வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
2005-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது விஜய்க்கும், சிறந்த நடிகை விருது அசினுக்கும் வழங்கப்பட்டது. திருப்பாச்சி, சச்சின், சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய்க்கும், கஜினி, சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அசினுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை கார்ப்பரேட் கிளப் சார்பில் 2005-ம் ஆண்டுக்கான எம்ஜிஆர் -சிவாஜிகணேசன் அகாதெமி விருதுகள் சென்னை ராயபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. இதில் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஏவிஎம் சரவணன், கவிஞர் வாலி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. …
-
- 9 replies
- 2.6k views
-
-
காவியத் தன்மை கொண்ட கதைகளை, பிரம்மாண்டமான திரைப்படங்களாக இந்தியா வாலும் தயாரிக்க முடியும் என்பதைக் காட்டியிருக்கிறது எஸ்.எஸ்.ராஜ மவுலியின் இயக்கத்தில் வந்திருக்கும் பாகுபலி. பல இந்தியக் காவியங்களில் கையா ளப்படும் அரியணைக்கான போட்டியும், உறவுகளை வீழ்த்தும் ரத்தக் கறை படிந்த துரோகப் பக்கங்களும்தான் பாகுபலியின் கதை. பிரம்மாண்டமான மலை, காட்டருவி, காட்டருவியைத் தாண்டினால் மகிழ்மதி ராஜ்ஜியம், அங்கே 25 ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசி தேவசேனா என, பழைய அடிமைப் பெண் படத்தின் கதையை ஞாபகப்படுத்தும் கதை. மகாராணி சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) ஒரு கைக்குழந்தையைக் காப்பாற்றிவிட்டு மரணமடையும் காட்சி யுடன் தொடங்குகிறது படம். மலைப்பகுதி மக்களில் ஒருவரான ரோகிணியால் வளர்க்கப்படும் குழந்தை சிவா…
-
- 9 replies
- 4.7k views
-
-
டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நடிகர் நிதின்சத்யா, சிந்து துலானி நடித்து வரும் படம் பந்தயம்.. இந்த படத்தில் இலங்கையின் நாட்டுப்புற படலான (பாய்லா) சுராங்கனி சுராங்கனிக்கா மாலுகண்ணா வா.. மாலுமாலு மாலு சுராங்கனிக்கா மாலு.. என்ற பாடல் இடம்பெறப்போகிறது. இப்பாடல் காட்சியில் நிதின் சத்யாவும், சிந்து துலானியும் ஆடுகிறார்கள். மேலும் இப்பாடலை கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், பள்ளி, கல்லூரி, மாணவர்கள், தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள், கூலித் தொழிலாளிகள், குழந்தைகள் என பல தரப்பினரும் பாடுமாறு படமாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தவிர மேக்னா நாயுடு ஆடும் ஒரு பாடலும், ஓ போடு ராணி ஆடும் இன்னொரு பாடலும் படத்தில் இடம்பெறுகிறது. http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;…
-
- 9 replies
- 2.6k views
-
-
