின் செயல்பாடுகள் தற்போது வெளிப்படையாக நடக்கின்றன. விஜய் உடனான சந்திப்புகள், தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தல், அன்னதானம் வழங்குதல் என அடிக்கடி செய்திகளில் இடம்பிடிக்கும் நடவடிக்கைகளும் வாடிக்கையாகி இருக்கின்றன. இதனால், வழக்கம் போலவே, 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் அரசியலுக்கு வருவ…
-
- 10 replies
- 1.1k views
- 1 follower
-
-
பாங்காக்கில், நிலநடுக்கம்: நடிகர் தனுஷ்-நயன்தாரா உயிர் தப்பினார்கள் சென்னை, மே.22- பாங்காக்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் தனுஷ்-நயன்தாரா ஆகிய இருவரும் உயிர் தப்பினார்கள். நிலநடுக்கம் காரணமாக அங்கு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. `யாரடி நீ மோகினி' என்ற புதிய படத்தை டைரக்டர் கஸ்தூரிராஜா சொந்தமாக தயாரித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கிறார். இருவரும் ஜோடியாக நடிக்கும் முதல் படம் இது. படத்தை, ஜவகர் டைரக்டு செய்து வருகிறார். படப்பிடிப்பு சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் தொடங்கி, பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெறுகிறது. பாடல் காட்சிகளை, தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் படமாக்க முடிவு செய்தார்கள். அ…
-
- 10 replies
- 1.9k views
-
-
ஆத்தா... நான் பாஸ் ஆயிட்டேன் என்று ஓடிவந்த ஸ்ரீதேவியை யாராலும் மறக்க முடியாது. அதன் பின் வந்த படங்களிலும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து தன் ரசிகர்களின் மனதில் அழுத்தமாக பதிந்துவிட்ட ஸ்ரீதேவிக்கு இன்னும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த அளவிற்கு புகழ்பெற்ற நடிகையின் அடுத்த குறிக்கோள் தன் மகளையும் தன்னைப் போல ஒரு நடிகையாக கொண்டுவர வேண்டும் என்பது தான். ஸ்ரீதேவி இந்தியிலும், 1970 மற்றும் 80களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். பின்னர் பிரபல இந்தி தயாரிப்பாளர் போனிகபூரை மணந்து மும்பையில் செட்டில் ஆனார். ஸ்ரீதேவிக்கு ஜானவி, குஷி என இரு மகள்கள் உள்ளனர். இதில் ஜானவியை சினிமாவில் நடிக்க வைக்க முயற்சித்து வருகிறார். இதற்காக தமிழ், தெலுங்கில் கதை கேட்கிறார். …
-
- 10 replies
- 3.4k views
-
-
மும்பை: கடந்த 25 ஆண்டுகளில் வாழும் இந்தியர்களில் மிகச் சிறந்த 25 பேர் பட்டியிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலிடம் கிடைத்துள்ளது. என்டிடிவி நிறுவனம் தனது வெள்ளிவிழாவையொட்டி, கடந்த கால் நூற்றாண்டில் இந்தியாவின் மிகச் சிறந்த 25 மனிதர்கள் யார் என்ற நாடு தழுவிய ஒரு கருத்துக் கணிப்பை இணைய தளம் மூலம் நடத்துகிறது. பொதுமக்கள் அதில் நேரடியாக வாக்களிக்கலாம். இந்தப் பட்டியலில் ரஜினி, சச்சின் டெண்டுல்கர், அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான், டோனி, கபில்தேவ், ரத்தன் டாடா என அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆளுமை கொண்ட விவிஐபிக்கள் இடம்பெற்றுள்ளன. ஆன்லைனில் லைவ்வாக உள்ள கருத்துக் கணிப்பு இது என்பதால், ஒவ்வொரு நாளும் வாக்குகளின் அடிப்படையில் யாருக்கு என்ன இடம் என்ற விவரம் அந்த நிறுவன இணைய தள…
-
- 10 replies
- 719 views
-
-
