ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143503 topics in this forum
-
“1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற போது பொறாமைப்படக்கூடிய சமூகக் குறிகாட்டிகளைக் கொண்டிருந்த போதிலும், 75 வருடத்தில் இலங்கையானது “தோல்வியடைந்த நாடாகவே உள்ளது” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். த ஹிந்துவில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, ஒரு நாடு கணிசமான முன்னேற்றத்தை அடைவதற்கு எழுபத்தைந்து ஆண்டுகள் நீண்ட காலமாகும் என்றார். காலனித்துவ ஆட்சியாளர்களால் 450 வருடங்கள் அழிவுக்குள்ளான பின்னரும், சுதந்திரத்தின் போது, இலங்கை சிறந்த சமூக-பொருளாதார குறிகாட்டிகளில் சிலவற்றைக் கொண்டிருந்ததாகவும், 75 இல், இலங்கை ஒரு தோல்வியடைந்த நாடாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். ஒவ்வொரு மட்டத்திலும் பரவலான ஊழல், இலங்கை அரசியலின் நற்செய்தியாக ம…
-
- 14 replies
- 1.2k views
- 1 follower
-
-
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பல் ஒன்று வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள் ஒன்றையும் தீக்கிரையாக்கியுள்ளது. கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடொன்றினுள் இன்று அதிகாலை 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர். வீட்டில் பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் தாக்குதல் நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வெளிநாட்டில் இருந்து தாக்குதலுக்கு பணம் கொடுத்து, கூலிப்படையை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/268476
-
- 14 replies
- 928 views
- 1 follower
-
-
நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ்களைப் பயன்படுத்தி, வாக்காளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றதான குற்றச்சாட்டின் பேரில், தன்னைக் கைது செய்வதற்கான முயற்சியொன்று முன்னெடுக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனால், உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். இந்தச் சம்பவத்தைக் காரணங்காட்டி, தன்னைக் கைது செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென்றும், அவர் அந்த மனுவில் கோரியுள்ளார். http://www.tamilmirror.lk/செய்திகள்/கதத-தடககமற-ரஷட-மனததககல/175-249489
-
- 14 replies
- 1.3k views
-
-
இரவு 7 மணிக்கு பின் மின்விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் - இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு By NANTHINI 22 JAN, 2023 | 04:03 PM (இராஜதுரை ஹஷான்) கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்கு பின்னர் மின் விநியோகத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு பரிந்துரை செய்துள்ளது. பரீட்சை இடம்பெறும் காலப்பகுதியில் மின்விநியோக துண்டிப்பை அமுல்படுத்தாமல் இருப்பது சாத்தியமற்றது. குறித்த காலப்பகுதியில் மின்விநியோகத்தை துண்டிக்காமல் இருக்க வேண்டுமாயின், மேலதிகமாக 4 பில்லியன் ரூபாய் மின்னுற்பத்திக்காக செலவிட நேரிடும் என இலங்கை ம…
-
- 14 replies
- 640 views
- 1 follower
-
-
அரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது. இந்த தீர்மானம் அரபு நாடுகளுக்கு ஆதரவாக நிறைவேற்றப்பட்டால்ää இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக்காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் ட…
-
- 14 replies
- 2.7k views
-
-
முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஒத்துழைக்கவில்லை- அமெரிக்காவில் சுமந்திரன் முதலமைச்சர் விக்னேஸ்வரனை மாற்றி வேறு மிதவாத தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டிய அவசியம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சட்டத்தரணி சுமந்திரன் அமெரிக்காவில் கூறியதாக அறிய முடிகின்றது. விக்னேஸ்வரன் கடும்போக்கு நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் அடுத்து நடைபெறவுள்ள வடமாகாண மாகாண சபைத் தேர்தலில் விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட அனுமதிக்க முடியாது எனவும் சுமந்திரன் தெரிவித்ததாக கூறப்படுகின்றது. நாடாளுமன்றக் குழுவுடன் அமெரிக்காவுக்குச் சென்ற சுமந்திரன், அங்கு அமெரிக்க இராஜாங…