பட மூலாதாரம்,KV MANI படக்குறிப்பு, பாரதி ராஜாவுக்கு முதல் வாய்ப்பு 1977 ஆம் ஆண்டு '16 வயதினிலே ' திரைப்படம் மூலம் கிட்டியது கட்டுரை தகவல் எழுதியவர், காவிய பிருந்தா உமாமகேஷ்வரன் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ் சினிமாவின் "இயக்குனர் இமயம்" எனப் புகழப்படும் பாரதிராஜா இன்று தனது 82-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். ’16 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி, பல கிராமப் பின்னணியில் அமைந்த கதைகளை இயக்கி, மாபெரும் வெற்றிப் படங்களை தமிழ் சினிமாவுக்கு வழங்கியதோடு மட்டுமல்லாமல், தனது 80 வயதில் ”மாடர்ன் லவ்” என்ற வெப் சீரிஸ…
-
- 9 replies
- 1.1k views
- 1 follower
-
-
பாவலர் அறிவுமதி அண்ணன் அவர்கள் அண்மையில் எழுதியுள்ள ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்தேன். அதில் எவ்வளவோ அதிர்ச்சிதரும் எம சமூகத்திற்கான தகவல்களும் பொதிந்து கிடக்கின்றது. யாழ்கள உறவுகளுக்காக இங்கே தருகின்றேன். இது தொடர்பாக அறிவுமதி அண்ணனோடு உரையாடினேன். இதோ உங்களுக்காக அதை வழங்குகின்றேன். நன்றி: கீற்று இணையம். பார்ப்பன வாத்தியார்கள் பாவலர் அறிவுமதி ஞாநி இப்போது தமிழ்ச்சமுகத்தின் பாலியல் வாத்தியாராகப் பதவி உயர்வு பெற்றுவிட்டார். அதனால்தான் ஆனந்த விகடனில் 'அறிந்தும் அறியாமலும்' எழுதுகிறார். மூன்று வயது ஆண்குறி விறைப்பது குறித்தும், மூன்று வயது பெண்குறி பிசுபிசுப்பது குறித்தும் எழுதி எழுதி... முதன் முதலாக எப்போது நீங்கள் அதைத் தொட்டது.. மு…
-
- 9 replies
- 3.2k views
-
-
நீயா?? நானா?? தமிழகத்தில் பல தொலைக்காட்சிகள் இயங்கினாலும் தனது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்கள் விஜய் தொலைக்காட்சியினர். விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சிகளையே, தமது தொலைக்காட்சியிலும் நிகழ்ச்சிகளாக வேறு பெயரில் மற்றைய தொலைக்காட்சியினர் நடாத்துகின்றனர். பொதுவாகவே தொலைக்காட்சியில் தொடர்களையே பார்த்துப் பார்த்து அலுத்துப் போன நமக்கு விஜய் தொலைக்காட்சியின் இந்த வித்தியாசமான கலந்துரையாடல் நிகழ்ச்சி மனதைக் கவருகின்றது. சமுதாயத்திலுள்ள பல பிரைச்சினைகளை, பிரைச்சினைகளோடு சம்மந்தப்பட்டவர்களையே கருத்துக் கூற வைத்து பல உண்மைகளை வெளிக் கொண்டு வர வைக்கின்றார்கள். இதன் மூலம் பல தவறான அபிப்பிராயங்களை இனம் கண்டு அவர்களால் மாற்றிக் கொள்ள முடிகின்றது. …
-
- 9 replies
- 2.5k views
-
-
பீமா படத்தில் நான் சாவது போல நடித்தது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது. எனவே இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார் திரிஷா. சீயான் விக்ரமும், திரிஷாவும் நடித்த பீமா படத்தில், திரிஷாவை சுட்டுக் கொல்வது போன்ற காட்சி இடம் பெற்றிருந்தது. இது அவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தினருக்கும், தோழியருக்கும், நட்பு வட்டாரத்திற்கும் பெரும் அதிருப்தியைக் கொடுத்து விட்டதாம். இப்படியெல்லாமா நடிக்க சம்மதிப்பது, இனிமேல் இதுபோல நடிக்கக் கூடாது என்று அனைவரும் திரிஷாவை வலியுறுத்தினார்களாம். குறிப்பாக அவரது அம்மா உமாவுக்கு திரிஷாவின் இறப்புக் காட்சியைப் பார்த்து அழுகையே வந்து விட்டதாம். இதனால் இனிமேல் இறப்பது போன்ற காட்சியில் நடிப்பதில்லை என்ற முடிவுக்க…