கோதண்டபாணி ஆடியோ லேப்ஸ் சென்னையின் மிகப்பெரிய, புகழ்பெற்ற ஒலிப்பதிவுகூடம். பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியத்திற்குச் சொந்தமானது. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய திரையிசை ஒலிப்பதிவு மையங்களில் ஒன்றாக விளங்கிய இடம். தற்போது அது விற்பனைக்கு வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த செய்தியை முதலில் என்னால் நம்பமுடியவில்லை. ஆனால் அது உண்மையே என்று திரையிசைத் துறை நண்பர்கள் பலர் உறுதியாகச் சொன்னார்கள். கடுமையான பொருளதார நெருக்கடியால்தான் எஸ்.பி. பி இந்த முடிவை எடுத்துள்ளாராம். 45 ஆண்டுகளாக இடைவிடாமல் பல மொழிகளில் தொடர்ந்து பாடிவரும் ஒரு மாபெரும் நட்சத்திரப் பாடகனுக்கா இந்த நிலை என்று யோசிப்பது சங்கடமாக இருந்தது. பணத்தின் நிலையற்ற தன்மையும் வாழ்வின் சுழற்சியும் எவ்வளவு விசித்திரமான…
-
- 10 replies
- 1.4k views
-
-
-
- 10 replies
- 1.2k views
-
-
சூப்பர்மேன் ரிடர்ன்ஸ் - திரை விமர்சனம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சூப்பர்மேன் திரும்பி வந்திருக்கிறார்... இதுவரை 4 பாகங்கள் கிறிஸ்டோபர் ரீவ்ஸ் நடித்து வெளிவந்தது.... 5வது பாகமான இந்தப் படம் புது சூப்பர் மேனான பிராண்டன் ரூத் நடித்து வெளிவந்திருக்கிறது.... பிராண்டன் ரூத் கிறிஸ்டோபர் ரீவ்ஸின் இளவயது தோற்றத்திலேயே அச்சு அசலாக இருக்கிறார்.... சுமார் ஆறரை அடி உயரம்... செம வெயிட் என்று அமர்க்களமான தோற்றம்.... படத்தின் கதையெல்லாம் சும்மா கப்சா தான்.... வேறு யாராவது ஹீரோ செய்தால் கடுப்பாகி விடுவோம்.... சாகசம் செய்வது சூப்பர்மேன் என்பதால் மன்னித்து விட்டு விடலாம்.... சூப்பர்மேன் கீழே விழுந்துக் கொண்டிருக்கும் விமானத்தை தன் சக்தி கொண்டு தூக்கி(?) காப்பாற்றுகிறார்....…
-
- 10 replies
- 2.2k views
-
-
நண்பகல் நேரத்து - மயக்கம் ஏன்? சினிமா என்பது 24 கலைகளின் தொகுப்பு. அதில் ஒன்று தான், கதை சொல்லுதல். வணிக சினிமா என்பது முழுக்கவும் கதை சொல்வதையே மையமாக வைத்துச் சுழல்வது. ’முழுப்படமும் கதை சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் அந்தக் கதையை நகர்த்த வேண்டும். ஒவ்வொரு ஷாட்டுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும்’ என்பது பாலபாடம். மக்கள் கதை கேட்கவே படம் பார்க்க வருகிறார்கள். விசு, ராம.நாராயணன் போன்றோரின் படங்கள் டெக்னிகலாக சுமாராக இருந்தாலும் பெரும் வெற்றியடையக் காரணம், கதை சொன்ன விதம். எப்படி பிண்ணனி இசையோ, வசனமோ இல்லாமல் படம் எடுக்க முடியுமோ, அதே போன்றே கதையை பெரிதாக கணக்கில் கொள…
-
- 10 replies
- 1.6k views
- 1 follower
-
-
தமிழைக் காப்பாற்ற இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது: கருணாநிதி, மே 2, 2009, 10:35 [iST] திருச்சி: தமிழுக்கு ஏதாவது நேரிட்டால் அதைக் காப்பாற்ற இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி. லோக்சபா திமுக தேர்தல் பிரசாரத்தை முதல்வர் கருணாநிதி திருச்சியில் நேற்று நடந்த பிரமாண்டக் கூட்டத்தில் தொடங்கினார். இக்கூட்டத்தில் மே தின கொண்டாட்ட கூட்டமும் நடந்தது. ஆயிரக்கணக்கான தொண்டர்கள் முன்பாக முதல்வர் கருணாநிதி பேசுகையில், அனைவருக்கும் மே தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு முன்பு பேசிய திருமாவளவன் விட்ட முழக்கம் விரைவில் பாராளுமன்றத்தில் கேட்கும். அவருடன் சேர்த்து சாருபாலா தொண்டைமான் முழக்கமும் கேட்கும். …
-
- 10 replies
- 3k views
-
-
டொராண்டோ பட விழா இம்மாதம் ஆறாம் திகதி தொடக்கம் பதினாறாம் திகதி வரையில் நடைபெறுகின்றது . இதில் இலங்கையில் இருந்து தயாரிக்க பட்ட "இனி அவன்" என்ற தமிழ்படமும் திரையிடப்படுகின்றது .இதை இயக்கியவர் ஒரு சிங்களவர்.
