வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
கடந்த ஞாயிற்றுக்கிழமை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. திருவிளையாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற படங்களை டி.வி.-யில் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ இதுவரை 'கர்ணன்' படம் பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிட்டவில்லை. டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளியிடப்பட்ட படத்தைப் பார்க்க மிகவும் ஆசையாக இருந்தது. காலையில் கிளம்பி தியேட்டருக்கு சென்றபோது அங்கு ஓடிய புதுப்படங்களுக்கு ஈடாக டிக்கெட் கவுன்டரில் கூட்டம். தள்ளாடும் வயதினர் மட்டுமல்லாமல் இளைஞர்கள் அதிகளவில் வந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது. டிக்கெட் வாங்கிவிட்டு தியேட்டரில் உட்கார்ந்த போது கொஞ்ச கொஞ்சமாக இருக்கைகள் நிரம்ப துவங்கின. முன் இருக்கைகளில் உட்கார்ந்திருந்த பெரியவர்கள் தாம் அந்த காலத்தில் 'கர்ணன்' படத்…
-
- 5 replies
- 5.8k views
-
-
சின்னம்மா திலகம்மா நில்லு நில்லு . . ஏ.ஆர்.ரகுமானின் இசையில் மீண்டும் ஒரு இனிய பாடல் சக்கரகட்டி என்னும் திரைப்படத்தில் இடம்பெற்ற பென்னி டயால் மற்றும் சின்மயின் குரலில் பாடல் சற்று வித்தியாசமான இசையில் மிளிர்கிறது. . . குசேலனில் கிடைக்காத வாய்ப்பை இந்த பாடலில் மிக நேர்த்தியாக செய்திருக்கின்றார். . . வெயிலாய் தொட்டானே சூடு சூடாய் மழையாய் தொட்டானே கோடு கோடாய் . . http://www.tamilmp3world.com/Sakkarakatti.html
-
- 5 replies
- 2.1k views
-
-
-
- 5 replies
- 557 views
-
-
பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார் கேரளாவில் பிரபல நடிகர் கலாபவன் மணி காலமானார் அவருக்கு வயது 45 கொச்சி மருத்துவமனையில் உடலநலகுறைவால் உயிர் பிரிந்தது... விவரங்கள் விரைவில்... ஜெமினி, வேல், ஆறு போன்ற தமிழ் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றவர். சமீபத்தில் கமலுடன் அவர் சேர்ந்து நடித்திருந்த பாபநாசம் திரைப்படம் கலாபவன் நடிப்புக்காக மிகவும் பேசப்பட்டது தேசிய விருது மற்றும் கேரள அரசின் உயரிய சினிமா விருதுகளை கலாபவன் மணி பெற்றுள்ளார். http://www.vikatan.com/news/india/60124-actor-kalabhavan-mani-died.art
-
- 5 replies
- 878 views
-
-
"பிசாசு" - விமர்சனம். நடிப்பு: நாகா, ப்ரயாகா, ராதாரவி இசை: அரோல் கொரோலி தயாரிப்பு: பாலா எழுத்து - இயக்கம்: மிஷ்கின் ஒரு சாலை விபத்தில் அழகிய இளம்பெண் ப்ரயாகா அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடிக்க, அந்தப் பக்கமாக வரும் நாகா உள்ளிட்ட மூவர் ஒரு ஆட்டோக்காரர் உதவியுடன் அவளை மருத்துவனையில் சேர்க்கின்றனர். அவர்களில் நாகாவின் கையை இறுகப் பற்றிக் கொள்கிறாள் ப்ரயாகா. மருத்துவமனைக்குப் போன சில நிமிடங்களில் அவன் கையை இன்னும் இறுகப் பற்றிய நிலையில், 'ப்பா..' என்ற ஒற்றைக் குரலோடு அவள் உயிர் அடங்குகிறது. ப்ரயாகாவின் தந்தை ராதாரவியிடம் உடலை ஒப்படைத்துவிட்டு மனசு முழுக்க பாரமாய், அவளின் ஒற்றைச் செருப்பை நினைவாக எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வருகிறான் நாகா. கவலையைப் போக்…
-
- 5 replies
- 2.3k views
-
-
இப்படியுமா?? பச்சைக் கிளி முத்துச் சரம் பார்த்தீர்களா? முடியுமானால் DERAILED என்ற ஆங்கிலப் படத்தைப் பாருங்கள்.