-
- 9 replies
- 1.9k views
-
-
வெளியான இரண்டே வாரங்களில் தமிழகத்தின் பெரும்பாலான அரங்குகளிலிருந்து தூக்கப்பட்டுள்ளது கமல்ஹாஸனின் விஸ்வரூபம். இந்தப் படம் ஓடிய பெரும்பாலான அரங்குகளில் இன்று அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது. குறிப்பாக சென்னையில் 40 திரையரங்குகளில் அமீரின் ஆதிபகவன் வெளியாகியுள்ளது பெரிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது. புறநகர்களில் 22 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ரஜினி, கமல் நடிக்காத ஒரு படம் சென்னை நகரில் இவ்வளவு அரங்குகளில் வெளியாகியிருப்பது இதுவே முதல் முறை. ரசிகர்களின் பல்ஸ் என்று கூறப்படும் காசி திரையரங்கில் இரண்டே வாரங்களில் விஸ்வரூபம் எடுக்கப்பட்டு, ஆதிபகவன் போடப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் மொத்தம் 47 அரங்குகளில் விஸ்வரூபம் வெளியிடப்பட்டிருந்தது. இதில் 40 அரங்குகளில் …
-
- 9 replies
- 6.9k views
-
-
மணிரத்னத்தின் பூர்வ வேர்கள் - யமுனா ராஜேந்திரன் 14 செப்டம்பர் 2013 “எனது பதின்மப் பருவத்தில், எண்பதுகளில், ஹாலிவுட் படங்களில் ஆச்சர்யமுற்றபடி, டேவிட் லீன், ஸ்டீபன் ஸ்பீல்பர்க், ரிட்லி ஸ்காட் போன்றவர்களின் படங்களைப் பார்த்தபடி நான் வளர்ந்தேன். மணிரத்னத்தின் படங்களை நான் பார்க்கத் துவங்கியவுடன் எனது விசுவாசம் மாறிப்போனது“ என 'மணிரத்னத்துடன் உரையாடல்கள்' (Conversations with Maniratnam : Bharatwa Rangan : Viking Penguin: : 2012) எனும் நூலுக்கான முன்னுரையில் எழுதுகிறார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். “நாம் பார்க்க விரும்பியிருக்கக்கூடிய படங்களை உருவாக்குவதை சாத்தியப்படுத்தியவர்” என கமல்ஹாசன் மணிரத்னம் குறித்துச் சொல்ல, "இந்தியாவில் உலகத்தரமான படங்களை உருவாக்குகிறவர்களில் ஒர…
-
- 9 replies
- 7.6k views
-
-
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்த ஒரே காரணத்திற்காக தமிழ் சினிமாவில் இருந்து ஓரம் கட்டப்பட்ட வைகை புயல் நடிகர் வடிவேலு, ம.தி.மு.க.வில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் தனக்கென்று தனிப்பாணியில் செயல்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் வடிவேலு, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்தார். இதன் விளைவாக வடிவேலு வீடு, அலுவலகம் தாக்கப்பட்டது. இதற்கு பழிவாங்குவதற்காக கடந்த 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்தார். பிரசாரத்தின் போது ஜ…
-
- 9 replies
- 929 views
-
-
