வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ராமேஸ்வரம் திரை விமர்சனம் உலகமே கவனிக்கிறது ஈழத்தமிழர் பிரச்சனையை! அவர்களில் ஒருவருக்கு நடக்கிற காதல் பிரச்சனையை கவனித்திருக்கிறார் இயக்குனர் செல்வம். கூட்டம் கூட்டமாக வந்திறங்கும் ஈழத்தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் ராமேஸ்வரத்தில் நடக்கிறது கதை. யாழ்பாணத்திற்கும் ஈழத்தமிழர்கள் பரவிக்கிடக்கும் பிற நாடுகளுக்கும் இடையே உள்ள தூரங்களை அளக்கும் டைரக்டர், 'ராமேஸ்வரம் யாழ்பாணத்திலிருந்து 36 மைல்' என்று டைட்டில் கார்டு போடுகிறாரே, அங்கேதான் புதைந்து கிடக்கிறது எண்ணிலடங்கா அர்த்தங்களும், வெளிப்படுத்த முடியாத ஏக்கங்களும்! அதை கடைசிவரை வெளிப்படுத்த முடியாமலே தவி(ர்)த்திருக்கிறார் இயக்குனர். தன் ஒரே சொந்தமான தாத்தாவுடன் ராமேஸ்வரத்திற்கு வரும் ஜீவாவிற்கு, மறுப…
-
- 15 replies
- 5.5k views
-
-
முகப்புத்தகம்,இணையம் மற்றும் பழைய சினிப் புத்தகங்களில் சேகரித்த சினிமாத் துணுக்குகள் அப்பப்ப தொடர்ச்சியாக இங்கு..... 1) எடுக்கபடாமலே நின்று போன தெலுங்கு படம், லோ பட்ஜெட் தெலுங்கு படம் ஒன்று என்று அஜீத் தடுமாறி கொண்டிருந்த நேரத்தில் "அமராவதி" என்கிற ஒரு படத்தின் மூலம் அவருக்கு வெளிச்சம் கிடைக்க செய்தவர் இயக்குனர் செல்வா. செல்வா-வின் திருமணத்தில் கலந்து கொண்ட அந்த இளம் அஜீத்தின் புகைப்படம் உங்களுக்காக...... 2) ரஜினிகாந்தின் மெகா ஹிட் படமான "பாட்ஷா"வை முதலில் ஆர்.கே.செல்வமணிதான் இயக்குவதாக இருந்தது. செல்வமணியை அழைத்த ரஜினி, " வேறு எந்த கமிட்மென்டையும் எடுத்துக்கொள்ள வேண்டாம்; திரைக்கதை வேலை முடிஞ்சதும் சூட்டிங் போயிடலாம்" என்று…
-
- 9 replies
- 5.5k views
-
-
"புரட்சி முடியவில்லை. போர் தான் வெற்றி கொள்ளப்பட்டிருக்கிறது. புரட்சி இப்பொழுதுதான் தொடங்குகிறது." - கியூப போர் முடிவுக்கு வந்ததும் சே குவேரா சொன்னது. சே குவேரா (பாகம் 1) சே குவேரா பற்றிய திரைப்படம் (/ஆவணப்படம்). சே குவேராவின் REMINISCENCES OF THE CUBAN REVOLUTIONARY WAR என்கிற புத்தகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம்: 1) http://www.zshare.net/video/53086229b851eacd/ 2) http://www.zshare.net/video/53087580354f86c8/ 3) http://www.zshare.net/video/530878292bcfcd06/
-
- 6 replies
- 5.5k views
-
-
காணாமல் போன கனவுக்கன்னிகள் ஜி.ஆர்.சுரேந்திரநாத் ‘கனவுக்கன்னி’ என்று எழுதும்போதே ஒரு விஷயம் மனதை நெருடுகிறது. கனவில் வரும் பெண்கள்கூட, கன்னிகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற நமது கற்பு அபிமானம் என்னைப் புல்லரிக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் ட்ரீம் கேர்ள்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ‘ட்ரீம் விர்ஜின்’ என்று யாரும் கூறுவதில்லை. ஆனால் தமிழில் மட்டும், கனவில் வந்து வெள்ளை உடையில் சும்மா “லல்லலா…” பாடுவதற்குக்கூட கன்னியாகத்தான் இருக்கவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். இத்துடன் கனவுக்கன்னிகள் கட்டாயம் ஒரு நடிகையாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கனவுக்கன்னிகளின் இடமோ நிரந்தரமல்ல. சில மாதங்களுக்கு முன், சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஒரு முன்னாள் நடிகையைப் பார்த்தேன்.…