-
- 5 replies
- 1.6k views
-
-
திரையரங்குகளில் வெற்றி நடைபோட்ட பின் தற்போது நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி பலராலும் கவனம் ஈர்க்கப்பட்டிருக்கும் 'ஜன கண மன' படம் பேசும் அரசியல் குறித்து சற்றே விரிவாக பார்க்கலாம். (அலர்ட்: இந்தக் கட்டுரையில் ஸ்பாய்லர்கள் நிறைந்துள்ளன.) கர்நாடகாவில் மத்தியப் பல்கலைகழகம் ஒன்றில் பேராசிரியையாக பணியாற்றி வரும் சபா மர்யம் (மம்தா மோகன்தாஸ்) மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரது கொலைக்கு நியாயம் கோரி, மாணவர்கள் களத்தில் இறங்கிப் போராட்டம் நடத்துகின்றனர். போராடிய மாணவர்கள் மீது காவல்துறை வன்முறையைக் கட்டவிழ்த்துவிட, இது தொடர்பான விசாரணையை முன்னெடுக்கிறது ஏசிபி சஞ்சன் குமார் (சூரஜ் வெஞ்சரமூடு) தலைமையிலான காவல்துறை டீம். இந்த விசாரணை முறையாக நடைபெற்றதா? சபா மர்யம் ஏன…
-
- 5 replies
- 695 views
-
-
மறுபடியும் உளறி கொட்டிய குஷ்பு -அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? குஷ்புவால் கொஞ்சம் நேரம் கூட சும்மா இருக்க முடியாது. ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு வாயை வைத்து சும்மா இல்லாமல் கற்பை பற்றி தப்பாக பேசி பல பேரிடம் திட்டுகளையும், அவமரியாதையும் பெற்று கொண்டவர்.அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டு அரசியலில் கலைஞருக்கு வலது கை போல் செயல் பட்டார். பின்பு ஆட்சி மாறிய பிறகு சினிமா தயாரிப்பில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். சினிமாவை பற்றியும் அரசியல் பற்றியும் தனது ட்விட்டர் பக்கத்தில் உளறி ரசிகர்களிடம் மொக்க வாங்கவது இவரின் வழக்கம். தற்போது மறுபடியும் ஒரு அனல் பறக்கும் விஷயத்தை பற்றி அவதுறாக பேசியுள்ளார் குஷ்பு. அதாவது திரைப்படங்களில் நடிகர்கள் சிகரெட் பிடிப்பது போன்…
-
- 5 replies
- 897 views
-
-
ஆஸ்கர் விருது விழா:வெல்லப்போவது யார்? மின்னம்பலம் உலகம் முழுவதுமுள்ள, திரைத்துறையினர் ஆர்வமுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது ஆஸ்கர் விருது வழங்கும் விழா தான். ஒரு திரைப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்படுகிறது என்றாலே, அதன் உயர்ந்த தரத்தை எளிமையாகக் கணித்துவிடமுடியும். அனைத்து திரைக்கலைஞர்களின் மனதிலும் இருக்கும் ஒரு உயரிய கனவு என்றால் அது ஆஸ்கார் மேடை தான். கடந்த ஜனவரி மாத துவக்கத்திலேயே 92-ஆவது ஆஸ்கர் விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியிடப்பட்டது. அப்போது துவங்கி, இந்த விருதுகளை வெல்லப் போவது யார் என்ற விவாதமும் ஆரம்பமாகிவிட்டது. அனைத்து விவாதங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்து, கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக …
-
- 5 replies
- 838 views
-
-
கமலும் ஸ்ருதியும் புதுப்படம் மொன்றில் இணைந்து நடிக்கின்றனர். ஏர்கனவே ஸ்ருதி ’7ஆம் அறிவு’ படத்தில் சூர்யா ஜோடியாக நடித்து பிரபலமானார். தனுஷ் ஜோடியாக ’3′ படத்தில் நடித்தார். தற்போது ‘பலுடி’, ‘ஏவடு’ என்ற இரு தெலுங்கு படங்களிலும் இரண்டு இந்திப் படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து தந்தை கமல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை கமல் ஐதராபாத்தில் நிருபர்களிடம் தெரிவித்தார் அவர் கூறியதாவது:- எனது மகள் ஸ்ருதியும் நானும் புதுப் பட மொன்றில் இணைந்து நடிக்கப் போகிறோம். அதற்கான கதை தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் உருவாகும். ஸ்ருதி தமிழ், தெலுங்கு பட உலகில் பிரபலமாகிவிட்டார். ஆனால் இந்தியில் பெயர் வாங்க வில்லை. அங்கு முன்னணி நடிகையாக உயர்ந்ததும் …