துலாபாரம் படம் முதலில் மலையாளத்திலும் பின்னர் தமிழிலும் 1969ம் ஆண்டு எ வி எம் ராஜன் சாரதாவின் நடிப்பில் வெளிவந்த படம்.இப்படத்தில் நடித்ததற்காக நடிகை சாரதாவிற்கு ஊர்வசி வருது மலையாளத்திலும் தமிழிலும் கிடைத்திருந்தது. அந்த நேரத்தில் இரத்தம் ஓடஓட அடி அடியென்று அடித்தாலும் கண்ணீரே வராது.அப்படிபட்ட வயதில் இந்த படம் பார்த்த போது அழுகையே வந்துவிட்டது.அந்த இருட்டுக்குள்ளும் சுற்றுமுற்றும் பார்த்தால் தெரிந்த வரை அழாத ஆட்களே இல்லைப் போல் இருந்தது. இங்கு பலர் அந்த நேரம் பிறந்தேயிருக்கமாட்டார்கள்.இது கறுப்பு வெள்ளை படம் என்பதால் இப்போது பார்க்கவும் முடியாது. இப்படி நீங்களும் பார்த்த சோகப்படங்களைப் பற்றி எழுதலாமே. http://www.youtube.com/watch?v=uNVeKrzBbr0
-
- 9 replies
- 7.1k views
-
-
என்னுடன் நடித்தால் சீக்கரமே கல்யாணமாகிவிடும்: தமன்னா... தமன்னாவுடன் நடிக்கும் நாயகன்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று திரையுலகில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. கொலிவுட்டில் வெற்றிப்படங்களை கொடுத்த தமன்னா, தற்போது டோலிவுட்டில் தஞ்சம் புகுந்துள்ளார். அங்கு சிரஞ்சீவி குடும்பத்தாருக்கு மிகவும் நெருக்கமான தமன்னா, அவர்களிடம் விசாரித்தே அங்குள்ள இளம்நாயகர்களுடன் நடிக்கின்றார். இந்நிலையில் தமன்னாவை பற்றி இன்னும் ஒரு சுவாரஸ்யமான தகவல் கிடைத்துள்ளது. தமன்னாவுக்கு கல்யாண ராசியாம். அதாவது, அவருடன் ஜோடி சேரும் திருமணமாகாத நாயகன்களுக்கு விரைவில் திருமணமாகி விடுகிறதாம். இதை அவரே பெருமையாக செல்லி வருகிறாராம். என் கூட நடிக்கும் நாயகர்களுக…
-
- 9 replies
- 1.1k views
-
-
படுக்கைக்கு அழைத்தார்... சுந்தர்.சி : ஸ்ரீ ரெட்டி புகார். நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி. அவரின் கவனம் தற்போது தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பியுள்ளது. வாய்ப்பு தருகிறேன் என்று கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டவர்களின் பெயர்களை வெளியிடத் துவங்கியுள்ளார். நடிகரும், இயக்குனருமான சுந்தர் சி. மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் ஸ்ரீ ரெட்டி. இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை போட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. ஹைதராபாத்தில் அரண்மனை படப்பிடிப்பு நடந்தது. அப்போது படத்தின் …
-
- 9 replies
- 2.1k views
- 1 follower
-
-
ஒரு வழியாக நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார் கோபிகா. இனிமேல் மலையாளம் உள்பட எந்த மொழிப் படத்திலும் அவர் நடிக்க மாட்டாராம். வெள்ளித்திரைதான் அவருக்கு தமிழில் கடைசிப் படமாம். கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த கோபிகா, சேரனின் கண்டுபிடிப்பு. ஆட்டோகிராப் மூலம் நடிகையான கோபிகா, அதன் பின்னர் தமிழிலும், மலையாளத்திலும் மளமளவென வளர்ந்து முன்னணி நடிகையானவர். சமீப காலமாக அவர் தமிழை விட மலையாளத்துக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் கோபிகா நடிப்புக்கு முழுக்குப் போடுகிறார். அவருக்கு கல்யாணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்துள்ளனராம். இதற்காக மலையாளத்திலேயே நல்ல மாப்பிள்ளையாக தேடிக் கொண்டுள்ளனராம். ஆனால் அவருக்கு நிச்சயதார்த்தம் முடிந்து வ…