-
- 3 replies
- 5.5k views
-
-
'ஆயிரத்தில் ஒருவனை' வரவேற்ற எம்ஜிஆர் ரசிகர்கள்! அரை நூற்றாண்டைக் கடந்தும் அழியாத புகழில் 'ஆயிரத்தில் ஒருவன்' திரைப்படம் மீண்டும் திரைக்கு வந்திருப்பது எம்ஜிஆர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 1965ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி இப் படம் முதன்முதலாக வெளியானபோது என்ன உற்சாகம் இருந்திருக்குமோ அந்த உற்சாகத்துக்கு கொஞ்சமும் குறையாத வகையில் எம்ஜிஆர் ரசிகர்களிடையே மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டதைக் காண முடிந்தது. எம்ஜிஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல் திரைப்படமான இதில், நாகேஷ், எம்.என்.நம்பியார், ஆர்.எஸ். மனோகர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பி.ஆர். பந்துலு இயக்கத்தில், படத்தை அவரே தயாரித்தார். பந்துலு பண நெருக்கடியில் இருப்பதை அறிந்து இந்தப் ப…
-
- 11 replies
- 5.5k views
-
-
புன்னகை அரசி கே.ஆர்.விஜயா மீண்டும் நடிக்க வருகிறார்! புன்னகை அரசி என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா மீண்டும் வெள்ளித்திரையில் நடிக்க வருகிறார். கே.வி. சினி ஆர்ட்ஸ் சார்பில் டாக்டர் இளங்கோவன் கதை, வசனம் எழுதி தயாரிக்கும் புதிய படம் ‘தனுஷ் 5-ம் வகுப்பு'. இப்படத்திற்கு கதாக.திருமாவளவன் திரைக்கதை எழுதி இயக்குகிறார். அகில் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக அஷ்ரிதா நடிக்கிறார். ஒரு அழகான குடும்பத்தில் வேலைக்குப் போகும் அப்பா, அம்மா. அவர்களுக்குள் நடக்கும் சின்ன சின்ன ஈகோ பிரச்சினைகளால் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதை கருவாக வைத்து படத்தை உருவாக்கி வருகிறார் கதாக.திருமாவளவன். இவர் நான்கு மொழிகளில் இயக்கப்பட்ட அஜந்…
-
- 19 replies
- 5.5k views
-
-
தமிழின் இன்றைய ஆளுமைகளில் மட்டுமின்றி சூர்யா, கார்த்தி போன்ற இன்றைய இளைய தலைமுறையின் தந்தையாக அறியப்படுவதோடு இன்றைக்கு மிக முக்கியமானவர் நடிகர் சிவகுமார். நடிகராக இருந்து நல்ல பெயர் ஈட்டியது மட்டுமின்றி அதிகமான மக்களால் ‘விரும்பிக்கேட்கப்படும்’ புகழ்பெற்ற பேச்சாளராக வலம்வந்து கொண்டிருக்கிறார் அவர். முக்கிய அரங்குகளில் அவர் நிகழ்த்தும் உரைகள் யாவும் ஏதாவது ஒரு பெரிய டிவி சேனலால் பண்டிகை தினங்களில் ஒளிபரப்புவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுவிடுகின்றன. கோடிக்கணக்கான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்ட அந்த உரைகள் மோசர்பியர் போன்ற நிறுவனங்களால் வாங்கப்பட்டு சிடிக்களாக வெளிவந்து லட்சக்கணக்கில் விற்பனை ஆகின்றன. இதுவரை எந்த ஒரு பிரபல பேச்சாளருக்கும் ;தலைவர்களுக்கும் கூடக் கிடைக்காத வாய்…
