ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் இழுத்து மூடும் அபாய நிலையில் 30 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் யாழ். தென்மராட்சி பிரதேசத்தில் மாத்திரம் அறுபது பாடசாலைகளில் முப்பதுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் இழுத்து மூடப்படும் அபாயநிலை காணப்படுவதாக சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் யோ.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். அண்மையில் மீசாலை தெற்கு மதுவன் சனசமூக நிலையத்தில் நடைபெற்ற ஆண்டு விழா நிகழ்வில் விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இத் தகவலை குறிப்பிட்டார். இது குறித்து மேலும் கூறுகையில், தென்மராட்சி பிரதேசத்தில் உள்ள பாலர் பாடசாலைகள் மற்றும் ஆரம்ப பாடசாலைகளில் இணையும் மாணவர் தொகை வெகுவாக குறைவடைந்துள்ளது. மீசாலை கிழக்கில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் இவ்வருடம் முதலாம் தரத்திற்கு …
-
- 34 replies
- 2.6k views
-
-
சிவாஜிலிங்கத்தின் மதம் 'இஸ்லாம்': சொல்கிறது நாடாளுமன்ற இணையத்தளம்! [ஞாயிற்றுக்கிழமை, 19 பெப்ரவரி 2006, 16:50 ஈழம்] [ச.விமலராஜா] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் மதம் இஸ்லாம் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தின் புதிய இணையத்தளம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பதிவேற்றப்பட்ட 'திறக்கப்பட்ட' இந்த இணையத்தளத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பல விவரங்கள் தவறுதலாக இடம்பெற்றுள்ளன. அதேபோல் அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவின் குடிநிலை என்ற தலைப்பின் எதிரே 'விதவை' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் மற்றும் முகவரிகளை மட்டும் பதிவேற்றிவிட்டு தொலைபேசிகளையோ வேறு எதுவித தொடர்பு எண்களையோ பதிவு செய்…
-
- 17 replies
- 2.6k views
-
-
தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்…
-
- 5 replies
- 2.6k views
-
-
வன்னி நிலம் வளையாது எனில், கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி புலிகளுக்கு தோல்வியா? பிரபாகரன் படை வெல்லும் - அவன் பெரும் வெற்றிச் செய்தியை வரலாறு சொல்லும் மேற்சொன்ன வரிகள் உங்களை ஆறுதல் படுத்துவதற்காய் சொன்ன வரிகளல்ல மாறாக வரலாற்றுச் சேதி சொன்ன வரிகள் என்பதை உள்வாங்கிக் கொண்டு ….. அவலங்களைத் தந்த 2008 ஆம் ஆண்டு தொலைந்து போய், புதிய நம்பிக்கையோடு 2009 ஆம் ஆண்டு பிறக்கும் என்று எதிர்பார்த்திருந்த தமிழ் மக்களுக்கு கிளிநொச்சி நகரின் வீழ்ச்சி பேரிடியாக அமைந்தது. போருக்குள் வாழும் வன்னி மக்களை இது எந்தளவுக்குப் பாதித்ததோ தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக இலங்கையின் பிறபாகங்களில் வாழும் தமிழ் மக்களை- புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை- ஏன் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை இது…
-
- 1 reply
- 2.6k views
-
-
வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ். மட்டுவில் பன்றித்தலைச்சி கண்ணகை அம்மன் கோவிலின் தேர்த்திருவிழா ஞாயிற்றுக்கிழமை (04) வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த 27ஆம் திகதி கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானது. இன்றையதினம் தீர்த்தோற்சவத்துடன் திருவிழா இனிதே நிறைவுறுகின்றது http://www.tamilmirror.lk/136982#sthash.WSXrfJUL.dpuf
-
- 0 replies
- 2.6k views
-
-