-
- 9 replies
- 2.1k views
-
-
அதிமுகவில் இணைய விரும்புவதாக ஜெ.-க்கு நமீதா கடிதம் நடிகை நமீதா | கோப்புப் படம். அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் எழுதி அனுப்பிய கடிதத்தில், ''நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன். தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது. சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன். தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன…
-
- 9 replies
- 1.5k views
-
-
ராம்சரண் தேசா மற்றும் ஸ்ருதி ஹாசன் மெயின் கேரக்டரில் நடிக்கும் ஏவடு என்ற படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க எமி ஜாக்சன் புக் ஆகியுள்ளார். சுவிட்சர்லாந்து கடற்கரையில் எமிஜாக்சன் மற்றும் ராம்சரண் இருவரும் கடற்கரையில் நடித்த பாடல் காட்சி ஒன்று சென்ற வாரம் படமாக்கபட்டது. இந்த பாடலில் படுகவர்ச்சியாக நீச்சலுடையில் நடித்து கலக்கியிருக்கிறார் எமி ஜாக்சன். அவருடைய காஸ்ட்யூமை பார்த்து ராம்சரணே அதிர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் மூலம் தனது கவர்ச்சியால் தெலுங்கு படவுலகை ஒரு கலக்கு கலக்கலாம் என்ற எண்ணத்தில் திடீரென மண் அள்ளிப்போட்டிருக்கிறார் எமிஜாக்சன். இதனால் தனக்கும் ஒரு கவர்ச்சியான பாடல் வைக்கும்படி இயக்குனர் வம்சியை இம்சித்து வருகிறார். எமிஜாக்சனின் சுவிஸ் …
-
- 9 replies
- 1.2k views
-
-
முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாதவன் - கோப்புப்படம் மலையாளத்தில் துல்கர் சல்மான், பார்வதி நடித்து 2015ஆம் ஆண்டில் வெளிவந்த சார்லி திரைப்படத்தின் ரீ - மேக்தான் மாறா. சார்லி விமர்சன ரீதியாகவும் வர்த்தகரீதியாகவும் பெரும் வெற்றிபெற்ற படம் என்பதால், இந்த ரீ - மேக் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. பாரு என்ற பார்வதி (ஷ்ரத்தா ஸ்ரீநாத்) பழைய கட்டடங்களை புதுப்பிக்கும் கலைஞர். கேரளாவில் உள்ள ஒரு சிறு நகருக்குச் செல்லும்போது, அங்குள்ள கட்டடச் சுவர்களில் தான் சிறுவயதில் கேட்ட ஒரு கதையின் காட்சிகள் வ…
-
- 9 replies
- 1.6k views
-
-
காதுல ஏன் ரத்தம் .. ? ம்ம்.. அதே ரத்தம்.! இந்த படத்திற்கு ஏண்டா வந்தம்.? என்டு நொந்த போன தருணங்கள் .. இடை வேளை நேரத்தில் ஆளை விட்டா போதும் என்ர சாமி .! என்டு ஓடி வந்த நேரம்கள் .. இந்த றப்பா படத்திற்கு ஓன் லைனில் அவசரப்பட்டு பணம் கட்டி போட்டமே .. வட போச்சே..! என்டு நொந்து நூடூல்ஸ் ஆன தருணம்கள். 😢 சுருக்கமாக தாங்கள் பார்த்த அந்த தரமான பழைய / புதிய திரை காவியத்தின் (மொக்கை.!) விமர்சனத்தை / அனுபவத்தை .. கள உறவுகள் எழுத்துங்களேன் .. அல்லது வேறு யாராவது கழுவி ஊற்றி இருந்தால் இணையுங்களேன் . அதே ரத்தத்தை நாமும் பார்ப்பம்..ரசிப்பம்..👍 நன்றி.! அக்கரை சீமையிலே (1993) அப்போது (1990's) விஜயகாந்திற்கு மாற்று என்று அறியபட்ட செவ்வாழை சரவணன் நடித்த இந்த ப…
-
- 9 replies
- 2.6k views
-
-