-
- 0 replies
- 5.4k views
-
-
ஈழத் தமிழர்கள் பெரும் இன்னலில் உள்ள நிலையில் தான் இந்த ஆண்டு பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என்று நடிகர் அஜீத் அறிவித்துள்ளார். ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். அதேபோல முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்டோரும் பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்தனர். இந்த வரிசையில் தற்போது அஜீத்தும் இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அசல் திரைப்பட தொடக்க விழாவில் நேரில் கலந்து கொண்டும், தொலைபேசி மூலமாகவும், தலைமை இயக்கத்தின் மூலமாகவும் வாழ்த்து சொன்ன ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்…
-
- 4 replies
- 5.4k views
-
-
தொடர்ந்து பெருத்துக் கோண்டே போகும் உடம்பால் அப்செட்டாகியிருக்கும் ஹன்ஷிகா மோத்வானி தற்போது தீவிர எடைக்குறைப்பில் இருக்கிறாராம். எங்கேயும் காதல், மாப்பிள்ளை, வேலாயுதம் படங்களில் நடித்தபோது அநியாயத்துக்கு பெருத்துப் போயிருந்தார் நடிகை ஹன்சிகா. அந்த குண்டு உடம்பே அவருக்கு ப்ளஸ்ஸாக இருக்கும் என்று பலரும் சொன்னதால், உடம்பை அப்படியே பராமரித்து வந்தார். ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கூட அவரைப் பார்த்த எல்லோரும் ‘குட்டி குஷ்பு’ போல இருக்கிறார் என்று சொல்ல ரொம்பவே குஷியான ஹன்ஷிகா அந்த சந்தோஷத்திலேயே உடம்பை இன்னும் கொஞ்சம் பெருக்க வைத்தார். ஆனால் அதைப்பார்த்த சில டைரக்டர்கள் இப்போ உங்களைப் பார்த்தா ‘குட்டி குஷ்பு’ மாதிரி இல்ல.., ‘குண்டு ஆன்ட்டி’ மாதிரி இருக்கீங்க என்று அவரிடம் …
-
- 9 replies
- 5.4k views
-
-
விரைவில் திருமணமாம் - புதிய வாய்ப்புகளை தட்டிக்கழிக்கும் அனுஷ்கா! [Wednesday 2014-09-17 22:00] அனுஷ்காவுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் முன்னெப்போதையும் விட இப்போதுதான் கவனமாக அதற்கேற்ற மாதிரி கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன. ஏற்கனவே. தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமாதேவி’ என்ற படத்திலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ‘பாஹுபாலி’ என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதுதவிர சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக ‘லிங்கா’ மற்றும் அஜித்துக்கு ஜோடியாக அவரது 55வது படங்களில் நடித்துவருகிறார். இந்தப்படங்களுக்குப்பின்..? நிச்சயமாக டு…
-
- 10 replies
- 5.4k views
-
-