-
- 14 replies
- 594 views
- 1 follower
-
-
டாக்டர் சுகந்தன் கயிலாசநாதன்,வயது 32 ,இன்னுமொரு இந்திய டாக்டரும் டொரோண்டோ பெரும்பாகத்தில் உள்ள ஒரு ஹோட்டல் ஒன்றில் மயக்க மருந்து கொடுத்து தன்னை பாலியல் வல்லுறவு செய்ததாக பெண் ஒருவர் பொலிசாரிடம் புகார் செய்ததை அடுத்து இருவரும் கைது செய்யபட்டு பிணையில் விடுதலை செய்யபட்டுள்ளார்கள் . டாக்டர் சுகந்தன் கயிலாசநாதன் மார்க்கம் செப்பெர்ட் பகுதியில் உள்ள மருத்துவமனையை நடாத்திவருகின்றார். http://toronto.ctv.ca/servlet/an/local/CTVNews/20110224/tor-doctors-bail-speak-110224/20110224?hub=TorontoNewHome http://news.nationalpost.com/2011/02/18/two-doctors-charged-with-drugging-sexually-assaulting-woman/
-
- 14 replies
- 2.9k views
-
-
கப்பல்கள் மூழ்கடிப்பு - ஒரு நாடகம்! கடந்த சில மாதங்களாக சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்களை தகர்த்து வருவதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம் கல்முனைக் கடற்பரப்பில் விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல் ஒன்றை மூழ்கடித்தாக சிறிலங்கா அரசு கூறியது. ஒரு கப்பல் தாக்கப்பட்டு மூழ்கடிக்கப்படும் வீடியோக் காட்சியையும் வெளியிட்டது. அதன் பிறகு பல தடவைகள் கற்பிட்டிக் கடற்பரப்பில் ஆயுதங்களை ஏற்றிக் கொண்டு வந்த விடுதலைப்புலிகளின் படகுகளை மூழ்கடித்ததாக கூறியது. இந்த ஆண்டு பெப்ரவரி 28ம் திகதி மாத்தறைக் கடற்பரப்பில் ஒரு ஆயுதக் கப்பலை மூழ்கடித்ததாக சிறிலங்கா அரசு கூறியது. இம் முறையும் ஒரு கப்பல் தாக்கப்படும் வீடியோக் காட்சியை வ…
-
- 14 replies
- 4.5k views
-
-
வடக்கு- கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு வடக்கு- கிழக்கில் இன்று இன்று பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. முல்லைத்தீவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழி தொடர்பான விசாரணையானது சர்வதேச கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மன்னார் உட்பட வடக்கு கிழக்கு பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை கோரியும் குறிப்பாக முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி விசாரணையில் சர்வதேச நிபுணர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் வடக்கு கிழக்க…
-
- 14 replies
- 804 views
- 1 follower
-
-
இலங்கையில் வாடும் தமிழ் மக்களின் காயங்களுக்கு மருந்திடும் வகையில் நடத்தப்படுவதாக திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ள டெசோ மாநாடு நாளை சென்னையில் நடைபெற உள்ளது.இந்த நிலையில், கட்சிக் கொடிகளோ, கட்சித் தலைவர்களின் புகைப்படமோ(?), கட்சி முழக்கமோ எதையும் எந்த கட்சித் தொண்டர்களும் கொண்டு வரக் கூடாது என்று கருணாநிதி நேற்று அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில், டெசோ மாநாட்டில் ஈழம் என்ற வார்த்தையையே பயன்படுத்தக் கூடாது என்று மத்திய அரசு டெசோ மாநாட்டு அமைப்பாளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=Latest%20News&artid=642239&SectionID=164&MainSectionID=164&SEO=&Title=
-
- 14 replies
- 856 views
-
-
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வடக்கு மாகாண தமிழர்கள் யார் பக்கம்? முரளிதரன் காசி விஸ்வநாதன்பிபிசி தமிழ் 18 நிமிடங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionமக்கள் விரும்பியபடி வாக்களிக்கலாம் என்று வட மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் தெரிவித்தார் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெருமளவில் மைத்திரிபால …