குளிரூட்டப்பட்ட ஆடம்பர அறையில் நாய் வளர்த்த மகிந்த முன்னாள் ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் அலரி மாளிகையில் செல்லப் பிராணிகளாக விலை மதிப்பான 43 நாய்கள் வளர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நாய்களை பராமரிப்பதற்கென பிரத்தியோகமாக அறைவடிவமைக்கப்பட்டு அவை குளிரூட்டப்பட்டு, ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்தாக கூறப்படுகிறது. இதனை தவிர பெறுமதியான 23 அரிய வகை பறவைகளும் ஒரு குதிரையும் இரண்டு போனிக்குதிரைகளும் அலரி மாளிகையில் செல்லப் பிராணிகளாக வளர்க்கப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்காக கடந்த காலங்களில் கோடிக்கணக்கில் பொது நிதி செலவு செய்யப்பட்ட விதம் பற்றி தகவல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவந்து கொண்டுள்ள நிலையில் வாகனங…
-
- 30 replies
- 2.6k views
-
-
ஆயுத வர்த்தகம் தொடர்பில் 5 வருடங்களுக்கு முன்னர் தாய்லாந்தின் மெரையின் காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்ட சுஜி குணபால என்பவரே விடுதலைப்புலிகளுக்கு சிலின் 143 ரக இலகு ரக விமானங்கள் மூன்றை பெற்றுக்கொடுத்துள்ளதாக புலனாய்வுதுறையினருக்கு தற்போது தகவல்கள் கிடைத்துள்ளதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டு 18 மாதங்களில் பின்னர் கப்பல் ஒன்றின் மூலம் இந்த மூன்று விமானங்களையும் முல்லைத்தீவு பிரதேசத்திற்கு கொண்டு சென்றததாக குணபால தனது வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுஜி குணபாலவின் தந்தை சிங்களவர் என்பதுடன் அவர் காவற்துறை சிப்பாயாக பணியாற்றினார். அவரது தாய் தமிழ் பெண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விட…
-
- 3 replies
- 2.6k views
-
-
மகாதேவா சைவச் சிறுவர் இல்லத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த பாலேந்திரன் விபூசிகாவை அவரது தாயார் ஜெயக்குமாரியிடம் ஒப்படைப்பதற்கு கிளிநொச்சி நீதவான் எம்.ஐ.வகாப்தீன், இன்று உத்தரவிட்டார். அத்துடன், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் விபூஷிகாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த பயங்கரவாத குற்ற வழக்கை பயங்கரவாத பிரிவினர் வாபஸ் பெற்றுகொண்டனர். அதேவேளை, என்னையும் எனது அம்மாவையும் இணைப்பதற்காக பாடுபட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவிப்பதாக பாலேந்திரன் விபூசிகா தெரிவித்தார். மகாதேவா சைவச்சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த விபூசிகா, அவரது தாயார் பாலேந்திரன் ஜெயக்குமாரியுடன் சேர்வதற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம், அனுமதி வழங்கியது. விடுதலையாகி நீதிமன்றத்திலிருந்து…
-
- 42 replies
- 2.6k views
-
-
இந்த அரிய ஆவணத்தை குளோபல் தமிழ்ச் செய்திகள் இங்கே மீள்பதிவு செய்கிறது. ஆகஸ்ட் 22 ஆம் திகதி எழுதப்பட்ட தங்களது கடிதம் கிடைக்கப்பெற்றேன். அக்கடிதத்துடன் இணைக்கப் பட்டிருந்தவைகளைப் பார்த்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன். இந்திய ஜனதாக் கட்சி அரசாங்கம் நடப்பு இலங்கை அரசுக்கு ஆதரவாக இருக்கும் முகமாகத் தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை ஒரு பிரச்சினையாக எடுத்துக் கொள்ள அவர்கள் விரும்புவார்கள் என நான் கருதவில்லை. இன்றைய நிலையில் எங்களது எல்லாக் கவனமும் தேர்தலில்தான் இருக்கிறதேனினும் வேறு ஏதேனும் ஒரு வழியில் இப்பிரச்சினையைப் பொதுமக்களின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்கான சாத்தியம் இருக்கிறதா எனப் பார்க்கிறேன்.. இப்படிக்கு உங்கள் உண்மை…
-
- 9 replies
- 2.6k views
-