முதல் பார்வை: சூரரைப் போற்று ஏர் ஓட்டும் விவசாயியாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அவர்களை ஏரோப்ளேனில் பயணிக்க வைக்க வேண்டும் என்பதையே லட்சியமாகக் கொண்ட விமான சேவை நிறுவன அதிபரின் கதையே 'சூரரைப் போற்று'. மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள ஒரு பின்தங்கிய கிராமத்தைச் சேர்ந்தவர் நெடுமாறன் ராஜாங்கம் (சூர்யா). அப்பா ஆறுவிரல் வாத்தியார் (பூ ராமு) மனு எழுதிப் போட்டு மின்சார வசதி உள்ளிட்ட கிராமத்தின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற உதவுபவர். அவரின் அஹிம்சா வழி மனுவால் சோழவந்தானில் எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்த முடியவில்லை. ஆனால், போராட்டத்தால் அதிர்வலையை ஏற்படுத்துகிறார் அவரின் மகன் சூர்யா. இது அப்பாவுக்குப் பிடிக்காமல் போகிறது. இதனால் மோதல் வலுக்க, சூர்யா தேச…
-
- 38 replies
- 5.4k views
-
-
படத்தை ஒருமுறை பார்த்துவிட்டுப் படிப்பது நல்லது. கதை எல்லாம் தெரிந்தால் பரவாயில்லை என்பவர்கள் தொடரலாம். கட்டுரையின் கடைசிப் பகுதியை தவற விட வேண்டாம். ** நீங்கள் இருக்கிறீர்கள். பிறந்து, வளர்ந்து, வேலைக்குப் போய், உண்டு உறங்கி, திருட்டுத்தனம் என்று பலவற்றையும் செய்தவாறு நீங்கள் இருக்கிறீர்கள். ஆனால்... ஏதோ ஒன்று உங்களைப் போட்டு அலைகழிக்கிறது. ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றியவாறே. எனது வாழ்க்கை யாரோ எழுதிக்கொடுத்தது போல் போய்க்கொண்டிருப்பதாகப் படுகிறது. தத்துவ ஆன்மிக விசாரத்தில் விரசமாக ஈடுபடுகிறீர்கள். 'உலகமே மாயை' என்றும் 'எதுவுமே இல்லை அல்லது நீங்கள் உணர்வது எதுவும் உண்மையில்லை.. உங்களால் உணரப்படவே முடியாததை எப்படிப் புரிந்துகொள்ள முடியும்? மீனுக்கு நீர் இன்றி ஓர் உ…
-
- 1 reply
- 5.4k views
-
-
சேரனின் தவமாய் தவமிருந்து திரைப்படம் மிகவும் நீளமாக வந்துள்ளதாம். கிடடத்தட்ட திரையில் 4மணி நேரம் ஓடுமாம். அதனால் படத்திற்கு 2 இடைவேளைகள் விடலாம் என சிந்திக்கின்றார்களாம். படத்தில் அறிமுக நடிகை பத்மப்பிரியாவின் நடிப்பும் ராஜ்கிரனின் நடிப்பும் நிச்சயம் பேசப்படுமாம். சேரனும் தன் திறமையைக் காட்டத் தவறவில்லையாம். இப்படம் பற்றிய மேலதிக தகவல்கள் தெரிந்தோர் அதனை இங்கு தெரிவிக்கலாம்.
-
- 8 replies
- 5.4k views
-
-
நடிகர் சாந்தனுவும்,  நிகழ்ச்சி தொகுப்பாளினி கீர்த்தியும் காதலர்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நிகழ்ச்சியின் மூலம் சாந்தனு மற்றும் கீர்த்தி காதலர்களாக மாறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து கீர்த்தியின் அம்மா வைத்திருக்கும் நடனப்பள்ளிக்கு சாந்தனு அடிக்கடி செல்வதன் மூலம் இவர்கள் காதல் வேரூன்றியுள்ளது.  இவர்கள் காதலை இருவீட்டாரும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கப்போவதாக இருவருக்கும் பொதுவான நண்பர்கள் தகவல் தெரிவிக்கின்றார்கள் http://www.dinaithal.com/cinema/17664-hostess-of-the-show-kirti-santhanu-girlfriend.html
-
- 2 replies
- 5.4k views
-
-