-
- 14 replies
- 1.1k views
- 1 follower
-
-
யாழில் நடந்த கூத்து: மாட்டிக்கொண்ட இராணுவத்தினர் ! யாழில் நேற்றைய தினம் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தாங்கிச் சென்ற பதாதைகளை இங்கே போட்டிருக்கிறோம். இதனை சற்று உற்றுப்பாருங்கள். தமிழில் மட்டும் எத்தனை பிழைகள் என்று தெரியும். நிச்சயம் இது தமிழர்களால் எழுதப்படவில்லை என்பதனை எவரும் இலகுவாக அறிந்துகொள்வார்கள். இதனை விட மிகவும் வேடிக்கையான விடையம் ஒன்றும் நடந்துள்ளது. தமிழைத்தான் இவ்வாறு பிழையாக எழுதிக்கொண்டு சென்றிருக்கிறார்கள் என்றால்... அங்கே இலங்கையின் கொடியைக் கூட ஒருவர் தலைகிழாகப் பிடித்துள்ளார் என்றால் பாருங்களேன். யாழ் இந்தியத் தூதுவர் மகாலிங்கத்துக்கு எதிராகவும் சிலர் பதாதைகளை தாங்கிச் சென்…
-
- 14 replies
- 1.7k views
-
-
செவ்வாய்க்கிழமை, 16, ஜூன் 2009 (10:18 IST) தமிழக மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டூழியம் கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த மீனவர்களை கப்பல் மூலம் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ளனர். இலங்கை கடற்படையின் ஒரு கப்பல் மோதியதில் தமிழக மீனவர்களின் ஒரு படகு கடலில் மூழ்கியது. மேலும் ஒரு படகு இரண்டாக உடைந்தது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியத்தால் ராமேஸ்வர மீனவர்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர். நக்கீரன்
-
- 14 replies
- 1.3k views
-
-
வடபுலத்தவர்களின் உழைப்பு வெளியே போகிறது பாரீர்! அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஜனாதிபதித் தேர்தலின்போது இரு விடயங்களை முன்வைத்தார். அதில் ஒன்று ‘எங்களால் முடி யும்’ மற்றையது ‘மாற்றத்தை ஏற்படுத்துவோம்’ இவ்விரு விடயமுமே அவரை வெள்ளை மாளிகையில் அமர்த்தியது. அமெரிக்க மக் கள் மாற்றத்தை விரும்புபவர்கள். மாற்றம் என்பது மிகவும் முக்கி யமானது. அதேநேரம் நேரான சிந்தனையும், எங்களால் முடியும் என்ற நம்பிக்கையும் வாழ்க்கையில் வெற்றி நடைபோடுவதற்கு மிகவும் அவசியமானது. இந்த இரண்டு கருத்துக்களும் அமெரிக்க மக்களின் சிந்தனையைத் தூண்டிவிட அதில் நிறம், மதம் என்பன அடிபட்டுப்போக ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியாகினார். இதை இவ்விடத்தில் கூறிய தன் நோக்கம் யாது? என்று நீங்கள் கேட்கலாம்…
-
- 14 replies
- 2k views
-
-
தமிழ் தேசிய கூட்டமைப்பு மாமா வேலை செய்யும் தமது வழக்கத்தை கைவிட வேண்டும். கல்முனை விடயத்தில் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் அரசாங்கத்திற்கு மாமா வேலை செய்து காலஅவகாசத்தை எடுத்துக் கொடுக்கப் பார்க்கிறார்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் க.வி.விக்னேஸ்வரன். கனடா “வாணிபம்” வியாபார தகவல் கையேட்டு நிறுவனத்தினரின் நிதி அனுசரணையில் மக்கள் நலன் காப்பகத்தின் அன்பகம் என்ற மூதாளர் மாதாந்த உதவித்திட்டம் வழங்கும் ஆரம்ப நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. 35 பேருக்கு இன்று உதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, இப்படி காட்டமாக தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், எமது மக்களை உள்நாட்டு யுத்தம் என…
-
- 14 replies
- 2.3k views
-
-
தமிழ் மக்கள் தேசியக் கூட்டமைப்பு (TPNA) பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே சிறந்த வேட்பாளராக தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்ற அமர்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஜனாதிபதி தம்முடன் பாராளுமன்ற வளாகத்தில் பேசியதாகவும் ஆனால் என்ன பேசப்பட்டது என்பதை வெளியிட மறுத்துவிட்டாா். தற்போதைய வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளராக ஜனாதிபதியை தான் கருதுவதாக அவர் கூறினார். https://www.ilakku.org/சிறந்த-ஜனாதிபதி-வேட்பாளா/?amp