-
- 10 replies
- 1.4k views
-
-
தமிழ்ப் பையன்களைப் பிடிக்காத லட்சுமி மேனனுக்கு17 வயசு.. சென்னையில் கொண்டாட்டம்! தமிழ்ப் பையன்கள் வேண்டுமானால் என்னைக் காதலித்துக் கொள்ளட்டும்... ஆனா நான் ஒரு மலையாளியைத்தான் காதலிச்சு கல்யாணம் செஞ்சுப்பேன் என்று ஓபன் ஸ்டேட்மென்ட் விட்ட லட்சுமி மேனன் நேற்று சென்னையில் தனது 17வது பிறந்த நாளைக் கொண்டாடினார். மலையாளத்திலிருந்து... வழக்கம் போல கோலிவுட் மலையாளத்திலிருந்து இறக்குமதி செய்த நடிகை லட்சுமி மேனன். கொச்சியைச் சேர்ந்தவர். ஆனால் சின்ன வயதிலிருந்தே சென்னையில் அதிக நாட்கள் வசித்ததால் தமிழை அட்சர சுத்தமாகப் பேசுவது இவருக்கு கூடுதல் தகுதி ஆகிவிட்டது. Read more at: http://tamil.oneindia.in/movies/heroines/2013/05/lakshmi-menon-celebrates-17th-b-day-in-chenna…
-
- 10 replies
- 6.1k views
-
-
'ஆச்சி'க்கு அமெரிக்க மரியாதை! மேலும் புதிய படங்கள்'ஆச்சி' மனோரமாவுக்கு அமெரிக்க பல்கலை. டாக்டர் பட்டம் 'ஆச்சி' ..! மக்கள் திலகம், நடிகர் திலகம் மாதிரி தமிழ் சினிமாவின் சரித்திரத்தில் நிரந்தரமாய் ஒட்டிக் கொண்ட இனிய அடையாளப் பெயர். நவரச நாயகியாக வலம் வரும் மனோரமாவுக்கு திரையுலகம் வைத்த செல்லப் பெயர்தான் 'ஆச்சி'. அந்த 'ஆச்சி' நடிக்க வந்து 50 ஆண்டுகள் ஆகப்போகிறது! இன்று அந்த மகா நடிகைக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் வழங்குவதாக அறிவித்துள்ளது. காரைக்குடிக்குப் பக்கத்தில் பள்ளத்தூர் என்ற கிராமத்தில் 1943-ல் பிறந்த கோபிசாந்தா தனது 12வது வயதில் ஒரு நாடகக் குழுவில் நடிப்பைத் தொடங்கினார். பள்ளத்தூர் பாப்பா என செல்லமாக அழை…
-
- 10 replies
- 2.2k views
-
-
ரஜினியின் ‘பேட்ட’யில் தெறிக்கும் சாதியம்! - ஜெ.வி.பிரவீன்குமார் இந்திய மனங்களில் இன்று புரையோடிப் போயிருக்கும் சாதிய, மதவாத, பெண்ணடிமைத்தனப் போக்குகளை ஊக்குவித்ததிலும் அந்தக் கொடிய கட்டமைப்பு உடைபடாது காத்ததிலும் வழிவழி வந்த பல புராணங்களுக்கும் இதிகாசங்களுக்கும் பெரும்பங்கு உண்டு. அவற்றின் நீட்சியாகப் பல புராண நாடகங்களும் அதையே வலியுறுத்தின. அவற்றை அடியொற்றி உருவான சினிமா மட்டும் சும்மா இருந்துவிடுமா? சாதி ஆதிக்கத்தை எதிர்க்கும் படங்கள் அரிதினும் அரிதாக மட்டுமே வெளியாகும் சூழலில், சுய சாதியைப் போற்றும், பிற சாதிகளைக் கீழ்மைப்படுத்தும் படங்களைக் கணக்கில்லாமல் வெளியிட்டுத்தள்ளும் வேலையை ஒருபுறம் செவ்வனே செய்துதான் வருகிறது தமிழ் சினிமா. ரஜினிகாந்த் நடிப்பில் அண்…
-
- 10 replies
- 2.6k views
-
-
பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து ஏற்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தன் மனைவியை பிரிவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். https://thinakkural.lk/article/309150
-
-
- 10 replies
- 660 views
- 1 follower
-
-
நெடுநாளா பார்கவேண்டும், ஆனால் நல்ல கொப்பி கிடைத்தால் மட்டுமே பார்ப்பது என்றிருந்து, இன்று தான் மூடுபனி படம் பார்க்க முடிந்தது—லீவில் நிற்பதால் பகலில் பார்க்க முடிந்தது. நாங்க பாராட்டித்தான் பாலுமகேகந்திராவின் திறமை வெளிப்படவேண்டிய நிலை இல்லை, இருந்தும் மனதில் பட்ட சிலதைப் பகிர இந்தச் சிறிய பதிவு. மற்றவர்களிற்கு என்னமாதிரியோ தெரியாது, ஆனால் எனக்கு பிரியா படப்பாடல்கள் குறிப்பா அக்கரச்சீமை அழகினிலே மற்றும் டார்லிஙடார்லிங் பாடல்களைக் கேட்கும் போது ஏதோ ஒரு நேரக்குடவைக்குள் நுழைந்ததைப் போல, அதுவும் கருமேகம் நிறைந்து பகலில் நன்றாக இருட்டி, சாதுவாகத் தூறல் தொடங்கி ஆனால் இன்னும் மழை பொழியத் தொடங்கு முன்னான ஒரு மழைநாளில் ஊரில் பூத்துக்குலுங்கும் சீமைக்கிளுவை மரத்தின் கீழ் நின…
-
- 10 replies
- 6.9k views
-