-
- 5 replies
- 1.1k views
-
-
பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு சினிமா படமாகிறது! தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வே.பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது. இப்படத்தை ஏ.எம்.ஆர். ரமேஷ் இயக்குகிறார். இதுகுறித்து ரமேஷ், கூறியுள்ளதாவது, ´´விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முடிவு செய்துள்ளேன். விடுதலைப்புலிகள் தரப்பில் இந்த படத்தை எடுப்பதற்காக ஆட்சேபனை இருக்காது என்று கருதுகிறேன். இதற்கான நிறைய தகவல்களை அவர்கள் எனக்கு கொடுத்துள்ளனர்’’ என்று தெரிவித்துள்ளார். அவர் மேலும், ‘’வீரப்பன் கதையை ‘வனயுத்தம்’ என்ற பெயரில் படமாக எடுத்துள்ளேன். பதினோரு வருடங்கள் வீரப்பன் வாழ்ந்த பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்து வீரப்பனிடம் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தவர்…
-
- 5 replies
- 2k views
-
-
சமந்தா - நாக சைதன்யாவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம் நாக சைத்தன்யா உடன் சமந்தா | கோப்பு படம் தெலுங்கில் முன்னணி நடிகரான நாக சைதன்யாவுக்கும், நடிகை சமந்தாவுக்கும் விரைவில் நிச்சயத்தார்த்தம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகரான நாகார்ஜூனின் மகன் நாக சைதன்யா. நாயகனாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். தற்போது 'ப்ரேமம்' படத்தின் தெலுங்கில் ரீமேக்கில் நிவின் பாலி வேடத்தில் நாக சைதன்யா நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. 'விண்ணைத்தாண்டி வருவாயா', 'மனம்' உள்ளிட்ட பல படங்களில் நாக சைதன்யாவுக்கு நாயகியாக நடித்தவர் சமந்தா. இருவருக்கும் காதல் மலர்ந்தது. இருவருமே காதலித்து வருகிறார்கள், விரைவில் த…
-
- 5 replies
- 614 views
- 1 follower
-
-
இந்தியாவில் தயாரான ஸ்லம்டாக் மில்லினர்’ படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆஸ்கார் விருதுக்கு அடுத்த படியான கோல்டன் குளோப் விருது கிடைத்தது. அமெரிக்காவின் டைரக்டர் ழூனியன் விருதுகளையும், ஸ்கிரீன் விருதுகளும் கிடைத்துள்ளன. இந்தநிலையில் இங்கிலாந்தின் பாப்தா’ விருதுகளும் (பிரிட்டீஷ் பிலிம் அகாடமி அவார்டு) இப்படத்துக்கு கிடைத்துள்ளது. இவ்விருது ஆஸ்கார் விருதுக்கு இணையானது என்பது குறிப்பிடத்தக்கது. 11 பாப்தா விருதுகளுக்கு ஸ்லம்டாக் மில்லினர்’ படத்தை பரிந்துரை செய்தனர். அதில் 7 விருதுகள் வாங்கியுள்ளது. சிறந்த இசையமைப்பாளருக்கான பாப்தா’ விருதை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார். இவ்விருது பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த படம்,…
-
- 5 replies
- 1.2k views
-
-