கட்டாய திருமணத்துக்காக டி.வி.நடிகை கடத்தல் சென்னை, மே.10- சென்னை வியாசர்பாடி சர்மா நகர் எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் வசித்து வருபவர் செல்வராஜ். கொரட்டூரில் இரும்பு பட்டறை வைத்துள்ளார். இவரது மகள் தீபா (வயது16). சிறுவயதிலேயே சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் இவருக்கு இருந்து வந்தது. இதனால் எஸ்.எஸ்.எல்.சி.யுடன் படிப்புக்கு முழுக்கு போட்ட தீபா. பின்னர் சினிமாவில் நடிப் பதற்காக வாய்ப்பு தேடினர். இதன் மூலம் வசந்தம் வந்தாச்சு, வம்பு சண்டை, சிறு கதை போன்ற படங்களில் 2-வது கதாநாயகியாக நடித்தார். அதே நேரத்தில் டி.வி. தொடர்களில் நடிப்பதற்கும். தீபாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. மலர்கள், கிரிஜா எம்.ஏ. ஆகிய டி.வி. தொடர்களில் நடித்துள்ள இவர் ஒரு சில சினிமாக்…
-
- 9 replies
- 2.1k views
-
-
Oppenheimer- “Prometheus stole fire from the gods and gave it to man. For this he was chained to a rock and tortured for eternity.” என்ற கிரேக்க தேச புராணகதை வசனங்களுடன் தொடங்குகிறது Oppenheimer திரைப்படம். அணுகுண்டின் தந்தை என வர்ணிக்கப்படும் Julius Robert Oppenheimerன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் திரைப்படம். முக்கியமாக அவரது இளமைப்பருவம், இரண்டாம் உலகப்போரின் முக்கிய அங்கமான மான்ஹட்டன் திட்டத்தில் அவரின் பங்களிப்பு, புகழின் உச்சியிலிருந்து அவரது சரிவு என்பவற்றை விபரிக்கிறது. பரிசோதனைக் கூடத்தை அதிகம் விரும்பாத கோட்பாடுகளில் அதீத ஈடுபாடு கொண்ட ராபர்டை, மான்ஹட்டன் திட்டம் புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. அதன் பின் அவர் எவ்…
-
- 9 replies
- 1.2k views
-
-
தூயாவின் திருமணம் Tuya de hun shi {Tuya's Marriage} சீன திரைப்படம் மங்கோலிய பாலைவன பிரேதசத்தில் வாழும் Tuya என்ற பழங்குடி பெண்ணின் வாழ்க்கை போராட்ட கதைதான் Tuya' Marriage. Tuyaவின் கணவனான Bater விபத்து ஒன்றில் இரு கால்களையும் செயலிழக்கிறான். அதனால் குடும்பம் வருமானமின்றியும் ஆதரவில்லாமல் மிகுந்த அல்லல் படுகின்றனர். அவளே மன தைரியத்துடன் கணவனையும் இரு குழந்தைகளையும் மிகுந்த சிரமங்களுக்கிடையில் பராமரிக்கிறாள். Tuya விற்கு மறுமணம் புரிதலே இதற்கு தீர்வாகவும் என Bater கூறவே அவனை விவாகரத்து செய்யவும் வேறு ஒருவரை மணக்கவும் இருவரும் ஒரு மனதோடு சம்மதித்து குடும்ப நீதி மன்றதில் மனு இடுகின்றனர். ஆனால் தனது கணவனையும் இரு குழந்தைகளையும் அன்போடு…
-
- 9 replies
- 1.2k views
-
-
[size=3] [/size] படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை [size=4] இந்தி படத்தில் படுக்கை அறை காட்சியில் நடித்தது என் கணவருக்கு பிடிக்கவில்லை என்றார் ரீமா சென். தமிழ், இந்தி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் ரீமா சென் முதன்முறையாக படுக்கை அறை காட்சியில் நடித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியில் அனுராக் கஷ்யப் இயக்கிய கேங்ஸ் ஆப் வசேபூர் படத்தில் துணிச்சலாக நடித்திருக்கும் காட்சிகள் பற்றி அவர் கூறியதாவது: கேங்ஸ் ஆப் வசேபூர் படம் எனக்கு பெரிய ஹிட்டாக அமைந்திருக்கிறது என்கின்றனர். ஆனால் இதுதான் நான் நடிக்கும் முதல் படம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே பல ஹிட் படங்களில் நடித்திருக்கிறேன். இப்படத்தில் நட…