-
ஓஸ்லோப் பேச்சுக்கள் இன்று தொடக்கம் நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு தொடர்பான பேச்சுக்கள் இன்று வியாழக்கிழமை தொடங்குகின்றன. இந்தப் பேச்சுக்களில் நோர்வே அனுசரணையாளர்கள், போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவினர், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் பங்கேற்கின்றனர். ஓஸ்லோ பேச்சுக்களில் விவாதிக்கப்படக் கூடியவை குறித்து தமிழீழ விடுதலைப் புலிகளின் குழுவில் இடம்பெற்றுள்ள சமாதான செயலகப் பணிப்பாளர் சீ. புலித்தேவன் கூறியுள்ளதாவது: ஐரோப்பிய ஒன்றியத் தடையையடுத்து போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவில் இடம்பெற்றுள்ள ஐரோப்பிய நாடுகளின் உறுப்பினர்களின் பணி, கண்காணிப்புக் குழுவினர் பாதுகாப்பு ஆகியவை …
-
- 7 replies
- 2.6k views
-
-
சரத் பொன்சேக்கா போன்ற நாட்டை விடுவித்த ஒரு யுத்த வீரனுக்கு இழைக்கப்பட்டுள்ளது ஒரு பெரிய அநியாயம் என்றும் இதனை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்றும் மல்வத்தை பீட மகாநாயக்கர் தெரிவித்துள்ளார். அதே போல உண்மையை அறிவது மக்களின் உரிமை என்றும் அதை எழுதுதுவது ஊடகவியலாளரின் கடமை என்றும் அதை மறைக்கவும் தடுக்கவும் எடுக்கப்படும் நடவடிக்கைகளை சகலரும் கண்டிக்க வேண்டும் என்றும் மகாநாயக்கர் கேட்டுள்ளார். இது குறித்து நீங்கள் ஆட்சியாளருக்கு எடுத்துச் சொல்ல முடியாதா என்று கேட்டதற்கு நாம் சொல்வதைக் கேட்பவர்களாக இன்றைய ஆட்சியாளர்கள் இல்லையென்றும் இது போன்றவர்களைத் தெரிவு செய்தது மக்களின் தவறு என்றும் மகாநாயக்கர் தெரிவித்தார். பௌத்தி பீடங்களின் அதிஉயர் பதவியான மகாநாயக்கர் பதவியி…
-
- 20 replies
- 2.6k views
-
-
இதுவரை காலமும் அமைதியாகவிருந்த யாழ் தேர்தல்களம் இறுதிநாளான இன்று சூடுபிடித்துள்ளது. இன்று இரவு குடாநாட்டின் பல பகுதிகளிலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஆதரவாளர்களது வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் யாழ் நகரப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகமும் இந்தத் தாக்குதலுக்குத் தப்பவில்லை. இரவு 9 மணியளவில் 2 வான்களில் வந்த சிலரே இத்தாக்குதல்களை நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது. கற்களால் மற்றும் பொல்லுகளால் தாக்கப்பட்டதால் ஓடுகள் மற்றும் கண்ணாடி என்பன உடைந்து சிதறியுள்ளதாக சுரேஸ் பிரேமச்சந்திரனின் அலுவலக வட்டாரங்கள் கூறுகின்றன. இதேவேளை அச்சுவேலி , வடமராட்சி, ஆவரங்கால் பகுதிகளிலுள்ள கூட்டமைப்பு ஆதரவாளர்களது சில வீடுகளும் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்…
-
- 18 replies
- 2.6k views
-
-
சென்னை:விடுதலைப்புலிகள் மீதான தடையை நீட்டிப்பதோடு அந்த இயக்கத்துக்கு ஆதரவாக செயல்படும் கட்சிகளுக்கும் தடைவிதிக்கவேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் டி.சுதர்சனம் தமிழக சட்டசபையில் வலியுறுத்தினார். சட்டசபையில் போலீஸ் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் பேசியதாவது: தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்புக்காக இங்கிருந்து ஆயுதங்களும் வெடிப்பொருட்களும் கடத்திச் செல்லப்படுகிறது. கடந்த 1991ல் விடுதலைப்புலிகளால் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அந்த அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் விவகாரத்தில் தமிழக அரசு இரும்புக் கரம் கொண்ட…
-
- 15 replies
- 2.6k views
-
-
எண்ணக்கரு & ஓவியம்: யாழ்கள விகடகவி * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.