ஏழை மாணவியின் டாக்டர் கனவை நனவாக்கிய சிவகார்த்திகேயன் டாக்டருக்கு படிக்க நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு கொண்டு வந்த சிறப்பு சட்டத்தின் மூலம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் டாக்டருக்கு படிக்க வாய்ப்புகள் வழங்கப்பட்டு உள்ளது. இதில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 8 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்களில் பேராவூரணி அரசுப்பள்ளி மாணவி சகானாவும் ஒருவர். இவருக்கு திருச்சி மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைத்துள்ளது. பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை எனும் குக்கிராமத்தை சேர்ந்த இவரது தாய், தந்தை இருவரும் கூலித் தொழிலாளர்கள். மாணவி சகானா 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 524 …
-
- 5 replies
- 836 views
-
-
திரைப்பட இயக்குநர் சேரன் மகள் தாமினி. இவர், தன்னுடைய காதலன் சந்துருவை தந்தை மிரட்டுவதாக சொல்லி 02.08.2013 அன்று போலீசில் ஒரு புகார் கொடுத்திருந்தார். அந்த புகார் மனு தொடர்பாக சேரனையும், எதிர் தரப்பினரையும் போலீசார் விசாரணைக்கு அழைத்திருந்தனர். அப்போது தாமினி பிடிவாதமாக காதலன் வீட்டாருடன்தான் செல்வேன் என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து பெண் போலீஸ் கமிஷனர் ஷியமளா தேவி இருதரப்பினரிமுடம் பேச்சு வார்த்தை நடத்தினார். சுமூக முடிவு எட்டாமல் இருந்தது. இதற்கிடையில் சந்துருவின் தாயார் ஈஸ்வரியம்மாள் சென்னை ஐகோர்ட்டில் தாமினியை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணையில் கோர்ட்டில் தாமினி ஆஜர்படுத்தப்பட்டார். இதுதொடர்ப…
-
- 5 replies
- 609 views
-
-
‘ஆறு மனமே ஆறு’ -இதுதான் ஷாமும் முகவரி துரையும் சொல்ல வந்த 6 ஆக இருக்க வேண்டும். திருக்குறள் சைசுக்கு கதை இருந்தாலும், அதில் முதல் வரி முழுவதையும் ஓ.பி அடிக்க பழகியிருக்கிறார்கள் இப்போதிருக்கும் பல இயக்குனர்கள். மீதி ரெண்டாவது வரியில்தான் கதையும் விறுவிறுப்பும் அடங்கியிருக்கும். (சில படங்களில் அந்த உப்பு சப்பும் இல்லை) ஆனால் 6 அப்படியல்ல, படம் தொடங்கி பத்தாவது நொடியில் கதை தொடங்கிவிடுகிறது. கதை தொடங்கிய பத்தாவது நொடியில் நமக்கும் பதற்றம் தொடங்கிவிடுகிறது. அடுத்த காட்சி அடுத்த காட்சி என்று குரங்கை போல நம்மை தாவி இழுத்துக் கொண்டு ஓடுகிறது படம். முடியும்போது நம்மையறியாமல் சிந்துகிற ரெண்டு சொட்டு கண்ணீருக்குள்தான் இந்த படத்தின் ஹிட்டும் அடங்கியிருக்கிறது. இன்டர்வெல் நேரத்தில்…
-
- 5 replies
- 941 views
-
-
செய்திவாசிப்பாளர் சரண்யா புதிய தலைமுறை தொலைக்காட்சி சேனலின் செய்திவாசிப்பாளர் சரண்யா தனது கணவருடன் லண்டனில் குடியேற திட்டமிட்டுள்ளார். செய்தி வாசிக்காவிட்டாலும் லண்டனில் இருந்து தனது பணியை தொடர்வேன் என்று அறிவித்துள்ளார். புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நட்சத்திர செய்திவாசிப்பளரும் நடிகையுமான சரண்யாவிற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் லண்டனில் வசிக்கும் அமுதன் என்பருடன் திருமணம் நிகழ்ந்தேறியுள்ளது. இலங்கை யாழ்பாணத்தைச் சேர்ந்த அமுதனின் குடும்பத்தினர் தற்போது லண்டனில் வசித்து வருகின்றனர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலிற்கு வந்த போது அமுதனை சந்தித்துள்ளார் சரண்யா. நட்பு காதலாகி இப்போது கல்யாணம் வரை வந்துள்ளது. கலைஞர் டிவி, ராஜ் டிவி என சில சேனல்களில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியை தொ…
-