அனுஷ்க்கா ரசிகர்களுக்கு துக்ககரமான செய்தி ! கவர்ச்சிப் புயல் (!?) அனுஷ்க்கா அண்மையில் மிகவும் ரகசியமாக நாகர்ஜுனாவின் மகனைத் திருமணம் செய்த்ததையொட்டி அவரது ரசிகர்கள் சுருண்டுபோயுள்ளார்களாம். தெலுங்கிலும், தமிழிலும் பல முண்ணனி நடிகர்களுடன் ஒரு கலக்குக் கலக்கிய அனுஷ்க்கா இப்படித் திடு திடுப்பென்று கலியாணம் முடித்தது தமிழகத்தில் ஒரு சில முண்ணனி நடிகர்களை திக்கு முக்காட வைத்திருக்கிறதாம். அதில் ஒருவர் வயித்தெரிச்சல் தாங்கமுடியாமல் ஊரெல்லாம் சொல்லி அழுது புலம்புகிறாராம். பாவம் ரசிகர்கள் ( நானும்தான்) கீ...கீ
-
- 25 replies
- 5.4k views
-
-
நடிகையர் திலகம் சாவித்திரி- கற்பனையையும் மீறிய வாழ்க்கை செ. சுரேஷ் தமிழக மக்களுக்கும் சினிமா நடிக நடிகையருக்கும் இடையான உறவை எளிதில் விளக்கிவிட முடியாது. ஒரு நடிகரை அல்லது நடிகையை ஏன் கொண்டாடுகிறார்கள் என்றோ, அப்படிக் கொண்டாடப்படுபவர்கள் எந்த கணத்தில் வரலாற்றின் மறதிக் குழிக்குள் வீசப்படுவார்கள் என்றோ, அப்படி வீசப்பட்டவர்கள் சில காலங்கள் கழித்து, அவர்களில் எவர் மீண்டும் கண்டடையப்பட்டுக் கொண்டாடப்படுவார்கள் என்றோ ஒருபோதும் கணிக்க முடியாது. இது ஒருபுறமிருக்க ரசிகர்களின் ஆதரவு இருந்தும், புகழின் உச்சத்தை அடைந்தும், அங்கு நிலைத்திருக்க முடியாமல் வீழ்ந்து மறைந்தவர்களும் உண்டு. இந்த வரிசையில் முக்கியமான, அற்புத கலைஞர்களும் உண்டு. நடிகர்களில் தியாகராஜ பாகவதர், சந…
-
- 0 replies
- 5.3k views
-
-
பஞ்சுஅருணாசலம் மரத்தின் கீழ் வளரும் தாவரத்திற்கு வளர்ச்சி இருக்காது என்பார்கள். ஆனால் கண்ணதாச விருட்சத்தின் கீழிருந்த இந்த (பஞ்சு அருணாசலம்) தாவரம்; பாடலாசிரியர், கதாசிரியர், கதை வசனகர்த்தா, தயாரிப்பாளர், இயக்குநர் – என்றபடி சினிமாவுலகில் படிப் படியாக வளர்ச்சியடைந்து நல்ல பலனை நமக்கு தந்தது. இந்த சாதனைகளையெல்லாம் தாண்டி, இளையராஜா என்ற இசைப் புதையலை கண்டு பிடித்ததுடன், கன்னட இசையமைப்பாளர் விஜய பாஸ்கர் என்பவரையும் தமிழுக்கு அறிமுகப் படுத்தினார் பஞ்சு. 1. பஞ்சு அருணாசலம் – வாழ்க்கைகுறிப்பு காரைக்குடியை அடுத்த சிறுகூடல்பட்டி என்ற ஊரில் வசித்துவந்த கண்ணப்பனின் புதல்வராக 1941 இல் பிறந்தார் பஞ்சநாதன் என்ற பஞ்சுஅருணாசலம். படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனும…
-
- 6 replies
- 5.3k views
-
-
ஹாய் உறவுஸ்...... இந்த வருஷம் முடிய போகுது எல்லாரும் நிறைய படங்கள் பாத்து இருப்பீங்க நிறைய கதாநாயகிகள பாத்து ஜொள்ளி இருப்பீங்க உங்க மனசுக்கு பிடிச்ச மனச கவர்ந்தவங்க யாரு? இந்த வருசம் சுண்டலின் மனசை கவர்ந்தவர் நஸ்ரியா கவர்ச்சி பெருசா காட்டாவிட்டாலும் அந்த அழகும் அந்த சிரிப்பும் சுண்டலுக்கு ரொம்ப பிடிக்கும்....... தயவு செய்து இந்த கேள்விக்கு அன்டைக்கும் இண்டைக்கும் என்னோட மனசுக்கு பிடிச்சது சரோஜா தேவி தாம் எண்டெல்லாம் சொல்லிட்டு வந்து இந்த திரிய இன்சல்ட் பண்ண கூடா அழுதிடுவன் ஆ அப்புறம் நயன்தாரா என்ன தான் வயசு கூடிட்டு போனாலும் இன்னும் இன்னும் அழகா வந்திட்டு இருக்கிற மாதிரி தோணுது......நயன்தாராவின் அழகின் ரகசியமே bfs அடிக்கடி மாத்திகிறது போல