-
- 9 replies
- 1.4k views
-
-
முகப்புத்தகம்,இணையம் மற்றும் பழைய சினிப் புத்தகங்களில் சேகரித்த சினிமாத் துணுக்குகள் அப்பப்ப தொடர்ச்சியாக இங்கு..... 1) எடுக்கபடாமலே நின்று போன தெலுங்கு படம், லோ பட்ஜெட் தெலுங்கு படம் ஒன்று என்று அஜீத் தடுமாறி கொண்டிருந்த நேரத்தில் "அமராவதி" என்கிற ஒரு படத்தின் மூலம் அவருக்கு வெளிச்சம் கிடைக்க செய்தவர் இயக்குனர் செல்வா. செல்வா-வின் திருமணத்தில் கலந்து கொண்ட அந்த இளம் அஜீத்தின் புகைப்படம் உங்களுக்காக...... 2) ரஜினிகாந்தின் மெகா ஹிட் படமான "பாட்ஷா"வை முதலில் ஆர்.கே.செல்வமணிதான் இயக்குவதாக இருந்தது. செல்வமணியை அழைத்த ரஜினி, " வேறு எந்த கமிட்மென்டையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்; திரைக்கதை வேலை முடிஞ்சதும் சூட்டிங் போயிடலாம்" என்று…
-
- 9 replies
- 5.5k views
-
-
நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளுக்காக லண்டன் சென்றுள்ளார் இசைஞானி இளையராஜா. கவுதம் மேனன் இயக்கும் நீதானே என் பொன்வசந்தம் படத்தின் பாடல்கள் மற்றும் இசை பெரும் எதிர்ப்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகும் இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்தின் பாடல்களுக்கு இசையமைத்துவிட்ட இளையராஜா, அவற்றை லண்டனில் மாஸ்டரிங் செய்கிறார். இதற்காக அவர் நேற்று லண்டனுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்குள்ள ஏஞ்சல் ஸ்டுடியோவில், ஹங்கேரி இசைக் குழுவினருடன் இணைந்து இசைப் பணிகளை மேற்கொள்கிறார். ஒரு வாரம் வரை அங்கே தங்கியிருந்து படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புப் பணிகளையும் முடிக்கிறார். படத்தின் இயக்குநர் கவுதம் ம…
-
- 9 replies
- 912 views
-
-
நடிகர் நடிகையர் வாங்கும் சொத்துக்கள் பெரும்பாலும் வெளியில் தெரியாது. அப்படி வெளியில் தெரியாமல் ஆர்யா வாங்கிய வீட்டுக்கு வந்துள்ளார் நடிகை நயன்தாரா. பிரபு தேவா விவகாரத்திலிருந்து முழுசாக வெளியில் வந்துவிட்ட நயன்தாரா இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். முன்பெல்லாம் சென்னைக்கு வருவதற்கே பல முறை யோசித்துக் கொண்டிருந்தவர், இப்போது நினைத்தால் ஒரு முறை சுதந்திரமாக வந்து போக ஆரம்பித்துள்ளார். ஏற்கெனவே இரு முறை சென்னை வந்த நயன், சமீபத்தில் ஆர்யாவின் இந்த புதிய வீட்டுக்கு வந்துள்ளார். ஆர்யா வீட்டுல அப்படியென்ன விசேஷம்? இருவரும் நல்ல நண்பர்களாம். அந்த வகையில் தன் புதிய வீட்டில் நயன்தாரா வந்து குத்துவிளக்கேற்றினால் நன்றாக இருக்கும் என விரும்பினாரா…
-
- 9 replies
- 1.1k views
-