- 5 replies
- 2.3k views
-
-
வெகு விரைவில் உலகத் திரையரங்குகளில் "எல்லாளன்" எல்லாளன்_ தமிழீழ விடுதலை போராட்டத்தின் வரலாற்றுப்பதிவு.முழுமையான கற்பனை கலப்பில்லாத வராலாற்று திரைப்படம்.உலகிலேயே ஒரு விடுதளைபோரட்டத்தை நடத்துவார்களே தங்கள் போராட்டத்தின் ஒரு நிகழ்வை தங்கள் மண்ணில் தங்களே நடித்து பதிவு செய்துள்ள உன்னதம் தமிழ் திரைக்கண் வழங்கும் எல்லாளன் எல்லாளன்இணையத்தளம் http://www.operation-ellalan.com/
-
- 5 replies
- 2.3k views
-
-
வெற்றிகரமாக ஓடிய ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் விரைவில் வருகிறது என்று வடிவேலு கூறினார். மேலும் அவர் கூறியதாவது: தமிழ் படங்களில் இப்போது அருவருப்பான காமெடி சீன்கள் வருகின்றன. இதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. அதுபோன்ற காமெடி காட்சிகளில் நடிக்க விருப்பம் இல்லை. அடுத்த கட்டத்துக்கு செல்ல விரும்புகிறேன். இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. இதற்கான பேச்சுவார்த்தை இயக்குனர் சிம்பு தேவனிடம் நடக்கிறது. சமீபகாலமாக நான் விரும்பி நடிப்பது போல் எந்த பாத்திரமும் வரவில்லை. சிறு, மீடியம் பட்ஜெட் படங்களில் நடிக்க விரும்பவில்லை. இதனால்தான் சமீபகாலமாக படம் ஒப்புக்கொள்ளவில்லை. ht…
-
- 5 replies
- 1.2k views
-
-
:P திரிஷா ரசிகர் மன்றத்தில் 20,000 உறுப்பினர்கள்; நமீதா மன்றத்தில் 3000 பேர் ரஜினி, கமல், விஜய், அஜீத் என முன்னணி நடிகர்களுக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. விஜயகாந்த் தனது ரசிகர் மன்றத்தை அரசியல் இயக்கமாக மாற்றினார். நடிகர்களைப் போல் நடிகைகளுக்கும் ரசிகர் மன்றங்கள் முளைத்துள்ளன. முதல் முறையாக குஷ்பு வுக்கு 1991-ல் திருச்சி ரசிகர்கள் கோவில் கட்டினர். தற்போது திரிஷா, நமீதா ஆகியோருக்கு ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டு உள்ளன. திரிஷா ரசிகர் மன்ற தலைவியாக ஜெஸி பொறுப்பேற்றுள்ளார். இம்மன்றத்துக்கு புதிய உறுப்பினர் சேர்ப்பு பணி முடுக்கி விடப் பட்டுள்ளது. கல்லூரி மாணவிகள், குடும்பத் தலைவிகள் என 20 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந் துள்ளனர். ஒரு லட்சம் பேரை உறுப்பினராக்…
-
- 5 replies
- 1.5k views
-
-
குரோம்பேட்டையில் சிலையாக நிற்கும் 'விஷ்வா பாய்'. சென்னை: விஜய் ரசிகர்கள் அவருக்கு சிலை செய்து அதை குரோம்பேட்டையில் உள்ள தியேட்டர் ஒன்றில் திறந்து வைத்துள்ளனர். இளையதளபதி விஜய்க்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே. கத்தி படம் நல்ல வசூல் செய்து வரும் மகிழ்ச்சியில் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அவர்கள் தங்கள் தளபதியை சிலையாக வடித்துள்ளனர். ஜீன்ஸ் பேண்ட், வெள்ளை சட்டை, கண்ணாடி அணிந்தபடி அதாவது தலைவா படத்தில் வரும் விஷ்வாபாய் கதாபாத்திரம் போன்று உள்ளது விஜய்யின் சிலை. இந்த சிலை திறப்பு விழா இன்று சென்னை, குரோம்பேட்டையில் நடைபெற்றது. மக்கள் பார்க்கும் வகையில் குரோம்பேட்டையில் உள்ள வெற்றி தியேட்டர் வளாகத்தில் சிலை நிறுவப்பட்…
-
- 5 replies
- 1.3k views
-
-