-
- 23 replies
- 5.3k views
-
-
திரிஷா படத்துக்கு சிக்கல்! ஜெயம் ரவி, திரிஷா நடித்துள்ள சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் படத்தில் ஏகப்பட்ட விலங்குகள் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்து விட்டது. இதனால் தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விலங்குகளை வைத்துப் படம் எடுத்தால், பிராணிகள் நல வாரியத்திடமிருந்து ஆட்சேபனை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். அப்போதுதான் தணிக்கை குழு சான்றிதழ் வழங்க முடியும் என தணிக்கைக் குழு கூறியுள்ளது. மும்பை நீதிமன்றத்தின் ஒரு உத்தரவை அடிப்படையாக வைத்து இந்தியா முழுவதும் உள்ள தணிக்கைக் குழுக்கள் இவ்வாறு கூறி வருவதால் 80க்கும் மேற்பட்ட படங்கள் சிக்கலில் …
-
- 33 replies
- 5.3k views
-
-
இசையமைப்பாளர் இளையராஜாவின் இளைய மகன் யுவன் சங்கர் ராஜாவுக்கு மூன்றாவது முறையாக திருமணம் நடைபெற்றது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தனது காதலியான லண்டனைச் சேர்ந்த பாடகி சுஜாயாவை கடந்த 2005ம் ஆண்டு திருமணம் செய்தார். 2008ம் ஆண்டு அவர்கள் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். அதன் பிறகு அவர் ஷில்பா மோகன் என்பவரை கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஷில்பாவுடனும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து ஷில்பா யுவனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தாயின் மரணத்தால் மனமுடைந்த யுவன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார். தனது பெயரைக் கூட அப்துல்லா என்று மாற்ற உள்ளார். தான் 5 நேரமும் தவறாமல் தொழுது வருவதாக யுவன் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கு…
-
- 16 replies
- 5.3k views
-
-
மெர்சல் திரைவிமர்சனம் உங்களின் விமர்சனம் நடிகர்கள் Vijay, Samantha, Kajal Agarwal, SJ Surya, Vadivelu இயக்கம் Atlee தீபாவளி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பட்டாசுகளும், புதுப்படங்களும்தான். அதுவும் இந்த வருடம் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பைஏற்படுத்தியிருக்கும் படம் ‘மெர்சல்’. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அட்லி இயக்கியுள்ளார். பல தடைகளைச் சந்தித்த இப்படம், தீபாவளியன்று வெளியாகுமா என்ற சந்தேகம் அனைவரது மனதிலும் இருந்தது. இந்நிலையில், அனை…
-
- 31 replies
- 5.3k views
- 1 follower
-
-