-
- 14 replies
- 1.4k views
- 2 followers
-
-
பாதுகாப்பு உயர்மட்ட குழுவின் பலாலி விஜயத்தை புலிகள் அறிந்திருந்தனரா? பல கோணங்களில் விசாரணைக்கு உத்தரவு 1/29/2008 8:56:03 PM வீரகேசரி இணையம் - பலாலி விமானப் படைத்தளத்திற்கு பாதுகாப்பு உயர்மட்ட குழுவினர் விஜயம் செய்வது தொடர்பான தகவல்களை புலிகள் ஏற்கனவே அறிந்து வைத்திருந்தனரா? என்பது குறித்து விசாரணைகளை நடத்துமாறு பாதுகாப்பு அமைச்சு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. கொழும்பிலிருந்து விமான மூலமாக சென்ற பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சென்ற விமானம் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் புலிகள் பலாலி விமான நிலையத்தை நோல ஆட்லறிஷெல் தாக்குதல்களை மேற்கொண்டமை குறித்தே விசாரணைகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பலாலி விமான நிலையத்தில் முன்தின…
-
- 14 replies
- 4.2k views
-
-
வெகு விரைவில் மருதங்கேணியில் இருந்து யாழ்ப்பாண மக்களுக்கு குடிநீர் வழங்கப்படவுள்ளது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா பொது வைத்தியசாலையில் 37 லட்சம் ரூபா பெறுமதியில் தீயாகி அறக்கட்டளை அமைப்பால் உருவாக்கப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தினை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சுமார் 50 அல்லது 60 வருடங்களுக்கு முன்னர் ஒரு ஆங்கில சஞ்சிகையில் வாசித்த ஞாபகம் இன்னுமொரு 60 இல்லது 70 வருடங்களில் நீர் பற்றாக்குறை உலகத்தை பாதிக்கும். மாசடைந்த நீரால் மக்களுக்கு மருத்தவ சிகிச்சையளிக்க வேண்டிய கடப்பாட்டை உண்டாக்கும். நீரற்ற நிலை ஒரு புறம். நீரிருந்தும் மாசுற்ற நில…
-
- 14 replies
- 1.3k views
-
-
நோர்வே மாநாட்டில் இலங்கை பிரச்சனை குறித்து சிங்களத் தரப்புடன் வைகோ கடும் வாக்குவாதம் [சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2008, 04:25 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] நோர்வேயில் நடைபெற்ற 'தெற்கு ஆசியாவின் அமைதியும், சமாதானமும்' மாநாட்டில் இலங்கை இனப்பிரச்சனை குறித்து பொய்யான தகவல்களை முன்வைத்த சிங்களத் தரப்பினருடன் தமிழ்நாட்டின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ கடும் வாக்குவாதங்களை நடத்தினார். தெற்காசிய இலங்கைப் பிரச்சினை குறித்து அம்மாநாட்டு அரங்கத்திலேயே விவாத மேடை ஒன்று அமைக்கப்பட்டது. அதற்கு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினரான எரிகா மான் அம்மையார் (இந்த அம்மையார்தான் கொசாவோ தனி நாடு உரிமை போராட்டத்திற்கு ஆதரவாக ஜெர்மனி நாடாளுமன்றத்திலு…
-
- 14 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை கொரில்லா அமைப்புக்களோ, பயங்கரவாதிகளோ பயன்படுத்ததாக ஆயுதமான விமானத்தைப் பயன்படுத்தி விடுதலைப் புலிகள் இராணுவத் தளங்கள் மற்றும் எண்ணெய் களஞ்சியங்கள் மீது நடத்தியிருக்கும் வான் தாக்குதல் குறித்து இந்தியா அக்கறை செலுத்தியிருப்பதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் பலமானது பிராந்திய விவகாரமாக நோக்கப்படுவதாக பாதுகாப்பு இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியா தற்பொழுது எதிர்நோக்கியிருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலில் விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதல் திறை இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இல்லாவிட்டாலும் எரிச்சலூட்டும் விதத்தில் அமைந்துள்ளது என இந்திய விமானப்படை…
-
- 14 replies
- 2.8k views
-
-