-
- 3 replies
- 2.6k views
-
-
ஜே.ஆர்- தெருவோரத்தில் அனாதரவாகக் கொல்லப்பட்ட ஒரு ‘துரோகியின்’ மாவீரர் நாள் கதை: சபா நாவலன் 10/10/2015 இனியொரு... 1 COMMENT அவனுக்கு மீசை அரும்பய்த்தொடங்கிய நாளிலிருந்தே போராட்டமும் ஆயுதங்களோடு முளைவிட ஆரம்பித்திருந்தது. எண்பதுகளின் ஆரம்பத்திலேயே அவனது போராட்ட வாழ்க்கை ஆரம்பமாகிவிட்டது. கல்வியன்காட்டிலிருந்து பருத்தித்துறை வரைக்கும் தனது சைக்கிளில் இயக்கக் கூட்டத்திற்குச் சென்று வந்திருக்கிறான். நெல்லியடியில் நான்கைந்து இளைஞர்களோடு ஈழப் போராட்டத்தை வெற்றிகொள்ள மற்றொரு வழியும் இருப்பதாக பலிபீடம் என்ற குழு பிரச்சாரம் செய்துவந்த போது அதனோடு இணைந்துகொண்டான். எண்பதுகளின் ஆரம்பத்தில் இயக்க வேறுபாடுகளின்றி, சோசலிசம், வர்க்கம், புரட்சி என்று அனைத்துப் போராளிகளும் உச்சரித்தனர். …
-
- 25 replies
- 2.6k views
-
-
பிரான்சில் தமிழ் அமைப்புகளின் மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைவு [ திங்கட்கிழமை, 02 மே 2011, 11:32.20 AM GMT ] பிரான்சில் தமிழ் அமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்துடன் ஜே.வி.பி.யும் இணைந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸ் தமிழ் அமைப்புகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற மே தினக் கொண்டாட்டங்கள் பிரான்சின் லா ரிபப்ளிக் எனுமிடத்தில் அமைந்துள்ள சுதந்திர சிலைக்கருகில் இருந்து மே தின ஊர்வலத்துடன் ஆரம்பமாகியுள்ளது. அதன்போது இலங்கையின் மூன்றாவது பெரும் கட்சியான ஜே.வி.பி. கட்சியின் பிரான்ஸ் கிளை உறுப்பினர்களும் அதில் இணைந்து கொண்டிருந்தனர். மேலும் குர்திஸ்தான் விடுதலை அமைப்பு, துருக்கி கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் அரசியல் …
-
- 7 replies
- 2.6k views
-
-
சிறீலங்கா கடற்படையின் பிரதான போர்க்கப்பல்களில் ஒன்றான 'Sagara' கப்பலில் இரவு வேளையில் தீ ஏற்பட்டுள்ளதாகவும்.. குறிப்பாக ஜெனரேற்றர் அறையில் ஏற்பட்டுள்ளதாகவும் சிறீலங்கா பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. கொழும்புதுறைமுகத்துக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போதே இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இவ்விபத்துக்கு குறும் மின்சுற்றுக் கோளாறு காரணமாக இருக்கலாம் என்று பொலீஸ் தரப்புக் கூறினும்.. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன. விடுதலைப்புலிகளின் கப்பல்கள் சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து அழிக்கப்படுவதில்.. இந்தப் போர்க்கப்பல் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது. Fire onboard Navy vessel A fire broke out in the generator room of the navy boa…
-
- 4 replies
- 2.6k views
-
-
புத்தாண்டுக்கு முன்னர் கிழக்கிலிருந்து விடுதலைப் புலிகளை வெளியேற்ற போகின்றாராம் மஹிந்த ராஜபக்ஷ, - பண்டார வன்னியன் றுநனநௌனயலஇ 21 ஆயசஉh 2007 16:59 சித்திரை புது வருடப்பிறப்பிற்கு முன்னர் கிழக்கில் இருந்து விடுதலைப் புலிகள் முற்றாக வெறியேற்றப்படுவார்கள் எனத் தெரிவித்திருக்கிறார் சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நேற்று ஜாதிக ஹெல உறுமயவின் குழுவினரை அலரிமாளிகையில் சந்தித்து உரையாடியபோதே ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரரில் தலைமையிலான குழுவினரே மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர். http://sankathi.org/news/index.php?option=...60&Itemid=1 இதில் வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கூடுதலான பௌத்…
-
- 9 replies
- 2.6k views
-
-
உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் வெளியேறினர் [ஞாயிற்றுக்கிழமை, 27 யூலை 2008, 03:46 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] லெப். கேணல் சூட் பயிற்சிப் பாசறையில் உள்ளகப் பாதுகாவல் பயிற்சியைப் பெற்ற ஒரு தொகுதியினர் நேற்று சனிக்கிழமை வெளியேறி உள்ளனர். இந்நிகழ்வு ஜேந்தன் தலைமையில் நடைபெற்றது. பொதுச்சுடரினை பொறுப்பாளர்களில் ஒருவரான நளன் ஏற்ற, தமிழீழ தேசியக் கொடியினை பயிற்சி ஆசிரியர் ஆழியன் ஏற்றினார். லெப். கேணல் சூட்டின் திருவுருவப் படத்திற்கான ஈகைச்சுடரினை முல்லைத்தீவு மாவட்ட கடற்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் அன்பழகன் ஏற்ற, மலர்மாலையினை பொறுப்பாளர்களில் ஒருவரான நிலவன், பொறுப்பாளர்களில் ஒருவரான கண்ணப்பன், பொறுப்பாளர்களில் ஒருவரான செ…
-
- 18 replies