உப்புமா கம்பெனியும் 250 ரூபாயும்! - கோடம்பாக்கம் தேடி..! #Cinema மினி தொடர் Part 1 தமிழ் சினிமாவின் ஒவ்வொரு வெற்றிப்படத்திற்குப் பின்னேயும் கோடம்பாக்கக் கனவுகளோடு சென்னைக்கு வண்டி ஏறுபவர்கள் இப்போதும் இருக்கிறார்கள். இயக்குநர் ஆகவேண்டும், நடிகர் ஆகவேண்டும் எனப் பெரிய லட்சியங்களின் முதல் அடியாகக் கோடம்பாக்கத்தில் காலடி எடுத்து வைப்பவர்களும், சினிமாவின் ஒரு மூலையிலாவது தனது பங்கிருக்க வேண்டும் எனும் தாகத்தோடு லைட்மேன், அஸிஸ்டென்ட் ஆக விரும்புகிறவர்களும் இந்தப் பெரும் பட்டியலில் இருக்கிறார்கள். காலத்தின் வேகத்தில் கேமரா ட்ராலியின் பின்னே ஓடமுடியாதவர்கள் மூச்சு வாங்கிப் பாதியிலேயே நின்று விடுகிறார்கள். முயன்று முன் செல்பவர்கள் டைட்டில் கார்டுகளில் மி…
-
- 17 replies
- 5.2k views
-
-
சென்னை: பழம்பெரும் இயக்குனர் ஸ்ரீதர் மரணமடைந்தார். தமிழ்த திரையுலகில் மிக பிரமாண்டமான வெற்றிப் படங்களைத் தந்தவர் ஸ்ரீதர். அவரது படங்களில் கண்ணியமும் கதை நயமும் நிறைந்திருக்கும். நெஞ்சில் ஓர் ஆலயம், காதலிக்க நேரமில்லை என அவர் தந்த வெற்றிப் படங்களின் எண்ணிக்கை மிக நீளமானவை. பல காலமாகவே நோய்வாய்ப்பட்டிருந்த ஸ்ரீதர் இன்று மரணடைந்தார். நன்றி தற்ஸ் தமிழ் அன்னாரது பிரிவால் துயருறும் குடும்பத்தினர்க்கும் , தமிழ் திரையுலகினர்க்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் . அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்தித்து கொள்கின்றேன் .
-
- 15 replies
- 5.2k views
-
-
நித்தியானந்தா-ரஞ்சிதா செக்ஸ் லீலை குறித்து தெலுங்கில் சினிமாப் படம் எடுக்கவுள்ளனராம். நிஜக் கதைகளை சூட்டோடு சூடாக படமாக எடுத்து விடுவது இந்தியத் திரையுலகினரின் வழக்கம். அதுவும் செக்ஸ் சம்பந்தப்பட்ட சர்ச்சைகள் என்றால் சட்டுப் புட்டென்று படமாக்கி விடுவார்கள். அந்தவகையில் தற்போது நித்தியானந்தா-ரஞ்சிதா விவகாரத்தையும் படமாக்க கிளம்பியுள்ளனர்-தெலுங்கில். நித்தியானந்தாவுக்கு படுக்கை அறையில் பலவிதமான சேவைகளை நடிகை ரஞ்சிதா செய்வது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. ஆனால் சினிமா பாணியில் நான் அவன் இல்லை என்று கூறி விட்டார் நித்தியானந்தா. ரஞ்சிதாவும், நான் செய்தது சேவை, வீடியோவை மார்பிங் செய்து விட்டனர் என்று கூறி விட்டார். தற்போது இந்த வழக்கு என்ன ஆனது …
-
- 7 replies
- 5.2k views
-
-
அஜித் படத்தில் படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தேன் என்று வந்த செய்தியை மறுத்திருக்கிறார் நடிகை தமன்னா. கேடி படத்தின் மூலம் தமிழுக்கு வந்த தமன்னா. அதன்பிறகு கல்லூரி, வியாபாரி போன்ற படங்களில் நடித்தார். ஆனால் சூர்யாவுடன் அயன், கார்த்தியுடன் பையா, ஆகிய படங்கள் தான் அவருக்கு ஹிட் ஹீரோயினாக மாற பாதை அமைத்துக் கொடுத்தது. அதன்பிறகு விஜய்யுடன் நடித்த சுறா, தனுஷுடன் நடித்த வேங்கையும் வெற்றி பெறாததால், தெலுங்கு பக்கம் போனார். அதனால் தமிழ்சினிமாவை விட்டு விட்டு முழுக்க முழுக்க தெலுங்கு படங்களில் மட்டும் நடித்த தமன்ன நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜீத் படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை சிவா டைரக்ட் செய்து வரும் இந்தப்படத்தில் நடிகை தமன்னா படுகவர்ச்சியாக நடிக்க மறுத்தார் என்று சொல்ல…
-
- 8 replies
- 5.2k views
-