வன்னியில் இறுதிகட்ட யுத்தம் இடம்பெற்றதன் பின்னர் தொடர்சியாக எடுக்கப்பட்ட செய்மதி படங்கள் மூலம் பாரிய மனித புதைகுழிகள் இருப்பதற்கான சாட்சியங்கள் உள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை இன்று தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையானது அரசாங்கம் பாரிய ஆயுதங்களை பொதுமக்களுக்கு எதிராக பயன்படுத்தவில்லை என்பதற்கு சவாலாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித புதைகுழிகளும் மோட்டார் எறிகனை தளங்களும் மக்கள் தங்கியிருந்த இடங்களுக்கு அருகில் காணப்படுகின்றமையே இந்த செய்மதி படங்கள் காட்டுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. செய்மதி படங்களின் படி மூன்று பாரிய புதைகுழிகளும் அதனை தவிர மொத்தமாக ஆயிரத்து 346 மனித புதைகுழிகளும் காணப்படுவதாக மன்னப்புச் சபை தெரிவித்துள்ளது. …
-
- 14 replies
- 2k views
-
-
கனிமொழி நலம் பெற வேண்டும். --------------------------------------------- விஷம் அருந்திய செய்தி உண்மைதான். ஆழ்வார் பேட்டையில் இருக்கும் தனியார் இருத்துவமனையில் இருக்கிறார். அண்ணன் தம்பிகள் அனைவரும் சென்று வந்தபடி உள்ளார்கள். அழகிரி நீலாங்கரையில்தான் இருக்கிறார். அவரும் வந்து பார்க்க இருக்கிறார்...இப்போது பரவாயில்லை.செய்தி வந்தபோது வதந்தியோ என்ற குழப்பம். அவருடைய செல்பேசி தொடர்புக்கே சென்றேன். பதிலில்லை..... எப்படியிருந்தாலும் பத்திரிகையாள நண்பர்களிடம் நன்றாக பேசக்கூடியவர். நா...ன் எப்போது தொலைபேசி எடுத்தாலும் பதிலை தருவார். பேட்டி என்றால் அப்பாவை கேட்டு சொல்லட்டுமா என்பார். சொன்னபடி பதிலையும் தருவார். மற்றவர்களை போல் இருக்கவில்லை..... எந்த பிரச்சனை என்றாலும் அது ஒரு …
-
- 14 replies
- 7.2k views
-
-
தெல்லிப்பளையில் படையினரால் அமைக்கப்பட்ட வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிப்பு தெல்லிப்பளையில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் புதிதாக அமைக்கப்பட்ட 30 வீடுகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா குறித்த வீடுகளை திறந்துவைத்து பயனாளிகளிடம் கையளித்துள்ளார். குறித்த வீடுகள் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, மீள்குடியேற்ற அமைச்சினால் வழங்கப்பட்ட நிர்மாணப்பணிகளுக்கான வசதிகளுடன் படைத் தலைமையகத்தின் பொறியியளாலர்களின் பங்களிப்புடன் ஐந்து மாதங்களில் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது http://globaltamilnews.net/2018/74334/
-
- 14 replies
- 1.1k views
-
-
தெற்கு சிங்களவர்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு தீர்வில்லை என்கிறார் கெஹெலிய! தெற்கு சிங்கள மக்களின் ஆசிர்வாதமின்றி தமிழர்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்காதென அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். எனவே, தெற்கு சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்ற மஹிந்தவிற்கு ஆதரவளித்து தமிழ், முஸ்லிம் மக்கள் தமக்கான தீர்வினைப் பெறவேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார். கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்- ”தெற்கு மக்களின் ஆசிர்வாதம் இல்லாமல் வடக்கு கிழக்கிற்கு நிரந்தர தீர்வு சாத்தியமில்லை என, வடக்கு மக்களும் புலம்பெயர் சமூகமும் நன…
-
- 14 replies
- 1.5k views
-
-
அக்கராயன் தெற்கில் கடும் மோதல். படையினரது உடலங்கள், ஆயுதங்கள் மீட்பு - விடுதலைப் புலிகள் [ திங்கட்கிழமை, 15 செப்ரெம்பர் 2008, 11:08.40 AM GMT +05:30 ] வன்னியில் அக்கராயன் தெற்கு பிரதேசத்தில் சிறீலங்கா படையினர் புதிய ஆக்கிரமிப்பு முயற்சி ஒன்றை ஆரம்பித்திருப்பதாகவும், அதற்கு எதிராக கடுமையான முறியடிப்புத் தாக்குதல் இடம்பெற்று வருவதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். அக்கராயனிற்கு தெற்காக 6 கிலோமீற்றர் தூரத்தில் ஆரம்பித்துள்ள இந்த முன்னகர்வு முறியடிப்பில் சிறீலங்கா படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. கொல்லப்பட்ட படையினரது பல உடலங்களும், ஆயுத தளபாடங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளன. http://www.tamilwin.com/view.php…
-
- 14 replies
- 4.1k views
- 1 follower
-