பல்வேறு தடைகளைக் கடந்து இன்று, தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்திருப்பவர் நடிகர் விஜய். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘துப்பாக்கி’ படத்துக்காக பரப்பரப்பாக இருக்கிறார். “என்னைப் பொறுத்த வரை இந்தப் படத்தின் கதைதான் ‘துப்பாக்கி’. நான் வெறும் தோட்டாதான்” என எதார்த்தமாக பேசுகிறார் விஜய். “முருகதாஸ் கூட்டணி பற்றி…?” “ துப்பாக்கி’யில் நடித்திருப்பது ரொம்பவே மகிழ்ச்சியாக இருக்கிறது.இது ‘ஆக்ஷன்’ கலந்த ‘திரில்லர்’ கதை. முருகதாஸ் ரொம்ப திறமையானவர், அவர் குட்டி மணிரத்னம். அதேபோல் படத்தின் நாயகி காஜல் அகர்வாலும் நல்ல பொருத்தம். வில்லனாக வித்யூத் ஜமால் நடித்துள்ளார். அவரை வில்லன் என்று சொல்லுவதைவிட, நாயகன் என்றே சொல்லலாம்.” “அஜித் நண்பரா… போட்டியாளரா?” “…
-
- 5 replies
- 1.1k views
-
-
தைபொங்கல் வெளியீடாக நடிகர் கார்த்தி,தமனா மற்றும் சந்தானம் நடிப்பில் வெளியாகி இருக்கிறது சிறுத்தை.சிவா இயக்கி உள்ளார்.இவரின் முதல் தமிழ் படம் இதுவாகும் தெலுங்கில் இவர் souryam , sankham.ஆகிய படங்களை இயக்கி உள்ளார்,இசை வித்தியாசாகர் ,stunt கணேஷ்,art ரஜீவன் ,எடிட்டிங் v .t விஜயன் ,ஒளிப்பதிவு r .வேல்ராஜ் கார்த்திக் இன் உறவினர் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்...... தெலுங்கில் வெளியான vikramarkudu ன் ரீ மேக் தான் சிறுத்தை...கதை பின்னணியும் அந்த வில்லதனம்களும் முற்றுமுழுதாக ஆந்திராவுக்கே உரியது... இந்தியாவுக்கே உரித்தான அரசியல்வாதிகள் தாதாக்கள் போலீஸ் இது தான் கதை... சந்தானமும் கார்த்திக்கும் பக்கா திருடர்கள் அதும் பிளான் பண்ணி திருடுவதில் கில்லாடிகள்.ஒரு மார்க…
-
- 5 replies
- 2.1k views
-
-
தனது கருத்துள்ள நகைச்சுவைகளால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சின்ன கலைவாணர் விவேக். அவர் இறந்துவிட்டாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது போலவே தெரியவில்லை என்றே கூறலாம். இப்போது வரை அவரது நகைச்சுவை பல இடங்களில் பேசுவதுண்டு, நியாபகப்படுத்துவதுண்டு. இப்படி ஒரு சூழலில் அவர் உயிரிழந்தது சினிமாவுக்கு பேரிழப்பாக உள்ளது. இந்த நிலையில் விவேக் மனைவி அளித்த பேட்டியில், விவேக் மரணம் இன்று வரை என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உடலுக்கு தேவையானதை பார்த்து செய்வார். கொரோனா சமயத்தில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். விவேக்கும் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என பலரிடம் ஆலேசானை நடத்தினார். இதனிடையே வெளிநாட்…
-
-
- 5 replies
- 658 views
- 1 follower
-
-
'விஸ்வரூபம்' திரைப்படத்தில் இஸ்லாமியர்கள் எதிர்க்கும் 7 காட்சிகளை நீக்குவதாக அத்திரைப்படத்தை இயக்கி நடித்துள்ள உலக நாயகன் கமல்ஹாசன் இணக்கம் தெரிவித்ததை அடுத்து தமிழக அரசு, கமல் தரப்பு மற்றும் முஸ்லிம் அமைப்புகளுக்கிடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சுமூகமாக நிறைவுக்கு வந்துள்ளது என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்,இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக தெரிவித்த கமல்ஹாஸன், திரைப்படம் வெளியாகும் திகதியை இன்று இரவே அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இன்று மாலை இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையின் போது, மேற்படி 7 இந்தக் காட்சிகள்இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக்கொண்டார்…
-
- 5 replies
- 934 views
-