- 2.6k views
-
-
சிங்கள பெரும்பான்மையினர் இழைத்த அநீதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும்: சுமந்திரன்! சாதாரண பெரும்பான்மை ஆட்சியின் காரணமாக ஏற்பட்ட அநீதிகளை சிங்கள பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டு, பிற மக்களின் மறுசீரமைப்பு மற்றும் நீதிக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார் அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் இன்று (வியாழக்கிழமை) காலியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். “தமிழ் மக்களின் அனைத்து பிரச்சனைகளும் புதிய அரசியலமைப்பால் தீரப் போவதில்லை. எனினும் புதிய அரசியலமைப்பு ஒரு அடிப்படை ஆகும். அது இல்லையேல் ஒரு பிரச்சனைய…
-
- 26 replies
- 2.6k views
-
-
ஜெனிவா பேச்சுவார்தைக்கு பிறகு நோர்வே வருவதாக திட்டமிட்டிருந்த புலிகளின் பேச்சுவார்தைகுழு நோர்வே பயணத்தை இரத்து செய்துள்ளதாக நேர்வே தேசியதொலைக்காட்சி செய்திவெளியிட்டுள்ளது. http://www.nrk.no/nyheter/utenriks/1.1234665
-
- 1 reply
- 2.6k views
-
-
விடுதலைப் புலிகள் மீதான தடை உத்தரவை நீக்குவதற்கு இந்திய காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்தியாவின் டைம்ஸ் நௌவ் தெரிவித்துள்ளது. இந்தியாவின் டைம்ஸ் நௌவ் ஊடகத்துக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வில் விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்த்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்தியாவின் உண்மையான நண்பர்கள் யார் என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். எனவே, எமது அமைப்பு மீது அவர்கள் விதித்திருக்கும் தடையை நீக்கி எம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும். இலங்கைக்கு இராணுவ ரீதியான உதவிகளை இந்தியா நிறுத்தவேண்டும்” என நடேசன் கூறியிருந்தார். இந்தியா தடையை நீக்கவேண்டும…
-
- 1 reply
- 2.6k views
-
-
தென் தமிழீழம் மட்டக்களப்பில் இன்று தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் சிறீலங்காச் சிங்களப் படைகளுக்குமிடையே நடந்த மோதலில் ஒரு சிங்களச் சிப்பாய் பலியாகி இருவர் காயமடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் பூண்டோடு அழிக்கப்பட்டுவிட்டதாக சிறீலங்கா சிங்கள அரசு கடந்த மாதம் அறிவித்த பின் நடந்த மோதல் சம்பவம் இதுவாகும். இச்சம்பவத்தில் காயமடைந்த போராளி ஒருவரும் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. SLA soldier killed in confrontaton with LTTE in Batticaloa A Sri Lanka Army (SLA) soldier was killed and two wounded in a clash that erupted at Kiraanku'lam in Batticaloa lagoon area in the early hours of Saturday, sources …
-
- 5 replies
- 2.6k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்விகளுக்காக பிரித்தானியா ஒருபோதும் கண்ணீர் மல்காதென அந்நாட்டு வெளிவிவகார செயலாளர் டேவிட் மில்பாண்ட் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகமவிற்கும், டேவிட் மில்பாண்ட்டிற்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போத அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டமை இலங்கை அரசாங்கம் அடைந்த ஓர் பாரிய வெற்றியாகவே கருதப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம இரண்டு நாள் விஜயமொன்றை மேற்கொண்டு தற்போது இங்கிலாந்து சென்றுள்ளார். கடந்த 28 ஆண்டு காலமாக யுத்தத்தின் கோரப் பிடியில் சிக்கி அழிவுகளை எதிர்நோக்கிய யுத்த வலயங்களை புனர் நிர்…
-
- 9 replies
- 2.6k views
-
-
சிவில் சமூகப் பிரதிநிதிகளுடனான சந்திப்பின் போது ஊடகவியலாளர்களைப் புறக்கணித்த நடவடிக்கையில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா ஈடுபட்டதாக யாழ்.மாவட்ட ஊடகர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். சிவில் சமூகப் பிரநிதிகள் குழு இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவை யாழ்ப்பாணத்தில் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தனர். இந்தச் சந்திப்பின் போது ஊடகர்கள் அங்கு இருப்பதால் அவர்கள் மத்தியில் கருத்துக்களைத் தெரிவிக்க முடியாது. பிறிதொரு நாளில் கலந்துரையாடுவோம் என்று மாவை சேனாதிராசா கூறியிருக்கின்றார். இதனை அடுத்து அங்கிருந்த ஊடகர்கள் வெளியேறிச் சென்றிருக்கின்றனர். அவர்கள் வெளியேறியதன் பின்னர் மாவை சேனாதிராசா கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தத…
-
- 0 replies
- 2.6k views
-